Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழீழத்தினை கைவிட்ட நிலையில் உலகத் தமிழர் பேரவை மீதான தடை சிறிலங்காவில் விலகும் சாத்தியம்! சிங்கள ஊடகம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஜூட்,

1) ஒரு நியாயமான வாக்கெடுப்பை வைத்தால் வடக்கு தனியே பிரியவும், கிழக்கு இலங்கையுடன் இருக்கவுமே வாக்களிக்கும். அப்போ கிழக்குத் தமிழரை அம்போ என்று விட்டு விடலாமா?

2) இந்த வாக்கெடுப்பை இந்தியா எதிர்க்கும். ஏனெனில் 1949இல் இருந்து கஸ்மீருக்கும் இப்படி ஒரு வாக்கெடுப்பை பாகிஸ்தான் கோருகிறது. மணிப்பூரிலும், போடோ லாண்டிலும், நாகலாந்திலும் கூட. சைனா எதிர்கும், ஏனெனில் திபபெத்திலும் நாளை ஹாங்காங்கிலும் கூட இதே கோரிக்கை எழலாம்.

3) சர்வதேச சட்டங்களின் பிரகாரம் இப்படி ஒரு வாக்கெடுப்பை நடத்த எந்த முகாந்த்ஹிரமும் உரிமையும் ஐநாவுக்கு இல்லை. பாதுகாப்பு கவுன்சிலில் பிரேரணை நிறைவேறினால் மட்டுமே முடியும். போர்குற்றவாளியாக ஏன் இனப்படுகொலை செய்ததாக மகிந்த அரசு காணப்பட்டாலும், அவர்களை தண்டிப்பதிலும் ஆட்சியை மாற்றுவதிலும்தான் தான் ஈடுபடுவரே தவிர நீங்கள் எதிர்பார்க்கும் வாக்கெடுப்பை நிகழ்தார்.

4) ஏன் புலிகள் இப்படி ஓர் வாகெடுப்பை கோரவில்லை? ஏனெனில் பிரபாவுக்கு தெரியும் இது நடவாத காரியம். தனி நாடு என்பது சண்டை பிடித்து மட்டுமே அடைய முடியும் எண்டு. அதுதான் அவர் மீண்டும் மீண்டும் போரை ஆரம்பிக்க காரணமாயிருந்தது.

5) ஒரு ஐநா வாகெடுப்பு நடந்து தனி நாடு கிடைக்குமென்றால் யாருக்குத்தான் கசக்கும்? நிலத்து மக்கள் என்ன, நானே ஆம் எண்டுதான் வாக்களிப்பேன். ஆனா இது சாத்தியமான கோரிக்கையா என்று கேட்டால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

இசை இது உங்களுக்கு:

http://www.dalailama.com/biography/significance

இந்த சைட்டில் நீங்கள் மேலும் தேடினா நான் சொன்ன கருத்தின் ஆழம் புரிய வாய்ப்பிருக்கு.

தலய் லாமா ஒரு அரசியல்-சமய-ஆன்மீக தலைவர். கிட்டத்தட்ட கடவுளின் ஏஜெண்ட் மாதிரி. அப்படித்தான் பெரும்பாலான திபெத்தியர்கள் நம்புகிறார்கள் அல்லது நம்ப வைக்கப் படுகிறார்கள்.

ஆகவே தலய் லாமா எங்கிருந்தாலும் அவர்தான் அரசாங்கம், அவர் வச்சதுதான் சட்டம்.

புலம் பெயர்ஸுக்கு நிலத்து மக்கள் மேல் அப்படி ஒரு அதிகாரம் இருப்பதாக எனக்குத் தெதியாது.

இதுதான் தலய் லாமாக்கும் புலம் பெயர்ஸுக்கும் உள்ள வித்தியாசம்.

நான் சொன்ன கருத்தின் ஆழம் உங்களுக்கு விளங்கவில்லை.. Never mind! :D

  • கருத்துக்கள உறவுகள்

ஓமோம் இசை புல்லுக்குளத்தின் ஆழம் submarines ற்கு பிடிபடாது. அதுபோல உங்கள் தர்கத்தின் ஆழம் எனக்குப் பிடிபடுகுதில்லை ;)

  • கருத்துக்கள உறவுகள்

- அதிகார வரையறுப்புக்கு கீழே செய்ய முடிந்த எதையும் செய்வோம் என்கின்றீர்கள். அந்த வகையில் உங்கள் அதிகாரப் பிரயோகத்திற்கு இடைஞ்சலானவர்களுக்கு புலம்பெயர் தேசத்திலும் மரணதண்டனை வழங்கப்படுமா?

ஐ. நா. போர்க்குற்ற விசாரணை முடிய நீங்களே அறிவீர்கள் என்ன தண்டனை வழங்கப்படும் என்று.

 

- தனி நாடு என்ற கோட்பாட்டுக்கு கீழே பணபலம் ராஜதந்திர அரசியல் பலங்கள் குறிது சொல்லப்படுகின்றது. இந்த இரண்டையும் வைத்து போரால் பாதிக்கப்பட்ட மக்களின் மறுவாழ்வு புனர்வாழ்வு தடைமுகாமில் இருந்து விடுவித்தல் வறுமைக்கு உதவுதல் காணாமல் போனவர்கள் மீதான விசாரணை போன்ற எதிலும் அதை பிரயோகிக்கவில்லையே.

அவற்றை பார்த்து கொள்ள தானே நீங்கள் இருக்கிறீர்களே? எங்களது நேரமும் முயற்சிகளும் விருப்புகளும் அவை பற்றியதல்ல.

 

அது ஏன்? உங்கள் ராசதந்திர அரசியல் பலங்கள் ஒன்லி பூசுவாக்களுக்கு மட்டுமானதா? மேற்தட்டு வர்க்கத்துக்கு மட்டுமானதா?

காலம் கடந்தாவது ஞானம் பிறக்கிறதே? இந்த பூசுகிறவா பூசாதவா பற்றி எல்லாம் நாம் அக்கறை படுவதில்லை.

 

-மக்கள் குறித்த உங்கள் மேலான பர்வையில் அங்குள்ளவர்கள் அடிக்குப் பயந்தவர்கள் என்கின்றீர்கள். அடிக்குப் பயப்படாத நீங்கள் ஏன் அங்கு நிற்கமுடியவில்லை?

யார் அடிக்கு பயப்படாதவர்கள்? எல்லா மனிதர்களும் அடிக்கு பயந்தவர்கள் தான். தனிநாடு கேட்பதற்காக எங்களுக்கு இங்கே யாரும் அடிக்க முடியாது.

 

உங்கள் புலம்பெயர்வு வருமானத்தை இலக்காகக் கொண்டதில்லை என்கின்றீர்களா?

புலப்பெயர்வு நிச்சயமாக வருமானத்தை நோக்கமாக கொண்டது.

 

அங்குள்ள மக்களின் அபிப்பிராயத்தை அறியவேண்டிய அவசியம் இல்லை என்கின்றீர்கள் அந்தவகையில் உங்களின் அபிப்பராயங்கள் முடிவுகளை ஏற்கவேண்டிய அவசியம் அங்குள்ள மக்களுக்கும் இல்லை என்பதே உண்மை.

அவர்கள் ஏற்க வேண்டும் என்று இலங்கை, இந்தியா, அமரிக்கா, சீனா முதல் யாருமே எதிர்பார்க்கவில்லை. மற்றவர்கள் வகுக்கும் வழியில் அவர்கள் போவார்கள். அவர்களுக்கு வேறு வழி இல்லை. நாம் வகுக்கும் வழியிலும் அவர்கள் வருவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஜூட்,

1) ஒரு நியாயமான வாக்கெடுப்பை வைத்தால் வடக்கு தனியே பிரியவும்,

வாக்கெடுப்பு??? யாருக்கு தேவை? சீனாவை இறக்க வாக்கெடுப்பு பயன்படாது. அமெரிக்க விமானம் தாங்கிகளின் பொருளாதாரத்தடை தான் அதற்கு தேவை.

 

அப்போ கிழக்குத் தமிழரை அம்போ என்று விட்டு விடலாமா?

அப்படி விட்டால் முஸ்லிம் பயங்கரவாதிகளின் கோட்டை ஆகிவிடும். ஆகவே எமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவோம்.

 

2) இந்த வாக்கெடுப்பை இந்தியா எதிர்க்கும். ஏனெனில் 1949இல் இருந்து கஸ்மீருக்கும் இப்படி ஒரு வாக்கெடுப்பை பாகிஸ்தான் கோருகிறது. மணிப்பூரிலும், போடோ லாண்டிலும், நாகலாந்திலும் கூட. சைனா எதிர்கும், ஏனெனில் திபபெத்திலும் நாளை ஹாங்காங்கிலும் கூட இதே கோரிக்கை எழலாம்.

அமேரிக்கா பொருளாதார தடை விதித்து விமானம் தாங்கிகளை அனுப்பும் போது, அவர்களின் எதிர்ப்புகளை பற்றி அக்கறை படுவதில்லை. வாக்கெடுப்பு தேவை இல்லை.

Edited by Jude

வாக்கெடுப்பு??? யாருக்கு தேவை? சீனாவை இறக்க வாக்கெடுப்பு பயன்படாது. அமெரிக்க விமானம் தாங்கிகளின் பொருளாதாரத்தடை தான் அதற்கு தேவை.

 

அப்படி விட்டால் முஸ்லிம் பயங்கரவாதிகளின் கோட்டை ஆகிவிடும். ஆகவே எமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவோம்.

 

அமேரிக்கா பொருளாதார தடை விதித்து விமானம் தாங்கிகளை அனுப்பும் போது, அவர்களின் எதிர்ப்புகளை பற்றி அக்கறை படுவதில்லை. வாக்கெடுப்பு தேவை இல்லை.

 

அமெரிக்கா விமாண தாங்கிகளை அனுப்புதா??? சொல்லவே இல்ல‌   :o
சரிதான் வெள்ளிக்கிழமை நேரத்தோடை அண்ணர் பார்ட்டியை துவங்கிட்டார் போல‌  :lol:
சும்மா நேரம் கெட்ட நேரத்தில காமடி பண்ணிக்கொண்டு. ரணகளத்திலயும் கிளுகிளுப்பா கதைக்க எங்கட ஆக்களுக்கு மட்டும் தான் தெரியும். 2009லயும் இப்படித்தான் சிலர் உள்ளுக்க விட்டு அடிப்பம், வரவிட்டு சாத்துவம் எண்டிட்டு அவங்கள் ரெண்டு விஸ்கியை உள்ளுக்க விட்டிட்டு உளறிக்கொண்டு திரிஞ்சாங்கள். 

Edited by தெனாலி

  • கருத்துக்கள உறவுகள்

ஜூட் உண்மையிலேயே நீங்கள் வெற்றிக்கு எழுதுறிர்ர்களா அல்லது பகிடியா எண்டு கூட என்னால் ஊகிக்க முடியாமல் இருக்கு.

அமெரிக்கா யுத்த கப்பல் வருது எண்டு சொல்லி சொல்லி பட்டது காணாதா?

வாக்கெடுப்பே சாத்தியமில்லை எண்டு நான் சொல்றேன் நீங்கள் பொருளாதார தடையும் கப்பலும் வரும் எண்டுறியள்.

சரி அப்படியே வந்தாலும் வாறவரின் நோக்கம் மகிந்த அரசை வீட்டுக்கு அனுப்பி விட்டு அமெரிக்க சார்பு அரசை முழு இலங்கைக்கும் நிறுவுவதே ஒழிய நாட்டைப் பிரிப்பதில்லை.

உங்கள் எல்லோருக்கும் ஒரு சிம்பிள் லொஜிக் சொல்றேன் விளங்குதா என்று பாருங்கள்.

1) ஆயுத போராட்டம் மூலம் மட்டுமே தனி நாடு அடைவது சாத்தியம்

2) ஆயுதபோராட்டம் இப்போ சாத்தியமில்லை

3) தனிநாடு அடைவது சாத்தியமில்லை

ஜூட் உண்மையிலேயே நீங்கள் வெற்றிக்கு எழுதுறிர்ர்களா அல்லது பகிடியா எண்டு கூட என்னால் ஊகிக்க முடியாமல் இருக்கு.

அமெரிக்கா யுத்த கப்பல் வருது எண்டு சொல்லி சொல்லி பட்டது காணாதா?

வாக்கெடுப்பே சாத்தியமில்லை எண்டு நான் சொல்றேன் நீங்கள் பொருளாதார தடையும் கப்பலும் வரும் எண்டுறியள்.

சரி அப்படியே வந்தாலும் வாறவரின் நோக்கம் மகிந்த அரசை வீட்டுக்கு அனுப்பி விட்டு அமெரிக்க சார்பு அரசை முழு இலங்கைக்கும் நிறுவுவதே ஒழிய நாட்டைப் பிரிப்பதில்லை.

உங்கள் எல்லோருக்கும் ஒரு சிம்பிள் லொஜிக் சொல்றேன் விளங்குதா என்று பாருங்கள்.

1) ஆயுத போராட்டம் மூலம் மட்டுமே தனி நாடு அடைவது சாத்தியம்

2) ஆயுதபோராட்டம் இப்போ சாத்தியமில்லை

3) தனிநாடு அடைவது சாத்தியமில்லை

 

ஆயுதபோராட்டம் இல்லாமலும் ஆனால் வீரம் செறிந்த போரில் சிங்களவரை துவம்சம் செய்தும் தனிநாடு அண்ணன் சீமனால் பெற்றுதரப்படும் என்று மிகுந்த தாழ்மையுடன் தெரிவித்து கொள்ளுகிறேன்....

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா விமாண தாங்கிகளை அனுப்புதா??? சொல்லவே இல்ல‌   :o

சரிதான் வெள்ளிக்கிழமை நேரத்தோடை அண்ணர் பார்ட்டியை துவங்கிட்டார் போல‌  :lol:

சும்மா நேரம் கெட்ட நேரத்தில காமடி பண்ணிக்கொண்டு. ரணகளத்திலயும் கிளுகிளுப்பா கதைக்க எங்கட ஆக்களுக்கு மட்டும் தான் தெரியும். 2009லயும் இப்படித்தான் சிலர் உள்ளுக்க விட்டு அடிப்பம், வரவிட்டு சாத்துவம் எண்டிட்டு அவங்கள் ரெண்டு விஸ்கியை உள்ளுக்க விட்டிட்டு உளறிக்கொண்டு திரிஞ்சாங்கள்.

இப்ப 2014! ஐ நாவில அமெரிக்கா என்ன விஸ்கி பார்ட்டி நடத்துது எண்டு நினைக்கிறீங்களா?

அப்ப இருந்தது புலி பயங்கரவாதி.

இப்ப இருக்கிறது சீனா. வேற சங்கதி.

தமிழருக்கு புலி புரியும். சீனா புரியிறதுக்கு கஷ்டமான சாமான். அரைப்போத்தலை உள்ள தள்ளிட்டு வேற புரியிற சங்கதி கதையுங்கோ.

  • கருத்துக்கள உறவுகள்

சரி அப்படியே வந்தாலும் வாறவரின் நோக்கம் மகிந்த அரசை வீட்டுக்கு அனுப்பி விட்டு அமெரிக்க சார்பு அரசை முழு இலங்கைக்கும் நிறுவுவதே ஒழிய நாட்டைப் பிரிப்பதில்லை.

அது எப்படி உங்களுக்கு தெரியும்?

அமெரிக்க சார்பு அரசாங்கம் தான் முழு தீவுக்கும் தேவை. அது ஒரு அரசாங்கமா பல அரசாங்கங்களா எண்டதை அமேரிக்கா தான் முடிவு செய்யும். உலகில் நாடுகளை பிரித்து பல நாடுகளை உருவாக்கிய ஒரே நாடு அமேரிக்கா.

சீனாவை வெளியேற்றுவது இலேசான காரியமில்லை. மார்ச் மாதம் கடக்க எல்லாம் வெளிக்கும்.

Edited by Jude

  • கருத்துக்கள உறவுகள்

வருடத்தை சொல்லாமல் மார்ச் மாதம் என்று சொல்லுறியள் 2015 மார்ச்சா? மார்ச்சென்ன டிசம்பர் 2015 வரைக்கும் கூட டைம் எடுங்கள். நீங்கள் நினைப்பது போல் ஒரு மண்ணும் நடவாது, இது சாபமில்லை, யதார்த்த பூர்வ எதிர்வு கூறல்.

சிரியாவில் ஈராக்கில் கூட அமெரிக்கா boots on the ground ற்கு தயாரில்லை. இலங்கையில் ஏதாவது செய்வதாய் இருந்தாலும் தமது ஏஜெண்டான இந்தியாவின் தலைமையில்த்தான் செய்வார்கள். இந்தியாவுக்கு அமெரிக்கா கொடுக்கும் முக்கியத்துவம் மோடி விஜயத்தில் கண்டிருப்பீர்கள்.

சீனாவின் பிரசன்னத்தை இலங்கையில் குறைத்தல், இலங்கையில் ஜனநாயக மறுமலர்சியை ஏற்படுத்தல், அமேரிக்க சார்பு அரசை நிறுவுதல், இலங்கையை பிளவுபடாமல் வைத்க்திருத்தல் இவை தான் இலங்கை மீதான அமெரிக்க வெளியுறவுக் கொள்கை.

படைகளை இறக்காமல், போர்கப்பலை அனுப்பாமல் இதை சாதிக்கும் திறன் அமெரிக்காவுக்கு உண்டு.

இதை அமெரிக்கா செய்ய தொடங்கும் போது இந்தியாவின் ஆதரவுடனே செய்யும். அப்போது இந்தியா ராஜபக்சவை கைவிட்டிருக்கும்.

ராஜபக்ச ஆட்சி மாறியதும், அமெரிக்க சார்பு அரசு வந்ததும் சீனாவின் பிரசன்னம் தானே குறையும்.

இதில் சீனா இலங்கையில் படைகளை இறக்கினால் மட்டுமே மீண்டும் அமெரிக்க ஆசியுடன் இந்திய படைகள் களம் இறங்க கூடும். அப்படி ஒரு விடயத்தை சீனா செய்யாது.தனது நாட்டின் ஒரு பகுதி என்று சொல்லும் தைவானை மீட்கவே படைகளை அனுப்பாத சீனா இலங்கையில் படைகளை இறக்கி அடிபடாது.

அப்படி இந்தியாவும் சீனாவும் இலங்கையில் அடிபட்டாலும் அந்த போரின் முடிவில் சீனா வெண்டால் முழுத்தீவும் சீனா சிங்கள மயமாகும். இந்தியா +அமெரிக்கா வெண்டால் ஆட்சி மாற்றம் மட்டுமே ஏற்படும்.

When the going gets tough சீனா இலங்கை மற்றும் ராஜபக்சேகளை கைவிட்டு விடும். கடாபி, சதாமுக்கு செய்தது போல.

இதில் எப்படி பார்த்தாலும் அமெரிக்கா தலையிட்டு நாட்டை பிரிக்க வாய்ப்பே இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

கோசன்,

அமெரிக்காவும் சீனாவும் படை பலத்தை பாவித்து சண்டை பிடிக்கும் அளவுக்கு முட்டாள் நாடுகள் அல்ல. தேர்தலுக்கு பிறகு இராணுவ ஆட்சி வரும் சாத்தியம் இருக்கிறது. அந்த நிலை வந்தால் ஐ. நா. விசாரணை முடிய போர்க்குர்ரவாளிகளை சரனைடைய சொல்லி பொருளாதார தடை விதிக்கப்படலாம். அதை அமுல்படுத்த சர்வதேச கடல்படை (அமெரிக்க கடல் படை) இலங்கைக்கு கப்பல்கள் மற்றும் விமானங்கள் பொருட்களை கொண்டு செல்லாமல் பார்த்துக்கொள்ள அனுப்பப்படலாம். இதன் உண்மையான நோக்கம் சீனாவை அங்குள்ள துறைமுகங்களை பயன்படுத்த விடாமல் தடுப்பதும் சீன வணிகங்கள அங்கு செல்லாமல் தடுப்பதுமாக இருக்கும்.

ஒரு தனி அரசு ஸ்ரீ லங்காவில் இருக்குமட்டும் அது அமரிக்க - இந்திய எதிர்ப்பு பௌத்த ஆதிக்கத்தால் கைப்பற்றப்படும் அபாயம் என்றும் இருக்கும். இலங்கையை பல பாகங்களாக பிரித்து கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக வாழும் கரையோரங்களை (துறைமுகங்களை) அமெரிக்க ஆதரவு கிறிஸ்தவ ஆட்சியிலும் இந்திய ஆதரவு தமிழரை வட-கிழக்கிலும் நிலை நிறுத்தினால் அது சீன ஆதிக்கத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும்.

இலங்கையை ஒற்றை ஆட்சி நாடாக வைத்திருப்பதில் அமெரிக்காவுக்கு என்ன இலாபம்? ஒன்றும் இல்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.