Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மகிந்த ராசபக்சவிற்கு "பாரத ரத்னா" விருது-சுப்ரமணியன் சுவாமி அவசர கோரிக்கை?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை ஜனாதிபதி மகிந்த ராசபக்சவிற்கு இந்திய அரசாங்கத்தின் 

உயரிய விருதான ´பாரத ரத்னா´ விருதுmahinda_subramaniam%20(1).pngவழங்குவது குறித்து கூடிய கவனம் செலுத்துமாறு ஜனதா கட்சியின் தேசிய தலைவர் சுப்ரமணியன்  சுவாமி பிரதமர் நரேந்திர மோடியிடம் அவசர கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை தோற்கடித்த காரணத்திற்காக இந்த விருது மகிந்த ராசபக்சவிற்கு வழங்கப்பட வேண்டுமென சுப்ரமணியன்  சுவாமி  வலியுறுத்தியுள்ளார்.

புலிகள் ஒழிக்கப்பட்டதன் மூலம் இந்தியாவிற்கும் பாதுகாப்பு ஏற்பட்டுள்ளதாக சுப்ரமணியன்  சுவாமி

மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

 

பரத் ரத்னா விருது பெறுவதற்கு குறைந்தது இரண்டு லட்சம் பேரை கொலை செய்துருக்க வேண்டுமே. ராஜபக்சவிற்கு இன்னும் 200 த பாக்கி உள்ளதே. என்னசெய்யலாம். சுப்புரமணி தான் செய்த பாவங்களையும் கொடையாக வழங்கி அவருக்கு பரதரத்னா விருதை பெற்று கொடுக்க போகிறதோ.சுப்பிரமணியின் பாவங்கள் குறைந்தது 200 தேறும்.

Edited by tulpen

AA(1).jpg

 

தமிழீழ விடுதலைப் புலிகளை அளித்த இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என பா.ஜ.க. மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, பிரதர் நரேந்திர மோடிக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
 
இதுதொடர்பாக மோடிக்கு அவர் கடிதம் எழுதியுள்ளார். அதில், 'விடுதலைப்புலிகள் அமைப்பை அழித்ததன் மூலம் இந்தியாவின் பாதுகாப்புக்கு மஹிந்த ராஜபக்ஷ பங்காற்றியுள்ளார். எனவே, அவருக்கு பாரத் ரத்னா விருது வழங்கி இந்தியா கௌரவிக்க வேண்டும்' எனக் கூறியுள்ளார். 
 
மேலும், 'தான் எழுதிய கடிதம் பிரதமர் மோடிக்கு கிடைத்து விட்டதாக அவரது தரப்பில் உறுதி செய்யப்பட்டுள்ளது' என்றும் அவர் கூறியுள்ளார்.
 
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கை அதிபர் ராஜபக்சவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

விடுதலைப் புலிகளை அழித்ததன் மூலம் இந்தியாவின் பாதுகாப்புக்கு ராஜபக்ச முக்கிய பங்காற்றியுள்ளார். அவருக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று தனது கடிதத்தில் சுப்பிரமணியன் சுவாமி குறிப்பிட்டுள்ளார்

http://tamil.thehindu.com/india/ராஜபக்சவுக்கு-பாரத-ரத்னா-சுப்பிரமணியன்-சுவாமி-கோரிக்கை/article6522382.ece?ref=omnews

'பாரத ரத்னா'வை இழிவுபடுத்துகிறார் சுப்பிரமணியன் சுவாமி: இந்திய கம்யூனிஸ்ட் கண்டிப்பு

 

swamy_pandian_2166474f.jpg

சுப்பிரமணியன் சுவாமி, தா.பாண்டியன் | கோப்புப் படம்

இலங்கை அதிபர் ராஜபக்சவுக்கு பாரத ரத்னா விருது அளிக்க வேண்டும் என்று சுப்பிரமணியன் சுவாமி கோரியிருப்பது, அவ்விருதை இழிவுபடுத்தும் செயல் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அக்கட்சியின் மாநிலச் செயலர் தா.பாண்டியன் இன்று வெளியிட்ட அறிக்கையில், "பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி, இலங்கை அதிபர் ராஜபக்சவுக்கு பாரத ரத்னா விருது அளிக்க வேண்டும் என வேண்டியிருப்பது, அவரது நெடுங்கால, நிலைத்த தமிழ் மக்களுக்கு எதிரான வெறுப்பைக் காட்டுகிறது.

தமிழ் மக்களைக் கொன்று குவித்த குற்றத்திற்காக போர் விதி மீறல்களை மீறிய - மனித உரிமைகளை நசுக்கிய காரணங்களுக்காக போர்க் குற்றவாளி என விசாரிக்கப்பட வேண்டிய கொலைப்பழி சுமத்தப்பட்டுள்ளவருக்கு பாரத ரத்னா பட்டம் வழங்கக் கேட்பது, இதுவரை பாரத ரத்னா பட்டம் பெற்ற அனைவரையும் இழிவுபடுத்துவதாக ஆகும்.

இலங்கை வாழ் தமிழ் மக்களின் மனித வாழ்வுரிமைகளைப் பறிக்கவும், இனத்தைக் கொன்றழிக்கத் தூண்டும் குற்றத்திற்காகவும் இந்திய அரசு இவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஈழத் தமிழ் மக்களுக்காகக் குரல் கொடுத்து வரும் மதிமுக பொதுச் செயலர் வைகோவும், பாமக நிறுவனர் ராமதாஸும், இந்தப் பிதற்றல்களைக் கேட்ட பிறகும் பாஜகவுடன் உறவு பற்றிப் பேசுவதை நிறுத்தி, ஈழத்தமிழ் மக்களின், இந்தியத் தமிழக மீனவர்களுக்கும் அடிப்படை வாழ்வுரிமைகளைப் பெற்றுத்தர, தமிழ் எதிரிக் கூட்டத்திலிருந்து, விலகி, தமிழ் மக்களைத் திரட்ட முன்வர இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வேண்டுகிறோம்" என்று தா.பாண்டியன் கூறியுள்ளார்.

மேலும், அவர் வெளியிட்ட மற்றொரு அறிக்கையில், "பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி, தமிழ் நாட்டில் சாதிக் கலவரங்களைத் தூண்டி விடும் நோக்கோடு, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின், சுதந்திரப் போராட்ட கால தியாகத்தைப் பாராட்டி, அதன் அடையாளமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அவர் மறைந்த பல்லாண்டுகளுக்குப் பிறகு, துதிபாடுகிற சாக்கில் சாதியத் தீயை மூட்டி விட முயல்கிறார். இதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கண்டிப்பதுடன், இவரது மாய்மாலப் பிரச்சாரத்திற்கு தமிழக மக்கள் செவிசாய்க்க வேண்டாம் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வேண்டுகிறோம்" என்று அவர் கேடுக்கொண்டுள்ளார்.

 

http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%A4-%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AF%E0%AF%82%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/article6523472.ece?homepage=true

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

இலங்கை ஜனாதிபதி மகிந்த ராசபக்சவிற்கு இந்திய அரசாங்கத்தின் 

உயரிய விருதான ´பாரத ரத்னா´ விருதுmahinda_subramaniam%20(1).pngவழங்குவது குறித்து கூடிய கவனம் செலுத்துமாறு ஜனதா கட்சியின் தேசிய தலைவர் சுப்ரமணியன்  சுவாமி பிரதமர் நரேந்திர மோடியிடம் அவசர கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை தோற்கடித்த காரணத்திற்காக இந்த விருது மகிந்த ராசபக்சவிற்கு வழங்கப்பட வேண்டுமென சுப்ரமணியன்  சுவாமி  வலியுறுத்தியுள்ளார்.

புலிகள் ஒழிக்கப்பட்டதன் மூலம் இந்தியாவிற்கும் பாதுகாப்பு ஏற்பட்டுள்ளதாக சுப்ரமணியன்  சுவாமி

மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

 

 

நான் இவ்வளவு நாளும் "பாரத ரத்னா" விருது எண்டால் இமயமலை ரேஞ்சிலை மதிப்பு கெளரவம் நிறைஞ்சதாக்கும் எண்டெல்லே நினைச்சன்...... :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.