Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாணத்துக்கும் கொழும்புக்கும் காராம் பசுவா ஓடுகிறது.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
நாலு நாள் சுற்றுலாவும் நரிகள் அடைந்த புளுகும்..! நரிகளை பரிகளாகினார் மாணிக்கவாசகர்,புலிகளை நரிகளாக்

19.10.2014-கினார் மகிந்தரும்,பிரபாவும்.அடுத்த கட்டத்தை தாண்டும் தமிழினம் மீதான அழிப்பு -துலாத்தன்.  இருந்திருந்து பார்த்தேன் எழுதாமல் இருக்க முடியவில்லை. மனசுக்குள் குபீர் என்று ஒரு சிரிப்பு குமைவதாய் பரபரப்பு. உலையில் அரிசி ஏறாவிட்டாலும் பரவாயில்லை.

உலைக்களத்தை திறக்காமல் உட்கார முடியவில்லை. மன்னாதி மன்னர் வந்துபோன கொட்டகைகள் இன்னும் கழற்றி முடியவில்லை. கொஞ்ச நாளுக்கு முதல் ஒரே கொலைவெறி கோழிக் கூட்டுக்குள்ளும் புகுந்து பதிவெடுத்தார்கள் படைத்தம்பிகள்.

 

புலி இருந்த குகைக்கே இந்தனை பயமா? அங்குமிங்கும் பார்த்துவிட்டு எங்கள் சனம் எள்ளி நகையாடியது. கடித்து குதறி கபளீகரம் செய்த பிறகும் எலுப்பில் இருந்து தமிழன் எழுந்துவிடுவான் என்ற அச்சமாக்கும்.

 

வழி தெருவெல்லாம் புலிக்குப் பயந்தவர்கள் நிறைந்திருந்தார்கள். சிங்கத்துக்கு நரி சொன்ன கதைகேட்டு இன்றுவரை ஏமாறுகிறது சிங்கம்.

 

காகம்- பாட்டி வடைக் கதையில் கூட காலமாற்றத்திற்கு ஏற்றாற்போல் காலுக்குள் வடையை வைத்துக் கொண்டு காகம் பாடுகிறது.

 

ஐயகோ! சிங்கம்தான் இன்னும் திருந்தவில்லை. வந்தது வடக்கிற்கு மினக்கெட்டு தமிழ் படித்து சுணக்கெட்டுப்போன குணத்தோடு மீண்டும் சுரியில் இறங்கியது.

 

தங்கம் தருவதாக சிங்கம் கர்ச்சித்தது. கள்ளன் பிடிபட்டான் என்று என் காதுக்குள் ஒரு சிறுக்கி குசுகுசுத்தாள்.

 

திருட்டுப்பயல் திருப்பிக் கொடுக்கிறானென நமட்டுச் சிரிப்போடு, நாரி உழைய குந்தி இருந்து நெட்டிமுறித்து நெளி வெடுத்து கைதட்டியும் கொடுத்தான் நம்மாள்.

 

காரியம் நடக்கட்டும் தேரில் ஏறவா திரும்பவும் உனக்கு விருப்பம் நாறல்பயலே நம் இரத்தத்தில் ஊறியதை விலை கொடுத்து வாங்க நினைக்கிறாய். எம் முத்தத்தில் இன்னும் முகாரிதான்.

 

உன் முகம் எமக்கு எப்பொழுதும் அபசகுனம். அடுத்த தேர்தலில் உனக்கு ஆப்புத்தான் என்று காப்பு கட்டியிருக்கிறான் நம்மாள்.

 

தமிழீழ வைப்பகத்தில் வைத்ததுதான் தங்கமென்று சிங்கம் நினைக்கின்றது. நரிகளும் சிரிக்கிறது.

 

எங்கள் தங்கம் எது முள்ளிவாய்க்கால்வரை எறிகணைகளால் கொள்ளி வைத்தாயே இலட்சக்கணக்கில். கைகளிலேயே உன்னை நம்பி ஒப்படைத்தோமே எங்கள் உயிர்ச் சொந்தங்களை.

 

இறுதிக் கணங்களில் போர்க்களத்தில் நீ கவ்விக் கடித்துக்குதறினாயே எண்ணற்ற எமது அழகிகளை பிஞ்சுகளை. கணக்கின்றி காவுகொண்டு ஏவறைவிட்டாயே அவைதான் எம் தங்கங்கள் கொடுக்க முடியுமா குரூரனே!

 

அடுத்த தேர்தலில் ஆசன மேறுவதற்கு நரிகளோடு சேர்ந்து ஆடுகிற நாடகத்திற்கு தமிழரின் வடக்கா கிடைத்தது வக்கற்றவனே!

 

சிறையில் சீரழிகிற நம் செல்வங்களை விட்டுவிட உன்னால் முடியவில்லை. எம் காணிகளை அபகரிக்கும் கழிவு சிந்தனை உன்னில் இன்னும் மாறவில்லை. அடிக்கு அடி அசிங்கமாய் உலவும் படைகளை எம் நிலத்தில் குறைக்கக்கூட உன்னால் முடியவில்லை.

 

சந்திக்கு சந்தி தமிழரை நிறுத்தி இன்னமும் அடையாள அட்டை காட்டாமல் போக உன்னால் அனுமதிக்க முடியவில்லை. மகிந்தோதயாக்களில் எங்கள் மனதுகள் நிறைந்ததென்று மனக்கணக்கு போடுவது மகாதவறு மகனே!

 

சில வேளை நரிகளாய் வாழ்வதே நம் கொள்கை என்று திரியும் சில கேலிகளுக்கு பொருந்தும் சுதந்திரமாய் வாழ நினைக்கும் தமிழனுக்கு உன் ஆசை வார்த்தைகளும் அற்ப சலுகைகளும் தூக்குக்கயிற்றுக்கு நிகர்.

 

யாழ்ப்பாணத்துக்கும் கொழும்புக்கும் காராம் பசுவா ஓடுகிறது. நாம் காசுகொடுத்துப் போகிற ரயில்தானே இது என் பாட்டன் காலத்திலும் ஓடியதுதானே. அவன் கோவணத்தோடு கொழுக்கட்டையும் புளுக்கொடியலும் கொண்டுபோனதுதானே இதில் என்ன ஆச்சரியம் இருக்கின்றது.

 

ஒரு புதுமையும் இல்லையே அத்தனையும் அயலவன் பணம். தண்டவாளம் ரயில் எல்லாம் சிராந்தியின் சீதனப் பணமல்ல.

 

நம்ம சுப்பிரமணியம் ஆட்சி பிடித்தாலும் சுக்குபுக்கு ஓடும் பவித்ரா என்ன நம் பரமேசக்கா? மினஸ்ரியிலும் பவர் இருக்கும் வடக்கு மாகாணசபைக்கு கொடுத்துப்பார் அதிகாரங்களை வீட்டுக்கு வீடு விமானம் இருக்கும். மாட்டுப்பட்டிவரை நம் அமைச்சுக்குள் பரந்து விரிந்து வேலை செய்யும்.

 

நம் வரலாறு தளைக்கும். கைதடி என்ன கற்பூர புல்வெளியா? நீ அதிகாரம் கொடுக்க பயந்து சாவதற்கு கதறும் கால்நீள மாலையுமாய் பொன்னாடையுமாய் புன்னகையுமாய் திரியும் அப்பிராணிகளின் அரங்கம்தானே.

 

கொஞ்சம் கொடுத்துப் பார்க்கலாமே பொலிஸ் அதிகாரத்தை நரிகளின் பெயரில் இயங்கும் நாலு சாராயக்கடை பூட்டப்படும்.

 

மதுவும் மாதுவுமாய் திரிகிற சிலருக்கு நெட்டிகளிலும் முட்டிகளிலும் முறிவுகளும் தெறிவுகளும் ஏற்படும். வேறு என்ன நடக்கும் பிறகேன் பயம்.

 

இன்னும் அதிகாரம் கொடுக்காது பிதற்றல்கள்.  இரணைமடு தண்ணி விடயத்தை வடக்கு மாகாணசபை பார்த்துக் கொள்ளுமாம். இதுதான் 13 பிளசா?

 

இது இராசாதிராசனின் பெரிய இராஜதந்திரமாம். மாடுதின்று கொண்டிருந்த பேப்பரை பறித்து வாசித்தேன். மாட்டுக்கே போட்டுவிட்டேன் மாடுதின்னவே அது லாயக்கு. சிங்கள மக்களுக்கு ஞானம் பிறக்கிற தருணத்தில் இங்கு சிலருக்கு மண்டைக்குள் கழி மண் பேசுது.

 

வீட்டுக்கு லைற், வீதிக்கு தார், இரணைமடுத் தண்ணி வந்தால் போதும். சிலருக்கு விடுதலை கிடைத்துவிடும்.

 

சீ! இந்த நரிகளுக்கும் சேர்த்தா பல்லாயிரமாய் இளம் குருத்துக்கள் இம்மண்ணில் விழுந்தன.

 

என்ன கேவலம். நரிகளுக்கு நாலு நாளாய் ஒரே புளுகம். சிங்கத்தில் வாலில் மதுவுண்ட வண்டுகளாய் மயங்கி கிடந்தன.

 

இரணைமடுச் சந்தியில் இருந்து நெடுந்தீவு வரை கொலைவெறி பாதகனுக்கு குடை பிடித்து கொண்டாடின. அடுத்த பொதுத்தேர்தலில் பெரிய நரிக்கு மட்டும்தான் மயிரிழையில் ஒரு ஆசனம் யாழ்ப்பாணத்தில் கிடைக்குமென்ற அச்சத்தில் சின்ன நரிகள் சில புல்லில்லா இடங்களில் ஆடுமாடு குடுக்கிறம் எண்டு ஆத்துப்பறந்து திரியுதுகள்.

 

கொண்டாட்டம் நம்மாளுக்கு அரை விலையில் மோட்டர் சைக்கிள். திருடன் தங்கம் கொஞ்சத்தையும் திருப்பி தந்துள்ளான். அடிக்கடி யாழ்தேவி வேறு உயிரும் உங்களுக்கு எண்டமாதிரி உருகி நிண்டு. உருவி எடுக்கிறான் நம்மாள்.

 

அரைவிலை மோட்டார் சைக்கிளை நம்மாள் ஆட்டுக்கும் ஓட்டப்பழக்குவான்.

 

காலம்வர கவிழ்ப்பாண்டா. நெஞ்சில இருக்கிற நீறு பூத்த நெருப்பை எந்த புயல்வந்தும் ஒருபோதும் அணைக்க முடியாது.

 

பரந்துவிட்ட தாகத்தை பசப்பு வார்த்தைகளால் பஸ்பமாக்க முடியாது. ஐரோப்பிய நீதிமன்றத்தின் தர்மத் தீர்ப்பில் விளாசி எரிகிறது எம் விடியலில் யாகம்.இது காலமாற்றம். இந்தக் கழுதைகளால் அதை ஒன்றும் செய்யமுடியாது.

 

ஒடுக்கப்படுகிற இனத்துக்கு ஒரு கடவுள் நிச்சயம் இருப்பான் அவன் சோதனை தருவான் விடிவில்தான் அவன் முடிப்பான்.

 

நாம் நதியே ஆனபோது நீச்சலுக்கும் ஆழத்துக்கும் என்ன பயம். எம் அடிமனதுகளில் அர்ப்பணிப்புக்களுக்கு மட்டுமே ஆழ்;ந்த மதிப்பும் வணக்கமும் அதற்குப்பிறகுதான் எல்லாம்.

 

நாம் உயிர்விதைத்தோம் என்பதுதான் உண்மை. அதற்குள் சரிபிழைகள் தேடுகிற காலமல்ல இது. மயக்கத்தில் இருப்பவர்களுக்கான மருந்தாக காலம் கண்முன்னே பரந்தவெளியில் விதைத்திருக்கின்றது அநேக காரியங்களை.

 

புரிந்துகொண்டால் இந்த பூமியில் நாம் தமிழர். வரிந்துகட்டிக் கொண்டு வண்ண தேவதைகளை எங்கள் தெருக்களில் உலவவிட அவன் தயாராகிவிட்டான்.

 

புறாக்களோடு இனி இல்லங்கள் வருவார்கள் புல்நுனியால் வருடிவிடுவார்கள். பன்னீர்க் குடங்களை பரிசளிக்க முண்டியடிப்பார்கள்.

 

ஏனெனில் இம்முறை தமிழர் வாக்கு தெய்வவாக்கு  ஆச்சரியங்கள் எதுவும் நிகழ்த்த மாட்டார்கள். அகன்ற திரைகட்டி அதன்பின்னால் இயன்றவரை தம் அசிங்கங்களை மறைத்து அடங்காவெறிக்கு அழகு போர்த்து திரண்ட பேரழகுடுத்து தேரில் வருவார்கள்.

 

உற்றுப்பாருங்கள் சில்லுகளில் நசித்துக்கொன்ற கன்றுகளின் சுவடுகள் உங்கள் கண்ணுக்குத் தெரியும்.  தயக்கமின்றி நாம் தமிழர்கள் என்று உள்ளே உச்சரித்துக் கொள்ளுங்கள்!

 

தலைவிதி நிச்சயம் மாறும்.

 

ஈழக்கிழவன்

 

 

 

அடுத்த கட்டத்தை தாண்டும் தமிழினம் மீதான அழிப்பு -துலாத்தன்.

 

 

2009ந்கு பின்னர் தமிழினத்தின் இருப்பு மற்றும் அரசியல் போராட்டமானது ஈழத்தில் வாழ்ந்து கொண்டிருக்க கூடிய தமிழ் மக்களுக்கே தெரியாமல் நாசுக்காக அழிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. படுகொலைகள் காணாமல் போதல் மற்றும் புறக்கணிப்புக்கள் என தமிழினத்தின் மீதான நேரடி அழிப்புகள் ஒருபுறம் நடந்துகொண்டிருக்க மறுபுறத்தில் தமிழினத்தின் கல்வி கலாச்சாரம் மற்றும் பொருளாதாரம் நன்கு திட்டமிடப்பட்ட வகையில் சூறையாடப்பட்டுக் கொணடிருக்கிறது.

 

 

தமிழர்களின் கல்வி மற்றும் பொருளாதாரம் எப்படி திட்டமிடப்பட்டவகையில் சிதைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை புரிந்து கொண்டால் கலாச்சார அழிப்புகள் குறித்து இலகுவாக விளங்கிக் கொள்ளலாம்.

 

 

கல்வி

 

 

ராஜபக்ஷ அரசாங்கத்தால் சிறிலங்காவின் கல்வி தரம் ஊழலாக்கபட்டு அளவுக்கு மீறிய தனியார் கல்வித் திட்டங்கள் கொழும்பை மையாமாக கொண்டு வேகமாக முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருந்தாலும் தமிழர் தாயகப்பகுதியை நோக்கி குறிப்பாக யாழ்ப்பாணத்தை நோக்கி நகர்த்தப்பட்டுக் கொண்டிருக்கும் தனியார் உயர்கல்வித் திட்டங்களின் நோக்கம் குறித்து அதீத கவனமெடுப்பது முக்கியமானது. துமிழர்தாயகத்தைப் பொறுத்தவரை அதிகளவு தமிழ் மாணவர்கள் காணப்படும் மாவட்டம் யாழ்ப்பாணம் ஆகும். ஆகவே யாழ்ப்பாணத்தை மையாமாக கொண்டு போருக்கு பின்னர் மாற்றப்பட்டுக் கொண்டிருக்கும் தமிழ் மாணவர்களின் தரமாக கல்வி முறை குறை குறித்து ஆராய்வதே சிறந்ததாகும்.

 

 

ராஜபக்ஷ அரசு அதிகளவிலான தனியார் கல்வி நிறுவனங்களை ஊக்குவிப்பதற்கான காரணம் அரசியல் ரீதியிலானது. குறிப்பிட்ட வயது சமுதாயத்தை அரசியல் நடப்புகளில் கவனம் செலுத்தவிடாது வேறு ஏதாவது ஒரு செயற்பாட்டில் சிந்தனைகளை கட்டுப்படுத்திவைக்கும் உத்திதான் அதிகளவிலான தனியார் நிறுவனங்கள் மற்றும் கேளிக்கை நிகழ்வுகளின் வருகையும் ஊக்குவிப்புகளும் என்பது சாதாரணமாக எல்லோராலும் விளங்கிக் கொள்ளக்கூடிய ஒன்றேயாகும்.

 

 

ஆரசாங்க புல்கலைக்கழகங்களை இலக்காக வைத்து அடிப்படைக் கல்வியை நேர்த்தியாக கற்பிக்கும் மற்றும் கற்கும் சமூகமாக விளங்கிய யாழ்ப்பாணம் இன்று ஆராய்ந்து கற்றல் தன்மையில் இருந்து படிப்படியாக விலகிக் கொணடிருக்கிறது. சாதாரண தரத்திற்கு பின்னர் தனியார் கல்வி நிலையங்களில் ஏதாவது ஒரு சான்றிதளைப் பெற்று வெளிநாடுகளுக்கு மாணவர் விசாவில் போவது அல்லது வேலை செய்வது என்பது குறித்தே பரவலான கருத்தியலை உருவாக்கி விட்டிருக்கிறது வியாபார அமைப்புகள்.

 

 

துமிழர்களின் ஆழமான கல்வி என்ற கருத்தியல் மழுங்கடிக்கப்பட்டு கற்றலுக்கான நோக்கத்தை மும்மரமாக திசைமாற்றிக் கொண்டிருக்கின்றன இந்த புதிய வரவு கல்வி நிறுவனங்கள். இந்த புதிய வரவு தனியார் கல்வி நிறுவனங்களின் நீண்டகால நோக்கம் என்ன என்பதை புரிந்து கொள்ளாத தமிழ்ச் சமூகம் ஒருதடவை சாதாரண தரத்தில் சித்திய எய்த தவறினால் நேரடியாக தனியார் நிறுவனங்களை நோக்கி செல்கின்றது. துனியார் நிறுவனங்களை நோக்கி செல்வது தவறில்லை என்றாலும் யாழ்ப்பாணத்தில் 2009 ற்கு பிறகு நுழைந்திருக்கும் கல்வி நிறுவனங்கள் அனைத்துமே வியாபார நோக்குடையவை. துரமான செய்முறை கொண்ட கற்றல் நிறுவனங்கள் அல்ல. இளம் சமுதாயத்தின் சிந்தனைகளை மட்டுப்படுத்தி வேறு திசைக்கு கொண்டு செல்வதற்கான உளவியல் வேலைத்திட்டமாகவே இந்த தனியார் நிறுவனங்கள் தொடர்பான ஊக்குவிப்பை அணுகவேண்டியுள்ளது.

 

 

அதிவிசேட சித்தியில் பல்கலைக்கழகம் நுழையும் மாணவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக அளவு குறைந்துள்ளதாகவே தெரிகிறது.

 

 

தமிழ் மக்களைப் பொறுத்தவரை கல்வியில் மேற்கொள்ளப்பட்ட அடக்குமுறைகளே அரசியல் ரீதியிலான போராட்டங்களுக்கும் ஆயுதப்போராட்டத்திற்கும் மூலகாரணமாக விளங்கியது. ஆதன் தாக்கம் இன்றளவிலும் இருந்துவருகிறது. இந்த நிலையில் இன்றைய சமூதாயத்தின் சிந்தனைகளை மாற்றி கல்வி மீதான அளவுக்கதிமான மோகத்தை திசை திருப்புவதன் மூலம் எதிர்கால அரசியலில் தமிழர்களின் அரசியல் வீச்சு குறையும் என்பது சிறிலங்கா அரசால் நம்பப்படும் தத்துவமாகவே இன்று நடைபெற்றுக் கொண்டிருக்கும் தமிழர்களின் கல்விமீதான நுண்சிதைப்பு.

பொருளாதாரம்.

 

 

பொருளாதாரத்தைப் பொறுத்தவரை தமிழர்களின் பொருளாதார இருப்பு ஏறத்தாள சிறிலங்கா பெரும்பான்மையினரின் மற்றும் பெரும்பான்மை ஆதரவு குழுக்களின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுவிட்டதாகவே தெரிகிறது. துமிழினம் தொடர்ச்சியாக இடப்பெயர்வுகள் மற்றும் அழிவுகளை சந்திருந்த வேளையில் ஏற்படாத பொருளாதார நலிவு நிலையை இன்று அடைந்திருக்கிறது. நீண்டகால சேமிப்புகளை ஆடம்பரத்திற்காக திரவ நிலைக்கு மாற்றி இன்று செய்வதறியாத நிலைக்கு மாறியிருக்கிறது தமிழினம்.

 

 

துமிழர்களின் அடிப்படை கைத்தொழில்கள் விவசாயம் மீன்பிடி என எல்லாத் துறைகளிலும் சிறிலங்கா அரச ஆதரவுச் சக்திகள் அல்லது பெரும்பான்மையினரின் கைகளிற்கு மாறியிருக்கிறது. உள்ளுர் உற்பத்திகளுக்கு மாற்றீடாக தென்னிலங்கைப் பொருட்கள் அறிமுகப்படுத்தபட்டதோடு உள்ளுர் தயாரிப்புகளை நாசுக்காக சந்தையில் இருந்து அப்புறப்படுத்தியிருக்கிறது பெரும்பான்மை இனம். இதன் மூலம் உள்ளுர் உற்பத்தியாளர்கள் பாதிக்கபட்டது மட்டுமல்லாது தமிழர்களின் பணம் தென்னிலங்கையில் வைப்பிலடப்பட்டு மீண்டும் விபாரத்திற்காக யாழ்ப்பாணம் கொண்டுவரப்படுகிறது.

 

 

காணி உறுதிகளை வைத்துக் கொண்டு இலகு கடன்கள் அதிகளவில் அறிமுகப்படுத்தப்பட்டு இன்று காணிகளை குறைந்த விலையில் விற்பனை செய்யும் அவலங்களும் அரங்கேறி வருகிறது. முக்கிய வர்த்தக மையங்கள் அரச பினாமிகளால் கையகப்படுத்தப்பட்டுவருவதோடு அதிக அளவில் தென்னிலங்கை உற்பத்திப் பொருட்கள் அறிமுகப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. வடக்கில் அதிகளவு விவசாய நிலங்களை கொண்டிருந்தாலும் வடக்கிற்கிற்கு தம்புள்ளை உள்ளிட்ட தென்னிலங்கை விவசாயப்பொருட்களே அதிகளவில் விற்பனை செய்யப்படும் அவலம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

 

 

தமிழர்கின் பொருளாதாரத்தின் அத்திவாரத்தில் சிறிலங்கா அரசு கைவைக்க கூடிய அளவிற்கு வந்ததற்கன காரணம் தமிழர்களின் பொருளாதாரம் குறித்து மக்களுக்கு சரியான விழிப்புணர்வு கொடுக்கப்டாமையே காரணம்.

 

 

சுhதாரண குடி பானங்களில் இருந்து கோயில் உள்ளிட்ட நிகழ்வுகள் வரைக்கும் தென்னிலங்கை உற்பத்திப்பொருட்களே அதிகளவில் உள்வாங்கப்படுகிறது. ஊள்ளுர் உற்பத்திறகள் ஊக்குவிக்கப்படாதது மட்டுமன்றி அது குறித்து சிந்திப்பதையே மக்கள் மறந்துவிட்டார்கள்.

 

 

இன்று அன்றாட வாழ்வியல் பாவனையில் அதிகளவில் தென்னிலங்கை உற்பத்திப் பொருட்களையே நம்பியிருக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள் தமிழர்கள். அரிசி காய்கறி என தமிழர்கிள்ன அன்றாட பாவனைகளில் தென்னிலங்கைப் பொருளாதாரத்தின் தாக்கம் திணிக்கபட்டிருக்கிறது.

 

 

ஏதிர்காலத்தில் அரசியல் ரீதியிலான குழப்பங்கள் ஏற்படின் தமிழினம் பொருளாதார ரீதியாக பெரும் அடிவாங்கப்போகிறது என்பதற்கப்பால் அடுத்த கட்டம் என்ன செய்வது என்று தெரியாத மிக இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்படப்போகிறது.

 

 

கல்வியும் பொருளாதாரமும் சீரழிக்கப்படும் ஒரு சமுதாயத்தில் அதன் கலாச்சாரம் சமச்சீராக சீரழியும் என்பது ஆய்வு செய்யமால் எடுக்கக் கூடிய முடிவே.

 

 

இழப்புகளோடு முடிவடைந்த இன அழிப்புத் தாக்கத்தில் இருந்து மீள முதல் தமிழர்களின் கல்வி மற்றும் பொருளாதாரத்தை ஆட்டங்காணச் செய்வதே சிறிலங்கா அரசாங்கத்தின் நோக்கம். இதை தமிழர்தரப்பு அரசியல் தலமைகள் மட்டுமல்லாது புலம்பெயர் தமிழர்களும் ஈழத்தில் வாழும் மக்களும் புரிந்துகொள்ளவேண்டும்.

துலாத்தன்

17-10-14

http://kumarinadu.net/index.php?option=com_content&view=article&id=5915:2014-10-19-00-11-38&catid=1:2009-09-08-19-02-01&Itemid=71

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.