Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ். அரியாலை குடும்பத்தை மிரட்டி சிறுமி துஷ்பிரயோகம்

Featured Replies

3(67).jpg-பொ.சோபிகா
குடும்பத்தாரை கொலை செய்வோம் என மிரட்டி 17 வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கிய சம்பவம் கடந்த 22ஆம் திகதி அரியாலை பூம்புகார் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் பெண்கள் அமைப்பினர் இணைந்து ஞாயிற்றுக்கிழமை (26) முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.

இது தொடர்பில் தெரியவருவதாவது, 

அரியாலை முள்ளி வீதியை சேர்ந்த மேற்படி 17 வயது சிறுமி தனது சகோதரியின் வீட்டிற்கு கடந்த தீபாவளி தினத்தன்று மாலை சென்றுள்ளார்.

இதன்போது, அங்கு வந்த 28 வயதுடைய அதேயிடத்தை சேர்ந்த ஏற்கெனவே திருமணமான நபர், சிறுமியின் சகோதரியை அடித்ததுடன், சிறுமியை அடித்து பூம்புகார் பகுதியிலுள்ள பற்றைக்குள் இழுத்து சென்று அவரை துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

இது தொடர்பில் வெளியில் தெரிவித்தால் குடும்பத்தையே கொலை செய்வதாக மிரட்டி சம்பவத்தை வெளியில் தெரியவராமல் தடுத்துள்ளார். மேலும் சிறுமியை கடத்தி சென்று தனது தாய் வீட்டில் மறைத்து வைத்துள்ளார். 

இந்நிலையில், சிறுமியின் தாயார், தனது மகளை காணவில்லையென யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் 23ஆம் திகதி முறைப்பாடு செய்துள்ளார். 
தாயாரின் முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், சிறுமியை மறைத்து வைத்திருந்த வீட்டிலிருந்து அச்சிறுமியை மீட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிறுமியை அனுமதித்தனர். 

சிறுமியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தினார் என்ற குற்றச்சாட்டப்பட்ட சந்தேக நபர் தலைமறைவாகியுள்ளார். இந்த சம்பவங்கள் தொடர்பில்  யாழ்ப்பாண பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்;டு வருகின்றனர். 

 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-10-09/130954-2014-10-26-13-23-35.html

  • கருத்துக்கள உறவுகள்

பதினேழு வயதுக்காரிக்குப் பெயர் சிறுமியோ ??? கொலை மிரட்டலுக்குப் பயந்து பேசாமல் இருந்தாரா பதினேழு வயதுச் சிறுமி ?????

 

Edited by மெசொபொத்தேமியா சுமேரியர்

  • கருத்துக்கள உறவுகள்
நீங்கள் என்ன சொல்ல வாறீங்கள் ...........?
அவர் மிரட்டவில்லை என்றா??
  • கருத்துக்கள உறவுகள்

இதில் எழுதியுள்ள செய்தி முழுவதும் நம்பகமானது தானா என்னும் சந்தேகம்  அவ்வளவே.

  • கருத்துக்கள உறவுகள்

பதினேழு வயதுக்காரிக்குப் பெயர் சிறுமியோ ??? கொலை மிரட்டலுக்குப் பயந்து பேசாமல் இருந்தாரா பதினேழு வயதுச் சிறுமி ?????

 

17 வயதில் முத்தி வெடித்தவர்களும் உள்ளார்கள்

பால்குடிகளும் உள்ளார்கள். எல்லாம் தாய் தந்தை வளர்ப்பில் உள்ளது.

இவர் பால்குடியாக இருக்கலாம்.

 

  • கருத்துக்கள உறவுகள்

மே உள்ள செய்தியை வடிவாக மீண்டும் வாசியுங்கோ வாத்தியார். அரியாலை ஆள் நடமாட்டமே அற்ற காடா ??? அவரின் சகோதரியையும் தாக்கிவிட்டு இழுத்துச் சென்றது என்பதும் வீட்டில் மறைத்து வைத்தது என்பதும் முரணாக உள்ளன. வேறொன்றும் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

 28 வயதுடைய அதேயிடத்தை சேர்ந்த ஏற்கெனவே திருமணமான நபர், சிறுமியின் சகோதரியை அடித்ததுடன், சிறுமியை அடித்து பூம்புகார் பகுதியிலுள்ள பற்றைக்குள் இழுத்து சென்று அவரை துஷ்பிரயோகம் செய்துள்ளார். இந்நிலையில், சிறுமியின் தாயார், தனது மகளை காணவில்லையென யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் 23ஆம் திகதி முறைப்பாடு செய்துள்ளார். அப்போ சகோதரி தாயிடம் அந்த நபர்பற்றித் தெரிவிக்காமல் இருந்ததற்குக் காரணம்??? :rolleyes: 

 

முரண்பாடுடைய செய்தி. ஆனாலும் ஏதோ ஒரு சம்பவம் நடந்துள்ளது. செய்தி வெளியிட்ட ஊடகம், ஈரைப் பேனாக்கி, பேனைப் பெருமாளாக்கும் செய்தியாளரைக் கொண்டதாக இருக்கலாம். :icon_mrgreen:  

  • தொடங்கியவர்

சிறுமியை அச்சுறுத்தி துஷ்பிரயோகம் செய்தவர் கைது

 

 

Handcuffed2(1).jpg-செல்வநாயகம் கபிலன்

யாழ்ப்பாணம், அரியாலை, பூம்புகார் பகுதியில் குடும்பத்தாரை கொலை செய்வோம் என அச்சுறுத்தி 17 வயது சிறுமியொருவரை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கிய 28 வயதுடைய சந்தேகநபரை திங்கட்கிழமை (27) மாலை கைது செய்ததாக யாழ்ப்பாண பொலிஸார் செவ்வாய்க்கிழமை (28) தெரிவித்தனர். 

சந்தேகநபர், பூம்புகார் காட்டுப் பகுதியில் மறைந்திருந்த நிலையில், பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே அவர் கைது செய்யப்பட்டார் என பொலிஸார் தெரிவித்தனர்.

அரியாலை, முள்ளி வீதியைச் சேர்ந்த மேற்படி 17 வயது சிறுமி தனது சகோதரியின் வீட்டுக்கு கடந்த தீபாவளி தினத்தன்று மாலை சென்றுள்ளார்.

இதன்போது, அங்கு வந்த அதேயிடத்தைச் சேர்ந்த 28 வயதுடைய சந்தேகநபர், சிறுமியின் சகோதரியை அடித்ததுடன் சிறுமியை அடித்து இழுத்துச் சென்று, பூம்புகார் பகுதியிலுள்ள பற்றைக்குள் வைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

தொடர்ந்து, இது தொடர்பில் வெளியில் தெரிவித்தால் குடும்பத்தார் அனைவரையும் கொலை செய்வதாக அச்சுறுத்தி சம்பவத்தை வெளியில் தெரியவராமல் தடுத்துள்ளார். மேலும் சிறுமியை கடத்திச் சென்று தனது தாய் வீட்டில் மறைத்து வைத்துள்ளார்.

இந்நிலையில் சிறுமியின் தாயார், கடந்த 23ஆம் திகதி தனது மகளை காணவில்லையென யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

தாயாரின் முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், சிறுமியை மறைத்து வைத்திருந்த வீட்டிலிருந்து சிறுமியை மீட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிறுமியை அனுமதித்தனர்.

இருந்தும், சந்தேகநபர் தப்பித்து தலைமறைவாகியிருந்தார். இந்நிலையில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு சந்தேகநபரை திங்கட்கிழமை (27) மாலை கைது செய்ததாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

 

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-10-09/131126-2014-10-28-05-20-04.html

  • கருத்துக்கள உறவுகள்

மே உள்ள செய்தியை வடிவாக மீண்டும் வாசியுங்கோ வாத்தியார். அரியாலை ஆள் நடமாட்டமே அற்ற காடா ??? அவரின் சகோதரியையும் தாக்கிவிட்டு இழுத்துச் சென்றது என்பதும் வீட்டில் மறைத்து வைத்தது என்பதும் முரணாக உள்ளன. வேறொன்றும் இல்லை.

பூம்புகார் கிட்டதட்ட அப்படித்தான் 1987 .... 1990 வரையில் அந்த இடத்தில் ஒரு 8 10 குடும்பங்கள்தான் இருந்தது. இப்போ எப்படியோ தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்

ஆள்நடமாட்டமே குறைந்த பகுதியானாலும் கூட ஒரு இளம் பெண்ணை அவரின் சகோதரிக்குத் தெரிய இழுத்துக்கொண்டு சென்றதுமன்றி ஒளித்தும் வைத்தது என்பதில் என்ன தான் கொலை மிரட்டல் என்று கூறினும் வேறு எதோ இருக்கின்றது. எனக்கு என்ன அந்தக் குடும்பத்தின் மேல் பகையா மருதங்கேணி ???

  • கருத்துக்கள உறவுகள்
எதையும் கேள்வியுடன் பார்பதுதான் நல்லம்.
 
நான் எனக்கு தெரிந்ததை சொன்னேன் அவ்வளவே !

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.