Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பதுளையில் பாரிய நிலச்சரிவு! 12 சடலங்கள்! 200 பேரின் நிலை தெரியவில்லை!

Featured Replies

இலங்கையில் மலையகத் தமிழர்கள் வசிக்கும் பகுதியில் மிக மோசமான மலைச்சரிவு நிகழ்ந்திருக்கிறது.. 300க்கும் மேற்பட்டவர்கள் காணவில்லை என செய்திகள் தெரிவிக்கிறது. மிக மோசமான வானிலையில் நிகழ்ந்த இச்சரிவில் இறந்து போனது உழைக்கும் எளிய ஏழை மலையகத் தமிழர்கள்.

இப்பகுதியில் மலைச்சரிவு வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்றும் இப்பகுதியை விட்டு வெளியேறுமாறு பலமுறை சொல்லியும் தோட்ட நிர்வாகம் செவிசாய்க்கவில்லை.

லாப நோக்கில் செயல்படும் இந்த தோட்ட கம்பெனிகள் மலையகத் தமிழர்களின் அடிப்படை வசதியைக் கூட சரியாக செய்து தராமல் சுரண்டுவதை பின்வரும் தகவலில் பார்க்கலாம். இலங்கையின் சராசரி அளவினை விடமிகக் குறைந்த ஊதியம், குழந்தை இறப்பு விகிதம், அடிப்படை வசதிகளற்ற வீடுகள், சேமிப்பு என்கிற பேச்சுக்கே இடமற்ற வகையில் தமது வருமானத்தில் 50 சதவீதம் உணவிற்கு செலவிடவேண்டிய அளவிற்கு குறைந்த வருவாய் என சுரண்டலின் உச்சத்தில் இருக்கும் இம்மக்களுக்கு இடியாய் இந்த நிகழ்வு நிகழ்ந்திருக்கிறது.

கோஸ்லாண்டா எஸ்டேட் எனப்படும் இப்பகுதியில் 400க்கும் மேற்பட்டவர்கள் புதையுண்டு போய் இருக்கிறார்கள்.. இப்பகுதி வாழத் தகுதியற்றது என பத்து ஆண்டுகளுக்கு முன்பேயே அறிவித்திருக்கிறார்கள். இருந்தும் அந்த எஸ்டேட் நிர்வாகம் செவிசாய்க்கவில்லை…

இரண்டு கோவில்கள், நான்கு கடைகள், அரசு கட்டிடங்கள், என பல கட்டிடங்கள் புதையுண்டு போயிருக்கிறது. காலையில் குழந்தைகள் பள்ளிகூடத்திற்கு சென்றதால் பல குழந்தைகள் இந்த பேரழிவில் இருந்து தப்பி இருக்கின்றன.

இதனைப்பற்றிய அதிக விவரங்களை பெற முடியாமல் இருக்கிறது. தோழர்கள் இதற்கான தகவலை பெற்று அனைவரும் அறியத்தரும்படி வேண்டுகிறோம்.

இம்மக்கள் நம் மக்கள்... எந்த வித பொருளாதார பின்னனியும், வலிமையான அரசியல் பின்னனியும் இன்றி தவிக்கும் இம்மக்களுக்காக குரல் கொடுக்க முன்வருவோம். எத்தனைக் குழந்தைகள் தங்கள் பெற்றோரை இழந்தன எனத் தெரியவில்லை. இவர்கள் எவ்வாறு தங்கள் வாழ்வை கட்டியெழுப்பப் போகிறார்கள் எனத் தெரியவில்லை. தேயிலைத் தோட்டத்தினை உருவாக்கிய தமிழன் விலங்கினை விட மோசமான வாழ்வியல் சூழலில் வாழ்கிறான். உலகெங்கும் உழைக்கும் மக்களாய் கொண்டு செல்லப்பட்ட நம் உழைக்கும் தமிழர்களுக்கு தோள் கொடுப்போம்.

அன்பான தமிழர்களே , நம் மலையகத் தமிழர்களை இந்த பேரிடரிலிருந்து மீட்டெடுக்க கைகொடுப்பது அவசியம். மலையகத்தமிழரோடு தொடர்பில் இருக்கும் தோழர்கள் இதற்கான முயற்சியை முன்னெடுத்தால், உங்களுடன் மே17 இயக்கமும் கைகோர்த்து தன்னாலான பங்களிப்பினை செய்ய விரும்புகிறது. அவசியம் கைகோர்ப்போம்.

மே பதினேழு இயக்கம்

இச்செய்தியுடன், மலையகத் தமிழரின் சமூக-பொருளாதார நிலை குறித்த சில புள்ளிவிவரங்களை பகிர்ந்திருக்கிறேன். தயவு செய்து வாசிக்கவும்.. அவசியம் நாம் அனைவரும் அறிய வேண்டிய தகவல்களை பகிர்ந்து கொள்வோம்..

1381286_310645329127444_4668974200509046

10409687_310645309127446_562058714037540

1381286_310645345794109_3148441430302941

1381424_310645319127445_4215550913569113

Thirumurugan Gandhi

https://m.facebook.com/story.php?story_fbid=310646939127283&id=300208196837824

  • Replies 68
  • Views 4.9k
  • Created
  • Last Reply

இலங்கையில் நிலச்சரிவு; மலையகத் தமிழர்களை மீட்கவும், மறுவாழ்விற்கும் நடவடிக்கை மேற்கொள்க! - வைகோ அறிக்கை

இலங்கையின் பதுளை மாவட்டத்தில் உள்ள மீரிய பெத்தை எனும் இடத்தில் மழையின் காரணமாக அக்டோபர் 29 ஆம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 200 தமிழர்கள் புதையுண்டு உயிர் இழந்தனர்; மேலும், 500 தமிழர்களைக் காணவில்லை என்ற அதிர்ச்சிகரமான தகவல்கள் வருகின்றன. கொஸ்லாந்தை பகுதியில் பெருமளவு வீடுகள் இடிந்து போயிருக்கின்றன.

மலையகத் தமிழர்கள் வாழும் தேயிலைத் தோட்டக் குடியிருப்புத் தமிழர்கள் மண் சரிவு அபாயம் உள்ளவை என்று பல ஆண்டுகளுக்கு முன்பே சுற்றுச் சூழல் பாதுகாப்பு மையம் எச்சரித்து இருந்தது. ஆயினும், தேயிலைத் தோட்டங்களில் வாழும் மலையகத் தமிழர்களைப் பாதுகாப்பான இடங்களில் குடியேற்ற இலங்கை அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.

இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்கள் தங்கள் இரத்தத்தைச் சிந்தி தேயிலை, காபி தோட்டங்களை உருவாக்கியவர்கள். கடும் உழைப்பைக் கொடுத்து இன்றும் இலங்கையின் வளமான பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணையாக இருப்பவர்கள்.

அவர்கள் பல தலைமுறைகளாக மலையகத்தில் பெருந்தோட்டத் தொழிலாளர்களாக வாழ்ந்து வந்த போதிலும், 1948 ஆம் ஆண்டு இலங்கை அரசு கொண்டு வந்த குடிஉரிமைச் சட்டத்தாலும், 1964 ஆம் ஆண்டில் ஏற்பட்ட இந்தியப் பிரதமர் சாஸ்திரி இலங்கை பிரதமர் சிரிமாவோ பண்டாரநாயகா ஒப்பந்தத்தாலும் பத்து இலட்சம் பேர்களது குடிஉரிமை பறிக்கப்பட்டு, நாடற்றவர்கள் ஆக்கப்பட்டனர்.

உலகிலேயே வேறு எங்கும் இந்தக் கொடுமை நடக்கவில்லை.

இலங்கை அரசின் வஞ்சகத்தாலும், பாரபட்சமான அணுமுறையினாலும் வாழ்வுரிமைகளை இழந்த மலையகத் தமிழர்களை இயற்ககையும் வஞ்சிக்கின்றது.

நிலச்சரிவில் சிக்கியுள்ள மலையகத் தமிழர்களை மீட்கவும், உடைமைகளை இழந்து தவிக்கும் மக்களைப் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கவும், நிவாரண உதவிகள் வழங்கவும் இந்திய அரசு அறிவுறுத்த வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன்!

வைகோ

பொதுச் செயலாளர்,

மறுமலர்ச்சி தி.மு.க

‘தாயகம்’

சென்னை - 8

30.10.2014

https://m.facebook.com/TheVaiko/photos/a.237676642958956.61633.145371905522764/774538389272776/?type=1

மண்சரிவில் உயிரிழந்தோருக்கு வடமாகாண முதல்வர் அனுதாபம்! – பாதிக்கப்பட்டோருக்கு உதவ நடவடிக்கை.

பதுளை, கொஸ்லாந்த மீரியபெத்த தோட்டத்தில் இடம்பெற்ற மண் சரிவில் பல உயிரிழப்புக்களும், பாதிப்புக்களும் உண்டாகியுள்ளமை அதிர்ச்சியை ஏறிபடுத்தியுள்ளதாக வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். மேற்படி அனர்த்தம் தொடர்பாக முதலமைச்சர் ஊடகங்களுக்கு விடுத்துள்ள செய்திக் குறிப்பிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மேற்படி அனர்த்தச் சம்பவத்தில் இதுவரையில் 16 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது என்ற பத்திரிகை செய்தி எம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. முன்னதாகவே பல இன்னல்களின் மத்தியில் வாழ்கின்ற மலையக மக்களுக்கு இந்த இயற்கை அனர்த்தம் பேரழிவை உண்டாக்கியிருக்கின்றமை அனைவரின் உள்ளங்களையும் வேதனைக்குள் ளாக்கியுள்ளது. இவ் அனர்த்தத்தில் உயிரிழந்த எமது சகோதர சகோதரியர்கள், குழந்தைகளை நினைவுறுத்தி வடமாகாண சபையின் சார்பிலும், வடபுலத்திலுள்ள மக்கள் சார்பிலும், எமது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.

மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எம்மாலான அனைத்து உதவிகளையும் வழங்குவதற்கு கடமைப்பட்டிருக்கின்றோம். இது பற்றிய சகல நடவடிக்கைகளையும் எமது அலுவலர்கள் எடுத்து விரைவில் பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் சென்று, உதவிகளை வழங்குவர். எமது அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் மேற்பார்வையின் கீழ் சகல நடவடிக்கைகளும் ஒழுங்கமைக்கப்பட்டுள்ளன என முதலமைச்சர் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

http://www.seithy.net/breifNews.php?newsID=119766&category=TamilNews&language=tamil

பாதிக்கப்பட்ட மக்களுக்கு முடிந்தளவுக்கு உதவுமாறு சிவசக்தி ஆனந்தன் கோரிக்கை!

பதுளை மீரியபெத்த பெருந்தோட்டத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவசர உதவிகளை வழங்குதல் தொடர்பான கலந்துரையாடல், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தலைமையில் இன்று நடைபெற்றது. இதன்போது, இயற்கை அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உலர் உணவு வகைகள், உடுதுணிகள், போத்தலில் அடைக்கப்பட்ட குடிநீர், பிஸ்கட், பால்மா வகைகள், சவர்க்கார வகைகள், பற்பசை- பற்தூரிகைகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களை வழங்குவதற்கு வர்த்தக நிலையங்கள், அரச, அரசசார்பற்ற நிறுவனங்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் ஆகியோரது உதவியைக் கோரத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வர்த்தக நிலையங்கள், இல்லங்கள் தேடிவரும் நிவாரணப் பொருள்களை சேகரிப்பதற்கு நியமிக்கப்பட்டுள்ள குழுவினரிடம், உங்களால் முடிந்தவரையான அத்தியாவசிய பொருள்களை வழங்கி உதவுமாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பாக சிவசக்தி ஆனந்தன் எம்.பி வேண்டுகோள் விடுத்துள்ளார். சேகரிக்கப்படும் நிவாரணப் பொருட்கள் பாதிக்கப்பட்ட மக்களின் இருப்பிடங்களுக்கே நேரில் சென்று, வவுனியா மாவட்ட மக்கள் சார்பான குழுவினால் கையளிக்கப்படவுள்ள அதேவேளை, அனர்த்தத்தினால் உயிரிழந்த உறவுகளுக்கான ஆத்மசாந்தி பிரார்த்தனை நிகழ்ச்சியும் எதிர்வரும் வாரம் வவுனியாவில் இடம்பெறவுள்ளது.

இந்த கலந்துரையாடலில் வடமாகாண சபை உறுப்பினர்களான இ.இந்திரராசா, ம.தியாகராசா, வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை உபதலைவர் து.ரவி, உறுப்பினர்களான க.பரமேஸ்வரன், பா.பார்த்தீபன், ப.தர்மலிங்கம், இரா.இராஜசேகரம், செட்டிக்குளம் பிரதேச சபை உறுப்பினர்களான சு.ஜெகதீஸ்வரன், சி.சிவகேதீஸ்வரன், கோட்டக்கல்விப் பணிப்பாளர் எம்.பி.நடராஜா, முன்னாள் உப நகரபிதா க.சந்திரகுலசிங்கம், சமூக சேவையாளர் க.பவான் மற்றும் மாவட்ட முச்சக்கர வண்டி ஓட்டுநர் சங்க உபதலைவர், வடமாகாண சுகாதார அமைச்சரின் பிரத்தியேக செயலாளர், வர்த்தகர்கள், சமூக சேவையாளர்கள், சமூக நலன் விரும்பிகள், ஊடகவியலாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

http://www.seithy.net/breifNews.php?newsID=119804&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்
மீரியபெத்த மண்சரிவு: நேற்று ஒரு சடலம் மீட்பு! - செய்தித்துளிகள். 
[saturday 2014-11-01 08:00]
 
மீரியபெத்த தோட்டத்தில் ஏற்பட்ட பாரிய மண்சரிவுக்குள் சிக்கி உயிரிழந்த மற்றொருவரின் சடலம் நேற்று மீட்கப்பட்டுள்ளது. நேற்று குறித்த பகுதியில் மீட்புப் பணிகள் மூன்றாவது நாளாக இடம்பெற்றது. இராணுவத்தினர் இரண்டு பிரிவாக பெக்கோ இயந்திரங்களை கொண்டு தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். மேலும் மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு விசேட தேடுதலும் நடத்தப்பட்டுள்ளது. முன்னதாக மண்சரிவில் சிக்கி உயிரிழந்த மூன்று பேரின் சடலங்கள் மீட்கப்பட்ட நிலையில், இது நான்காவது சடலம் என்பது குறிப்பிடத்தக்கது.
 
   
நிவாரணப் பணிகள் இராணுவத்திடம்
 
கொஸ்லந்த மீரியபெத்தயில் ஏற்பட்ட மண்சரிவினால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரண பணிகள் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மண்சரிவு காரணமாக இடம்பெயர்ந்துள்ள மக்கள் மூன்று முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த முகாம்களின் பராமரிப்பு பணிகளை இராணுவத்தினர் பொறுப்பேற்றுக்கொண்டுள்ளனர். கொஸ்லந்த ஸ்ரீ கணேசா வித்தியாலம், புனாகலை வித்தியாலயம் மற்றும் புனாகலை ஆரம்ப பாடசாலை ஆகியவற்றில் மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
 
முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு உரிய முறையில் சேவைகள் வழங்கப்படவில்லை. உணவு மற்றும் ஏனைய வசதிகள் செய்து கொடுக்கப்படாத காரணத்தினால், பராமரிப்பு பணிகளை இராணுவத்தினர் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளதாக பாதுகாப்பு படை கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மனோ பெரேரா தெரிவித்துள்ளார். மாவட்டச் செயலகம் மற்றும் பிரதேச செயலகங்களின் ஊடாக முகாம்களில் தங்கியிருக்கும் மக்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
 
அனர்த்தத்துக்கு அரசே பொறுப்பு - அரியநேத்திரன் குற்றச்சாட்டு.
 
மலையத்தில் ஏற்பட்ட பாரிய மண்சரிவில் மக்கள் பலர் உயிரிழந்தமைக்கான முழுப் பொறுப்பையும் அரசே ஏற்கவேண்டும் எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் கூறினார். பதுளை, கொஸ்லாந்த - மீரியபெத்த தோட்டத்தில் வாழ்ந்த மக்களின் உயிர்கள் அநியாயமாக இழக்கப்பட்டுள்ளன. மண்சரிவு அனர்த்தத்திலிருந்து மக்களின் உயிர்களைப் பாதுகாப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்திருக்கலாம். இதற்கான வாய்ப்பும் இருந்துள்ளது. ஆனால், எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே, இந்தச் சம்பவத்துக்கான முழுப் பொறுப்பையும் அரசு ஏற்கவேண்டும்" என்றார்.
 
கிழக்குப் பல்கலைக்கழகத்தில் அஞ்சலி
 
அதேவேளை, கொஸ்லந்த பகுதியில் இடம்பெற்ற மண்சரிவு அனர்த்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு கிழக்குப் பல்கலைக்கழக கல்லடி சுவாமி விபுலானந்தர் அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் மாணவர்கள் அஞ்சலி செலுத்தினர்.http://www.seithy.com/breifNews.php?newsID=119828&category=TamilNews&language=tamil

இலங்கை மலையக பகுதியில் பயங்கர நிலச்சரிவு ! 300 இந்திய வம்சாவழித் தமிழர்கள் பலி! 20 சடலங்கள் மீட்பு!

மிகவும் வருந்தத்தக்க செய்தி இது. தமிழர்களுக்கு தொடர்ந்து இன்னல் நேர்ந்து கொண்டே இருக்கிறது. பலியானவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் இந்திய வம்சாவழித் தமிழர்கள். நியாயப்படி தமிழக அரசு இதற்கு உதவி செய்ய வேண்டும்.

மலையகத் தமிழர்கள் தமிழினம் என்ற நேரடி உறவு தமிழக அரசுக்கு இருக்குமே என்றால் தமிழக அரசின் சார்பாக உதவிகளை வழங்க அரசு முன்வர வேண்டும். ஈழத் தமிழர்களுக்குத் தான் எந்த உதவியும் சேர முடியாதவாறு அப்போதைய தமிழக அரசு பார்த்துக் கொண்டது. மலையகத் தமிழர்களுக்காவது ஏதாவது உதவியை வழங்கட்டும் தமிழக அரசு. தமிழக மக்களாகிய நாம் பாதிக்கப்பட்ட மலையக தமிழர்களுக்கு உதவ இந்த நேரத்தில் ஆதரவு குரல் கொடுப்போம்.

இராச்குமார் பழனிசாமி

https://m.facebook.com/story.php?story_fbid=956005727747611&id=100000145796525

Edited by துளசி

இன்றய தினம் யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியங்களினால் யாழ்.குடா நாட்டின் பல பகுதிகளிலும் பரவலாக பாதிக்கப்பட்ட மலையக உறவுகளிற்கான நிவாரணப் பொருட்கள் சேகரிக்கும் பணி மாணவர்களால் மிகுந்த ஆர்வத்துடன் மேற்கொள்ளப்பட்டது.

இந்த மனிதாபிமான பணிக்கு வர்த்தகர்கள் மற்றும் பொதுமக்கள் மனமுவந்து தம்மாலான பொருளுதவி,நிதியுதவியினை வழங்கி உள்ளனர்.

(Facebook)

  • கருத்துக்கள உறவுகள்
மீரியபெத்த நிலச்சரிவில் 38 பேரே பலி! – எண்ணிக்கையைக் குறைத்தது அரசாங்கம்.  
[sunday 2014-11-02 07:00]
 
பதுளை, மீரியபெத்தவில் ஏற்பட்ட நிலச்சரிவில் இறந்தவர்கள் அல்லது காணாமல் போனவர்களின் மொத்த எண்ணிக்கை 38 மட்டுமே என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. முன்னதாக 300 பேர் இந்த நிலச்சரிவில் அகப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியிருந்தன. எனினும், பாடசாலைக்குச் சென்ற 85 மாணவர்கள் உள்ளிட்ட 227 பேர் மீரியபெத்த நிலச்சரிவில் உயிர்தப்பியுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
 
தோட்ட தொழிலாளர்களின் குடியிருப்புக்கள் நிலச்சரிவில் அகப்பட்ட நிலையில், அதில் பாதிக்கப்பட்டவர்களின் பெயர் விபரங்கள் தம்மிடம் தற்போது இருப்பதாக போலிஸார் கூறியுள்ளனர். நிலச்சரிவு ஏற்பட்டு ஐந்து நாட்கள் ஆகியுள்ளநிலையில், தற்போது மீட்புப் பணிகளில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவற்றுக்கு பொறுப்பான இராணுவ அதிகாரியான மேஜர் ஜெனரல் மனோ தெரிவித்துள்ளார்.
 
சனிக்கிழமையன்று புதையுண்ட பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டது. நிலச்சரிவுக்கு பின்னர் இதுவரை மொத்தத்தில் ஆறு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். சகதியையும், இடிபாடுகளையும் அகற்றி மோப்ப நாய்களின் உதவியுடன் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்படும் மீட்புப் பணிகள் கடுமையான மழை, மோசமான காலநிலை காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
 
பலர் தமது குடும்பங்களை மொத்தமாக இழந்திருக்கிறார்கள்.பல குழந்தைகள் அனாதைகளாகியிருக்கும் நிலையில், அவர்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கையில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. நிலச்சரிவில் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான ஆற்றுப்படுத்தல் நடவடிக்கைகளையும் இலங்கை அரசாங்கம் ஆரம்பித்திருக்கிறது. அதேவேளை பல இடங்களில் மேலும் நிலச்சரிவு அபாயத்தை எதிர்நோக்கும் மக்கள் இடம்பெயர்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

மலையத்தில் மண்சரிவினால் பாதிக்கப்பட்டோருக் நேரடியாக நிவாரணங்களை கொடுக்க இராணுவத்தினரால் அனுமதி மறுப்பு!

மலையகத்தில் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை எடுத்துச் செல்வோர் நேரடியாக அப்பொருட்களை பாதிக்கப்பட்ட மக்களது கைகளில் ஒப்படைக்க இராணுவம் அனுமதி மறுப்பு.

மகிந்த அரசு அனர்த்தம் ஏற்பட்டுள்ள பகுதிகளில் மீட்டுப்புப் பணி என்ற போர்வையில் இராணுவத்தை நிறுத்தி வைத்துள்ளதுடன், பாதிக்கப்பட்ட மலையகத் தமிழ் மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் கிடைப்பதை இராணுவ இயந்திரத்தின் மூலம் தடைசெய்துள்ளது.

கொண்டு செல்லப்படும் பொருட்களை இராணுவத்தினரிடம் கையளிக்க வேண்டும், அல்லது அங்குள்ள பிரதேச சபையிடம் கையளிக்க வேண்டும் அல்லது அங்குள்ள பன்சலவில் உள்ள இனவாத பிக்குவிடம் கையளிக்க வேண்டுமாம்.

பாதிக்கப்பட்ட பகுதிக்கு உணவுப் பொருட்களுடன் செல்பவர்களை சுமார் 20 கிலோ மீற்றர்கள் தூரத்திற்கு அப்பால் வைத்தே வழிமறிக்கின்றனர். இருவழிகளில் ஒரு வழியாகச்செல்லும்போது பெரகல என்ற இடத்திலும், மற்றய வழியால் செல்லும்போது பதுளை புகையிரத நிலையத்திற்கு அண்மையில் வைத்தும் வழிமறிக்கின்றனர்.

இதன் காரணமாக அப்பகுதிக்கு நிவாரணப் பொருட்களை எடுத்துச் செல்பவர்களிடம் மலையகத்திலுள்ள முற்போக்கு சக்திகள் ஒரு கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.

அதாவது கொண்டுவரும் உணவுப் பொருட்களை இயலுமானவரை முயற்சி செய்து நேரடியாக பாதிக்கப்பட்ட மக்களிடம் கையளியுங்கள். அல்லது அங்குள்ள இந்து இளைஞர் மன்றம், அல்லது பண்டாரவளை தமிழ் கோவில், ஹப்புத்தளை தமிழ் கோவில் ஆகிய ஏதாவதொன்றில் கையளிக்குமாறும் இல்லையேல் திரும்பவும் கொண்டு சென்று சில நாட்கள் கழித்து நேரில் கொண்டு வந்து ஒப்படைக்குமாறும் கோருகின்றனர்.

(Facebook)

மொறட்டுவ தமிழ் இலக்கிய மன்றம் சார்பாக பதுளை மண்சரிவில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிவாரணப்பணிகள் வெள்ளி சனி ஞாயிறு ஆகிய தினங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

1381442_1558228211078542_269182696584196

13254_1558464007721629_38610838468617102

(Facebook)

விசேட அறிவிப்பு

கொஸ்லாந்தை மீரியபெத்த மக்களை நேரடியாக சந்தித்து களநிலவரங்களை அறிந்து கொண்டுள்ளேன். இதன்படி;

கொஸ்லாந்தை மீரியபெத்த மக்களுக்கு, மென்மேலும் நிவாரண உதவிகள் அவசியமில்லை. குடும்பங்களுக்கு நிலமும், வீடும், குழந்தைகளுக்கு கல்வியுமே உடன் தேவை.

இந்நிலையில் மலையக மக்களின் சொந்தநில, சொந்த வீட்டு கோரிக்கைகளை வலியுறுத்தி நிற்கும் அரசியல், சமூக, சட்ட முன்னெடுப்புகளுக்கு ஒத்தாசைகளை வழங்குமாறு உள்நாட்டு, வெளிநாட்டு உணர்வாளர்களையும், நல்ல உள்ளங்களையும் வேண்டுகிறேன்.

மீண்டும் நிவாரண பொருட்கள் அவசியப்படுமானால், அதுதொடர்பாக அங்குள்ள தொண்டுள்ளம் கொண்ட நமது இணைப்பாளர்கள் கண்காணித்து அறிவிப்பார்கள்.

இன்றைய நிலவரப்படி, நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட கொஸ்லாந்தை மீரியபெத்த மக்களுக்கு உதவிட வேண்டும் என்ற நல்லெண்ணம் காரணமாக, உணர்வால் உந்தப்பட்டு நிவாரண பொருட்களை ஊர்திகளில் கூட்டாகவோ, தனிபட்ட முறையிலோ எடுத்து செல்ல வேண்டாம் என்றும், அவ்விடம் கொண்டு செல்லப்படும் பொருட்கள் பாதிக்கப்பட்ட மக்களை சென்றடைவதற்கு நடைமுறை காரணங்கள் பல தடையாக இருக்கின்றன என்பதையும் தெரிவித்து கொள்கின்றேன்.

Mano Ganesan

https://m.facebook.com/story.php?story_fbid=10201836082262895&id=1807807648

கொஸ்லாந்தை மீரியபெத்த மக்களை சந்திக்க சென்ற போது என்னுடன் எம்பீக்கள் மாவை, சுரேஷ், செல்வராஜா மற்றும் நமது கட்சியின் குகவரதன், பாஸ்கரா, சஷிகுமார்

10635730_10201837379455324_5482949970538

67308_10201837380055339_8926013703530342

10351307_10201837380655354_2802176544788

Mano Ganesan

https://m.facebook.com/story.php?story_fbid=10201837382255394&id=1807807648

Edited by துளசி

விக்னேஸ்வரன் கொஸ்லந்தைக்கு விஜயம் - மறுமலர்ச்சிக்கான பாதையை திறக்க முயல வேண்டும்: சிறீதரன் எம்பி

வடமாகாண முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரன் கொஸ்லந்த, மீரியபெத்தவிற்கு இன்று விஜயம் செய்துள்ளார்.

மீரியபெத்த மண்சரிவில் பாதிக்கப்பட்ட இடத்திற்கு அவர் விஜயம் செய்துள்ளார்.

முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள பாதிக்கப்பட்ட மக்களையும் அவர் சந்தித்துள்ளார்.

குறுகிய அரசியல் நோக்குடன் செயற்படுவதனை அரசியல்வாதிகள் தவிர்த்துக்கொள்ள வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

சுயலாப அடிப்படையில் செயற்படாது மண்சரிவு எச்சரிக்கை தொடர்பில் முன்கூட்டியே அரசியல்வாதிகள் கவனம் செலுத்தியிருந்தால் இந்த நிலைமையை தவிர்த்திருக்கலாம்.

இந்த துயர் மிகுந்த தருணத்தில் வடக்கிற்கும் மலையகத்திற்கும் இடையில் புதிய பிணைப்பு ஏற்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்கத் தயார். பாதிக்கப்பட்ட சிறுவர் சிறுமியருக்கு அடைக்கலம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட முடியும்.

உதவிகள் கோரப்பட்டால் தேவையான உதவிகளை வழங்க வட மாகாணசபை நடவடிக்கை எடுக்கும் என விக்னேஸ்வரன் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ளார்.

மலையக அரசியல் தலைமைகள் மறுமலர்ச்சிக்கான பாதையை திறக்க முயல வேண்டும்: சிறீதரன் எம்பி

மலையக மக்களின் பாதுகாப்பானதும் நிரந்தரமானதுமான வாழ்க்கை பற்றி இனி சிந்திக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.

அண்மையில் பாரிய மண்சரிவினால் புதையுண்டுபோன கொஸ்லாந்த, மீரியபெத்த போன்ற இடங்களில் ஏற்பட்ட பாதிப்புக்களையும் பாதிக்கப்பட்ட மக்களையும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், மலையகத்தை சேர்ந்த ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் மற்றும் அக்கட்சியை சேர்ந்த முக்கியஸ்தர்கள் பிரதி அமைச்சர் ராதாகிருஸ்ணன் உட்பட பலர் சென்றிருந்தனர்.

இதன் போது கருத்து வெளியிட்ட பா.உறுப்பினர் சி.சிறீதரன்,

மலையக சொந்தங்களின் வாழ்கையில் இந்த சம்பவம் ஒரு மாறுதலை தரவேண்டும்.

இந்த மக்கள் பற்றிய சிந்தனையில் அரசாங்கமும் மலையகத்தை நிர்வகிக்கும் அரசியல் தலைமைகளும் மறுமலர்ச்சிக்கான பாதையை திறப்பதற்கு முயலவேண்டும்.

காலதிகாலமாக கொத்தடிமைகளாகவே வாழுகின்ற இந்த மக்களுக்கு லயன் வாழ்க்கை மாறி அவர்களுக்கு நிரந்தரமானதும் பாதுகாப்புமான வீட்டுவசதிகள் வாழ்வு ஏற்படுத்தப்படுவது காலத்தின் கட்டாயமாக இருக்கின்றது.

இன்று மண்சரிவினால் ஏற்பட்ட ஏழை மக்களின் மரணம் தம் எதிர்கால சந்ததிக்கான தியாகமாக கருதப்பட்டு, அவர்களின் நினைவுகள் சுமந்து மலையக சொந்தங்களும் மலையக அரசியல் தலைமைகளும் தமிழ் பேசும் அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களும் துரிதமாக ஒரு சுபீட்சமான மலையக வாழ்வு நோக்கி சிந்தித்து செயற்பட வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

பதுளை இடைத்தங்கல் முகாம் பாராமரிப்பு செயற்பாடுகள் பொருத்தமற்றது: யோகேஸ்வரன் எம்.பி

பாதிக்கப்பட்ட மக்களுக்கு இடைத்தங்கல் முகாம்களில் மேற்கொள்ளப்படுகின்ற பராமரிப்புச் செயற்பாடு மிகவும் பொருத்தமற்றதாக காணப்படுகின்றது என த.தே.கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் குற்றம் சுமத்தியுள்ளார்.

இது தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவிக்கையில்,

உண்மையில் இது மிகவும் வேதனையான விடயம். நான் இரண்டு நாட்களுக்கு முன் இவ்விடத்திற்கு விஜயம் செய்து இம்மக்கள் பற்றிய தகவல்களை பெற்று அவர்களுக்கு உதவிகள் வழங்கினேன்.

குறிப்பாக இப்பகுதியில் 54 வீடுகள் முற்றுமுழுதாக சேதமாகியுள்ளது, அதே வேளையில் அதனைச் சூழ்ந்திருக்கின்ற மக்களும் பாதிப்பை எதிர்கொள்ளக் கூடிய சூழல் இருப்பதன் காரணமாக அந்த மக்களும் அங்கிருந்து இடம்பெயர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இவர்கள் இடைத்தங்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

முற்றுமுழுதாக பாதிக்கப்பட்ட குடும்பங்களை பொருத்தமட்டில் கொஸ்லாந்து கணேசா வித்தியாலயத்தில் 11 குடும்பங்களும், எஞ்சிய மக்கள் பூணாகலை தமிழ் மகா வித்தியாலயத்திலும் இருக்கின்றனர்.

அதே வேளை ஏனைய குடும்பங்கள் சார்பான தகவல்கள் எமக்கு கிடைக்கபெறவில்லை.

அங்கிருந்த குடும்பங்களை தவிர்த்து அவ்வழியால் வேலைக்குச் சென்றவர்களும் இதில் பாதிக்கப்ட்டிருக்கின்றார்கள.

எனினும் இந்த அரசாங்கமானது திட்டமிட்ட வகையில் இந்த மக்களுக்கான இடைத்தங்கள் முகாம் பராமரிப்பினை மேற்கொள்ளவில்லை.

குறிப்பாக பெரகல பகுதியில் இருந்து 17 கிலோமீட்டருக்கு அப்பால் இருக்கின்ற பாதிப்புக்குள்ளான பிரதேசத்திற்கு அருகாமையில் இருக்கின்ற கணேசா வித்தியாலயத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு ஏற்படுத்தப்பட்டிருக்கும் முகாமில் அடிப்படை வசதிகள் சரிவர மேற்கொள்ளப்படவில்லை.

இதேவேளை பண்டாரவளையில் இருந்து 22 கிலோமீட்டருக்கு அப்பால் இருக்கின்ற மிகவும் குளிரான பிரதேசமாகிய பூணாகலையில் அடுத்த முகாமினை ஏற்படுத்தி இருக்கின்றார்கள். அங்கும் வசதிகள் செய்து கொடுப்பதில் தாமதிக்கின்றார்கள்.

எனவே இந்த அரசாங்கம் இரண்டு முகாமிலும் இருக்கின்ற மக்களை பண்டாரவளையில் ஒரு சிறந்த இடத்தினை தெரிவு செய்து அவர்களுக்கு தற்காலிக கொட்டிலை அமைத்து தனித்தனியாக அந்த குடும்பங்களை தங்கவைக்க வேண்டும்.

இங்கு பூரண உதவிகள் வந்து கிடைத்தாலும் கூட அதனைப் பராமரிப்பதற்கு ஏற்ற சூழல் இல்லை.

ஒரு அனர்த்தம் இடம்பெற்றால் எந்தளவிற்கு இந்த முகாம் பராமரிப்புகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என கடந்த காலங்களில் கிழக்கு மாகாணத்தில் இடம்பெற்ற பல அனர்த்தங்களில் ஏற்பாடுகள் செய்தவர்கள் என்ற ரீதியில் எமக்கு பல அனுபவம் இருக்கின்றது.

எனவே அந்தவகையில் இந்த மக்களுக்கு மேற்கொள்ளப்படுகின்ற பராமரிப்புச் செயற்பாடு மிகவும் பொருத்தமற்றதாக இருப்பதனை நான் கூறவேண்டியவனாக இருக்கின்றேன்.

இந்த விடயத்தினை நான் பாராளுமன்றத்திலும் பேச இருக்கின்றேன். அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் உட்பட அனைவரின் கவனத்திற்கும் கொண்டு வந்து என்னால் இயன்ற அளவு முயற்சிகள் மேற்கொள்வேன் என்றார்.

10548233_645128552273072_391024541794696

(Facebook)

மொறட்டுவை தமிழ் இலக்கிய மன்றத்தின் ஏற்பாட்டில் மொறட்டுவை தமிழ் மாணவர்களால் சேகரிக்கப்பட்ட நிவாரணங்கள் இன்று பூனாகல மகாவித்தியாலயத்திலும் அதை அண்டியுள்ள பிரதேச முகாம்களிலும் நேரடியாக கையளிக்கப்பட்டது.

மிகக்குறுகிய காலத்தில் பல சவால்களுக்கு மத்தியில் இக்கைங்கரியத்தை செய்ய உதவிய அனைவருக்கும் நன்றி. மிகவும் மகிழ்ச்சியுடனும் மன திருப்தியுடனும் விடைபெறுகிறோம்.

 

மிக முக்கியமாக எமது நிவாரணப்பணிகளை மேற்கொள்ள இடம் கொடுத்த கொழும்பு தமிழ்ச்சங்கத்திற்கும் அவற்றை சேமித்து வைக்க உதவி புரிந்த நூலகம் அலுவலகம் மற்றும் கலை இலக்கிய பேரவைக்கும் எம் சிரம்தாழ்ந்த நன்றிகள்.

 

ஒரு அனர்த்தம் பல உண்மைகளை வெளிக்கொண்டுவந்துள்ளது. பல பாடங்களை கற்றுத்தந்துள்ளது. உழைத்து தேய்ந்து போகும் எம் உறவுகளின் பிரச்சனைகளுக்கு இனியாவது தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் பதுளையிலிருந்து விடை பெறுகிறோம்.

 

10714571_1016804135011705_52347923384647

 

10700182_1016804358345016_38891686780257

 

10648412_1016804481678337_13086914160457

 

10521920_1016805488344903_54350922767135

 

1900347_1016805701678215_681396162282157

 

10636809_1016806015011517_88513441273662

 

10708503_1016806131678172_13644890710134

 

1900266_1016806211678164_625987371672214

 

10623795_1016806311678154_46797705920163

 

10712415_1016806445011474_70854152205754

 

1292988_1016806568344795_855632655913370

 

1398117_1016806955011423_648747234042191

 

10633413_1016807038344748_49024892830163

 

10714250_1016807148344737_41089089622391

 

10431386_1016807475011371_53466973716913

 

1267179_1016807641678021_554343088324196

 

10703996_1016808071677978_59000214661528

 

10712541_1016808411677944_11925006258530

 

(facebook)

Edited by துளசி

10628725_1016808951677890_30987748408123

 

10750274_1016810115011107_22452263496791

 

10733764_1016811358344316_87036445921419

 

1465874_1016810995011019_382052073652050

 

10256762_1016811995010919_83246391908640

 

10733428_1016811781677607_64792887218821

 

(facebook)

  • கருத்துக்கள உறவுகள்

.

கொஸ்லந்தையில் போதியளவு பொருட்கள் உள்ளமையால் இங்கிருந்து அடுத்த வாரமே எடுத்துச் செல்லப்படும்; சீ.வி.கே
970e070ed17d458d2f31abe021cb4e3c.jpg
பதுளை மாவட்டம் கொஸ்லந்தை பகுதியில் இடம்பெற்ற மண் சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வடக்கு மாகாண சபையின் சார்பில் சேகரிக்கப்படும் நிவாரணப் பொருட்கள் எதிர்வாரமளவிலேயே கொண்டு செல்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவைத்தலைவர் சீ.வி.கே சிவஞானம் ஊடகங்களுக்கு அறிவித்துள்ளார்.
 
குறித்த விடயம் தொடர்பில் அவைத்தலைவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
 
கொஸ்லந்தையில் இடம்பெற்ற மண் சரிவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வடக்கு மாகாண சபையின்  சார்பில் சேகரிக்கப்படும் நிவாரணப் பொருட்கள் இன்றைய தினம் கொண்டு சென்று ஒப்படைப்பதாக தீர்மானிக்கப்பட்டிருந்தது.
 
எனினும் தற்போதைய நிலவரத்தின் படி போதியளவு பொருட்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அறியக்கூடியதாக உள்ளது. எனவே குறித்த பகுதியில் பொருட்கள்  கொண்டு செல்வது பிற் போடப்பட்டுள்ளது. 
 
அதற்கமைய எதிர்வரும் வாரம் அளவில் கொண்டு செல்ல நவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன்  மாகாண சபை உறுப்பினர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு குறைந்த பட்சம் 10 ஆயிரம் ரூபா ஒதுக்குவது என்றும் வடக்கு மாகாண சபையின்  பேரவை செயலகத்தில் கடந்த 31 ஆம் திகதி இடம்பெற்ற கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.
 
அதன்படி முதலமைச்சர் மற்றும் உறுப்பினர்கள் நிதியுதவியினையும் செய்துள்ளனர். அவர்களுடன் மேலும் பல நலன்விரும்பிகளும் உதவு தொகையினை வழங்கியுள்ளனர். எனவே இவை அனைத்தும் அடுத்த வாரம் கொஸ்லந்தை மக்களிடம் கையளிக்கப்படும் என்றும் ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=586913619107749687#sthash.BiLLA2wm.dpuf

 

  • கருத்துக்கள உறவுகள்
பதுளையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வீடு கட்டிக்கொடுக்கிறது இந்தியா! (படங்கள்)

 

 

1-300x168.jpgபதுளை கொஸ்லந்த மீரியபெத்த தோட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவால் வீடுகளை இழந்த மக்களுக்கு வீடுகளை கட்டிக்கொடுக்க இந்திய அரசு முன்வந்துள்ளது. இலங்கையின் தோடடப் பகுதிகளில் வீடுகளை கட்டிக்கொடுக்கும் திட்டத்தின் கீழ் மண்சரிவினால் வீடுகளை இழந்தவர்களுக்கும் வீடுகளை அமைத்துக்கொடுப்பதாக கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகம் அறிவித்துள்ளது.

இதேவேளை ஒக்டோபர் 29 ஆம் திகதி கொஸ்லந்தையில் ஏற்பட்ட மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக 5 மில்லியன் ரூபா பெறுமதியான அவசர மனிதாபிமான உதவிப் பொருட்களை இந்திய அரசு இலங்கைக்கு வழங்கியுள்ளது.

பதுளையிலுள்ள ஊவா மாகாண ஆளுநர் அலுவலகத்தில் வைத்து இன்று இந்திய துணை உயர்ஸ்தானிகர் ஏ.நடராஜா இந்தப் பொருட்களை ஊவா மாகாண ஆளுநர் நந்த மெத்திவ்விடம் கையளித்தார்.

இந்த நிகழ்வில் ஊவா மாகாண முதலமைச்சர் சசிந்திர ராஜபக்ஷஇ ஊவா மாகாண தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் செந்தில் தொண்டமான் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

ஜெனரேட்டர்கள், தண்ணீர்பம்ப், டிரக்டர், சமையல் பாத்த்திரங்கள் உட்பட அவசரமாகத் தேவைப்படும் உபகரணங்களும், பொருட்களும் வழங்கப்பட்டுள்ளன.

11.jpg

2.jpg

3.jpg

 

http://tamilleader.com/?p=43579
  • கருத்துக்கள உறவுகள்

அப்ப எனி அடுத்த இடத்தில் மண் சரிவு ஏற்பட்டு 100 சனம் செத்த பிற்பாடு தான் அந்த இடத்திலும் இந்தியா வீடு கட்டிக் கொடுக்குமா? மற்றய இடங்களில் லயன்களில் வசிக்கும் மக்களுக்கு தொடர்ச்சியாக லயன் வாழ்க்கை தானா?

  • 2 weeks later...

19.11.2014

 

பதுளை கொஸ்லந்தை நிலச்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினாலும், பல்கலைக்கழக சமூகத்தினாலும் சேகரிக்கப்பட்ட உலர் உணவுகள் மற்றும் அத்தியாவசிய பொருட்களை மாணவர் ஒன்றிய பிரதிநிதிகள்,மாணவர்கள் மற்றும்ஆசிரிய சங்கத்தினர்,விரிவுரையாளர்கள் சகிதம் சென்று நேற்றய தினம்(செவ்வாய் கிழமை) நேரடியாக சென்று அவர்களிடம் கையளித்ததுடன் அவர்களுடன் கலந்துரையாடினோம். இவ் மனிதாபிமான செயற்பாட்டுக்கு எமக்கு ஒத்துழைப்பு வழங்கிய அமைப்புக்கள் மற்றும் யாழ்.வர்த்தக சமூகத்தினர் மற்றும் நலன்விரும்பிகள்,பல்கலைக்கழக சமூகத்தினர், பொருட்களை ஆர்வமாக சேகரித்த மாணவர்கள் அனைவருக்கும் நன்றிகள்.

 

10711064_791152650944087_595507461462828

 

1798525_791152430944109_8383686682725045

 

10675725_791152677610751_284034611121292

 

10368254_791152380944114_574892237389496

 

1779318_791152467610772_2780963008147146

 

10151260_791152517610767_155084368664233

 

1510829_791152550944097_4699139266523447

 

1375115_791152217610797_8911719461228047

 

1958069_791152164277469_5647441406736945

 

10380275_791152864277399_380718849519668

 

 

 

14022_791152080944144_143246504362294754

 

10389467_791152120944140_808491229058843

 

10387535_791152584277427_241540137015411

 

10406360_791152610944091_491817614909421

 

(facebook)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.