Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரித்தானிய பிரஜைகள் மீது மாலக சில்வா தாக்குதல் நடத்திய சம்பவம் குறித்து உயர்ஸ்தானிகராலயம் கவனம்

Featured Replies

பிரித்தானிய பிரஜைகள் மீது மாலக சில்வா தாக்குதல் நடத்திய சம்பவம் குறித்து உயர்ஸ்தானிகராலயம் கவனம்
 
பிரித்தானிய பிரஜைகள் மீது அமைச்சர் மேர்வின் சில்வாவின் புதல்வர் தாக்குதல் நடத்திய சம்பவம் குறித்து இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் கவனம் செலுத்தி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
 
 
கொழும்பு டுப்ளிகேசன் வீதியில் அமைந்துள்ள இரவு நேர கேளிக்கை விடுதியொன்றில் மாலக சில்வாவும் அவரது நண்பர்களும் பிரித்தானிய தம்பதியினரை தாக்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தாக்குதல் சம்பவத்தில் பிரித்தானிய பிரஜைகளின் தலை மற்றும் முகப் பகுதிகளில் காயங்கள் ஏற்பட்டுள்ளன.
 
 
தாக்குதலுக்கு இலக்கானவர்களை இன்னமும் சந்திக்கவில்லை எனவும் அவர்களை சந்தித்ததன் பின்னரே கருத்து வெளியிட முடியும் எனவும் பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
 
 
43 வயதான ஸ்கொட்லாந்து பிரஜையான ஜேம்ஸ் பிரான்ஸிஸ் மற்றும் 24 வயதான பெலின்டா மெகன்சீ ஆகியோரே தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர்.
 
 
இருவரும் பிரித்தானிய கடவுச் சீட்டை உடையவர்கள் எனவும், ஜேம்ஸ் உள்ளுர் நிறுவனமொன்றில் பொறியியலாளராக கடமையாற்றி வருவதாகவம் தெரிவிக்கப்படுகிறது.
 
 
2011ம் ஆண்டு தங்காலை ஹோட்டல் ஒன்றில் வைத்து பிரித்தானிய பிரஜை குர்ஹாம் செய்க் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
 
  • கருத்துக்கள உறவுகள்

கட்டத்துரைக்கு கட்டம் சரியில்லை... போல கிடக்கு.  :lol:

 

Cartoon-of-the-day-04_11_2014-600-1.jpg

Edited by Nathamuni

சிறீலங்காவில் பிரித்தானியத் தம்பதியினர் தாக்கப்பட்டமைக்கு பிரித்தானரியா கடும் கண்டனம்!

பிரித்தானியாவைச் சேர்ந்த தம்பதியினர் தாக்கப்பட்டமை தொடர்பில், கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகரகம் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது.

 

அமைச்சர் மேவின் சில்வாவின் புதல்வன் மாலக சில்வா கேளிக்கை விடுதி ஒன்றில் வைத்து குறித்த இரண்டு பேரையும் தாக்கி இருந்தார்.

இதில் அவர்கள் கடும் காயத்துக்கு உள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் பிரித்தானிய உயர்ஸ்தானிகரகம் குழு ஒன்றை அமைத்து, வழக்கு தாக்கல் செய்துள்ளதுடன், இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனத்தை தெரிவித்திருக்கிறது.

சிறிலங்காவில் பல தடவைகள் இவ்வாறு வெளிநாட்டு பிரஜைகள் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

 

http://www.pathivu.com/news/35066/57//d,article_full.aspx

  • கருத்துக்கள உறவுகள்

மகிந்தாவின் புதல்வர்களை விட மேர்வின் புதல்வர் அந்த ஆட்டம் போடுகிறார்.சீக்கிரம் அழியப் போகிறார்

  • கருத்துக்கள உறவுகள்

குடிக்கப்போய்

குடித்துப்போட்டு

அடிபட்டதற்கு

 பிரித்தானிய உயர்ஸ்தானிகரகம் குழு ஒன்றை அமைத்து, வழக்கு தாக்கல் செய்துள்ளதுடன், இந்த சம்பவத்துக்கு கடும் கண்டனத்தை தெரிவித்திருக்கிறது.

 

தமிழரை கொத்து கொத்தாக  கொன்றபோது......?? :(  :(  :( 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.