Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கோத்தாவின் உத்தரவால் இடித்து தரைமட்டமாக்கப்பட்ட சாவகச்சேரி சந்தை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

நகர அபிவிருத்தி அதிகாரசபையின் நிதியில் சாவகச்சேரி நகர பொதுச்சந்தை மீள் நிர்மாணப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய சாவகச்சேரி நகரசபையினால் நிர்மாணிக்கப்பட்டு செயற்பட்டு இவ்வளவு காலமும் செயற்பட்டு வந்த பொதுச்சந்தை இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளது.

1995 வரையாயான காலப்பகுதியில் யாழ் குடாநாட்டில் லட்சக்கணக்கில் வியாபாரிகளும் வர்த்தகர்களுமென பெரும் சன நெருக்கடியை எதிர்கொண்ட நகரம் அதன் பின்னரான யுத்தகால சுழலால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த சந்தை கட்டிட தொகுதியை மீள் நிர்மாணம் செய்யும் நகர அபிவிருத்தி அதிகாரசபையின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச என்பது குறிப்பிடத்தக்கது.

P_20141104_081823.jpg

 

P_20141104_081827.jpg

 

P_20141104_081831.jpg

 

- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=776463605904845033#sthash.3hgZGuC1.dpuf
  • கருத்துக்கள உறவுகள்

அடப்பாவி கோத்தா... நம்ம ஊர் சந்தை பூராவையும் இடிச்சு தரைமட்டமாக்கிவிட்டான்... சொன்னபடி மீளக்காட்டிதருவனா இல்லா கொட்டில்களில்தான் சந்தையோ தெரியவில்லை... :( உந்தபுழுதிக்கைதான் அம்மம்மாவுடன் சந்தைசெல்லும்போது பதிந்த என் பால்யகால கால்தடங்களில் சிலவும் இருக்கும்..,

  • கருத்துக்கள உறவுகள்

அப்படி, மீண்டும் கட்டிக் கொடுக்கப் பட்டாலும்,
அதில்....பெருமளவான சிங்களவருக்கு கடை ஒதுக்கப் படுவது நிச்சயம்.
பரம்பரையாக... அதில் கடை நடத்தி வந்தவர்கள் ஒதுக்கப் படுவார்கள்.
 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் நிலப்பகுதியில் வரும் அபிவிருத்தி எனும்போது வரவேற்கலாம். ஆனால் இச் சந்தைத் தொகுதியில் பிறரை கொண்டு வந்து. ஏற்கனவே இருந்தவர்களைத் துரத்தும் நடவடிக்கை என்றால் அது ஏற்புடையதல்ல. சிங்களப் பகுதிகளிலும், தமிழ்ப் பகுதிகளிலும் அபிவிருத்தி என்ற பெயரில் உலகவங்கியிடம் கடன்பெற்றுள்ளார்கள் என நினைக்கின்னே;. ஆசிய அபிவிருத்தி வங்கியோ தெரியவில்லை. அதன் அடிப்படையில் தான் தற்போது கொழும்பிலும் அபிவிருத்திகளைக் கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாகச் செய்கின்றார்கள். ஆனால் ஒரு அடிப்படைத் திட்டங்களும் இல்லாமல், பாதுகாப்பற்ற விதங்களில் செய்ய வெளிக்கிட்டு, மக்கள் இன்னமும் நடமாடக்கூடிய விதத்தில் முற்றுப்பெறவில்லை.

உலகவங்கியிடம் கணக்குக் காட்டுவதற்காக யாழ்ப்பாணத்திலும் செய்யப்பட வேண்டிய அபிவிருத்திகள் வரவேற்கப்படலாம். ஏனென்றால் அவர்கள் எம் நிலத்தில் இருந்து அழித்ததைத் தரத் தானே வேண்டும்(தகவல் உபயம் : விக்னேஸ்வரன்)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நூறுமாடியோடை கட்டிடம் எழும்பப்போகுது.....இதுக்கு போய் ஐயோ குய்யோ எண்டு கத்திக்கொண்டு......... :D

 

  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.