Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக கிண்ண கிரிக்கெட் போட்டி - 2015 செய்திகளும் கருத்துக்களும்

Featured Replies

  • தொடங்கியவர்

PAKISTAN 9/2

  • Replies 827
  • Views 43.8k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

PAK 17/2 after 11 overs

  • தொடங்கியவர்

ரகு உங்கள் கிரிக்கெட் ஆய்வை இன்று எதிர்பார்க்கிறேன்

  • தொடங்கியவர்

சிறீலங்கா 283/1

  • தொடங்கியவர்

சிறிலங்கா 9 விக்கெட்டுகளால் வெற்றி

திரிமானே 139 not out

சங்ககாரா 117 not out

டில்சான் 44

Man of the match சங்ககாரா

  • தொடங்கியவர்

இங்கிலாந்து பந்துவீச்சை பிரித்து மேய்ந்த சங்கக்காரா, திரிமானி: இலங்கைக்கு மிகப்பெரிய வெற்றி

 

 

இங்கிலாந்து நிர்ணயித்த 310 ரன்கள் வெற்றி இலக்கை இலங்கையின் சங்கக்காரா, திரிமானி ஆகியோர் தங்களது சதங்கள் மூலம் ஊதித் தள்ளினர்.

வெலிங்டனில் இன்று நடைபெற்ற உலகக்கோப்பை ஏ-பிரிவு ஆட்டத்தில் இங்கிலாந்து 309 ரன்கள் குவித்தும் இலங்கை அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

 

 

நல்ல பேட்டிங் ஆட்டக்களத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் மோர்கன் சரியாகவே பேட்டிங்கைத் தேர்வு செய்தார். அந்த அணியின் ஜோ ரூட் 121 ரன்களை எடுக்க இங்கிலாந்து 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 309 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து ஆடிய இலங்கை அணி, சங்கக்காரா (117 நாட் அவுட், 86 பந்துகள் 11 பவுண்டரி 2 சிக்சர்கள்), மற்றும் திரிமானி (139 நாட் அவுட், 143 பந்துகள், 13 பவுண்டரி 2 சிக்சர்) ஆகியோரின் அனாயாச சதங்களினால் 47.2 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 312 ரன்கள் எடுத்து மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

 

சங்கக்காரா சாதனை:

சங்கக்காரா அடுத்தடுத்து சதங்களை எடுத்துள்ளார். முதலில் 73 பந்துகளில் சதம் எடுத்து ஒருநாள் போட்டிகளில் அவர் அதிவேக சதம் கண்டார். இன்று இங்கிலாந்துக்கு எதிராக 70 பந்துகளில் சதம் கண்டு அவர் சாதனையையே அவர் முறியடித்தார்.

உலகக்கோப்பை போட்டிகளில் அதிக ரன்களை எடுத்த வீரர்கள் பட்டியலில் 1258 ரன்களுடன் தற்போது சங்கக்காரா, லாராவை (1225 ரன்கள்) பின்னுக்குத்தள்ளி3ஆம் இடம் பிடித்தார். சச்சின் 2278 ரன்களுடன் முதலிடம், ரிக்கி பாண்டிங் 1743 ரன்களுடன் 2ஆம் இடம்.

 

 

முதல் கோணல் முற்றிலும் கோணல்:

நல்ல பேட்டிங் பிட்சில் இங்கிலாந்து பேட்ஸ்மென்கள் நவீன கிரிக்கெட்டின் காலத்திற்கு சற்று முந்தைய கால மன நிலையில் ஆடினர். பந்துவீச்சில் எந்த வித பரிசோதனையும் இல்லை. ஆண்டர்சன், ஃபின், பிராட், வோக்ஸ் ஆகியோர் ஒரேமாதிரியான பவுலர்களே. ஆட்டத்தின் எந்த நேரத்திலும் விக்கெட்டுகள் எடுக்கும் நிலையில் இல்லை. இதில் 4-வது ஓவரில் சதநாயகன் திரிமானிக்கு கேட்ச் ஒன்றை கோட்டை விட்டனர்.

பிராட் வீசிய பந்தை திரிமானி ஒரு ஒன்றுமில்லாத ஷாட்டை ஆட பந்து விளிம்பில் பட்டு பின்னால் சென்றது, பட்லருக்கு இடது புறம் சென்றது. அவர் ஒன்றுமே செய்யவில்லை, ரூட் கேட்சைக் கோட்டைவிட்டார். கண்களுக்கு ரூட் விட்ட கேட்ச் அது. ஆனால் உணர்வு ரீதியாகப் பார்த்தால் அது விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லரின் தவறுதான். முதல் கோணல் முற்றிலும் கோணலான கதைதான் இன்று இங்கிலாந்துக்கு நடந்தது.

 

 

பிறகு இலங்கையின் ஸ்கோர் 226 ரன்களாக 38-வது ஓவரில் இருந்த போது திரிமானி 98 ரன்களில் இருந்தார். அப்போது ஆண்டர்சன் வீசிய பந்தை கவர் திசையில் ஏந்தினார் திரிமானி. கையில் விழுந்த கேட்சை நழுவ விட்டார் மொயீன் அலி. முதலில் பிடித்திருந்தால் சங்கக்காராவுக்கு நெருக்கடி கொடுத்து வீழ்த்தியிருக்கலாம். 38-வது ஓவரில் கேட்சைப் பிடித்திருந்தாலும் புதிதாக வரும் பேட்ஸ்மென்களுக்கு நெருக்கடி கொடுத்திருக்கலாம் அதுவும் இல்லாமல் போனது. அப்போது 12 ஓவர்களில் வெற்றிபெற 84 ரன்கள் தேவை. புதிய பேட்ஸ்மென்கள் இறங்கியிருந்தால் சிலபல ரன் இல்லாத பந்துகளை வீசி நெருக்கடி கொடுத்திருக்கலாம். ஆனால் இங்கிலாந்து அணியிடமோ, கேப்டன் மோர்கனிடமோ எந்த வித தீவிரமும் இல்லை.

 

 

தொடக்கத்திலிருந்தே தள்ளி வைக்கப்பட்ட பீல்டிங். ஸ்கொயர் பவுண்டரிகள் மிகவும் குறுகியதாக இருப்பதைக் கூட கணக்கில் எடுத்துக் கொள்ளாத ஷாட் பிட்ச் பந்து வீச்சு என்று இங்கிலாந்து சொதப்பியது ஏராளம். அந்த அணியில் ஒரு ‘ஜெண்டில்மேன்’ கேப்டன் போய் மற்றொரு ‘ஜெண்டில்மேன்’கேப்டன் மோர்கன் வந்துள்ளார். முற்றிலும் அணுகுமுறை மாற்றம், உத்தி மாற்றங்கள் அந்த அணிக்குத் தேவைப்படுகிறது.

 

தில்ஷன், திரிமானி அபாரத் தொடக்கம்:

 

கேட்ச் விட்டதுதான் அதன் பிறகு 19 ஓவர்களில் தில்ஷன், திரிமானி 100 ரன்களை எட்டினர். கேட்ச் விட்டதில் கடுப்பாகி பிராட் பந்துவீச்சு சிதைந்தது. அவரை தில்ஷன் அடுத்தடுத்து இரண்டு சிக்சர்கள் விளாசினார். ஷார்ட் பவுண்டரியை வைத்துக் கொண்டு ஷாட் பிட்ச் போட்டால், இரண்டும் ஸ்கொயர்லெக்கில் சிக்ஸ்.

55 பந்துகளில் 4 பவுண்டரி 2 சிக்சர்கள் சகிதம் 44 ரன்கள் எடுத்து மொயீன் அலி பந்தில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அதன் பிறகாவது நெருக்கடிகொடுத்திருக்க வேண்டும்,

 

ஆனால் துணைக் கண்ட வீரர்கள் என்றால் ஷார்ட் பிட்ச் பந்துகளை விளையாடத் தெரியாது என்ற பழைய ஃபார்முலாவில் சங்கக்காராவுக்கு (இத்தனைக்கும் சங்கக்காரா இங்கிலாந்தை ஏற்கெனவே பிய்த்து உதறியிருக்கிறார்) படுமோசமாக வீசினர். மொயீன் அலி கூட ஷாட்டாக வீசினார் அதனை பவுண்டரிக்கு விரட்டியே சங்கக்காரா இன்னிங்ஸை தொடங்கினார். மீண்டும் மீண்டும் ஷாட் பிட்ச், சிக்சர், பவுண்டரி வரத் தொடங்கியது. ஸ்டீவ் ஃபின் வீசிய பந்தை நடந்து வந்து எக்ஸ்ட்ரா கவரில் சங்கா அடித்த சிக்ஸ் இங்கிலாந்தின் பந்துவீச்சை அவர் எந்த அளவுக்கு மதித்தார் என்பதன் அளவுகோல்.

 

45 பந்துகளில் 3 பவுண்டரி ஒரு சிக்சருடன் சங்கக்காரா அரைசதம் எட்டினார். மறுமுனையில் திரிமானி 96 ரன்களில் இருந்தார். பிறகு 117 பந்துகளில் 10 பவுண்டரி ஒரு சிக்சருடன் சதம் எட்டினார். 2 கேட்ச்கள் இவருக்கு நழுவ விடப்பட்டது. ஆண்டர்சன், வோக்ஸ் ஆகியோர் தொடர்ந்து ஷாட் பிட்சாக வீச 5 பவுண்டரிகளை விளாசினார் சங்கக்காரா. 45 பந்துகளில் அரைசதம் கண்ட சங்கக்காரா அடுத்த 25 பந்துகளில் மேலும் 50 ரன்களை எடுத்து சதம் கண்டார். அவரது அதிவேக ஒருநாள் சதம்.

 

கடைசியிலும் திரிமானிக்கு பவுண்டரியில் ஒரு கேட்ச் விடப்பட்டது. ஜோஸ் பட்லர் பை வகையில் 4 ரன்களை விட்டார். இங்கிலாந்து சுத்தமாக ஒரு அறுவையான அணி என்பது போல்தான் ஆடியது. இறுதியில் 48-வது ஓவரில் வோக்ஸ் பந்தை திரிமானி அலட்சியமாக லாங் ஆனில் சிக்ஸ் அடித்து வெற்றி இலக்கைக் கடந்து சென்றார். இங்கிலாந்து அணியில் மொயீன் அலி தவிர அனைவரும் ஒரு ஓவருக்கு 6 மற்றும் அதற்கு மேல் ரன்களை விட்டுக் கொடுத்தனர்.

 

இங்கிலாந்து பேட்டிங்:

முதலில் இங்கிலாந்து அபாரமாக தொடங்கியது 9 ஓவர்களில் 62 ரன்கள் எடுத்தது. இயன் பெல் 49 ரன்களையும், மொயீன் அலி 15 ரன்களையும் எடுத்தனர். அதன் பிறகு மொயீன் அலி (15) மேத்யூஸிடம் வீழ்ந்தார். கேரி பாலன்ஸ் 6 ரன்களில் தில்ஷன் பந்தில் அவுட் ஆனார். பெல் சுரங்க லக்மலிடம் வீழ்ந்தார். 101/3 என்ற நிலையில் ஜோ ரூட், மோர்கன் (27) சேர்ந்து 60 ரன்களை 14.1 ஓவரில் எடுத்தனர். மோர்கன் பெரேராவிடம் வீழ்ந்தார். அதன் பிறகு ஜோ ரூட்டுக்கு ஆட்டம் பிடிக்க ஜேம்ஸ் டெய்லர் (25) இணைந்து ஸ்கோரை 259 ரன்களுக்கு உயர்த்துமாறு 98 ரன்களை 11 ஓவர்களில் சேர்த்தனர். ஜோ ரூட் 100 பந்துகளில் 100 ரன்களை எடுத்தார்.

 

கடைசியில் ஜோ பட்லர் 19 பந்துகளில் 6 பவுண்டரி ஒரு சிக்சருடன் 39 ரன்கள் விளாசினார். இங்கிலாந்து முதல் பவர் பிளேயில் 62 ரன்கள். 11-35 வரை ரன் விகிதம் 3.96, கடைசி 10 ஓவர்களில் 10 ரன்களுக்கும் மேல்.

 

இடைப்பட்ட ஓவர்களில் மேத்யூஸ், (10 ஓவர் 43 ரன் 1 விக்) தில்ஷன் (8.2ஓ, 35 ரன் 1 விக்), ஆகியோரும் ஹெராத் ஓரளவுக்கும் பெரேரா ஓரளவுக்கும் கட்டுப்படுத்தினர். மலிங்கா சோபிக்கவில்லை. 10 ஓவர்களில் 63 ரன்கள் கொடுத்து 1 விக்கெட்டை வீழ்த்தினார். சுரங்க லக்மலுக்கு இன்று சாத்துப்படி நடந்தது. 7.4 ஓவரில் 71 ரன்களை விட்டுக் கொடுத்தார் லக்மல்.

 

இந்த ஓவர்களில் இங்கிலாந்து 5 ரன்களுக்கு மேல் குவித்திருந்தால் ஆட்டம் இன்னும் நெருக்கமாகச் சென்றிருக்க வாய்ப்பிருந்திருக்கலாம். ஆனால்... இங்கிலாந்து சொதப்பிய சொதப்பலில் எந்த இலக்கும் கூட இலங்கைக்கு இன்று எளிதாகவே அமைந்திருக்கும்.

 

ஆட்ட நாயகன் சங்கக்காரா. இலங்கை பிரிவு ஏ-யில் 4-இல் 3-ஐ வென்று 6 புள்ளிகளுடன் 2ஆம் இடத்தில் உள்ளது. நிகர ரன் விகிதம். +0.128. இங்கிலாந்தூ 4-இல் 3ஐ தோற்று ஸ்காட்லாந்துக்கு மேல் உள்ளது அவ்வளவே.

 

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%87%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BF-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF/article6948316.ece

  • தொடங்கியவர்

 9 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை பிரித்து மேய்ந்தது இலங்கை... "செம" ஆட்டம்.. "எம" வெற்றி.... !

 

  வெல்லிங்டன்: நியூசிலாந்திடம் சிக்கி சின்னாபின்னமான அதே வெல்லிங்டன் மைதானத்தில் இலங்கையிடம் ஒரு சோகமான தோல்வியைச் சந்தித்துள்ளது இங்கிலாம்து. திரிமன்னேவும், குமார சங்கக்கராவும் இணைந்து இங்கிலாந்து பந்து வீச்சை தவிடு பொடியாக்கி விட்டனர்.

 

குறிப்பாக சங்காவின் ஆட்டத்தில் வழக்கம் போல அனல் பறந்தது. அதி வேகமாக சதமடித்து அசத்தி விட்டார். முன்னதாக முதலில் பேட் செய்த இங்கிலாந்து அணி 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 309 ரன்களைக் குவித்தது. அந்த அணியின் ஜோ ரூட் அபாரமாக ஆடி 121 ரன்களைக் குவித்தார். 9 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை பிரித்து மேய்ந்தது இலங்கை... மொயீன் அலி 49 ரன்கள் எடுத்தார். கேப்டன் மோர்கன் 27 ரன்களில் வீழ்ந்தார். ஜேம்ஸ் டெய்லரின் பங்கு 25. கடைசி நேரத்தில் ஜோஸ் பட்லர் அதிரடியாக ஆடி 19 ரன்களில் 390 ரன்Kளைக் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன் காரணமாக 6 விக்கெட் இழப்புக்கு 309 ரன்களைக் குவித்தது இங்கிலாந்து. இலங்கைத் தரப்பில் பந்து வீச்சு சரியில்லை. இதன் காரணமாகவே இங்கிலாந்து ரன் குவிக்க முக்கியக் காரணமாகி விட்டது.

 

ஆனால் பேட்டிங்கில் பிரளயத்தை ஏற்படுத்தி விட்டனர் இலங்கை வீரர்கள். எப்படி வங்கதேசத்திற்கு எதிராக சொல்லி வைத்து கில்லி போல ஆடினார்களோ அதேபோல இங்கிலாந்து பந்து வீச்சை பிரித்தெடுத்து விட்டனர். லஹிரு திரிமன்னேவும், திலகரத்னே தில்ஷனும் சேர்ந்து நல்ல தொடக்கத்தைக் கொடுத்தனர். இருவரையும் பிரிக்க இங்கிலாந்து என்னென்னவோ செய்து பார்த்தது. வீரர்களுடன் வம்பிழுப்பிலும் ஈடுபட்டுப் பார்த்தனர் இங்கிலாந்து பவுலர்கள். ஆனால் எதையும் கண்டு கொள்ளாமல் தில்ஷனும், திரிமன்னேவும் பிரமாதமாக ஆடினர். கடந்த போட்டியில் சதமடித்த தில்ஷன் இம்முறை 55 பந்துகளில் 44 ரன்களில் ஆட்டமிழந்தார்.

 

மறு முன்னையில் நங்கூரம் போல நின்று திரிமன்னே சிறப்பாக ஆடினார். முதல் விக்கெட்டுக்கு திரி்மன்னேவும், தில்ஷனும் இணைந்து 100 ரன்களைக் குவித்தனர். தொடர்ந்து திரிமன்னேவும், சங்கக்கராவும் இணைந்து வெளுத்தனர். அதிலும் சங்கக்கரா சரவெடி போல வெடித்து விட்டார். வந்த பந்தையெல்லாம் அவர் ரன்னாக்க ரொம்பவே புண்ணாகிப் போனது இங்கிலாந்து பந்து வீச்சு. வங்கதேசத்திற்கு எதிரான போட்டியில் அபாரமாக ஆடி சதம் போட்டது போலவ இந்தப் போட்டியிலும் பிரமிப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி மின்னல் வேக சதத்தைப் போட்டார் சங்கா. 86 பந்துகளை மட்டுமே சந்தித்த அவர் 117 ரன்களைக் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

 

மறு முன்னையில் திரிமன்னே 143 பந்துகளில் 139 ரன்களைக் குவித்தார். சங்காவின் ஆட்டம்தான் இங்கிலாந்துக்கு எதிராக போட்டியை முழுமையாக திருப்ப உதவியது என்று கூறலாம். சங்காவுக்கு இது 23வது ஒரு நாள் சதமாகும். 47.2 ஓவர்களிலேயே ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 312 ரன்களைக் குவித்து அபார வெற்றி பெற்றது இலங்கை. ஆட்ட நாயகனாகவும் சங்கக்கரா தேர்ந்தெடுக்கப்பட்டார். இதே மைதானத்தில் தான் சில நாட்களுக்கு முன்பு நியூசிலாந்திடம் மிக மோசமான தோல்வியைத் தழுவியது இங்கிலாந்து. அதேபோல ஒரு தோல்வியை இன்று இங்கிலாந்திடம் அது வாங்கியுள்ளது.

 

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/sri-lanka-thrash-england-221918.html

  • தொடங்கியவர்

எல்லோரும் இதை கவனிக்காம விட்டுட்டோம்.. நம்மை விட எமிரேட்ஸ் இதில் பெஸ்ட்!

 

பெர்த்: ஐக்கிய அரபு எமிரேட்ஸை இந்தியா எளிதாக வீழ்த்தியது என்றாலும் கூட எமிரேட்ஸ் அணியிலும் கூட சில நல்ல விஷயங்கள் கண்ணில் படத்தான் தெரிந்தன. பேட்டிங்கில் அந்த அணி மிகவும் மோசமாகி ஆடியது என்பதில் சந்தேகம் இல்லை. நமது சுழற்பந்து வீச்சை சுத்தமாக அவர்களால் சமாளிக்கவே முடியவில்லை. பந்து எங்கு வருகிறது, எப்படி வருகிறது என்பதைக் கூட அவர்களால் அனுமானிக்க முடியவில்லை. இதனால் அஸ்வின், ஜடேஜாவிடம் மொத்தமாக அவர்கள் விழுந்து போனார்கள்.

 

 

ஆனால் அவர்களது பந்து வீச்சாளர்கள் அவ்வளவு மோசம் இல்லை. இன்னும் சொல்லப் போனால் நமது பந்து வீச்சாளர்களை விட சற்று பெட்டர்தான் என்பது உற்றுப் பார்த்தால் தெரியும். எல்லோரும் இதை கவனிக்காம விட்டுட்டோம்.. நம்மை விட எமிரேட்ஸ் இதில் பெஸ்ட்! இந்திய பந்து வீச்சாளர்கள் அனுபவம் மிக்கவர்கள், அதிலும் எமிரேட்ஸ் வீரர்களை விட நிபுணர்களும் கூட. ஆனால் அப்படிப்பட்ட இந்திய பந்து வீச்சாளர்கள் 13 எக்ஸ்ட்ரா ரன்களை வாரி வழங்கினர்.

 

 

அதேசமயம், எமிரேட்ஸ் பந்து வீச்சாளர்கள் ஒரு எக்ஸ்ட்ரா ரன் கூட விட்டுக் கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் அவர்களது பந்து வீச்சும் கூட நேர்த்தியாகவே இருந்தது. பந்தை பெரும்பாலும் நேராக போட்டார்கள். இது கவனிக்கத்தக்கது. அதிலும் குருகே பந்து வீச்சு அபாரமாக இருந்தது. அந்தப் பந்து வீச்சில் தவான் திணறியதைக் காண முடிந்தது. கோஹ்லி கூட அடித்து ஆட யோசித்தார். ரோஹித்தும் அதேபோல திணறினார்.

 

 

மற்றவர்களின் பந்துகளில்தான் இவர்கள் ஆடினார்கள். 6 ஓவர்கள் வீசிய குருகே 19 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார். ஒரு மெய்டனும் போட்டார். அழிவிலும் கூட குருகே எமிரேட்ஸ் அணிக்கு ஒரு அருமையான பந்து வீச்சைக் கொடுத்தார். அதிக ரன்களை வாரிக் கொடுத்தவர் என்றால் அது நவீத் மட்டுமே. ஆனால் அவரது பந்து வீச்சிலும் கூட நமது வீரர்கள் திணறவே செய்தனர். ஆரம்பத்தில் நமது வீரர்கள் விளையாடியதைப் பார்த்தபோது எங்கே 30 ஓவர்களுக்கு மேல் ஆடுவார்களோ என்றுதான் தோன்றியது. அப்படி நிதானமாக ஆடி வந்தனர் இந்திய வீரர்கள். நேற்றைய வெற்றி மேலோட்டமாக பார்ப்பதற்கு எளிதான வெற்றி போலத் தெரிந்தாலும் கூட எமிரேட்ஸின் பந்து வீச்சு காரணமாகவே போட்டி 19 ஓவர் வரை நீண்டதாகவே கருதத் தோன்றுகிறது.

 

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/uae-bowlers-are-better-than-indians-how-221921.html

  • தொடங்கியவர்

பாகிஸ்த்தான் 20 ஓட்டங்களால் வெற்றி

  • தொடங்கியவர்

வஹாப் ரியாஸின் ஆல்ரவுண்ட் திறமை; பாகிஸ்தானுக்கு முதல் வெற்றி

 

பிரிஸ்பனில் இன்று நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் பிரிவு-பி ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி ஜிம்பாப்வேயை 20 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

டாஸ் வென்ற மிஸ்பா முதலில் பேட் செய்ய முடிவெடுத்தார். அவரே மீண்டும் சிறப்பாக பேட் செய்து 73 ரன்களை எடுக்க கடைசியில் வஹாப் ரியாஸ் மிக முக்கியமான கட்டத்தில் 54 ரன்களை 46 பந்துகளில் விளாச பாகிஸ்தான் 7 விக்கெட் இழப்புக்கு 235 ரன்களை எட்டியது. இந்தத் தொடரில் பெரிய இலக்குகளை துரத்தி 270 ரன்களுக்கும் மேல் சர்வசாதாரணமாக எடுத்த அணி ஜிம்பாப்வே. அதனால் இன்றைய ஆட்டம் கொஞ்சம் விறுவிறுப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்பட்டது. பாகிஸ்தான் கேட்ச்களை விடாமல் பிடித்தது என்பது அந்த அணிக்கு ஒரு பெரிய ஆறுதல்.

 

 

தொடர்ந்து ஆடிய ஜிம்பாப்வே 49.4 ஓவர்களில் 215 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பந்துவீச்சிலும் வஹாப் ரியாஸ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்த 7 அடி உயர மொகமது இர்பான் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்ற ஜிம்பாப்வேயை வீழ்த்த முடிந்தது.

ஆனால் ஜிம்பாப்வேயை எளிதில் பாகிஸ்தான் வீழ்த்தியதாக ஒரு போதும் கூற முடியாது, காரணம் இலக்கை விரட்டும்போது பல்வேறு தருணங்களில் பாகிஸ்தானை வீழ்த்தும் அச்சுறுத்தலை ஜிம்பாப்வே செய்தவண்ணமே இருந்தது. ஆனால், தொடர்ந்து பாகிஸ்தான் வீச்சாளர்கள் விக்கெட்டுகளை கைப்பற்றும் நோக்கத்துடன் வீசி அதில் வெற்றியும் கண்டதால் ஜிம்பாப்வேயின் அனுபவமின்மை பட்டவர்த்தனமானது.

 

பாகிஸ்தான் பந்துவீச்சின் கட்டுக்கோப்புக்கு உதாரணம் கூற வேண்டுமென்றால், விக்கெட் கீப்பர் உமர் அக்மல் 5 கேட்ச்களை பிடித்ததைக் கூற முடியும்.

இலக்கைத் துரத்திய போது சிபாபா, சிகந்தர் ரசா ஆகியோர் களமிறங்கினர். மொகமது இர்ஃபான் வீசிய லெந்த் மற்றும் அவரது பந்துகள் எழும்பிய உயரம் அனுபவமற்ற இவர்களுக்கு பெரும் தலைவலியை கொடுக்க அவர் 2 ஓவர்களில் 1 மெய்டன் 1 ரன் என்று அச்சுறுத்தலாக திகழ்ந்தார். 5-வது ஓவரில் 9 ரன்கள் எடுத்திருந்த சிபாபாவை எகிறிய பந்தில் வீழ்த்தினார் இர்ஃபான்.

 

அதே போல் ஆட்டத்தின் 7-வது ஓவரில் மீண்டும் சிகந்தர் ரசாவுக்கு ஒரு சற்றே எகிறிய பந்தை வீச அவரும் கேட்ச் கொடுத்து வெளியேறினார். 7 ஓவர்களில் 22/2.

அதன் பிறகும் இறுக்கமான பந்துவீச்சு தொடர 16-வது ஓவரில்தான் ஜிம்பாப்வே 50 ரன்களை எட்டியது. மசகாட்சாவும் டெய்லரும் இணைந்து ஸ்கோரை 74 ரன்களுக்கு உயர்த்திய போது மீண்டும் மொகமது இர்பான் பந்து வீச அழைக்கப்பட அவர் 29 ரன்களுடன் அபாயகரமாகச் சென்று கொண்டிருந்த மசகாட்சாவை வீழ்த்தினார். மசகாட்சா, இர்ஃபான் பந்தை மேலேறி வந்து விளாச நினைத்தது... சாரி கொஞ்சம் ஓவர்!

 

அதன் பிறகு பிரெண்டன் டெய்லர், சான் வில்லியம்ஸ் இணைந்து ஸ்கோரை கொஞ்சம் விரைவு படுத்த அடுத்த 8 ஓவர்களில் 50 ரன்கள் வந்த்து. சான் வில்லியம்ஸ் அபாய வீரர். டெய்லர் 72 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 50 ரன்கள் எடுத்தார். அப்போது வஹாப் ரியாஸ் பந்தில் அக்மலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். ஆனால் இது ஒரு அதிர்ஷ்டவசமான விக்கெட்டே. லெக் திசையில் சென்ற பந்திலிருந்து அவர் விலகியிருந்தால் வைட் கிடைத்திருக்கும் ஆனால் அதனை சுலப பவுண்டரி அடிக்க நினைத்து லெக் திசை எட்ஜ் செய்ய அக்மல் கேட்ச் பிடித்தார்.

 

சான் வில்லியம்ஸ் 32 பந்துகளில் 33 ரன்கள் எடுத்திருந்த போது ரஹத் அலியின் எழும்பிய பந்தை நேராக ஷேஜாதிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இப்போது கிரெய்க் எர்வின் மட்டுமே ஜிம்பாப்வேயின் நம்பிக்கை நட்சத்திரம், ஆனால் இடையில் மிரே சற்றே எழும்பிய இர்ஃபான் பந்தை உமர் அக்மலிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். எர்வின் கடும் நெருக்கடியில் ஆடி கடைசியில் 14 ரன்களில் வஹாப் ரியாஸிடம் வீழ்ந்தார்.

 

கடைசியில் சிகும்பரா அச்சுறுத்தினார் அவர் 35 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 35 ரன்கள் எடுத்து வஹாப் ரியாஸின் 4-வது விக்கெட்டாக வீழ்ந்தார் ஜிம்பாப்வே 215 ரன்களுக்குச் சுருண்டது.

 

நம்பிக்கையளிக்காத பாக். பேட்டிங்:

பாகிஸ்தான் களமிறங்கியவுடனேயே நசீர் ஜாம்ஷெட், அகமது ஷேஜாத் விக்கெட்டுகளை 4 ரன்களில் இழந்தது. சதரா அபாரமாக வீசினார். பிறகு ஹாரிஸ் சோஹைல் 27 ரன்கள் எடுக்க ஸ்கோர் 58ஆக உயர்ந்தது. அவரும் ஒரு அலட்சியமான தருணத்தில் சிகந்தர் ரசாவிடம் அவுட் ஆனார். உமர் அக்மல், மிஸ்பா கூட்டணி 69 ரன்களை சுமார் 13 ஓவர்களில் சேர்த்தது. உமர் அக்மல் 33 ரன்களில் சான் வில்லியம்ஸ் பந்தில் பவுல்டு ஆனார். அருமையான பந்து அது.

 

சான் வில்லியம்ஸின் அதே ஓவரில் அஃப்ரீடிக்கு ஒரு பந்தை மிடில் அண்ட் ஆஃபில் பிட்ச் ஆக்கித் திருப்ப அஃப்ரீடி தடுத்தாட முயல பந்து போதிய அளவு திரும்பி மட்டையைக் கடந்து பவுல்டு ஆனது. அதிர்ச்சிகரமான பந்து, அதிர்ச்சிகரமான விக்கெட். 127/5 என்று ஆனது பாகிஸ்தான். மக்சூத் 21 ரன்கள் எடுத்தார்.

ஆட்ட நாயகன் வஹாப் ரியாஸ் களமிறங்கி 6 பவுண்டரி ஒரு சிக்சருடன் 54 ரன்கள் எடுத்து கடைசி வரை நின்று ஸ்கோரை 235 ரன்களுக்கு உயர்த்தினார்.

ஒருவழியாக முதல் வெற்றியைப் பெற்றது பாகிஸ்தான்.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%B5%E0%AE%B9%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF/article6948558.ece

  • தொடங்கியவர்

2doxnr.jpg

 

2a4su4l.jpg

  • தொடங்கியவர்

dnitc9.jpg


2uscswl.jpg

  • தொடங்கியவர்

இன்னொரு ஓவர் கேட்ட மிட்செல் ஸ்டார்க், மறுத்த கிளார்க்
 

 

நியூசிலாந்துக்கு எதிரான விறுவிறுப்பான போட்டியில் மிட்செல் ஸ்டார்க் தொடர்ச்சியாக 6 ஓவர்கள் வீசினார். 3 விக்கெட்டுகளை கைப்பற்றி ஆஸ்திரேலியாவுக்கு வெற்றி வாய்ப்பை ஏற்படுத்தினார்.

 

ஆனால் 6 ஓவர்களுக்குப் பிறகு அவர் கூடுதலாக ஒரு ஓவர் கேட்டுள்ளார். ஆனால், கிளார்க் கொடுக்கவில்லை. ஜான்சனிடம் சென்றார். ஆனால் ஜான்சனுக்கு ஸ்விங் இல்லை. இதனால் நியூசி.யின் நெருக்கடி குறைந்தது. அந்த அணி வெற்றி பெற்றதற்கு கிளார்க்கின் இந்த முடிவும் ஒரு காரணம் என்று கூறப்படுகிறது.

13-வது ஓவரில் ஸ்டார்க் தனது 6-வது ஓவரை முடிக்கும் போது நியூசிலாந்து அணி 90/4 என்று இருந்தது. 14-வது ஓவரில் கமின்ஸ் 2 ரன்களை மட்டுமே கொடுத்தார். ஸ்கோர் 92/4 என்று இருந்த போது வில்லியம்சன், கோரி ஆண்டர்சன் கிரீசில் இருந்தனர்.

 

ஆனால், 15-வது ஓவரை ஸ்டார்க்தான் வீசுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஜான்சனை கொண்டு வந்தார் கிளார்க். ஆனால் அந்த ஓவரில் ஆண்டர்சன், ஜான்சனை 2 பவுண்டரிகள் ஒரு சிக்சர் அடித்தார். இதில் 2-வது பவுண்டரி ஒரு அதிர்ஷ்ட பவுண்டரி என்பது வேறு விஷயம். அந்த ஓவரில் 16 ரன்களை ஜான்சன் கொடுக்க ஆட்டம் நியூசி. பக்கம் திரும்பியது.

 

தான் ஒரு ஓவர் கூடுதலாகக் கேட்டதாகக் கூறிய மிட்செல் ஸ்டார்க், “நான் கொஞ்சம் ஏமாற்றமடைந்தேன். ஆனால் கிளார்க், நீண்ட நாளைய நலனுக்காகவே இதனைச் செய்தார். நான் கேப்டன் அல்ல. எனவே இடைவெளி கொடு என்று கேப்டன் கூறும்போது நான் பவுலிங் வீச முடியாது, இல்லையென்றால் நான் வீசிக்கொண்டேயிருந்திருப்பேன். இன்னொரு ஓவர் கேட்டேன், ஆனால் கிளார்க் ஒரு அபூர்வமான, அசாத்தியமான கேப்டன், ஆகவே அவர் எடுக்கும் எந்த முடிவையும் நான் முழுமனதோடு ஆதரிக்கிறேன்.” என்றார்.

 

நேற்று 28 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார் மிட்செல் ஸ்டார்க்.
 

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%8A%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%93%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8D/article6948388.ece?homepage=true&theme=true

  • தொடங்கியவர்

இங்கிலாந்து பேட்ஸ்மேனை 'குறிவைத்த' இலங்கை பவுலர் லக்மலுக்கு அபராதம்! ஐசிசி அதிரடி உத்தரவு 

 

வெலிங்டன்: இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஜோஸ் பட்லரின், உடலை குறிவைத்து பந்து வீசிய இலங்கை பவுலர் சுரங்கா லக்மலுக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அபராதம் விதித்துள்ளது. உலக கோப்பை கிரிக்கெட்டின், குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள இலங்கை-இங்கிலாந்து அணிகள் நேற்று வெலிங்டன் மைதானத்தில் மோதின. முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 309 ரன்களை குவித்தது.

 

கடைசி ஓவர் இங்கிலாந்து அதிரடியாக ஆடிக் கொண்டிருந்த நேரத்தில், ஆட்டத்தின் கடைசி ஓவரை வீச பந்து வீச்சாளர் சுரங்கா லக்மலை அழைத்தார் இலங்கை கேப்டன் ஆங்கிலோ மேத்யூஸ்.

எச்சரிக்கை இங்கிலாந்து ரன் குவிக்கிறார்களே என்ற கோபத்தில், பேட்ஸ்மேன் ஜோஸ் பட்லரின் உடலை நோக்கி குறிவைத்து பந்தை எறிந்தார் சுரங்கா லக்மல். இதையடுத்து கள நடுவர்கள் உடனடியாக அவருக்கு எச்சரிக்கைவிடுத்து, ஒழுங்காக, பந்தை எறியுமாறு கூறினர்.

 

பந்து வீச்சு தடுப்பு ஆனால், அம்பயர்களின் எச்சரிக்கையையும் மீறி, அடுத்த பந்தையும் உடலை நோக்கி எறிந்தார் லக்மல். 4 பந்துகள் வீசியிருந்த நிலையில், உடனடியாக அவரை பந்து வீச கூடாது என்று தடுத்தனர் களநடுவர்கள். போட்டி ரெஃப்ரி டேவிட் பூனிடம் இதுகுறித்து புகார் அளிக்கப்பட்டது.

அபராதம் இதனிடையே, லக்மலின் செயலுக்காக போட்டி ஊதியத்தில் இருந்து 30 சதவீதம் பிடித்தம் செய்யப்படுவதாக ஐசிசி அறிவித்துல்லது. டேவிட் பூன் இதுகுறித்து கூறுகையில், "அது ஒரு ஆபத்தான மற்றும் நியாயப்படுத்த முடியாத பந்து வீச்சாகும்" என்றார்.

 

கடும் குற்றம் பேட்ஸ்மேனின் உடலை நோக்கி, ஃபுல்டாசாக பந்தை வீசுவது பாடிலைன் அல்லது பீமர் என்று அழைக்கப்படும். ஐசிசி நடத்தை விதிமுறைகளின் 1வது பிரிவின்கீழ் இது மிகப்பெரும் தவறு மற்றும் தடை செய்யப்பட்ட பந்து வீச்சு முறையாகும். பவுன்சர் பந்தால் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் பிலிப் ஹியூக்ஸ் சில மாதங்கள் முன்பு உயிரிழந்த நிலையில், லக்மலின் இந்த செயல் பிற நாட்டு கிரிக்கெட் வீரர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

 

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/suranga-lakmal-fined-bowling-beamers-221943.html

  • தொடங்கியவர்

இன்னும் எதுக்கு வெட்டியா விளையாடிக்கிட்டு.... இங்கிலாந்தை கழுவி ஊற்றும் ரசிகர்கள், மீடியா!

 

ண்டன்: இங்கிலாந்து அணி விளையாடும் விதம் அந்த நாட்டு ரசிகர்களையும், ஊடகங்களையும் ரொம்பவே கடுப்பாக்கி விட்டது போலும். சகட்டு மேனிக்கு இங்கிலாந்து அணியை கழுவிக் கழுவி ஊற்றிக் கொண்டுள்ளனர். உலகக் கோப்பையில் நான்கு போட்டிகளில் மோதியுள்ள இங்கிலாந்து அணி அதில் 3 போட்டிகளில் தோல்வியைத் தழுவியுள்ளது. அதிலும் நியூசிலாந்து மற்றும் இலங்கையிடம் அது பெற்ற தோல்வி ரொம்பவே கேவலமானது. இதுதான் ரசிகர்களை கடுப்பாக்கி விட்டது.

 

இலங்கைக்கு எதிராக நடந்த போட்டியில் இங்கிலாந்து பந்து வீச்சாளர்கள், இலங்கை அணியை முடக்க முடியாமல் தடுமாறியது ரசிகர்களை ரொம்பவே டென்ஷனாக்கி விட்டது. நீங்க எடுத்த ரன்களை வைத்துக் கூட உங்களைக் காப்பாத்திக்க முடியாமல் போயிருச்சே என்று இங்கிலாந்து அணிக்கு கடும் கண்டனங்கள் குவிந்து கொண்டுள்ளன. வெல்லிங்டனில் நடந்த போட்டியில் இங்கிலாந்து சிறப்பாக பேட் செய்திருந்தது. ஆனால் பவுலர்கள் கவிழ்த்து விட்டு விட்டனர். இதனால் மிகப் பெரிய ஸ்கோரை இலங்கை அழகாக சேஸ் செய்து வெற்றி பெற்றது நினைவிருக்கலாம்.

 

டெய்லி மெயில் டெய்லி மெயில் செய்தியில், மிகப் பெரிய ஸ்கோரை எடுத்தும் கூட இங்கிலாந்து வீரர்களால் வெல்ல முடியாமல் போனது அவர்களின் இயலாமையை வெளிப்படுத்துவதாக உள்ளது.

 

கத்துக்குட்டிப் பசங்க மாதிரி இன்றைய நவீன ஒரு நாள் கிரிக்கெட்டில் கத்துக்குட்டிகள் போல காணப்படுகிறார்கள் இங்கிலாந்து வீரர்கள் என்று டெய்லி மெயில் கழுவி ஊற்றியுள்ளது.

 

பிபிசி ஆஸ்திரேலியா, நியூசிலாந்துடன் தோல்வி, ஸ்காட்லாந்துடன் வெற்றி எல்லாம் எதிர்பார்த்தவைதான். ஆனால் இலங்கையிடம் தோல்வி என்பது.. ஸாரி இங்கிலாந்து. இங்கிலாந்துக்கும், உலகக் கோப்பைக்கும் வெகு தூரம் உள்ளது என்பதையே இது காட்டுகிறது. கடைசி எட்டுக்கு இங்கிலாந்து முன்னேறுமா என்பதே கேள்விக்குறிதான் என்று பிபிசி கூறியுள்ளது.

 

 

பாய்காட் விமர்சனம் முன்னாள் வீரர் ஜெப்ரி பாய்காட் கூறுகையில், ஒரு வேளை இங்கிலாந்து அணி காலிறுதிக்கு முன்னேறினாலும் கூட அரை இறுதிக்கு அது வருவது நிச்சயம் சிரமமானது. வெற்றி பெறும் வகையில் அவர்கள் விளையாடவில்லை என்றார்.

 

ஊருக்கு திரும்புங்கப்பா...! டிவிட்டரில் ரசிகர்கள் தாறாமாறாக கிழித்து தோரணம் கட்டி வருகின்றனர். ஒருவர் டிவிட்டரில் இப்படிப் போட்டுள்ளார். அடுத்த பிளைட்டைப் பிடித்து ஊருக்குத் திரும்புங்கள். விளையாடியது போதும். வெல்லிங்டனிலிருந்து லண்டன் திரும்ப குறைந்த கட்டணமே செலவாகும் என்று கூறியுள்ளார்.

 

அவிங்க கூட நல்லா விளையாடுறாங்களே இன்னொருவரோ, ஞாயிற்றுக்கிழமை லீக்கில் விளையாடும் குட்டி அணி கூட சிறப்பாக ஆடுகிறது. ஆனால் குப்பையாக ஆடுகிறார்கள் இவர்கள் என்று கடுப்பாக கூறியுள்ளார்.

 

அட இதெல்லாம் சகஜம்தானுங்களே ஆனால் இங்கிலாந்து இதற்கு முன்பும் கூட 9 ஒரு நாள் போட்டிகளில் 300க்கும் மேல் ஸ்கோர் செய்தும் கூட தோல்வியுற்றுள்ளதாக புள்ளி விவரக் கணக்கை சிலர் காட்டி சமாளிக்கிறார்கள்.

 

அடுத்து என்ன நடக்கலாம்? அடுத்து இங்கிலாந்து அணி, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகியோருடன் மோதவுள்ளது. ஆனால் இதிலும் அது வெல்லுமா அல்லது தட்டுத் தடுமாறுமா என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/give-up-pack-up-come-home-media-fans-can-t-bear-england-221964.html

  • கருத்துக்கள உறவுகள்

இங்கிலாந்தின் துடுப்பாட்டம்கூட பரவாயில்லை.. ஆனால் பந்துவீச்சு மிக சாதாரணமாக உள்ளது.. வீசப்படும் பந்துகளின் தன்மையைப் பார்க்கும் போதெல்லாம் அவர்கள் விக்கட்டுகளைக் கைப்பற்றுவார்கள் என்கிற எண்ணம் வருகுதில்லை.. :o:D

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஆட்டத்தை என்னால் பார்க்க முடியவில்லை. எல்லாம் கைய்யடக்கத் தொலைபேசியில்தான் .

 

இங்கிலாந்து துடுப்பெடுத்தாடும்போது ஆரம்பத்தில் 5 ஓவர்களில் 40 ஓட்டங்கள் என்று ஒருமுறை தொலைபேசியில் பார்க்கும்போது தெரிந்தது. இன்றைக்கும் அடிதான் விழப்போகுதென்று இருந்துவிட்டேன். சிறிது நேரத்தின்பின்னர் 72 இற்கு 2 விக்கெட்டுக்கள் என்று மாறியிருந்தது. ஆனால் பெல் இன்னும் ஆடிக்கொண்டிருந்தார். அதனால் இங்கிலாந்து பெரியதொரு ஓட்ட எண்ணிக்கையை எடுக்கும் என்று நினைத்தேன். ஆனால் அடுத்தடுத்து விக்கெட்டுக்கள் விழ ஆரம்பித்தவுடன் இலங்கையணிக்குச் சாதகமாக நிலமை மாறியதையும் காணக்கூடியதாக இருந்தது. ஆனால் ரூட்டும், அவருடன் இணைந்துகொண்ட மோர்கன், டெயிலர், பட்லர் போன்றவர்களது அதிரடி ஆட்டத்தினால் இங்கிலாந்து 309 ஓட்டங்களை எடுத்தது. குறிப்பாக இறுதி ஓவர்களில் அனுபவமில்லாத சுரங்க லக்மால், எப்போதுமே அதிக ஓட்டங்களைக் கொடுக்கும் பெரேரா போன்றவர்கள் சொதப்பி விட்டார்கள் என்றே தோன்றுகிறது. போலிங் இன்னும் இவர்களுக்கு செட்டாகவில்லை. தடுமாறுகிறார்கள். 

 

அதேபோல ஸ்லிப்ஸில் மிகவும் பாதுகாப்பான பீல்டரான மஹேல கூட ஜோ ரூட்டின் பிடியை விட்டதும், பின்னர் ஜோ ரூட் 121 ஓட்டங்களைக் குவித்ததும் இலங்கையணி இன்னும் பந்து தடுப்பில் முன்னேறவில்லை என்பதையே காட்டுகிறது.

 

இலங்கையணியின் துடுப்பாட்டத்தைப் பார்த்தால் அதே வழமையான வீரர்கள்தான் ஆடுகிறார்கள். ஆரம்ப, முதலாம் விக்கெட், இரண்டாம் விக்கெட்டுக்குப் பிறகு பெரிய ஓட்டை இருக்கிறது. இலங்கை கடைசியாக வென்ற இரு போட்டிகளிலும் ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து போட்டியை வென்றிருக்கிறது. சங்கக்காரவும், தில்ஷானும், திரிமானவும் சேர்க்கும் ஓட்டங்களால்த்தான் அணி கடைசியாக நடந்த இரு போட்டிகளிலும் வென்றது. இதில் குறிப்பிடத்தக்க விடயம் என்னவென்றால் இந்த ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களில் சங்கக்கார மட்டும்தான் எந்த வித சலனமும் இல்லாமல், நிதானமாக ஆடுகிரார். தில்ஷானும், திரிமானவும் ஓட்டங்களைக் குவித்தப்போதும் கூட, அவர்களின் ஆட்டத்தில் பாதுகாப்பு இல்லை. அரைகுறை அடிகள், மட்டையிலிருந்து எட்ஜ் பண்ணிப் போன ஓட்டங்கள், தவறவிடப்பட்ட பிடிகள் என்று மிகுந்த சிரமத்துடனேயே ஆடி வருகிறார்கள். இவ்வாறு சிரமப்பட்டு ஆடும் இவர்களது ஆட்டம் அவுஸ்த்திரேலியா, தென்னாபிரிக்கா  போன்ற பலமான களத்தடுப்பு கொண்ட அணிகளுடன் சரிவருமா என்பது கேள்விக்குறி.

 

இந்த மூவரையும் தவிர அணியில் உள்ள இன்னொரு நம்பிக்கையான வீரர் மஹேல.ஆப்கானிஸ்த்தானுக்கெதிரான போட்டியில் மஹேலவின் சதம் அவர்களைக் காப்பாற்றியது. ஆனால் அவரும் அவ்வப்போதுதான் சரியாக ஆடுகிறார். சங்கக்காரவின் தொடர்ச்சியான ஓட்டக் குவிப்பு அவரிடமில்லை. 

 

இந்த நால்வரையும் விட்டால் மீதமுள்ளவர்களால் அணியை ஒரு இக்கட்டான நிலையிலிருந்து வெளியே இழுத்துக்கொண்டு வரமுடியாது. மத்தியூஸ் இந்த உலகக் கிண்ணப் போட்டிகளில் இதுவரை சோபிக்கவில்லை. பந்துவீச்சில் அசத்துகிறார், ஆனால் அவரது முக்கியமான பணியான ஓட்டங்களைக் குவிப்பதில் அவர் இன்னும் சோபிக்கவில்லை. இவரை விடவும் சந்திமால், கருணாரதன், பெரேரா போன்றவர்களும் இருக்கிறார்கள். இதில் சந்திமால் எதிர்பார்க்கப்பட்டதுபோல ஆடவில்லை. பெரேரா எப்போதாவது ஒரு போட்டியில் அடிப்பதுடன் சரி. கருணாரத்ணவை ஏன் இன்னும் அணியில் வைத்திருக்கிறார்கள் என்பது அவர்களுக்கே வெளிச்சம். தரங்கவை அவசர அவசரமாக வரவழைத்துவிட்டு கருணாரத்னவை இன்னும் அணியில் வைத்திருப்பது சுத்த முட்டாள்த்தனம்.

 

இறுதியாக, இலங்கையின் துடுப்பாட்டம் சங்கக்காரவை சுற்றியே கட்டப்பட்டு இருக்கிறது. ஏனையவர்கள் அவருக்கு ஒத்தாசையாக இருந்தாலே அதிக ஓட்டங்களைப் பெறமுடியும். ஆனால் எப்போது செய்வார்கள் என்பது கேள்விக்குறியே.

 

இம்முறை கோப்பையைத் தூக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட ஆஸி அணி கூட நியுசிலாந்திடம் அடிவாங்கியதைப் பார்க்கும்போது, பலமான 5 அல்லது 6 அணிகளில் ஏதாவது ஒன்று கோப்பையைத் தூக்கலாம். அது இந்தியாவாகவோ அல்லது இலங்கையாகவோ இருந்தால்க் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை !

  • தொடங்கியவர்

நன்றி ரகு உங்கள் நேரத்துக்கும் ஆய்வுக்கும்

 

அடுத்த போட்டியில் ஹேரத் விளையாட முடியாது. வேக பந்து வீச்சாளாளர் Dushmantha Chameera இடம் கொடுப்பார்களா அல்லது சேனநாயக்கவா தெரியவில்லை.

  • தொடங்கியவர்

15warzq.jpg

  • தொடங்கியவர்

சங்ககரா சாதனை

 

70

பேட்டிங்கில் அசத்திய இலங்கையின் சங்ககரா, 70 பந்தில் சதத்தை எட்டினார். இதன்மூலம் உலக கோப்பை அரங்கில், குறைந்த பந்தில் சதம் அடித்த வீரர்கள் பட்டியலில், 5வது இடத்தை அயர்லாந்தின் பால் ஸ்டிர்லிங்குடன் (70 பந்து, எதிர்–நெதர்லாந்து, 2011) பகிர்ந்து கொண்டார். முதலிடத்தில் அயர்லாந்தின் கெவின் ஓ பிரையன் (50 பந்து, எதிர்–இங்கிலாந்து, 2011) உள்ளார்.

 

23வது சதம்

அபாரமாக ஆடிய இலங்கையின் சங்ககரா, 23வது சதத்தை பதிவு செய்தார். இதன்மூலம் ஒருநாள் அரங்கில், அதிக சதம் கடந்த வீரர்கள் பட்டியலில், இந்தியாவின் கங்குலி (22 சதம்), கோஹ்லி (22), வெஸ்ட் இண்டீசின் கிறிஸ் கெய்ல் (22) ஆகியோரை முந்தி 4வது இடம் பிடித்தார். முதல் மூன்று இடங்களில் இந்தியாவின் சச்சின் (49), ஆஸ்திரேலியாவின் பாண்டிங் (30), இலங்கையின் ஜெயசூர்யா (28) உள்ளனர்.

* இது, உலக கோப்பை வரலாற்றில் சங்ககராவின் 3வது சதம்.

 

‘ஹாட்ரிக்’

நியூசிலாந்திடம் தோல்வி அடைந்த இலங்கை அணி, ஆப்கானிஸ்தான், வங்கதேச அணிகளை வீழ்த்தி எழுச்சி கண்டது. நேற்று இங்கிலாந்தை தோற்கடித்த இலங்கை அணி, தொடர்ந்து மூன்றாவது வெற்றியை பதிவு செய்து, காலிறுதிக்கான வாய்ப்பை அதிகப்படுத்திக் கொண்டது.

 

2 ஓவர்...4 பவுலர்

ஹெராத் வீசிய 49வது ஓவரின் 5வது பந்தை ஜாஸ் பட்லர் அடித்தார். இதனை பிடிக்க முயன்ற ஹெராத்தின் இடது கையில் பந்து பலமாக தாக்கியதில் காயமடைந்தார். சிகிச்சைக்காக ஹெராத் ‘பெவிலியன்’ திரும்பியதால், மீதமிருந்த ஒரு பந்தை திசாரா பெரேரா வீசினார்.

 

லக்மல் வீசிய 50வது ஓவரின் முதல் பந்து, அளவுக்கு அதிகமாக உயரமாக சென்றதால் ‘நோ–பால்’ என அறிவிக்கப்பட்டது. பின், 5வது பந்தில் மீண்டும் அளவுக்கு அதிகமாக வீசியதால், மீண்டும் ‘நோ–பால்’ கொடுக்கப்பட்டு, லக்மலுக்கு பந்துவீச அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் மீதமிருந்த 2 பந்தை தில்ஷன் வீசினார்.

இதன்மூலம் இலங்கை அணி, கடைசி 2 ஓவரை வீசி 4 பவுலர்களை பயன்படுத்தியது.

 

212

நேற்று, இலங்கையின் திரிமான்னே, சங்ககரா ஜோடி 2வது விக்கெட்டக்கு 212 ரன்கள் சேர்ந்தது. இதன்மூலம் உலக கோப்பை அரங்கில், எந்த ஒரு விக்கெட்டுக்கும் அதிக ரன்கள் சேர்த்த இலங்கை ஜோடிகள் வரிசையில் 3வது இடம் பிடித்தது. முதலிரண்டு இடங்களில் தில்ஷன், உபுல் தரங்கா ஜோடி (282 ரன், எதிர்–ஜிம்பாப்வே, 2011 மற்றும் 231 ரன், எதிர்–இங்கிலாந்து, 2011) உள்ளது.

 

2

இலங்கை அணி வெற்றியின் மூலம், சர்வதேச ஒருநாள் அரங்கில், 300 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்களை, ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து ‘சேஸ்’ செய்த சம்பவம் 2வது முறையாக அரங்கேறியது. இதற்கு முன், 2013ல் ஜெய்ப்பூரில் நடந்த  ஆஸ்திரேலியாவுக்கு (50 ஓவரில், 5 விக்., 359 ரன்கள்) எதிரான  போட்டியில், இந்திய அணி (43.3 ஓவரில், ஒரு விக்., 362 ரன்) ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து வெற்றி பெற்றது.

 

இளமையில் சதம்

அபாரமாக ஆடிய இலங்கையின் திரிமான்னே, 139 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் உலக கோப்பை அரங்கில், குறைந்த வயதில் (25 ஆண்டு, 174 நாட்கள்) சதமடித்த இலங்கை வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தார். இதற்கு முன், 2011ல் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக சதமடித்த உபுல் தரங்கா (26 ஆண்டு, 36 நாட்கள்) இம்மைல்கல்லை எட்டினார்.

* இங்கிலாந்தின் ஜோ ரூட் 121 ரன்கள் எடுத்தார். இதன்மூலம், உலக கோப்பை வரலாற்றில், இளம் வயதில் (24 ஆண்டு, 61 நாட்கள்) சதமடித்த வீரர்கள் வரிசையில் முதலிடத்தை கைப்பற்றினார். முன்னதாக 1983ல் இலங்கைக்கு எதிராக சதம் கடந்த கோவர் (26 ஆண்டு, 71 நாட்கள்)  இச்சாதனை படைத்தார்.

 

சிறந்த ‘சேஸ்’

இங்கிலாந்தை வீழ்த்திய இலங்கை அணி, வெலிங்டன் மைதானத்தில் 300 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்களை ‘சேஸ்’ செய்து வெற்றி கண்ட முதல் அணி என்ற சாதனை படைத்தது. இதற்கு முன், நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகள் 300க்கு மேற்பட்ட ரன்களை ‘சேஸ்’ செய்ய முயற்சித்து தோல்வி அடைந்தன. முன்னதாக இங்கு, கடந்த 2012ல் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் தென் ஆப்ரிக்க அணி 254 ரன்களை ‘சேஸ்’ செய்தது சிறந்த வெற்றியாக இருந்தது.

 

8

இங்கிலாந்து அணி நிர்ணயித்த 310 ரன்களை ‘சேஸ்’ செய்த இலங்கை அணி, ஒருநாள் அரங்கில் 8வது முறையாக 300 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்களை ‘சேஸ்’ செய்தது. இதன்மூலம் அதிக முறை இந்த இலக்கை எட்டிய அணிகளுக்கான பட்டியலில் 2வது இடம் பிடித்தது. இந்திய அணி, அதிகபட்சமாக 15 முறை இம்மைல்கல்லை எட்டியது.

 

6

உலக கோப்பை வரலாற்றில், 300 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்களை ‘சேஸ்’ செய்து வெற்றி பெற்ற சம்பவம் 6வது முறையாக அரங்கேறியது. இதில் அயர்லாந்து அணி மூன்று முறை இச்சாதனை படைத்துள்ளது. இலங்கை அணி இரண்டாவது முறையாக இம்மைல்கல்லை எட்டியது.

 

100

இங்கிலாந்தின் கேரி பேலன்சை அவுட்டாக்கிய இலங்கையின் தில்ஷன், ஒருநாள் அரங்கில் 100வது விக்கெட்டை பதிவு செய்தார். இதன்மூலம் 100 அல்லது அதற்கு மேல் விக்கெட் வீழ்த்திய இலங்கை பவுலர்கள் பட்டியலில் 15வது இடம் பிடித்தார். முதல் மூன்று இடங்களில் முரளிதரன் (523 விக்.,), வாஸ் (399 விக்.,), ஜெயசூர்யா (320) ஆகியோர் உள்ளனர்.

http://sports.dinamalar.com/2015/03/1425232425/Sangakkarasrilanka.html

 

  • தொடங்கியவர்

மீண்டும் விளாசுவாரா டிவிலியர்ஸ்: இன்று தென் ஆப்ரிக்கா–அயர்லாந்து மோதல்
மார்ச் 02, 2015.

 

கான்பெரா: உலக கோப்பை தொடரில் இன்று நடக்கும் லீக் போட்டியில், தென் ஆப்ரிக்கா, அயர்லாந்து அணிகள் மோதுகின்றன. இதில், ‘சூப்பர் பார்மில்’ உள்ள தென் ஆப்ரிக்க கேப்டன் டிவிலியர்ஸ் மீண்டும் சாதிக்க வாய்ப்பு உள்ளது.

ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மண்ணில், 11வது ஐ.சி.சி., உலக கோப்பை தொடர் நடக்கிறது. கான்பெரோவில் இன்று நடக்கும் ‘பி’ பிரிவு லீக் போட்டியில், தென் ஆப்ரிக்கா, அயர்லாந்து அணிகள் மோதுகின்றன. சர்வதேச ஒருநாள் போட்டி அரங்கில், அயர்லாந்துக்கு எதிரான மூன்று போட்டியிலும் தென் ஆப்ரிக்கா வென்றது. இதில் இரண்டு போட்டிகள் உலக கோப்பையில் மோதியது.   

  

டிவிலியர்ஸ் நம்பிக்கை: ஜிம்பாப்வே அணியை வீழ்த்திய தென் ஆப்ரிக்கா, இந்தியாவிடம் தோல்வி அடைந்தது. பின், வெஸ்ட் இண்டீசை 257 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, வெற்றிப் பாதைக்கு திரும்பிய உற்சாகத்தில் உள்ளது.     

குயின்டன் டி காக், சிறந்த துவக்கம் கொடுக்க முயற்சிக்க வேண்டும். வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக அரைசதம் கடந்த ஹசிம் ஆம்லா, டுபிளசி, ரோசவ் மீண்டும் கைகொடுக்கலாம். இப்போட்டியில் 66 பந்தில் 162 ரன்கள் எடுத்த கேப்டன் டிவிலியர்ஸ், இன்றும் ரன் மழை பொழிவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ‘மிடில்–ஆர்டரில்’  டுமினி, டேவிட் மில்லர் அதிரடி காட்டும் பட்சத்தில், மீண்டும் இமாலய ஸ்கோரை பெறலாம்.     

 

வேகப்பந்துவீச்சில் இதுவரை பெரிய அளவில் சோபிக்காத ஸ்டைன் (3 விக்.,) எழுச்சி கண்டால் நல்லது. மார்னே மார்கல் (6 விக்.,) நல்ல ‘பார்மில்’ இருப்பது பலம். பிலாண்டர், கைல் அபாட், பார்னல் உள்ளிட்ட வேகங்களும் விக்கெட் வேட்டை நடத்தலாம். ‘சுழலில்’ இம்ரான் தாகிர் (9 விக்.,) நம்பிக்கை அளிக்கிறார். இவருக்கு, டுமினி ஒத்துழைப்பு தந்தால் கூடுதல் பலம் சேர்க்கும்.     

 

‘ஹாட்ரிக்’ வெற்றி: வெஸ்ட் இண்டீஸ், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யு.ஏ.இ.,) அணிகளை வீழ்த்திய அயர்லாந்து அணி, இன்று பலம் வாய்ந்த தென் ஆப்ரிக்காவை தோற்கடிக்கும் பட்சத்தில், ‘ஹாட்ரிக்’ வெற்றியை பதிவு செய்து, காலிறுதிக்கான வாய்ப்பை அதிகப்படுத்திக் கொள்ளலாம்.     

பேட்டிங்கில், கேப்டன் வில்லியம் போர்டர்பீல்டு எழுச்சி கண்டால் நல்லது. கடந்த போட்டிகளில் அசத்திய பால் ஸ்டிர்லிங், எட் ஜாய்ஸ், நியால் ஓ பிரையன், வில்சன், கெவின் ஓ பிரையன் மீண்டும் கைகொடுத்தால் நல்ல ஸ்கோரை பெறலாம்.     

 

‘சுழலில்’ ஜார்ஜ் டாக்ரெல் (6 விக்.,) நம்பிக்கை அளிக்கிறார். ஜான் மூனே, மேக்ஸ் சோரன்சன், அலெக்ஸ் கசாக் உள்ளிட்டோர் வேகப்பந்துவீச்சில் எழுச்சி கண்டால் நல்லது.

 

http://sports.dinamalar.com/2015/03/1425309889/SouthAfricaIrelandWorldCupCricket.html

  • தொடங்கியவர்

அயர்லாந்து
v
தென் ஆப்ரிக்கா
(14:30 local | 03:30 GMT | 04:30 CET)

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

அயர்லாந்துக்கு எதிராக 50 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 411 ரன்கள் குவித்தது தென் ஆப்பிரிக்கா

Read more at: http://tamil.oneindia.com/

  • தொடங்கியவர்

South Africa 411/4 (50 ov)
Ireland 25/3 (5/50 ov)

  • தொடங்கியவர்

South Africa 411/4
v
Ireland 168/8 (36/50 ov)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.