Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடகிழக்கு மக்மனிதாபிமானத் திட்டங்களின் கீழான ஆஸி. விஸா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மனிதாபிமானத் திட்டங்களின் கீழான

ஆஸி. விஸா விண்ணப்பங்கள் பெறுவதற்கு

வடக்கு கிழக்கு மக்களுக்கு உதவுங்கள்!ஐ.நா. அகதிகள் அமைப்பிடம் அங்குள்ள தமிழ் கலாசாரக் கழகம் வேண்டுகோள்

கொழும்பு,ஒக்.16

வடக்கு கிழக்கில் யுத்தத்தினால் பாதிக்கப் பட்டுள்ள மக்களுக்காக ஆஸ்திரேலிய அரசினால் வழங்கப்படும் மனிதாபிமான "விஸா' திட்டத்திற்கு வடக்கு கிழக்கு மக்கள் விண்ணப்பிக்கும் வகையில் அகதிகளுக்கான ஐ.நா. தூதரகம் ஏற்பாடுகளைச் செய்து கொடுக்க வேண்டும் என ஆஸ்திரேலிய தமிழ்க் கலாசாரக் கழகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பாக இக்கழகம், அகதிகளுக்கான ஐ.நா. தூதரகத்திற்கு வழங்கியுள்ள மகஜரில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

வடக்கு கிழக்கில் யுத்தத்தினால் பாதிக் கப்பட்டுள்ள மக்களுக்காக ஆஸ்திரேலிய அரசு மனிதாபிமான விசேட "விஸா' திட்டத்தை ஆரம்பித்துள்ளது.

இந்த விஸாவுக்கு விண்ணப்பிப்பதற்கான விண்ணப்பப் படிவங் களைப் பெறக் கூடிய நிலையில்வடக்கு கிழக்கு மக்கள் இல்லை. வடக்கிற்கான பாதைகள் அரச படையினரால் மூடப்பட்டு, தபால் போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

ஆகவே, இந்த விண்ணப்பங்களை வடக்கே கொண்டு போய் வழங்குவதற்கான உரிய நடவடிக்கைகளை அகதிகளுக்கான ஐ.நா. தூதரகம் எடுக்க வேண்டும். என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள் ளது.

அவுஸ்திரேலிய தமிழ் கலாசாரக் கழகத்தின் செயலாளர் நா.இ. விக்கிரமசிங்கம், கடந்த வெள்ளியன்று அவுஸ்திரேலிய மத்திய நாடாளுமன்ற உறுப்பினர் அந்தனி பேர்ன், வெளிவிவகார நிழல் அமைச்சர் கெவின் ரட் ஆகியோர் ஊடாகக் கடந்த வெள்ளிக்கிழமை இந்த வேண்டுகோள் அறிக்கையை வழங்கினார்.

மேற்படிப் பிரதிநிதிகள், விண்ணப்பதாரர்களை நேரில் சென்று பார்வையிட்டு, அவர்களுடன் கலந்துரையாடச் சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.

இது தொடர்பாக விக்கிரமசிங்கம் தெரி விப்ப தாவது:

""பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்குத் தமிழ் அகதிகளுக்கு மனிதாபிமான அடிப்படையில் விஸா வழங்கும் திட்டத்தை ஆஸ்திரேலிய அரசு ஆரம்பிக்க வேண்டும் என ஆஸ்திரேலியத் தமிழ்க் கலாசாரக் கழகம் சில வருடங்களாகக் கோரிக்கை விட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

பாதிக்கப்பட்டுள்ள அகதிகள், விஸாவுக்கு விண்ணப்பிப்பதற்கு தங்களது ஆஸ்திரேலிய உறவுகளின் அனுசரணை விண்ணப்பத்தையும், ஆவணங்களையும் பெற முடியாமல் உள்ளனர்.

ஆஸ்திரேலியக் குடியுரிமை உடையவர்கள் அல்லது நிரந்தர வதிவுரிமை உடை யவர்கள் பாதிப்புற்ற தமது உறவினர்களுக்கு மனிதாபிமான அடிப்படையில் அனுசரணை வழங்கி அவர்களது விஸா விண்ணப்பங்களுக்கு உதவ முடியும். மனிதாபிமான அடிப்படை விஸாக்களான IN COU NTRY SPECIAL - HUMANITARIAN VISA, SUB CLASS 201என்ற குறியீட்டு விஸா அல்லது EMERGEN CY RESCUE, SUB CLASS 203 என்ற குறியீட்டு விஸா போன்றவற்றிற்கான விண்ணப்பங்களுக்கு அவர்கள் உதவலாம்.

விண்ணப்பிப்பவர் அகதிகளுக்கான ஐ.நா. தூதரகத்தில் பதிவு செய்திருப்பின் அதற்கான ஆவணம் அல்லது கிராமசேவை உத்தியோகத்தர், உதவி அரச அதிபர் ஆகியோரிடமிருந்தும், செஞ்சிலுவைச் சங்கம், அரச சார்பற்ற நிறுவனம் மற்றும் சமூக அமைப்புகள் போன்றவற்றிடமிருந்தும் பெறப் பட்ட சிபார்சுக் கடிதங்கள் போன்றவற்றை வைத்திருந்தால் அவை உதவியாக அமை யும்.

அவுஸ்திரேலியாவில் உள்ள உறவுகள் பூர்த்தி செய்ய வேண்டிய விண்ணப்பப் படிவம் SPECIAL HUMANITARIAN (PROPOSOL 68 FORM) ஆகும்.

பாதிப்புற்ற தமிழ் அகதிகள் பூர்த்தி செய்ய வேண்டிய விண்ணப்பப் படிவம் FORM 842 OFF SHORE HMANITARI AN VISA ஆகும்.

மேலதிக விவரங்களை nsw.offshore. humanitarian @ immi.gov.au என்ற இணையத்தளம் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.

கொழும்பில் முகவர்களை நம்பி ஏமாறு வதைத் தவிர்த்துக் கொள்வதற்காகக் குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்துடன் நேரடியாகத் தொடர்பு கொள்வது நல்லது.

-உதயன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வடக்கு கிழக்கில் யுத்தத்தினால் பாதிக்கப் பட்டுள்ள மக்களுக்காக ஆஸ்திரேலிய அரசினால் வழங்கப்படும் மனிதாபிமான "விஸா' திட்டம் பற்றி யாருக்கும் மேலதிக தகவல்கள் தெரியுமா? :?:

வடக்கு கிழக்கில் யுத்தத்தினால் பாதிக்கப் பட்டுள்ள மக்களுக்காக ஆஸ்திரேலிய அரசினால் வழங்கப்படும் மனிதாபிமான "விஸா' திட்டம் பற்றி யாருக்கும் மேலதிக தகவல்கள் தெரியுமா?

http://www.immi.gov.au/refugee/index.htm

மேலதிக தகவல்களை இங்கு தெரிந்து கொல்ளலாம்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

---------------------

நன்றி ஈழவன்,

நான் அங்கு முதல் போய் தேடிப் பார்த்திருந்தேன்.

பொதுவான 'Refugee' category த்தான் தரப்பட்டுள்ளது

அவுஸ்திரேலியாவில் "வட-கிழக்கு" க்கு என்றோ "சிரிலங்கா" விக்கு என்றோ விஷேச "மனிதாபிமான அடிப்படையில்" "யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு" என்றோ அங்கு பிறத்தியேகமாக குறிப்பிடப் படவில்லையே.

  • 4 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்திரேலியா செல்வதற்கான மனிதாபிமான விசாவும் விண்ணப்பிக்கும் தகுதிகளும்

"..அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் ஆணையத்தின் (யு.என்.எச்.சீ.ஆர்.) உலகளாவிய மீள்குடியேற்றத் தேவைகளின் மதிப்பீட்டு வழிகாட்டலின் பேரில் அவுஸ்திரேலிய மனிதாபிமான விசா வழங்கல் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.ஆனால், அண்மையில் பத்திரிகைகளில் வெளியானது போன்று இலங்கையர்கள் அவுஸ்திரேலியா செல்வதற்கென, இதனைத் தவிர வேறு விசேட விசா வழங்கல் திட்டம் எதுவும் கிடையாது. .."

அவுஸ்திரேலியா பாரபட்சமற்ற, மனிதாபிமான விசா வழங்கல் திட்டம் ஒன்றை அவுஸ்திரேலிய குடியேற்ற வலயத்திற்கு வெளியே வசிப்பவர்களுக்கென உலகளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தியுள்ளது. மனிதாபிமான விசா வழங்கல் திட்டம் இரண்டு வகையாக நடைமுறைப்படுத்தப்படுகிறது. ஒன்று அகதிகளுக்கானது. இதன் கீழ், யு.என்.எச்.சி.ஆரினால் அகதிகளாக கணிக்கப்பட்டு மீள்குடியேற்றத்திற்காக அவுஸ்திரேலியா செல்லலாமென பரிந்துரை பெறக்கூடியவர்கள் விண்ணப்பிக்கலாம். மற்றையது, விசேட மனிதாபிமான அடிப்படையை கொண்டதாகும்.

உதாரணமாக இலங்கையை எடுத்துக் கொண்டால் தற்போது தாய் நாட்டிற்கு வெளியே பிறிதொரு நாட்டில் தஞ்சம் புகுந்து தாய் நாட்டில் துன்புறுத்தல்கள், பாரபட்சம் அல்லது மனித உரிமை மீறல்கள் காரணமாக தாய்நாடு திரும்பமுடியாதோரும் அதேவேளை மீள்குடியேற்றம் அவசியப்படுவோரும் இத்திட்டத்தின் கீழ் விசா கோரி விண்ணப்பிக்கலாம். ஆனால், இந்த புகலிட நாடு அவர்களது முதலாவது புகலிட நாடாக இருக்க வேண்டும். இந்த வகையினருக்கே கூடுதல் விசாக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

ஆனால், முதலாவது புகலிட நாட்டிலிருந்து வெளியேறி சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்குள் நுழைந்து அவுஸ்திரேலிய குடியேற்ற வலயத்திற்கு வெளியே தங்கி இருப்பவர்களும் இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம். அவுஸ்திரேலியாவுக்குள் பிரவேசிக்காதவர்களும் இலங்கையிலிருந்து வெளியேறி பிறிதொரு நாட்டில் அல்லது முதலாவது புகலிட நாட்டில் இருந்து கொண்டு மற்றுமொரு நாட்டுக்கு செல்ல முயற்சிப்பவர்கள், தாய்நாடு திரும்பினால் துன்புறுத்தல்களுக்கும் மிக மோசமான மனித உரிமை மீறல்களுக்கும் ஆளாகக் கூடியவர்கள் ஆகியோருக்கும் அவுஸ்திரேலியாவில் புகலிடம் பெற தற்காலிக அனுமதி வழங்குவது பற்றி பரிசீலனை செய்யப்படும்.

பெற்றாரை இழந்த 18 வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள் அல்லது பெற்றாரிடமிருந்து பிரிந்து வாழும் சிறுவர்களுக்கும் அவுஸ்திரேலியாவில் புகலிடம் பெற விசா வழங்கப்படும். எவ்வாறாயினும், சிறுவரின் அவுஸ்திரேலிய பிரவேசம் அந்தச் சிறுவரின் முழுமையான நலனையும் பெற்றாரின் உரிமைகளையும் அவுஸ்திரேலிய அரசாங்கம் கருத்தில் கொள்ளும்.

மனிதாபிமான விசாவைப் பெற ஏராளமான விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டு வருகின்றன. இதற்காக மட்டுப்படுத்தப்பட்ட தொகையிலான விசாக்களே இருப்பதால் அவுஸ்திரேலியாவில் மீள் குடியேற அவசியமான மனிதாபிமான தேவைகள் இருப்பவர்களுக்கும் வேறு மாற்றுவழி இல்லாதவர்களுக்கும் மாத்திரமே இவ்விசா வழங்கப்படுகிறது. இதனால் பெரும் தொகையான விண்ணப்பதாரிகள் ஏமாற்றமடைகிறார்கள்.

அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் ஆணையத்தின் (யு.என்.எச்.சீ.ஆர்.) உலகளாவிய மீள்குடியேற்றத் தேவைகளின் மதிப்பீட்டு வழிகாட்டலின் பேரில் அவுஸ்திரேலிய மனிதாபிமான விசா வழங்கல் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.ஆனால், அண்மையில் பத்திரிகைகளில் வெளியானது போன்று இலங்கையர்கள் அவுஸ்திரேலியா செல்வதற்கென, இதனைத் தவிர வேறு விசேட விசா வழங்கல் திட்டம் எதுவும் கிடையாது.

விண்ணப்பப் படிவத்தை அவுஸ்திரேலிய குடிவரவு, பல்கலாசார விவகாரங்களுக்கான திணைக்களத்தின் www.immi.gov.au. என்ற இணையத்தள முகவரியில் பெற்றுக் கொள்ளலாம். நேரடியாக செல்ல வசதி உள்ளவர்கள், TTS விசா விண்ணப்ப நிலையம், 32B, சேர் மொஹமட் மாக்கான் மரிக்கார் மாவத்தை, கொழும்பு-03 (ஹொலிடே இன் ஹோட்டல் அருகில்) என்ற முகவரியில் பெற்றுக் கொள்ளலாம். தொ.பே: 2430991 அல்லது 2430992.

நிரப்பிய விண்ணப்பப் படிவத்தை கையளிக்கும் இடம்: அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகராலயம், 21, கிரிகரிஸ் வீதி, கொழும்பு 7 அல்லது அஞ்சல் செய்யும் முகவரி: அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகராலயம், தபால் பெட்டி இல: 742, கொழும்பு.

-தமிழ் சிட்னி

இலங்கைக்கு எண்டு தனியாக கொடுப்பதில்லை இந்த விஸாவானது Refugees & Humanitarian என்ற பிரிவுக்குள் வருகிறது வருடாவருடம் இந்த பிரிவின் கீழ் ஒரு நாட்டுக்கு முக்கியம் கொடுப்பார்களாம் இந்த வருடம் இலங்கைக்கு 30% ஜ ஒதுக்கி இருகிறார்களாம்

இதுதான் அந்த நேரடி இணைப்பு

http://www.immi.gov.au/refugee/index.htm

அண்மையில் இந்தியாவிற்கு இடம் பெயர்ந்து அங்கே பரிதவிக்கும் இலங்கையர்க்கு இது மிகவும் வாய்ப்பானது என்று கருதுகிறேன்!

மேலே ஈழவன் கொடுத்த இணைப்பில் உள்ள தளததில் 842 இலக்கத்தையும் 618 இலக்கம் உடைய விண்ணப்பப் படிவங்கiயும்; பிரதி எடுத்து அல்லது தாங்கள் சிங்களக் கோட்டையில் இருந்தால் காலி முகத்திடலில் ஹோலிடெ இன் ஹோட்டலுக்கருகில் உள்ள டீ,டீ ஓபிஸ் கட்டிடத்திற்குச் சென்று இவ் விரு விண்ணப்பப் படிவங்களையும் பெற்று உரிய முறையில் நிரப்பிக் கொடுக்க வேண்டும். தகவல்கள் அத்தனையும் உண்மையானதாகவும் உறுதி செய்யக் கூடியதாகவும் இருக்க வேண்டும். முயற்சி செய்யுங்கள். விண்ணப்பப்படிவம் எடுக்கப் போகும் போது மறக்காமல் அடையாள அட்டையையும் எடுததுச் செல்லுங்கள்.

ஈழத்திலிருந்து

ஜானா

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.