Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பாரிஸ் அருகே தென்பட்ட புலியைப் பிடிக்க வேட்டை

Featured Replies

141113151154_paris_tiger_640x360_villede
பாரிஸ் நகர் அருகே தென்பட்ட புலி
 
பிரான்சில், தலைநகர் பாரிஸ் அருகே சூப்பர் மார்க்கெட் அருகே பொதுமக்களால் காணப்பட்ட புலி ஒன்றைப் பிடிக்க போலிஸ், தீயணைப்புப் படையினர் ஹெலிகாப்டர்கள் உதவியுடன் தேடுதல் வேட்டையை நடத்திவருகின்றனர்.
பாரிஸ் நகரின் அருகே உள்ள மாண்டிவ்ரேய்ன் என்ற நகர் அருகே உள்ள பெருவணிக வளாகம் ஒன்றின் வாகனங்கள் நிறுத்துமிடத்தில் இந்தப் புலி தென்பட்டதாக ஒரு பெண் உள்ளூர் அதிகாரிகளுக்குத் தெரிவித்தார்.
 
இதனை அடுத்து, போலிசாரும் தீயணைப்பு வீரர்களும் அப்பகுதியில் இந்தப் புலியைத் தேட தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஹெலிகாப்டர்களும் இந்தத் தேடல் வேட்டையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இந்த விலங்கின் கால் தடங்களைப் பார்வையிட்ட வல்லுநர்கள், இது ஒரு இளம் புலியின் கால் தடங்களை ஒத்ததாக இருப்பதாகக் கூறினர். இது நகரின் அருகே இருக்கும் ஒரு வனப்பகுதிக்குள் சென்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
இந்தப் புலியை பல உள்ளூர்வாசிகள் பார்த்ததாக 'லெ பாரிசியன்' செய்தித்தாள் கூறியது.
 
பொதுமக்களும், சிறார்களும் வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள்.
 
இந்தப்புலி எங்கிருந்து வந்தது என்பது இன்னும் தெளிவாகவில்லை.
நகரில் சனிக்கிழமைவரை இருந்த ஒரு சர்க்கஸ் கம்பெனியிலிருந்து இந்தப் புலி தப்பியிருக்ககூடும் என்ற செய்திகளை நகர மேயர் அலுவலகம் மறுத்திருக்கிறது.
பாரிசில் இருந்து இயங்கும் 'டிஸ்னிலேண்ட்' கேளிக்கை பூங்கா நிறுவனம் தன்னிடம் புலி எதுவும் இல்லை என்று தெரிவித்திருக்கிறது.
 
  • கருத்துக்கள உறவுகள்

புலியால் எல்லா இடமும் தொல்லை.. :D

  • தொடங்கியவர்

பிரான்ஸ் : புலி அல்ல பூனையாம்

பிரான்ஸ் நாட்டில் பாரிஸுக்கு அருகே காணப்பட்ட மிருகம் நிச்சயமாக ஒரு புலி அல்ல என்று அந்தப் பிராந்திய நிர்வாகம் தற்போது கூறியுள்ளது.

141113184852_finding_tiger_640x360_ap_no
பிரான்ஸ் : புலி அல்ல பூனையாம்
 
அதேவேளை பிரான்ஸ் நாட்டு வன இலாக நிபுணர் ஒருவர், அது பெரிய அளவிலான வீட்டில் வளர்க்கும் பூனையாக இருக்கலாம் என்று கூறியுள்ளார்.
 
அதனது கால்தடங்கள் ஒரு பெட்ரோல் நிலையத்தில் காணப்பட்டதுடன், அது ''மோட்டார் வே'' எனப்படும் பாரிய நெடுவீதியைக் கடந்து போனதையும் சிலர் பார்த்திருக்கிறார்கள்.
அதேவேளை தற்போது பூனையாக சொல்லப்படுகின்ற அந்த மிருகத்தை அதிகாரிகள் தேடிவரும் நிலையில், அது குறித்த மர்மம் பிரான்ஸ் தேசத்தையே பிடித்துக்கொண்டிருக்கிறது.
 
அது காணப்பட்டதாகக் கூறப்படும் இடத்தில் எல்லாரும் பயத்தில் ''உசார்'' நிலையில் இருக்கிறார்கள்.
முன்னதாக அதனை புலி என்று கூறி தேடும்பணிகள் மும்முரமாக ஆரம்பிக்கப்பட்டன. ஆனால் அந்த மிருகத்தை ( புலியா, பூனையா?) இன்னமும் பிடிக்க முடியவில்லை.
 
  • கருத்துக்கள உறவுகள்

பிரான்ஸ் நாட்டில் பாரிஸுக்கு அருகே காணப்பட்ட மிருகம் நிச்சயமாக ஒரு புலி அல்ல என்று அந்தப் பிராந்திய நிர்வாகம் தற்போது கூறியுள்ளது.

141113184852_finding_tiger_640x360_ap_noபிரான்ஸ் : புலி அல்ல பூனையாம்

அதேவேளை பிரான்ஸ் நாட்டு வன இலாக நிபுணர் ஒருவர், அது பெரிய அளவிலான வீட்டில் வளர்க்கும் பூனையாக இருக்கலாம் என்று கூறியுள்ளார்.

அதனது கால்தடங்கள் ஒரு பெட்ரோல் நிலையத்தில் காணப்பட்டதுடன், அது ''மோட்டார் வே'' எனப்படும் பாரிய நெடுவீதியைக் கடந்து போனதையும் சிலர் பார்த்திருக்கிறார்கள்.

அதேவேளை தற்போது பூனையாக சொல்லப்படுகின்ற அந்த மிருகத்தை அதிகாரிகள் தேடிவரும் நிலையில், அது குறித்த மர்மம் பிரான்ஸ் தேசத்தையே பிடித்துக்கொண்டிருக்கிறது.

அது காணப்பட்டதாகக் கூறப்படும் இடத்தில் எல்லாரும் பயத்தில் ''உசார்'' நிலையில் இருக்கிறார்கள்.

முன்னதாக அதனை புலி என்று கூறி தேடும்பணிகள் மும்முரமாக ஆரம்பிக்கப்பட்டன. ஆனால் அந்த மிருகத்தை ( புலியா, பூனையா?) இன்னமும் பிடிக்க முடியவில்லை.

http://www.bbc.co.uk/tamil/global/2014/11/141114_bigcat

  • கருத்துக்கள உறவுகள்

சாத்திரியின்ர 'மீனு' போல கிடக்கு! :icon_idea:

இது எப்ப நடந்தது. நெருப்புக்க கிடந்து ஒன்னுமே தெரியல்ல

553247_10154885294785637_578031135100654

10426783_10154885294255637_4689105978392

  • கருத்துக்கள உறவுகள்

https://www.youtube.com/watch?v=naX1yBtTK1U

ஆகா..... 
நல்ல, சிற்றுவேஷன் சாங்.

  • கருத்துக்கள உறவுகள்

யாரோ

களவாக  வளர்த்திருக்கலாம்

ஆனால் தற்பொழுது வெளியில் வந்துவிட்டதால்

சட்டத்திடம் அகப்படாதிருக்க

உரிமை கோராமல் இருக்கலாம் என்கிறார்கள்..

மலிந்தால் சந்தைக்கு வரும் தானே.

அது  சரி

நாய் பூனை மாதிரி

புலிக்கும் தனது வீட்டுக்கு தனியே  போகத்தெரியுமா???

சிலவேளை நெவிகேசன் பாவிச்ச புலியா இருக்கலாம் பாவம் நெவிகேசன் துலைஞ்சு போச்சுதாக்கும் :D

இப்படி சூடு போட்ட பல பூனை திரியுது புலி என்று சொல்லிக்கொண்டு பாருங்கோ  :D

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி சூடு போட்ட பல பூனை திரியுது புலி என்று சொல்லிக்கொண்டு பாருங்கோ  :D

அதுகளை அடையாளம் கண்டு பிடிக்கிறது, வலு கஷ்டம்! :lol:

  • கருத்துக்கள உறவுகள்

யாரோ

களவாக  வளர்த்திருக்கலாம்

ஆனால் தற்பொழுது வெளியில் வந்துவிட்டதால்

சட்டத்திடம் அகப்படாதிருக்க

உரிமை கோராமல் இருக்கலாம் என்கிறார்கள்..

மலிந்தால் சந்தைக்கு வரும் தானே.

-----

சில வேளை... சர்கஸ் கொம்பனியிலிருந்து, தப்பியிருக்குமோ....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.