Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பருக்கள் வருவது ஏன்?

Featured Replies

pimple_2209793f.jpg

 

இன்றைய தினம் ‘பருக்களைப் போக்க என்ன செய்யலாம்?’ என்று சிந்திக்காத பெண்களே கிடையாது. இந்த விஷயத்தில் இன்றைய வாலிபர்களும் சளைத்தவர்கள் அல்ல. இவர்கள் என்ன செய்கிறார்கள்? பருக்களைப் போக்க உதவும் இயற்கை வழிமுறைகளை ஓரங்கட்டிவிட்டு, ஊடகங்களில் சொல்லப்படும் செயற்கை அழகுச் சாதனப் பொருள்களை வரம்புமீறிப் பயன்படுத்துகிறார்கள். இதனால், இவர்களுக்குப் பருக்கள் போகிறதோ இல்லையோ, முகத்தின் பொலிவு போவதுதான் உண்மை.
 
எது முகப்பரு?
 
நம் தோலின் இரண்டாம் அடுக்கில் எண்ணெய்ச் சுரப்பிகள் (Sebaceous glands) ஏராளமாக உள்ளன. இவை ஆண்ட்ரோஜன் என்ற ஹார்மோனின் தூண்டுதலால், ‘சீபம்’(Sebum) எனும் எண்ணெய்ப் பொருளைச் சுரக்கின்றன. இந்தச் சீபம் முடிக்கால்களின் வழியாகத் தோலின் மேற்பரப்புக்கு வந்து, தோலையும் முடியையும் மினுமினுப்பாகவும் மிருதுவாகவும் வைத்துக்கொள்கிறது. இளமைப் பருவத்தில் ஆன்ட்ரோஜன் ஹார்மோன் அதிகமாகச் சுரப்பதால், சீபமும் அதிகமாகவே சுரக்கிறது. இதனால், முகத்தில் எண்ணெய்ப் பசை அதிகரிக்கிறது.
 
மாசடைந்த காற்றில் உள்ள தூசும் அழுக்கும் இந்த எண்ணெய்ப் பசையில் சுலபமாக ஒட்டிக்கொள்ளும். விளைவு, எண்ணெய்ச் சுரப்பிகளின் வாய்ப்பகுதி மூடிக்கொள்ளும். இதனால், தோலுக்கு அடியில் சுரக்கும் சீபம் வெளியே வர முடியாமல், உள்ளேயே தங்கிவிடும். இப்படிச் சீபம் சேரச்சேரத் தோலில் கோதுமை ரவை அளவில் வீக்கம் உண்டாகும். இதுதான் பரு (Acne vulgaris). அடுத்து, சீபம் சுரப்பது அதிகரிக்க அதிகரிக்க எண்ணெய்ச் சுரப்பிகளில் ஏற்படும் வேதிவினை மாற்றங்களால் சீபம் வெளியேறும் வழி சுருங்கிவிடும். இதுவும் பரு வருவதற்குப் பாதை போடும்.
 
பருவானது ஆரம்பத்தில் கருநிறக் குருணை (Blackhead) போலத் தோன்றும். அதைப் பிதுக்கினால், வெள்ளை நிறத்தில் குருணைகள் (Whitehead) வெளிவரும். இந்தச் சமயத்தில் தோலில் இயற்கையாகவே இருக்கிற பாக்டீரியாக்கள் வீரியமடைந்து பருக்களை சீழ்ப்பிடிக்க வைக்கும். அழுக்குத் துண்டால் முகத்தைத் துடைத்தால் அல்லது அடிக்கடி பருக்களைக் கிள்ளினாலும் பருக்கள் சீழ்ப்பிடித்து, வீங்கிச் சிவந்து வலிக்கத் தொடங்கும். இதற்குச் சீழ்க்கட்டிப் பருக்கள் (Pustules) என்று பெயர். இவற்றுக்குச் சிகிச்சை பெறவில்லை என்றால், உறைகட்டிகளாக (Cystic acne) மாறிவிடும். பருக்கள் முகத்திலும் நெற்றியிலும்தான் வரவேண்டும் என்பதில்லை: கழுத்து, முதுகு, தோள்பட்டை, நெஞ்சு ஆகிய இடங்களிலும் வரலாம்.
 
எப்போது, எதற்கு வருகிறது?
 
பொதுவாக 13 வயதில் முகப்பரு தொடங்கும். 100-ல் 85 பேருக்கு 35 வயதுவரை இது நீடிக்கும். மீதிப் பேருக்கு இளமைப் பருவம் கடந்த பிறகும் நீடிக்கலாம். அம்மா, அப்பாவுக்குப் பரு வந்திருந்தால், வாரிசுகளுக்கு வர அதிக வாய்ப்புண்டு. பெண்களுக்கு மாதவிலக்கின்போது, சில ஹார்மோன்களின் அளவு மாறும். இதனால், அந்தச் சமயங்களில் மட்டும் முகப்பரு ஏற்படும்.
 
சினைப்பையில் நீர்க்கட்டி (Poly Cystic Ovary) இருக்கும் பெண்களுக்கு முகப்பரு வருவது வழக்கம். மனக்கவலை உள்ளவர்களுக்கு அட்ரீனல் சுரப்பிகளில் சில ஹார்மோன்களின் சுரப்பு அதிகரிக்கும். இதன் விளைவாக இவர்களுக்கு முகப்பருக்கள் தோன்றலாம். ‘5 - ஆல்பா ரெடக்டேஸ்’ (5-Alpha -reductase) எனும் என்சைம் அதிகமாக இருப்பவர்களுக்கு முகத்தில் பருக்கள் ஏற்படலாம். இந்த என்சைம் ஆண்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பை அதிகப் படுத்தி, பருக்களுக்குச் சிவப்புக் கம்பள வரவேற்பு தருகிறது.
 
என்ன சிகிச்சை?
 
பருக்களின் மேல் பூசப்படும் களிம்புகளும் ஆன்ட்டிபயாடிக் மாத்திரைகளும் ஆரம்பநிலைப் பருக்களைக் குணப்படுத்திவிடும். பருக்கள் மீண்டும் வராமல் தடுக்க, மருத்துவர் சொல்லும் கால அளவுக்குத் தொடர்ச்சியாகச் சிகிச்சை பெற வேண்டியது முக்கியம். சீழ்க்கட்டி/உறைகட்டி நிலையில் பருக்கள் இருந்தால், கரும்புள்ளி அல்லது குழிப்பள்ளம் விழுந்து தழும்பாகி முகத்தின் அழகைக் கெடுத்துவிடும். பருக்களைப் பொறுத்தவரை இளம் வயதினரைக் கவலைப்பட வைப்பது இந்த வகைத் தழும்புகள்தான்.
 
இன்றைய மருத்துவத் தொழில்நுட்ப முன்னேற்றத்தில் இந்தத் தழும்புகளை நிரந்தரமாகப் போக்க கெமிக்கல் பீல் (Chemical Peel), டெர்மாபரேஷன் (Dermabrasion), கொலாஜென் சிகிச்சை, லேசர் சிகிச்சை, சிலிகான் சிகிச்சை என்று நிறைய வழிமுறைகள் வந்துவிட்டன. இவற்றைத் தேவைக்கு ஏற்பப் பயன்படுத்தி, தழும்புகளை நீக்கி, முகப்பொலிவை மீட்கலாம்.
 
பருக்கள் வராமல் தடுக்க…
 
முகத்தில் எந்தக் களிம்பைப் பூசினாலும், 20 நிமிடங்களுக்கு மேல் அதை வைத்திருக்கக் கூடாது. காரணம், அதற்கு மேல் களிம்பு தங்கினால், அதில் தூசு சுலபமாக ஒட்டிக்கொள்ள, எண்ணெய்ச் சுரப்பிகள் அடைபட்டு முகப்பருவுக்கு வழி அமைத்துவிடும்.
 
தினமும் குறைந்தது மூன்று முறை முகத்தைச் சோப்புப் போட்டு இளஞ்சூடான தண்ணீரில் கழுவிச் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். சந்தனச் சோப்பு நல்லது. அடிக்கடி சோப்பை மாற்றக் கூடாது. சுத்தமான பருத்தித் துண்டால் முகத்தைத் துடைக்க வேண்டும். முகத்தைத் துடைப்பதற்கென்று தனியாகத் துண்டு வைத்துக்கொள்வது இன்னமும் நல்லது. முகத்தை ரொம்பவும் அழுத்தித் துடைக்கவும் கூடாது. தினமும் இருமுறை வெந்நீரில் ஆவி பிடிப்பது நல்லது.
 
முகத்தில் எண்ணெய்ப் பசை அதிகம் உள்ளவர்கள் பவுடர் பூசுவது, அழகூட்டும் களிம்புகளைப் பயன்படுத்துவது போன்றவற்றில் மருத்துவரின் ஆலோசனையைக் கேட்டுப் பின்பற்றினால், பருக்கள் வராமல் தடுக்கலாம்.
 
கொழுப்பு உணவு வேண்டாம்!
 
முகப்பரு உள்ளவர்கள் கொழுப்பு உணவுகளைக் குறைத்துக்கொண்டால், பருக்கள் சீக்கிரத்தில் குணமாகும். எப்படி? உடலில் கொழுப்பு கூடும்போது, கொழுப்பு அமிலங்களும் கூடுமல்லவா? இவை எண்ணெய்ச் சுரப்பி செல்களை உறுத்திக்கொண்டே இருக்கும். இதன் விளைவால், எண்ணெய்ச் சுரப்பிகளின் துவாரம் மூடிக்கொள்ள, பருக்கள் அதிகரிக்க வாய்ப்பு உண்டாகும். இந்த வாய்ப்பைத் தடுக்கவே கொழுப்பு உணவைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.
 
கட்டுப்படுத்த என்ன வழி?
 
எந்நேரமும் கண்ணாடியின் முன்னால் நின்றுகொண்டு பருக்களை விரல்களால் நோண்டுவதை முதலில் கைவிடுங்கள். பருக்களிலிருந்து வெள்ளை நிறக் குருணைகளை வெளியேற்ற பருக்களைக் கிள்ளாதீர்கள்; பிதுக்காதீர்கள். மிகவும் தேவைப்பட்டால் மட்டும் இதற்கென்றே இருக்கிற இடுக்கியைப் பயன்படுத்துங்கள்.
 
நார்ச்சத்து நிறைந்த கீரைகள், காய்கறிகள், பழங்களை அதிகம் உட்கொள்ளுங்கள். தினமும் 3 லிட்டர் தண்ணீர் குடியுங்கள். கொழுப்பு மிகுந்த இறைச்சி, நெய், வெண்ணெய், வனஸ்பதி, பாலாடை, முட்டை, கேக், ஐஸ்க்ரீம், சாக்லேட், ஃபுட்டிங், பீட்சா, பர்கர், தந்தூரி உணவு, பதப்படுத்தப்பட்ட பாக்கெட் உணவு, எண்ணெய் பலகாரம் ஆகியவற்றை ஓரங்கட்டுங்கள். ஹெல்மெட் மற்றும் சட்டையின் காலரை இறுக்கமாக அணியாதீர்கள். இந்த வழிமுறைகளால் முகப்பருக்கள் வருடக் கணக்கில் நீடிப்பதைக் கட்டுப்படுத்தலாம்.
 
- கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்
தொடர்புக்கு: gganesan95@gmail.com
 
  • கருத்துக்கள உறவுகள்

எங்களை, யாராவது...... பெண்கள்,
"லவ்"  பண்ணினால்,  பையன்கள் முகத்தில், பரு வரும் என்று, வடிவாய் தெரியும்.
ஆனால்... அந்தப், பெண்களை.... கண்டு பிடிப்பது......
"வைக்கல் பட்டடையில்.... குண்டூசி, தேடுவது போன்று கஷ்டமானது"LiebeFreunde%20(3).gif:D  :lol:  :icon_idea:

எங்களை, யாராவது...... பெண்கள்,

"லவ்"  பண்ணினால்,  பையன்கள் முகத்தில், பரு வரும் என்று, வடிவாய் தெரியும்.

ஆனால்... அந்தப், பெண்களை.... கண்டு பிடிப்பது......

"வைக்கல் பட்டடையில்.... குண்டூசி, தேடுவது போன்று கஷ்டமானது"LiebeFreunde%20(3).gif:D  :lol:  :icon_idea:

 

விஷயம் வெரி சிம்பிள் சிறியர். காந்தத்தை வைக்கோல் பட்டடடைக்கு கிட்ட கொண்டு போய் குண்டூசியை லபக்கென்று பிடிச்சிடலாம். அவ்வாறே பெண்கள் கூட்டத்திடையே தங்கள் காந்த கண் பார்வையை வீசினால் எந்த பெண் தலையை குனியிறாவோ அவதான்  உங்கடை ஆள். லபக்கென்று பிடிச்சிடலாம்.  :D

  • கருத்துக்கள உறவுகள்

முடியல :lol: :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கும் சின்னவயதிலை முகப்பரு எக்கச்சக்கம்.......என்ன மருந்துமாயமோ தெரியேல்லை........பரிமளத்தோடை வயல்/வரம்புகளிலை ஓடுப்பட்டு திரிஞ்சதோடை இல்லாமலே போட்டுது. :rolleyes:

எனக்கும் சின்னவயதிலை முகப்பரு எக்கச்சக்கம்.......என்ன மருந்துமாயமோ தெரியேல்லை........பரிமளத்தோடை வயல்/வரம்புகளிலை ஓடுப்பட்டு திரிஞ்சதோடை இல்லாமலே போட்டுது. :rolleyes:

 
பரிமளத்தோடை சும்மா  ஓடுபட்டு திரிஞ்சால் மட்டும் முகப்பரு மறைந்துவிடாது குசா அண்ணை.  :D
நீங்கள் வேறை ஏதோ மாயம் செய்து போட்டியள் போல இருக்கு. :D 
அதை நான் எழுதினால் நிர்வாகம் சீமானுக்கு சங்கு ஊதிடுவாங்கள்.  :lol:
  • கருத்துக்கள உறவுகள்

இங்கு நான், போட்ட பதிவு ஒன்றை காணவில்லை. :D  :lol: lupe.gif

இங்கு நான், போட்ட பதிவு ஒன்றை காணவில்லை. :D  :lol: lupe.gif

 

எங்கடை தமிழ்சிறி போட்ட ஒரு அரிய பயனுள்ள மருத்துவ தகவலை யாரப்பா தூக்கினது?  :D  :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.