Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மைத்திரிபால தூய்மையான அரசியல்வாதி - மைத்திரியும், ராஜிதவும் முன்னுதாரணமான அரசியல்வாதிகள் ஹிருணிகா

Featured Replies

Kirunia_CI.jpg

மேல்மாகாண சபை உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக கட்சி மாறலாம் என்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன.

அவர் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை தூய்மையான அரசியல்வாதியென வர்ணித்துள்ளார்.அவரது கட்சியின் மூத்த உறுப்பினர்களும், ஜனாதிபதியும் மைத்திரிபாலவை கடுமையாக சாடி வரும் நிலையில் அவரின் இந்த கருத்து வெளியாகியுள்ளமை கட்சி தாவல்குறித்து ஊகங்களை உண்டுபண்ணியுள்ளது.

மைத்திரியும், ராஜிதவும் முன்னுதாரணமான அரசியல்வாதிகள்,எனது தந்தை இறந்தவேளை அவர்கள் எனக்கு ஆதரவாக இருந்தனர்.இந்த இருவரும் அரசாங்கத்திடமிருந்து பிரிந்து சென்றுள்ளனர் இனி அவர்கள் திரும்பிவரமாட்டார்கள்,என அவர் தெரிவித்துள்ளார்.

சிறிலங்கா சுதந்திரக்கட்சி ஸ்தாபிக்கப்பட்டபோது,பின்பற்றப்பட்ட கொள்கைகள் கைவிடப்பட்டு தற்போது போதைப்பொருள், எதனோல்,பாலியல்வல்லுறவு, கொலை மற்றும் மோசடி என்ற கொள்கைகளே பின்பற்றப்படுகின்றன என குறிப்பிட்டுள்ளஅவர்  கட்சியில் புதிதாக வந்துசேர்ந்த விசுவாசிகளாலேயே இந்த நிலை உருவானதாக குறிப்பிட்டுள்ளார்.

இNதுவளை பொதுவேட்பாளரின் ஆதரவாளர்கள் சிலர் ஹிருணிகாவை அணுகுகியுள்ளதாகவும் தெரியவருகின்றது.மேல் மாகாணசபையின் வேறு சிலரும் எதிர்கட்சிக்கு மாறுவதற்கான பேச்சுக்களில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.

 

 

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/113828/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

மைத்திரிபாலவின் மகனைத் தான் ஹிருணி முதலில் காதலித்தார். பின்னர் இருவரும் நட்பு அடிப்படையில் பிரிந்துவிட்டனர்.

  • கருத்துக்கள உறவுகள்

வாலி மஹாத்தயா,

இந்த மைதிரியின் மகன்மார் ஆக்கள் எப்படி?

டிஐஜி வைத்திய லங்காரவின் மருமகளை மகன் முன்பே வைத்து பாலியல் சேட்டை செய்த்தாக, (பாசிக்குடாவில்) முன்பு ஒரு கேஸ் இருந்தது.

இவையளும் மாலக்க சில்வா ரகமா?

  • கருத்துக்கள உறவுகள்

மைத்திரிபாலவின் மகனைத் தான் ஹிருணி முதலில் காதலித்தார். பின்னர் இருவரும் நட்பு அடிப்படையில் பிரிந்துவிட்டனர்.

மன்னிக்கவும் நான் சொன்னது அமைச்சர் பியசேன கமகேயின் மகன் ரந்திம கமகே. மைத்திரிபாலவின் மகன் அல்ல. தவறுக்கு மன்னிக்கவும். நிச்சயமா வருங்கால அதிபருக்கு சேறுபூசும் எண்ணம்ல்ல. சிறிசேன மற்றும் பியசேன என்பவை குழப்பிவிட்டது. :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.