Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

2014 மாவீரர் நாள் நிகழ்வுகளின் தொகுப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யாழ்.பல்கலைக்கழகத்தில் மாவீரர்களுக்கு சுடரேற்றி அஞ்சலி!

 

 

jaffna-sudar-300-news.jpg

அச்சுறுத்தல்கள் அனைத்தையும் தாண்டி யாழ்.பல்கலைக்கழகத்தில் மாவீரர்நாள் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது. இன்றைய தினம் பல்கலை வளாகத்தில் அமைந்துள்ள நினைவுத் தூபிக்கு முன்னால் மாணவர்கள் சுடர் ஏற்றுவார்கள் என்று படையினரும்,பொலிஸாரும் காத்திருந்த வேளை பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள மாணவர் பொது அறையில் சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

   

யாழ்.பல்கலைக்கழக சூழலில் இராணுவம் ,பொலிஸார் மற்றும் புலனாய்வாளர்களும் குவிக்கப்பட்டு பதட்டம் நிலவுகின்ற நிலையிலும் மண்ணுக்காக உயிர்த்தியாகம் செய்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. இதேவேளை மாலை பல்கலைக்கழக வளாகத்திற்கு வரும் மாணவர்கள்,உத்தியோகத்தர்களை சோதனை செய்த பின்னரே பல்கலைக்கழகத்திற்கு செல்ல அனுமதித்து வருகின்ற நிலையில்பத்துக்கு அதிகமான மாணவர்கள் இன்று மாலை பல்கலைக்கழகத்திற்குள் புகுந்து மாவீரர் சுடரை ஏற்றிவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பல்கலைக்கழகத்திலிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

 

jaffna-uni-sudar-271114-seithy%20(1).jpg

 

 

jaffna-uni-sudar-271114-seithy%20(2).jpg

 

 

jaffna-uni-sudar-271114-seithy%20(3).jpg

 

http://seithy.com/breifNews.php?newsID=121626&category=TamilNews&language=tamil

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிட்னியில் உணர்வுபூர்வமாக நடந்த மாவீரர் நினைவுவெழுச்சி நாள்!

 

 

sidney-maveerar-200-news.jpg

அவுஸ்திரேலியா சிட்னியில் மாவீரர் நினைவுவெழுச்சி நாள் இன்று மிகவும் சிறப்பாகவும் எழுச்சியுடனும் நடைபெற்றது. தமிழீழ் தேசியக் கொடி ஏற்றலுடன் தாயக கீதம் இசைக்க, மிகவும் உணர்ச்சியோடு நிகழ்வு ஆரம்பிக்கப்பட்டது. இந் நிகழ்வில் பல ஆயிரக்ணக்கில் மக்கள் உணர்வுபூர்வமாக கலந்து கொண்டு தமது உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தினர்.

   

தமிழீழத்தில் மாவீரர் துயிலும் இல்லங்களில் அமைக்கப்பட்டிருந்த நுளைவு வாசல் போன்று, மிகவும் நேர்த்தியாக அமைக்கப்பட்ட நுளைவு வாசல் ஊடாக, நிகழ்வில் கலந்து கொண்ட மக்கள் யாவரும், மாவீரர் துயிலும் இல்ல வளாகத்தினுள் உணர்வுபூர்வமாக வந்து கலந்துகொண்டார்கள். தமிழீழத்தில் எதிரிகள் எங்கள் மாவீரர்கள் துயிலும் இல்லங்களை அழித்தாலும், எமது உள்ளத்தில் இருக்கும் உணர்வுகளை என்றுமே அழிக்கமுடியாது என்பதை எடுத்துக்காட்டியது.

 

sidney-maveerar-271114-seithy%20(1).jpg

 

 

sidney-maveerar-271114-seithy%20(2).jpg

 

 

sidney-maveerar-271114-seithy%20(3).jpg

 

 

sidney-maveerar-271114-seithy%20(4).jpg

http://seithy.com/breifNews.php?newsID=121618&category=TamilNews&language=tamil

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சென்னையில் மாவீரர் வீரவணக்க நாள் நிகழ்வுகள் வைகோ தலைமையில் நடைபெற்றது -படங்கள்

 

தமிழீழ விடுதலைக்காகப் போராடி உயிர் துறந்த 40 ஆயிரத்துக்கும் அதிகமான மாவீரர்களை நினைவு கூர்ந்து, உலகமெங்கும் வாழும் தமிழர்கள் இன்று சுடரேற்றி வணக்கம் செலுத்தினர். சென்னையிலும்பலத்த எதிர்ப்புக்களிற்கு மத்தியிலும் மாவீரர் வீரவணக்க நாள் நிகழ்வுகள்மிக சிறப்பாக நடைபெற்றுள்ளது. வைகோ தலைமையில் நடைபெற்ற  மாவீரர் வீரவணக்க நிகழ்வில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டு தங்கள் அஞ்சலிகளை செலுத்தினார்கள்.

VAIKO-1.jpg

http://tamil24news.com/news/?p=40701

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சேலம் குளத்தூரில் மாவீரர் நாள் நிகழ்வு தடைகளைத் தகர்த்து இடம்பெற்றது!

 

 

சேலம் குளத்தூரில் பொன்னம்மான் நினைவு மண்டபத்தில் மாவீரர் நாள் நிகழ்வு தடையை தகர்த்து நடைபெற்றுள்ளது. மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்ச்சி நவ-27-2014 சேலம் மாவட்டம் கொளத்தூரில் மாலை 6 மணிக்கு சுடர் ஏற்றுதலுடன் ஆரம்பமானது.

kolathur_maveerar_nal_2014_01.jpg

நிகழ்ச்சி ஏற்பாடுகளை திராவிடர் விடுதலைக் கழகம் வழமைபோல் ஒழுங்கமைப்பு செய்திருந்தனர். பெண்கள் குழந்தைகள் உட்பட 500க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அழைப்பாளர்களாக விடுதலை ராசேந்திரன் மற்றும் அற்புதம் அம்மாவும் கலந்து கொண்டு மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

kolathur_maveerar_nal_2014_02.jpg

kolathur_maveerar_nal_2014_03.jpg

kolathur_maveerar_nal_2014_05.jpg

kolathur_maveerar_nal_2014_06.jpg

kolathur_maveerar_nal_2014_07.jpg

kolathur_maveerar_nal_2014_08.jpg

 

http://www.pathivu.com/news/35668/57//d,article_full.aspx

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

லண்டன் எக்சல் மண்டபத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2014 இன் படத்தொகுப்பு

 

uk_maveerar_nal_01.jpg

uk_maveerar_nal_02.jpg

uk_maveerar_nal_03.jpg

uk_maveerar_nal_04.jpg

uk_maveerar_nal_05.jpg

uk_maveerar_nal_06.jpg

uk_maveerar_nal_07.jpg

uk_maveerar_nal_08.jpg

uk_maveerar_nal_09.jpg

uk_maveerar_nal_10.jpg

uk_maveerar_nal_11.jpg

uk_maveerar_nal_12.jpg

uk_maveerar_nal_13.jpg

uk_maveerar_nal_14.jpg

uk_maveerar_nal_15.jpg

uk_maveerar_nal_20.jpg

uk_maveerar_nal_21.jpg

uk_maveerar_nal_22.jpg

uk_maveerar_nal_23.jpg

 

 

 

 

 

 

 


uk_maveerar_nal_25.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

uk_maveerar_nal_26.jpg

uk_maveerar_nal_28.jpg

uk_maveerar_nal_29.jpg

uk_maveerar_nal_31.jpg

 இலண்டனில் 2014 ஈகை பேரொளி முருகதாசனின் கல்லறை முன்பாக நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வின் போது போராளி கோபிந்த் அவர்கள் ஆற்றிய உரை .

 

 

 

இலண்டனில் 2014 ஈகை பேரொளி முருகதாசனின் கல்லறை முன்பாக நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வின் போது போராளி புலவர் அவர்கள் ஆற்றிய உரை

 

Edited by professor

 
கனடா – ரொறொன்ரோவில் எழுச்சியுடன் நடைபெற்றுக் கொண்டிருக்கும் மாவீரர் நாள்!
 
 

http://www.youtube.com/watch?v=l3jd5drVNxI

 

 

IMG_13251-600x448.jpg

IMG_1329-600x448.jpg

IMG_1335-600x448.jpg

IMG_1338-600x448.jpg

IMG_1349-600x448.jpg

IMG_1350-600x448.jpg

IMG_1354-600x448.jpg

IMG_1357-600x448.jpg

IMG_1363-600x448.jpg

 

Edited by தமிழினி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கனடாவில் மாவீரர் நாள் நிகழ்வுகள் -ரொரன்ரோ

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அரசபாளையத்தில் நடைபெற்ற மாவீரர் நாள்

 

மாவீரர் நாள் 2014 தமிழீழப் போரில் இன்னுயிர் ஈந்த வீரவேங்கைகளுக்கு அரசபாளயத்தில் மாவீரர் நாள் வணக்கம் செலுத்தப்பட்டது. மாவீரர்களின் திருவுருவப்படங்களுக்கு பெருந்திரளான மக்கள் மலர் தூவி வீரவணக்கம் செய்தனர் தமிழீழ விடுதலையை நெஞ்சில் ஏந்தி களமாடிய வீரர்களுக்கு பொதுச் சுடர் ஏற்றி புதுக்கோட்டை பாவாணன் அவர்கள் மாவீரர்களின் ஈகங்கள், வீரகளமுனைச் செய்திகள், ஈழவரலாற்றில் தமிழினத்தின் எழுச்சிகள் பற்றி விரிவான உரை ஆற்றி, மாண்ட விடுதலை வீரர்களை தமிழர்களின் நெஞ்சில் படமாகச் செதுக்கினார். தொடர்ந்து மாவீரர்களின் எழுச்சி பாடல்களுக்கு கலைநிகழ்வுகள் நடந்தேறின. இந்திய அரசின் தடை மற்றும் காவல் துறை நெருக்கடிக்கும் மத்தியில் எழுச்சியாக நடைபெற்று முடிந்தது மாவீரர் நாள் நிகழ்வுகள்.

arasa_palaiyam_maaveerarnal_01.pngarasa_palaiyam_maaveerarnal_02.png

arasa_palaiyam_maaveerarnal_03.png

arasa_palaiyam_maaveerarnal_04.png

arasa_palaiyam_maaveerarnal_05.png

arasa_palaiyam_maaveerarnal_06.png

arasa_palaiyam_maaveerarnal_07.png

arasa_palaiyam_maaveerarnal_08.png

arasa_palaiyam_maaveerarnal_09.png

arasa_palaiyam_maaveerarnal_11.png

arasa_palaiyam_maaveerarnal_12.png

arasa_palaiyam_maaveerarnal_13.png

arasa_palaiyam_maaveerarnal_14.png

arasa_palaiyam_maaveerarnal_17.png

arasa_palaiyam_maaveerarnal_18.png

arasa_palaiyam_maaveerarnal_19.png

arasa_palaiyam_maaveerarnal_20.png

arasa_palaiyam_maaveerarnal_22.png

arasa_palaiyam_maaveerarnal_23.png

 
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

டென்மார்க்கில் மாவீரர்நாள் மிகவும் உணர்புபூர்வமாக வழமை போல் கேர்ணிங் மற்றும் கொல்பெக் ஆகிய இரு நகரங்களில்

2dk.jpg

இம்மாவீரர் நாள் நிகழ்வுகளில் பல நூற்றுக்கணக்கான மக்கள் எழுச்சியுடன் கலந்துகொண்டு, தாயக விடுதலைக்காகத் தமது இன்னுயிர்களை வித்தாக்கிய மாவீரர்களை வணங்கிச் சென்றனர்.

3dk.jpg

 
மாவீரர்நாள் நிகழ்வானது பிராந்தியப் பொறுப்பாளரினால் பொதுச்சுடரேற்றலுடன் ஆரம்பமானது. தொடர்ந்து தேசியக்கொடியினை டென்மார்க் கிளைப்பொறுப்பாளர் ஏற்றிவைத்தார். ஈகச் சுடரினை மாவீரர் வீரவேங்கை வினிதா அவர்களின் சகோதரி ஏற்றிவைத்தார். தொடர் நிகள்வுகளாக மலர்வணக்கம் சுடர்வணக்கம் அகவணக்கம் நடைபெற்றது. 

4dk.jpg

தமிழீழக்கனவுடன் தமிழ் மக்களின் விடுதலைக்காய் தம் உயிர்களை தியாகம் செய்த மாவீரர்களுக்கு அவர்களின் உறவுகளால் விளக்கேற்றும் பொழுது மாவீரர்துயிலுமில்லப் பாடல் ஒலிபரப்பப்பட்டது. அதன்பின்பு பொதுமக்களால் மாவீரர்களுக்கு விளக்கேற்றி வணக்கம் செலுத்தப்பட்டது.
 
இவைதவிர மாவீரர் கானங்கள், சிறப்புரை, எழுச்சி நடனங்கள், நாடகங்கள் போன்ற நிகழ்வுகள் இம்மாவீரர்நாள் நிகழ்வுக்கு மேலும் எழுச்சியை ஊட்டின.

5dk.jpg

 

உலகறிந்த எம்தலைவர் உரைப்பதையே உறுதி மொழியென ஏற்று உறுதிபூண்டு கொள்கை மாறாமல் உயிரை விட உரிமை மேலென நேசித்த உத்தமர்கள் மாவீர்கள் அம் மாவீர்களின் கனவு நிறைவேறும் வரை ஓயாது செயற்படுவோமென இளையோர்களால் உறுதி கூறப்பட்டது. நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்ற பாடலுடன் மாவீரர் நாள் நிகழ்வு நிறைவு பெற்றுது.

 

 

7.jpg

8dk.jpg

9dk.jpg

6.dk.jpg

1dk.jpg

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புலம்பெயர் நாடு ஒன்றில் கடற்புலிகளால் முன்னெடுத்த மாவீரர் நாள் நிகழ்வு

புலம்பெயர் நாடு ஒன்றில் மாவீரர்களை நினைவு கூர்ந்து தண்ணீருக்குள் பொதுச்சுடர் ஏற்றப்பட்டு  மாவீரர் நாள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

kadat_pulikal_01.png

kadat_pulikal_03.png

kadat_pulikal_02.png

http://www.pathivu.com/news/35677/57//d,article_full.aspx

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பெல்ஜியம் நாட்டில் நடைபெற்ற தேசிய மாவீரர் நாள் 2014

 

தேசிய மாவீரர் நாள் 2014 பெல்ஜியம் நாட்டில் மிக உணர்வுபூர்வமாக நடைபெற்றது . பொதுச்சுடர் ஏற்றப்பட்டு ; தேசியக்கொடி ஏற்றும் நிகழ்வை தொடர்ந்து  எமது மண்ணுக்காக தமது இன்னுயிரை ஈகம் செய்த மாவீரச் செல்வங்களுக்காக வணக்க நிகழ்வு ஆரம்பித்தது .

சிறப்பு பேச்சாளராக யேர்மனியில் இருந்து கலந்துகொண்ட ஆசிரியர் தமிழ் மக்கள் மாவீரச் செல்வங்கள் எம்மிடம் விட்டுச்சென்ற பணிகளை , தேசியக் கடமைகளை நாம் தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி தனது உரையை நிகழ்த்தினார்.

தேசிய மாவீரர் நாளில் கலந்துகொண்ட மக்கள் தமது பிள்ளைகளை வணங்கியதோடு அவர்களின் ஆசைகளை நிறைவேற்ற உறுதி எடுத்துக்கொண்டனர் .

b%20(2).JPG

b%20(4).JPG

b%20(3).JPG

b%20(1).JPG

b%20(5).JPG

http://www.pathivu.com/news/35680/57/2014/d,article_full.aspx

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நோர்வேயில் நடைபெற்ற மாவீராநாள் எழுச்சி நிகழ்வு

 

27.11.2014 ஒஸ்லோவில் அமைந்துள்ள கிருஸ்ண சென்ரர் மண்டபத்தில் மதியம் 12;:45 மணிக்கு மிக சிறப்பாக ஆரம்பமாகியது மாவீரர்நாள்,  இந்நிகழ்வில் மூவாயிரத்திற்கு மேற்ப்பட்ட மக்கள் கலந்து கொண்டனர்.

 

nor8.JPGnor9.JPGnor10.JPG

முதலில் பொதுச்சுடர் ஏற்றப்பட்டதை தொடர்ந்து மாவீரர்களின் உதிரத்தால் உருவாகிய தேசியக்கொடீ ஏற்றப்பட்டது.அதனை தொடர்ந்து தமிழீழ மாவீரர்நாள் அறிக்கையும் தொடர்ந்து உலகத்தில் எந்த மூலையில் வாழந்தாலும் தமிழீழத்தின் விடுதலைக்காக உறுதியோடு உழைப்போமென  உறுதிமொமி மக்களோடு சேர்ந்து எடுக்கப்பட்டதை தொடர்ந்து மணி ஒலி மூன்று தடவைகள் ஒலித்ததை தொடர்ந்து வித்தாகி வீழ்ந்த வீரர்களுக்காகவும் இன அழிப்பு செய்யப்பட்ட மக்களுக்காகவும் அகவணக்கம் செய்யப்பட்டது.

nor17.JPGnor1.JPG

இதனை தொடர்ந்து ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு மாவீரக்கடவுள்களை போற்றி வணங்கும் துயிலும் இல்லப்பாடல் வெண்திரையில் தாயக நினைவுகளை மீட்டியபோது மக்களின் விழிகளில் நீர் முட்டியது. எப்படித்தான் இதயத்தை இறுக்கிப்பிடுத்தாலும் கசியும் கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை என்ற அளவிற்கு உணர்வுகள் மண்ணின் வீரர்களை தேடியது.

nor2.JPGnor3.JPG

மாவீரக்கடவுள்களை மக்கள் மனசார பூசிக்கும் பாடலை தொடர்ந்து மாவீரர் குடும்பத்தினர் தங்கள் பிள்ளைகளுக்கும் சகோதர சகோதரிகளுக்கும் சுடர் ஏற்றி மலர் வணக்கம் செய்யப்பட்டதை தொடர்ந்து மக்களும் சுடர் ஏற்றி மலர் வணக்கம் செய்தனர் இவற்றோடு இளையவர்களின் கவிவணக்கமும் நோர்வே தமிழர் கலை பண்பாட்டுக் கழக இசைக்குழுவின் மாவீரர்கானமும் மண்டபத்தில் மேலும் உணர்வுகளை உரசியது.

இவற்றை தொடர்ந்து சேர்மனியில் இருந்து சிறப்பு விருந்தினராக வருகை தந்திருந்த பாஸ்கரமூர்த்தி அவர்களின் சிறப்புரை இடம்றெ;றது சிறப்புரையில் அவர் இளையோர்களின்  மாவீரர்நாளுக்கான பங்களிப்பை பார்த்து 2008 ஆண்டு மாவீரர்நாள் உரையில் தேசியத்தலைவர் இளையோர்கள் பற்றி குறிப்பிட்ட வார்த்தைகள் மெய்பித்து நிற்பதை தான் கண்ணூடாக காண்பதாக குறிப்பிட்டிருந்தார்.
nor4.JPGnor12.JPGnor6.JPG

சிறப்புரையை தொடர்ந்து நோர்வே தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் இணைப்பாளர் அரவிந்தன் நாகலிங்கம் அவர்களின் உரை இடம்பெற்றது.அவர் தனது உரையில் குறிப்பிடும்போது தமிழர் ஒருங்கிணைப்புக் குழு விடுதலைக்கான பணிகளை ஒருங்கிணைப்பதோடு தாயகத்தில் மக்களின் வாழ்வாதாரத்தினை உயர்த்துவதர்க்காகவும் தன்னாலான பணிகளை  செய்து வருவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

தொடந்து தமிழ் இளையோர் அமைப்பினரின் அணையாத தீபங்கள் என்ற நிகழ்ச்சி போராட்ட வரலாற்றை சிறுவர்களுக்கு புரியுமளவிற்கு இசையோடு கலந்து சுவையாக தந்தார்கள்
nor11.JPGnor14.JPG
 

இவற்றோடு இளையோர் அமைப்பினரின் தமிழ் உரையும் நோர்வேஜிய மொழியில் உரையும் இடம்பெற்றது அவ்வுரைகளில் அவர்கள குறிப்பிடுகின்ற போது தமிழீழ விடுதலைப்போராட்டத்தினை தாங்கிச்செல்கின்ற சக்தியை தலைவர் அவர்கள் எம்மிடம் கொடுத்திருக்கின்றார் ஆகவே தமிழர் என்ற ஒற்றை சொல்லில் இளையவர்களாகிய நாம் ஒன்றாகி விடுதலைக்காக உழைக்க கரம்கோர்க்கவேண்டும் என கேட்டுக்கொண்டனர்.
nor15.JPGnor5.JPG

இதனைத்தொடர்ந்து அன்னைபூபதி பாடசாலைகளால் நடாத்தப்பட்ட மாவீரர்நாள் ஒவியப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மதிப்பளிக்கப்பட்டது.

மாவீராநாள் நிகழ்ச்சிகளின் மகுடமாக விழ விழ எழுவோம் எனும் எழுச்சி நிகழ்வு மிகச்சிறப்பாக நடைபெற்றது இந்நிகழ்வில் 100 இற்க்;கு மேற்ப்பட்ட கலைஞர்கள் பங்குகொண்டதோடு கனடாவில் இருந்து சிறப்பு கலைஞனாக வருகை தந்த பல்குரலோன் அமல் அவர்களின் கலைவெளிப்பாடும் காத்திரமானதாக அமைந்தது. அத்தோடு இளையவர்களின் நடனத்திறனும் ஆசிரியைகளின் நடன அமைப்பும் மக்களை கடைசி வரை அசையாமல் கட்டிப்போட்டிருந்தது.
nor7.JPG

விழ விழ எழுவோம் எழுச்சி நிகழ்வை தொடர்ந்து தேசியக்கொடீ இறக்கப்பட்டு இறுதியாக எமது இலட்சியத்தில் உறுதிகொள்ள வைக்கும் பாடலான நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்ற நம்பிக்கை வரிகளோடு நிகழ்வு நிறைவு கண்டது.

காத்து வீழ்ந்தவர் காலடி போற்றும் நாளினை சிறப்பாக நடாத்த உதவிய அனைத்து மக்களையும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு கரம்பற்றிக்கொள்கின்ற அதேவேளை விடுதலையை வென்றெடுக்க சத்தியம் செய்துகொள்கின்றது.

 

 

 

http://www.pathivu.com/news/35679/57//d,article_full.aspx

Edited by தமிழரசு

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

புதுச்சேரி அரியாங்குப்பத்தில் முகவில் எழுச்சியாக நடைபெற்ற மாவீரர் நாள்

 

தமிழீழத்தை மீட்கப் போராடி உயிர்நீத்த எம் புலி மாவீரர்களுக்கு வீர வணக்க நிகழ்வு புதுச்சேரி மாநிலம் அரியாங்குப்பம் பகுதியில் அமைந்துள்ள கப்டன் மில்லர் அரங்கில் 27.11.2014 அன்று மாலை 6.05 மணிக்கு நடத்தப்பட்டது.

puthusery%20maaveerar%20naal-1.JPG
முன்னதாக அரியாங்குப்பத்திலுள்ள தந்தை பெரியார் சிலையருகே இருந்து புலவர். புலமைப்பித்தன் அவர்கள் தீபச்சுடர் ஏந்தி ஊர்வலமாக வர, அவரைப் பின்தொடர்ந்து திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்களும் தோழமை அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் மற்றும் பெண்கள், குழந்தைகள் எனப் பொதுமக்களும் பெருந்திரளாக ”கப்டன் மில்லர் அரங்கம்” வந்தடைந்தனர். அரங்கில் தீபச் சுடர் ஏற்றப்பட்டபொழுது மாவீரர் வீரவணக்கப் பாடல் இசைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து “தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் நாள்-2014 அறிக்கை” ஒலிபெருக்கியில் ஒலிக்கப்பட்டது. அனைவரும் மிகுந்த கவனத்துடனும் ஆர்வத்துடனும் அறிக்கையைக் கேட்டபின்பு மாவீரர்களுக்கு மலர்த் தூவி வீரவணக்கம் செலுத்தினர்.

puthusery%20maaveerar%20naal-3.JPG
திராவிடர் விடுதலைக் கழகத்தின் புதுச்சேரி மாநிலத் தலைவர் தோழர். லோகு.அய்யப்பன் அவர்களின் வீரவணக்க அறிமுக உரையைத் தொடர்ந்து புலவர். புலமைப்பித்தன் அவர்கள் வீரவணக்க உரையாற்றினார். அப்போது தான் தம்பியுடன் (தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு.பிரபாகரனோடு) பழகிய காலத்தையும், தான் எவ்வாறெல்லாம் தலைவருக்கும் தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் திரு.எம்.ஜி.ஆர் அவர்களுக்கும் இடையே ஈழ விடுதலைக்காக உழைத்தார் என்பதையும் விளக்கினார். தொடர்ந்து பேசிய அவர் புலி வீரர்களின் தியாகங்களையும் இந்தியா ஈழத்திற்குச் செய்த துரோகத்தையும் ”இந்தியா தமிழர்களின் எதிரி நாடு” என்பதையும் பதிவு செய்தார். 

 
puthusery%20maaveerar%20naal-10.JPG
தந்தை பெரியாரின் தனித் தமிழ் நாட்டுக் கோரிக்கையையும் தம்பின் ஈழ விடுதலைப் போராட்டத்தையும் விளங்கப்படுத்தினார். ”எங்கோ ஒரு நாட்டில் பதுங்கியிருக்கும் தம்பி வெளியே வருவார், மீண்டும் ,ஈழத்தில் 5-ஆம் கட்டப் போர் நடக்கும், தமிழீழம் மலரும்” என்றார். ”அதன் பின்னரே தான் கண்களை மூடுவேன் அதுவரை உயிரோடு இருப்பேன்” எனப் பேசியபோது அனைவரும் கைதட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

puthusery%20maaveerar%20naal-11.JPG
முந்நூறுக்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்துகொண்டு இந்த மாவீரர் நாள் நிகழ்வைச் சிறப்பித்தனர்.
puthusery%20maaveerar%20naal-5.JPG
 
puthusery%20maaveerar%20naal-6.JPG
puthusery%20maaveerar%20naal-7.JPG
puthusery%20maaveerar%20naal-8.JPG
puthusery%20maaveerar%20naal-9.JPG
 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாலச்சந்திரன் மாணவர் இயக்கத்தினரால் மாவீரர் நாள் கடைப்பிடிக்கப்பட்டது

 

தாயக விடுதலைக்காக உயிர் நீத்த தமிழீழ விடுதலைப்போராளிகளின் நினைவாக இன்று (27/11/2014) மாலை சென்னை மயிலை பகுதியில் மாவீரர் நாள் கடைபிடிக்கப்பட்டது. மயிலை விசாலாட்சி தோட்ட பகுதி மக்களோடு இணைந்து இது நடத்தப்பட்டது.

பகுதியில் உள்ள குழந்தைகள் மாவீரர் நினைவு தீபத்தை ஏற்றி வைக்க, நிகழ்வு தொடங்கியது. நிகழ்வில் மாணவர்களும், விசாலாட்சி தோட்ட பகுதி மக்களும் கலந்து கொண்டு மாவீரர்களின் நினைவாக மெழுகுவர்த்தி ஏற்றி வைத்து மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

balachandran_student_maveerar_01.png

நிகழ்வில் தமிழீழ விடுதலைக்கான முழக்கங்களோடு மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. பின்னர் மயிலை பகுதியில் தமிழீழ விடுதலைக்கு களமாடியே மாவீரர்களின் தியாகம் குறித்தும், ஈழ விடுதலைப்போராட்ட வரலாற்றை விளக்கியும் துண்டறிக்கை பிரச்சாரம் செய்யப்பட்டது,சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மாவீரர் நாளுக்கான சுவரொட்டிகள் ஓட்டப்பட்டு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.

balachandran_student_maveerar_02.png 

balachandran_student_maveerar_04.png

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
தமிழர் முன்னேற்ற படை இயக்கம் சார்பில் நடை பெற்ற மாவீரர் நாள் நிகழ்வு

 

இன்று தமிழீழம்,  தமிழகம் மற்றும் புலம்பெயர்ந்த நாடுகளிலும் மிக சிறப்பாக எழுச்சியுடன் மக்கள் மாவீரர் நாள் நிகழ்வுகளை நடத்தி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் தமிழர் முன்னேற்ற படை இயக்கம் சார்பிலும் மாவீரர்  நாள் நிகழ்வு நடை பெற்றது.

maaveerar%20naal%20tamilar%20munetrapada
maaveerar%20naal%20tamilar%20munetrapada
maaveerar%20naal%20tamilar%20munetrapada
 

 

  • கருத்துக்கள உறவுகள்

சுவிஸில் நடைபெற்ற மாவீரர், வீர மக்கள் தினம் - 2014
*********************************************************************
சுவிஸில், விடுதலை வேள்வியில் வீர மரணத்தை முத்தமிட்ட புறநானூற்று மாவீர்களை நினைவு கூரும் தினத்தை "புலி அமைப்பினர் 
மிக சிறப்பாகவும்,புளொட் அமைப்பினர் சிறப்பாகவும் நடாத்தினார்கள்."
ஆரம்ப நிகழ்வாக மாவீர்ர் குடும்பத்தை கவுரவித்தார்கள்.இந்த நிகழ்வில் தமது பிள்ளைகள்,உறவுகளை பறிகொடுத்தவர்கள் கண்ணீர் சிந்திய காட்சி நெஞ்சை உருக்கியது.
தத்தமது கொடிகளை மெதுவாக பறக்கவிட்டனர்.புலிகளின் கொடி ஏற்றும்போது! "ஏறுது பார் ஏறுது பார் புலிக்கொடி ஏறுதுபார்" என்ற பாடல் 
ஒலிபரப்பப்பட்டது. பின்னர் திரையில் திரு பிரபாகரனின் கடந்த கால 
மாவீரர் சிறப்பு பேச்சு திரையிடப்பட்டது. தமிழர் பாரம்பரியத்துக்கே 
உரித்தான "கோயில் மணி ஓசை ஒலிக்க,சங்கூத, பறைமேளம் முழங்கிட்ட" காட்சி பண்டபத்தை அதிர செய்தது.இதே வேளை உயிர் கொடை மூலம் வித்தாகிப்போன வீர மறவர்களுக்கு சுடர் ஏற்றி அக 
வணக்கம் செய்யப்பட்டது. பின்னர் கரும்புலிகளின் ஆறு கொபுரங்களு
க்கான அகல் விளக்கு, வெடியோசை முழங்கிட ஏற்றப்பட்டது.இதே வேளை "தாயக கனவுகளுடன் சாவினை தழுவிய சந்தண பேழைகளே"
என்ற பாடல் ஒலிபரப்பனபோது! மண்டபத்தில் இனம் புரியாத நிசப்தம் 
நிலவியதோடு, பலரது முகங்களும் சோகமாக காணப்பட்டன.
மாவீரர் கல்லறைகள்,வீரரின் புதைகுழிமேல் தொப்பியுடன் நாட்டப்பட்ட 
இரு துப்பாக்கிகள், தமிழர் விடிவுக்காக தம்மையே தீக்கு இரையாக்கிய 
இலங்கை தமிழர் இ.செந்தில்நாதன்,முருகதாசன்,மற்றும் இந்திய செங்கொடி,முத்துக்குமார்,இன்னும் 17 பேர்களின் நிழற் படங்கள்,
கார்த்திகைபூ கோபுரம், புலிகள் சார்பின் 670 மாவீரர் படங்களும்,
புளொட் சார்பில் 54 வீர மறவர் படங்களும் காட்சிப்படுத்தப்பட்டன.
புலிகள் சார்பில் மேலே சொன்ன அத்தனை கட்சிபடுத்தலுக்கும் மின் 
விளக்குகள் மூலம் அலங்கரித்த காட்சி, பார்ப்பவர்களை கவர்ந்தது.
புளட் சார்பில் திரு.உமாமகேஸ்வரன்,பத்மநாபா,அமிர்தலிங்கம், 
யோகேஸ்வரன் எம்.பி,Eprlf,Telo,Tela,ஆகிய வீரமறவர் நிழற்படங்களும் காட்சிப்படுத்தப்பட்டன.
மாவீரர் குடும்பத்திற்கான மதிய உணவை, சுவிஸ் ஆலயமொன்று 
வழங்கியிருந்தது.சில வெளியீடுகளும் வெளியிட்டு வைக்கப்பட்டன.
இரு நிகழ்விலும் இசை,நாடகம்,நாட்டியமும் இடம்பெற்றன.
புலிகள் அமைப்பு சார்பில் இந்தியா திரு."களத்தூர் மணி" பிரதம 
பேச்சை நிகழ்த்தினார். அவரின் பேச்சு பெரும் பாலும் உணர்ச்சி 
ஊட்டும் வகையில் அமைந்திருந்தது. புளொட் அமைப்பின் சார்பில் 
திரு.சித்தாத்தன் பேசினார்.மிக அருமையாக தமிழரை இலங்கை அரசு 
எப்படி கொடுமை படுத்தியது.தமிழராகிய நாம் ஒன்று பட்டு எப்படியான 
செயற்பாட்டில் இனி இறங்க வேண்டும், புலத்து தமிழர் எப்படி செயற்பட்டால் இலங்கை வாழ் தமிழருக்கு நன்மை தரும் என 
சிறப்புற எந்த இயக்கத்தையும் சாடாது சிறந்த கருத்தை முன்வைத்தார்.
இரு பகுதி நிகழ்வும் மனதுக்கு எதோ ஒரு இனம் புரியாத நெருடலை 
ஏற்படுத்தி நின்றது.
சுவிஸிருந்து பொலிகை ஜெயா.

இது பற்றிய உண்மையன விபரத்தை அறிய விரும்புகின்றேன்...இந்த எழுத்தாள விபச்சாரியின் உண்மை முகம் கிழிக்கப்படவேண்டும்...எனது முகப்புத்தகத்தில் இருந்து இதனை வெட்டி ஒட்டியுள்ளேன்...சுவிசில் இருப்பவர்கள் இதனை உறுதிப்படுத்தினால் நன்றி..

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிதம்பரத்தில் தடையை மீறி மாணவர்களால் நடத்தப்பட்ட மாவீரர் நாள் நிகழ்வு

 
தமிழ் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் கூட்டமைப்பு சார்பில் இன்று      தடையை மீறி மாணவர்களால் நடத்தப்பட்ட மாவீரர் நாள் நிகழ்வு
maaveerar%20naal%20maanavarkal-1.JPGmaaveerar%20naal%20maanavarkal-2.JPGmaaveerar%20naal%20maanavarkal-3.JPG

 

 

 

மாற்றம் மாணவர் இளையோர் இயக்கத்தினரால் மாவீரர் நாள் கடைப்பிடிக்கப் பட்டது

 

தமிழீழ விடுதலைப் போரில் தங்களை ஈகம் செய்த மாவீரர்களை உலகம் எங்கும் வாழும் தமிழர்கள் 25 வருடங்களாக மாவீரர் நாளாக நவம்பர் 27 கடைப்பிடித்து வீரவணக்கம் செலுத்தி வருகின்றனர்.

maatram%20maaveerar%20naal-2.JPG
அதேபோல் இன்று மாற்றம் மாணவர் இளையோர் இயக்கத்தினரால் இன்று கிண்டியில் உள்ள ஆதரவற்றோர் சிறுவர் இல்லத்தில மெழுகுவர்த்தி ஏற்றி மலர் அஞ்சலி செலுத்தி மாவீரர் தினத்தை கடைப்பிடித்து மாவீரர்களுக்கு வீரவணக்கமும் செலுத்தினர்.
maatram%20maaveerar%20naal-3.JPG
maatram%20maaveerar%20naal-4.JPG
maatram%20maaveerar%20naal-5.JPG
maatram%20maaveerar%20naal-6.JPG
maatram%20maaveerar%20naal-7.JPG
maatram%20maaveerar%20naal-8.JPGmaatram%20maaveerar%20naal-11.JPG
maatram%20maaveerar%20naal-9.JPG
maatram%20maaveerar%20naal-10.JPG
maatram%20maaveerar%20naal-12.JPG
maatram%20maaveerar%20naal-13.JPG
 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுவிஸில் மாவீரர் நாளில் இருந்து சில படங்கள் 

 

1503269_10205558641744030_3755392580549910500587_10205558657144415_77859343113221506914_10205558670424747_4008425752427810391393_10205558675304869_827022033555010427992_10205558676024887_3810612671378

 

FB

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கட்டார் டோகாவில் மாவீரர் நாள் நினைவுகூரப்பட்டது

 

கட்டார் டோகாவில் முன்னாள் போராளினால் தமிழீழ தேசிய மாவீரர் நாள் முன்னாள் போராளிகள் இணைந்து உணர்வுடன் நினைவு கூர்ந்துள்ளனர்.

qutar_maveerarnal_01.jpg

qutar_maveerarnal_02.jpgqutar_maveerarnal_03.jpg

qutar_maveerarnal_04.jpg

qutar_maveerarnal_05.jpg

qutar_maveerarnal_06.jpg

qutar_maveerarnal_07.jpg

 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காஞ்சிபுரத்தில் இடம்பெற்ற மாவீரர் நாள் நிகழ்வுகள்

 

தமிழ்நாடு காஞ்சிபுரத்தில் மாவீரர் நாள் எழுச்சி நிகழ்வுகள் மிகவும் உணர்வுபூர்வமாக இடம்பெற்றன. இந்நிழக்வுகளை தி.வேல்முருகள் தலைமையில் காஞ்சிபுரம் மக்கள் மன்றத்தினர் இதனை ஏற்பாடுகள் செய்திருந்தனர்.

 

kanchipuram_maaveerarnal_01.jpg

kanchipuram_maaveerarnal_02.jpg

kanchipuram_maaveerarnal_03.jpg

kanchipuram_maaveerarnal_04.jpg

kanchipuram_maaveerarnal_05.jpg

kanchipuram_maaveerarnal_06.jpg

kanchipuram_maaveerarnal_07.jpg

kanchipuram_maaveerarnal_08.jpg

kanchipuram_maaveerarnal_09.jpg

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழ தேசிய மாவீரர்நாள் பிரான்சின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்றது

 

துலுஸ் மாநிலத்தில் 27.11.2014 வியாழக்கிழமை அன்று அங்குவாழ் தமிழீழ மக்களினால் மாவீரர்நாள் சிறப்பாக நினைவு கூரப்பட்டது. அங்குவாழ் மாவீரர்கள பெற்;றோர், சகோதரர்கள் மக்கள் மாவீரர்களின் திருவுருவப்படத்திற்கு சுடர்கள் ஏற்றி கார்த்திகைப்பூக் கொண்டு வணக்கம் செலுத்தினார்கள்.

france%20maaveerar%20naal-2.jpg

எமது எதிர்கால தமிழ் சிறார்கள் மாவீரர்கள் போற்றும் பாடல் பேச்சு நடனம் என வழங்கியிருந்தனர். நிகழ்வில் சிறப்பாக மாவீரரின் சகோதரரும் சார்சல் பிராங்கோ தமிழ்ச்சங்கத் தலைவருமாகிய திரு. டக்லஸ் அவர்கள் கலந்து கொண்டு உரையும் ஆற்றியிருந்தார்.

france%20maaveerar%20naal-1.JPG

பிரான்சின் பிரசித்தி பெற்ற துலுஸ் நகரத்தில் வாழ்ந்திருக்கும் தமிழ் மக்கள் தமது தாய்மொழியையும், பண்பாடு கலாசாரத்தையும் மறவாது பேணிப்பாதுகாத்து வருவது மட்டுமல்லாது தாய்நாட்டுக்காக தன்னலம் கருதாது உயிர் ஈந்த உத்தமர்களாம் மாவீரர்களை நினைத்து எடுத்திருந்த மாவீரர்நாள் நினைவேந்தல் நிகழ்வு அங்கு வாழ் உணர்வுள்ள அத்தனை மக்களாலும் ஒன்றாக நினைவுகூரப்பட்டு உணர்வுபூர்வமாக இனிதே நிறைவு பெற்றது.

france%20maaveerar%20naal-3.JPGfrance%20maaveerar%20naal-4.JPGfrance%20maaveerar%20naal-5.JPGfrance%20maaveerar%20naal-6.JPG
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மெல்பேர்ணில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற மாவீர்நாள் நிகழ்வுகள்!

 

 

melbourne-maverar-nal-300-news.jpg

தாயக விடுதலைப்போரில் தங்களுடைய இன்னுயிர்களை ஈந்து வித்தாகிப்போன மாவீரர்களை நினைவுகூரும் மாவீர்நாள் நிகழ்வு அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ணில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது. ஸ்பிறிங்வேல் நகர மண்டபத்தில் 27 - 11 – 2014 வியாழக்கிழமை அன்று நடைபெற்ற இந்நினைவெழுச்சிநாள் நிகழ்வில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் உணர்வுபூர்வமாகக் கலந்துகொண்டு மாவீரச் செல்வங்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

   

சரியாக மாலை 6 மணிக்கு நாடுகடந்த தமிழீழ அரசின் அவுஸ்திரேலிய பிரதிநிதிகளில் ஒருவரும் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் செயற்பாட்டாளருமான திரு டொமினிக் சந்தியாப்பிள்ளை அவர்கள் பொதுச்சுடரை ஏற்றிவைத்தார். அதனைத் தொடர்ந்து அவுஸ்திரேலியத் தேசியக்கொடியை தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்த கரன் மயில்வாகனம் அவர்கள் ஏற்றி வைத்தார். தொடர்ந்து தமிழீழத் தேசியக்கொடியை தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்த செயற்பாட்டாளர் திரு. கிறிஸ்ரி அவர்கள் ஏற்றி வைத்தார்.

அதனையடுத்து ஈகச்சுடரேற்றல் நிகழ்வு இடம்பெற்றது. முதல் மாவீரன் லெப்.சங்கரினதும் முதற்பெண் மாவீரர் 2ஆம் லெப். மாலதியினதும் திருவுருவப்படங்களுக்கான ஈகச்சுடரை திருமதி நிர்மலா கதிர்காமத்தம்பி அவர்கள் ஏற்றி வைத்தார். தொடர்ந்து நூறு வரையான மாவீரர் குடும்பங்களை சேர்ந்தோரும் உரித்துடையோரும் தமது மாவீரச் செல்வங்களுக்கு ஈகச்சுடரேற்றி, மலர்வணக்கம் செய்தனர். அதன்பின்னர் இடம்பெற்ற அகவணக்கத்தைத் தொடர்ந்து துயிலுமில்லப்பாடல் ஒலித்தது. மண்டபத்தில் நிறைந்திருந்த அனைவரினதும் கைகளில் தீபங்கள் எரிந்துகொண்டிருக்க அப்பாடல் முழுவதும் உணர்வுமயமாக மக்கள் ஒன்றித்திருந்தனர். அதைத் தொடர்ந்து பொதுமக்களின் மலர்வணக்கம் மிகவும் உணர்வுபூர்வமானதாக நடைபெற்றது.

மலர் வணக்கநிகழ்வின் போது தாயக துயிலுமில்லக்காட்சிகளை தாங்கிய காணொலிகளும், மாவீ¬ரர் கவிதைகளின் பின்னுாட்டத்தில் அகன்ற திரையில் காண்பிக்கப்பட்டுக் கொண்டிருந்தது. தாயக துயிலுமில்ல நிகழ்வுகளை நினைவில் சுமந்து மாவீரர்களுக்கு தமது மலர்வணக்கத்தை அனைவரும் செலுத்தினர்.

அதனைத் தொடர்ந்து மாவீரர்களை நெஞ்சிலிருத்தி தமிழீழ விடுதலைக்காக அனைவரும் அயராது உழைப்போம் என உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். தொடர்ந்து மாவீரர் நினைவான நடனத்தை நிருத்தக் சேத்திரா நடனப்பள்ளி மாணவர்கள் வழங்கினர். அதையடுத்து மாவீரர் நினைவுரை ஆங்கிலத்தில் இடம்பெற்றது. இந்நினைவுரையை திரு.சிந்துாரன் திலகராஜா அவர்கள் நிகழ்த்தினார். தொடர்ந்து நடனாலய நடனப்பள்ளி மாணவர்களின் மாவீரர் நினைவு நடனம் இடம்பெற்றது.

நினைவு நடனத்தைத் தொடர்ந்து மாவீரர் நினைவுரையை திரு. ஈசன் அவர்கள் நிகழ்த்தினார். மாவீரர்களின் தியாகங்களையும் அர்ப்பணிப்புக்களையும் மையப்படுத்தி அமைந்த அவ்வுரையில் குறிப்பிட்ட சில மாவீரர்களின் தியாகச் சம்பவங்களைத் தொட்டுக்காட்டிய ஈசன், போராட்ட வடிவங்கள் மாறினாலும் ஒன்று பட்ட சக்தியாகத் தொடர்ந்தும் பயணிப்பதே மாவீரர்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாக அமையுமென்ற கருத்தை முன்வைத்தார்.

இறுதி நிகழ்வாக நாட்டிய நாடகம் ஒன்று இடம்பெற்றது. மாவீரரின் உன்னதமான தியாகத்தை எடுத்தியம்பும் வகையில் அமையப்பெற்ற இந்நாட்டிய நாடகம் அழகான பின்னணி இசையுடனும் ஒளியமைப்புடனும் அரங்கில் நிகழ்த்தப்பட்டது. மாவீரர்களின் அர்ப்பணிப்பை அனைவர் முன்கொண்டுவந்த அக்கலைப்படைப்பில் எதிர்காலச்சந்ததிக்கும் எம்மவர் தியாகமகத்துவத்தை எடுத்துச்செல்வதாய் அமைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இரவு 9.00 மணியளவில் தேசியக் கொடிகள் இறக்கப்பட்டதுடன் ”தமிழரின் தாகம் தமிழீழ தாயகம்” என உறுதியெடுத்துக்கொண்டு நிகழ்வு எழுச்சியுடன் நிறைவுபெற்றது. கடந்த ஆண்டுகளைப் போலவே இவ்வாண்டும் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரால் வெளியிடப்பட்ட காந்தள் என்ற மாவீரர்நினைவுகளை தாங்கிய இதழ் இந்நிகழ்வில் விநியோகிக்கப்பட்டது. தேசியத்தலைவர், மாவீரர்கள், தேசியக்கொடி, தேசியகீதம், தமிழீழம் ஆகியவை குறித்த விளக்கக் கட்டுரைகளுடன் பொதுமக்கள் மற்றும் தமிழ் அமைப்புக்கள், வர்த்தக நிறுவனங்கள் வழங்கிய மாவீரர் வணக்க கவிதைகளையும் தாங்கி காந்தள் இதழ் வெளியாகியிருந்தது.

 

melbourne-maverar-nal-281114-seithy%20(1

 

 

melbourne-maverar-nal-281114-seithy%20(2

 

 

melbourne-maverar-nal-281114-seithy%20(3

 

 

melbourne-maverar-nal-281114-seithy%20(4

 

 

melbourne-maverar-nal-281114-seithy%20(5

 

 

melbourne-maverar-nal-281114-seithy%20(6

 

 

melbourne-maverar-nal-281114-seithy%20(7

 

 

melbourne-maverar-nal-281114-seithy%20(8

 

 

melbourne-maverar-nal-281114-seithy%20(9

http://seithy.com/breifNews.php?newsID=121679&category=TopNews&language=tamil

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஸ்ராஸ்பூர்க் மாநகரில் எழுச்சியுடன் நடைபெற்ற தேசிய மாவீரர் நாள் நிகழ்வு!

 

தேசிய மாவீரர் நாள் 2014  ஐரோப்பிய தலைநகர் ஸ்ராஸ்பூர்க்கில்  1.35 மணிக்கு மணியோசையுடன்  ஆரம்பமாகி ஈகைசுடரினை கடல்கரும்புலி மேஜெர்  திருமாறனின் சகோதரன் ஏற்றிவைக்க அதனைதொடர்ந்து மாவீரர் துயிலும் இல்லத்தில் வைக்கப்பட்டுருந்த நினைவுக்கல்லறைகளுக்கு அவர்களது உறவினர்களும் தமிழீழ மக்களும் விளக்கேற்றி மலர் வணக்கம் செய்தனர் அதனை தொடர்ந்து தமிழீழ மண்மீட்பு போரில் தங்கள் இன்  உயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் திருவுருவப்  படங்களுக்கும் விளக்கேற்றி மலர் வணக்கம் செய்தனர் தொடர்சியாக  ஸ்ராஸ்பூர்க் வாழ் தமிழீழ சிறார்களின் தேசிய மாவீரர் நாள் பற்றிய பேச்சு, காவிதை, பாடல், எழுச்சி நடனம், என்பவற்றுடன் தேசிய மாவீரர் நாள் சிறப்புரையினை பாரிஸ் மாநகரில் இருந்து வருகை தந்த திரு .தங்கராசா கேசநந்தன் அவர்கள் வழங்கியிருந்தார் யூத மக்களின் போராட்டத்தினை முன் உதாரணமாக கொண்டு எமது இளைய தலை முறை எமது தமிழீழ தேசத்தினை மீட்க உறுதி பூன வேண்டுமென தனது சிறப்புரையில்  கேட்டுக்கொண்டார்  இதனை தொடர்ந்து நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்ற பாடலுடன்" தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்"  என்ற இலச்சிய உறுதியுடன்  தேசிய மாவீரர் நாள் நிகழ்வு நிறைவுக்கு வந்தது.

stasburg_maveerarnal01.png

stasburg_maveerarnal02.png

stasburg_maveerarnal03.png

stasburg_maveerarnal04.png

stasburg_maveerarnal05.png

stasburg_maveerarnal06.png

stasburg_maveerarnal07.png

stasburg_maveerarnal08.png

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.