Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு தமிழர்களின் 7 லட்சம் வாக்குகளுக்கு மஹிந்தரும் மைத்திரியும் வலை விரிப்பு

Featured Replies

MR%20MS%2098988985.jpg

 

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் வெற்றியை நிச்சயிப்பதில் வடக்கு மாகாண வாக்குகள் முக்கியத்துவம் பெறுமென அரசியல் அவதானிகள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் வடக்கு மாகாணத்தில் உள்ள சுமார் ஏழு இலட்சம் வாக்காளர்களைக் கவரும் பணியில் அரச தரப்பு வேட்பாளர் மஹிந்த ராஜபக்‌ஷவும், பொது எதிரணியின் வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவும் மும்முரமாக ஈடுபடுவார்கள் என அரசியல் அவதானிகள் ஊகம் தெரிவித்துள்ளனர்.
 
ஜனாதிபதித் தேர்தலிலும், பொதுத் தேர்தலிலும் அவர்களின் வெற்றியைத் தீர்மானிக்கும் சக்தியாக வடக்கு மாகாணம் விளங்குமெனக் கூறப்படுகின்றது. 2005ஆம் ஆண்டில் நடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது விடுதலைப் புலிகள் இயக்கம் மக்கள் வாக்களிப்பதற்குத் தடைவிதித்தது. அந்தத் தேர்தலில் மஹிந்த ராஜபக்‌ஷ 48 லட்சத்து 87ஆயிரத்து 152 வாக்குகளையும், ரணில் விக்கிரமசிங்க 47 லட்சத்து 6 ஆயிரத்து 366 வாக்குகளையும் பெற்றனர். அதன் பிரகாரம் ஒரு லட்சத்து 80 ஆயிரத்து 786 வாக்குகள் வித்தியாசத்திலேயே மஹிந்த ராஜபக்‌ஷ வெற்றி பெற்றார். இம்முறை வடக்கு மாகாணத்தில் 2013 ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலின் அடிப்படையில் 7 லட்சத்து 19 ஆயிரத்து 477 வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
 
அவர்களில்
யாழ்ப்பாண மாவட்டத்தில் 4 லட்சத்து 26 ஆயிரத்து 813 பேரும்,
கிளிநொச்சி மாவட்டத்தில் 68 ஆயிரத்து 600 பேரும்,
மன்னார் மாவட்டத்தில் 75 ஆயிரத்து 737 பேரும்,
முல்லைத்தீவு மாவட்டத்தில் 53 ஆயிரத்து 683 பேரும்,
வவுனியா மாவட்டத்தில் 94 ஆயிரத்து 644 பேரும்
வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது -
 
 
 
  • கருத்துக்கள உறவுகள்

வடக்கின் தனிப்பெரும் கட்சியாம் ததேகூ வை சீண்டவும் மாட்டேன் என்கிறார் மகிந்தர். ஆய்வாளர் இப்படிச் சொல்லுற்றார்?

வடக்கில் 10 வீதமும் மகிந்தவுக்கு இல்லை, இது மக்களுக்கும் தெரியும், மகிந்தவுக்கும் தெரியும்.

யாராவது காசுவாங்கி கொண்டு தேர்தல் பகிஸ்கரிப்பு செய்தால்தான் உண்டு :)

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வடக்கின் தனிப்பெரும் கட்சியாம் ததேகூ வை சீண்டவும் மாட்டேன் என்கிறார் மகிந்தர். ஆய்வாளர் இப்படிச் சொல்லுற்றார்?

வடக்கில் 10 வீதமும் மகிந்தவுக்கு இல்லை, இது மக்களுக்கும் தெரியும், மகிந்தவுக்கும் தெரியும்.

யாராவது காசுவாங்கி கொண்டு தேர்தல் பகிஸ்கரிப்பு செய்தால்தான் உண்டு :)

.....பொது எதிரணியின் வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவும் மும்முரமாக ஈடுபடுவார்கள் என அரசியல் அவதானிகள் ஊகம் தெரிவித்துள்ளனர்......

 

 

கோஷான்... ஆய்வாளர் தாமாக சொல்லவில்லை. அவருக்கு ‘அரசியல் அவதானிகள் ஊகம் தெரிவித்துள்ளனர்.’ இன்னும் என்னென்னவெல்லாம் ஊகிக்கப் போகிறார்களோ.. ஒரே கலக்கமாக இருக்கு!

Edited by sabesan36

பத்தில் ஒன்பது தமிழ் அரசியல் அவதானிகள் யாழ் களத்தில் இருக்கும்போது அந்த ஒரு அவதானி உந்த தமிழ் ஊடகத்துக்கு இதை தெரிவித்து போட்டாராக்கும்.

 

இன்னும் வரும்:

இராச தந்திர வட்டாரங்கள் 

அரசியல் நோக்கர்கள்

அரசியல் ஆய்வாளர்கள் 

அரசியல் நோக்கர்கள்.

 

இவங்களுக்கு வேலையே சும்மா புளரியை கிளப்பிறது தான்.

Edited by Sooravali

பத்தில் ஒன்பது தமிழ் அரசியல் அவதானிகள் யாழ் களத்தில் இருக்கும்போது அந்த ஒரு அவதானி உந்த தமிழ் ஊடகத்துக்கு இதை தெரிவித்து போட்டாராக்கும்.

இன்னும் வரும்:

இராச தந்திர வட்டாரங்கள்

அரசியல் நோக்கர்கள்

அரசியல் ஆய்வாளர்கள்

அரசியல் நோக்கர்கள்.

இவங்களுக்கு வேலையே சும்மா புளரியை கிளப்பிறது தான்.

அதைவிட இதில் பலர் இந்திய இலங்கை அரசின் கை கூலிகள் , தமிழரை உளவியல் ரீதியாக தாக்குவதே இவர்களது தொழில்.

  • தொடங்கியவர்

cartoon2(2).jpg

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.