Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யுத்தத்திற்கு திரும்பிச் செல்ல மறுக்கும் சிறிலங்கா படையினர்.

தமிழ் மக்களின் அரசியல் பிரச்சனைக்கு பெரும்பாலான சிங்கள மக்கள் இராணுவத் தீர்வை விரும்புகின்ற 17 members have voted

  1. 1.

    • ஆம்
      13
    • இல்லை
      4

Please sign in or register to vote in this poll.

Featured Replies

யுத்தத்திற்கு திரும்பிச் செல்ல மறுக்கும் சிறிலங்கா படையினர்

(WSWS interviews: Sri Lankan soldiers oppose return to war)

இலங்கையில் உள்நாட்டு சண்டை வெடித்ததைத் தொடர்ந்து இராணுவம் பத்திரிகைகளிலும் இலத்திரனியல் ஊடகங்களிலும் பாரிய ஆட்சேர்ப்பு பிரச்சாரத்தை முடுக்கிவிட்டுள்ளது. "சிங்களத் தாய்நாட்டை தமிழீழ விடுதலைப் புலிகளிடமிருந்து காப்பது வீரபுருசர்களின் கடமை" என்ற அறிவித்தலின் மூலம் அரசாங்கமானது இனவாத வேண்டுகோளை வெளிப்படையாகவே விடுத்துள்ளது.

எதிர்பார்க்கப்பட்ட ஆட்சேர்ப்பு எண்ணிக்கை இன்னமும் எட்டப்படவில்லை. இராணுவத்தினரிடையே வெறுப்பும் மற்றும் போரிடும் உளஉரண் அற்ற தன்மையே நிலவுவதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன. கடந்த நவம்பரில் மகிந்த ஆட்சியை பிடித்த பின்பு பரந்த யுத்தத்தை நோக்கி விரிவடைந்து செல்லும் மோதல்களில் நூற்றுக்கணக்கான படையினர் கொல்லப்பட்டுள்ளனர்.

படையில் சேர்க்கப்பட்ட பெரும்பாலானவர்கள் பின்தங்கிய பகுதிகளைச் சேர்ந்த ஏழை குடும்பங்களிலிருந்து வந்தவர்கள். இவர்களில் அதிகமானவர்கள் வேறு மாற்றுவழிகளின்றி குடும்பத்திற்காக தம்மை ராணுவத்தில் இணைத்துக் கொண்டவர்கள். பொருளாதார நிர்ப்பந்தத்தால் இணைந்த இவர்கள் விரைவில் ஆட்சியாளர்களால் இனவாதப் போரில் பகடைக் காய்களாக பயன்படுத்தப்படுகின்றனர்.

அரசாங்கத்தின் இடைவிடாத இனவாத துண்டல்களுக்கு மத்தியிலும் ஏற்கனவே இரண்டு தசாப்தங்கள் நீண்டுவிட்ட மற்றும் 65,000 உயிர்களை காவுகொண்டுவிட்ட யுத்தத்திற்கு பரந்தளவிலான எதிர்ப்பு அங்கே காணப்படுகின்றது. முக்கியமானதாக அதிகளவிலான மக்கள் அரசாங்கத்தை மட்டுமல்லாமல் சிங்கள இனவாத மக்கள் விடுதலை முன்னனி எனப்படும் JVP ஐயும் குற்றம் சாட்டுகின்றனர். வெளிப்படையாக யுத்தத்தை ஆதரிப்பதன் காரணமாக இது இப்போது தனது பின்தங்கிய பிரதேச ஆதரவாளர்களிடமிருந்து தனிமைப் படுத்தப்பட்டுள்ளது.

ஏற்கனவே அறியப்பட்ட இராணுவ அதிகாரிகளிடையே நிலவும் அதிருப்தியின் பொருட்டு அவர்களின் மனஉறுதியை மேலும் சீர்குலைக்காமலிருக்க திரைப்பட தயாரிப்பாளர்களுக்கும் ஊடகத் துறையினருக்கும் தணிக்கை மற்றும் பயமுறுத்தல்கள் அரசாங்கத்தாலும் பாதுகாப்பு தரப்பினராலும் விடுக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் பிரசாரங்களில் வீரர்களாக சித்தரிக்கப்படுபவர்கள் ஊடகங்களுக்கு வெளிப்படையாக கருத்து தெரிவிப்பது தடைசெய்யப்பட்டுள்ளது. இரண்டு தசாப்தங்களுக்கு மேலாகத் தொடரும் யுத்தத்தில் சுமார் 40,000 வீரர்கள் தப்பியோடியுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.

உலக சமத்துவ இணையத்தளம் (WSWS) அண்மையில் இரண்டு இராணுவ வீரர்களை பேட்டி கண்டது. இவர்கள் யாழ்ப்பாண யுத்த வலயத்தில் சேவையாற்றி விடுமுறையில் வீட்டிற்கு வந்தவர்கள். அவர்களது விபரங்கள் வெளியிடப்படவில்லை.

முதல் வீரர் சதுப்பு நிலமொன்றில் ஓலையினால் வேயப்பட்ட வீடு ஒன்றில் வசிக்கிறார். அந்த வீடு 24 சதுர மீட்டர்கள் மாத்திரம் கொண்டது. பின்னால் இருக்கும் சிறிய குடிசை ஒன்றே சமையலறையாக பாவிக்கப்படுகின்றது. அங்கே கட்டி முடிக்கப்படாத வீடு ஒன்றும் காணப்படுகின்றது. அந்த சதுப்புநிலத்தில் 650 சதுர மீட்டர்கள் கொண்ட இடம் அவரது தகப்பனாருக்கு சொந்தமானது.

மூன்று சகோதரர்களில் இவர் மூத்தவர். இரண்டாமவர் தனது உயர்தரத்தை பூர்த்தி செய்துவிட்டு நிரந்தர வேலையின்றி இருக்கிறார். நாட்கூலி வேலை செய்து அவர் தனது குடும்பத்திற்கு உதவி செய்கிறார். இளையவர் இன்னமும் பாடசாலையில் கல்வி கற்று வருகின்றார்.

அவர் தன்னை பற்றி விபரிக்கையில்: நான் எனது பாடசாலை நாட்களிலிருந்து உள்ளுர் இசைக்குழு ஒன்றில் பாடகராக இருந்தேன். நான் இசையை பெரிதும் விரும்பிய போதும் அதனை கைவிட்டு இராணுத்தில் சேர வேண்டி ஏற்பட்டுவிட்டது.

எனது குடும்பத்திற்கு வாழ்வதற்க்கு பொருத்தமான இடம் இருக்கவில்லை. அதனால் நான் ஒரு வீட்டை கட்டத் தொடங்கினேன். எனது அடுத்த விடுமுறையின் போது கூரை வேலையை முடிக்க எண்ணியுள்ளேன். இராணுவ நடவடிக்கைகளில் ஈடுபடும் போது எங்களுக்கு மேலதிகமாக ரூபா 2000 (US$ 20) மற்றும் வேறு சில கொடுப்பனவுகளும் வழங்கப்படும்.

அவரது கள அனுபவம் பற்றி தெரிவிக்கையில் அவர் கூறினார், "நாங்கள் ஒரு நடவடிக்கைக்காக கமாண்டோ அணியொன்றினால் வழிநடத்திச் செல்லப்பட்டோம். எனது குழுவிலிருந்த 8 பேரில் 5 பேர் கொல்லப்பட்டுவிட்டனர். மொத்தம் 70 பேரை கொண்ட கமாண்டோ குழுவிலும் 7 பேரே எஞ்சினர். எனக்கும் இலேசான காயம் ஏற்ப்பட்டது"

நாங்கள் முன்னரங்க நிலைகளில் நிறுத்தப்பட்டிருந்தோம். எங்களில் 3 அல்லது 4 பேர் இருந்தனர். காப்பரண்களுக்கு உணவுகள் வழங்கப்பட்டன. நாங்கள் 2 மணிநேர முறை மாற்று பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தோம். ஆனாலும் தொடர்ச்சியான பதட்டமான சூழல் காரணமாக எங்களால் காப்பரணில் ஓய்வெடுக்க முடிவதில்லை. மீண்டும் எமக்கு ஊருக்கு போக வாய்ப்பு கிடைக்குமா என்ற சந்தேகத்திலேயே நாங்கள் இருந்தோம்.

இந்த சண்டை பயனற்றது. இது தேவையற்றது. சண்டை எங்களுக்கு இறப்பையும் அங்கயீனத்தையுமே ஏற்படுத்துகின்றது. ஆனால் இப்போது எங்களுக்கு இதிலிருந்து தப்ப வழியில்லை. நான் பகல் வேளைகளில் கடமையிலிருக்கும் போது பனை மரங்களையும் புதர்களையும் தவிர வேறொன்றையும் காணவில்லை. இந்த வெறும் நிலத்தை பிடிப்பதற்காக இவ்வளவு கொடும் சண்டை என்று நான் வியப்படைந்தேன். இதனை நினைத்து நினைத்து நான் விரக்தி அடைந்தேன்.

தன் சக வீரர்கள் பற்றி பேசும் போது, அவர் சொன்னார் "சிலர் என்னைப் போல் யுத்தம் குறித்து ஏமாற்றம் அடைந்துள்ளனர். வேறு சிலர் நாங்கள் சண்டையிட வேண்டும் என்கின்றனர். இவர்களில் பெரும்பாலானவர்கள் ஏழ்மை நிறைந்த அனுராதபுரம் மற்றும் பொலநறுவை போன்ற விவசாய பிரதேசங்களிலிருந்தே வந்தவர்கள்"

நாட்கூலித் வேலை செய்யும் அவரின் தகப்பனார் கூறும் போது, "பாருங்கள், அவர்கள் மீண்டும் யுத்தம் புரிகின்றனர். எனது மகனும் யுத்தத்திலீடுபட்டுள்ளார், நான் இங்கே பயத்துடன் வாழ்கின்றேன். என்னால் என்ன செய்ய முடியும்? பொலிசார் எனது மகன் காயமடைந்து விட்டதாக செய்தி கொண்டுவரும் போது மகனைப் பற்றி நான் மிகவும் பயந்துவிட்டேன்"

இடையில் குறுக்கிட்ட அவர் மகன் "இது எங்களின் யுத்தமல்ல. இந்த யுத்தம் அரசியல் தலைவர்களால் உருவாக்கப்பட்டது. மீன்கள் குறைவாக கிடைக்கின்ற காலங்களில் நாங்கள் வடக்கு மற்றும் கிழக்கு கடலுக்கு மீன் பிடிக்க போவதுண்டு. முன்னைய நாட்களில் நாங்கள் தமிழ் மீனவர்களுடன் சகோதரர்கள் போன்று மிக நெருக்கமாக இருந்தோம்" என்று தெரிவித்தார்.

"இந்த அழிவுகளுக்கான பொறுப்பு பிரதான கட்சிகளுக்கு மட்டுமின்றி JVP இனரையும் சாரும். 1989 ஆம் ஆண்டுகளில் எனது சகோதரர் மாகாணசபைத் தேர்தலுக்க வாக்களித்த காரணத்தால் கழுத்தில் வாசகம் எழுதப்பட்ட அட்டை ஒன்றுடன் கிராமத்தின் கடைத்தெருவில் நிற்குமாறு பணிக்கப்பட்டார். மீண்டும் JVP இன் கட்டளையை மீறினால் அவருக்கு மரண அச்சுறுத்தலும் விடுக்கப்பட்டது"

இரண்டாவது வீரர் WSWS இற்கு தெரிவிக்கையில் "இராணுவம் பற்றி எனக்கு எந்த அறிவும் இருக்கவில்லை. எனக்கு அது தெரிந்திருந்தால் நான் ஒரு போதும் போயிருக்க மாட்டேன். பாடசாலையிலிருந்து விலகிய பின்னர் நான் கடலுக்கு மீன்பிடி தொழில் செய்ய போனேன். ஆரம்பத்தில் எல்லோரும் சிலநாட்களுக்கு வாந்தியெடுத்தனர். ஆனால் எனக்கு அது நிற்காமல் தொடர்ந்தது. ஆகையால் எனக்கு வேறு வேலை கிடைக்காமையால் நான் ராணுவத்தில் சேர்ந்தேன்"

"சந்திரிக்கா குமாரனதுங்க ஜனாதிபதியாக இருந்த போது சண்டை மிகவும் உக்கிரமமாக இருந்தது. அடையாளம் காணப்படாத உடல்களையும், இராணுவ வீரர்களின் உடல் பாகங்களையும் புதைக்குமாறு எமக்கு கட்டளையிடப்பட்டது. அந்தச் சம்பவத்தின் பின்னர் விடுமுறையில் சென்ற நான் மீண்டும் பணிக்கு சமுகமளிக்கவில்லை. சுமார் 3 வருடங்களாக இராணுவத்தை விட்டு விலகி தலைமறைவாக இருந்த போது நான் மீண்டும் மீனவத் தொழிலுக்குச் சென்றேன்"

"ஆனால் மீண்டும் யுத்தம் ஆரம்பித்த பின்பு நான் தப்பியோடியமைக்காக கைது செய்யப்படலாம் எனப்பயந்தேன். இரவில் திடுக்குற்று நித்திரையில் இருந்து பயந்து எழுவேன். ஒரு தடவை இரவில் திடீரென வாகனம் ஒன்று வரும் சத்தம் கேட்டு வீட்டை விட்டுத் தப்பியோடினேன். பின்னர் இந்த மனஉளைச்சலில் இருந்து தப்புவதற்காக 6 மாதங்களிற்கு முன்னர் நான் மீண்டும் இணைந்து கொண்டேன். சில நிபந்தனைகளின் கீழ் இராணுவத்திலிருந்து விலக முடியும் (இராணுவத்திற்க்கான முழுச் செலவையும் மீளச்செலுத்துவதன் மூலம்). ஆனால் நாங்கள் ஏழைகள் என்பதினால் அவ்வளவு பெரிய தொகையை செலுத்த முடிவதில்லை."

தன் சக வீரர்கள் பற்றிக் குறிப்பிடுகையில், "அவர்களில் பெரும்பாலானவர்கள் வறிய விவசாயிகளின் பிள்ளைகள். அவர்கள் பிரதேசங்களில் வேறு வேலைகள் இல்லாமையே அவர்கள் இராணுவத்தில் இணைந்தமைக்கான காரணம். அவர்கள் இளையவர்கள், திருமணம் முடித்தவர்கள் மற்றும் திருமணமாகாதவர்கள், தங்களின் குடும்பங்களை கடுமையான பொருளாதார பிரச்சனைகளில் இருந்து மீட்கவும், வீடுகட்டிக் கொள்ளவும், நாளாந்த செலவுகளிற்காகவும் எதிர்பார்புடன் உள்ளவர்கள்"

"நானும் அவர்களில் ஒருவன். எனது பழைய வீடு இடிந்துவிழும் தறுவாயில் உள்ளது. எனக்கு இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர். எனது விடுமுறையின் போது புதிய வீட்டைக் கட்டத் தொடங்கினேன். ஆனால் என்னால் ஓலைகளால் கூரையை வேய மட்டுமே முடிந்தது. எனது அடுத்து விடுமுறையில் சுவர் வேலையை முடிக்க எண்ணியுள்ளேன்"

தனது இராணுவ வாழ்க்கை பற்றி விபரிக்கையில், "இராணுவம் பிரதேசங்களை கைப்பற்றிய பின்னர் அதில் பாதுகாப்பு கடமையிலீடுபடுவதே எங்கள் துணைப் பிரிவின் பணியாகும், நாங்கள் 2 மணி நேரம் ரோந்திலீடு படுவோம் பின்னர் 4 மணி நேரம் வேறு கடமைகளில் ஈடுபட்டு பின்னர் மீண்டும் 2 மணி நேரம் ரோந்திலீடு படுவோம். விடுமுறையின் பின சில படைவீரர்கள் பணிக்கு திரும்புவதில்லை. இதன் காரணமாக எங்களுக்கு வேலைப் பழு அதிகரிக்கும். நாங்கள் அவர்களின் வேலையையும் சேர்த்தே செய்ய வேண்டி ஏற்படும். நான் இம்முறை நான்கரை மாதங்கள் பணிக்கு செல்லாமலிருந்தேன்"

"எங்களைப் போன்ற சாதாரண சிப்பாய்களின் உணவு மிகவும் மட்டமானது. எங்கள் அதிகாரிகள் நல்ல உணவுகளை பெறுவார்கள். அவர்கள் தங்கள் உணவுச்சாலையில் குடிவகைகளை வாங்கிக் கொள்ள முடியும், ஆனால் எமக்கு ஒன்றும் இல்லை. உயர் அதிகாரிகள் தமக்கு அடுத்துள்ள சாதாரண அதிகாரிகளை அடிமை படுத்துவார்கள், இந்த அடிமை படுத்துதல் இவ்வாறே பதவி வழியே கீழ் மட்டம் வரை தொடர்ந்து சாதாரண சிப்பாய் வரை தொடரும். மேலும் சிப்பாய்களிலும் பழையவர்கள் புதியவரை அதிகாரம் செய்வர். இப்படித் தான் இராணுவம் உள்ளது. அதிகாரி ஒருவருடன் தர்க்கம் புரிவது தண்டனைக் குரிய குற்றம்"

தனது அண்மைய ராணுவ நடவடிக்கை குறித்து பேசும் போது, "இம்முறை அங்கே அதிகளவு இழப்பு ஏற்பட்டுள்ளது. புலிகள் கண்ணிவெடிகளை கைக்குண்டுகளுடன் இணைத்து ஒழுங்கு படுத்தி வைத்துள்ளனர், எனவே சுமார் 100 கண்ணிகள் வரை ஒரே நேரத்தில் வெடிக்கும். இராணுவத்தின் பல்குழல் ஏவுகணைகள் மற்றும் பாரிய ஆட்டிலரி தாக்குதல்கள் மூலம் மக்களிற்கும் அவர்களின் உடமைகளுக்கும் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது"

"எல்லா தமிழ் குடிமகனையும் புலிகளாகவே பார்க்கும் வகையில் (இராணுவம் மூலம்) ஆக்கப்பட்டிருக்கின்றோம். சாதாரண தமிழ் மக்கள் எங்களை விரும்புவதில்லை. நான் சொல்கிறேன் யுத்தம் வேண்டாம் என்று. யுத்தத்தினால் சாதாரண மக்களிற்கும் இராணுவத்தினருக்கும் இறப்பும், நிரந்தரமான அங்கயீனமுமே ஏற்படுகின்றது. இந்த யுத்தம் தேவையற்றது." என்றார் அவர்.

முலம்: http://www.wsws.org/articles/2006/oct2006/...i-o20_prn.shtml

மொழிபெயர்ப்பு: சாணக்கியன், www.yarl.com

  • தொடங்கியவர்

"சிங்கள இராணுவ சிப்பாயின் புலம்பல் - ஆங்கிலத்தில்" என்ற தலைப்பில் R4J4N ஆல் இணைக்கப்பட்டு பிறமொழி ஆக்கங்கள் பகுதிக்கு நகர்த்தப்பட்ட ஆங்கில கட்டுரை மீண்டும் தமிழில் இங்கே இணைக்கப்பட்டுள்ளது.

தற்பொழுது வறிய சிங்கள மக்கள் தவறான் பிரச்சாரத்தாலும் வழிநடத்தலாலும் இராணுவத் தீர்வை விரும்புகிறார்கள். மேற் சொல்லப்பட்ட 2 இராணுவ சிப்பாய்களும் அவர்களின் குடும்பத்தினரும் என்று ஆங்காங்கே கொஞ்சம் விளக்கம் ஏற்படுகிறது கள அனுபவத்தால். இவர்களை தளமாக வைத்து ஏனையவர்களிற்கு உண்மை சொல்லப்பட வேண்டும்.

மிதவாத போக்கு கொண்டவர்கள் தேரவாத பொளத்தத்தை தூக்கி வைத்திருப்பவர்கள் இறுதிவரை மாறப்போவது இல்லை மாத்திரம் அல்ல பிரிந்து தனியே சென்றா பிறகும் உரிமை கொண்டாடி மகாவம்சம் மாதிரி ஏதாவது புலம்பிக் கொண்டுதான் இருப்பார்கள். ஆனால் அவர்கள் சிறுபான்மையினர் என்றரீதியில் பெரும்பான்மையான சிங்கள மக்களை இந்த யுத்தம் அர்த்தம் அற்றது தமிழரை தனியே பிரந்து போக விட வேண்டும் என்ற நிலைப்பாட்டிற்கு கொண்டுவந்தாலே வெற்றதான் அது தான் தேவை.

பெரும்பான்மையான சிங்களமக்களிற்கு அந்த தெளிவு வந்தால் மிதவாதிகளிற்கு அரசியல் அதிகாரங்கள் ஜனநாயக முறைப்படி சென்றடையாது. கடந்த ஜநாதிபதி தேர்தலில் தமிழர்கள் தமது ஒட்டுமொத்த அரசியல் தெளிவை காட்டினார்கள் சிறீலங்காவின் ஜனாதிபதி தேர்தலில் பங்கொடுக்காது. ஆனால் சமாதான தேவன் ரணிலின் தரப்பினரும் தமிழரை கூறுபோட்டு புலிகளை பலவீனபடுத்த செய்த சாகசங்களை சொல்லி வாக்குகள் கேட்க வேண்டி அரசியல் விளிப்புணர்வு தான் சிங்கள மக்களிற்கு இருக்கு. இந்த நிலைமாறி தமிழீழத்தை ஏற்றுக் கொள்ளும் மனநிலையை சிங்கள வாக்காளர்களிடம் ஏற்படுத்த வேண்டும். வடக்கையும் கிழக்கையும் உரிமை கோருவதையும் அதை அரசியல் மேடையாக்குவதால் வாக்குகள் பெறமுடியாத நிலை வேண்டும் தமிழீழத்திற்கும் சிறீலங்காவிற்குமான நீண்டகால சமாதானத்திற்கு.

தற்போதைய நிலையில் ஆம் சிங்கள மக்கள் இராணுவ தீர்வை தான் விரும்புகிறார்கள். அதற்காக சிங்கள மக்களை வெறுப்பது தவறு. அது அழிவை கூட்டுமே அன்றி குறைக்காது.

சிங்கள மக்களை இனவெறியின் பிடியில் அமிழ்த்தி வைத்திருக்கும் பொவுத்த பேரின வாதத்தின் தூண்களான மகா சங்கமும், அதிகார பீடங்களும் அழிந்து போகாமல் அவர்கள் இந்த இனவாத நோயில் இருந்து விடு பட முடியாது.இந்த இனவாதம் என்கின்ற நோய் பீடித்திருக்கும் வரை அவர்களுக்கு தமிழர்கள் எதிரிகளாகவே தெரிவார்கள்.அது மட்டும் அவர்கள் இராணுவ ரீதியாக தமிழரை அழித்துவிடலாம் என்கின்ற கனவிலே தான் இருப்பார்கள்.என்று இந்த பேரின வாத்தைத் தாங்கி நிற்கும் இராணுவம் அழிகிறதோ அன்று தான் இந்த நோயில் இருந்து அவர்களுக்கும் விடுதலை பெறுவார்கள்.

  • தொடங்கியவர்

தென்னிலங்கையில் பணிபுரியும் எனது நண்பர் ஒருவர் தன் சொந்த அனுபவத்தை என்னுடன் இவ்வாறு பகிர்ந்து கொண்டார். அவர் கூறியதை அப்படியே தருகிறேன்.

எனது சக சிங்கள அலுவலர்களுடன் அரசியல் கதைக்காமல் தேனீர் அருந்துவது என்பது கடினமான விடயம். ஏற்கனவே தமிழ் தேசியம் பற்றி கதைக்கப்போய் எனக்கு புலி வால் என்ற பட்ட பெயர் வேறு.

அங்கே இருப்பவர்களில் எவருமே நேரடியாக யுத்தத்தில் சம்பந்தப்பட்டவர்களில்லை. பொருளாதாரரீதியில் மிகவும் உயர் மட்டத்திலிருந்தனர். ஆனால் அவர்களின் சில நன்பர்கள் இராணுவத்தில் உயர் பதவிகளில் இருந்தனர்.

சில காலமாக அவர்கள் வெற்றிப்பரவசம் மிக்கவர்களாக உரத்த குரலில் நீண்ட நேரமாக ராணுவத்தினரது வீரப் பிரதாபங்களையும் மகிந்தவின் அரசியல் காய்நகர்த்தல்களையும் புகழ்ந்து பேசிக் கொண்டிருந்தனர். நான் எவ்வளவோ தவிர்த்தும் என்னைத் தேடிவந்து தங்கள் வெற்றிகள் பற்றி பெருமையடித்துக் கொண்டனர்.

முகமாலைச் சமர் மற்றும் அதற்குப் பின்னர் இடம்பெற்ற சம்பவங்களால் அங்கே படிப்படியான ஒரு மாற்றம் ஏற்பட்டது. முகத்தை தொங்கப்போட்டுக் கொண்டு அமைதி காத்தனர். என்னுடன் பேசுவதையே தவிர்த்துக் கொண்டனர். முன்னர் என்னை துரத்தி துரத்தி அவர்கள் அடித்த கொட்டத்திற்கு பதில் கொடுக்க வேண்டும் என்று கருதிக் கொண்டேன். அவர்களாக ஆரம்பிக்காமல் நானாக வலியப் போவதில்லை என்பதிலும் உறுதியாக இருந்தேன்.

இறுதியில் ஒருவர் கிடைத்தார். அவர் முன்னைய நாட்களில் தான் ஒரு நடுநிலமைவாதி போல் பேசியவர். அவர் ஒரு JVP அனுதாபியும் கூட. முன்பு அவர் கூறினார் "தெற்கு இளைஞர்களும் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.