Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கறுப்பி ரசித்த நகைச்சுவை

Featured Replies

மாப்பு தன்னுடைய தோட்டக்காரனைப் பார்த்து “ஏன் இங்கே நிற்கிறாய், செடிகளுக்கு நீர் பாய்ச்சுவது தானே?

வேலைக்காரன்: மழை பெய்கிறதே! மாப்பு: அதனால் என்ன? குடை எடுத்துக் கொண்டு போ.

வேலைக்காரன்: :unsure::lol:

-------------------------------------------

மாப்பு சொன்னது சைவனின் 2 இன் வண் குடையை.

  • Replies 265
  • Views 33.6k
  • Created
  • Last Reply

அதனால் இன்றிலிருந்து நம் தலை எல்லோராலும் இம்சை தலைகேசி என்று அழைக்கபடுவார்

:angry:

:lol:

ஒருவர் புளோரிடாவில் கடற்கரையில் நடந்துபோய்கொண்டிருந்தார் அப்பொழுது அவருடைய காலில் ஒரு விளக்குதட்டுப்பட்டது அதனைகையிலெடுத்து உரசிப்பார்த்தார் அவர்முன்னே ஒரு புதம் தோன்றியது புதத்தைகண்டதும் அவர்அதிர்ந்து போனார் எனினும் சமாளித்துகொண்டு கேட்டார் யார் நீ

புதம்சொன்னது ஐயா நீங்களதானே என்னைஅழைத்தீர்கள்

நான் அழைத்தேனா?

ஆமாம் உங்கள்கையிலிருக்கும் விளக்கு யாரிடம் இருக்கிறதோ அவருக்கு நான் அடிமை விளக்கை நீங்கள் தேய்தால் உங்கள்முன்வருவேன் விளக்கு தற்பொழுது உங்களிடம் இருக்கிறது எனவே தற்பொழுது நான் உங்கள் அடிமை தற்பொழுது உங்கழுக்கு என்ன வேணும் என்று கேட்டது

ஓ அப்படியா என்றுவிட்டு தன்னுடைய மனதிலுள்ள நீண்டநாள் ஆசையை சொன்னார்

ஹவாய் தீவுக்கு நான் போகவேணும் ஆனால் பிளேனில் போக விருப்பம் இல்லை காரில் போகவேண்டும் எனவே இங்கிருந்த ஹவாய்க்கு போவதற்கு றோடு அமைத்துவிடுஎன்றார்

புதம் சொன்னது ஐயா றோடு போடுவதானால் மிகவும் சிரமம் ஐயா வேற ஏதாவது கேழுங்கள் என்றது

ஓஅப்படியா என்றுவிட்டு யோசித்தார் பின்னர் கேட்டார்

எனக்கு 4 மனைவிமார் ஆனாலும் இந்த பெண்களின் மனசை புரிந்துகொள்ளமுடியாமலிக்கி

ஒரு இளைஞன் ஒரு பெண்ணைக் காதலித்துக் கொண்டிருந்தான். தன் காதலியை புதுமையாகத் தன் தாயிடம் அறிமுகம் செய்ய விரும்பிய அவன் தாயிடம்

''அம்மா நான் ஒரு பெண்ணை விரும்புகிறேன். நான் அவளை உங்களிடம் அறிமுகம் செய்யப் போகிறேன். ஆனால் ஒரு நிபந்தனை. நான் மூன்று பெண்களை ஒரேயடியாகக் கூட்டிவருவேன். அவர்களுடன் ஒரு மணிநேரம் உரையாடிய பின் என்னுடைய காதலி யாரென்பதை நீங்கள் தான் கண்டுபிடிக்க வேண்டும்''

என்று சொன்னான்

தாயாரும் சம்மதம் தெரிவிக்கவே மூன்று பெண்களைக் கூட்டி வந்தான்

ஒரு மணிநேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு அவர்கள் விடைபெற்றுப் போனபின் அம்மா நீ என்னுடைய காதலியைக் கண்டுபிடித்து விட்டீர்களா? என்று கேட்டான்

தாயார் சற்றும் தாமதிக்காமல் சரியாக அவன் காதலி யாரென்று சொல்லவே ஆச்சரியப்பட்டவனாய் எப்படியம்மா சரியாகக் கண்டுபிடித்தீர்கள் என்று கேட்க

தாயார் சொன்ன பதில்

'' வந்த மூன்று பெண்களிலும் அந்தச் பெண்ணைப் பார்க்கப் பார்க்கத் தான் எனக்குக் கோபம் கோபமாக வந்தது.

அதனால் அவள் தான் என்னுடைய மருமகள் என்று உறுதியாகத் தெரிந்து கொண்டேன்''

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு ஊரில் ஒரு சாமியார், அந்த ஊரில் உள்ள எல்லாஆண்களையும் அழைத்து , பெண்டாட்டி பேச்சை கேட்பவர்கள் எல்லாரும் ஒரு பக்கம் நில்லுங்கள் என்றார். ஒரே ஒருவனை தவிர அனைவரும் ஒரு பக்கம் போய் விட்டனர் சாமியாருக்கு அந்த தனியாக நின்றவணை பார்த்து கொஞ்சம் சந்தோசம். அவனை கூப்பிட்டு விசாரித்தார் அதற்கு அவன் என் மனைவி கூட்டத்தோடு எப்போதும் சேர்த்து இருக்க கூடாது என சொல்லி உள்ளாள் என்றான்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இரண்டு இளம்பெண்கள் கல்லூரி விடுதியில் ஒரே அறையில் தங்கியிருந்தனர். அன்று காலை தொலைபேசி மணி அடித்தது. இதனால் விழித்து கொண்ட இளம் பெண்களில் ஒருவர் தொலை பேசியை எடுத்து பேசினார்.

மறுமுனையில் பேசிய ஆண், அவரை நலம் விசாரித்தார். அந்த பெண், தனது நலத்தை தெரிவித்து விட்டு, நீங்கள்யார் பேசுகிறீர்கள்? என்று கேட்டார்.

அதற்கு அந்த ஆண் குரல், நல்ல வினோதம். தந்தையின் குரலை கூட கண்டுபிடிக்கத்தெரியாத மகளாக இருக்கிறாயே என்றது.

அதற்கு இளம்பெண், அதைவிட வினோதம் மகளின் குரலை கூட தெரியாத தந்தையாக இருக்கிறீர்களே. நான் உங்கள் மகளின் தோழி பேசுகிறேன். அவள் இன்னமும் தூங்கி கொண்டிருக்கிறாள் என்று பதிலளித்தாள்.

அதற்கு இளம்பெண், அதைவிட வினோதம் மகளின் குரலை கூட தெரியாத தந்தையாக இருக்கிறீர்களே. நான் உங்கள் மகளின் தோழி பேசுகிறேன். அவள் இன்னமும் தூங்கி கொண்டிருக்கிறாள் என்று பதிலளித்தாள்.

இது உங்க சொந்த கதையோ

:P

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஓமுங்கோ சொந்தக்கதைதான்.

அதில் வந்த மற்ற பெண்ணும் நீங்கதான்.

ஒரு மனிதன் தனது மனைவியால் மிகவும் கஸ்டப் பட்டான். அவர் அவனுக்கு அடங்காமல் இவனை ஆட்டுவித்தாள்! இந்த உலகத்தில் பெண்களே இல்லாத இடத்திற்குப் போய் சந்தோஷமாக இருக்க போகின்ரேன். நான் பட்டது போன்ற வேதனையை என்மகனும் பட கூடாது என்று நினைத்து தனது ஒரே மகனையும் தன்னோடு எடுத்துக் கொண்டு போய்....

மனிதர்களே இல்லாத ஓர் தீவில் மகனுன் வாழ்த்து வந்தான். வருடங்கள் பல சென்றன. ஒரு நாள் ஒரு சிறிய கப்பல் அந்த தீவிற்கு வந்தது. அதிலே ஒரு குடும்பம் வந்திறங்கியது அதிலே ஓர் இளம்மங்கை ஒருத்தியும் இருந்தாள். தகப்பனும் மகனும் அங்கே (ஒடைகள் இல்லாது) வந்த போது அந்த மங்கை இவர்களைக் கண்டதும் பயத்தில் ஓ....வென்று கத்தியபடி ஓடத்தொடங்கினாள்.

அவள் ஓடிய சிறிது நேரத்தில் அந்த கப்பலும் இந்த தீவினை விட்டு போய்விட்டது. அப்போது மகன் தந்தையைப் பார்த்து கேட்டான்.

" நாங்கள் கண்டது என்ன அப்பா?"

"ஓ....அதுவா அது பிசாசு! அந்தப் பிசாசு எங்களைக் கொன்று இரத்ததைக் குடிக்கும்"

ஆ! அப்படியா என்று மகனும் பயத்துடன் கேட்டான்.

இரவு பாதி துக்கத்தில் மகன் சொன்னான்.

"அப்பா, அப்பா அந்த பிசாசு வடிவா இருந்தது என?

அப்பா!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

ஓமுங்கோ சொந்தக்கதைதான்.

அதில் வந்த மற்ற பெண்ணும் நீங்கதான்.

ஆ ஆ ஆ ஆ ஆ ஆ

:rolleyes::o

அப்புறம் டாக்டர்!!!!! எல்லாம் நன்னா போயிண்டுருக்கோனோ?

என்ன நன்னா போயிண்டிருக்கோனோ?

பேஷண்டுகளோட உயிர்தான்....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பல்வலின்னு ஒருத்தர் நம்ம குமாரசாமி சார் எண்டு வைச்சுக் கொள்ளுங்களேன். டாக்டர் கிட்டே போனார். டாக்டர் ஆ காட்டுங்கன்னாரு. காட்டினா பிறகு இன்னும் கொஞ்சம் ஆ காட்டுங்கன்னாரு. இன்னும் கொஞ்சம் பெரிசா... வாயைத் திறங்கன்னார்.

உடனே குமாரசாமி டாக்டர் பல்லை வெளியே இருந்து பிடுங்கப் போறீங்களா, வாய்க்கு உள்ளே இறங்கிபிடுங்கப் போறீங்களா -ன்னு கேட்டார்.

பல்லைப் பிடுங்கித்தான் ஆகணும். வலிக்காம இருக்க மயக்க மருந்து ஊசி போடறேன்-னாரு டாக்டர். அதெல்லாம் வேண்டாம் டாக்டர். எனக்கு தண்ணி அடிக்கிற பழக்கம் உண்டு. அப்புறம் நிறையத் தைரியம் வந்திடும். நீங்க பல்லைப் பிடுங்கிக்கலாம் அப்படின்னார். டாக்டர் அவர் வழியிலேயே விட்டுட்டார்.

குமாரசாமி வெளியே போய் தண்ணி அடிச்சார்.

என்னைக்கும் ஆவ் தான் அடிப்பார். அன்னைக்கு புல்லா அடிச்சார். தள்ளாடிக்கிட்டே வந்து நாற்காலியிலே உட்கார்ந்தார். தைரியம் வந்திடுச்சான்னார் டாக்டர், ஏகப்பட்ட தைரியம் வந்துடுச்சி டாக்டர் அப்படின்னு போதையிலே உளறினார்.

ஏகப்பட்ட தைரியம்னா ? எந்தப் பய என் பல்லுல கை வைக்கிறதுன்னு பார்க்கிறேன் அப்படின்னார் .டாக்டர் ஆடிப்போயிட்டார்.

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒருவர் : என்னாங்க இது கல்யாணத்துக்கு வந்த எல்லாரையுமே ஒரேயொரு

கோப்பையில சாப்பிடச் சொல்லுறாங்களே..

மற்றவர் : என்ன செய்ய சாப்பாட்டுக் கோப்பையை வாங்கி வாங்கன்னா மாமனாரு சற்லைற் கோப்பையை வாங்கி வந்துட்டாரே.

02

ஒருவர் : என்னாங்க பெரியவர் கிறடிட்காட் மோசடியில மாட்டியிட்டாராமே ?

மற்றவர் : பாவம்.. வயசானவரு கிரடிட்காட் என்னு நெனச்சு சற்லைற் தொலைக்காட்சி பாக்கிற காட்டை பாங் மொசீனில போட்டுட்டாரு..

03

கிரிக்கட் ரசிகர் : என்னங்க இது... சுழல் பந்துவீச்சை.. சுழல் குண்டுவீச்சுன்னு வர்ணிக்கிறாரே அறிவிப்பாளர்..

மற்றவர் : மன்னிச்சுக்கிங்க.. செய்திப் பிரிவில இருந்தவரை மாற்றி விளையாட்டு பிரிவுக்கு அனுப்பியிட்டாங்க..

04

ஒருவர் : குழந்தை பிறந்திருக்கிறது மறுபிறவிதான்.. போன பிறவியிலேயும் இங்கதான் பிறந்திருக்குன்னு எப்பிடி அவ்வளவு உறுதியா சொல்லுறீங்க..

மற்றவர் : அட... முற்பிறவியில சாகிற அன்னைக்கு எத்தினையாவது எபிசொட்ஸ் பாத்துட்டு செத்தேன்னு கரொக்டா சொல்லுதே.. இதைவிட வேறென்ன ஆதாரம் வேணும்?

05

ஒருவர் : எதுக்கு செய்தி வாசிக்கிறவரு பொறுக்க முடியாது விட்ட எழுத்தில இருந்தே யுத்தத்தை ஆரம்பிக்கப் போறாங்கன்னு உறுதியா சொல்லுறாரு..

மற்றவர் : அவரு முந்தி பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சி நடத்தியிட்டிருந்தவரு..

06

ஒருவர் : எதுக்காக தொலைக்காட்சியை போஸ்ட் ஆபிசிலே வைச்சு ஒளிபரப்புறாங்க..?

மற்றவர் : அனுப்புற நிகழ்ச்சிகள் எல்லாமே போஸ்டில தொலையுறதால போஸ்ட் ஆபிசுக்கே வந்துட்டாங்க..

07

ஒருவர் : எதுக்கு நிகழ்ச்சி முன்னோட்டம்னு போடுறாங்க.. ?

மற்றவர் : பாக்கிறவங்க முன்னாடியே எழுந்து ஓடிப்போயிடுங்கன்னு சொல்லாமல் சொல்லுறாங்கப்பா..

08

ஒருவர் : கல்யாண வீட்டுக்கு வந்தவங்க ஒருத்தர் முகத்தை மற்றவங்க பாக்காமலே திரும்பித் திரும்பி எங்கேயோ பாத்துக்கிட்டு இருக்காங்களே என்னாச்சு ?

மற்றவர் : இந்தப்பக்கமா திரும்பியிருக்கிறவங்க மடார் ரீவி ரசிகர்கள், அவங்கள பாக்காம அந்தப்பக்கமா திரும்பி இருக்கிறவங்க குடார் ரீவி ரசிகர்கள் எப்படிப் பாப்பாங்க.. ?

09

ஒருவர் : தொலைக்காட்சி பாக்கிறவங்க எல்லாருமே எதுக்காக ஒரே நேரத்துpல பூதக்கண்ணாடிய மடியில இருந்து எடுக்கிறாங்க.. ?

மற்றவர் : திரைப்படம் ஆரம்பமாகப் போவுது... கிளியரா இருக்கணுமில்லே..

10

ஒருவர் : என்னாங்க அந்த தொலைக்காட்சி ஊமைபோல சத்தமில்லாம ஓடிகிட்டிருக்கு..

மற்றவர் : அது காது கேளாதவங்களுக்கான விசேட சேவைங்க..

11

ஒருவர் : அறிவிப்பாளரே முதலாவது பாட்டுக்கு நாலுபேருதான் வாக்களிச்சிருக்காங்க.. நீங்க நாலாயிரம் பேருண்ணு சொல்லுறீங்களே..

அறிவிப்பாளர் : இது சீரோ சீரோ சீரோ ரீவீ எப்பவுமே மூணு பூஜ்ஜியத்த அருகில போட்டுக்குவோம்..

12

ஒருவர் : அழுவுறதுக்கே ஆளில்லாம பிணம் நடு வீட்ல கிடக்குதே.. வீட்டுக்காரங்க எங்கையா.

மற்றவர் : சாரி... தொடர் நாடகம் பாக்கப் போயிருக்காங்க.. ஜஸ்ட் அரை மணி நேரந்தான்.. மறுபடியும் வந்து அழுகையை ஆரம்பிச்சிடுவாங்க..

13

ஒருவர் : பொண்ணு மாப்பிள எல்லாம் ஒரே ஜாதிதான்.. அப்புறமா எதுக்கு பெத்தவங்கள வராம விட்டாங்க ?

மற்றவர் : பெண்ணு அந்த ரீ.வீ குறூப் மாப்பிள இந்த ரீ.வீ குறூப் பெத்தவங்க எப்படி வருவாங்க ?

14

ஒருவர் : என்னங்க இது அந்தக் கிரடிட் நிறுவனத்தில மட்டும் ஜனங்கள்ளாம் கடன் கேட்டு வரிசையில நிக்கிறாங்க..

மற்றவர் : அது எபிசொட் கிரடிட் நிறுவனம் வாங்கின கடன எப்ப கொடுத்து முடிக்கனும்னு அவசியமில்லே நீட்டிக்கிட்டே போகாலாம்..

வாசித்து ரசித்தது - அலைகள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பல்வலின்னு ஒருத்தர் நம்ம குமாரசாமி சார் எண்டு வைச்சுக் கொள்ளுங்களேன். டாக்டர் கிட்டே போனார். டாக்டர் ஆ காட்டுங்கன்னாரு. காட்டினா பிறகு இன்னும் கொஞ்சம் ஆ காட்டுங்கன்னாரு. இன்னும் கொஞ்சம் பெரிசா... வாயைத் திறங்கன்னார்.

உடனே குமாரசாமி டாக்டர் பல்லை வெளியே இருந்து பிடுங்கப் போறீங்களா, வாய்க்கு உள்ளே இறங்கிபிடுங்கப் போறீங்களா -ன்னு கேட்டார்.

பல்லைப் பிடுங்கித்தான் ஆகணும். வலிக்காம இருக்க மயக்க மருந்து ஊசி போடறேன்-னாரு டாக்டர். அதெல்லாம் வேண்டாம் டாக்டர். எனக்கு தண்ணி அடிக்கிற பழக்கம் உண்டு. அப்புறம் நிறையத் தைரியம் வந்திடும். நீங்க பல்லைப் பிடுங்கிக்கலாம் அப்படின்னார். டாக்டர் அவர் வழியிலேயே விட்டுட்டார்.

குமாரசாமி வெளியே போய் தண்ணி அடிச்சார்.

என்னைக்கும் ஆவ் தான் அடிப்பார். அன்னைக்கு புல்லா அடிச்சார். தள்ளாடிக்கிட்டே வந்து நாற்காலியிலே உட்கார்ந்தார். தைரியம் வந்திடுச்சான்னார் டாக்டர், ஏகப்பட்ட தைரியம் வந்துடுச்சி டாக்டர் அப்படின்னு போதையிலே உளறினார்.

ஏகப்பட்ட தைரியம்னா ? எந்தப் பய என் பல்லுல கை வைக்கிறதுன்னு பார்க்கிறேன் அப்படின்னார் .டாக்டர் ஆடிப்போயிட்டார்.

:angry: :angry: :angry: :angry: :angry:

:angry: :angry: :angry: :angry: :angry:

தாத்தா உண்மையை சொன்னா கோபம் வரகூடாது

:rolleyes:

ரெட்டை வாழைப்பழத்தை வாங்கிட்டு வந்து சர்ஜனிடம்

தந்திருக்கக் கூடாது..."

"ஏன்?"

"சர்ஜரி பண்ணி ரெண்டையும் தனித் தனியா பிரிக்கப்

போறாராம்..தியேட்டர் ரெடி பண்ணச் சொல்றார்..!"

"சரவணபவன் ஓட்டல் பார்சல் செக்ஷன்ல வேலை

செய்றவர் நிறைய ஜோக் அடிக்கிறார்..."

"அப்படின்னா கெட்டி சட்னி வச்சு ரெண்டு ஜோக்கைப்

பார்சல் கட்டி வாங்கிட்டு வா..."

"புல்லானாலும் புருசன்னு என் பொஞ்சாதிகிட்ட சொன்னது

தப்பு.."

"ஏன்? என்ன ஆச்சு?"

"வாயால திட்டிட்டு இருந்தவ இப்ப அரிவாளைத் தூக்கிட்டு

நிக்கறா.."

டாக்டர் : தூக்கத்திலே நடக்கிற வியாதிக்கு மருந்து கொடுத்தேனே... இப்போ எப்படி இருக்கு?

நோயாளி: : பரவாயில்லை. குணமாயிட்டுது டாக்டர். இப்போ தூக்கத்துல நடக்கிறதில்லே; ஸ்கூட்டரை எடுத்து ஒரு ரவுண்டு போயிட்டு வந்துடறேன்!

''என்னய்யா இது சைக்கிளில் முன் சீட்டில் உள்ள குழந்தையை இப்படியா கிள்ளிக் கிள்ளி அழவைப்பது?''

''என்னங்க பண்றது. என் சைக்கிளில் பெல் இல்லையே!''

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

15

கணவன்; : என்ன மீன் கொழம்பு வழமையை விட 20 வீதம் அதிகமா உறைப்பா இருக்கே?

மனைவி : ஆமா.. இப்ப ஒரு பக்கட் கறிப்பவுடர் வாங்கினா 20 வீதம் அதிகமா கொடுக்கிறாங்க..

16

ஒருவர் : எதுக்காக சுவத்தில ஒட்டியிருக்கிற பெண்ணு படத்தைப் பாத்து ஐ லவ் யூ ஐ லவ் யூ என்னு சொல்லுறாரு ?

மற்றவர் : அவர் ஒரு நேயர் விருப்பம் ரசிகர்.. அறிவிப்பாளர் பிம்பத்தைப் பார்த்தே ஐ..லவ்..யூ சொல்லிப் பழகினவரு..

17

ஒருவர் : என்னாங்க ஜோதிடர் எல்லா ராசிக்காருக்குமே இந்த ஆண்டு அறுவடை அமோகமா இருக்கும்னு சாதகம் சொல்லுறாரே..

மற்றவர் : ஆமா.. அவரு தொலைக்காட்சிக்கு சாதகமா பாக்கிறாரு..

18

மனைவி : எதுக்கு தொலைக்காட்சிய பாத்து கண்ணக் கண்ண கூசுறீங்க.. ?

கணவன் : அதில சூரியன் படம் போட்டிருக்காங்களே அதுதான்.

19

நீதிபதி : குற்றவாளி பல கிரடிட் காட்களை வைத்திருக்கவில்லை என்று எப்படி அவ்வளவு உறுதியாகக் கூறுகிறீர் ?

வக்கீல் : எனது கட்சிக்காரர் பல தொலைக்காட்சிகளின் நேயர்.. அவரிடமிருந்த தொலைக்காட்சி அட்டைகளை கிரடிட் காட்டாக நினைத்து போலீசார் தவறு செய்துவிட்டார்கள்.

20

ஒருவர் : காலையில பட்டினி கிடக்கிறவங்களுக்காக கண்ணீர் விட்டு பிரசங்கம் பண்ணினாரே அதே ஆள் இப்ப சமையல் நிகழ்ச்சிக்கு வந்திருக்காரே..

மற்றவர் : பசியில் இருப்பவங்களுக்குத்தான் ருசி தெரியாது.. அதுதான்.. சமைக்க வந்திருக்காரு..

21

நேயர் : உங்க தொலைக்காட்சி இணைப்பைப் பெற நாம என்ன செய்யணும் ?

மற்றவர் : மற்றத் தொலைக்காட்சியின் இணைப்பை அறுத்துக்கணும்..

22

ஒருவர் : எதுக்கு நிகழ்ச்சியில அடிக்கடி பிரேக் கொடுக்கிறாங்க.. ?

மற்றவர் : ஸ்பீட் கொன்ரோலர் தூரத்தில நிக்கிறாரு போல..

23

திருடன் 01 : அதந்தத் தொலைக்காட்சியில மிளகாய்த் தூள் விளம்பரத்துக்கு ஆடின பொண்ணுங்க இங்க அதே ஆட்டத்த தங்க நகை விளம்பரத்துக்கு ஆடுறாங்களே..?

திருடன் 02 : மிளகாய்தூள வீசினா பணம் கொடுக்காமலே தங்க நகையை எடுத்துக்கலாமின்னு சொல்லாம சொல்லுறாங்க..

24

ஒருவர் : நிகழ்ச்சி நடக்கும் போது நடுவில் முகமூடித் திருடன் வந்திருக்கிறானே எதுக்கு ?

மற்றவர் : நடக்கிறது தங்க வேட்டைன்னு அறிவிச்சது தப்பாப் போச்சு.

25

ஒருவர் : எதுக்காக உங்க தொலைக்காட்சியில தியாகராஜ பாகவதர் பாடல்களையே ஒளிபரப்பு செய்யுறாங்க.. ?

மற்றவர் : நடத்துறவங்கங்கள தொடர்ந்து மாத்தாமலே வைச்சிருக்காங்க என்ன செய்ய...

26

ஒருவர் : எதுக்கு பணம் வாங்காமலே ஒளிபரப்பு செய்யிறாங்க..

மற்றவர் : அவங்க அடுத்த அலைவரிசையை பாக்கிறவங்களுக்கு பணம் கொடுக்கப் போறாங்க, அதுக்காக இப்பவே இலவசமா விடுறாங்க..

27

ஒருவர் : எதுக்காக காட்டை புதுப்பியுங்க காட்டை புதுப்பியுங்கன்னு அறிவிப்பாளர் கத்துறாரு..

மற்றவர் : காட்டை புதுசா வைச்சிருந்தா அவங்க நிகழ்ச்சியை பாக்கிறவங்களுக்கு காட்அற்றாக் வராம இருக்கணும்னு நினக்கிறாங்கபோல..

28

பேச்சாளர் : நடுவர் அவர்களே ! நமது தொலைக்காட்சிகளில் வருதெல்லாமே இந்தியாவின் நிகழ்ச்சிகள் அப்படியிருக்க நாம் அவற்றை ஈழத்தமிழ் தொலைக்காட்சிகள் என்று சொல்வது சரியல்ல என்று தீர்ப்பளிக்கும்படி எங்கள் அணியின் சார்பில் கேட்கிறேன்.

நடுவர் : அப்பிடியில்லே.. ஈழத் தமிழருக்கு எது வேணுமோ அதைக் கொடுங்கிறாங்க.. அதனால எல்லாமே ஈழத் தமிழ் தொலைக்காட்சிகள்தான்... அதுமட்டுமில்லே தமிழ்நாட்டில் இருக்கிற அத்தனை தொலைக்காட்சிகளும் ஈழத் தமிழ் தொலைக்காட்சிகளே என்று மங்களகரமான தீர்ப்பளித்து பட்டிமன்றத்தை நிறைவு செய்கிறேன். என் தீர்ப்பை எல்லாரும் கைதட்டி ஏத்துக்குவீங்க என்னு நம்புறேன்.

29

ஒருவர் : என்னாங்க இது புத்துல இருந்து வெளியவந்த முனிவரு பாஞ்சாலி சின்னத்திரை தொடர் முடிஞ்சுதான்னு கேக்கிறாரே..

மற்றவர் : பேசாம ஒரு லட்சத்து ஐம்பாதியிரத்து முன்நூற்றி ஏழாவது எபிசொட்ஸ் போய்க்கிட்டிருக்கின்னு சொல்லியிடுறது தானே.. ?

வாசித்து ரசித்தது - அலைகள்

ஒருவர்: குடித்து, குடித்தே உன் அப்பா போய் சேர்ந்துவிட்டார். போகும்போது ஏதாவது வச்சிட்டு போயிருக்கிறாரா?

பையன்: ம்ஹூம். ஒரு சொட்டுக்கூட வைக்கவில்லை.

------

ஒருவன்: எங்கப்பா ரொம்ப விவரமானவரு.

இன்னொருவன்: எப்படி சொல்ற?

ஒருவன்: எங்கப்பா கடையில் ஒரு தீப்பெட்டி வாங்கினால் கூட அதை எண்ணிப்பார்த்து தான் வாங்குவார்.

இன்னொருவன்: இது பரவாயில்லை. ஆனால் எங்கப்பா ஒவ்வொரு குச்சியும் எரியுதான்னு உரசி பார்த்துதான் வாங்குவாரு.

ஹி ஹி ஹி

  • 4 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆணின் மூளை 15000பவுண்ஸ்

கணவனும் மனைவியும் டாக்டரிடம் போனர்கள். தங்கள் பிரச்சனையை சொல்லிவிட்டு மூளை வேண்டும் எண்டு கேட்டார்கள்.

டொக்டரும் நன்றாக சோதித்து விட்டு சொன்னார். பெண்ணின் மூளை எண்டால் 3000 பவுண்ஸ்க்கும், ஆணின் மூளை எண்டால் 15000 பவுண்ஸ்க்கும் தருவதாக சொன்னார்.

பெண்ணின் மூளையை விட ஆணின் மூளை சற்று அதிகம் என்றதும் கணவனுக்கு உள்ளுற சந்தோசம். எப்படியும் பெண்ணைவிட ஆண் உசத்திதான் என்ற எண்ணம் மேலிட சற்றே நிமிர்ந்து சேட் காலரை இழுத்துவிட்டுக் கொண்டார்.

மனைவிதான் கேட்டாள் ஏன் டாக்டர் ஆணின் மூளை 15000 பவுண்ஸ். அது என்ன ஆணின் மூளை மட்டும் இவ்வளவு விலையா இருக்கே எண்டு.

டாக்டர் சொன்னார்.

ஓ.............அதுவா... பெண்கள் அதிகம் மூளையை தேவையான இடத்துக்கு ஏற்ற மாதிரி பாவித்து கொள்வார்கள். எதையும் உள்வாங்கி வெளிப்படுத்தும் சக்தி அதிகம். அதன் பவர் இயற்கையாகவே இருக்குது. அதனால தான் பெண்களின் மூளை 3000 பவுண்ஸ்.

ஆண்கள் அதிகம் பாவிக்காததால் மூளைஅப்படியே இருக்கிறது. அதனால் தான் 15000 பவுண்ஸ். செயற்கையாக அதை பொறுத்திதான் பயனை பெறனும். எண்டார்

இது கேட்டு ரசித்த நகைச்சுவைதான். அதை கொஞ்சம் வேறுபடுத்தி எழுதியிருக்கேன்.

அதற்காக ஆண்கள் எல்லாம் ஆஆ.... எண்டு போர்கொடி தூக்கி இதை உண்மையாக்கிடாதீங்கோ

ஹீ ஹீ நெடுக்ஸ் வரப்போறார் வரிஞ்சு கட்டிக்கிட்டு

எங்கே இன்னும் காணவில்லை அவரை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எங்கே இன்னும் காணவில்லை அவரை

அவரின்ட மனிசி இதுக்கு எதிரா அறிக்கை விடுங்கோ என்டு இன்னும் அவருக்கு சொல்லவில்லை. சொன்னவுடன் வந்து விடுவார் :P

அவரின்ட மனிசி இதுக்கு எதிரா அறிக்கை விடுங்கோ என்டு இன்னும் அவருக்கு சொல்லவில்லை. சொன்னவுடன் வந்து விடுவார் :P

மனிசிக்கு எதிரா அறிக்கை விட்டா அவர் எங்களுக்கு தான் சப்போட் பண்ணுவார்

:huh:

ஆணின் மூளை 15000பவுண்ஸ்

பொண் புத்தி பின் புத்தி என்று சொல்லித்தான் நான் கோள்விப் பட்டு இருக்கிறேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.