Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நியூசீலாந்து எதிர் ஸ்ரீலங்கா டெஸ்ட்& ஒரு நாள் போட்டி தொடர்

Featured Replies

நியூசிலாந்து அணிக்கெதிராக 2 டெஸ்ட் மற்றும் 7 ஒருநாள் போட்டிகளில் கலந்துகொள்ள  இலங்கை கிரிக்கெட் அணி  நியூசிலாந்து  சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளது.

 

 

                                                287fxxl.jpg

 

Edited by நவீனன்

  • Replies 96
  • Views 3.7k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

நியூசிலாந்து புறப்பட்டது இலங்கை அணி
 

இலங்கை கிரிக்கெட் அணி இன்று காலை நியூசிலாந்து நோக்கி பயணமானது.

 

D4W_1216x-780x455_zpsf724233d.jpg

நியூசிலாந்து அணிக்கெதிராக 2 டெஸ்ட் மற்றும் 7 ஒருநாள் போட்டிகளில் கலந்துகொள்வதற்காகவே இலங்கை அணி அங்கு கிரிக்கெட் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டுள்ளது.

இந்நிலையில் இரு அணிகளுக்குமிடையிலான பயிற்சிப் போட்டி எதிர்வரும் 21 ஆம் திகதி குயின்ஸ்டவுணில் இடம்பெறவுள்ளது.

இதையடுத்து இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி கிறைஸ்ட்சேர்ச்சில் எதிர்வரும் 26 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

D3S0558x-780x519_zps9ae8e8c3.jpg

 

D4W_1203x-780x520_zpsef329dec.jpg

 

D4W_1228x-780x519_zps43c6991d.jpg

 

D4W_1216x-780x455_zpsf724233d.jpg

 

D4W_1288x-780x520_zpsbd4dc0e8.jpg

http://www.virakesari.lk/articles/2014/12/18/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF

  • தொடங்கியவர்

நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் மலிங்க களமிறங்குவார் : மாவன்
 

 

நியூசிலாந்து அணிக்கெதிராக இடம்பெறவுள்ள ஒருநாள் போட்டித் தொடரில் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்க களமிறங்குவார் என இலங்கை அணியின் பயிற்சியாளர் மாவன் அத்தப்பத்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து அத்தப்பத்து மேலும் தெரிவிக்கையில்,

இடது கணுக்காலில் ஏற்பட்ட பாதிப்பால் மலிங்கவுக்கு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. தற்பொழுது அவர் ஓய்வு பெற்று வருகிறார். இதன் காரணமாக இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு எதிராக இலங்கை அணி விளையாடிய தொடர்களிலும் விளையாடவில்லை.

 

இந்நிலையில் மலிங்க மீண்டும் இலங்கை அணியில் இணையவுள்ளார். தற்போது மலிங்க ஓய்வு பெற்று வருகிறார். எல்லாம் திட்டமிட்டபடி நடந்து வருகிறது.

இதனையடுத்து நியூசிலாந்து அணிக்கு எதிராக இடம்பெறவுள்ள இறுதி 2 ஒருநாள் போட்டிகளில் மட்டும் அவர் விளையாடவுள்ளார்.

மலிங்க, நுவன் குலசேகர ஆகிய இருவரும் உலகக்கிண்ண அணியில் இருப்பது அணிக்கு பலம் சேர்க்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.

 

http://www.virakesari.lk/articles/2014/12/23/%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%95%E0%AE%B3%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A9%E0%AF%8D

 

  • தொடங்கியவர்

'நியூஸிலாந்துக்கு எதிரான கடைசி இரண்டு போட்டிகளில் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க விளையாடுவார்'
 

 

கணுக்­காலில் சத்­திர சிகிச்­சைக்­குள்­ளாகி குண­ம­டைந்து வரும் வேகப்­பந்து­ வீச்­சாளர் லசித் மாலிங்க விரைவில் இலங்­கையின் ஒருநாள் அணியில் இடம்­பெ­ற­வுள்ளார்.

உலகக் கிண்ணப் போட்­டி­க­ளுக்­கான இலங்­கையின் உத்­தேச குழாமில் இடம்­பெறும் லசித் மாலிங்க, நியூ­ஸி­லாந்­துக்கு எதி­ரான சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளை­யா­டுவார் என அணி பயிற்­றுநர் மார்வன் அத்­தப்­பத்து தெரி­வித்­த­தாக ரோய்ட்டர்ஸ் செய்­தியில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

 

செப்­டெம்பர் மாதம் சத்­திர சிகிச்­சைக்­குள்­ளான லசித் மாலிங்க, அதன் பின்னர் நடை­பெற்ற இந்­தியா, இங்­கி­லாந்து ஆகிய நாடு­க­ளுக்கு எதி­ரான சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் தொடர்­களைத் தவிர்த்து ஓய்வு பெற்­று­வந்தார்.

அவுஸ்­தி­ரே­லி­யா­விலும் நியூ­ஸி­லாந்­திலும் நடை­பெ­ற­வுள்ள உலகக் கிண்ண கிரிக்கெட் போட்­டி­க­ளின்­போது இலங்கை அணியில் மாலிங்­கவின் பிர­சன்னம் மிகவும் முக்­கியம் வாய்ந்­த­தாக கரு­தப்­ப­டு­கின்­றது.
அதற்கு முன்­ப­தாக நியூ­ஸி­லாந்­துக்கு எதி­ரான முழுத் தொட­ரிலும் அவர் விளை­யா­டு­வது சந்­தே­க­மா­க­வுள்­ளது.

m73m7d.jpg
எனினும் நியூ­ஸி­லாந்­துக்கு எதி­ராக நடை­பெ­ற­வுள்ள 7 போட்­டி­களைக் கொண்ட தொடரின் கடைசி இரண்டு போட்­டி­களில் லசித் மாலிங்க விளை­யா­டுவார் என மார்வன் அத்­தப்­பத்து நம்­பிக்கை வெளி­யிட்­டுள்ளார்.

"மாலிங்க இன்னும் குண­ம­டைந்து வரு­கிறார். அனைத்தும் திட்­ட­மிட்­ட­படி நடை­பெ­று­கின்­றன. நியூஸிலாந்­து­ட­னான கடைசி இரு போட்­டி­க­ளின்­போது அவர் அணிக்குத் திரும்­புவார்" என மார்வன் அத்­த­பத்து தெரி­வித்தார்.
177 சர்­வ­தேச ஒருநாள் போட்­டி­களில் விளை­யா­டி­யுள்ள லசித் மாலிங்க 271 விக்­கெட்­களை மொத்­த­மாக கைப்­பற்­றி­யுள்ளார்.

கடந்த ஓகஸ்ட் 30 ஆம் திகதி தம்­புள்­ளையில் நடை­பெற்ற பாகிஸ்­தா­னு­ட­னான ஒருநாள் சர்­வ­தேச போட்­டியே இலங்­கையின் சார்பில் மாலிங்க இறு­தி­யாக விளை­யா­டிய போட்­டி­யாகும்.

மாலிங்க பங்­கு­பற்­றாத இலங்கை அணி அண்­மையில் இந்­தி­யாவில் நடை­பெற்ற ஒருநாள் போட்­டி­களில் 0–5 விகி­தத்தில் தோல்­வி­யுற்­ற­போ­திலும் இலங்­கையில் நடை­பெற்ற இங்­கி­லாந்­து­ட­னான போட்­டி­களில் 5–2 விகி­தத்தில் வென்­றமை குறிப்­பி­டத்­தக்­கது.

2011 உலகக் கிண்ண கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் இந்தியாவிடம் தோல்வி அடைந்து இரண்டாம் இடத்தைப் பெற்ற இலங்கை, இவ் வருட உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகளை 2014 பெப்ரவரி 14ஆம் திகதி நடைபெறவுள்ள நியூஸிலாந்துடனான போட்டியுடன் ஆரம்பிக்கவுள்ளது.

- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=8219#sthash.3kqIckOB.dpuf

  • தொடங்கியவர்

இலங்கை - நியூசிலாந்து டெஸ்ட் முன்னோட்டம்
25-12-2014 02:52 PM

இலங்கை - நியூசிலாந்து அணிகளுக்கிடையிலான டெஸ்ட் தொடர் நாளை (26) அதிகாலை ஆரம்பிக்கவுள்ளது. இலங்கை நேரப்படி அதிகாலை 3.30 இற்கு ஆரம்பிக்கவுள்ளது. இரு அணிகளுக்குமிடையில் 1982/83 பருவகாலத்தில் முதற் டெஸ்ட் தொடர் நியூசிலாந்தில் ஆரம்பமானது. இலங்கை அணி 1994/95 பருவகாலத்தில், நியூசிலாந்தில் வைத்து முதற் தொடர் வெற்றியைப் பெற்றது. அது மாத்திரமே நியூசிலாந்தில் பெற்ற ஒரே தொடர் வெற்றி. இரு அணிகளும் இதுவரை 28 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளன. இவற்றில் 10 போட்டிகளில் நியூசிலாந்து அணியும், 8 போட்டிகளில் இலங்கை அணியும் வென்றுள்ளன. 10 போட்டிகள் சமநிலையில் நிறைவடைந்துள்ளன. நியூசிலாந்தில் நடைபெற்ற 13 போட்டிகளில் 06 போட்டிகளில் நியூசிலாந்து அணியும், 02 போட்டிகளில் இலங்கை அணியும் வென்றுள்ளன. 05 போட்டிகள் சமநிலையில் நிறைவடைந்துள்ளன.

 

மஹேல ஜெயவர்தன இன்றி இலங்கை அணி இந்த தொடரில் விளையாடவுள்ளது. இது இலங்கை அணியின் மத்திய வரிசையில் பலமற்ற தன்மையை உருவாக்கும். இலங்கை டெஸ்ட் அணியில் அனுபவம் குறைந்த வீரர்கள் விளையாடுவது பின்னடைவை உருவாக்கும். துடுப்பாட்டத்தில் கௌஷால் சில்வா, குமார் சங்ககார, அஞ்சலோ மத்தியூஸ் ஆகியோர் மட்டுமே நம்பிக்கையான எதிர்பார்ப்புள்ளவர்கள். தினேஷ் சந்திமால், லஹிறு திரிமான்னே ஆகியோர் தங்கள் இடங்களை தக்க வைத்துக்கொள்ள போராடுபவர்களே. சங்ககார, மஹேல ஆகியோரின் இடங்களை மீள் நிரப்புகை செய்யும் வீரர்களாக எதிர்கால வீரர்களாக நம்பப்படுகின்ற இவர்கள் இந்த தொடரில் சிறப்பாக செயற்ப்பட்டால் மாத்திரமே இந்த நம்பிக்கை தொடரும்.

 

பந்துவீச்சாளர்கள் வரிசையில் சமின்ட எரங்க, சுரங்க லக்மால் ஆகியோர் பலமான இலங்கை அணியின் பந்துவீச்சாளர்கள். மற்றவர்கள் புதியவர்கள்.

நியூசிலாந்து அணி பலமான அணியாக உள்ளது. ஐக்கிய அரபு ராஜ்ஜியத்தில் வைத்து பாகிஸ்தான் அணியை வெற்றி பெற்றுள்ளது. அடித்தாடும் வல்லமை கொண்ட துடுப்பாட்ட வீரர்கள் இருப்பது பலம். இலங்கை அணியின் பந்துவீச்சாளர்களிலும் பார்க்க நியூசிலாந்து அணியின் பந்துவீச்சு பலமானதாக உள்ளது. எனவே இந்த இரு அணிகளுக்குமான தொடரில் நியூசிலாந்து அணி பலமாக உள்ளது.

இலங்கை அணி அந்த பலத்தை உடைத்து எவ்வேறு செயற்படப்போகின்றது என்பதில் போட்டியின் முடிவு தங்கியுள்ளது.

- See more at: http://www.tamilmirror.lk/136427#sthash.3GsgCSHD.dpuf

 

  • கருத்துக்கள உறவுகள்

ஆரம்பமானது இலங்கை - நியூ­ஸிலாந்து டெஸ்ட் தொடர் : நியூசிலாந்து வலுவான நிலையில்

 
 

இலங்கை மற்றும் நியூ­ஸி­லாந்து அணி­க­ளுக்­கி­டை­யி­லான இரண்டு போட்­டி­களைக் கொண்ட டெஸ்ட் தொடரின் முத­லா­வது போட்டி இன்­றைய தினம் கிறிஸ்சேர்ச் ஓவல் மைதா­னத்தில் ஆரம்­ப­மா­னது.

இப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி நியூசிலாந்து அணியை துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது.

அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணி சற்றுமுன்னர் வரை 6 விக்கெட்டுகளை இழந்து 429 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

துடுப்பாட்டத்தில் பிரண்டன் மெக்கலம் 195 ஓட்டங்களையும் நீசாம் 83 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்துள்ளனர்.

முன்னாள் அணித்­த­லை­வரும் நட்­சத்­திர அனு­பவ வீர­ரு­மான மஹேல ஜெய­வர்­தனவின் ஓய்­வுக்கு பின்னர் இலங்கை எதிர்­கொள்­ள­வி­ருக்கும் முத­லா­வது டெஸ்ட் போட்­டி­யாக இது காணப்­ப­டு­கின்­றது. 

கடந்த 18 மாதங்க­ளாக தற்­போ­தைய அணித்­த­லைவர் அஞ்­சலோ மெத்­தி­யூ­ஸிற்கு மஹேல களத்தில் பக்­க­ப­ல­மாக இருந்­து­வந்தார்.

கிறிஸ்ச் சோர்ச் ஓவல் கள­மா­னது புற்­ற­ரை­யாக காணப்­ப­டு­வதால் வேகப்­பந்து வீச்­சா­ளர்­க­ளுக்கு மிக­மிக சாதக­மாக காணப்­ப­டு­கின்­றது. இந்­நி­லையில் இலங்கை வேகப்­பந்­து­வீச்­சா­ளர்கள் நிச்­சயம் பிர­கா­சிப்­பார்கள் என்ற திருப்தி கொண்­டுள்­ள­தாக பந்­து­வீச்சுப் பயிற்­சி­யாளர் சமிந்த வாஸ் நம்­பிக்கை வெளியிட்­டுள்ளார்.

கைவி­சேட(பொக் சிங் டே) நாளில் இடம்­பெறும் டெஸ்ட் ஒன்றில் நியூ­ஸி­லாந்து 11 வரு­டங்­க­ளுக் குப் பின்னர் பங்­கேற்­ப­தோடு 2006 ஆம் ஆண்­டுக்குப் பின்னர் முதற்­த­ட­வை­யாக கிறிஸ்சேர்ச் மைதா­னத்தில் களம்­காண்­கின்­றது.

ஐ.சி.சி அணியின் தலை­வ­ராக நிய­மிக்­கப்­பட்ட பெரு­மையைக் கொண்ட இலங்கை அணித்­த­லைவர் அஞ்­சலோ மெத்­தியூஸ் இறு திப் 13 போட்­டி­களில் 86.62 சரா­ச­ரி­யைக்­கொண்­டுள்ளார்.

அதே­நேரம் 1995ஆம் ஆண்டு நியூ­ஸிலாந்து மண்ணில் தொட­ரொன்றை இலங்கை வெற்­றி­பெற்­றி­ருந்­தது.

அதன் பின்னர் 2006ஆம் ஆண்டு வெலிங்டனில் ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது. மேலும் இரு அணிகளும் இது வரையில் 28 போட்டிகளில் விளையாடியுள்ளதுடன் 10 போட்டி களில் நியூஸிலாந்தும் 8 போட் டிகளில் இலங்கையும் வெற்றி பெற்றுள்ளதுடன் 10 போட்டிகள் சமநிலையில் நிறைவடைந்துள்ளன.

http://www.virakesari.lk/articles/2014/12/26/%E0%AE%86%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%C2%AD%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D

 

  • தொடங்கியவர்

இலங்கை-நியூசிலாந்து 'பாக்சிங் டே' டெஸ்ட்.. செம "குத்து" விட்ட மெக்கல்லம்!

 

கிறைஸ்ட்சர்ச்: இலங்கைக்கு எதிரான பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்தின் பிரண்டன் மெக்கல்லம் 134 பந்துகளில் 195 ரன்கள் அடித்து குவித்ததுடன், டெஸ்ட் வரலாற்றிலேயே ஓராண்டில் அதிக சிக்சர் விளாசிய சாதனைக்கும் சொந்தக்காரராகியுள்ளார். மேத்யூஸ் தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணி 2 டெஸ்ட் மற்றும் 7 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுவதற்காக நியூசிலாந்து வந்துள்ளது. இதில் முதலில் டெஸ்ட் தொடர் நடக்கிறது. இதன்படி நியூசிலாந்து-இலங்கை இடையிலான முதலாவது டெஸ்ட் கிறைஸ்ட் சர்ச்சில் இன்று தொடங்கியது. புத்தாண்டுக்கு முந்தைய நாளிலும் நடைபெற உள்ள டெஸ்ட் போட்டி என்பதால் இதை பாக்சிங் டே டெஸ்ட் போட்டி என்றும் அழைக்கலாம். ஆனால் நியூசிலாந்து கேப்டன் மெக்கல்லமோ பாக்சிங் என்பதை குத்துச்சண்டை என்று புரிந்துகொண்டார் போலும். விளாசி தள்ளிவிட்டார்.

 

குறைந்த பந்தில் நிறைய ரன் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான இந்த ஆடு களத்தில் முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி, எந்த பந்து வீச்சுக்கும் அசைந்து கொடுக்காமல் விளாசி தள்ளியது. குறிப்பாக அணி கேப்டன் பிரண்டன் மெக்கல்லம், 134 பந்துகளில் 195 ரன்களை குவித்து அவுட் ஆனார். குறைந்த பந்தில் இரட்டை சதம் அடித்து சாதனை படைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மெக்கல்லம் அவுட் ஆனார்.

 

ஓராண்டில் பறந்த சிக்சர் 30 இருப்பினும் 2014 ஆண்டு மெக்கல்லத்திற்கு சிறப்பான ஒன்றாக மாறியுள்ளது. இன்றைய போட்டியில் 11 சிக்சர்களை விளாசியதையும் சேர்த்தால், இவ்வாண்டில் மெக்கல்லம் டெஸ்ட் போட்டிகளில் மொத்தம் 30 சிக்சர்களை பறக்கவிட்டுள்ளார். டெஸ்ட் வரலாற்றில் இது புது சாதனையாகும். ஆனால், ஒரே டெஸ்ட் போட்டியில் 12 சிக்சர்கள் அடித்த வாசிம் அக்ரமின் சாதனைக்கு வெகு அருகில் வந்து கோட்டை விட்டுள்ளார் மெக்கல்லம்.

 

அடுத்தடுத்து சதங்கள் சார்ஜாவில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 202 ரன்கள் விளாசிவிட்டு தாயகம் திரும்பிய மெக்கல்லம், இப்போது 195 ரன்களை குவித்துள்ளார். அடுத்தடுத்த போட்டிகளில் சதம் அடித்துள்ளார் மெக்கல்லம்

 

கில்கிறிஸ்ட் சாதனை பறிபோக வாய்ப்பு மேலும், நியூசிலாந்து பேட்ஸ்மேன் ஒருவர் ஓராண்டில் 1000 டெஸ்ட் ரன்களை கடப்பதும் இதுதான் முதன்முறையாகும். அந்த சாதனையும் மெக்கல்லம் பெற்றுள்ளார். மேலும், இதுவரை மெக்கல்லம் டெஸ்ட் போட்டிகளில் 92 சிக்சர்களை விளாசி, 100 சிக்சர்கள் அடித்து இந்த சாதனை பட்டியலில் முதலிடத்திலுள்ள ஆஸி. முன்னாள் வீரர் கில்கிறிஸ்ட் சாதனையை நெருங்கியுள்ளார்.

 

இலங்கைக்கு நெருக்கடி மெக்கல்லத்தின் அதிரடி காரணமாக, ஆட்ட நேர இறுதியில் நியூசிலாந்து 429 ரன்களுக்கு 7 விக்கெட்டை இழந்துள்ளது. இலங்கை அணி விழிபிதுங்கிய நிலையிலுள்ளது.

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/new-zealand-s-brendon-mccullum-entertains-once-again-217791.html

  • தொடங்கியவர்

  • தொடங்கியவர்

441 allout

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்கா 138 ஆல் அவுட் :D

நியூஸி follow on செய்யாமல் திருப்ப பட்டிங் செய்து 500 , 600 ran அடிக்க வேண்டும் :icon_mrgreen:

இலங்கைக்கு வெற்றி இலக்காக 700+ ரன் நிர்ணயித்து இலங்கை அணியினை உளவியல் உளைச்சலுக்கு ஆளாக்கவேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

கிரவுண்ட் செட்டப் செய்ய முடியல்லப் போல. கவுந்து கொட்டுண்ணுது.. சொறீலங்கா.

 

நியூசிலாந்தில் பெறும் அவமானத்தோடு சங்ககாரவின்.. அத்தியாயம் அவமானத்தில் முடியனும். :lol::icon_idea:


மொட்டை பிரித் வேற ஓதி அனுப்பி இருக்குது..

 

D3S0558x-780x519_zps9ae8e8c3.jpg

 

:lol::D

 

 

  • தொடங்கியவர்

மெக்கல்லம் சிக்ஸர் மழை: சில புள்ளிவிவரங்கள்
 

 

# 429 - நேற்றைய ஆட்டத்தில் நியூஸிலாந்து 429 ரன்கள் குவித்தது. இதன்மூலம் நியூஸிலாந்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் ஒரே நாளில் எடுக்கப்பட்ட 4-வது அதிகபட்ச ஸ்கோரை சமன் செய்தது.

 

# 195 - நேற்றைய ஆட்டத்தில் மெக்கல்லம் எடுத்த 195 ரன்கள் அவருடைய 5-வது அதிகபட்ச ஸ்கோராகும். அவர் இன்னும் 5 ரன்கள் எடுத்திருந்தால் அதிவேக இரட்டைச் சதமடித்தவர், ஓர் ஆண்டில் கிளார்க்கிற்கு அடுத்தபடியாக 4 இரட்டை சதங்கள் அடித்தவர் என்ற சாதனையை படைத்திருப்பார். நாதன் ஆஸ்ட்லே 153 பந்துகளில் இரட்டை சதமடித்ததே இன்றளவும் அதிவேக இரட்டை சதமாக உள்ளது.

 

# 74 பந்துகளில் சதமடித்ததன் மூலம் டெஸ்ட் போட்டியில் அதிவேக சதமடித்த நியூஸிலாந்து வீரர் என்ற தனது முந்தைய சாதனையை (78 பந்துகள்) மெக்கல்லம் முறியடித்தார்.

 

# 11 - நேற்று 11 சிக்ஸர்களை விளாசிய மெக்கல்லம், டெஸ்ட் போட்டியில் ஓர் இன்னிங்ஸில் அதிக சிக்ஸர்களை விளாசியவர்கள் வரிசையில் 2-வது இடத்தை நாதன் ஆஸ்ட்லே, மேத்யூ ஹேடன் ஆகியோருடன் பகிர்ந்து கொண்டுள்ளார். முதலிடத்தில் வாசிம் அக்ரம் (12 சிக்ஸர்கள்) உள்ளார்.

 

# 33 - ஓர் ஆண்டில் அதிக சிக்ஸர்களை விளாசியவர்கள் வரிசையில் மெக்கல்லம் முதலிடத்தைப் பிடித்துள்ளார். இந்த ஆண்டில் மட்டும் அவர் 33 சிக்ஸர்களை விளாசியுள்ளார். அவருக்கு அடுத்தபடியாக ஆடம் கில்கிறிஸ்ட் (2005), வீரேந்திர சேவாக் (2008) ஆகியோர் 22 சிக்ஸர்களுடன் 2-வது இடத்தில் உள்ளனர்.

 

# 1164 - இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 1,164 ரன்கள் குவித்துள்ளார் மெக்கல்லம். இதற்கு முன்னர் 2008-ல் 764 ரன்கள் குவித்ததே ஓர் ஆண்டில் அவர் எடுத்த அதிகபட்ச ரன் சாதனையாக இருந்தது.

 

# 26 - நேற்றைய ஆட்டத்தில் லக்மல் வீசிய 55-வது ஓவரை எதிர்கொண்ட மெக்கல்லம், அதில் 26 ரன்கள் (4,6,6,0,4,6) எடுத்தார். இதன்மூலம் ஒரு ஓவரில் அதிக ரன்கள் குவித்தவர்கள் வரிசையில் 4-வது இடத்தை மேக்மில்லன், லாரா, ஜான்சன் ஆகியோருடன் பகிர்ந்து கொண்டுள்ளார். லாரா, ஜார்ஜ் பெய்லி ஆகியோர் 28 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளனர்.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%AE%E0%AF%86%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%B4%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article6728832.ece

  • தொடங்கியவர்

நியூசி., பிடியில் இலங்கை
டிசம்பர் 26, 2014.

 

கிறைஸ்ட்சர்ச்: நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டின், முதல் இன்னிங்சில் 138 ரன்னுக்கு சுருண்ட இலங்கை அணி, ‘பாலோ–ஆன்’ பெற்று, திணறி வருகிறது.

நியூசிலாந்து, இலங்கை அணிகள் கிறைஸ்ட்சர்ச்சில் நடக்கும் ‘பாக்சிங் டே’ டெஸ்டில் மோதுகின்றன. முதல் நாள் ஆட்ட முடிவில், நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 7 விக்கெட்டுக்கு 429 ரன்கள் குவித்தது.

 

திணறல் பேட்டிங்:

நேற்று இரண்டாவது நாள் ஆட்டம் நடந்தது. சவுத்தி (0), வாக்னர் (4), பவுல்ட் (0) விரைவில் அவுட்டாக, நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 441 ரன்கள் எடுத்தது. கிரெய்க் (12) அவுட்டாகாமல் இருந்தார். இலங்கை சார்பில் லக்மல், மாத்யூஸ் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

பின் களமிறங்கிய இலங்கை அணியை, நியூசிலாந்து வேகப்பந்துவீச்சாளர்கள் போட்டுத் தாக்கினர். கருணாரத்னே (0), சில்வா (4), ‘சீனியர்’ சங்ககரா (6), பவுல்ட்டிடம் சிக்கினர். திரிமான்னே (24), டிக்வெலாவை (2) சவுத்தி வெளியேற்றினார்.

 

அரைசதம் கடந்த கேப்டன் மாத்யூஸ் (50), அனுபவ ஜெயவர்தனா (10), கவுசல் (6) வாக்னர் ‘வேகத்தில்’ திரும்பினர்.

கடைசில் லக்மலும் (2) அவுட்டாக, இலங்கை அணி 138 ரன்னுக்கு சுருண்டது. நியூசிலாந்தின் பவுல்ட், வாக்னர் தலா 3, சவுத்தி, நீஷம் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

 

‘பாலோ–ஆன்’:

முதல் இன்னிங்சில் 303 ரன்கள் பின்தங்கிய இலங்கை அணி, ‘பாலோ–ஆன்’ பெற்று, தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சை விளையாடும் நிலைக்குத் தள்ளப்பட்டது.

இதில் நிதானம் காட்டிய இலங்கை அணி, இரண்டாவது நாள் ஆட்ட முடிவில் விக்கெட் இழப்பின்றி 84 ரன்கள் எடுத்து, 219 ரன்கள் பின்தங்கி இருந்தது. கருணாரத்னே (49), கவுசல் சில்வா (33) அவுட்டாகாமல் இருந்தன

 

http://sports.dinamalar.com/2014/12/1419569359/McCullummissesfastestdouble.html

  • கருத்துக்கள உறவுகள்

இன்று கிரைஸ்ட்சேர்ச்சில் முதல் 15 ஓவர்களும் சிறிலங்காவுக்குச் சோதனையாக இருக்கும் காலையில் வீசும் மெல்லிய குளிர்காற்று நியூஸி வேகப்பந்துவீச்சாளர்களுக்குச் சாதகமாக இருக்கும் . பந்தில் ஸ்விங் இருக்கும் இந்தக் காலப் பகுதியில் 2 விக்கட்டுக்களை வீழ்த்தினால் ஆட்டத்தை கொண்டுபோவது இலகுவாக இருக்கும்

இல்லாது போனால் இரண்டாவது இன்னிங்சுக்காக நியூஸி 100 - 125 ரன்களைச் சேஸ் செய்யவேண்டி வரும்

இன்னும் இந்த விக்கட்டுக்களில் ரன்கள் இருக்கு ஏனெனில் இன்னும் 3ஆம் நாள் ஆட்டம் தொடங்கவில்லை. ஆடுகளம் அன் டுவதற்கு அருமையாக இருக்கு. நியூஸி பலோ ஒன் செய்திருக்கக் கூடாது. நேற்று இரண்டாவது இன்னிங்சைத் தொடங்கி இன்றுவரை ஆடிவிட்டு 600+ ரன்களை நிர்ணயித்து இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

வாலியின் கணிப்புக்கு அமைய early morning swingகைப் பயன்படுத்தி 2 விக்கட்டுக்களை வீழ்த்திவிட்டது நியூஸி. அதுவும் சங்கக்காரவின் விக்கட் price விக்கட்.

Lunchக்கு முன்னதாக இன்னுமொரு விக்கட் விழுந்தால் அது bonus விக்கட்.

வீழ்ந்த 2 விக்கட்டுக்களும் Outside edge இல் பட்டு விக்கட்கீப்பரினால் பிடி எடுக்கப்பட்டன.

  • தொடங்கியவர்

கருணாரத்னே சதம்
டிசம்பர் 26, 2014.

 

கிறைஸ்ட்சர்ச்: நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் இலங்கை அணியின் கருணாரத்னே சதம் அடித்தார்.

நியூசிலாந்து, இலங்கை அணிகள் கிறைஸ்ட்சர்ச்சில் நடக்கும் ‘பாக்சிங் டே’ டெஸ்டில் மோதுகின்றன. நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 441 ரன்கள் எடுத்தது. இலங்கை அணி முதல் இன்னிங்சில் 138 ரன்களுக்கு சுருண்டு,  ‘பாலோ–ஆன்’ பெற்றது. இரண்டாவது நாள் ஆட்ட முடிவில் இலங்கை அணி இரண்டாவது இன்னிங்சில் விக்கெட் இழப்பின்றி 84 ரன்கள் எடுத்திருந்தது. கருணாரத்னே (49), கவுசல் சில்வா (33) அவுட்டாகாமல் இருந்தனர்.

 

இன்று மூன்றாவது நாள் ஆட்டம் நடந்தது. சில்வா 33 ரன்களில் வௌியேறினார். சங்ககரா (1) மீண்டும் சொதப்பினார். திரிமான்னே (25) நிலைக்கவில்லை. சிறப்பாக விளையாடிய கருணாரத்னே சதம் அடித்தார். இவர் 152 ரன்களில் வெளியேறினார். கேப்டன் மாத்யூஸ் அரை சதம் அடித்தார். டிக்வாலே (4) ஏமாற்ற, மூன்றாவது நாள் ஆட்ட நேர முடிவில் இலங்கை அணி இரண்டாவது இன்னிங்சில் 5 விக்கெட்டுக்கு 293 ரன்கள் எடுத்து, 10 ரன்கள் பின்தங்கியிருந்தது. மாத்யூஸ் (53), கவுசல் (5) அவுட்டாகாமல் இருந்தனர்.

 

http://sports.dinamalar.com/2014/12/1419569359/McCullummissesfastestdouble.html

  • தொடங்கியவர்

சீரான ஆட்டத்தில் இலங்கை

இலங்கை - நியூஸிலாந்து அணிகளுக்கிடையிலான டெஸ்ட் போட்டித் தொடரின் முதலாவது போட்டியின் மூன்றாவது நாள் முடிவின் போது, ஃபொலோ ஒன் முறையில் தனது இரண்டாவது இனிங்ஸில் துடுப்பாடிவரும் இலங்கை அணி, 5 விக்கெட்டுகளை இழந்து 293 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

முதலாவது இனிங்ஸில் துடுப்பெடுத்தாடிய நியூஸிலாந்து அணி, சகல விக்கெட்டுகளை இழந்து 441 ஓட்டங்களைக் குவித்தது. நியூஸிலாந்து அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரரும் தலைவருமான பிரண்டம் மக்கலம், 134 பந்துகளை மாத்திரம் எதிர்கொண்டு 11 சிக்ஸர்கள், 18 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 195 ஓட்டங்களைக் குவித்து, தரிந்து கௌஸாலின் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். பிரண்டம் மக்கலம், 74 பந்துகளில் சதத்தினைப் பூர்த்தி செய்தமையும் குறிப்பிடத்தக்கது.

 

இலங்கை அணியின் பந்துவீச்சாளர்கள் சார்பில் அஞ்சலோ மத்தியூஸ் மற்றும் சுரங்க லக்மால் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும், ஷமிந்த ஏரங்க, தம்மிக்க பிரசாத், தரிந்து கௌஸால் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் கைப்பற்றினர்.

 

முதலாவது இனிங்ஸில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, மோசமான துடுப்பாட்டத்தின் காரணமாக சகல விக்கெட்டுகளையும் இழந்து 138 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது. அணித்தலைவர் அஞ்சலோ மத்தியூஸ், அதிகபட்சமாக 50 ஓட்டங்களைப் பெற்று நெய்ல் வாக்னரின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

நியூஸிலாந்து அணியின் பந்து வீச்சாளர்கள் சார்பில் த்ரென்ட் போவ்ல்ட் மற்றும் நெய்ல் வாக்னர் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளையும் ஜேம்ஸ் நீஸம் மற்றும் ரிம் சௌத்தீ ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

 

தனது இரண்டாவது இனிங்ஸில் ஃபொலோ ஒன் முறையில் துடுப்பெடுத்தாடிவரும் இலங்கை அணி, மூன்றாம் நாள் முடிவின்போது 5 விக்கெட்டுகளை இழந்து 293 ஓட்டங்களைப் பெற்றுள்ளது. ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான திமுத் கருணாரத்ன 152 ஓட்டங்களைப் பெற்று த்ரென்ட் போவ்ல்ட்டின் பந்து வீச்சில் போல்ட் செய்யப்பட்டால். அணித்தலைவர் அஞ்சலோ மத்தீவ்ஸ் 53 ஓட்டங்களுடனும், தனது டெஸ்ட் அறிமுகத்தை மேற்கொண்டிருக்கும் தரிந்து கௌஸால் 5 ஓட்டங்களுடனும் களத்தில் இருக்கின்றனர்.

 

நியூஸிலாந்து அணியின் பந்து வீச்சாளர்கள் சார்பில் த்ரென்ட் போவ்ல்ட் 3 விக்கெட்டுகளையும் ஜேம்ஸ் நீஸம் மற்றும் ரிம் சௌத்தீ ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் கைப்பற்றியுள்ளனர்.

நாளைய தினம், போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் இடம்பெறவுள்ளது.

- See more at: http://www.tamilmirror.lk/136540#sthash.afW70pNI.dpuf

  • தொடங்கியவர்

  • கருத்துக்கள உறவுகள்

படுதோல்வியை நோக்கி இலங்கையணி !

 

நியுசிலாந்தில் நடைபெற்றுவரும் முதலாவது டெஸ்ட் ஆட்டத்தில் தனது இரண்டாவது இன்னிங்ஸில் ஆடும் இலங்கையணி 341 ஓட்டங்களுக்கு 8 விக்கெட்டுக்களை இழந்து ஆடிவருகிறது. இறுதியாட்டாக்காரர்களான பந்துவீச்சாளர்கள் மட்டையாடிக்கொன்டிருக்க, தனது முதலாவது இன்னிங்ஸ் ஓட்டமான 138 உடன் இரண்டாவது இன்னிங்ஸ் 341 ஓட்டங்களையும் சேர்த்தால் வெறும் 38 ஓட்டங்களையே அதிகமாகப் பெற்றிருக்கிறது இலங்கையணி.

 

முதலாவது இன்னிங்ஸில் ஆஞ்சலோ மத்தியூசின் அரைச் சதத்தினைத் தவிர வேறு எவருமே சோபிக்காத நிலையில் வெறும் 138 ஓட்டங்களுக்குச் சுருண்டு கொண்ட இலங்கையணி, இரண்டாவது இன்னிங்ஸில் ஆரம்ப துடுப்பாட்டாக்காரரான கருணாரட்னவின் 152 ஓட்டங்களாலும், ஆஞ்சலோ மத்தியூசின் 66 ஓட்டங்களாலும் 341 ஓட்டங்கள் என்கிற நிலையை அடைந்திருக்கிறது.

 

இதில் குறிப்பிடத்தக்க விடயம் என்னெவென்றால், இலங்கையணியின் நம்பிக்கை நட்சத்திரமானவரும், அதிகூடிய டெஸ்ட் சராசரியைக் கொன்டிருப்பவருமான குமார் சங்கக்கார இரு இன்னிங்ஸிலுமாகச் சேர்த்து வெறும் 7 ஓட்டங்களை மட்டுமே பெற்று ஆட்டமிழந்ததுதான்.

  • கருத்துக்கள உறவுகள்

இரண்டாவது இன்னிங்ஸில் இலங்கையணி 407 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழது வெறும் 105 ஓட்டங்களை நியுசிலாந்து அணிக்கு நிர்ணயித்தது.

 

நியுசிலாந்து அணி தனது இரண்டாவது இன்னிங்ஸில் 50 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகள் என்கிற நிலையில் தனது இலக்கான 105 ஓட்டங்களை நோக்கி விரைவாகப் பயணித்துக் கொண்டிருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

முதலாவது டெஸ்ட் போட்டியில் நியுசிலாந்து அணி 8 விக்கெட்டுக்களால் வெற்றி.

  • தொடங்கியவர்

இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட் நியூசிலாந்து வசம்
 

 

இலங்கை அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட்  போட்டியில் நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகளால் வெற்றி பெற்று 2 போட்கள் கொண்ட தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ளது.

நியூசிலாந்துக்கு கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகின்றது.

இந்நிலையில் இரு அணிகளுக்குமிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி கடந்த 26 ஆம் திகதி வெள்ளிக்கிழமை கிறைஸ்ட்சேர்ச்சில் ஆரம்பமானது.
இப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

 

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி தனது முதலாவது இன்னிங்ஸில் மெக்குலத்தின் அதிரடியான 195 ஓட்டத்தின் உதவியுடன் 441 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

பதிலுக்கு தனது முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சகல விக்கெட்டுக்களையும் இழந்து 138 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.
தொடர்ந்து பலோ ஒன்னில் இரண்டாம் இன்னிங்ஸை தொடர்ந்த இலங்கை அணி நேற்றைய நாள் ஆட்ட நேர முடிவின் போது 5 விக்கெட்டுக்களை இழந்து 293 ஓட்டங்களை பெற்றிருந்தது.

 

இதன் போது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய திமுத்து கருணாரத்ன தனது கன்னிச் சதத்தை பூர்த்தி செய்து 152 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.
இன்றைய நான்காம் நாள் ஆட்டத்தை தொடர்ந்த போது மேலதிகமாக 34 ஓவர்கள் துடுப்பெடுத்தாடிய இலங்கை 407 ஓட்டங்களை மொத்தமாக பெற்று அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்தது.

அணித்தலைவர் மெத்தியூஸ் 65 ஓட்டங்களையும் பந்து வீச்சாளரான ஏரங்க ஆட்டமிழக்காது 45 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

இந்நிலையில் 105 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு தனது இரண்டாம் இன்னிங்​ஸை ஆரம்பித்த நியூசிலாந்து அணி 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்து 8 விக்கெட்டுகளால் வெற்றி பெற்று 1-0 என தொடரில் முன்னிலை பெற்றுள்ளது.

இப் போட்டியின் ஆட்ட நாயகனாக மெக்குலம் தெரிவு செய்யப்பட்டார்.

 

இரு அணிகளுக்குமிடையிலான 2 ஆவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி எதிர்வரும் ஜனவரி மாதம் 3 ஆம்  திகதி வெலிங்டனில் இடம்பெறவுள்ளது.

 

http://www.virakesari.lk/articles/2014/12/29/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.