Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கட்டுரை: வெள்ளை மாளிகையின் கள்ளர் கூட்டத்திற்கு...

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு நாட்டினுடைய இறைமையை பாதுகாக்கவும் வன்முறைகளை நிறுத்தி அமைதியை நிலைநாட்டவும் நீங்கள் எடுக்கும் முயற்சிகளை வரவேற்கிறோம். அந்த முயற்சிகள் இதயசுத்தியுடனானதாக இருக்கவேண்டுமென்பதோடு சந்தேகங்களை உண்டுபண்ணுவதாக இருக்கக் கூடாது. அத்துடன் அது நியாயமானதாகவும் இருக்கவேண்டும் என்பதே நீதியை எதிர்பார்க்கும் எல்லோருடையதுமான கருத்து.

ஆனால,; உங்களுடைய கருத்துக்களும் செயற்பாடுகளும் அநீதிக்குக்கு ஆதரவாகவும் மனச்சாட்சிக்கு அப்பாற்பட்டதாகவும் இருக்கிறது. உலக விவகாரங்களையும் அதில் உங்களுடைய வகிபாகத்தையும் தொடர்சியாக அவதானித்துக்n;காண்டு வருபவர்கள் உங்களிடம் இருந்து நீதியை எள்ளளவு கூட எதிர்பார்க்க முடியாது என்பதை உறுதிபட உணரமுடிகிறது.

இலங்கைத் தீவினுடைய சமாதான முயற்சிகளுக்கு பக்கதுணையாக இருப்பீர்கள் என இருந்த மிச்ச சொச்ச நம்பிக்கைகளும் அடியோடு அற்றுப்போய்விட்டது. அதற்கான காரணத்தை மிக அண்மையில் நீங்கள் கூறிய கருத்துக்களிருந்தே அலச ஆரம்பிப்போம.;

கடற்படையினர் மீது கபரணவில் நடத்;தப்பட்ட தாக்குதலால் அதிர்ச்சி அடைந்து போயுள்ள அரச தரப்பை ஆசுவாசப்படுத்தும் முகமாக வெளியிட்டது போலுள்ளது அந்த அறிக்கை.

1) 90 பொதுமக்களும் மற்றும் கடற்படையினரும் கொல்லப்பட்டதாக கூறியுள்ளீர்கள்.

2) தமிழீழ விடுதலைப்புலிகள் பயங்கரவாத நடவடிக்கைகளையும் வன்முறைகளையும் கைவிட்டு சமாதான நடவடிக்கைகளில் முனைப்பு காட்டவேண்டும் என்ற சாரப்பட தெரிவித்துள்ளீர்கள்.

United States Condemns Suicide Bombing in Sri Lanka

Media Release

17 October 2006

Statement by Sean McCormack, Spokesman, U.S. Department of State

The United States condemns yesterday’s suicide attack near Habarana, Sri Lanka that killed more than 90 civilians and members of the Sri Lankan Navy. We extend our deepest sympathies to the families of the victims.

Though there have been no claims of responsibility, this attack is in keeping with the tactics of the Liberation Tigers of Tamil Eelam, a group long designated as a Foreign Terrorist Organization by the Department of State. As we and others in the international community have made clear, the LTTE must renounce the use of terror. Only through the cessation of violence, a renewed commitment to peace talks, and constructive engagement by both sides can a political solution to this conflict be achieved.

சிறீலங்காவினுடைய படைத்துறை சார்ந்தோரே தமது தரப்பில் கொல்லப்ப்டோர் கடற்படையினர் என வெளிப்படையாக கூறியுள்ள போது நீங்கள் ஏன் பொல்லை கொடுத்து அடி வாங்க முற்படுகிறீர்கள்?தேவையாயின்; www.defence.lk என்னும் இணையத்தளத்தை பார்வையிடவும். அவ்வாறான தேவை எற்படாதென நம்புகிறேன்.

ஏனெனனில் உங்களுத்தான் உண்மைகள் அனைத்துமே தெரியுமே. நீங்கள் நித்திரை கொள்பவர் போல் நடிப்பவரே தவிர உண்மையில் நித்தரையில்லை என்பது புரிகிறது. தெரிந்தும் எங்களுக்க சொல்ல வேண்டிய அவசியம்முள்ளதால் நினைவுபடுத்த விரும்புகிறோம்.

சரி உயிரை தற்காப்பதற்கான நடவடிக்கைகள் பயங்கரவாதம் என்றால் உயிரை அழிக்கும் நடவடிக்கைகளுக்கு உங்கள் அகராதியில் என்ன வரைவிரக்கணம். செஞ்சோலையில் பிஞ்சுகளை அரச பயங்கரவாதம் குதறிய போது எங்கே இலங்கைத் தீவு மீதான உங்கள் பார்வை? சிறுவர்களை படைக்கு சேர்ப்பதாக ஒப்பாரி வைக்கும்

நீங்;கள் அப்போது ஏன் சிலைபோல் பேசாது இருந்தீர்கள்?

உங்கள் கண்களில் பள்ளி மாணவிகள் பயங்கரவாதிகள,; ஆயுதம் தரித்த அரச பயங்கரவாதிகள் அப்பாவிகள். நீங்கள் என்ன தாய்ப்பால் குடித்து வளர்ந்த மனிதர்;;;;;களா அல்லது தானியங்கி றோபோக்களா? றோபோக்கள் கூட மனச்சாட்சிப்படி இயங்கக் கூடும், ஆனால் நீங்கள்….சீ….

ஆயுதம் தரிக்காத படையினர் மீதான தாக்குதல் என குறிப்பிட்டிருந்தீர்கள். கீழுள்ள படத்தைப் பாருங்கள் உண்மை உறைக்கும். ஆக அந்த ஆயுதங்கள் ஒரு பேரூந்தில் பயணித்தவர்களுக்கு மட்டுமே உரியது என்பதையும் கவனத்திற்கொள்க.

சரி உங்கள் திருப்திக்காக ஆயுதம் தரிக்காத படையினர் என குறிப்பிட்டாலும் சிறீலங்காவின் இராணுவ விவகாரப் பேச்சாளர் கேகலிய ரம்புக்வெலவின் கூற்றுப்படி ஆயுதம் தரிக்காத படையினரை கொல்வதில் தவறில்லை. ஏனெனில்,மாணவர்களாக இருந்தாலும் புலிகளின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைத்தால் அவர்களும் பயங்கரவாதிகளே. அவ்வறானவர்களை கொல்வதில் எந்த தவறும் இல்லையென குறிப்பிட்டிருந்தார்.

அவ்வாறியின் எங்கள் கடலில் எங்கள் கடற்றொழிலார்களையும் உயிரை கையில் பிடித்தபடி உயிரை காப்பாற்றிக்கொள்வதற்காக இந்தியா செல்லும் அப்பாவிகளையும் பேசாலை அல்லைப்பிட்டி என எங்கும் அப்பாவி மக்களை கொல்லும் ஆயுதம் தரித்த கடற்படையை கொல்வதில் தவறொன்றும் இல்லை. உபதேசம் செய்வதற்கு உங்களுக்கென்றொரு தகுதி வேண்டு;ம் உங்களுக்கு அந்த தகுதி ஆபிரிக்கம் லிங்கன் மறுபிறப்பெடுத்தால் கூட கிடைக்காது.

கியூபாவின் ஜனநாயக குரல்வளையை நெரிக்க முனைந்து, ஆப்கானிலும் ஈராக்கிலும் இரத்த ஆறை ஓடவைத்து ஈரானையும் தென் கொரியாவையும் மிரட்டிக் கொண்டிருக்கும் உங்களுக்கு என்ன அருகதை இருக்கிறது ஜனநாயகத்தை பற்றி கதைக்க? சிறீலங்கா என்ன சின்ன இஸ்ரேலா உங்களுக்கு? நாட்டின் இறைமை பற்றி பேசும் நீங்கள் இஸ்ரேல் லெபனான் மீது தாக்குதல் நடத்தும் போதும் என்ன செய்தீர்கள்? பாகிஸ்தானின் இராணுவ ஆட்சிக்கு பாலூட்டும் நீங்கள் தாய்வானை பார்த்து ஏன் முறைத்தீPர்கள்? உங்கள் சொல் கேட்டால் நல்லவர்கள் இல்லையேல் பயங்கரவாதிகள்.

நாங்கள் ஒன்றும் எண்ணைக்காக அப்பாவி மக்களின் இரத்த ஆறை ஓடவைக்கும் கூட்டம் அல்ல. எங்கள் கௌரவமான வாழ்வுக்காக நீங்கள் ஒரு மேற்கெண்டதைப் போன்று சுதந்திர போராட்டமே நடத்துகிறோம். ர்pச்சாட் பவுச்சர் கூறியது போல எங்களுக்கும் சுயநிர்ணயத்துடன் வாழ்வதற்கான உரிமையுண்டு. அந்த உரிமையை வென்றெடுப்தற்காக எத்தகைய சவால்களையும் சந்திக்க தயாராக உள்ளோம். சாவால்கள் ஒன்றும் எமக்கு புதியவை அல்ல. போராடினார்கள் வென்றார்கள் என்று இருக்குமே தவிர மண்டியி;ட்டார்கள் என்று என்றைக்குமே இருக்காது. எமது போராட்ட வடிவமும எதிரியை எதிர்த்து நிற்பதற்கான திடமும் பலஸதீனத்தைப் போலவோ மொன்றி நிக்கவோ போல் இருக்கப்போவதில்லை. ஓரு நவீன வியட்னாத்தைப் பார்த்தது போலவே எமது எதிர்த்து நிற்கும் பலம் சுதந்திரம் அடையும் வரையும் இருக்கும். CIA,FBI,RAW,ISI,MI5 போன்றவற்றைக் கேட்டால் வளைந்து கொடுக்காத எமது வரலாற்றுப் பயணத்தை சொல்லும்.

விடுதலைப் புலிகள் மீண்டும் போரில் ஈடுபட்டால் வலிமை பொருந்திய இராணுவத்தை எதிர்கொள்ள வேண்டி வரும் என முன்னர் ஒரு தடைவ குறிப்பிட்டிருந்தீர்கள். இ;ஞ்சாருங்கோ அண்ணாச்சிமாரே வடிவா கவனியுங்கோ, எங்களை மிரட்டிப் பணியவைக்கலாம் என்பதை கனவிலும் நினைக்காதேங்கோ. உப்பிடி பலதடவை சிலபேர் மிரட்டிப் பார்த்தவை. உறுதிப்படுத்த உதாரணம் தேவையென்றால் தலைவரின் வரலாறு தொடர்பான “தலைநிமிர்வு” வரலாற்றுப் பொக்கிசத்தைப் பாருங்கள்;;;. குனியாத வீரம் எங்கள் குலத்தின் அடையாளம் என்பது புரியும். நாங்கள் பின்னடைவுகளை சந்தித்து இருக்கிறோமே தவிர பாரிய படுதோல்விகளை சந்தித்ததில்லை. பத்துப் பேராக இருந்த காலம் தொடங்கி 10 ஆயிரத்தை தாண்டியப பின்னும் அப்படித்தான். போராட்ட வடிவங்கள் மாறியதே தவிர போராட்ட இலட்சியத்தில் எந்த மாற்றமும் இல்லை. சங்கர்,செல்க்கிளி அம்மான்,சாள்ஸ் அன்ரனி தொடங்கி அக்பர் வரைக்கும் இழப்புகளை சந்தித்துள்ளோம். அதனால் நாம் சேர்ந்து போகவில்லை. வீழ்ந்தவர்கள் செத்துப் போனதாக நாம் உணரவில்லை அவர்கள் எமது விடுதலைப் போராட்டத்திற்கு வித்தாகிப் போயுள்ளார்கள். எங்கள் இதயக் கோவில்களில் வைத்துப் ப+சிக்கப்படவேண்டிய அந்த மகத்தான மாவீரர்களின் தியாகம் எமது போராட்டத்தின் அத்திவாரமாகியுள்ளது.

உங்கள் ஜனாதிபதி புஸ் பதவிக்கு வரும் போது எதிர்காலத்தில்; சவாலாக விளங்கக் கூடிய ஒரு நாட்டின் ப+கோள அமைப்போ பிரதமரின் பெயரோ தெரியாமல்தான் பதவிக்கு வந்தவர். ஆனால் நாங்கள் யாரென்பது உங்களுக்கு தெரியும்தானே???

அப்படிப்பட்ட நீங்கள் எங்களை மிரட்டுவதா? நீங்கள் என்னத்தை கதைத்தாலும் எதைக்கொடுத்தாலும் பெரும்பாலும் சிங்களப்படைகள்தான் களத்தில் எம்மோடு மோதும். அவர்களின் சுவாசத்தை நிர்ணயிப்பவர்கள் நாங்களே என்பது அவர்களுக்கே புரியும.; தேவையென்றால் சில உதாரணங்களை சொல்கிறேன்.

• 1995 ஜீலை 28 ல் மணலாற்றில் எங்களுக்கு எமது 180 மாவீரர்களின் வித்துடல்களை அனுப்பியதற்கு பதிலாக ஒரு வருடம் ஆக முதலே 1996 ஜீன் 18ல் 1800 படையினருக்கு சமாதி கட்டினோம்.

• உங்கள் கிறீன்பரட் பயிற்சி எடுத்த சிறீலங்காவின் சிறப்பு படையினர் சுமார் 200 பேரை முதல் தாக்குதலிலேயே அடுத்த பிறப்பெடுக்க அனுப்பி வைத்தோம்.

• கட்டுநாயக்காவில் வித்தைகாட்டி போரியல் வல்லுனர்களையே திகைப்பில் ஆழ்த்தினோம.

• குடாரப்பு தரையிறக்கம் மூலம் உங்கள் தலைமுடிகளை உதிர வைத்தோம்

• நீங்கள் நினைத்தாலே கைப்பற்ற கடினமெனக் கூறிய ஆனையிறவை நீங்கள் கருத்து தெரிவித்த இருவாரங்களுக்குள் கைப்பற்றி புதுவை அண்ணை கூஙியது போல் 240 வருடகால முதுகு கூனலை நிமிர்த்தினோம்.

• தீச்சுவாலை மூலம் எமது மரபுப் போரின் தனித்துவத்தை அடித்துச் சொன்னோம்.

இவை சில உதாரணங்ளே இனிவரும் காலம் அடிக்கடி இடித்து சொல்லும். வல்வெட்டிதுறை தொடங்கி அம்பாந்தோட்டை வரைக்கும் எதிரியின் அவலக்குரல் கேட்கும். தலைவர் கூறியது போல் அவலத்தை தந்தவனுக்கே அதை திருப்பி கொடுக்க வேண்டிய சூழல் நெருங்கி வருகிறது.

இத்தகைய சூழலிலும் மிக அழுத்தமாக ஒரு விடயத்தை கூறவிரும்புகிறோம். நாம் அமைதியை மிக மிக ஆழமாக நேசிக்கிறோம். அத்தகைய அமைதி வரும் நாளை ஆவலோடு எதிர்பார்ர்த்திருக்கிறோம். நீதியான சமாதானத்துக்காக இனியாவது உங்களால் இயன்றதை செய்து கடந்த கால பாவங்களுக்கு பிராயசித்தம் தேடுங்கோ. ஆ..மறந்தே போனன் கதையோடு கதையாக சீன் மக்கோமக்குக்கும் இவற்றை சொல்லி விடுங்கோ.

பிரபாகரன் கணக்கு என்றும் பிழைக்காது அவர் படைகள் என்றும் குனியாது.

மலரப்போகும் தமிழீழம் நிமிர்ந்து நின்று உங்களையும் கைநீட்டி வரவேற்கும்.

நன்றி.

அன்புடன்,

சிவஒளி.

http://www.nerudal.com/content/view/3116/38/

அட...டா...

என்ன அற்புதம் கட்டுரை..அல்ல..

இது தமிழரினது குரல்;; மிக துள்ளியமாக

சாமர்தியமாக வெள்ளை மாளிகை

களுகுகளிற்கு சமர்பணம்

ஆக்கி...உள்ளீர்கள்....

இவர்களிற்கு இது செவிடன்

காதில ஊதிய சங்குதான்...

அவர்கள் வல்லரசு என முழங்குகிறார்களே ஏன்

தனித்து போய் ஒரு நாட்டுடன் யுத்தமிட

மறுக்கிறார்கள்....???

கணவன் இவர்..மனைவி பிரித்தானிய

பிள்ளைகள் ஜரோப்பா

பேர பிள்ளை இதரம் இவை

அணைத்தையும் மடிக்கள்ள

வைத்து கொண்டு ஏன் போய் பொருதினம்....???

இதில் இருந்து என்ன விளங்கது தனமையில்

போனால் இவர்கள் தனிமை

முதுகு முறிந்து விடும்.

அதுதான் இந்த பயம் அதற்குள்

புளுடா கதைகள் வேற....

இது தான் வெள்ளை மாளிகைணின்

வெள்ளை கொள்கை...

உலகில் நடக்கும் அத்தை யுத்தத்திற்கும்

உந்த வெள்ளை மாளிகை தான் காரணம்...

இவர்கள் உயிர்குடிக்கும் பிசாசுகள்...

நன்றி

வன்னி மைந்தன்

மிகவும் காரசாரமான ஆயினும் முற்றிலும் தரவு செறிந்த கட்டுரை. இதை எழுதியவருக்கு எனது வாழ்த்துக்கள். இதை ஆங்கிலத்திலும் மொழிபெயர்த்து கறுப்புக் கொள்கையுள்ள வெள்ளை மாளிகை வாசிகளின் கண்ணிலும் படச்செய்தால் நன்று என்பது எனது தாழ்மையான அபிப்பிராயம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.