Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜனாதிபதி மகிந்த தன்னை மாற்றிக் கொண்டு விட்டார்! – ரிசாட் பதியுதீன்.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
Rishad-baduyudeen-150.JPG

அமைச்சுப்பதவி முக்கியம் அல்ல என்பதுடன், சமூகமே முக்கியம் என்று அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிசாட் பதியுதீன் தெரிவித்தார். இதனாலேயே, அனைத்தையும் தூக்கி எறிந்துவிட்டு சமூகத்துக்காக அரசாங்கத்தை விட்டு வெளியேறியுள்ளதாகவும் அவர் கூறினார்.

   

காத்தான்குடியில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர், பொறியியலாளர் சிப்லி பாறூக்கின் இல்லத்தில் நேற்று மாலை நடைபெற்ற மக்கள் சந்திப்பில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

'கடந்த 2005ஆம் மற்றும் 2010ம் ஆண்டு காலப்பகுதிகளில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை வெற்றியடையச் செய்வதற்கு கடுமையாக உழைத்தோம். சமாதானத்தை கொண்டுவந்துவிட்டார். அவருக்கு இன்னுமொரு சந்தர்ப்பத்தை கொடுக்கவேண்டும் என்று நாடு முழுக்க அலைந்துதிரிந்து பிரசாரம் செய்தேன். அன்று நாங்கள் செய்த பிரசாரம் ஜனாதிபதிக்கு, அமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு நன்கு தெரியும். அதன் பிறகு மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவருக்கு கிடைத்தது.

அதன் பிறகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தனது பழைய நிலையை மாற்றிக்கொண்டார். தான் நினைத்ததை செய்தார். தன்னோடு போட்டி போட்ட ஜனநாயக கட்சித் தலைவர் சரத் பொன்சேகாவை சிறையில் அடைத்தார். முன்னாள் பிரதம நீதியரசர் சிராணி பண்டாரநாயக்காவை வீட்டுக்கு அனுப்பினார். நாங்கள் அரசாங்கத்திலிருந்தாலும், மனச்சாட்சிக்கு இடங்கொடுக்காத விடயங்களுக்கு கூட உடன்படவேண்டிய தேவைப்பாடு இருந்தது. நாங்கள் உருவாக்கிய ஒருவர் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றிருக்கின்றார் என்ற காரணத்துக்காக நாங்கள் பொறுமையாக இருந்தோம்.

அளுத்கமவில் இறுதியாக முஸ்லிம்களுக்கு இடம்பெற்ற அநியாயங்கள் தெரியும். பரிதாபமாக உயிர்கள் பலியாகின. 1983ஆம் ஆண்டு கலவரத்துக்கு பின்னர் அளுத்கம கலவரம் பெரிய கலவரம் எனவும் முஸ்லிம்கள் மீது காட்டிய அட்டகாசத்தையும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்காததையும் நான் அமைச்சரவையில் ஜனதிபதிக்கு எடுத்துக்கூறினேன். அப்போது ஜனாதிபதி என்னுடன் முரண்பட்டார். நான் அமைச்சரவையில் இது விடயமாக பேசும்போது, முஸ்லிம் அமைச்சர்கள் பார்த்துக் கொண்டிருந்தனர். அங்கு எந்தவொரு முஸ்லிம் அமைச்சரும் எனக்கு ஆதரவாக பேசவில்லை. ஆனால், நான் தைரியமாக பேசினேன்.

இந்த சமூகத்தை பாதுகாப்பதற்காக அனைவரும் மாற்றத்துக்காக பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களிக்க வேண்டும். அனைத்து முஸ்லிம்களும் மாற்றத்துக்காக தமது அனைத்து வளங்களையும் பயன்படுத்தவேண்டும். இந்தத் தேர்தலில் அனைவரும் ஒன்றுபட்டு பொது எதிரணி வேட்பாளருக்கு வாக்களிக்கவேண்டும்.

எங்களை என்ன விலை கொடுத்தாலும் வாங்கமுடியாது. இருக்கின்ற அமைச்சுக்களை விட, இன்னும் அமைச்சுக்களை தருவார்கள். அதுவல்ல எங்களுக்கு முக்கியம். எங்களது சமூகம் முக்கியம். எங்களது மார்க்கம் முக்கியம். எங்களது குர்ஆன் எமது சமூகத்தின் எதிர்காலம் முக்கியம். இதனாலேயே எல்லாவற்றையும் இழந்துவிட்டு வெளியேறியிருக்கின்றோம்' என்றார்.

http://seithy.com/breifNews.php?newsID=123383&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

நேற்றுவரை  தெரியவில்லை

மைத்திரி  போனதும் தெரிகிறது....

  • கருத்துக்கள உறவுகள்
எங்களை என்ன விலை கொடுத்தாலும் வாங்கமுடியாது. இருக்கின்ற அமைச்சுக்களை விட, இன்னும் அமைச்சுக்களை தருவார்கள். அதுவல்ல எங்களுக்கு முக்கியம். எங்களது சமூகம் முக்கியம். எங்களது மார்க்கம் முக்கியம். எங்களது குர்ஆன் எமது சமூகத்தின் எதிர்காலம் முக்கியம். இதனாலேயே எல்லாவற்றையும் இழந்துவிட்டு வெளியேறியிருக்கின்றோம்' என்றார்.

 

 

இதைத்தான் ஐ எஸ் காரங்களும் சொல்லுறாங்கள். அவங்க சொன்னா பயங்கரவாதமா தெரியுது அமெரிக்காவுக்கு. இவர் சொல்லுறது ஜனநாயகமா தெரியுதாக்கும்..!!

 

இவர் போற பாதை கூட இருக்கிற தமிழ் மக்களுக்கு ஆபத்தான பாதை என்பது மட்டும் தெரியுது. :(:rolleyes::icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.