Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காங்கிரஸ் கட்சிக்கு வயது 130

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

201412272023515562_Congs-130th-foundatio
புதுடெல்லி, 

2014 பொதுத் தேர்தலில் வரலாறு காணாத தோல்வியை தழுவியுள்ள நிலையில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியானது நாளை 131-வது துவக்க தினத்தை கொண்டாடுகிறது. இந்தியாவின் மிகப்பெரிய அரசியல் கட்சிகளில் ஒன்றாக திகழ்ந்து வந்த காங்கிரஸ் கட்சி கடந்த 1885-ஆம் ஆண்டு டிசம்பர் 28-நாள் துவங்கப்பட்டது. இந்திய விடுதலை இயக்கத்தை முன்னெடுத்துச் சென்றது முதல் பல்வேறு பாரம்பரியம் காங்கிரஸ் கட்சிக்கு உண்டு. 

இந்நிலையில், நாளை 131-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அக்கட்சி மீண்டும் ஆட்சியை பிடிப்பது, கட்சியை அடிமட்டத்திலிருந்து மீண்டும் வலுப்படுத்துவது உள்ளிட்ட தொலைநோக்கு திட்டங்களில் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

காங்கிரஸ் கட்சியி்ன் 130-வது ஆண்டையொட்டி நாளை தலைநகர் டெல்லியிலுள்ள அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைமையகத்தில் கட்சிக் கொடியை ஏற்றி வைத்து அக்கட்சியின் தலைவர் சோனியா காந்தி உரையாற்றுகிறார். சிறிது நேரம் மட்டுமே நடக்கும் இந்த நிகழ்ச்சியானது வந்தே மாதரம் என்ற முழக்கத்துடன் துவங்கி தேசிய கீதத்துடன் இனிதே நிறைவு பெறுகிறது. இந்நிகழ்ச்சியில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொள்ள உள்ளனர். 

2009-ல் 206 இடங்களை கொண்டிருந்த காங்கிரஸ் மக்களவை தேர்தலில் 44 இடங்களை மட்டுமே பெற முடிந்தது. அண்மையில் நடந்து முடிந்த மகாராஷ்டிரா, ஹரியானா, காஷ்மீர் மற்றும் ஜார்கண்ட சட்டப்பேரவை தேர்தலிலும் காங்கிரஸ் கட்சி சோதனையையே சந்தித்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

  • கருத்துக்கள உறவுகள்

ஹ்ம்ம்.... பொல்லுப் பிடிக்கிற வயது.
130 வயசாகியும், காங்கிரசால்... இந்தியாவுக்கு, எந்த பிரயோசனமும் கிடைக்கவில்லை.
மாறாக... உலக நாடுகளில், அவமானத்தையே.... அது பெற்றுக்  கொடுத்தது.
வந்தே... மாதரம் என்று முழங்கி விட்டு, கல்கண்டை சாப்பிட்டு விட்டு... குப்புறப் படுக்க வேண்டியதுதான்.

ஹ்ம்ம்.... பொல்லுப் பிடிக்கிற வயது.

130 வயசாகியும், காங்கிரசால்... இந்தியாவுக்கு, எந்த பிரயோசனமும் கிடைக்கவில்லை.

மாறாக... உலக நாடுகளில், அவமானத்தையே.... அது பெற்றுக்  கொடுத்தது.

வந்தே... மாதரம் என்று முழங்கி விட்டு, கல்கண்டை சாப்பிட்டு விட்டு... குப்புறப் படுக்க வேண்டியதுதான்.

உங்களுக்கு விளங்கியது இந்த உலகத்திற்கு விளங்கவில்லை 

அல்லது மற்ற மாதிரியோ . :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்
5.3.1948 இல் அகில வங்க மாணவர் சம்மேளனத்தின் வருடாந்த பொதுக்கூட்டத்தில் இந்திய போல்ஷிவிக்-லெனினிஸ்ட் கட்சியின் பிரதிநிதியாக கலந்துகொண்டு நிகழ்த்திய சொற்பொழிவு.
 
''சுதந்திரம்'' என்னும் பெயரில் முதலாளித்துவ அமைப்பு முறையை பாதுகாப்பதற்காக பிரித்தானிய ஏகாதிபத்தியத்திடமிருந்து இந்திய முதலாளித்துவத்தின் கைகளின் அதிகாரம் கையளிக்கப்பட்டமை இந்திய உபகண்டத்தின் இலட்சக்கணக்கான மக்களின் எவ்விதமான அரசியல், சமூக, வர்க்கப் பிரச்சனைகளையும் தீர்த்துவிட முடியாது என்பதை நான்காம் அகிலத்தின் ஸ்தாபகரான லியோன் ட்ரொட்ஸ்கி 1939ல் ''இந்திய தொழிலாளர்களுக்கு ஒரு கடிதம்'' என்ற தலைப்பில் எழுதப்பட்ட கடிதத்தில் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றார்.
 
அதில் அவர் பின்வருமாறு குறிப்பிடுகின்றார் ''இந்த சந்தர்ப்பத்தில் பிரித்தானியாவின் மோசமான ஒடுக்குமுறை ஆட்சிக்கு எதிரான சிறிய ஒரு அடியைத்தானும் முன்னெடுக்க தான் நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளதாக இந்திய முதலாளித்துவம் உணருகின்றது. தொழிலாள வர்க்கம் இந்த முன்னெடுப்பை ஆதரிக்கவேண்டும். ஆனால் அதை அவர்கள் தமது சொந்த வழிமுறைகளான, பாரிய பொதுக்கூட்டங்கள், துணிவுகரமான முழக்கங்கள், வேலைநிறுத்தங்கள், ஆர்ப்பாட்டங்கள் இன்னும் தீர்மானகரமான போர் நடவடிக்கைகளால் மேற்கொள்ளவேண்டும். இது சக்திகளுக்கிடையிலான உறவினாலும் சந்தர்ப்ப சூழ்நிலைகளினாலும் தீர்மானிக்கப்படும். குறிப்பாக இதை செய்வதற்கு தொழிலாள வர்க்கம் தான் சுயாதீனமாக இருக்கவேண்டும். முதலாளித்துவத்தில் இருந்து முற்றிலும் சுயாதீனமாக இருப்பது என்பது மிகவும் அத்தியாவசியமானதாகும். இது இந்தியாவில் பெரும்பான்மையாக உள்ள விவசாயிகள் மீதான தனது ஆதிக்கத்தை செலுத்துவதற்கு மிக முக்கியமானது. தொழிலாள வர்க்கத்தால் தான் ஒரு துணிவுகரமான புரட்சிகரமான முன்னோக்கை முன்வைப்பதன் மூலம் பல இலட்சக்கணக்கான விவசாயிகளை தன் பின்னே அணிதிரட்டி சொந்த ஒடுக்குமுறையாளர்களுக்கும் பிரித்தானிய ஏகாதிபத்தியத்திற்கும் எதிரான போராட்டத்திற்கு தலைமை தாங்கி முன்நடத்த முடியும்''.
 
இரண்டாம் உலகயுத்தத்தின் முன்னர் எழுதப்பட்ட இந்த வார்த்தைகள் முழுமையாக உறுதிப்படுத்தப்படுள்ளன. 1947-ல் இந்தியா துண்டாடப்பட்டதானது, தேசிய முதலாளித்துவம் ஏகாதிபத்தியத்துடன் கூட்டமைத்து ஜனநாயக தேசிய போராட்டத்தை கருச் சிதைத்ததுடன் அடையாளமாயிற்று. பெயரளவிலான சுதந்திரம் பரந்த அளவிலான தொழிலாளர், விவசாயிகளுக்கு அவர்களின் சமூக நிலைமைகளில் எந்த முன்னேற்றத்தினையும் கொண்டு வரவில்லை. தேசிய முதலாளித்துவம், தமது நாடுகளை ஏகாதிபத்தியத்தின் பொருளாதார ஆதிக்கத்திலிருந்து விடுவிக்கவோ அல்லது ஜனநாயகப் புரட்சிகளுடன் வரலாற்று ரீதியில் இணைந்த எந்த ஒரு அடிப்படை கடமைகளையும் நிறைவேற்றவோ தகுதியற்றது என்பதை நிரூபித்துள்ளது. இரு பெருவணிக கட்சிகள் கடந்த இரு தசாப்தங்களாக ஈவிரக்கமற்று சுமத்திய பெருவணிக பொருளாதார கொள்கைககள் சமூகத்தின் ஒரு சிறு அடுக்கை செல்வம் கொழிப்பதாக ஆக்கியுள்ள அதேவேளை, ஏற்கனவே பெரும் வறுமையில் வாழ்ந்து கொண்டிருக்கும் நூற்றுக்கணக்கான மில்லியன் மக்களுடைய பொருளாதார பாதுகாப்பின்மை, இடர்பாடுகள் ஆகியவற்றை பெருக்கவும் செய்துள்ளன. இந்திய விவசாய அமைச்சரே அண்மையில் பாராளுமன்றத்தில் அறிவித்தபடி கடன் தொல்லைகளின் காரணமாக 1995லிருந்து சுமார் 1,36,000 விவசாயிகள் தற்கொலை செய்துள்ளனர். இன மற்றும் மத சிறுபான்மையினர் மீதான ஒடுக்குமுறை தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்தியாவின் சுதந்திரம் என்றழைக்கப்படுவதின் 60 வது ஆண்டு நிறைவடைந்து கொண்டிருக்கும் வேளை, கொல்வின் ஆர்.டி. சில்வா இந்திய போல்ஷிவிக் லெனினிஸ்ட் கட்சியின் தலைவராக இருந்த காலத்தில் அவர் ஆற்றிய உரையை நினைவுகூரூவது பொருத்தம் எனக் கருதி வலைத் தளத்தில் பிரசுரிக்கிறோம்.
 
தோழர்களே, நண்பர்களே!
 
தூர இலங்கையில் இருந்து உங்களின் மாநாட்டை தொடக்கி வைத்து உரையாற்றுமாறு என்னை அழைத்தது உண்மையில் ஒரு கௌரவமாகும். நான் அதை பெருவிருப்புடன் ஏற்றுக்கொண்டதற்கான காரணம், இது எனக்கு அளிக்கப்பட்ட தனிப்பட்ட கௌரவமாக அன்றி எனது கட்சியை கௌரவிப்பதாக இருந்ததே. ஆதலால் நான்காம் அகிலத்தின் பகுதியான இந்திய போலிஷிவிக்- லெனினிஸ்ட் கட்சியின் பிரதிநிதி என்ற முறையில் இச்சந்தர்ப்பத்தில் உங்கள் மத்தியில் உரையாற்ற வாய்ப்பு கிடைத்ததையிட்டு மிக்க மகிழ்ச்சியடைகிறேன் என்பதை கூற என்னை அனுமதிக்கவும்.
 
காந்தி படுகொலை
 
இலங்கையில் ''சுதந்திரம்' என்பதின் கொண்டாட்டங்களின் 10 நாட்களின் பின் நான் இங்கு வந்துள்ளேன். ஆதலால் நான் இந்த சுருக்கமான அறிமுகத்தின் பின்னர், பிரித்தானியா, அதன் காலனிகளான இந்தியா, பர்மா, இலங்கைக்கு தருவதாக கூறும் ''சுதந்திரம்'' பற்றிய பிரச்சனைக்கு நேரடியாக செல்லவேண்டும். ஆனால் வரலாறோ வேறுவிதமாக ஆணையிட்டுள்ளது. பிரச்சனைக்கு இறங்குவதற்கு முன்னர் காந்தி படுகொலை, அவரின் வாழ்க்கை, மரணம் பற்றிய பிரச்சனைகளையும் பற்றி பேசும் அவசியம் ஏற்பட்டுள்ளது. இப்பிரச்சனைகளில் இருந்து தொடங்குவோமாக:
 
முதலாவது பிரச்சனை, அவரது படுகொலை பற்றிய எமது நிலைப்பாடு என்ன என்பதாகும். காந்தி இறந்தது சாதாரண கொலையாளியின் கைகளால் அன்றி அரசியல் கொலையாளியின் கைகளாலாகும். நாதுராம் விநாயக் கோட்சே அரசியல் ரீதியில் செயற்பட்டுள்ளான். இவ்விடயத்தினால் மட்டுமே அவன் பகவத் சிங்கிற்கு சமமானவன். ஆனால் பகவத் சிங் பற்றிய எமது நிலைப்பாடு கோட்சே பற்றிய நிலைப்பாட்டிலிருந்து பெரிதும் வேறுபட்டது. அது ஏன்?
 
இதற்கான பதில் படுகொலைக்கு கையாண்ட வழிமுறையினால் அன்றி, எதிர்பார்ப்பிலேயே தங்கியுள்ளது. ஒடுக்குவோருக்கு எதிரான ஒடுக்கப்பட்டோரின் வெறுப்பின் சாயல் தன்னும் கோட்சேயின் பயங்கர நடவடிக்கையில் இல்லை. இது கண்டனத்திற்குரிய காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கையாகும். கோட்சேயை தூண்டியது, பகவத் சிங்கிடம் கொதித்துக் கொண்டிருந்தது போன்ற சுரண்டப்படுவோரின் வெறுப்பு அல்ல. இது மத-இன வெறுப்பாக கொதிக்கும் குருட்டுத்தனமான காலவதியான துவேசமாகும்.
 
அவன் வெறுத்த ''தவறு", மனிதனை மனிதனோ அல்லது வர்க்கத்தை இன்னொரு வர்க்கமோ சுரண்டுவது அன்று, ஒரே அரசினுள் பல்வேறு சமூகங்களுக்கிடையே வேறுபாடு காட்டக்கூடாது என்பதாகும். அவன் பயங்கரமான ஒர் இனவெறியன். பேரின இனவெறியன். அவனது கொலையை பாதுகாக்கமுடியாமல் இருப்பதற்கு காரணம் அவன் கையாண்ட வழிமுறையின் தவறு மட்டுமின்றி அதன் இலக்கு ஆயிரம் பங்கு பிழையாக இருந்ததே.
 
காந்தியின் இன்றியமையாத முதலாளித்துவ அரசியலை எதிர்த்து வாழ்நாள் முழுவதும் போராடிய இந்தியாவின் பாட்டாளி வர்க்க புரட்சியாளர்களுக்கு காந்தி படுகொலைக்கு எதிரான எதிர்ப்பக்கத்திற்கு ஆதரவு வழங்குவதில் எவ்வித தடையுமில்லாமைக்கு காரணம் அதுவே. நாம் இந்த படுகொலையை எந்தவொரு மனிதரும் செய்வதைப்போலவே நன்கு நேர்மையுடனும் அதைவிட சரியாகவும் கண்டிக்கின்றோம்.
 
இவ்வளவற்றையும் சொன்னபின்னரும் இன்னும் சொல்வது அத்தியாவசியமாக உள்ளது. காந்தியின் படுகொலை இனவாதம் பற்றியும், தனிநபர் பயங்கரவாதம் பற்றியும் ஒரு படிப்பினையாகும். இது அஹிம்சை பற்றிய படிப்பினை அல்ல. இதன் மூலம் நான் என்ன கருதுகின்றேன். அது இனவாதத்தை பற்றிய படிப்பினை என்பது எவருக்கும் தெரியும். நொந்துபோன சரீரத்தையும், இருபக்கமும் இனவாதிகளிடையே பிரமாண்டமான செல்வாக்கை உண்டாக்கியவருமான இம்மனிதனை படுகொலை செய்தமை பாகிஸ்தானுக்கும் இந்திய யூனியனுக்கும் இடையே நடைபெற்றுவரும் நடவடிக்கைகளை பெரும் வெளிச்சம்போட்டு காட்டுகின்றது.
 
மின்னலை ஒத்த இக்காலத்தின் பின்னர் மனிதர்கள் தாம் புதையுண்டுபோகும் பாதாளத்தை கண்டனர். எப்போதாவது என்றாலும் இதில் இருந்து மீளவேண்டின் உடனடியாக அங்ஙனம் செய்யவேண்டும் என்பதை அவர்கள் இதன்மூலம் விளங்கிக்கொண்டனர்.
 
அவன் எதிர்பார்த்த விளைவை விட அது முற்றிலும் வேறுபட்டபோதிலும் உண்மையில் கோட்சே பெற்ற தேட்டம் இதுதான். இதன் மூலம் அவன் தனிநபர் பயங்கரவாதத்தின் பயனற்ற தன்மையை மக்களுக்கு மீண்டும் நினைவூட்டினான். சில தனிநபர்களை ஒழித்துக்கட்டுவதன் மூலம் ஒரு அமைப்பை நீக்கிவிட முடியாது. அவன் எவ்வளவுதான் திடசங்கற்பம் கொண்டிருந்தாலும்கூட, எவ்வளவுதான மேதாவியாக இருந்தாலும்கூட ஒரு தனிப்பட்ட மனிதனின் முயற்சியை சமூக சக்திகளின் இயக்கத்திற்கு பதிலீடாக்கிவிட முடியாது.
 
வியப்பிற்குரிய இன்னொரு விடயம் என்னவெனில், கோட்சேயின் தவறும், காந்தியின் தவறும் ஒரேவகையாக இருப்பதுதான். அவரும் கூட தனிப்பட்ட முயற்சியால் சமூக சக்திகளை அணைகட்டி திருப்புவதில் ஈடுபட்டார். அவரது முயற்சியின் தீவிரம் அவரது தவறை அளக்கும் கருவியாகிற்று. தனது அவநம்பிக்கை, மனத்திடம், முன்மாதிரி மூலம் இனவாதத்தை, சிறப்பாக இந்து இனவாதத்தை முடிவிற்கு கொண்டுவரக்கூடிய ஒரு மனிதர் இருந்திருப்பாரேயானால் அவர் காந்தியே. அவரது தோல்வி, ஒரு தனியாள் எவ்வளவுதான் மேதாவியாக இருந்திருந்தாலும் அமைப்பிற்கு பதிலீடாகாது என்பதை மீண்டும் நிரூபித்தது.
 
காந்தி ஒருவரால் இந்தியாவின் இனவாதத்தை முடித்துவிட முடியாமல் போனது போலவே கோட்சே ஒருவனாலும் அதை வெற்றிக்கு இட்டுச்செல்ல முடியாது. இம்மோதலை தீர்க்க வேறு சக்திகளும் வேறுவழிமுறைகளும் தலையிட்டு ஆகவேண்டும். அவை நிட்சயம் தலையிடவே செய்யும்.
 
இந்த சக்திகள் என்ன? நான் உடனடியாக நேரடிப்பதிலளிக்கின்றேன். அதுதான் வர்க்கப்போராட்ட சக்திகள்.
 
நாம் நினைவில் வைத்திருப்போமாக! இனவாதம் தவறானது. ஏனெனில் அது சுரண்டுவோருக்கும், ஒடுக்குவோருக்கும் இரகசியமாக சேவை செய்கின்றது. இனவாதம் சுரண்டப்படுவோரையும், ஒடுக்கப்படுவோரையும் சரியான போராட்ட இலக்குகளில் இருந்து திசைதிருப்புகின்றது. தவறான போராட்டங்களுக்கும், இலக்குகளுக்கும் தள்ளிவிடுகின்றது. சுரண்டப்படுவோரின் மனதில் அது சுரண்டல் அமைப்பை தூக்கிவீசும் அவசியத்தில் இருந்து வேறுதிசையில் திருப்புகின்றது. அது அவர்களை அநாவசியமாக நச்சுத்தனமான மோதல்களுக்குள் தள்ளிவிடுகின்றது. அம்மோதல்கள் அவர்களை பொதுவான சுரண்டலாளர்களுக்கும், ஒடுக்குவோருக்கும் முன்னிலையில் அடிபணியச் செய்கின்றது.
 
வங்காளத்தை பொறுத்தமட்டில் இப்படிப்பினையை சுட்டிக்காட்ட வேண்டுமா? தேசிய எல்லைகளை திணிப்பதன் மூலம் கிழக்கு வங்காள முஸ்லீம் விவசாயிகள் மத்தியில் அவர்களது இந்து நிலச்சுவாந்தர்களை பற்றி இருந்து வந்த வெறுப்பான நினைவுகளை ஒழித்துவிட முடியவில்லை. வர்க்கத் தேவைகளில் இருந்து இனவாத தேவைகளுக்கு திசைதிருப்பப்பட்டனர். பின்னர் அதிலும் அவர்கள் நடுத்தெருவில் விடப்பட்டனர்.
 
வங்க படிப்பினைகள்
 
வங்கம், முஸ்லீம் லீக்கின் பிரச்சாரத்தை போலவே இந்து மகா சபையின் எதிர்ப்பிரசாரத்தையும் மறந்துவிடவில்லை. 1945ம் ஆண்டின் கடைப்பகுதிகளில் எழுச்சி கண்டுவந்து வேலைநிறுத்த நிலைமை கல்கத்தாவின் இனவாத மோதல்களால் எங்ஙனம் சீர்குலைக்கப்பட்டது என்பதை வங்கம் இலகுவில் மறந்துவிடவில்லை. எல்லாவற்றிற்றுகும் மேலாக அழிவுமிக்க இனவாத அலையில் இருந்து தமது பிரதேசங்களை பாதுகாக்கும் பொருட்டு வேலைநிறுத்த தொழிலாளர்கள் செயற்பட்டவிதம் வங்கத்திற்கு ஞாபகம் இல்லாமலில்லை.
 
பிற்போக்கான இனவாதத்தை ஒழித்துக்கட்டுவதற்கான ஒரேவழி சோசலிசத்திற்காக இடம்பெறும் முற்போக்கு போராட்டம் என்பதை சுட்டிக்காட்டுவது இன்று அவசியமா?. தமது நிலவுடமை- முதலாளிகளுக்கு எதிரான விவசாயிகள்- தொழிலாளர்கள் வர்க்கப் போராட்டம் உச்சகட்டம் அடைந்ததும் இனவாதப் போராட்டம் இந்தியாவின் சகல பாகங்களிலும் மேலும் மேலும் பின்னுக்கு தள்ளப்பட்டுவிடும். வர்க்கப் போராட்டத்தின் அலைவீச்சு தணிந்ததும் சுரண்டலாளர்கள் இனவாத ஆயுதத்தை பெறுவது மிகவும் கடினமாகிவிடும். இப்பிரச்சனை பற்றியும், இது தொடர்பான எமது திடசங்கற்பம் குறித்தும் இதுதான் வரைவிலக்கணம்.
 
வர்க்கப் போராட்டமே சிறந்த வழிமுறை
 
வர்க்கப் போராட்டம் இனவாதப் போராட்டத்தைவிட எவ்வித்திலும் அஹிம்சை கூடியதல்ல. நாம் கண்டுள்ளவாறு இனவாதப் போராட்டத்தை ஒழித்துக்கட்டுவதற்கான உண்மையானதும், உறுதியானதுமான மார்க்கம் வர்க்கப் போராட்டமே. இனவாதத்தைப் பற்றிய பிரச்சனையில் ஹிம்சை, அஹிம்சை என்ற வார்த்தகைளை முன்வைப்பது தவறானது, மோசடியானது. எனவேதான் நான் ஆரம்பத்திலேயே கூறினேன், காந்தியின் படுகொலை இனவாதத்தையும் தனிநபர் பயங்கரவாதத்தையும் பற்றிய படிப்பினையே தவிர அஹிம்சையின் படிப்பினை அல்லவென்று.
 
காந்தியின் படுகொலையின் நிழல்சுவடுகளின் கீழ் மேற்சொன்ன பிரேரணையை இப்போது வலியுறுத்துவது அவசியம். மரணம் இடம்பெற்ற சூழ்நிலைகள், அதற்கு பலியான ஆளுக்குள்ள பொதுஜன தனிமனித வழிபாடு என்பவற்றை வேண்டுமென்றும், முரட்டுத்தனமாகவும், திடீரெனவும் பாவித்து எவ்விதமான நடுநிலையான ஆய்வுக்கும் உள்ளாக்காமல் ஒரு கோட்பாட்டை தட்டியெழுப்பி முண்டுகொடுக்க முயற்சி செய்யப்பட்டுள்ளது.
 
மார்க்சிஸ்டுக்களாகிய நாம் நீண்ட காலத்திற்கு முன்னரே அக்கோட்பாட்டை வர்க்கப் போராட்டத்தின் வெளிச்சத்தில் ஆராய்ந்து அதன் வர்க்க அர்த்தத்தை காட்டியுள்ளோம். அதனால் இச்சந்தர்ப்பத்தில் மீண்டும் அதனை இங்கு ஆய்வது அவசியமில்லை. சமூக எதிர்பார்ப்பு பற்றிய பிரச்சனை என்னெவெனில், சுரண்டல் நிலவும் ஒரு சமுதாயத்தில் எந்தவொரு காலத்திலும் அஹிம்சை இருக்க முடியாது. மனித குலத்திற்கு கிடைக்கும் ஒரே அஹிம்சை, சமுதாயம் வர்க்கமற்ற சமுதாயமாகும்.
 
மார்க்சிஸ்டுக்களின் பங்கு
 
ஆதலால் அஹிம்சையை வெகுஜனங்களுக்கு ஒரு மதமாகவும், சுரண்டலாளர்களின் வர்க்க ஆயுதமாகவும் மாற்ற விரும்புபவர்களுக்கு நாம் நினைவூட்டுவோம்; வர்க்கப் போராட்டத்தின் இலக்கு, வர்க்கங்களை ஒழிப்பதே. அத்தோடு வர்க்க சமுதாயத்தை ஒழிப்பதற்கான ஒரேவழியும் வர்க்கப் போராட்டத்தை அபிவிருத்தி செய்வதாகும்.
 
ஆதலால் நிஜமாகவே அஹிம்சையை அடைய விரும்புவோர் சுரண்டப்படுவோரினதும், ஒடுக்கப்படுவோரினதும் அணியில் நின்று வர்க்கப் போராட்டத்திற்கு வரவேண்டும். அப்போராட்டத்தை கண்டனம் செய்யக்கூடாது. சமூக இலக்கு என்ற விதத்தில் அஹிம்சை அவ்வளவுதான். அரசியல் ஆயுதம் என்ற விதத்தில் அதன் பணி என்ன? இங்கு நாம் விளைவு, மார்க்கம் பற்றிய புகழ்பெற்ற பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்கின்றோம். அதில் நான் கைவைக்கவில்லை. அதற்கு பதிலாக நான் இப்பிரச்சனையின் உத்தியோகபூர்வ பேச்சாளர்களின் நடவடிக்கைகளை பரீட்சித்து ஆய்வு செய்கின்றேன். இந்தியாவின் இன்றைய அரசாங்கம் அஹிம்சையை உத்தியோகபூர்வமான முறையில் கடைப்பிடிப்பதாக கூறிக்கொள்கின்றது. ஆனால், அது இன்றைய தருணத்தில் காஷ்மீரில் பாக்கிஸ்தானுக்கு எதிரான பிரகடனப்படுத்தாத யுத்தத்தில் ஈடுபட்டுள்ளது.
 
காந¢தி உயிரோடு இருந்த காலத்திலேயே இந்த யுத்தத்தை எதிர்த்ததில்லை. ஆதலால், அவரே அக்கருத்துப்பாட்டின் குறைபாடுகளை ஒத்துக்கொண்டார் என்பது தெளிவு. வெளிநாட்டு உறவுகளின் அரங்கில் இது சரிப்பட்டுவரவில்லை.
 
அவ்வாறாயின் இது உள்நாட்டு உறவுகளின் அரங்கில் சரிப்பட்டு வந்ததா? இதற்கான பதில் ஆம், இல்லை என்ற இரண்டுமே. அதாவது ஆளுவோரை பொறுத்தமட்டில் 'இல்லை', ஆளப்படுவோரை பொறுத்தமட்டில் 'ஆம்'. ஆளும் வர்க்கத்தின் ஒருங்கமைக்கப்பட்ட ஒடுக்குமுறை அரசுக்கு ஆளப்படுவோரின் அஹிம்சையுடன் முகம் கொடுக்கப்படவேண்டும். ஒரு அரசியல் கருத்துப்பாடு என்ற முறையில் அஹிம்சையின் நிஜமான (வர்க்க) உள்ளடக்கம் இதுதான்.
 
அஹிம்சை நிசமானதாக இருக்கவேண்டும் என்றால் இது இருவழிப்பாதையாக இருக்கவேண்டும் என கூறுவதற்கு எமக்கு உரிமை உண்டு. ஆனால் இன்றோ அது பெரிதும் ஒருவழிப்பாதையாகவே உள்ளது. ஆயுதபாணிகளான சுரண்டுவோரின் முன்னணியில் சுரண்டப்படுவோரை நிராயுதபாணியாக்கும் ஒரு கோட்பாட்டை, சுரண்டுவோரை பாதுகாத்து சுரண்டலை நீடிக்கின்ற கோட்பாடு என அழைக்க எமக்கு உரிமை உண்டு. சுரண்டும் அன்னத்திற்கு குழம்பாக இருப்பது, அன்னப்பேடைக்கும் குழம்பாக இருக்கவேண்டும் என்பதை அங்கீகரிக்க கோர எமக்கு அருகதை உண்டு.
 
காந்தியின் படுகொலைப் பிரச்சனையில் இருந்து எழும் பிரச்சனை இவ்வளவுதான். தோழர்களே இனி நாம் இன்றைய அரசியல் நிலைமையை நோக்குவோம்.
 
இந்தியப் பிரிவினை
 
இந்தியாவின் இன்றைய அரசியல் நிலைமையை முக்கியமாக இரண்டு பலம்வாய்ந்த காரணிகள் ஆளுகின்றன. அவையாவன, இந்தியாவை பிரிவினை செய்வது மற்றும் இந்திய முதலாளித்துவத்திற்கும் பிரித்தானிய ஏகாதிபத்தியத்திற்கும் இடையில் புதிய உறவுகளை உண்டுபண்ணுவதுமாகும். இவற்றோடு மாநிலங்களின் பிரச்சனைகளும், தொழிலாளர்கள் விவசாயிகளுடனான புதிய ஆட்சியாளர்களின் உறவுமுறையும் உண்மையில் இணைந்துள்ளன. இக்காரணிகளின் இடைமருவு உறவுகளிலேயை அரசியல் நிலைமையின் அபிவிருத்தி தங்கியுள்ளது.
 
மிகவும் சுலபமாக முஸ்லீம் லீக்கின் மீது மட்டும் சுமத்தப்படும் இந்திய பிரிவினைக்கான பொறுப்பு சொல்லவேண்டியது, லீக்கின் அரசியல் அன்றி காங்கிரசின் அரசியலேயாகும். பிரித்தானிய ஏகாதிபத்தியவாதிகள் தொடர்பான காங்கிரசின் அரசியல், போராட்ட அரசியலாக அல்லாது சமரச அரசியலாகவே இருந்தது. சமரச அரசியல், பிரிவினை அரசியலை கொழுக்கவைத்ததுடன் அதற்கான தொடக்கி வைப்பினை ஏகாதிபத்தியவாதிகளிடம் விட்டுவைத்தது.
 
இந்தியா கூறுபோடப்பட்டதற்கன காரணம், எழுச்சிகண்டுவந்த வெகுஜனங்களின் விருப்புக்கு மாறாக இந்திய முதலாளிகள் பிரித்தானிய ஏகாதிபத்தியவாதிகளிடம் அடிபணிந்து தீர்வுகாண முயன்றதேயாகும். வெகுஜன இயக்கத்தை முதலாளித்துவ வர்க்கம் கருச்சிதைவு செய்ததன் பெறுபேறாகவே பாக்கிஸ்தான் தோன்றியது.
 
பிரிவினையும் இனவாதத்திற்கு தூண்டுதலும்
 
பிரிவினையின் துன்பியல், அதன் சிருஷ்டிகர்த்தாக்களின் பிரகடனம் செய்யப்பட்ட இலக்குகளில் இருந்தே பெருக்கெடுக்கின்றது. ஒரு புறத்தில் இந்தியா என்ற உயிர்வாழும் உடம்பு கொடூரமாக வெட்டப்பட்டது. மறுபுறத்தில் இரண்டு உயிர்வாழும் ''தேசிய இனங்கள்'' (பஞ்சாப், வங்க இனங்கள்) வெட்டிப்பிரிக்கப்பட்டன. இப்பிரிவினை, ஒரு புறத்தில் இனப்பிரச்சனைக்கு ஒரு தீர்வாகவும், மறுபுறத்தில் சுதந்திரத்திற்கான வழிவிட்டுக்கொடுப்பாகவும் காட்டப்பட்டது. ஆனால் இரண்டும் பொய் என்பது இப்போது நிரூபிக்கப்பட்டுள்ளது.
 
பிரிவினை ஒருபுறத்தில் ஏகாதிபத்திய அடிமைத்தனத்தின் தளைகளை வெகுஜனங்களுக்கு மீண்டும் மாட்டும் ஒரு வழியாக நீரூபிக்கப்பட்டுள்ளது. மறுவிதத்தில் அது இரண்டு அரசுகளை யுத்தத்தில் ஈடுபடச்செய்யும் எண்ணத்திற்கு இழுக்கும் மோசடி மார்க்கமாகவும் நிரூபிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு செய்யப்படக்காரணம் பரஸ்பரம் இனவாத உணர்வுகளால் உள்நாட்டு குழப்பங்களில் இருந்து வேறு திசையில் திருப்புவதே. யுத்தம் (காஷ்மீரிலும், ஜூகைத்திலும் இன்னமும் ஏற்படாவிடினும்) ஏற்படலாம். ஆனால் அதற்கிடையே உள்நாட்டு குழப்பங்கள் நாசகாரமான முறையில் ஏற்பட்டுள்ளன.
 
இந்தியாவின் பிரிவினை, மிகவும் மோசமான இனவாதத்திற்கு இடமளித்தது. இந்தியா பிரிந்துபோகாமல் அதைத் தீர்ப்பதற்கான வழி இருந்தது. இனவாதத்தை இரண்டு அரசுகளாக தூக்கிப்பிடிக்கும் முயற்சி, இரண்டு அரசுகளினதும் இனவாதத்தை உக்கிரமாக்கியது. இனவாதம், பிரிவினையாளர்களின் வெறிபிடித்த தர்க்கத்தின் படி, தனித்துவமான அரசானது தேசிய அபிலாசையாயிற்று.
 
பிரிவினைக்கு பின்னர் இந்துமகாசபைக்கு ஆதரவு திரண்டதானது தற்செயலானதல்ல. அவர்கள் நவீனமானவர்களாக இல்லாவிடினும், தர்க்கரீதியானவர்களாகினர். அவர்கள் ஆதிவாசிகளாகினும் விளங்கிக்கொள்ள கூடியவர்களாக இருந்தனர். அவர்கள் நேருவைப்போல் ஏமாற்றப்பட்டவர்களாகவோ அல்லது பட்டேலைப்போல் ஏமாற்றுபவர்களோ அல்ல. அவர்கள் முற்றிலும் அவர்களாக இருந்தனர். முஸ்லீம்களுக்கும் ஏனைய இனங்களுக்கும் எதிரான இந்துக்களாக விளங்கினர்.
 
காங்கிரசினால் தனது மூடி மறைக்கப்பட்ட இனவாதத்துடன் அவர்களை எதிர்த்துப்போராட முடியாமல் போனதோடு, அவர்களின் செல்வாக்கிற்கு அடிபணியவும் நேரிட்டது. கடந்த டிசம்பரில் கல்கத்தாவில் வல்லபாய் பட்டேல் நிகழ்த்திய பேச்சு அத்தகையது. அவை காந்தியின் வெறுப்பிற்கும் இலக்காகியது பிரசித்தம்.
 
நண்பர்களே, பிரிவினை எங்ஙனம் இலட்சோபலட்சம் பிரசித்திபெறாத அப்பாவி பஞ்சாபியர்களை கொன்றதோ அப்படியே காந்தியையும் கொன்றது. அவரின் மரணத்திற்கு நேரு-பட்டேல் அரசாங்கம் பொறுப்பு சொல்லவேண்டும். அதற்கு காரணம் போதியளவு பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யாமை அல்ல, அவை போலித்தமான கொள்கைகளின் பாரதூரமான விளைவுகள். அவர்கள் வடிக்கும் கண்ணீர் அவர்களின் அபத்தமான கொள்கைகளைப் போன்றே பயனற்ற ஒன்றாக தொடர்ந்து இருந்து வரும்.
 
அழகிய வார்த்தைகளாலோ அல்லது திடீர் வேலைகளாலோ இனவாதத்தை கொன்றுவிட முடியாது. இந்துமகா சபையையோ அல்லது ஏனைய தீவிர இனவாத இயக்கங்களை தடை செய்வதன் மூலமோ இனவாதம் செத்துவிடாது. ஆனால் இது நிச்சயமாக இடதுசாரிகளுக்கு எதிரான பிற்போக்கு தாக்குதலுக்கு வழிசமைக்கும். வலதுசாரிகளுக்கு எதிராக செயற்பட விஷேட அதிகாரங்களை கைப்பற்றும் அரசாங்கம் எப்பொழுதுமே அதை இடதுசாரிகளுக்கு எதிராக மூர்க்கமாக பயன்படுத்துவதிலேயே போய் முடிகின்றன. ஆதலால் இந்த அரசாங்கம் ஹிம்சையான முறைகளில் அஹிம்சையை பாதுகாக்கும் பொருட்டு 'இனவாதத்தையே', 'கம்யூனிசமாக' உச்சரிக்கிறதா என்பதை இட்டு நாம் விழிப்புடன் இருக்கவேண்டும்.
 
வங்கப் பிரிவினை
 
பிரிவினையால் இந்தியாவிற்கு ஏற்பட்ட துன்பகரமான விளைவுகளை வங்கத்தில் வசிக்கும் உங்களுக்கு நான் கூறவேண்டியதில்லை.
 
இந்தியாவின் அடுத்த முனையில் உள்ள பஞ்சாப்பை போலவே உங்களது சொந்த மாகாணம், மக்களின் தலைகளுக்கு மேலாகவும், மக்களுக்கு எதிராகவும் ராஜ்-காங்கிரஸ்-லீக் தீர்வுக்கு வசதி செய்யும் பொருட்டு உயிர் உடம்பு வெட்டி பிரிக்கப்பட்டுள்ளது.
 
பிரிவினைக்கு பின்னர் பஞ்சாப் கண்ட பயங்கரங்களில் இருந்து நீங்கள் தப்பியிருக்கின்றீர்கள். அதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் உண்டு. முதலும், முக்கியமானதும் நீங்கள் உரியகாலத்தில் மாபெரும் கல்கத்தா படுகொலைகளில் இருந்து படிப்பினையை பெற்றமை. இரண்டாவது, கிழக்கு வங்கம் ஜனநெருக்கடி நிறைந்த மாகாணமாக இருந்தபோதிலும் பாக்கிஸ்தானிலிருந்து தனிப்பட்டு தூரப்பிரதேசமாக இருந்தமை. ஆதலால், மேற்கு இந்தியாவின் படுகொலைகளின் பரஸ்பரத்தன்மை கிழக்கில் தற்போதுள்ள பரஸ்பர சகிப்புத்தன்மையுடன் ஒத்துப்போகின்றது. கேள்வி இதுதான்: இது எவ்வளவு காலம் நின்றுபிடிக்கும்?
 
இக்கேள்விக்கான பதில் வங்கத்தில் இருப்பதை பார்க்கிலும் நன்கு பரந்த சக்திகளிலும், அபிவிருத்திகளிலும் தங்கியுள்ளது. கிழக்கு வங்காளிகளிக்கும் மேற்கு வங்காளிகளுக்கும் இடையேயான உறவுகளை பார்க்கிலும் இந்திய யூனியனிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான உறவுகளின் நிலைமையே கிழக்கு, மேற்கு வங்கங்களுக்கு இடையிலான உறவை தீர்மானம் செய்கின்றன.
 
ஆனால் வங்க ஐக்கியத்திற்கான உந்துதல் ஆழமானதும், வரலாற்று பழமைமிக்கதுமாகும். அத்தோடு அது நீண்டகாலத்தில் சாத்தியமாவதை மறுக்கமுடியாதுமாகும். இந்நூற்றாண்டின் ஆரம்பத்தில் பிரிவினையை எதிர்த்து போராடிய மனிதர்கள், நூற்றாண்டின் நடுப்பகுதியில் வெறும் இனவாத விருப்புகளால் இன்னுமொரு பிரிவினைக்கு இடமளிப்பர் என எண்ண முடியாது. ஆதலால், ''தேசிய ஐக்கியத்திற்கான'' இன்றைய இனவாத பிரிவினையை தோற்கடிப்பது திண்ணம்.
 
பிரிவினையை தோற்கடிப்பதற்கான ''தேசிய'' இயக்கம் வெற்றிகண்டு பாக்கிஸ்தானை இந்திய யூனியனோடு மீண்டும் கொண்டுவரும் இனவெறி இயக்கத்திற்கு தூபம் போடுவதை தடைசெய்வதே நிஜப்பணியாகும். ஆதலால், பிரிவினைக்கோட்டின் இருபுறத்திலும் இருந்து சுயாதீனமாக மறு ஐக்கியத்திற்காக தொழிற்படுவோம். அப்பணியை இட்டு நிரப்ப இந்திய யூனியனிற்கும் பாக்கிஸ்தானுக்கும் இடையே நெருக்கடியை உண்டுபண்ணாத ஒரு வழியை கண்டுபிடிக்கவேண்டும்.
 
இதை செய்வது எப்படி? நிட்சயமாக இருபுறத்திலும் உள்ள பிற்போக்கு விஸ்தரிப்புவாதிகளுடன் இணைந்து அல்ல. அவர்களை எதிர்த்து சளைக்காது போராடவேண்டும். இன்றைய பணி என்னவெனில், வங்க ("மாகாண") த்தை இந்திய யூனியன் உள்ளேயோ அல்லது பாகிஸ்தானின் உள்ளேயோ பலாத்காரமான முறையில் மீண்டும் ஐக்கியமாக்குவது அல்ல. ஆனால், சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் வங்க ''தேசிய இனம்'' சுயவிருப்பின்பேரில் மீண்டும் ஐக்கியப்படுவதே.
 
இனவாதத்தின் நெம்புகோல் பிற்போக்கின் ஆயுதமாவதை தடுத்து, சமூக முன்னேற்றத்திற்கான ஒரு கருவியாக்கவேண்டின் இந்த விடயங்களை புரிந்துகொண்டு அதன் அடிப்படையில் தொழிற்பட வேண்டும். இந்தவிதத்தில், இன்னுமொரு விடயத்தை புரிந்துகொள்வது அவசியமாகும். இந்திய யூனியனுள்ளும், பாக்கிஸ்தானினுள்ளும் சோசலிசப் புரட்சியின் மூலமே வங்க தேசிய இனத்தை அதன் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் மீண்டும் ஐக்கியப்பட செய்யமுடியும். வங்க தேசிய இனம் வேறு சூழ்நிலைகளில் அவ்வுரிமையை பிரயோகிக்க உரிமை இல்லை.
 
ஆனால் இந்திய யூனியனினதும், பாக்கிஸ்தானினதும் சமூகப் புரட்சி என சொல்லும்போது, அது சோசலிச அடிப்படையில் மீண்டும் ஐக்கியம் கொண்ட இந்தியாவை மட்டுமே குறிக்கும். ஆதலால், முன்னோக்கு இதுதான்: ஒரு சோவியத் இந்தியாவில் ஒரு சோவியத் வங்கம். இந்த விதத்தில் தொழிலாளர் புரட்சிகர வேலைத்திட்டம் மட்டுமே, முற்போக்கான ரீதியில் ஐக்கிய இந்தியா போன்றே ஐக்கிய வங்க (பஞ்சாப்பினதும்) இலட்சியத்தை பூர்த்தி செய்துவைக்கும். முதலாளி வர்க்கத்தினால் பிற்போக்குத்தனமாக துண்டாடி வீசிய அதனை தொழிலாள வர்க்கத்தினால் மட்டுமே முற்போக்கான முறையில் ஐக்கியப்படச் செய்யமுடியும். இன்றைய காலப்பகுதியின் இயக்கவியல் அத்தகையதே.
 
இந்த சுதந்திரம்
 
இன்றைய இந்தியாவினுள் தெளிவாக புரிந்துகொள்ளவேண்டியுள்ள இன்னுமொரு விடயத்திற்கு இப்போது நான் செல்கின்றேன். ''மக்கள் பிரதிநிதிகள் சபை'', ''சுதந்திரம்'' போன்ற சகல அலங்காரங்களுக்கும் இடையையும் பிரித்தானிய ஏகாதிபத்தியம் இந்தியாவில் இருந்து வருகின்றது என்பது உண்மை. இந்தியாவில் இருந்து பிரித்தானிய ஏகாதிபத்தியத்தை வெளியேற்றுவது இன்னமும் பூர்த்தியாகிவிடவில்லை. அதை திட்டவட்டமாக தூக்கிவீசுவது இன்னமும் இட்டுநிரப்பப்படவேண்டும்.
 
மேற்சொன்ன கூற்றின் உறுதியானதும், அப்பட்டமானதுமான தன்மையினால் அதிர்ச்சியடையும் பலர் உங்கள் மத்தியில் இருக்கலாம். நேருக்கள், பட்டேல்களுடன் சேர்ந்து காந்தியும் சுதந்திரத்தை அறிவிக்கவில்லையா? தன்னோடு, பிரித்தானிய ஏகாதிபத்தியம் ஆட்சியில் இருந்து அகற்றப்பட்டுவிடும் என அலி பிரகடனம் செய்யவில்லையா? அப்படியானால், நாம் சுதந்திரம் அடைந்ததும் சங்கிலியால் தொடர்ந்தும் பிணைக்கப்பட்டிருப்பது எப்படி?
 
இப்பிரச்சனை கவனமாக ஆராயப்பட்டு, விளக்கப்பட வேண்டியுள்ளது. இதற்கு பதிலளிக்கமாட்டாதவன் அப்பாவி ட்ரொஸ்கிசவாதி ஆவான். நான் இப்பதிலை சுருக்கமாக விளக்குகின்றேன்.
 
சுதந்திரம் என்பது, யார் அரசாங்கத்தை கொண்டு நடத்துகின்றார் என்ற பிரச்சனையல்ல. பிரச்சனை அதற்கு எதிர்மாறாக, யாரின் நலன்களுக்கு, அதாவது எந்த வர்க்கத்தின் நலன்களுக்காக அரசாங்கம் கொண்டு நடாத்தப்படுகின்றது? இல்லாவிடின் ஒரு செம்மேனி அதிகாரத்துவம் வெள்ளைநிற அதிகாரத்துவத்தை நீக்கி அதன் இடத்தை பிடித்துக்கொண்டு சுதந்திரம் பற்றிய மாயையை பார்க்க முடிவதோடு மட்டுமன்றி, நிஜ சுதந்திரம் நிலவுகின்றது என்ற மாயையை பரப்பவும் முடியும்.
 
நாம் ஒரு உதாரணத்தை எடுப்போம். பிரித்தானியாவை இன்று தொழிற்கட்சி ஆளுகின்றது. ஆனால் எந்தவொரு மார்க்சிஸ்டும் பிரித்தானியா சோசலிசத்தை அடைந்துவிட்டது என காட்டமாட்டார். எல்லாவிதமான கூப்பாட்டு பிரச்சாரங்களுக்கு மத்தியிலும் அது பிரித்தானியாவின் முதலாளித்துவ வர்க்கத்தின் நலன்களின் பேரில் ஆட்சி செய்கின்றது.
 
இந்த கருத்தை இந்தியாவிற்கும் பிரயோகித்து பாருங்கள். இந்திய முதலாளித்துவ வர்க்கம் ஏகாதிபத்திய வாதிகளின் அதிகாரத்தை தம் கைக்குள் கொண்டு வந்தது உண்மைதான். ஆனால் அதனால் அவர்கள் நிர்வகிக்கும் அரசின் தன்மை மாற்றம் அடைந்ததா?
 
பிரித்தானியாவின் பிடி
 
இக்கேள்விக்கான பதில் நேரு, பட்டேல் குழுவின் உள்ளார்ந்த விருப்பங்களால் அன்றி வர்க்கங்களுக்கு இடையிலான முழு உறவுகளிலேயே தங்கியுள்ளது. அத்தோடு, இங்கு நாம் இரண்டு விடயங்களுக்கு முகம் கொடுக்கிறோம். முதலாவது, பிரித்தானியா இந்திய பொருளாதாரத்தையும் சுற்றிவளைத்துள்ள சமுத்திரங்களையும் தனது ஆதிக்கத்தின் கீழ் தொடர்ந்து வைத்திருக்கின்றது. வேறு வார்த்தைகளின் கூறுவதானால், இந்தியா மீதான பிரித்தானிய பொருளாதார, கடற்படை பிடி தொடர்கின்றது.
 
இரண்டாவது விடயம், இந்திய வெகுஜனங்களிடம் இருந்து ஏற்படும் தாக்கங்களுக்கு எதிராக, இந்திய முதலாளித்துவ வர்க்கம் பிரித்தானிய ஏகாதிபத்தியத்துடன் கூட்டுச் சேர்ந்து நிற்பதாகும். எனவே இன்றைய இந்திய அரசு, பிரித்தானிய ஏகாதிபத்தியத்தினதும், இந்திய முதலாளிகளினதும் கூட்டு நலன்களின் பாதுகாவலனாக உள்ளது. இந்த இரு சாராருக்கும் இடையே பிரித்தானிய ஏகாதிபத்தியவாதிகள், இன்னமும் செல்வாக்குமிக்கவர்களாக உள்ளனர்.
 
ஆதலால், இந்தியாவில் இடம்பெற்றிருப்பது சுதந்திரத்திற்கான இடைமருவல் அன்று. இந்திய முதலாளி வர்க்கத்துடனான அதன் கூட்டை மறுசீரமைப்பு செய்ததன் மூலம் நேரடி ஆட்சியில் இருந்து மறைமுக ஆட்சிக்கு ஏகாதிபத்தியவாதிகள் மாறிச்சென்றுள்ளதால் இந்திய காலனித்துவ அந்தஸ்து என்ற ஏணியின் உச்சத்திற்கு ஏறிவிட்ட போதிலும் அதிலிருந்து தேசிய சுதந்திரம் என்ற ஏணிக்கு பாய¢ந்துவிடவில்லை.
 
பிரித்தானிய ஏகாதிபத்தியவாதிகள் தமது ஆட்சியை துறந்துவிடவில்லை. அவர்கள் வியாபாரத்தின் பொறுப்பை தமது இந்திய பங்காளிகளிடம் ஒப்படைத்துவிட்டு பின்னணியில் நிற்கின்றனர். அவர்கள் தமது பொருளாதார, இராஜதந்திர, இராணுவ செல்வாக்குகளை நேரடியாகவும், மறைமுகமாகவும் பாவித்து முன்னேற ஆர்வமுள்ள தமது பங்காளிகளை ஒப்பந்தத்திற்கு அமைய நடக்கவைக்க முடியும் என நம்பிக்கை கொண்டுள்ளனர். வெகுஜனங்களுக்கு எதிரான தமது பரஸ்பர சார்புத்தன்மை காரணமாக தமது பங்காளிகள் ஒப்பந்தத்தை கௌரவிப்பார்கள் எனவும் நம்புகின்றனர்.
 
வெளிநாட்டு ஏகாதிபத்தியத்திற்கும் இந்திய முதலாளித்துவத்திற்கும் இடையிலான இந்த புதிய வேலைப்பங்கீட்டின் விளைவுகள் என்ன? முதல்விளைவு, இந்தியாவினுள் சரிந்துகொண்டிவரும் பிரித்தானிய ஏகாதிபத்தியத்தின் ஆட்சியை புதிய அடிப்படையில் உயிர்பெற செய்வது. ராஜ்-காங்கிரஸ் தீர்வின் மூலம் புதிய அரசியல் கட்டுக்கோப்பு வழங்கியுள்ள மறுசீரமைக்கப்பட்ட ஏகாதிபத்திய-முதலாளித்துவ கூட்டின் அடிப்படை அர்த்தம் இதுதான்.
 
பிரித்தானிய ஏகாதிபத்தியம் கால அவகாசம் பெற கொடுத்த முக்கியமான சலுகைகள் மூலம் இந்திய முதலாளித்துவ வர்க்கத்தை தமது விசுவாசமான பங்காளிகளாக்கிக் கொண்டுள்ளது. வேண்டும் என்றும் திட்டவட்டமான முறையிலும் செய்யப்பட்ட இத்தகைய மாற்றங்கள் மூலம் பிரித்தானிய ஏகாதிபத்தியம் தமது சமூக அடித்தளத்தை நிலவுடமையாளர்களிம் இருந்து தேசிய முதலாளித்துவத்திடம் கையளித்ததை இன்று நாம் இந்தியாவில் காண்கின்றோம்.
 
இந்தியாவின் இன்றைய நிலையின் இரண்டாவது விளைவு என்னெவெனில், பிரித்தானியா தொடர்ந்தும் பிரதான எதிரியாக (அதன் ஆட்சியே இன்றைய இந்திய அரசை இறுதியில் நின்றுபிடிக்க செய்துள்ளது) இருந்து வருகின்றபோதிலும் நாம் நேருக்கு நேர் எதிர்கொள்ளும் எதிரி இந்திய முதலாளித்துவ வர்க்கமே. இந்திய முதலாளித்துவம் முதலும், முக்கியமாகவும் மக்களை நசுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இறுதிக்கட்டத்தில் அப்பட்டமாக தலையிட பிரித்தானிய ஏகாதிபத்தியம் பின்னணியில் ஒத்துக்கொண்டுள்ளது.
 
மூன்றாவது முக்கியமான விளைவையும் கவனத்திற்கு எடுக்கவேண்டும். இன்று ஆய்வுகளில் பிரித்தானிய ஏகாதிபத்தியத்தின் இந்திய அரசியல் பலம் இராணுவரீதியாக தலையிடும் சக்தியினாலேயே தங்கியுள்ளது. இந்திய முதலாளித்துவத்திற்கு இன்று உலகின் ஏனைய ஏகாதிபத்தியங்களுக்கிடையே பிரித்தானிய ஏகாதிபத்தியத்திற்கு எதிரான சூழ்சிகளை கையாள பெருமளவு சுதந்திரம் இருந்ததற்கான இதற்கு காரணம்.
 
ஆனால் இராணுவத் தலையீட்டிற்கான வல்லமையும் (அத்தோடு தேவையும்) இராணுவ தலையீட்டிற்கான சாத்தியமும் ஒன்றல்ல. குறிப்பாக ஒரு தருணத்தில் நிலவும் அதிகார உறவுகளில் இது தங்கியுள்ளது. இந்தியாவிற்கும், பிரித்தானியாவிற்கும் இடையே உறவுகளில் மட்டுமல்ல சர்வதேச உறவுகளிலும் இது தங்கியுள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாக இராணுவத் தலையீடானது மறு ஆக்கிரமிப்பின் அவசியத்தையும் குறிக்கின்றது.
 
எனினும் இராணுவ தலையீட்டிற்கான சக்தி, தேவை என்பனவும் இராணுவ தலையீட்டிற்கான சாத்தியம் என்பதும் ஒன்றல்ல. இவை குறிப்பிட்ட ஒரு காலப்பகுதியில் இந்தியாவிற்கும் பிரித்தானியாவிற்கும் இடையே மட்டுமின்றி, சர்வதேசரீதியாக நிலவும் உறவுகளிலும் தங்கியுள்ளது. எவ்வாறாயினும் இராணுவத்தலையீடு என்பதன் மூலம் இராணுவரீதியில் மீண்டும் ஆட்சிக்குட்படுத்தும் அவசியம் குறிக்கப்படலாம். இந்தியா, அங்ஙனம் ஒவ்வொருவரும் விரும்பிய விதத்தில் ''பைகளுக்குள்'' போட்டுக்கொள்ளக்கூடிய கைக்குட்டை அல்ல.
 
வேறுவிதமாக கூறின், இந்தியாவினுள் தமது ஆட்சிமுறையை மீண்டும் அமைக்கும் பிரயத்தனத்தின் மூலம் பிரித்தானிய ஏகாதிபத்தியம் தம்மால் இலகுவில் நிர்வகிக்க முடியாத நன்கு பலம்வாய்ந்த சக்திகளை கட்டவிழ்த்துவிட்டுள்ளது (அதோடு உருவாக்கியும் உள்ளது) என்பதை வரலாறு நன்கு காட்டும்.
 
பிரித்தானியா இந்தியாவிற்கு வழங்கியிருப்பது சுதந்திரம் இல்லாததோடு, இந்திய முதலாளி வர்க்கத்தோடு அது கொண்டுள்ள சமரசம் பெரிதும் பிற்போக்கானது. ஆதலால் இந்திய முதலாளி வர்க்கம் அதை அடைவதற்கு தடையாக இருப்பதோடு பிரித்தானிய ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டம் இன்னும் முடிவிற்கு கொண்டுவரப்பட வேண்டியுள்ளது.
 
'பிரித்தானிய ஏகாதிபத்தியம் வீழ்க' என்பது இன்று நன¢கு தெளிவாக 'ஏகாதிபத்திய-முதலாளித்துவ கூட்டு வீழ்க', "தொழிலாளர்கள்-விவசாயிகள் அரசாங்கத்தை நோக்கி முன்னேறு" என்றாகியுள்ளது. அதாவது 'முதலில்' ஏகாதிபத்தியத்திற்கு எதிராக முதலாளித்துவத்துடனும், பின்னர் முதலாளித்துவத்திற்கு எதிராக தொழிலாள வர்க்கத்துடனும் என்ற பழைய தவறு இப்போது அப்பலமாகியுள்ளது. இது இன்னும், என்றும் தவறே. எமது பணி 'முதலும், பின்னரும்' அன்றி எப்போதும் சுரண்டுவோருக்கு எதிராக சுரண்டப்படுவோரோடு நிற்பதே.
 
காங்கிரஸ§ம் காங்கிரஸ் நிர்வாகமும்
 
இன்று இந்தியாவில் சக்திகளுக்கிடையேயான உறவு மேற்குறிப்பிட்ட விதத்தில் இருப்பதோடு, இந்திய யூனியனில் உள்ள இன்றைய அரசியலில் பெரும் பிரச்சனை இதுதான். காங்கிரஸ், காங்கிரஸ் நிர்வாகம் தொடர்பான சரியான நிலைப்பாடு என்ன? அவற்றுடன் தொடர்புபட்ட பணிகள் என்ன?
 
இன்று நான் பேச எதிர்பார்த்த அவசரமானதும், அவசியமானதுமான பிரச்சனையை அணுக எனக்கு இக்கேள்விகள் இடமளிக்கின்றன. அதாவது காங்கிரசின் தன்மை, இன்றைய அரசியலில் அதன் பாத்திரம் என்ன?
 
நான் திட்டவட்டமாகவும், தெளிவாகவும் கூறுகின்றேன். காங்கிரஸ் இந்திய முதலாளித்துவத்தின் அரசியல் கட்சி. அதன் ஆரம்பகாலம் தொடங்கி அது அங்ஙனமே இருந்து வந்துள்ளது. முன்னர் இந்த உண்மையை காணமுடியாமல் போனவருக்கு இது இன்று நன்கு தெளிவாகியுள்ளது.
 
பொதுஜன பாதுகாப்பு சட்டங்கள், வேலைநிறுத்த எதிர்ப்பு நடவடிக்கைகள், தொழிலாள வர்க்க போராளிகளை பழிவாங்குதல், வரிக்கொள்கைகள் போன்றவை இந்த விதத்தில் பிரமாண்டமான கல்வியை புகட்டியுள்ளன. முன்னொருபோதும் இல்லாத விதத்தில் காங்கிரசின் வர்க்கத்தன்மை மக்கள் முன்னே அம்பலமாகியுள்ளது. முதலாளித்துவ வர்க்கத்தின் முதலாளித்துவ கட்சியாகவே நடைமுறையில் காட்சி தருகின்றது.
 
எனினும் முதலாளித்துவ வர்க்க கட்சியான காங்கிரஸ் மக்கள் தொடர்பான அதன் அணுகுமுறையில் பிரமாண்டமான மாற்றங்களை செய்து வருகின்றது. ஏகாதிபத்தியவாதிகளிடம் இருந்து ஏகபோக ஏஜென்சி உரிமையை பெற்ற ஒரு முதலாளி வர்க்கத்திற்கு சிறப்பாக அரச அரங்கில் வெகுஜன இயக்கத்தை அணிதிரட்டுவதைவிட அதை நசுக்குவதற்கான அதிகாரங்கள் அவசியமாகவுள்ளது.
 
காங்கிரஸ¢ இந்திய முதலாளி வர்க்கத்தின் உயர்மட்ட அமைப்பாகும். அதன் பணி ஏகாதிபத்தியத்திற்கு எதிரான எதிர்ப்பு அரசியல் நலன்களின் பேரில் வெகுஜன இயக்கத்தை கட்டுப்படுத்துவதே. இன்று இப்பணியானது ஒழிந்துமறைந்து போகுமளவிற்கு பின்வாங்கியுள்ளதால் காங்கிரஸ் மக்களை ஒடுக்கும்விதத்தில் முதலாளிவர்க்கம் சிருஷ்டிக்கும் பாரம்பரியவகையை சேர்ந்த ஒரு சக்தியாக வரவேண்டியுள்ளது.
 
அரச இயந்திரத்தின் மூலமே வெகுஜன இயக்கத்தை கட்டுப்படுத்தும், ஒடுக்கும் வேலையை நன்கு சிறப்பாகவும், திறமையுடனும் செய்யமுடியும். காங்கிரஸ் தொடர்ந்தும் முதலாளித்துவ கட்சியாகவே இருந்து வருகின்றது. வெகுஜனங்கள் தொடர்பான அதன் தொழிற்பாடுகள் குறுகியதோடு மாற்றமடைந்தும் உள்ளன. அதனாலேயே அதன் அமைப்பை மாற்றும் பிரேரணை வெளிப்பட்டுள்ளது.
 
இவ்விடயத்தை பற்றிய இன்னொரு அம்சமும் உண்டு. இந்நாட்டில் நிர்வாகத்தில் நேரடி பாத்திரம் வகிப்பதை ஏகாதிபத்தியம் கைவிட்டதோடு, ஓரளவு காங்கிரஸ§ம் சிறப்பாக காங்கிரஸ் நிர்வாகமும் ஏகாதிபத்திய நலன்களை பாதுகாக்கும் பிரதானமான வாகனமாகியுள்ளன. அவை வெகுஜனங்களுக்கு எதிரான ஏகாதிபத்திய-முதலாளித்துவ கூட்டின் பிரதான கருவியாகி உள்ளன.
 
ஏகாதிபத்திய-முதலாளித்துவ நலன்களின் நெருக்கமான இடையூடுருவல்களில் இருந்து வேறும் இரண்டு விளைவுகள் ஏற்பட்டுள்ளன. முதலாவது காங்கிரஸ் அம்பலமாவது நெருங்கிக்கொண்டு வந்தது. காங்கிரஸ் அவசியமான தலையீடுகளில் இருந்து தப்புவதற்கு எதிராக மக்கள் நெருக்கடியுள் நேரடியாக இறங்கினர். அவர்கள் தமது எதிரியை காங்கிரசில் நேருக்கு நேர் காண்கின்றனர்.
 
இரண்டாவது விளைவு அவ்வளவு வெளிப்பாடாகாத போதிலும் முதலாவதைவிட முக்கியத்துவத்தில் அதி உயர்ந்தது. காங்கிரஸ் இந்தியாவினுள் சகல பிற்போக்கு சக்திகளும் ஒன்றுகூடும் இடமாகி உள்ளது இரண்டாவது பெறுபேறாகும். காங்கிரஸ§க்கு எதிரான முன்னர் ஏகாதிபத்தியத்தை சார்ந்து நின்ற சகல சக்திகளும் இன்று புதிய காந்தம் இரும்புத்தூள்களை இழுப்பதுபோல் காங்கிரசுக்குள் ஈர்க்கப்பட்டு வருகின்றன. மிகவும் முக்கியமாக காங்கிரஸ் மக்களுக்கெதிரான இன்னும் சக்திவாய்ந்த நாற்றம் எடுத்த சக்திகளின் நனவான அமைப்பாளனாகவும் (மறுசீரமைப்பாளனாகவும்) மாறியுள்ளது.
 
நான் மனதில் கொண்டுள்ளவற்றை விளக்குவதற்கு நல்ல உதாரணம். மன்னர்கள், மாநிலங்களின் மக்கள் சம்பந்தமாக நேரு-பட்டேல் அரசாங்கம் கடைப்பிடிக்கும் கொள்கையாகும். இங்கு காங்கிரஸ் இளவரசர்களுடனான முதலாளித்துவ தொடர்புகளை மீண்டும் புதிய வடிவில் வைத்துக்கொள்ளும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது. இது ஏகாதிபத்தியவாதிகளுடனான தொடர்புகளை புதிய வடிவத்தில் தொடங்கியுள்ளதிலிருந்து வேறுபட்டதல்ல.
 
மக்களின் வெறுப்புக்கு தீவிரமான முறையில் மன்னர் முறையின் ஆயுள் நீடிக்கப்பட்டுள்ளது. மாநில மக்களினதும், அவர்களின் போராட்டங்களினதும் அபிலாசைகளை சிதறடிக்கும் விதத்தில் மீண்டும் குழுச்சேரவும், ஜனநாயகத்தை வழங்குவதாக கூறும் பொய்யான சலுகைகள் மூலமே அவ்வாறு செய்யப்பட்டுள்ளது.
 
கத்தியவார் அல்லது ஹதராபாத் ஆகட்டும் அல்லது கொச்சின் ஆகட்டும் இந்த அரசுகளை மறுசீரமைப்பதோ அல்லது இந்திய அரசாங்கத்துடனான அவற்றின் தொடர்புகளை மறுசீரமைப்பது என்பது மன்னர் ஆட்சியை அப்படியே தொடர்வதாகும். வேறுவார்த்தைகளின் கூறினால், மறுசீரமைக்கப்பட்ட ஏகாதிபத்திய-முதலாளித்துவ கூட்டுக்கு மீள அமைக்கப்பட்ட முதலாளித்துவ-நிலப்பிரபுத்துவ கூட்டும் சேர்க்கப்பட்டுள்ளது. இரண்டினது கூட்டும் பிற்போக்கே.
 
இப்பொழுது நாம் முதல் இரண்டு கேள்விகளுக்கும் பதிலளிக்க வாய்ப்பான நிலையில் உள்ளோம். காங்கிரஸ், காங்கிரஸ் நிர்வாகம் தொடர்பான சரியான நிலைப்பாடு என்ன? அவற்றுடன் தொடர்பான எமது பணிகள் என்ன? இரண்டு வார்த்தைகளில் பதிலளிக்க முடியும். காங்கிரஸ், காங்கிரஸ் நிர்வாகம் பற்றிய சரியான நிலைப்பாடு ஈவிரக்கமற்ற கடும் எதிர்ப்பே. அவை தொடர்பான எமது பணியானது தூக்கிவீசுவதை இலக்காக கொண்டு அவற்றை திட்டமிட்ட முறையில் அம்பலப்படுத்தவதே. சுதந்திரத்திற்கும், சோசலிசத்திற்கும் வேறு மார்க்கம் கிடையாது.
 
 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
கிந்தியாவுக்கு காங்கிரஸ் பிணி பிடித்து 130 வருடங்களாச்சு 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.