Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மரணதண்டனையை ஆதரிப்பவர்கள் காட்டுமிராண்டிகள்

Featured Replies

"ஒவ்வொரு புனிதனுக்கும் ஒரு இறந்தகாலம் உண்டு, ஒவ்வொரு பாவிக்கும் ஒரு வருங்காலம் உண்டு" - இதை இத்தருணத்தில் நாம் கொஞ்சம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். முகம்மது அப்ஸல் குறித்த எனது முந்தையப் பதிவு ஏற்படுத்தியதின் தாக்கமாக இந்த இரண்டாவது பதிப்பை சமர்ப்பிக்கிறேன். இந்தியாவின் தலைசிறந்த மனித உரிமைப் போராளியும், முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியுமான பெருமதிப்பிற்குரிய வி.ஆர். கிருஷ்ணய்யர் சமீபத்தில் ஒரு வார இதழுக்கு அளித்த பேட்டியொன்றின் அடிப்படையில் இந்தப் பதிவினை சமர்ப்பிக்கிறேன்.

சாதாரண மனிதர்களான நாமெல்லாம் எவ்வளவு உயர்ந்த பதவியில் இருந்தாலும் தவறிழைக்க வாய்ப்புண்டு. பாரபட்சமான தண்டனை வழங்கவும் வாய்ப்புள்ளது. ஒரு கொலைக்கு தண்டனையாக இன்னொரு கொலையை அரசே செய்வது என்பது மிகப்பெரிய பாவம்.

1957ல் கிருஷ்ணய்யர் ஈ.எம்.எஸ்.சின் அரசில் உள்துறை அமைச்சராகப் பணியாற்றியபோது அவரிடம் உச்சநீதிமன்றத்தில் மரணதண்டனை பெற்ற சி.ஏ.பாலன் என்பவரின் மனு வந்திருந்தது. அப்போதைய குடியரசுத் தலைவரும் கூட சி.ஏ. பாலனின் கருணைமனுவை நிராகரித்திருந்தார். கிருஷ்ணய்யர் பெரும் போராட்டம் நடத்தி சி.ஏ. பாலனின் மரணதண்டனையை குறைத்தார்.

இதுபோலவே உச்சநீதிமன்றத்தில் கிருஷ்ணய்யர் நீதிபதியாக இருந்தபோது எடிகா என்ற பெண்ணின் வழக்கு அவர் பார்வைக்கு வந்தது. ஒரு கொலைவழக்கில் எடிகா என்ற பெண்ணுக்கு உயர்நீதிமன்றம் மரணதண்டனை விதித்திருந்தது. இதற்கு தீர்ப்பெழுதிய கிருஷ்ணய்யர் அந்தப் பெண்ணின் தண்டனையைக் குறைத்து "கடவுள் தந்த உயிரைப் பறிக்க எந்த மனிதனுக்கும் உரிமை இல்லை. உயிரைப் பறிக்கும் உரிமை அரசுக்கும் கிடையாது" என்ற மகாத்மா காந்தியடிகளின் கூற்றினை நினைவுபடுத்தினார்.

மரணதண்டனையில் இருந்து தப்பிய சி.ஏ.பாலனும், எடிகாவும் அதன்பின்னர் கொலைவெறியோடு அலைந்ததாக தகவல் இல்லை.

மூன்றாம் உலகநாடுகளில் பெரும்பாலானவை மரணதண்டனை என்பது காட்டுமிராண்டித்தனம் எனக் கண்டித்து மரணதண்டனையை ஒழித்திருக்கும் நிலை நிலவுகிறது. மவுண்ட்பேட்டனை கொடூரமாக கொன்றவனுக்கு கூட பிரிட்டிஷ் அரசாங்கம் மரணத்தண்டனை வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கொலைசெய்பவன் ஆத்திரத்தில் அறிவிழந்து மிருகமாகி அந்த தருணத்தில் ஈடுபடுகிறான். மூளைச்சலவை செய்யப்பட்ட பயங்கரவாதியும் கூட இதுபோன்ற ஒரு சூழ்நிலையிலேயே மிருகமாகிறான். குற்றங்களுக்கு தண்டனை வேண்டாம் என்று யாரும் சொல்லவில்லை. ஆனால் மரணதண்டனையோ "கண்ணுக்கு கண், பல்லுக்கு பல்" என்ற பிற்போக்குத் தனம் கொண்டது.

"நீதிமன்றம் விதித்த தண்டனையால் ஒரு மனித உயிர் பறிக்கப்படுகின்ற ஒவ்வொரு அதிகாலையிலும் மனித உரிமையின் கொடி அரைக்கம்பத்தில் பறக்கிறது" என்று வி.ஆர். கிருஷ்ணய்யர் ஒரு தீர்ப்பில் கூறியிருக்கிறார். மகாத்மா காந்தி இன்றைய தேதியில் உயிரோடு இருந்திருந்தாலும் கூட அப்சலுக்கோ அல்லது வேறு யாருக்குமோ மரணதண்டனை என்பதை ஏற்றுக் கொண்டிருக்க மாட்டார். அதற்காக அவரையும் "தீவிரவாதி" என்று நம் தேசிய ஜல்லிகள் முத்திரை குத்துவார்களா?

ஆனாலும் பிற்போக்குத்தனமான தேசிய ஜல்லிகள் தங்கள் தேசியப்பற்றை காட்ட துரதிருஷ்டவசமாக முகம்மது அப்சல் இப்போது மாட்டிக் கொண்டார். தெரிந்தோ தெரியாமலேயோ தேசப்பற்று எனும் இனிப்புத் தடவி மரணதண்டனை என்னும் காட்டுமிராண்டித் தனத்துக்கு ஆதரவு திரட்டப்படுகிறது.

"மக்களிடம் மரணதண்டனைக்கு ஆதரவான போக்கு இருக்கிறது என்பதற்காக நானும் அதை ஆதரித்து கும்மி அடிக்க முடியாது. மக்கள் எப்போதும் சரியாக, நேர்மையாகவே சிந்திப்பார்கள் என நான் கருதவில்லை. மக்களை மந்தைகளாக நினைத்து ஏமாற்றுபவர்கள் வேண்டுமானால் இந்த மரணதண்டனை-ஆதரவு கருத்துடன் ஒத்துச் செல்லட்டும். நான் மக்களுக்கு நல்ல மேய்ப்பவனாகவே இருக்க விரும்புகிறேன்" என்கிறார் வி.ஆர். கிருஷ்ணய்யர்.

"அன்பை பளிங்கில் பதிந்திடுங்கள், காயங்களைத் தூசிப்போல துடைத்திடுங்கள்" என்பது பாரசீக பழமொழி. அன்பு எல்லாவற்றையும் பெற்றுத் தரும். சமாதானத்தையும், நிம்மதியையும் தந்திடவல்லது அன்பு மட்டுமே. அன்பினை போதித்த புத்தன் பிறந்தநாட்டின் குடியரசுத் தலைவர் நல்ல முடிவு எடுப்பார். ஒரு மனித உயிரைக் காப்பார் என்ற நம்பிக்கையுடன் இருப்போம்.

(http://madippakkam.blogspot.com)

  • தொடங்கியவர்

மரண தண்டணை தேவையில்லை-கருணாநிதி

மரண தண்டனை என்பது ஒரு சில வினாடிகளில் முடிந்து விடுவதால், செய்த குற்றத்தை எண்னிப் பார்த்து வருந்த முடியாது. எனவே அந்த தண்டனை தேவையில்லை. அதை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

குற்றம் செய்தவர் ஆயுள் முழுவதும் அதை எண்ணிப் பார்க்கும்படி அவருக்கு ஆயுள் தண்டனை அளிக்கவேண்டும் என்றும் அவர் கருத்து கூறியுள்ளார்.

(நன்றி : வெப் உலகம்)

dinamalarnewspc6.jpg

அகா ரொம்ப பிரபலம் போங்க :lol:

தண்டனை மற்றவரையும் அச்சம்பவத்தை மீண்டு செய்யவிடாமல் தூண்டவேணும் ஆக மரணதண்டனை அவசியம்.சிங்கப்பூரை பாருங்கள் எத்தனை பேரை துக்கில போடுகிரார்கள் அவுஸ்திரேலியன் ஒருவனாவ்து இனி போதை மருந்தை சிங்கபூரூடாக கடத்துவானா.

மரண தண்டணை தேவையில்லை-கருணாநிதி

மரண தண்டனை என்பது ஒரு சில வினாடிகளில் முடிந்து விடுவதால், செய்த குற்றத்தை எண்னிப் பார்த்து வருந்த முடியாது. எனவே அந்த தண்டனை தேவையில்லை. அதை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

குற்றம் செய்தவர் ஆயுள் முழுவதும் அதை எண்ணிப் பார்க்கும்படி அவருக்கு ஆயுள் தண்டனை அளிக்கவேண்டும் என்றும் அவர் கருத்து கூறியுள்ளார்.

(நன்றி : வெப் உலகம்)

கருத்து சரி காரணம் பிழை. குற்ற வாளிக்கு மரண தண்டனை போதாது என்கிறார் கலைஞர், மரணதண்டனை கூடாது என்று சொல்லவில்லை. குற்றவாளி வருந்த வேண்டும் என்கிறார், இது ஒரு உளவியல் பாதிக்கப்பட்டவரின் கருத்துக்கு ஒப்பானது.

தண்டனை என்பது வருத்துவதற்கல்ல, திருத்துவதற்கு என நம்புவன் நான்.

மரண தண்டனையை உலகளாவிய ரீதியில் தடைவிதிக்க கோரும் இத்தாலியும் தன்னார்வ நிறுவனங்களும்

27 - October - 2006] - சபினா சக்காரே -

மரண தண்டனையை ஒழிப்பதற்கென இத்தாலியில் 13 வருடங்களுக்கு முன் ஆரம்பிக்கப்பட்ட உலகளாவிய பிர சாரத்தை இதுவரை அரைவாசிக்கும் மேலான உலக நாடுகள் ஏற்றுக் கொண்டுள்ளன.

ஆனால், தன்னார்வ நிறுவனங்கள் இத்துடன், திருப்தியடையவில்லை. உலகளாவிய் ரீதியில் மரணதண்டனை முற்றாக தடை செய்யப்பட வேண்டும் என்பதே இந்நிறுவனங்களின் குறிக்கோளாகும்.

அதனை நிறைவேற்றும் பொருட்டு, மரணதண்டனைகளை செயல்படுத்துவதில் முழுமையான உலகளாவிய தடையை விதிக்க அனைத்து நாடுகளும் பாடுபட வேண்டுமெனக் கோரும் தீர்மானம் ஒன்றை தற்போதைய ஐக்கிய நாடுகள் கூட்டத் தொடரில் கொண்டுவருவதற்கான இத்தாலியின் முயற்சிக்கு ஆதரவு வழங்குமாறு இத்தன்னார்வ நிறுவனங்கள் ஐரோப்பிய ஒன்றியத்திடம் கோரியுள்ளன.

அக்டோபர் மாதம் 10 ஆம் திகதி மரணதண்டனைக்கு எதிரான உலக தினத்தை குறிக்குமுகமாக ஐரோப்பிய ஆணைக்குழுவின் தலைவர் பிறாங்கோ பிறட்டினியும் ஐரோப்பிய சபையின் செயலாளர் நாயகம் ரெறி டேவிஸும் சிவில் சமுதாயம் தங்கள் முயற்சிக்கு அளித்துவரும் ஆதரவு குறித்து பாராட்டு தெரிவிப்பதற்காக அன்றைய தினம் பத்திரிகையாளர் மகாநாடு ஒன்றை நடத்த திட்டமிட்டிருந்தனர். பரிஸில் 2007 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் மரண தண்டனைக்கு எதிராக நடத்தப்படவிருக்கும் சர்வதேச மகாநாட்டுக்கு தங்கள் ஆதரவை இவர்கள் தெரிவிப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், ஐரோப்பிய பாராளுமன்றத்தின் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அங்கத்துவ நாடுகளிலிருந்து தலா 25 நிபுணர்கள் இத்தாலியின் தீர்மானம் குறித்து ஆராய்வதற்காக 10 ஆம் திகதி கூடவிருந்தார்கள். ஆணைக்குழுவின் சிபாரிசு, இத்தாலியின் தீர்மானத்தை ஆதரிப்பதா இல்லையா என்று ஐரோப்பிய ஒன்றியம் ஒரு உடன்பாட்டுக்கு வர உதவியாக இருக்குமென நம்பப்படுகிறது.

ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றம் முழுவதற்குமே இந்த விடயம் முக்கியமானது என்று பாராளுமன்றத்தின் அபிவிருத்திக் குழுவின் தலைவர் லூயிசா மோகாடினி ஐ.பி.எஸ்.ஸிடம் தெரிவித்தார். கடந்த வாரம், மோகாடினி உயர்மட்ட ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளுக்கும் சகல அங்கத்துவ நாடுகளின் வெளிநாட்டமைச்சர்களுக்கும் அனுப்பிய கடிதமொன்றில், இத்தாலியின் முயற்சிக்கு ஐரோப்பிய ஒனறிய பாராளுமன்றத்தின் ஆதரவை தெரிவித்திருந்தார்.

இந்த முயற்சியை ஐக்கிய நாடுகள் மட்டத்தில் ஊக்குவிப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தினால் முக்கிய பங்கை வகிக்க முடியுமென தெரிவித்ததுடன் ஒன்றியத்தின் சகல பாராளுமன்றக் குழுக்களும் கைச்சாத்திட்ட கடிதத்தை மேற்கோள்காட்டிய மோகாடினி இந்தப் பொறுப்பிலிருந்து ஒன்றியம் விலகக் கூடாது என்றும் கூறினார்.

ஐரோப்பிய ஆணைக்குழுவின் நீதி, சுதந்திரம், பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளர் றிக்கார்டோ மொஸ்கா கருத்துத் தெரிவிக்கையில், மரண தண்டனை ஒழிப்பு பிரசெல்ஸுக்கு ஒரு முன்னுரிமை விடயமாக இருக்கும். அதேவேளை, தற்போதைய கூட்டத் தொடரின் போது ஐரோப்பிய ஆணைக்குழு தடைத் தீர்மானத்தை ஆதரிக்கும் சாத்தியம் இல்லை என்று கூறினார்.

ஐரோப்பிய ஒன்றிய மட்டத்தில் தீர்மான நகல் இல்லை என்று மொஸ்கா ஐ.பி.எஸ்.ஸிடம் தெரிவித்தார். ஆனால், அகில உலக ரீதியிலான மரணதண்டனைத் தடையை ஒரு நாள் கொண்டுவர ஐரோப்பிய ஆணைக்குழு விரும்பும் என்றும் அவர் கூறினார்.

இந்தச் செய்தி, மரணதண்டனை ஒழிப்புக் குழுவான ஹேன்ஸ் ஒவ் கெயின் (Hands Off Cain) அமைப்பு மரணதண்டனை தொடர்பாக வெளியிட்ட் வருடாந்த அறிக்கையின் ஒருங்கிணைப்பாளரும் வழக்கறிஞருமான எலிஸபெத்தா சம்பருத்திக்கு ஏமாற்றத்தைக் கொடுத்தது. கடந்த ஒன்பது வருடங்களாக ஹேன்ஸ் ஒவ் கெயின் போன்ற மரணதண்டனை ஒழிப்புக் குழுக்கள் தடைத் தீர்மானம் ஒன்றை நிறைவேற்றக் கோரி மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் நிறுவனத்திடம் வெற்றிகரமான பிரசாரத்தை மேற்கொண்டு வந்துள்ளன.

கடைசியாக, ஏப்ரல் மாதம் நிறைவேற்றிய தீர்மானத்தில் மரணதண்டனை ஒழிப்பு மனித கௌரவத்தை மேம்படுத்துவதுடன் மனித உரிமைகளின் முன்னேற்றத்திற்கும் உதவுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மரணதண்டனையை முற்றாக ஒழிக்கும் நோக்கத்துடன் அத்தண்டனை நிறைவேற்றத்தின் மீது தடையை விதிக்குமாறு இன்னமும் மரணதண்டனையை அமுல் செய்துவரும் நாடுகளிடம் இத்தீர்மானத்தில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த வருட ஆரம்பத்தில் இடதுசாரிக் கட்சியான றேதஸா நெல் பக்னோவின் வேண்டுகோளின் பேரில் ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் தடைத் தீர்மானத்திற்கான யோசனை ஒன்றை சமர்ப்பிக்க இத்தாலிய அரசாங்கம் இணங்கியது. பெரும்பான்மை மற்றும் எதிர்க்கட்சிகளிடமிருந்து இத்தாலிய பாராளுமன்றத்தில் இந்த வருட ஆரம்பத்தில் இதற்கு ஏகமனதான ஆதரவு கிடைத்தது.

எங்கள் கலாசாரத்தினதும் நாகரிகத்தினதும் ஒரு நிலையான விடயமான மரணதண்டனைக்கு ஒரு முடிவைக் கொண்டுவர இத்தாலிய முயற்சியை ஆரம்பிக்க அதுவே தருணம் என்று பிரதமமந்திரி றொமான் புறோடி அவ்வேளையில் பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.

எனினும், அரசாங்கம் ஏனைய ஐரோப்பிய ஒன்றிய அங்கத்துவ நாடுகளிடமிருந்து அங்கீகாரத்தை பெறாததால் இந்த யோசனை தோற்கடிக்கப்பட்டது. ஐரோப்பிய ஒன்றியத்துடன் இணைந்தே மரணதண்டனைத் தடையை கொண்டுவந்து பின்னர் ஒன்றியத்தில் இல்லாத நாடுகளையும் இணைத்துக் கொள்வதே தங்கள் நோக்கம் என்று ஒலிவ் ட்றி மூதவை உறுப்பினரும் வெளிவிவகார உதவிச் செயலாளருமான கியன்னி வேர்ணெட்டி ஐ.பி.எஸ்.ஸிடம் தெரிவித்தார்.

தங்கள் ஐரோப்பிய பங்காளி நாடுகள் பல தங்களுக்கு ஆதரவு தந்துள்ளன என்றும் சில நாடுகள் இன்னமும் உறுதியற்ற தன்மையை கொண்டுள்ளன என்றும் தெரிவித்த வேர்ணெட்டி தாங்கள் அர்ப்பணிப்புடன் செயல்பட முடியுமென நம்பிக்கை தெரிவித்தார்.

மரணதண்டனையை ஒழிக்கக் கோரும் மேலும் 53 குழுக்களுடன் இணைந்து உலக கூட்டமைப்பை ஏற்படுத்தியுள்ள ஹேன்ஸ் ஒவ் கெயின் அமைப்பு 92 நாடுகளின் பாராளுமன்றங்களது இணக்கம் பெறப்பட்டுள்ளது என்றும் இந்த நாடுகள் ஐக்கிய நாடுகள் சபையில் தடைப் பிரேரணையின் இணை அனுசரணை நாடுகளாக விளங்குமென்றும் தெரிவித்துள்ளது.

ஹேன்ஸ் ஒவ் கெயின் தெரிவித்துள்ள புள்ளிவிபரங்கள் இத்தகைய தீர்மானம் அதிகப்படி வாக்குகளால் நிறைவேறும் என்று தெரிவிக்கின்றன. 95 இலிருந்து 107 வரையிலான நாடுகள் தீர்மானத்தை ஆதரித்தும் 61 இலிருந்து 68 வரையிலான நாடுகள் எதிர்த்தும் வாக்களிக்குமென இந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இத்தாலி அரசாங்கமே முதன்முதலாக 1997 ஆம் ஆண்டில் மரணதண்டனைக்கு எதிரான ஒரு பிரேரணைக்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவின் (தற்போதைய மனித உரிமைகள் சபை) அங்கீகாரத்தைப் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது. 1999 ஆம் ஆண்டிலிருந்து மரணதண்டனை தொடர்பான அறிக்கை ஒன்று ஒவ்வொரு வருடமும் ஐரோப்பிய ஒன்றியத்துடன் கூட்டாக சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டு வருகிறது.

ஆனால், தற்போது மரணதண்டனை தொடர்பான ஒற்றுமை வலுவிழக்க ஆரம்பித்துள்ளது. சில பழைய ஒன்றிய நாடுகள் சவூதி அரேபியா, ஈரான் போன்ற செல்வாக்கான நாடுகளுக்கு இந்த விடயத்தில் அழுத்தம் கொடுக்க விரும்பாததே இதற்குக் காரணமாகும். மேலும், போலந்தின் புதிய பிரதம மந்திரி தமது நாட்டில் அதிகரித்துவரும் குற்றச் செயல்களை ஒழிக்கும் முயற்சியில் தாம் மரணதண்டனையை மீண்டும் அமுல்படுத்தப் போவதாக பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.

இந்த விடயத்தில் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொள்வது பெரும் பிரச்சினையாக இருக்கிறது என்று ஐரோப்பிய ஆணைக்குழுவின் மொஸ்கா தெரிவித்தார். சில அரசியல்வாதிகள் ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒத்திசைவற்ற ஒரு அரசியல் கொள்கையை கடைப்பிடித்து வருவதாக தெரிவித்த மொஸ்கா இது ஒன்றும் இரகசியமானதல்ல என்றும் தெரிவித்தார்.

பெலாறுஸ் ஒரு ஐரோப்பிய ஒன்றிய அங்கத்துவ நாடாக இல்லாத போதிலும் மரணதண்டனைத் தடைக்கு இணங்கிய பின்னர் 2005 ஆம் ஆண்டில் இரண்டு மரணதண்டனை தீர்ப்புக்களை நிறைவேற்றியுள்ளது. ரஷ்யாவில் மரணதண்டனை இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ள போதிலும், ஐரோப்பிய சபையின் அங்கத்துவம் கோருவதற்கு தேவைப்படும் ஒரு நிபந்தனையாக இருக்கும் மரணதண்டனை விதிகளைக் கைவிட வேண்டுமென்ற கோரிக்கையை அந்த நாடு நிராகரித்து வருகிறது.

இத்தகையதொரு முக்கியமானதும் உலகளாவியதுமான பிரச்சினையை ஐரோப்பிய நாடுகளின் ஏக பொறுப்பாக விட்டுவிடக்கூடாது என்று சம்பருத்தி கூறினார். பல நாடுகள் ஒவ்வொரு வருடமும் இந்த சர்வதேச பிரசாரத்தில் இணைந்து கொள்வதால் ஐரோப்பிய, மேற்கு என்று மட்டுப்படுத்தாமல் சகல பிராந்தியங்களும் உள்ளடக்கப்பட வேண்டுமெனவும் அவர் கூறினார்.

ஐரோப்பிய நாடுகள் மாத்திரம் இணைத்துக் கொள்ளப்படக்கூடாது என்பதை மொஸ்காவும் ஏற்றுக் கொண்டார். தாய்லாந்தை அல்லது சீனாவை நிராகரிப்பது எங்கள் பொறுப்பில் இல்லை என்றும் அமெரிக்காவை நிராகரிக்க தங்களுக்கு அதிகாரம் இல்லை என்றும் அவர் கூறினார்.

உண்மையில், உலக சபைக்குள் மிகப்பெரிய அளவிலான எதிர்ப்பு உலகில் அடிக்கடி மரணதண்டனைகளை நிறைவேற்றும் நாடுகளும் முக்கியமாக ஐக்கிய நாடுகள் அங்கத்துவ நாடுகளுமான சீனா, அமெரிக்கா ஆகியவற்றிடமிருந்தே வருமென எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அவர் கூறினார். இந்த இரண்டு நாடுகளுமே பாதுகாப்புச் சபையிலும் அங்கம் வகிக்கின்றன. இது ஒரு முட்டுக்கட்டைதான். ஆனால், தடையல்ல என்றும் சம்பருத்தி கூறினார்.

அமெரிக்காவும், சீனாவும் மரணதண்டனைத் தடையை எப்பொழுதுமே நிராகரித்து வந்துள்ளன என்று சம்பருத்தி ஐ.பி.எஸ்.ஸிடம் தெரிவித்தார். ஆனால், ஒன்று இந்நாடுகள் ஒருபோதும் ஏனைய நாடுகளை இப்பிரேரணையை ஆதரித்து வாக்களிக்க வேண்டாமென வற்புறுத்தவில்லை என்றும் அவர் கூறினார். அவற்றின் உள்துறை நடைமுறை காரணமாக அந்நாடுகள் தங்கள் பாட்டிலேயே பிரேரணையை பிரித்து வாக்களிக்கின்றனர்.

-ஐ.பி.எஸ்-

http://www.thinakkural.com/news/2006/10/27...s_page13862.htm

  • தொடங்கியவர்

கருத்து சரி காரணம் பிழை. குற்ற வாளிக்கு மரண தண்டனை போதாது என்கிறார் கலைஞர், மரணதண்டனை கூடாது என்று சொல்லவில்லை. குற்றவாளி வருந்த வேண்டும் என்கிறார், இது ஒரு உளவியல் பாதிக்கப்பட்டவரின் கருத்துக்கு ஒப்பானது.

தண்டனை என்பது வருத்துவதற்கல்ல, திருத்துவதற்கு என நம்புவன் நான்.

குற்றம் செய்தவருக்கு சட்டரீதியான தண்டனை தேவை. அது மரணதண்டனையாக இருக்கக்கூடாது என்பது கலைஞரின் வாதம்.... சரியென்றே நினைக்கிறேன்....

ஒருவரை அரசே சட்டப்பூர்வமாக கொல்வதால் அந்த குற்றத்துக்கு எதிர்வினை ஆகிவிடுமா? குற்றம் செய்தவர் தான் செய்த குற்றத்துக்கான பலனை அனுபவிக்க வேண்டும்.... குற்றம் செய்ய நினைப்பவர்கள் அதை கண்டு நடுங்க வேண்டும்.....

நீங்கள் ஆயுள்தண்டனை கொடுத்தால் குற்றம் குரையும் என்கிறீர்களா உயிருடன் வாழலாம் அல்லது வெளியே வரலாம் என்ற ஒரு தைரியம் இருக்கும் மரணதண்டனை இருக்கும் தேசங்களில் குறறம் குறவு என்பதுக்கு உதாரணம் சிங்கப்பூர்

ஈழவன் என்ன பேசுகிறீர்கள்? முருகன், சாந்தன் போன்றவர்களை து}க்கில் போடுவதை ஏற்றுக் கொள்கிறீர்களா?

மரண தண்டனையில் என்னுடைய கருத்து

ஒரு சித்தாந்திற்காகவோ அல்லது இன விடுதலைக்காகவோ போராடுகின்ற இயக்கங்களை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டால் அவர்கள் அரசியல் கைதிகளாகவோ யுத்தக் கைதிகளாகவோதான் பார்க்கப்பட வேண்டும்.

தண்டனை செய்தவர்கள் உணர்ந்து திருந்த மற்றவர்களும் கண்டு உணர்ந்து தவிர்க்க.

சிங்கப்பூரில் குற்றங்கள் குறைவிற்கு வெறும் மரணதண்டனை நடைமுறையால் அல்ல.

அவர்களுடைய ஏனைய சட்டங்கள் ஒழுங்குகள் விதிகள் ஏனைய நாடுகளை விட இறுக்கமானவையாக எழுத்துக்களில் மாத்திரம் இல்லை இறுக்கமாக ஊழல் அற்று அமுல்படுத்தலும் நடக்கிறது.

சிங்கப்பூரில் கட்டாய இராணுவ சேவை உண்டு. இது மக்களை பதப்படுத்துகிறது நற்குடிமக்களாக்க உதவுகிறது. அது போக மக்களின் கல்வி அறிவு என்று பல காரணங்கள் உண்டு.

அமெரிக்காவின் சில மாநிலனங்களில் கூட மரணதண்டனை இருக்கு.

நான் அவர்களை பற்றி பேசவில்லை சபேசன் என்னை பொறுத்தவரையில் ஒரு வித்தியாசமான நடைமுரையை இந்தியா கையாள்கின்றது மரணதண்டனை இவர்களுக்கு விதித்து பல நாளாகிவிட்டது ஆனால் அப்சல் விடயத்தில் தண்டனை நிறைவேற்றுவதுல் அவசரம் காட்டுகிறது இந்தியா

மற்றும் போதைபொருள் கடத்தல் காரர்கள் எத்தனை பேரை அழிக்கிறார்கள் அவர்களுக்கு என்ன தண்டனை கொடுப்பீர்கள்???மரண பயம் இருக்கையில் ஒருவன் அத்தவறை செய்ய பலமுறை யோசிப்பான் என்பது உண்மை ஒரு சிறியதேசம் சிங்கப்பூர் அவுஸ்தெரேலியன் ஒருவரை துக்கிலிட்டது போதைபொருள் கடத்தலுக்காக அவரின் பூத உடலுக்கு ராஜமரியாதை குடுக்காத குறையை தவிர மற்ற ஆரவாரங்களை இங்கு செய்தார்கள்.என்னை பொறுத்தவரையில் சமூகத்துக்கு தேவையில்லத நச்சு செடிகளை புடுங்கி எறிய வேண்டும் அதில் தவறில்லை முருகன் சாந்தனின் வழக்கு நான் கூறியவற்றில் இருந்து முர்ராக மாறுபட்டது.தமிழீழம் மலர்ந்தால் மரணதண்டனை இல்லாத சட்டம் இயற்றப்படுமா நான் இல்லையென நம்புகிறேன்

  • கருத்துக்கள உறவுகள்

மனிதன் தான் உருவாக்கிய சட்டங்களால் இன்னொரு மனிதனைக் கொல்லும் அதிகாரத்தையே மரண தண்டனை எனலாம்.

மரண தண்டனைகள் தனி மனித உரிமை மீறல்கள் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது.

மரண தண்டனைகள் ஏன் வழங்கப்படுகின்றன? சமூகத்தில் உள்ளவர்களை சட்டம் பற்றிய அச்சத்தில் ஒழுக்கத்தைப் பின்பற்ற வைக்கத்தான். ஆனால் இதுவே சமூகம் தானாக இயற்றும் சட்டங்கள் என்றால் அது அடக்குமுறைகள் என்று பேசப்பட்டு சமூக ஒழுக்கங்கள் குலைக்கப்பட வகை செய்கின்றனர்.

சமூகத்தில் தனி ஒருவனின் நடத்தையை சட்டங்கள் மட்டும் தீர்மானித்து விட முடியாது. அவன் வாழும் சூழல் சுற்றம் காட்டும் உதாரணங்களே ஒரு மனிதனை சமூகக் குற்றவாளி ஆக்கிறது. பிறக்குங் குழந்தைக்குத் தெரியுமா கொலையும் களவும். எப்படி அவன் தெரிந்து கொள்கின்றான்? அவன் வாழும் சமூகத்தில் இருந்துதான். அதாவது இன்னொரு மனிதனின் தவறான ஒழுக்கக் கேடான நடவடிக்கையால் தான்.

தமிழர் சமூகத்தில் சமூகக் கட்டுப்பாடுகள் என்பது மனிதனை நல் வழியில் பயணிக்க வைப்பதாகத்தான் இருந்தது. அது முற்போக்கு மூடநம்பிக்கை என்ற அரைகுறைகளின் வாத்தை அடுத்து சீர்குலைந்ததால் இன்று சமூகக் குற்றங்கள் பெருகி மனித மன அவலங்கள் பெருகிக் கிடக்கின்றன.

மரண தண்டனை என்று தனி ஒரு மனிதனைப் பலியிடுவதில் எமக்கு உடன்பாடில்லை. அவன் பிறந்த போது குழந்தையாக இருந்த போது அறியாத கொலை கொள்ளைகளைக் கற்றுக் கொடுத்த சமூகத்தைத் தண்டிக்க வேண்டும். அப்போதுதான் தனி மனிதர்கள் சிறுபராயம் முதல் சீராக வளர்க்கப்படுவர் சிந்திக்க தூண்டப்படுவர். ஒரு சமூகத்தின் குற்றத்திற்காக தனி மனிதன் ஒருவனை மரணத்தால் தண்டிப்பது மிகவும் தவறான காரியம்.

சரி உருவாக்கப்பட்டு விட்டான் அவனால் எனி சமூகத்துக்கு ஆபத்து என்று கண்டால் அவனைத் தனிமைப்படுத்திய சூழலில் வாழவிடுங்கள். அவனுக்கு தேவையானவற்றை அளியுங்கள். அவன் திருந்தும் வரை சிந்திக்க வழிவிடுங்கள். அவனைக் கொலைகாரன் ஆக்கிய குற்றவாளிகள் சுற்றவாளிகளாக சமூகத்தில் நடமாட கருவியாக இருந்ததற்காக அவன் மட்டும் ஏன் தண்டனை அனுபவிக்க வேண்டும். மரண் தண்டனை குற்றங்களைக் குறைப்பதாக இருந்தால் அமெரிக்காவில் ஆன் வருடா வருடம் குற்றச் செயல்கள் கூடுகிறது. காரணம் குற்றவாளிகள் தானாக உருவாகவில்லை. அவர்கள் வாழும் சமூகமே அவர்களை உருவாக்குகிறது. கருப்பை கற்றுக்கொடுக்கவில்லை. அல்லது ஜீன் கற்றுக்கொடுக்கவில்லை குற்றங்களை. வாழும் சூழல் சமூகமே ஒருவனைக் குற்றவாளி ஆக்குகிறது. அந்த வகையில் கொடிய குற்றவாளியாக்கப்பட்டவர்கள் கூட தனிமைப்படுத்தப்பட்ட சூழலில் தங்கள் உரிமைகளைப் பெற்று வாழ அனுமதிக்கபப்டுவதே அவசியம். காரணம் ஒருவருக்கு குற்றமாவது இன்னொருவருக்கு நியாயமானதாகக் கூட இருக்கலாம். எனவே யாரையும் மரணத்தை நோக்கித் தண்டிக்க இன்னொரு மனிதனுக்கு உரிமை கிடையாது. அப்படி உரிமை எடுக்க நினைத்தால் இயற்கையின் விதிப்படி அதை எதிர்க்கும் உரிமை அவனுகுக்கு உண்டு. ஆனால் ஆயுதங்களைக் காட்டி அச்சுறுத்தி மனிதனைப் பணிய வைத்துக் கொண்டு தண்டனைகளையும் அளிக்கும் மனித சமூகம் எதனை அறிவாற்றலால் கற்றுணர்ந்து கண்டுணர்ந்து சுயமாக ஒழுகிச் செய்கிறது. ஒழுக்கத்தைக் கூட அடையாளம் காணமுடியாத சமூகத்துக்கு இன்னொருவனைக் கொலை செய்ய எங்கிருந்து வருகிறது உரிமை...???! இயற்கை அளித்ததா?

உயிகளுக்கு எல்லாம் உள்ள உரிமை அடிப்படை உரிமை அதுதான் வாழ்வுரிமை தனி மனிதன் ஒவ்வொருவருக்கும் உண்டு. இன்னொருவனின் உரிமையைப் பாதிக்க ஒருவன் நடப்பான் என்றால் அவனைத் தனிமைப்படுத்தி வாழ திருந்த அனுமதிக்க வேண்டுமே தவிர கொல்லுதல் என்பதால் ஆனின் வாழ்வுரிமையைப் பறிப்பது என்பது தீர்வாகாது. அதேபோல் சமூக ஒழுக்கங்களை சட்டங்களை சமூகக்கட்டுப்பாடுகளை விளக்கி மக்களின் சிந்தனைகளை சிறு வயது முதல் சீரிய வழிப்படுத்தினால் குற்றங்களும் குற்றவாளிகளும் உருவாக்கப்படுவது நிச்சயம் குறையும் ஏன் இல்லாமலே போகும். மனிதரைத் தவிர பூச்சி புழு என்று எவையாவது தங்கள் இனத்திலேயே இன்னொன்றை குற்றவாளியாக்கி கொள்கிறதா? தாவரங்கள் அப்படிச் செய்கின்றனவா? அவையும் இந்த இயற்கைக்கு உரித்துடைய உயிர்கள் தானே. மனிதனுக்கு மட்டும் ஏன் இந்த கொடூர எண்ணங்கள் வருகிறது. அவனின் சிந்தனை வழிப்படுத்தப்படாமையே அன்றி வேறில்லை. இயற்கைக்கு மாறான உறவுகளை ஆதரிக்கும் உலகம் மனிதனி கீழ்த்தரமான சிந்தனைகளை அழிக்கத் தவறின் அவனாகவே அழிவான் என்பதை பாவம் ஏனோ கவனத்தில் கொள்ளவில்லை இன்னும். இயற்கை என்பதை எந்தச் செயற்கையாலும் மனித ஒரு எல்லைக்கு அப்புறம் வெற்றி கொள்ள முடியாது என்பதௌ உணர்வானாகின் நிச்சயம் மனித மனிதனாக உயரிய சீரிய அன்பிலான சிந்தனைகளைப் பெற்று சமூகமாக ஒற்றுமையாக வாழ்வான். இன்றேல் மனித உரிமைகளை அழிக்கிறார்கள் என்று மனிதனே மனிதனைப் பார்த்து ஓலமிட்டபடி அழிவான்.

  • தொடங்கியவர்

நான் அவர்களை பற்றி பேசவில்லை சபேசன் என்னை பொறுத்தவரையில் ஒரு வித்தியாசமான நடைமுரையை இந்தியா கையாள்கின்றது மரணதண்டனை இவர்களுக்கு விதித்து பல நாளாகிவிட்டது ஆனால் அப்சல் விடயத்தில் தண்டனை நிறைவேற்றுவதுல் அவசரம் காட்டுகிறது இந்தியா

இந்தப் பிரச்சினையை சரியாக அவதானித்து வருகிறீர்கள்... பாராட்டுக்கள்...

என்ன லக்கி நக்கலடிக்கிறீர்களா அல்லது உண்மையாக பாராட்டுகிறீர்களா :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.