Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெயலலிதா சொத்து குவிப்பு அப்பீல் மனு மீதான விசாரணை

Featured Replies

  • தொடங்கியவர்

பவானிசிங் நியமனம் செல்லாது ; ஊழல் ஒழிப்பில் கவனம் தேவை:சுப்ரீம் கோர்ட் பரபரப்பு தீர்ப்பு

 

புதுடில்லி: ஜெ., சொத்துக்குவிப்பு வழக்கில் அரசு தரப்பில் பவானிசிங் ஆஜராகலாமா என்பது குறித்து 3 பேர் கொண்ட உச்சநீதிமன்ற பெஞ்ச் இன்று தீர்ப்பளித்தது, பவானிசிங் நியமனம் செல்லாது என தீர்ப்பளித்துள்ளது. மேலும் மேல்முறையீட்டு வழக்கில் மறு விசாரணை கிடையாது என சுப்ரீம் கோர்ட் ஏற்கனவே அறிவித்துள்ள சூழ்நிலையில் நீதிபதி குமாரசாமி எந்த அடிப்படையில் தீர்ப்பு வழங்குவதென்று சுப்ரீம் கோர்ட் அறிவுரை வழங்கியது.

வருமானத்திற்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்கில் ஜெ., சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கு தலா 4 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது 4 பேரும் ஜாமினில் இருந்து வருகின்றனர். சிறப்பு கோர்ட் தீர்ப்பை எதிர்த்து கர்நாடாக ஐகோர்ட்டில் ஜெ., தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் விசாரணை முழுமை அடைந்தது. தீர்ப்பு சொல்ல கூடிய தருணத்தில் உள்ளது.இதற்கிடையில் அரசு தரப்பில் பவானிசிங் ஜெ.,வுக்கு சாதகமாக செயல்படுகிறார் இவர் ஆஜராக கூடாது என உத்தரவிட வேண்டும் என தி.மு.க.,பொதுசெயலர் அன்பழகன் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

 

மனுவை விசாரித்த பானுமதி, லோக்கூர் கொண்ட பெஞ்ச் நீதிபதிகள் முரண்பட்ட தீர்ப்பை அளித்தனர். இதனையடுத்து 3 பேர் கொண்ட பெஞ்சுக்கு மனு மாற்றப்பட்டது. இந்த மனு தொடர்பான தீர்ப்பு இன்று வெளியிடப்பட்டது. அதில், ஜெயலலிதா சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில், பவானிசிங்கை வழக்கறிஞராக நியமித்தது செல்லாது என, மூன்று நீதிபதிகள் கொண்ட சுப்ரீம் கோர்ட் பெஞ்ச் இன்று தீர்ப்பளித்துள்ளது. இருப்பினும், ஜெ., சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் மறு விசாரணை தேவையில்லை என்று கூறி உள்ள பெஞ்ச், ஜெயலலிதா வழக்கில் கர்நாடக ஐகோர்ட் எப்போது வேண்டும் என்றாலும் தீர்ப்பு வழங்கலாம் என்றும் கூறி உள்ளது.

 

ஊழலை ஒழிக்க வேண்டும்; சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் கர்நாடக ஐகோர்ட் நீதிபதிக்கு அறிவுரையும் வழங்கினர். தங்களின் தீர்ப்பில் நீதிபதிகள்; எந்த ஒரு ஊழல் வழக்கையும் சாதாரணமாக பார்க்கக் கூடாது; ஊழல்வாதிகள் பெற்ற ஆதாயத்தை கருத்தில் கொள்ள வேண்டும். சமுதாயத்தை ஊழல் பாதித்துள்ளதை அறிந்து செயல்படுவது அவசியம். நாட்டில் ஊழலை ஒழிக்க வேண்டும் என்பதையும் கவனத்தில் கொண்டு நீதியை நிலைநாட்டும் வகையில் நீதிபதி குமாரசாமி தீர்ப்பளிக்க வேண்டும் இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.

 

மனு போடும் காரணம் என்ன ? இந்த மனு மீது உத்தரவு பிறப்பிக்கும் வரை கர்நாடக ஐகோர்ட் அப்பீல் மே மாதம் 12 ம் தேதி வரை வழக்கில் தீர்ப்பு வெளியிடக்கூடாது என்றும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டிருந்தது. தற்போது பவானிசிங் நியமனம் தொடர்பான மனு மீதான தீர்ப்பு வந்து விட்டதால், ஜெயலலிதாவின் மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு எந்த நேரத்திலும் வௌியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

பவானிசிங் வாதம் வீண் : ஒரு வேளை சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுப்படி சில சட்ட நடவடிக்கைகள் எடுக்க சிறிது காலம் பிடிக்ககலாம். இதனால் ஜெ., வழக்கில் தீர்ப்பை தள்ளி போடலாம். இதனால் ஜெ., தொடர்ந்து குற்றவாளியாகவே கருதப்பட்டு வரும் சட்டசபை தேர்தலில் போட்டியிட முடியாமல் போக செய்ய முடியும். இது போல் அரசு தரப்பில் பவானிசிங் நியமனம் செல்லாது என்பதால் அவரது வாதம் சந்தேகத்திற்கு இடமாக போகும். இதுவும் ஜெ.,வுக்கு பாதகமாக அமைய வாய்ப்பு உண்டு.

 

தீர்ப்பு முழுவிவரம்: ஜெயலலிதா சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில், பவானிசிங்கை வழக்கறிஞராக நியமித்தது செல்லாது என, மூன்று நீதிபதிகள் கொண்ட சுப்ரீம் கோர்ட் பெஞ்ச் இன்று தீர்ப்பளித்துள்ளது. தீர்ப்பின் முழுவிவரம் வருமாறு. ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் பவானி சிங்கை அரசு வழக்கறிஞராக நியமித்தது செல்லாது; அரசு வழக்கறிஞரை நியமிக்க தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை. இந்த வழக்கில் அரசு வழக்கறிஞரை நியமிக்க கர்நாடகா அரசுக்குத்தான் அதிகாரம் உண்டு.

 

மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை முடிந்துவிட்டதால் அதில் மறுவிசாரணை தேவை இல்லை. பவானிசிங் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்த வாதத்தை மேல்முறையீட்டு மனுவை விசாரிக்கும் நீதிபதி குமாரசாமி ஏற்கக் கூடாது. கர்நாடகா அரசு மற்றும் அன்பழகன் தரப்புகள் எழுத்துப் பூர்வமாக வாதங்களைத், ஏப்ரல் 28ம் தேதி தாக்கல் செய்யலாம் கர்நாடகா அரசு மற்றும் அன்பழகன் தரப்பு வாதங்களையும் கருத்தில் கொண்டு நீதிபதி குமாரசாமி தீர்ப்பளிக்கலாம்

 

http://www.dinamalar.com/news_detail.asp?id=1240217

  • Replies 311
  • Views 29.2k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

தாழப் பறக்கும் காக்கைகள் 27: தீர்ப்பில் தெரியும்!

 

பவானி சிங்கை அரசு தரப்பு வக்கீலாக நியமிக்க தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என்பது சட்டம் தெரியாத பாமரனுக்கு தெரியும். சுப்ரீம் கோர்ட் ஒரு இழுபறிக்கு பிறகு இப்போது அதை உறுதி செய்திருக்கிறது. மகிழ்ச்சிதான் போங்கள். பாமரனுக்கு எப்படி தெரியும் என்று மல்லுக்கட்ட வேண்டாம். எல்லாம் லாஜிக்தான்.

 

 

ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கை தாக்கல் செய்தது தமிழக அரசின் ஊழல் தடுப்பு பிரிவு. அப்போது திமுக ஆட்சி நடந்தது. அடுத்து அதிமுக ஆட்சி வந்தது. ஜெயலலிதா மீதான வழக்குகள் தானாகவே பின்வாங்கி ஓடின. சொத்து குவிப்பு ஸ்டிராங்கான வழக்கு என்று திமுக புரிந்து கொண்டிருந்தது. அதை சென்னையில் நடத்தினால் நீதி கிட்டாது என்று சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டது. அந்த வாதத்தை சுப்ரீம் கோர்ட் ஏற்றுக் கொண்டது. ஆகவே வழக்கை கர்நாடகாவுக்கு மாற்றியது.

 

அவ்வளவுதான். அதோடு தமிழக அரசுக்கும் அந்த வழக்குக்கும் உள்ள உறவு, தொடர்பு துண்டிக்கப்பட்டு விட்டது. வழக்கை தொடர்ந்தது தமிழக அரசின் ஊழல் தடுப்பு பிரிவு போலீஸாக இருந்தாலும், வழக்கில் அரசு தரப்பாக - பிராசிகியூஷன் என்பார்களே - ஆஜராக வேண்டிய வக்கீலை தமிழக அரசு நியமிக்க முடியாது. வழக்கை பெற்றுக் கொண்ட கர்நாடகா அரசுதான் அதையும் செய்ய வேண்டும். அதிமுக ஆட்சி என்றில்லை. திமுக ஆட்சி நடந்தாலும் அதுதான் நிலைமை. கைவிட்டு போன ஒரு வழக்கில் மூக்கை நுழைக்க தமிழக அரசுக்கு எந்த முகாந்திரமும் கிடையாது. இது நல்ல ஏற்பாடு. ஏன் என்றால், ஆட்சி மாறும் போதெல்லாம் ஊழல் வழக்குகள் தொடரப்படுவதை பார்க்கிறோம்.

 

ஆட்சிக்கு வந்தவர்கள் ஆட்சியை விட்டு போனவர்கள் மீது வழக்கு தொடர்ந்து இம்சை கொடுப்பது வாடிக்கையாகி விட்டது. அதே போல, வழக்குகளைச் சந்திப்பவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் அந்த வழக்குகளை சாகடித்து பாலூற்ற என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் என்பதையும் பார்த்து வருகிறோம். ஊர் உலகத்தில் நல்ல பெயருடன் செல்வாக்குடன் வலம் வருகிற புள்ளிகள்கூட பல்டி அடித்து பிறழ் சாட்சியாக மாறுவார்கள். சாட்சியங்கள், ஆதாரங்கள் காணாமல் போகும். நீதிபதிகள் மாறிக் கொண்டே இருப்பார்கள். மாற்ற முடியாத பட்சத்தில் பதவி உயர்வு பெற்று கண் காணாத இடத்துக்கு போய்விடுவார்கள்.

 

இந்த கேலிக் கூத்தை எல்லாம் தவிர்க்கதான் வழக்கு வேறு மாநிலத்துக்கு மாற்றப்படுகிறது. வழக்கில் சிக்கிய புள்ளியின் செல்வாக்கு மாநில எல்லைக்கு அப்பாலும் செல்லுபடி ஆகுமானால் அங்கேயும் சில கூத்துகள் நடக்கதான் செய்யும். காஞ்சிபுரம் சங்கர ராமன் கொலை வழக்கு புதுச்சேரிக்கு மாற்றப்பட்டது. அதன் கதி என்ன ஆனது என்பதை பார்த்தோம். அதுபோல கர்நாடகாவில் தனி கோர்ட் அமைக்கப்பட்டும் அது ஒழுங்காக செயல்பட முடியாமல் தொடர்ந்து கட்டை போடப்பட்டது. அந்த கட்டைகளில் ஒன்றுதான் பவானி சிங்கின் நியமனம். பவானி சிங் போன்றவர்கள் இருப்பதால்தான் நல்ல வழக்கறிஞர்களை நம்மால் அடையாளம் காண முடிகிறது. வில்லன் இல்லாவிட்டால் கதாநாயகனுக்கு ஏது மரியாதை என்று ஒரு அரசியல் நண்பர் சொல்வார்.

 

பவானியை நியமித்த கர்நாடக அரசே அவரது செயல் திறனைப் பார்த்து ஆடிப்போனது. ஜெயலலிதா மீதான வழக்கை நடத்தி அவருக்கு தண்டனை பெற்று கொடுப்பதற்காக நியமிக்கப்பட்ட ஒருவர், அதற்கு நேர் மாறான விளைவை நோக்கி வழக்கை செலுத்துவார் என்று யார்தான் எதிர்பார்த்திருக்க முடியும்? தவறை உணர்ந்து நியமனத்தை ரத்து செய்தது கர்நாடக அரசு. என்னுடைய நேர்மையை சந்தேகிப்பதா என்று பவானி கொதித்து எழுந்திருந்தால், அட! என்று பார்வையாளர்கள் நிமிர்ந்து உட்கார்ந்திருப்பார்கள். ஆனால் பவானிக்கு வக்காலத்து வாங்கியது யார்? அவரால் குற்றவாளி முத்திரை குத்தி தண்டிக்கப்பட இருந்த பிரதிவாதி ஜெயலலிதா. கர்நாடகா அரசு நியமிக்கா விட்டால் என்ன, வழக்கின் அப்பீலுக்கு அரசு தரப்பு வழக்கறிஞராக பவானி சிங்கை நாங்கள் நியமிக்கிறோம் என்று ஜெயலலிதா அரசு களத்தில் குதித்தது. இன்னொரு புறம், பவானி சிங் அப்பீலிலும் அரசு வழக்கறிஞராக நீடிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டில் ஜெயலலிதா வழக்கு தொடர்ந்தார்.

 

இந்திய நீதிமன்ற வரலாற்றில் இதுவரை கண்டிராத வினோத நிகழ்வுகள் இவை. வழக்கில் தமிழக அரசுக்கு அதிகாரமோ உரிமையோ இருந்தால் நீதி கிடைக்காது என்பதால்தானே சென்னையில் இருந்து பெங்களூருக்கு மாற்றியது சுப்ரீம் கோர்ட். ஒதுங்கி நிற்க உத்தரவு பிறப்பித்த பிறகும் வலிய தலையை நுழைத்து வழக்கறிஞரை நியமித்தால் சுப்ரீம் கோர்ட் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்குமா? 

 

பவானி சிங் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக செயல்படுவதால் அவரை அரசு தரப்பு வழக்கறிஞராக செயல்பட அனுமதிக்க கூடாது என்றுதானே திமுக வழக்கு தொடர்ந்தது? பவானிசிங்கை நியமித்து தமிழக அரசு ஆணை பிறப்பித்து, அதே நபருக்காக ஜெயலலிதாவும் வழக்கு தொடர்ந்தால் திமுகவின் குற்றச்சாட்டில் உண்மை இருப்பதாகத்தானே கருத முடியும்? ஏறத்தாழ 20 ஆண்டுகளுக்கு முன்னால் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்ட காலத்தில் இருந்து தொடர்ந்து கவனித்து வருபவர்களுக்கு ஒரு விஷயம் நன்றாக தெரிகிறது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்தார் என்ற குற்றச்சாட்டை விட, தப்பும் தவறுமான தொடர் சட்ட நடவடிக்கைகளால் தனி கோர்ட் தொடங்கி சுப்ரீம் கோர்ட் வரையிலான நீதிபதிகளின் கடுமையான அதிருப்திக்கு ஆளாகி வழக்கை மிகவும் சிக்கலாகி விட்டார் ஜெயலலிதா என்பதுதான் அது. அப்பீல் மீதான தீர்ப்பு வரும்போது இந்த உண்மை நிச்சயமாக அதில் எதிரொலிக்கும்.

 

 

Read more at: http://tamil.oneindia.com/art-culture/essays/kathir/kathir-s-thaazha-parakkum-kaakkaigal-27-225573.html

  • தொடங்கியவர்

ஜெ. அப்பீல் வழக்கில் கர்நாடக தரப்பு எழுத்துப்பூர்வ இறுதி வாதம் ஹைகோர்ட்டில் நாளை தாக்கல்!

 

பெங்களூரு: ஜெயலலிதா அப்பீல் மனு மீதான விசாரணையில் கர்நாடகா சார்பில் நாளை எழுத்துப்பூர்வ வாதம் சமர்ப்பிக்கப்படுகிறது. சொத்துக் குவிப்பு வழக்கில் சிறப்பு நீதிமன்றம் விதித்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடக ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார் ஜெயலலிதா. இந்த வழக்கில் அரசு வக்கீலாக ஆஜரான பவானிசிங் நியமனம் செல்லாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், அன்பழகன் மற்றும் கர்நாடக தரப்புகள், எழுத்துப்பூர்வ இறுதி வாதத்தை ஹைகோர்ட்டில் தாக்கல் செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது.

 

  இதைத் தொடர்ந்து அன்பழகன் சார்பில், இன்றே 81 பக்கங்கள் கொண்ட எழுத்துப்பூர்வ வாதம், கர்நாடக ஹைகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது. இன்னும் கர்நாடக அரசு தாக்கல் செய்ய வேண்டியதுதான் பாக்கி. இதுகுறித்து கர்நாடக வழக்கறிஞர்கள் குழு 'ஒன்இந்தியாவிடம்' கூறுகையில், "இறுதி வாதத்தை தயார் செய்து வருகிறோம். செவ்வாய்க்கிழமை, ஹைகோர்ட்டில் தாக்கல் செய்வோம். ஒருவேளை முடியாவிட்டால் கூடுதலாக ஒரு நாள் எடுத்துக்கொள்ளுவோம்" என்று கூறியது. இந்த வாத பட்டியல் சுமார் 50 பக்கங்கள் கொண்டதாக இருக்கும் என்று தெரிகிறது.

 

Read more at: http://tamil.oneindia.com/news/india/when-will-karntaka-make-its-submissions-jayalalitha-case-225596.html

  • தொடங்கியவர்

ஜெ. வழக்கில் பவானிசிங் நியமனம் செல்லாது- விஷத்தை பாய்ச்சும் செயல்: சுப்ரீம் கோர்ட் 'சுளீர்' தீர்ப்பு

 

டெல்லி: சொத்துக் குவிப்பு வழக்கில் தமக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில் அரசு வழக்கறிஞராக பவானி சிங்கை தமிழக அரசு நியமித்தது செல்லாது என்று உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. அதே நேரத்தில் மேல்முறையீட்டு மனு மீது விசாரணை முடிந்துவிட்டதால் அதில் மறுவிசாரணை தேவை இல்லை என்றும் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

 

மேலும் பவானிசிங் நியமனம் விஷத்தைப் பாய்ச்சும் செயல் என்றும் உச்சநீதிமன்றம் சாடியுள்ளது. சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து பெங்களூர் பரப்பன அக்ராஹா சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்ததது. இதையடுத்து கைது செய்யப்பட்ட ஜெயலலிதா ஜாமீனில் வெளியே வந்தார். ஜெயலலிதா தனக்கு வழங்கப்பட்ட தண்டனையை எதிர்த்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார்.

 

இந்த மேல்முறையீட்டு வழக்கில் அரசு வழக்கறிஞராக பவானி சிங்கை தமிழக அரசு நியமித்து உத்தரவிட்டிருந்தது. 

 

ஆனால் அரசு வழக்கறிஞராக பவானிசிங்கை தமிழக அரசு நியமித்தது தவறு; அவர் ஜெயலலிதாவுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், அவரை நீக்க வேண்டும் என்றும் கூறி தி.மு.க. பொதுச் செயலாளர் க. அன்பழகன் முதலில் கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இதனை கர்நாடகா உயர்நீதிமன்ற தனி பெஞ்ச் நீதிபதி குமாரசாமி தள்ளுபடி செய்தார். இதனையடுத்து க.அன்பழகன் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அவரது மனு நீதிபதிகள் எம்.பி.லோகூர், ஆர்.பானுமதி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது. இதை விசாரித்த நீதிபதிகள் இருவரும் வேறுபட்ட தீர்ப்பை கடந்த 15-ந் தேதி வழங்கினர்.

 

அதில் பவானி சிங்கை அரசு வழக்கறிஞராக நியமித்ததில் தவறு இல்லை என்று பானுமதியும், பவானி சிங் நியமனம் தவறு என்று லோகூரும் தெரிவித்தனர். இதையடுத்து இந்த வழக்கை 3 பேர் கொண்ட பெஞ்சுக்கு மாற்ற அவர்கள் தலைமை நீதிபதி ஹெச்.எல். தத்துவுக்கு பரிந்துரைத்தனர். அதன்படி இந்த வழக்கு நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஆர்.கே. அகர்வால் மற்றும் பிரபுல்ல சி.பந்த் ஆகியோர் கொண்ட பெஞ்சுக்கு மாற்றப்பட்டது. வழக்கை விசாரித்த மிஸ்ரா தலைமையிலான பெஞ்ச் கடந்த 21-ந் தேதி கூறுகையில், மேல்முறையீட்டு வழக்கில் பவானி சிங்கை அரசு வழக்கறிஞராக தமிழக அரசு நியமித்தது சரியல்ல. அதே நேரத்தில் விசாரணை முடிந்துவிட்டதால் இந்த வழக்கில் மறுவிசாரணை தேவையில்லை.

இந்த வழக்கின் இறுதி தீர்ப்பு ஏப்ரல் 27-ந் தேதி வழங்கப்படும் என்றனர். அதன்படி இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

 

மிஸ்ரா தலைமையிலான பெஞ்ச் அளித்த தீர்ப்பு விவரம்:

 

ஜெயலலிதா தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில் பவானி சிங்கை அரசு வழக்கறிஞராக தமிழக அரசு நியமித்தது செல்லாது;

இது விஷத்தைப் பாய்ச்சும் செயல்.

 

இவ்வழக்கில் அரசு வழக்கறிஞரை நியமிக்க தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை இந்த வழக்கில் அரசு வழக்கறிஞரை நியமிக்க கர்நாடகா அரசுக்குத்தான் அதிகாரம் உண்டு.

 

அதே நேரத்தில் மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை முடிந்துவிட்டதால் அதில் மறுவிசாரணை தேவை இல்லை.

 

மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் பவானிசிங் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்த வாதத்தை நீதிபதி குமாரசாமி ஏற்கக் கூடாது.

 

கர்நாடகா அரசு மற்றும் க. அன்பழகன் தரப்புகள் எழுத்துப் பூர்வமாக வாதங்களைத் தாக்கல் செய்யலாம்.

 

நாட்டில் ஊழல் ஒழிக்கப்பட வேண்டும் என்பதையும் கர்நாடகா அரசு மற்றும் க. அன்பழகன் தரப்பு வாதங்களையும் நீதிபதி குமாரசாமி கருத்தில் கொண்டு தீர்ப்பளிக்க வேண்டும். இவ்வாறு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

 

Read more at: http://tamil.oneindia.com/news/india/jaya-s-da-case-sc-verdict-on-appointment-spp-today-225532.html

  • தொடங்கியவர்

ஜெ. வழக்கில் மீண்டும் அரசு வக்கீலாக களமிறங்குகிறார் ஆச்சாரியா! கர்நாடக அரசு உத்தரவு 

 

பெங்களூரு: ஜெயலலிதா மேல்முறையீட்டு வழக்கில், கர்நாடக சிறப்பு அரசு வழக்கறிஞராக பி.வி.ஆச்சாரியாவை நியமித்து கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றபோது, அரசு வக்கீலாக பணியாற்றியவர் ஆச்சாரியா. ஜெயலலிதா தரப்புக்கு வழக்கில் பின்னடைவு ஏற்பட இவரது வாதங்கள் ஒரு முக்கிய காரணம். ஆனால் அப்போதைய பாஜக அரசிடமிருந்தும், வேறு சிலரிடமிருந்தும் வந்த நெருக்குதல்களால் அரசு வக்கீல் பதவியை ராஜினாமா செய்தார். இதுகுறித்து தனது சுய சரிதை புத்தகத்திலும் தெரிவித்திருந்தார்.

 

பவானிசிங் நியமனம் இந்நிலையில், அரசு வக்கீலாக பவானிசிங் நியமிக்கப்பட்டார். ஆனால் ஹைகோர்ட்டில் ஜெ. மேல்முறையீடு செய்தபோது பவானிசிங்கை அரசு வக்கீலாக கர்நாடக அரசு நியமிக்கவில்லை. தமிழக அரசே நியமித்துக் கொண்டது. எனவே, இந்த நியமனத்தை செல்லாது என்று உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துவிட்டது. மேலும் கர்நாடக அரசு தனது வாதத்தை உயர் நீதிமன்றத்தில் ஏப்ரல் 28ம்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியது.

 

சட்ட அமைச்சருடன் சந்திப்பு இந்நிலையில், கர்நாடக அரசு வக்கீலாக ஆச்சாரியாவை நியமிக்க மாநில அரசு திட்டமிட்டது. கர்நாடக சட்ட அமைச்சர் ஜெயச்சந்திரா, இதுகுறித்து இன்று காலை ஆச்சாரியாவை சந்தித்து பேசியதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. அப்போது அரசு வக்கீலாக ஆச்சாரியா வாதிட சம்மதமா என்று ஜெயச்சந்திரா கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு ஆச்சாரியாவும் சம்மதித்துள்ளார்.

 

விவரம் தெரிந்தவர் ஆச்சாரியாவுக்கு ஜெயலலிதா வழக்கு குறித்த முழு விவரமும் தெரியும் என்பதால், அவரே பொருத்தமானவர் என்று கர்நாடக அரசு கருதுகிறது. ஹைகோர்ட்டில், அப்பீல் வழக்கு முடிவுக்கு வந்துவிட்டாலும் கூட, ஒருவேளை உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு மேல்முறையீட்டுக்காக செல்ல வேண்டியிருந்தால், அப்போதும் ஆச்சாரியாவை கர்நாடக அரசு பயன்படுத்திக்கொள்ள திட்டமிட்டுள்ளது.

 

ஆச்சாரியா வந்தால் அவ்ளோதான்.. இந்நிலையில், ஆச்சாரியாவை அரசு வழகறிஞராக நியமித்து கர்நாடக அரசு இன்று மாலை ஆணை பிறப்பித்தது. ஆச்சாரியா, வழக்கிற்குள் வந்துள்ளதால், மிகவும் ஆக்ரோஷமாக வாதங்களை எடுத்து வைப்பார் என்பதால், வழக்கில் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஆச்சாரியாவின் உதவி வழக்கறிஞராக சந்தேஷ் சவுட்டாவை நியமித்துள்ளது கர்நாடக அரசு. இவரும், ஏற்கனவே ஆச்சாரியாவின் உதவி வழக்கறிஞராக இருந்தவராகும்.

 

 

Read more at: http://tamil.oneindia.com/news/india/jaya-appeal-karnataka-appoint-b-v-acharya-as-spp-225624.html

  • தொடங்கியவர்

ஜெ. அப்பீல்: கர்நாடக தரப்பு வாதத்தை இன்று மாலை 4 மணிக்கு தாக்கல் செய்கிறார் ஆச்சாரியா

 

பெங்களூரு: ஜெயலலிதா மேல்முறையீட்டு மனு மீதான கர்நாடக அரசு தரப்பு வழக்கறிஞராக பி.வி.ஆச்சாரியா கர்நாடக அரசால் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று மாலை 4 மணிக்கு உயர்நீதிமன்றத்தில் கர்நாடக அரசு தரப்பு வாதத்தை அவர் தாக்கல் செய்ய உள்ளார். ஜெ. அப்பீல் மனு மீதான விசாரணையில், அரசு வக்கீலாக செயல்பட்ட பவானிசிங் நியமனம் செல்லாது என்பதால் அவரது வாதத்தை கவனத்தில் எடுக்க வேண்டாம் என்று உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

 

எனவே திமுகவின் அன்பழகன் தரப்பு மற்றும் கர்நாடக அரசு தரப்பை எழுத்துப்பூர்வ வாதத்தை தயார் செய்து அளிக்க கூறியது.

 

அதன்படி அன்பழகன் தரப்பு நேற்று 81 பக்க வாதத்தை ஹைகோர்ட்டில் தாக்கல் செய்தது. இந்நிலையில், கர்நாடக அரசு இன்றுக்குள் வாதத்தை தாக்கல் செய்ய வேண்டியிருந்தது. கர்நாடக அரசு வக்கீலாக ஆச்சாரியா நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இன்று மாலை 4 மணிக்கு ஹைகோர்ட்டில் தனது வாதத்தை தாக்கல் செய்கிறார்.

 

Read more at: http://tamil.oneindia.com/news/india/jaya-case-b-v-acharya-will-fill-written-submissions-225650.html

  • தொடங்கியவர்

Breaking Now

 

ஜெ. வழக்கு கர்நாடகாவுக்கு மாற்றப்பட்டதால் மாநிலத்துக்கே முன்னுரிமை: ஆச்சார்யா வாதம்

 

கர்நாடகாவை ஒருதரப்பாக சேர்க்காத ஜெ. மேல்முறையீட்டு மனுவே தவறு: பி.வி.ஆச்சார்யா

 

சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்பை உறுதி செய்ய வேண்டும்: பி.வி.ஆச்சார்யா

Read more at: http://tamil.oneindia.com/

 

 

  • தொடங்கியவர்

கர்நாடகாவை ஒருதரப்பாக சேர்க்காத ஜெ. அப்பீல் மனு தவறு- தண்டனையை உறுதி செய்க: பி.வி. ஆச்சார்யா

 

பெங்களூர்: சொத்துக் குவிப்பு வழக்கில் தமக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்த ஜெயலலிதா, கர்நாடகா அரசை ஒருதரப்பாக சேர்க்காதது சட்டப்படி தவறு என்று கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞராக பி.வி.ஆச்சார்யா அதிரடியாக தமது வாதத்தை முன்வைத்தார்.

 

மேலும் ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு சிறை தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் ஆச்சார்யா தமது வாதத்தில் வலியுறுத்தினார். சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோருக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார் நீதிபதி குன்ஹா. மேலும் ஜெயலலிதாவுக்கு ரூ100 கோடி அபராதமும் எஞ்சிய மூவருக்கும் தலா ரூ10 கோடி அபராதமும் விதித்தார்.

 

 

 இதனை எதிர்த்து கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதா உள்ளிட்டோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை தனி பெஞ்ச் நீதிபதி குமாரசாமி விசாரித்து தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்துள்ளார். இதனிடையே ஜெயலலிதா மேல்முறையீட்டு வழக்கில் அரசு வழக்கறிஞராக பவானிசிங்கை தமிழக அரசு நியமித்தது செல்லாது எனக் கோரி தி.மு.க. பொதுச்செயலர் உச்சநீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார். இம்மனுவை விசாரித்த தீபக் மிஸ்ரா தலைமையிலான 3 நீதிபதிகள் பெஞ்ச், பவானிசிங் நியமனம் செல்லாது; விசாரணைகள் நடத்தி முடிக்கப்பட்டதால் மறுவிசாரணை தேவை இல்லை என்று தீர்ப்பளித்தனர்.

 

மேலும் பவானிசிங்கின் வாதத்தை நீதிபதி குமாரசாமி நிராகரிக்க வேண்டும்; கர்நாடகா அரசு மற்றும் அன்பழகன் தரப்பு தமது வாதங்களை தாக்கல் செய்ய வேண்டும். இந்த வாதங்களின் அடிப்படையில் நீதிபதி தீர்ப்பளிக்க வேண்டும் எனவும் கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து அன்பழகன் தரப்பு நேற்றே தமது வாதத்தை முன்வைத்தது. இன்று கர்நாடகா அரசு தமக்கான அரசு வழக்கறிஞராக பி.வி.ஆச்சார்யாவை நியமித்தது. அவருக்கு உதவியாக சந்தேஷ் சவுடாவும் நியமிக்கப்பட்டார். ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் 9 ஆண்டுகாலம் அரசு வழக்கறிஞராக இருந்தவர் ஆச்சார்யா. கர்நாடகா அரசின் அட்வகேட் ஜெனரலாக 8 முறை பதவி வகித்த மூத்த வழக்கறிஞர். ஜெயலலிதா தரப்பு கடும் நெருக்கடி கொடுத்ததால் தமது அரசு வழக்கறிஞர் பதவியை ராஜினாமா செய்திருந்தார் என்பதும் நினைவில் கொள்ளத்தக்கது.

 

இதன் பின்னர் இன்று கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் 18 பக்கங்களில் அடங்கிய தமது எழுத்துப்பூர்வ வாதத்தை பி.வி.ஆச்சார்யா தாக்கல் செய்தார். அதில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்:

 

ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் தமிழக அரசின் தலையீடு அதிகமாக இருந்ததால் இந்த வழக்கை 2004 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் கர்நாடகாவுக்கு மாற்றியது.

 

கர்நாடகாவுக்கு வழக்கை மாற்றிய உச்சநீதிமன்றம், இனி ஜெயலலிதாவுக்கு எதிரான வழக்கில் கர்நாடகாதான் முதல் தரப்பு என்று உத்தரவிட்டது.

 

இதனடிப்படையில் 2004ஆம் ஆண்டு கர்நாடகா மாநிலத்துக்கு ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு வழக்கு மாற்றப்பட்ட பின்னர் கர்நாடகாவுக்கே முதல் உரிமை உண்டு.

 

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி ஜெயலலிதா தமது மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்த போது கர்நாடகா அரசை ஒரு தரப்பாக சேர்த்திருக்க வேண்டும்.

 

கர்நாடகா அரசை ஒருதரப்பாக சேர்க்காத ஜெயலலிதாவின் மேல்முறையீட்டு மனுவே சட்டப்படி தவறானது.

 

கர்நாடகா அரசை மேல்முறையீட்டு மனுவில் ஒரு தரப்பாக சேர்க்காததன் மூலம் ஜெயலலிதா உள்ளிட்டோர் தங்களது குற்றத்தை ஒப்புக் கொள்வதாகவே அர்த்தம்.

 

பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா உரிய விசாரணைகள் நடத்தி சாட்சியங்களை விசாரித்தே குற்றத்தை உறுதி செய்து தீர்ப்பு அளித்திருக்கிறார்.

 

இதனால் ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு சிறைத் தண்டனை, அபராதம் விதித்து நீதிபதி குன்ஹா அளித்த தீர்ப்பை உயர்நீதிமன்றம் உறுதி செய்ய வேண்டும்.

 

இந்த வழக்கில் நீதிமன்றம் அனுமதித்தால் கூடுதலான வாதத்தை முன்வைக்கவும் கர்நாடகா அரசு தயாராக உள்ளது. இவ்வாறு ஆச்சார்யா தமது 18 பக்க வாதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

 

 

Read more at: http://tamil.oneindia.com/news/india/jaya-appeal-case-karnataka-justifies-trial-court-verdict-225660.html

  • தொடங்கியவர்

சொத்துக் குவிப்பு: ஜெயலலிதா மனுவின் அடித்தளத்தையே ஆட்டம் காணச் செய்யும் 'ஆச்சாரியா பாயிண்ட்'!

 

பெங்களூரு: ஜெயலலிதா சொத்துக்குவிப்பு அப்பீல் வழக்கின் அடித்தளத்தையே ஆட்டம் காணச்செய்துள்ளது ஆச்சாரியா சமர்ப்பித்த வாதம். ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் அரசு வழக்கறிஞராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார் பி.வி.ஆச்சாரியா. நியமிக்கப்பட்ட ஒரே நாளுக்குள், 18 பக்க கர்நாடக தரப்பு வாதத்தையும், ஹைகோர்ட்டில் சமர்ப்பித்துள்ளார் ஆச்சாரியா. அந்த வாதத்தின் முக்கிய கருப்பொருள்தான், தற்போது ஜெயலலிதா தரப்பை ஆட்டம் காண செய்துள்ளது.

 

எதிர்பாராத யதார்த்தம் எதிர்பாராத நேரத்தில் என்ட்ரி ஆனவர் ஆச்சாரியா. பவானிசிங் நியமனம் செல்லுமா செல்லாதா என்பதில்தான் அனைவரின் பார்வையும் இருந்த சமயத்தில், திடீரென விஸ்வரூபம் எடுத்து நிற்கிறார் ஆச்சாரியா. கர்நாடக அரசின் இந்த மூவ், யாரும் எதிர்பார்க்காதது என்றாலும், யதார்த்தமானது.

 

அனுபவம் சுமார் ஏழு ஆண்டு காலம், ஜெ., வழக்கில் அரசு வக்கீலாக ஆஜரான ஆச்சாரியாவை விட்டால், வேறு யாரால் ஒரே நாளில் இந்த பதில் மனுவை தாக்கல் செய்ய முடியும் என்ற கர்நாடக அரசின் யோசனைதான், அவரது நியமனத்துக்கு காரணம்.

 

அன்பழகன் தரப்புக்கு டபுள் வெற்றி அன்பழகன் தரப்பை, கோர்ட் பக்கம் வர வேண்டாம் என்று விரட்டிய ஹைகோர்ட்டிடமே, அன்பழகன் தரப்பு வாதத்தை சமர்ப்பிக்க சுப்ரீம்கோர்ட் உத்தரவிட்டது. இது அன்பழகன் தரப்புக்கு கிடைத்த முதல் வெற்றி என்றால், ஆச்சாரியாவின் வாதம், 2வது வெற்றி.

 

இழுபறிக்கு பின் நியமனம் ஆனால், ஆச்சாரியாவின் நியமனம் அவ்வளவு எளிதில் நடந்துவிடவில்லை. ஏனெனில், கர்நாடக பாஜக அரசின்போது, மாநில அட்வகேட் ஜெனரலாக பதவி வகித்தவவர் ஆச்சாரியா என்பதால், தற்போதைய காங்கிரஸ் அரசில் முக்கிமான ஒரு வழக்கின் அரசு வக்கீலாக அவரை நியமிக்க ஆளும் தரப்பு முதலில் தயங்கியுள்ளது. ஆனால், ஒரே நாளி்ல் பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டிய நிர்பந்தம் இருந்ததால், கடைசியாக ஆச்சாரியாதான் ஒரே நபர் என்ற முடிவுக்கு அரசு வந்ததாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

 

ஏற்ற ஆச்சாரியா ஆச்சாரியாவும், தனக்கு இப்படி ஒரு வாய்ப்பு வரும் என்று கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. வந்த வாய்ப்பை நழுவ விடாமல், பயன்படுத்திக்கொள்ளவும் ஆச்சாரியா முடிவு செய்தார். எனவே, கர்நாடக அரசின் கோரிக்கையை ஏற்றார். உடனடியாக பதில் மனுவை தயாரிக்க கர்நாடக அரசு கேட்டுக்கொண்டது

 

குறைந்த பக்கத்தில் நிறைந்த வாதம் அதிகபட்சமாக 50 பக்கங்கள் வரை பதில் மனுவை தாக்கல் செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியிருந்தாலும்கூட, சுருக்கமாக சில விஷயங்களைச் சொன்னால் போதும் என்று சொல்லி ஆச்சார்யா டிக்டேட் செய்துள்ளார். அவரது வாதம் மொத்தமே 18 பக்கங்களுக்குள்தான் வந்தது.

 

வழக்கமே தப்புங்க.. அதில் மிக முக்கியமாக அவர் சொன்ன விஷயம், ‘இந்த மேல்முறையீட்டு மனுவே சட்டப்பூர்வமானது அல்ல' என்பதுதான். ‘இந்த வழக்கை நடத்தியது கர்நாடக அரசு. அவர்கள்தான் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கறிஞரை நியமித்து வாதங்களை வைத்தார்கள். வழக்கின் தீர்ப்பு வந்து, மேல்முறையீட்டுக்கு இந்த வழக்கு போனது என்றால், எதிர் மனுதாரராகக் கர்நாடக அரசைச் சேர்த்திருக்க வேண்டும், அவர்களது பதிலை வாங்கி இருக்க வேண்டும். அப்படி கர்நாடக அரசுக்குத் தெரியாமல் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்து விசாரணையை முடித்திருக்கிறார்கள். எனவே இந்த மேல்முறையீட்டு மனுவே செல்லாது' என்று சொல்லியிருக்கிறார் ஆச்சார்யா!

 

பரிசீலித்தால்.. மேல்முறையீட்டு மனுவே செல்லாது என்று ஆச்சார்யா சொல்வதை நீதிபதி குமாரசாமி பரிசீலனை செய்ய ஆரம்பித்தால் என்ன ஆவது என்று சட்ட வல்லுநர்கள் மத்தியில் ஒரு விவாதம் நடக்க ஆரம்பித்துள்ளது. ஒருவேளை, ஆச்சார்யா மனுவுக்கு விளக்கம் கேட்டு உச்ச நீதிமன்றத்தை நாடலாம் என்றும் சொல்லப்படுகிறது. எனவே, குழப்பங்கள் இன்னமும் தீராமல்தான் உள்ளது.

 

செக் வைத்த ஆச்சாரியா இந்நிலையில்தான், வரும் 12ம் தேதிக்குள் தீர்ப்பு அளிக்க வேண்டிய கட்டாயத்தில் நீதிபதி குமாரசாமி உள்ளார். ஆச்சாரியா வைத்த அந்த செக், வழக்கின் அடித்தளத்தை ஆட்டிப்பார்த்துள்ளது.

 

Read more at: http://tamil.oneindia.com/news/india/acharya-raising-critical-point-the-jayalalitha-226010.html

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப ஸ்கெட்ச் போட்டு ஆச்சாரியாவை தூக்கிடவேண்டியதுதான்.

  • தொடங்கியவர்

ஜெ., மேல்முறையீட்டு வழக்கில் மே 11ல் தீர்ப்பு?

 

பெங்களூரு: ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் வரும் 11ம் தேதி தீர்ப்பு வழங்கப்படலாம் என செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த வழக்கில் அரசு சார்பில் பவானி சிங் ஆஜராகியது செல்லாது என சுப்ரீம் கோர்ட் சமீபத்தில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதையடுத்து ஆச்சார்யா அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். அவர் தனது வாதத்தில், ஜெ., மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என கூறியிருந்தார்.

 

http://www.dinamalar.com/news_detail.asp?id=1246040

  • தொடங்கியவர்

கோர்ட்டுக்கு கோடை விடுமுறை.. லீவில் போகாமல் ஜெ., வழக்கில் தீர்ப்பு எழுதுகிறார் குமாரசாமி!

 

பெங்களூரு: கர்நாடக ஹைகோர்ட்டுக்கு கோடை விடுமுறை தொடங்கியுள்ள நிலையிலும், ஜெயலலிதா அப்பீல் மனுவை விசாரித்த சிறப்பு நீதிபதி சி.ஆர்.குமாரசாமி, தனது பணிகளை விடுப்பு எடுக்காமல் தொடர்ந்து வருகிறார். சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை கர்நாடக ஹைகோர்ட் நீதிபதி குமாரசாமி விசாரித்து வந்தார். விசாரணை முடிந்த நிலையில், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைப்பதாக மார்ச் 11ம் தேதி அறிவித்தார் குமாரசாமி. எனவே ஏப்ரல் 30ம் தேதிக்குள் தீர்ப்பு வெளியாக வாய்ப்பிருப்பதாக கருதப்பட்டது.

2jeo189.jpg

மே 12வரை காலக்கெடு ஆனால், பவானிசிங் அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்ததால், தீர்ப்பளிக்க மே 12ம் தேதி வரை காலக்கெடு கொடுத்தார் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஹெச்.எல்.தத்து. இதையடுத்து அன்பழகன் மற்றும் கர்நாடக அரசு தரப்பு வாதங்கள் ஹைகோர்ட்டில் சமர்ப்பிக்கப்பட்டன. இவற்றை நீதிபதி குமாரசாமி பரிசீலித்துக் கொண்டுள்ளார்.

 

நீதிமன்றத்துக்கு விடுமுறை இதனிடையே கர்நாடக உயர் நீதிமன்றத்துக்கு மே 4ம் தேதியில் இருந்து மே 29ம் தேதி வரை கோடைகால விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாட்களில் நீதிமன்றமும், நீதிமன்ற அலுவலகங்களும் செயல்படாது. இருப்பினும் அவசர வழக்குகளுக்காக மே 5, 7, 12, 14, 19, 21, 26, 28 ஆகிய தேதிகளில் விடுமுறைகால சிறப்பு அமர்வுகள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் குமாரசாமி தீர்ப்பு வழங்குவதில் தாமதம் ஏற்படுமோ என்ற பரபரப்பு ஏற்பட்டது.

 

காலை முதல் மாலைவரை ஆனால் கோடைகால விடுமுறையாக தொடங்கினாலும், நீதிபதி குமாரசாமி, விடுப்பை எடுக்கவில்லை. நீதிபதி குமாரசாமி காலை 10 மணிக்கு நீதிமன்றத்துக்கு வந்து, மாலை 5.30 மணி வரை வழக்கமான பணிகளை கவனித்து வருகிறார். வழக்கு குறித்த ஆவணங்களை வாசித்து, தீர்ப்பு எழுதும் பணியில் ஈடுபட்டதாக தெரிகிறது.

 

விடுமுறை பொருந்தாது கோடைகால‌ விடுமுறை நீதிபதி குமாரசாமி தலைமையிலான சிறப்பு அமர்வு நீதிமன்றத்துக்கு பொருந்தாது. எனவே அவர் தீர்ப்பு வெளியாகும் வரை தொடர்ந்து நீதிமன்றத்துக்கு வந்து பணிகளை கவனிப்பார் என்று கோர்ட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

விடுமுறை பொருந்தாது கோடைகால‌ விடுமுறை நீதிபதி குமாரசாமி தலைமையிலான சிறப்பு அமர்வு நீதிமன்றத்துக்கு பொருந்தாது. எனவே அவர் தீர்ப்பு வெளியாகும் வரை தொடர்ந்து நீதிமன்றத்துக்கு வந்து பணிகளை கவனிப்பார் என்று கோர்ட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

ஜாமீன் கெடுமுடியும் முன்பு தீர்ப்பு ஜெயலலிதாவின் ஜாமீன் கெடு மே 12ம் தேதிக்குள் முடிவதால், மே 11ம் தேதியே தீர்ப்பை வழங்கிவிட குமாரசாமி திட்டமிட்டு, தீவிரமாக தீர்ப்பு தயாரிக்கும் பணிகளில் ஈடுபட்டுவருவதாக கோர்ட் வட்டாரங்கள் கூறுகின்றன. எனவே நீதித்துறை வட்டாரத்திலும், தமிழக அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பு தொற்றிக்கொண்டுள்ளது.

 

Read more at: http://tamil.oneindia.com/news/india/jaya-case-justice-kumaraswamy-working-on-daily-basis-with-leave-226173.html

  • தொடங்கியவர்

ஜெயலலிதா அப்பீல் மனு: தீர்ப்பு தேதி நாளை மாலை வெளியாக வாய்ப்பு!

 

பெங்களூரு: சொத்துக்குவிப்பு வழக்கில் வழங்கப்பட்ட தண்டனையை எதிர்த்து, முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு தேதியை, கர்நாடக ஹைகோர்ட் நாளை வெளியிடும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கர்நாடக ஹைகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள அப்பீல் மனு மீதான தீர்ப்பு வரும் 11ம் தேதிவெளியாக உள்ளதாக கர்நாடக ஹைகோர்ட் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்படும் நிலையில், தீர்ப்பு தேதி நாளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்று தெரிகிறது.

 

தமிழக முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெ.ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு சுமார் பதினெட்டு வருடங்களாக நடைபெற்றது. முதலில் தமிழகத்திலும், அதன்பிறகு பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்திலும் இவ்வழக்கு விசாரிக்கப்பட்டு கடந்த ஆண்டு செப்டம்பர் 27ம் தேதி, தீர்ப்பு வழங்கப்பட்டது.

 

ஜெயலலிதாவுக்கு தண்டனை ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகிய நால்வரும் இவ்வழக்கில் குற்றவாளிகள் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதில் ஜெயலலிதாவுக்கு நான்காண்டு சிறை தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டது. மற்றமூவருக்கும், 4 ஆண்டு சிறை தண்டனையும், 10 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

 

உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் இதைத் தொடர்ந்து உடனடியாக ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டார். உயர்நீதிமன்றம் அவரது ஜாமீன் மனுவை நிராகரித்ததை தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் மனுவை தாக்கல் செய்தார் ஜெயலலிதா. அக்டோபர் 17ம்தேதி, ஜெயலலிதா உள்ளிட்ட நால்வருக்கும் ஜாமீன் கிடைத்தது. இதன்பிறகு உச்சநீதிமன்றம் மே 12ம் தேதி வரைக்கும் ஜாமீனை நீட்டித்துள்ளது.

 

தீர்ப்பு ஒத்திவைப்பு இந்நிலையில், ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு குற்றவாளிகளும் ஹைகோர்ட்டில் தண்டனையை எதிர்த்து தாக்கல் செய்த மனுவை நீதிபதி சி.ஆர்.குமாரசாமி தலைமையிலான சிறப்பு அமர்வு விசாரித்து வந்தது. இந்த மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை கடந்த மார்ச் 11ம் தேதியுடன் நிறைவடைந்தது. இதையடுத்து நீதிபதி குமாரசாமி தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்தார்.

 

அன்பழகன் மனு இந்நிலையில் சொத்துக்குவிப்பு வழக்கில் அரசு வழக்கறிஞராக ஆஜரான பவானி சிங் நியமனத்தை எதிர்த்து திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த தலைமை நீதிபதி ஹெச்.எல். தத்து மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வுக்கு பரிந்துரை செய்தது. மேலும், ஜெயலலிதா மேல் முறையீட்டு வழக்கில் தீர்ப்பு வழங்க கர்நாடக உயர் நீதிமன்றத்துக்கு மே 12ம் தேதி வரை கூடுதல் அவகாசம் வழங்கி உத்தரவிட்டார்.

 

பவானிசிங் நியமனம் செல்லாது பவானிசிங் நியமனம் பற்றி விசாரித்த 3 நீதிபதிகள் பெஞ்ச் ஏப்ரல் 27ம் தேதி தீர்ப்பு வழங்கியது. பவானி சிங்கின் நியமனம் செல்லாது என தீர்ப்பில் கூறப்பட்டிருந்தது. மேலும் சொத்துக்குவிப்பு வழக்கில் தீர்ப்பு எழுதும்போது பவானி சிங் வாதத்தை கருத்தில் கொள்ளக்கூடாது. மாறாக திமுக தரப்பு, கர்நாடக அரசு தரப்பின் எழுத்துப்பூர்வ வாதத்தை க‌ருத்தில் கொண்டு தீர்ப்பு எழுத வேண்டும் என உத்தரவிட்டது. எனவே திமுக தரப்பு மற்றும் கர்நாடக அரசு தரப்பு தங்கள் வாதங்களை சமர்ப்பித்தனர்.

 

மே 11ல் தீர்ப்பா? இந்த வாதங்களை பரிசீலித்து வரும் குமாரசாமி, மே 12ம் தேதிக்குள் எப்போது வேண்டுமானாலும் தீர்ப்பு வழங்க வாய்ப்பு இருந்தது. ஹைகோர்ட்டில் இருந்து வரும் தகவல்கள் படி, தீர்ப்பு 11ம் தேதி வெளியாகும் என்று தெரிகிறது. தீர்ப்பு வெளியாகும்போது, அதுகுறித்து ஒருநாள் முன்பாக ஹைகோர்ட் வழக்கு பட்டியலில் தகவல் தெரிவிக்கப்படும்.

 

நாளை தீர்ப்பு தேதி? திங்கள்கிழமை தீர்ப்பு வழங்கப்படுவதாக இருந்தால், அதுகுறித்து, நாளை மாலை ஹைகோர்ட் ஊழியர்கள் தயாரிக்கும் வழக்குப்பட்டியலில் அந்த தகவல் இருக்கும். ஏனெனில், சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் ஹைகோர்ட்டுக்கு விடுமுறை என்பதால், திங்கள்கிழமைக்கான வழக்கு பட்டியல், நாளையே வெளியிடப்படுவதுதான் வழக்கம்.

 

மாலையிலிருந்து, இரவுக்குள் வழக்கு பட்டியல் விவரம் மாலை 4.30 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் எப்போது வேண்டுமானாலும் வெளியாகும் வாய்ப்புள்ளது. கோர்ட் அலுவல்கள் மாலை 4.30 மணிக்கு முடிந்த பிறகு, ஊழியர்கள் இரவு 7.30 மணிவரை கோர்ட்டில் இருப்பார்கள். எனவே, இந்த கால இடைவேளைக்குள் தீர்ப்பு தேதி பற்றிய தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை, தீர்ப்பை மே 11ம்தேதி வழங்க குமாரசாமி ஆயத்தமாகவில்லை என்றால், நாளை தீர்ப்பு தேதி வெளியாகாது. ஆனால், பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன்சுவாமி, மே 11ம் தேதி தீர்ப்பு வெளியாக உள்ளதாக டிவிட் செய்திருந்தது நினைவிருக்கலாம்.

 

 

Read more at: http://tamil.oneindia.com/news/india/judgement-date-on-the-jayalalithaa-disproportionate-asset-case-appeal-petition-226291.html

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்பெஷல் களி ரெடியாகிக்கிட்டு இருக்கு அம்மாவுக்கு! :D

  • தொடங்கியவர்

Breaking Now

Read more at: http://tamil.oneindia.com/

 

ஜெ., மேல் முறையீட்டு மனு மீதான தீர்ப்பு தேதி இன்று மாலை வெளியாக வாய்ப்பு

Read more at: http://tamil.oneindia.com/

 

மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு திங்கள்கிழமையும், தீர்ப்பு தேதி இன்றும் வெளியாக வாய்ப்பு

 

 

வழக்கு பற்றிய ஆவணங்கள் ஹைகோர்ட் பதிவாளருக்கு அனுப்பப்பட்டுவிட்டதாக தகவல்

 

  • தொடங்கியவர்

ஜெயலலிதா மேல்முறையீட்டு வழக்கில் திங்கள்கிழமை தீர்ப்பு
 

 

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு மே 11 (திங்கள்கிழமை) வெளியாகிறது.

கர்நாடக உயர் நீதிமன்ற பதிவாளர் பி.ஏ.பாட்டீல் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.

 

 

ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை கர்நாடக உயர் நீதிமன்றத்தில் கடந்த ஜனவரி 5-ம் தேதி தொடங்கியது. 45 நாட்களில் விசாரணையை முடித்த நீதிபதி சி.ஆர்.குமாரசாமி, கடந்த மார்ச் 11-ம் தேதி தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்தார்.

 

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி 3 மாதங்களுக்குள் மேல் முறையீட்டு விசாரணையை முடித்த நீதிபதி, மார்ச் 12-ம் தேதி முதல் தீர்ப்பு எழுதும் பணியை தொடங்கினார். இந்நிலையில் திமுக தரப்பின் மனுவை விசாரித்த உச்ச நீதி மன்றம், “பவானி சிங்கின் நியமனம் சட்டப்படி செல்லாது.

 

 

எனவே மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு எழுதும்போது பவானி சிங் முன்வைத்த வாதத்தை கருத்தில் கொள்ளக்கூடாது. மாறாக திமுக தரப்பும், கர்நாடக அரசு தரப்பும் தாக்கல் செய்யும் எழுத்துப்பூர்வ வாதத்தை கருத்தில் கொள்ள வேண்டும்” என அதிரடி கடந்த ஏப்ரல் 27-ம் தேதி உத்தரவு பிறப்பித்தது

 

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து நீதிபதி குமார சாமி ஏப்ரல் 29-ம் தேதி முதல் மேல்முறையீட்டில் மீண்டும் தீர்ப்பை திருத்தி எழுத ஆரம் பித்தார். திமுக தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட 81 பக்க எழுத்துப் பூர்வ வாதம் மற்றும் அரசு தரப்பு வழக்கறிஞர் ஆச்சார்யா தாக்கல் செய்த 18 பக்க எழுத்துப்பூர்வ வாதத்தைக் கருத்தில் கொண்டு தீர்ப்பெழுத தொடங்கினார்.

 

சொத்து விவரங்களை கணக்கிட‌ ஆடிட்டர் குழுவை நியமித்தார். தேவையான ஆவணங்களை எடுத்து தருவதற்காக நீதிமன்ற ஊழியர் கள் பிச்சமுத்து, காயத்ரி, தீபா ஆகியோரை தனது சேம்பரில் பணிக்கு அமர்த்தினார்.

 

தான் இறுதி செய்த தீர்ப்பு விபரங்களை தட்டச்சு செய்வதற்காக, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் உள்ள அனுபவம் வாய்ந்த 4 அலுவலர்களை தன்னுடன் இருக்குமாறு உத்தரவிட்டார். தீர்ப்பு தயாரிக்கும் குழுவில் இடம்பெற்ற அனை வரும் செல்போன் பயன்படுத்தக் கூடாது. நீதிபதியின் சேம்பருக்கு பையோ, துண்டு காகிதங் களையோ கொண்டு வரக் கூடாது. கேமரா உள்ளிட்ட எந்த மின்சாதனங்களையும் கொண்டு வரக்கூடாது. அதே போல அங்கி ருந்து சிறு துண்டு தாளையும் வெளியே கொண்டு செல்லக் கூடாது.

மேலும் ஒருநாளைக்கு எத்தனை பக்கங்கள் தட்டச்சு செய்யப்படுகின்றன, எத்தனை வெள்ளைத் தாள்கள் படி எடுக்கப்படுகின்றன உள்ளிட்ட சிறிய விபரங்களைக்கூட பதிவு செய்ய வேண்டும் என உத்தரவை பிறப்பித்தது குறிப்பிடத்தக்கது.
 

http://tamil.thehindu.com/india/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/article7184603.ece?homepage=true

  • தொடங்கியவர்

ஜெ., சொத்துக்குவிப்பு அப்பீல் வழக்கில் 11 ம் தேதி காலை தீர்ப்பு
 

பெங்களூரு: ஜெ., சொத்துக்குவிப்பு அப்பீல் வழக்கில் 11 ம் தேதி திங்கட்கிழமை காலை தீர்ப்பு வழங்கப்படும் என கர்நாடக ஐகோர்ட் அறிவித்துள்ளது.

 

http://www.dinamalar.com/news_detail.asp?id=1248225

  • தொடங்கியவர்

ஜெ. வழக்கில் தீர்ப்பு.. போலீஸ் பாதுகாப்பு வளையத்துக்குள் பெங்களூர் நகரம்

 

 

பெங்களூரு: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அப்பீல் மனு மீது திங்கள்கிழமை தீர்ப்பு வெளியாக உள்ள நிலையில், பெங்களூர் நகரில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து போலீஸ் கமிஷனர் எம்.என்.ரெட்டி, சக உயர் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். ஜெயலலிதா அப்பீல் வழக்கில், திங்கள்கிழமை தீர்ப்பு வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து ஹைகோர்ட் தரப்பில் இருந்து பெங்களூரு போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாம்.

 

 

இதையடுத்து போலீஸ் கமிஷனர் ரெட்டி மற்றும் கூடுதல், இணை போலீஸ் கமிஷனர்கள், இதுகுறித்து ஆலோசனை நடத்தினர். தீர்ப்பு தேதியன்று பெங்களூரில் குவிய உள்ள அதிமுகவினரை கட்டுப்படுத்துவது குறித்தும், அவர்களை எப்படி கண்காணிப்பது என்பது குறித்தும், அப்போது ஆலோசிக்கப்பட்டது. ஜெயலலிதாவுக்கு, சிறப்பு நீதிமன்றம் தண்டனை கொடுத்தபோது, பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்பார்வையிட்ட பெங்களூரு கூடுதல் போலீஸ் கமிஷனர் ஹரிசேகரனையை, இம்முறையும், பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்பார்வையிட நியமிக்க கமிஷனர் முடிவு செய்துள்ளார்.

 

ஞாயிற்றுக்கிழமை முதலே, தமிழகத்தில் இருந்து, பெங்களூருக்குள் வரும் வாகனங்களை தீவிர தணிக்கை செய்ய போலீசார் முடிவு செய்துள்ளனர். கரைவேட்டி கட்சிக்காரர்களை, ஒசூர் எல்லையிலேயே இறக்கிவிடவும் திட்டமிட்டுள்ளனர். தீர்ப்பு வெளியானபோதும், இதேபோன்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தது நினைவிருக்கலாம்.

 

 

Read more at: http://tamil.oneindia.com/news/india/jayalalitha-s-appeal-case-judgement-bangalore-police-office-226352.html

  • தொடங்கியவர்

ஜெ. அப்பீல் வழக்கு: நம்பிக்கையான 4 பேர் உதவியுடன் தீர்ப்பு தயாரித்த நீதிபதி குமாரசாமி

 

பெங்களூரு: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பு மே 11 (திங்கள்கிழமை) காலை 11 மணிக்கு வெளியாகிறது. ஹைகோர்ட் சிறப்பு நீதிபதி சி.ஆர்.குமாரசாமி இந்த தீர்ப்பை வெளியிடுகிறார். இதனிடையே தீர்ப்பு தயாரிப்பு பற்றிய சுவாரசிய தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கு மேல் முறையீட்டு மனு மீதான விசாரணை கர்நாடக உயர் நீதிமன்றத்தில் கடந்த ஜனவரி 5ம் தேதி தொடங்கியது. 45 நாட்களில் விசாரணையை முடித்த நீதிபதி சி.ஆர்.குமாரசாமி, கடந்த மார்ச் 11ம் தேதி தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்தி வைத்தார்.

 

பவானிசிங் சிக்கல் உச்ச நீதிமன்ற உத்தரவின்படி 3 மாதங்களுக்குள் மேல் முறையீட்டு விசாரணையை முடித்த நீதிபதி, மார்ச் 12ம் தேதி முதல் தீர்ப்பு எழுதும் பணியை தொடங்கினார். இந்நிலையில் திமுக தரப்பின் மனுவை விசாரித்த உச்ச நீதி மன்றம், "பவானி சிங்கின் நியமனம் சட்டப்படி செல்லாது. எனவே மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு எழுதும்போது பவானி சிங் முன்வைத்த வாதத்தை கருத்தில் கொள்ளக்கூடாது. மாறாக திமுக தரப்பும், கர்நாடக அரசு தரப்பும் தாக்கல் செய்யும் எழுத்துப்பூர்வ வாதத்தை கருத்தில் கொள்ள வேண்டும்" என கடந்த ஏப்ரல் 27ம் தேதி உத்தரவு பிறப்பித்தது.

 

தீர்ப்பை திருத்தினார் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவைத் தொடர்ந்து நீதிபதி குமாரசாமி ஏப்ரல் 29ம் தேதி முதல் மேல்முறையீட்டில் மீண்டும் தீர்ப்பை திருத்தி எழுத ஆரம்பித்தார். திமுக தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட 81 பக்க எழுத்துப் பூர்வ வாதம் மற்றும் அரசு தரப்பு வழக்கறிஞர் ஆச்சார்யா தாக்கல் செய்த 18 பக்க எழுத்துப்பூர்வ வாதத்தைக் கருத்தில் கொண்டு தீர்ப்பெழுத தொடங்கினார்.

 

நான்கு ஊழியர்கள் சொத்து விவரங்களை கணக்கிட‌ ஆடிட்டர் குழுவை நியமித்தார். தேவையான ஆவணங்களை எடுத்து தருவதற்காக நீதிமன்ற ஊழியர்கள் பிச்சமுத்து, காயத்ரி, தீபா ஆகியோரை தனது சேம்பரில் பணிக்கு அமர்த்தினார். தான் இறுதி செய்த தீர்ப்பு விபரங்களை தட்டச்சு செய்வதற்காக, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் உள்ள அனுபவம் வாய்ந்த 4 அலுவலர்களை தன்னுடன் இருக்குமாறு உத்தரவிட்டார்.

 

கடும் கட்டுப்பாடு தீர்ப்பு தயாரிக்கும் குழுவில் இடம்பெற்ற அனை வரும் செல்போன் பயன்படுத்தக் கூடாது. நீதிபதியின் சேம்பருக்கு பையோ, துண்டு காகிதங்களையோ கொண்டு வரக் கூடாது. கேமரா உள்ளிட்ட எந்த மின்சாதனங்களையும் கொண்டு வரக்கூடாது. அதே போல அங்கி ருந்து சிறு துண்டு தாளையும் வெளியே கொண்டு செல்லக் கூடாது. மேலும் ஒருநாளைக்கு எத்தனை பக்கங்கள் தட்டச்சு செய்யப்படுகின்றன, எத்தனை வெள்ளைத் தாள்கள் படி எடுக்கப்படுகின்றன உள்ளிட்ட சிறிய விபரங்களைக்கூட பதிவு செய்ய வேண்டும் என உத்தரவை பிறப்பித்திருந்தார்.

 

ரகசியம் காத்த குமாரசாமி இதன்மூலம் தீர்ப்பு விவரம் வெளியே கசிந்துவிடக்கூடாது என்பதில் குமாரசாமி மிகவும் எச்சரிக்கையாக இருந்தார் என்கிறார்கள், கோர்ட் வட்டாரத்தில். ஆரம்பம் முதலே, விசாரணையில் பாரபட்சம் காட்டாமல், மிகவும் ஸ்ட்ரிக்டாக கொண்டு சென்றவர் குமாரசாமி. எனவே, அவர் திங்கள்கிழமை வழங்கப்போகும் தீர்ப்பை நாடே ஆவலோடு எதிர்பார்த்துள்ளது.

 

 

Read more at: http://tamil.oneindia.com/news/india/justice-kumarasway-the-4-officials-226377.html

  • கருத்துக்கள உறவுகள்

நாளை 11´ம் திகதி, 11 மணிக்கு வெளிவர இருக்கும் தீர்ப்புக்கு பிறகும்...

அப்பீல், ஜாமீன்... விண்ணப்பங்கள் இருக்குமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

நாளை 11´ம் திகதி, 11 மணிக்கு வெளிவர இருக்கும் தீர்ப்புக்கு பிறகும்...

அப்பீல், ஜாமீன்... விண்ணப்பங்கள் இருக்குமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

 

ஏற்கனேவே மே 12 வரை உச்ச நீதிமன்றம் வழங்கிய ஜாமீன் உள்ளது. இதை நீடிப்பது குறித்த விசாரனையும்  அன்றே வருகிறது. ஆகவே தீர்ப்பு எப்படி இருந்தாலும், 11ம் திகதி சிறை இல்லை.
 
11ம் திகதிய தீர்ப்பும், அடுத்த நாள் ஜாமீன் விசாரணையும், முக்கியமாக கவனிக்கப் படுகின்றன.
 
தீர்ப்பு சாதகமானால் சிறை இல்லை. பாதகமானால் மேல் முறையீடு வரை ஜாமீன் தர கோரிக்கை வைக்கப் படும். 
  • தொடங்கியவர்

நாளை 11´ம் திகதி, 11 மணிக்கு வெளிவர இருக்கும் தீர்ப்புக்கு பிறகும்...

அப்பீல், ஜாமீன்... விண்ணப்பங்கள் இருக்குமா? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

 

நாளை கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தீர்ப்பு கூறும்போது ஜெயலலிதா தரப்பு நீதிமன்றதில் ஆஜராக தேவையில்லை.

 

ஒருவேளை இவர்களுக்கு தண்டனை விதிக்கப்பட்டாலோ அல்லது கீழ் நீதிமன்ற தீர்ப்பை உறுதி செய்தாலோ அப்பீல் செய்ய கால அவகாசம் கிடைக்கும்.

 

உடனடியாக சிறை செல்ல தேவை இல்லை. கர்நாடக உயர் நீதிமன்ற தீர்ப்பு ஜெயலலிதா தரப்புக்கு எதிராக வரும் பட்சத்தில் அவர்

அதை எதிர்த்து  உச்ச நீதிமன்றதில்  ( டெல்லி சுப்ரீம் கோர்ட்டில்) மேல் முறையீடு செய்யலாம்.

 

எது  எப்படியோ இரண்டு தரப்பும் இந்த வழக்கை  உச்ச நீதிமன்றம் வரை  ( டெல்லி சுப்ரீம் கோர்ட்) கொண்டு போவார்கள்.

 

இந்த வழக்குக்கு  ஒரு நிரந்தர தீர்வு வரும்வரை ஜெயலலிதா ஜாமீன் இல் தான் இருக்க வேண்டும். அதுவரை அரசியல் செய்வதும் தடைபடும்.

  • தொடங்கியவர்

ஜெ., வழக்கின் தீர்ப்பு நீதித்துறை மீது நம்பிக்கையை ஏற்படுத்துமா?

 

ஜெ.,சொத்துகுவிப்பு வழக்கு திங்களன்று தீர்ப்பு

 

சென்னை : முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோர் மீதுள்ள சொத்துகுவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு நாளை ( திங்கள் கிழமை) வெளியாக உள்ளது. 18 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கின் தீர்ப்பு நீதித்துறை மீது மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தும் விதமாக இருக்குமா என அனைவரின் மனதிலும் கேள்வி எழுந்துள்ளது. இப்போது இந்த வழக்கில் தீர்ப்பு எவ்வாறு இருக்கும் என்று தெரிவதற்கு முன், வழக்கின் போக்கு எப்படி உள்ளது என்பதை பார்ப்போம்.

 

 

ஜெ., தரப்பு வாதங்கள்

: ஜெயலலிதா தரப்பில் கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதியிடம் வைக்கப்பட்ட வாதங்கள்:

1. சுதாகரன், ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் இல்லை; சுதாகரனை ஜெயலலிதா வளர்ப்பு மகனாக வைத்திருந்தார். அதன் மூலம்தான் அவர் சுதாகரனின் திருமணத்திற்கு செலவு செய்ததாக அரசு தரப்பு வைத்த குற்றச்சாட்டுகள் பொய்யானது. சுதாகரன் ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் இல்லை.

 

2. சுதாகரன் திருமணத்திற்கு ஜெயலலிதா செலவு செய்யவில்லை. சுதாகரனின் திருமண செலவுகள், பந்தல் செலவுகள் என அனைத்து விதமான செலவுகளையும் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் குடும்பத்தினர்தான் செய்தனர். உணவு தயாரிப்பு உட்பட அனைத்து செலவுகளையும் சிவாஜி குடும்பத்தினரே செய்தனர்.

 

3. ஜெயலலிதா - சசிகலா இடையே கூட்டுச்சதி என்பது இல்லை. ஜெயலலிதா மற்றும் சசிகலா ஆகியோர் ஒரே வீட்டில் குடியிருந்ததால் அவர்கள் கூட்டுச்சதி செய்தனர் என்று யூகித்து தீர்ப்பு வழங்கியுள்ளது தவறானது. கூட்டுச்சதிக்கு எவ்வித ஆதாரங்களும் இல்லை.

 

4. ஜெயலலிதாவுக்கு சொந்தமான நகைகள் அனைத்தும் வழக்கின் காலத்திற்கு முன்பு வாங்கப்பட்டவை. இந்த வழக்கின் காலமான 1991 - 1996க்கு முன்பே ஜெயலலிதாவிடம் தங்கம் மற்றும் வைர நகைகள் இருந்துள்ளன.மேலும் 91 விதமான கை கடிகாரங்கள் என்பது சுத்த பொய்யானது. ஜெயலலிதாவிடம் மொத்தம் 70 கை கடிகாரங்கள் மட்டுமே உள்ளன.

 

5. வீட்டை புதிப்பிக்க செய்யப்பட்ட செலவுகள் அனைத்தும் மிகைப்படுத்தி காண்பிக்கப்பட்டுள்ளன. வீட்டில் பதித்துள்ள கிரானைட் மற்றும் டைல்களின் விலை மதிப்பு மிகைப்படுத்தி காண்பிக்கப்பட்டுள்ளது. ஒரு கிரானைட் கல்லின் மதிப்பு 150 முதல் 250க்குள் தான் இருக்கும். அதை 850 ரூபாயாக மிகைப்படுத்தி காண்பித்துள்ளனர்.

 

6. நமது எம்.ஜி.ஆர் நாளிதழ் சார்பாக மாத சந்தாக்கள் பெறப்பட்டுள்ளன. அதன் படிதான் கணக்குகள் சமர்பிக்கப்பட்டுள்ளன. கடந்த நீதிமன்றத்தில் அப்படி ஒரு நாளிதழே இல்லை என்று நீதிபதி தெரிவித்துள்ளார். ஆனால் அதன் பதிப்புகள் இன்றளவும் கூட வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

 

7. ஜெயலலிதாவுக்கும் 9 நிறுவனங்களுக்கும் சம்பந்தம் இல்லை. ஜெயலலிதாவுக்கும் 9 தனியார் நிறுவனங்களுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. அங்கு அவருக்கு பங்குகள் கூட இல்லை. அவர்களுக்கு பங்கு உள்ளது என தவறான வாதங்கள் அரசு தரப்பில் வைக்கப்பட்டுள்ளன. பங்கு உள்ளதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை.

 

8. ஜெயலலிதா தனது இளமை பருவத்தில் இருந்தே வருமான வரி கட்டி வருகிறார். அப்படி இருக்கையில் வருமான வரித்துறையின் வரி ரசீதுக்களையும் கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டும்.

 

9. திராட்சை தோட்டம் மூலம் கிடைத்த வருமானங்கள் மூலம்தான் வருமான வரி கணக்குகளில் ஜெயலலிதா வரி கட்டி வருகிறார். வழக்கு காலத்திற்கு முன்பே தோட்டம் அவருக்கு சொந்தமானது.

 

10. ஜெயலலிதாவின் பிறந்தநாளுக்கு கட்சியினர் பல்வேறு பரிசு பொருட்களை தருவது வழக்கம். அந்த வகையில் வந்த பரிசு பொருட்களை கூட கணக்கில் இணைத்துள்ளனர். மேலும் கட்சிக்கு சொந்தமான சொங்கோலினையும் இதில் இணைத்துள்ளனர்.

 

இவ்வாறு ஜெயலலிதா தரப்பில் வாதங்கள் வைக்கப்பட்டன.

 

திமுக பொதுசெயலாளர் க.அன்பழகன் தரப்பு வாதம்:


அன்பழகன் தரப்பில் கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதியிடம் எழுத்துப்பூர்வமாக வைக்கப்பட்ட வாதங்கள் விபரங்கள்….

1991-1996ல் அப்போதைய தமிழக முதல்வராக இருந்த செல்வி.ஜெயலலிதா, தன்னுடைய தோழி சசிகலா, இளவரசி, வளர்ப்பு மகன் சுதாகரன் ஆகியோரை வைத்துக்கொண்டு அரசு பணத்தை தன் கணக்கிற்கு மாற்றியுள்ளார். அதனை தீர விசாரித்த பின்பே 18.09.1996 ஜெயலலிதா மீது ஊழல் தடுப்பு சட்டம் 13 (2) 13 (1) (இ) படி வழக்கு பதிவு செய்யப்பட்டது.

 

1991ல் ஜெயலலிதா பதவியேற்றபின் தன் பங்குகள் உள்ள நிறுவனங்களுக்காக அவர் வாங்கிய சொத்துக்கள் விபரங்கள்:

 

1. ஜெ., பண்ணை வீடு

 

2. ஜெ.எஸ். வீட்டமைப்பு அபிவிருத்தி

 

3. ஜெய் ரியல் எஸ்டேட்

 

4. ஜெயா கட்டிட ஒப்பந்த நிறுவனம்

 

5. பச்சை பண்ணை வீடு

 

6. மெடல் கிங்

 

7. சூப்பர் டூப்பர் டிவி.பிரைவேட்.லிமிடட்.

 

8. ஆஞ்சனேயா பிரின்டர்ஸ்

 

9. ராம்ராஜ் ஆக்ரோ மில்ஸ்

 

10. சிக்னோரா தொழில்முனை நிறுவனம்

 

11. லெக்ஸ் பிராப்பர்டி டெவலப்மென்ட்

 

12. ரிவர்வே ஆக்ரோ பொருட்கள்

 

13. மீடோ ஆக்ரோ பண்ணை

 

14. இந்தோ - தோஹா மருந்தக தயாரிப்பு நிறுவனம்

 

15. ஏ.பி. விளம்பர நிறுவனம்

 

16. விக்னேஷ்வரா கட்டுமான நிறுவனம்

 

17. லக்க்ஷ்மி கன்ஸ்ட்ரக்ஷன்ஸ்

 

18. கோபால் பிரமோட்டர்ஸ்

 

19. சக்தி கன்ஸ்ட்ரக்ஷன்ஸ்

 

20. நமசிவாயா ஹவுசிங் டெவலப்மென்ட்

 

21. அய்யப்பா பிராபர்டி டெவலப்மென்ட்

 

22. கடல் எல்லை நிறுவனங்கள்

 

23. நவசக்தி கட்டுமான பணி நிறுவனம்

 

24. கடல்சார் கட்டுமான பணி நிறுவனம்

 

25. பச்சை தோட்ட அடுக்குமாடி குடியிருப்புகள்

 

26. மார்பில் மார்வெல்ஸ்

 

27. வினோத் வீடியோ விஷன்

 

28. பாக்ஸ் யுனிவர்சல்

 

29. ப்ரெஷ் மஷ்ரூம்ஸ்

 

30. கோடநாடு டீ எஸ்டேட்

 

இத்தனை சொத்துக்களை தன் பெயரிலும்,சசிகலா பெயரிலும் வைத்திருந்தார் ஜெயலலிதா.

01.07.1991 முதல் முதல்வராக இருந்த ஜெயலலிதா, தன் பெயரில் மட்டும் சொத்துக்கள் வாங்காமல், மற்ற மூன்று குற்றவாளிகளின் பெயரிலும் சொத்துக்களை வாங்கியுள்ளார். இதனை மறைக்க பல வங்கி கணக்குகளும் வைத்திருந்தார். இச்சூழலில் அவர் வருமானத்தில் காட்டிய தொகைக்கும் அவர் கட்டிய வருமான வரிக்கும் உள்ள வேறுபாடுகள் அதிகமாக உள்ளன. இதை எல்லாம் கணக்கில் வைத்தும், ஜெயலலிதா தன்னுடன் இருக்கும் மூன்று பேர் மீதும் சொத்துக்களை சேர்த்து குவித்துள்ளதை வைத்தும் சசிகலா, சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோரை சிறப்பு நீதிமன்ற நீதிபதி பினாமி என்று குறிப்பிட்டார்.

 

 

அதுமட்டுமல்லாது ஜெயலலிதா தன் பெயரிலும் மற்ற மூன்று நபர்களின் பெயரிலும் வாங்கிய சொத்துக்களின் மொத்த மதிப்பு 1.7.91 முதல் 30.4.96 காலத்தில் ரூ.64,42,89,616/- ஆகும்.இதில் அவர்களது வருமானம்,வங்கி காசோலை வட்டி ஆகியவையும் சேர்த்து தான் இக்கணக்கை ஊழல் தடுப்புத்துறை நிர்ணையித்தது. மேலும் இதன் மூலம் 1988ம் ஆண்டு ஊழல் தடுப்பு சட்டம் 13(1)(இ)ன் படி இவர்கள் நான்கு பேரும் கூட்டுச்சதி செய்துள்ளனர் என்பதும் தெளிவாகிறது.

 

 

வழக்கு குறிப்பிட்ட காலத்தில் ஜெயலலிதாவுக்கு ஏற்பட்ட செலவு ரூ.10,62,94,190/- ஆகும்.ஆனால் வரவு என்னவோ ரூ.9,19,75,956/- தான்.ஆக வரவுக்கும் அதிகமாக ரூ.1,43,18,234/- செலவாகியுள்ளது என்பதை தமிழக ஊழல் தடுப்பு துறை உறுதிப்படுத்தியுள்ளது.ஆக அவரது சொத்து மதிப்பு மற்றும் அவரது வரவுக்கு அதிகமான செலவுகள் ஆகியவையை சேர்த்த மொத்தம் ரூ. 65,86,07,850/- வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்துள்ளனர் என்பது ஊழல் தடுப்பு துறை மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.அதனால் சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தண்டனையை தாங்களும் வழங்கவேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறது.

இவ்வாறு தனது வாதங்களை முடித்துள்ளார் திமுக பொதுசெயலாளர் க.அன்பழகன்.

 

 

அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா:

அடுத்ததாக அரசு வழக்கறிஞராக கர்நாடக அரசு அறிவித்த வழக்கறிஞர் ஆச்சாரியா, ''கர்நாடக மாநிலத்திற்கு வழக்கு மாற்றப்பட்ட பின் கர்நாடக அரசு தான் இதில் முக்கிய பிரதிவாதி. இந்த மேல்முறையீட்டு வழக்கில் கர்நாடக அரசு தரப்பை இணைக்காததே தவறு. நமது எம்ஜிஆர் நிறுவன வைப்பு திட்டம் என்பது போலியானது. அது கேலிக்கூத்தாக உள்ளது. இதை கீழமை நீதிமன்றம் போலி என்று உறுதி செய்துள்ளது. இதில் கணக்கில் வராத 13 கோடி ரூபாயும் ஊழல் செய்ததே என்று கீழமை நீதிமன்றம் உறுதிபடுத்தியுள்ளது. இந்த வழக்கில் ஜெயலலிதாவை தவிர்த்து வேறு யாருக்கும் வருமானம் என்பது துளி அளவு கூட இல்லை. ஆனால் சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் வருமானம் உள்ளதாக தெரிவிக்கின்றனர்.இவர்கள் நால்வரும் ஒரே வீட்டில் தங்கியுள்ளனர். இதுவே கூட்டுச்சதிக்கு ஆதாரம்.மேலும் 50க்கும் மேலான வங்கி கணக்குகளை வைத்து பணபரிமாற்றம் செய்து ஊழலை மறைக்க முயற்சித்துள்ளனர். ஆகவே கீழமை நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பினையே மீண்டும் கொடுக்கவேண்டும் என்றும், குற்றங்கள் ஆதாரங்களுடன் ஏற்கனவே நிரூபிக்கப்பட்டுள்ளன'' என்றும் தெரிவித்துள்ளார்.

 

 

முன்னாள் தலைமை நீதிபதி சந்துரு:

முன்னாள் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சந்துரு அவர்களிடம் கேட்டபோது, ''ஒரு வழக்கில் நீதிபதி மறு மதிப்பீடு செய்வது சகஜம் தான். அதில் சில மதிப்பீடுகளை அரசு தரப்பு மிகைப்படுத்தி காண்பித்ததாக தெரியவந்தால்,சலுகைகள் கொடுக்கப்படும். சிலர் 20% சலுகைகளை பெற்று வழக்கில் இருந்தே விடுதலை ஆகி உள்ளனர்.ஆக இதையெல்லாம் நீதிபதி குமாரசாமி அவர்கள் கணக்கில் எடுத்துக்கொண்டுதான் தீர்ப்பு வழங்குவார். இந்த வழக்கு தொடர்பாக சென்னையில் விசாரணை தொடங்கவே 3 வருடங்கள் ஆகின.அந்த அளவுக்கு அப்போதைய ஆளும் கட்சி நெருக்கடி கொடுத்தது.அரசு தரப்பில் ஆதாரங்களை தேடுவதாகவே 3 வருடங்கள் இழுத்தடிக்கப்பட்டன. தற்போது தீர்ப்பு வர உள்ளது என்பது நீதி துறையின் மீது மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. ஒரு வழக்கை எவ்வளவு வேகமாக முடிக்கலாம் என்பதை இந்த வழக்கின் மூலம் மக்கள் தெரிந்துக்கொள்ள முடியும்.ஆனால் இவ்வளவு வேகமாக முடிக்கப்படும் போது அது அரசு தரப்புக்கு தவறான தீர்ப்பாக கூட சில நேரம் அமையும்'' என்றார்.

இந்த வாதங்களின் அடிப்படையில் பார்க்கையில், ஜெ.,க்கு தண்டனை உறுதி செய்யப்படுமா? குறைக்கப்படுமா? அல்லது முற்றிலும் நீக்கப்பட்டு விடுதலை கிடைக்குமா என்பது நாளை தெரியும்.

 

http://www.dinamalar.com/news_detail.asp?id=1249502

  • தொடங்கியவர்

இது இறுதி தீர்ப்பு அல்ல.. நிவாரணம் உண்டு: ஆச்சார்யா

 

பெங்களூரு: ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் எந்த மாதிரியான தீர்ப்பு வந்தாலும் அது அத்தோடு முடியாது. நிச்சயம் உச்சநீதிமன்றத்திற்கு இந்த வழக்கு செல்லும் என்று ஜெயலலிதா வழக்கில் ஆரம்பத்தில் சிறப்பு அரசு வழக்கறிஞராக ஆஜராகி, பின்னர் விலகி, தற்போது மீண்டும் இணைந்துள்ள ஆச்சார்யா கூறியுள்ளார். தீர்ப்பு எப்படி வரும் என்று ஊகிக்க முடியாது என்றும் அது எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம் என்றும் ஆச்சார்யா கூறியுள்ளார்.

 

 

 சொத்துக் குவிப்பு வழக்கி் பெங்களூரு தனி நீதிமன்றம் தனக்கு அளித்த 4 ஆண்டு சிறைத் தண்டனை, ரூ. 100 கோடி அபராதம் ஆகியவற்றை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் அப்பீல் செய்துள்ளார் ஜெயலலிதா. அதேபோல மற்ற குற்றவாளிகளான சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோரும் அப்பீல் செய்துள்ளனர். இந்த மனுக்கள் நீதிபதி குமாரசாமி முன்பு விசாரிக்கப்பட்டது. விசாரணைக்குப் பின்னர் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. நாளை தீர்ப்பு வழங்கப்படவுள்ளது. இதையடுத்து கர்நாடக உயர்நீதிமன்ற வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் நகரிலும் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

 

 

தமிழக, கர்நாடக எல்லையிலும் இரு மாநில போலீஸார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். இந்த நிலையில் இந்தத் தீர்ப்பு எப்படி இருக்கும் என்பது தொடர்பாக அனைத்து மட்டத்திலும் எதிர்பார்ப்புகள் பலமாக உள்ளன. இந்த வழக்கில் ஆரம்பத்தில் ஆஜராகி இடையில் விலகி தற்போது மீண்டும் இணைந்துள்ள அரசு சிறப்பு வழக்கறிஞர் ஆச்சார்யா தீர்ப்பு எப்படி இருக்கலாம் என்பது குறித்துக் கூறுகையில், தீர்ப்பு தேதியன்று ஜெயலலிதா நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக தேவையில்லை. ஒருவேளை தீர்ப்பில் ஜெயலலிதா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தாலும், அதற்கான உத்தரவு விசாரணை நீதிமன்றத்திற்கு செல்லும். பின்னர் விசாரணை நீதிமன்றம்தான் ஜெயலலிதா உள்ளிட்டோரை தனது கஸ்டடியில் எடுத்துக்கொள்ளும்.

 

 

அதே சமயம், தீர்ப்பு பாதகமாக வந்தாலும் உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் செய்து நிவாரணம் தேடிக்கொள்வதற்கான வாய்ப்பு ஜெயலலிதாவுக்கு உள்ளது என்று தெரிவித்துள்ளார் ஆச்சார்யா. மேலும் இந்த வழக்கின் தீர்ப்பானது இறுதியல்ல. இதில் எப்படி தீர்ப்பு வந்தாலும் மறு தரப்பு நிச்சயம் உச்சநீதிமன்றம் செல்லும் என்பதால், உச்சநீதிமன்றத்தில்தான் இந்த வழக்குக்கு இறுதி தீர்ப்பு கிடைக்கும் என்று சட்ட நிபுணர்கள் கூறுகிறார்கள். ஜெயலலிதாவுக்கு பாதகமாக தீர்ப்பு வந்தால் அவர் உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்வார். அவருக்கு சாதகமாக வந்தால் கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

Read more at: http://tamil.oneindia.com/news/india/jayalalithaa-verdict-political-fate-at-stake-security-at-unprecedented-high-226433.html

ஜெயலலிதா வழக்கு காலை 11 மணிக்கு தீர்ப்பு! - 144 தடை உத்தரவு

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் இன்று  தீர்ப்பு வழங்கப்படும் என்று கர்நாடக உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.

காலை 11 மணிக்கு தனி நீதிபதி குமாரசாமி தீர்ப்பை வழங்குகிறார். ஐகோர்ட்டின் 14-ம் எண் அறையில் தீர்ப்பு வழங்கப்படுகிறது.

இதையொட்டி, கர்நாடக ஐகோர்ட்டிலும் அதை சுற்றியுள்ள பகுதியிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மேலும் ஐகோர்ட்டை சுற்றி 1 கிலோ மீட்டருக்கு இன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

ஐகோர்ட்டுக்கு மொத்தம் 5 நுழைவு வாயில்கள் உள்ளன. இதில் 4 வாயில்கள் மூடப்பட்டு உள்ளன. ஒரு நுழைவு வாயில் மட்டும் திறக்கப்பட்டு உள்ளது. மொத்தத்தில் கர்நாடக ஐகோர்ட்டு, போலீசாரின் பாதுகாப்பு வளையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டு உள்ளது. கோர்ட்டு வளாகத்தில் மோப்ப நாய்களின் உதவியுடன் போலீசார் நேற்று சோதனை செய்தனர்.

கோர்ட்டுக்குள் சென்று வருகிறவர்களை கட்டுப்படுத்தும் வகையில் கோர்ட்டின் பிரதான வாசலில் போலீசார் தற்காலிக இரும்பு தடுப்பு வேலிகளை அமைத்து உள்ளனர். துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டு உள்ளனர்.http://www.pathivu.com/news/39954/57/11---144/d,article_full.aspx

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.