Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெயலலிதா சொத்து குவிப்பு அப்பீல் மனு மீதான விசாரணை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எல்லா கண்களுமே கர்நாடகா ஹைகோர்ட் 'அறை எண் 14' நோக்கி...

அரசியலில் அடுத்து என்ன நடக்கும்?

 

பெங்களூரு/சென்னை: கர்நாடகா உயர்நீதிமன்றத்தின் அறை எண் 14... இந்திய அரசியலின் அனைத்து கண்களும் தற்போது இந்த அறையை நோக்கியே திரும்பி இருக்கின்றன.. இந்த அறையில்தான் தமிழக முன்னாள் ஜெயலலிதாவின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் மிக முக்கியத்துவம் வாய்ந்த சொத்துக் குவிப்பு அப்பீல் வழக்கின் தீர்ப்பு வழங்கப்படுகிறது..

 

இந்திய நீதித்துறையே அலுத்து சலித்துப் போக வைத்தது ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கு.. சுமார் 18 ஆண்டுகாலம் நடைபெற்றது இந்த வழக்கு.. எவ்வளவெல்லாம் இழுத்தடிக்க முடியுமோ சட்டத்தின் எத்தனை ஓட்டைகளையும் பயன்படுத்த முடியுமோ அத்தனையையுமே ஒரு கைபார்த்துவிட்டது ஜெயலலிதா வழக்கு.

 

11-1431315344-jayalalitha-crying-600.jpg

 

4 ஆண்டு தண்டனை

இவ்வழக்கில் கடந்த ஆண்டு செப்டம்பரில் சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா தீர்ப்பளித்தார். முதல்வராக இருந்த ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனை விதிப்பதாக குன்ஹா அறிவித்ததால் அவர் பதவி இழந்தார்.. 10 ஆண்டுகாலம் அரசியலில் தலையெடுக்க முடியாத நிலை உருவானது. இதனைத் தொடர்ந்து ஜெயலலிதா மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தார்.

 

41 நாட்கள் அப்பீல் விசாரணை

வரலாற்றின் விசித்திரம் இதுதான்.. 18 ஆண்டுகாலம் இழுத்தடிக்கப்பட்ட ஒருவழக்கின் மேல்முறையீட்டு மனு மீது 41 நாட்களிலேயே விசாரணை முடிவடைந்து இதோ இன்று தீர்ப்பு வரப்போகிறது..அந்த அளவுக்கு இந்திய நீதித்துறையை எரிச்சலூட்டியிருக்கிறது இந்த வழக்கு என்பது மிகையும் அல்ல..

இன்னும் சில மணிநேரத்தில் ஜெயலலிதாவின் அப்பீல் மனு மீது கர்நாடகா உயர்நீதிமன்ற தனி பெஞ்ச் நீதிபதி குமாரசாமி தீர்ப்பளிக்க இருக்கிறார்..அவர் தீர்ப்பளிக்க இருக்கும் அறை எண் 14... இந்த அறையில் உச்சரிக்கப்படும் தீர்ப்பு ஜெயலலிதாவின் எதிர்காலத்தை தீர்மானிக்கக் கூடாது...

 

அரசியலில் அடுத்து என்ன?

இது ஒருபுறமிருக்க ஜெயலலிதாவின் தீர்ப்பை முன்வைத்து அடுத்த அரசியல் நகர்வுகளை முன்னெடுக்க தமிழக கட்சிகளும் வரிந்து கட்டிக் கொண்டிருக்கின்றன.

இந்த மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பு ஜெயலலிதாவுக்கு எதிராக அதாவது சிறப்பு நீதிமன்றம் விதித்த தண்டனையை உறுதி செய்து தீர்ப்பளிக்கப்பட்டால் தமிழக அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றுமே தங்களை அடுத்த மாற்றாக முன்னிறுத்த முனைப்பு காட்டும்.

 

போராடும் அ.தி.மு.க.

அண்ணா தி.மு.கவைப் பொறுத்தவரை ஜெயலலிதாவுக்கு எதிராக தீர்ப்பு வந்தால் வழக்கமாக எத்தனை விதமான போராட்டங்களை நடத்த முடியுமோ அத்தனை விதமான போராட்டங்களையும் முயற்சித்துப் பார்த்துவிடும்...

 

தி.மு.க.வின் புதிய அணி

தி.மு.க.வைப் பொறுத்தவரையில் ஜெயலலிதா இல்லாத அரசியல் களத்தை நீண்டகாலமாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது.. இதனால் இனி தி.மு.க.வே அடுத்த பெரிய கட்சி.. தங்களது தலைமையிலேயே புதிய அணிஅமைக்க வேண்டும் என்பதில் மும்முரம் காட்டும்.

அண்ணா தி.மு.க.வுக்கு பின்னடைவு ஏற்படும் நிலையில் தே.மு.தி.க.வோ தி.மு.க.வுடன் கைகோர்த்து ஆட்சி அதிகாரத்தில் பங்கேற்க காய்களை நகர்த்தும்..

 

பா.ம.க.

அதேபோல் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸும் புதிய கூட்டணி மூலம் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிவிட முடியாத என இன்னொரு பக்கம் வியூகம் வகுப்பார்...

 

பா.ஜ.க.

இவைகளுக்கு அப்பால் பாரதிய ஜனதாவோ தி.மு.க. அல்லாத ஒரு புதிய அணியை தங்களது தலைமையில் உருவாக்க பெரும் முயற்சி எடுக்கும்... மத்தியில் ஆட்சியில் இருப்பதால் அனைத்து வித அஸ்திரங்களையும் அந்த கட்சி பயன்படுத்தும்...

 

இன்னும் சில மணிநேரங்களில்.. அடுத்து என்ன என்பது தெரிந்துவிடும்.

 

நன்றி தற்ஸ் தமிழ்.
 

  • Replies 311
  • Views 29.2k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

ஜெ. வழக்கு: ஆதரவான தீர்ப்பு வந்தால் என்ன நடக்கும்? எதிராக தீர்ப்பு வந்தால் என்ன நடக்கும்?

 

பெங்களூரு: ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனு மீது, இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது. ஒட்டு மொத்த தேசத்தின் பார்வையும், பெங்களூரு ஹைகோர்ட்டின் மீதுதான் உள்ளது. ஜெயலலிதா வழக்கில், அவருக்கு எதிரான தீர்ப்பு வந்தாலோ, அல்லது ஆதரவான தீர்ப்பு வந்தாலோ, அடுத்தகட்டமாக நடக்கப்போவது என்ன என்பது குறித்து சட்ட வல்லுநர்கள் பலருடன் கலந்து ஆலோசித்தபோது அவர்கள் கூறிய தகவல்கள் உங்கள் பார்வைக்கு:

 

ஜெயலலிதாவின் தண்டனை உறுதி செய்யப்பட்டால்:

 

விசாரணை நீதிமன்றம் விசாரணை நீதிமன்றத்துக்கு ஹைகோர்ட் தீர்ப்பு குறித்த தகவல் போகும். இதன்பிறகு விசாரணை நீதிமன்றம், குற்றவாளி/களுக்கு வாரண்ட் அனுப்பும். ஹைகோர்ட் தண்டனையை உறுதி செய்தாலும்கூட, விசாரணை நீதிமன்றம்தான், வாரண்ட் பிறப்பிக்கும் அதிகாரம்மிக்கது.

 

எந்த நீதிமன்றம் ஆனால், ஜெயலலிதா வழக்குக்காக, ஏற்கனவே, செயல்பட்ட விசாரணை நீதிமன்றமான, பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் கலைக்கப்பட்டுவிட்டது. எனவே, அதற்கு ஈடான ஒரு கோர்ட் வாரண்ட் பிறப்பிக்கும். செசன்ஸ் கோர்ட் வளாகத்திலுள்ள 37வது எண் கோர்ட் இந்த உத்தரவை பிறப்பிக்க வாய்ப்புள்ளது.

 

சரணடைய வேண்டும் விசாரணை நீதிமன்றம், பிறப்பித்த வாரண்ட், குற்றவாளிக்கு கிடைத்த பிறகு, கோர்ட்டில் அவர் சரண்டர் ஆக வேண்டும். குற்றவாளி, சரணடைந்தது உறுதி செய்யப்பட்ட பிறகு, அதை உறுதி செய்து ஒரு சர்டிபிகேட் வழங்கப்படும். குற்றவாளி சிறையில் அடைக்கப்படுவார்.

 

சிறைவாசம் சரண் உறுதி சர்டிபிகேட் இருந்தால்தான், உச்ச நீதிமன்றத்தில், தீர்ப்பை எதிர்த்து குற்றவாளிகள் தரப்பால் மேல்முறையீடு செய்ய முடியும். ஆனால், இந்த நடைமுறைகளுக்கு சில நாட்கள் பிடிக்கும். உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து, அந்த விசாரணை நடக்கும் காலகட்டத்தில், குற்றவாளி, சிறையில்தான் இருக்க வேண்டும்.

 

வெளியே வர வாய்ப்பு ஹைகோர்ட் தீர்ப்பை, உச்சநீதிமன்றம் சஸ்பெண்ட் செய்து, குற்றவாளிக்கு ஜாமீன் வழங்கினால், அவர் வெளியே வரலாம். ஆனால், அதற்கு சிறிது காலம் பிடிக்கலாம்.

 

ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டால்.. மேல்முறையீடு ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டால், தண்டனையை எதிர்த்து, தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை, உச்சநீதிமன்றத்தில், மேல்முறையீடு செய்யலாம்.

 

ஆச்சாரியாவே தொடருவார் கர்நாடக ஹைகோர்ட்டில் நடைபெற்ற வழக்குக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படுவதால், அதிலும் அரசு தரப்பு வழக்கறிஞரை கர்நாடகமே நியமிக்க வேண்டும். ஏற்கனவே நியமிக்கப்பட்ட ஆச்சாரியாவே அதிலும் தொடருவதற்கு வாய்ப்பு இருக்கிறது.

 

Read more at: http://tamil.oneindia.com/news/india/what-happen-next-jayalalitha-case-226445.html

  • தொடங்கியவர்

தீர்ப்பு தேதி சுப்பிரமணியன் சுவாமிக்கு முன்கூட்டியே தெரிந்தது எப்படி?
 

 

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் தீர்ப்பு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவதற்கு முன்பு, சுப்பிரமணியன் சுவாமிக்கு முன்கூட்டியே தெரிந்தது எப்படி என்ற கேள்வி எழுந்துள்ளது.

 

பவானி சிங்கின் நியமனம் குறித்த திமுகவின் மனு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்தபோது, நீதிபதி குமாரசாமி, ‘தீர்ப்பு எழுத கூடுதல் அவகாசம் அளிக்க வேண்டும்'' என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஹெச்.எல்.தத்துவுக்கு கடிதம் எழுதினார். இதையடுத்து ஹெச்.எல்.தத்து மே 12-ம் தேதி வரை தீர்ப்பு வழங்க கால அவகாசம் வழங்கினார்.

இதனிடையே அரசு வழக்கறி ஞர் பவானி சிங்கின் நியமனம் செல்லாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டதால் தீர்ப்பு வழங்கு வது தொடர்ந்து தாமதம் ஆனது. இந்நிலையில் கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பு தேதியை அறிவிப்பதற்கு பல நாட்களுக்கு முன்பாகவே பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி, “ஜெயலலிதா வழக்கில் மே 11-ம் தேதி தீர்ப்பு வெளியாகிறது'' என ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். நீதிமன்ற பதிவாளர் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பதற்கு முன்பாகவே சுப்பிரமணியன் சுவாமிக்கு இந்த தகவல் எப்படி கசிந்தது என கேள்வி எழுந்தது.

 

 

இது தொடர்பாக நீதிமன்ற பதிவாளர் தரப்பில், “சுப்பிரமணி யன் சுவாமி அதிகாரப்பூர்வமற்ற தகவலை பரப்பியுள்ளார்'' என்ற னர். ஆனால் கடந்த 8-ம் தேதி நீதி மன்ற பதிவாளர் பி.ஏ.பாட்டீல், “மே 11-ம் தேதி தீர்ப்பு வெளி யாகிறது'' என அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

 

தீர்ப்பு தேதியை தேர்வு செய்வதில் நடந்த விவாதம் தொடர்பாக கர்நாடக உயர் நீதிமன்ற வட்டாரத்தில் விசாரித்த போது, “பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வதற்கு போலீஸாருக்கு போதிய கால அவகாசம் வழங்க வேண்டும் என்பதற்காகவே கடந்த வெள்ளிக்கிழமை இரவு தீர்ப்பு தேதி அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப்பட்டது. சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு நாட்கள் இடையில் இருந்ததால் போலீஸார் போதிய‌ பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

 

இதுமட்டுமில்லாமல் ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரின் ஜாமீன் காலம் முடிவதற்குள் தீர்ப்பு வழங்கினால் உச்ச நீதிமன்றம் ஜாமீன் மனு மீதான முடிவை எடுப்பதற்கு எளிதாக இருக்கும் என நீதிபதி கருதி இருக்கலாம்” என கூறப்படு கிறது.
 

 

http://tamil.thehindu.com/india/%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF/article7192564.ece?homepage=true

  • தொடங்கியவர்

ஜெயலலிதா வழக்கு.. Live

 

ஹைகோர்ட் வளாகத்தில் வக்கீல் உடையில் குவிந்த அதிமுகவினர்.. போலீஸார் எச்சரித்து விரட்டியடித்தனர்

 

தீர்ப்பு சொல்ல நீதிபதி குமாரசாமி கோர்ட்டுக்கு வருகை - தனது சேம்பருக்கு சென்றார்

 

ஜெயலலிதா அப்பீல் வழக்கில் இன்னும் சிறிது நேரத்தில் தீர்ப்பளிக்கிறார்

 

நீதிபதி குமாரசாமி ஜெயலலிதா அப்பீல் வழக்கில் தீர்ப்பளிக்க உயர்நீதிமன்றம் வந்தார் நீதிபதி குமாரசாமி

 

கர்நாடகா உயர்நீதிமன்ற தனி பெஞ்ச் நீதிபதி குமாரசாமி 11 மணிக்கு தீர்ப்பளிக்கிறார்

 


போயஸ் கார்டனில் போலீஸ் குவிப்பு - ஜெ. வீட்டிற்கு பாதுகாப்பு

 

 


கர்நாடக உயர்நீதிமன்றத்திலுள்ள தனது அறைக்கு வந்துவிட்டார் நீதிபதி குமாரசாமி

 


அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா உயர்நீதிமன்றத்திற்கு வருகை

 


ஜெயலலிதா வழக்கறிஞர்கள் பி.குமார், மணிசங்கர், செந்தில் ஆகியோரும் வந்தனர்

 


நல்ல தீர்ப்பு வரும், ஜெ விடுதலை ஆவார் என அதிமுகவினர் நம்பிக்கை

 

  • கருத்துக்கள உறவுகள்

aniworks11.gifvuurwerk3.gif rotje2.gifvuurwerk106.gif

 

அம்மா விடுதலையானால், கொழுத்த வைத்திருக்கும்..... "ரெஸ்ரிங் வெடி" :D  

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்

உச்ச நீதிமன்ற அறிவுறுத்தல்படி 'ஊழல்வாதிகளுக்கு பாடம் புகட்டும்' தீர்ப்பளிப்பாரா நீதிபதி குமாரசாமி?

 

டெல்லி: உச்சநீதிமன்ற அறிவுறுத்தல்படி ஊழல்வாதிகளுக்கு தக்க தண்டனை கொடுக்கும் வகையிலான தீர்ப்பை ஜெயலலிதாவின் மேல்முறையீட்டு வழக்கில் நீதிபதி குமாரசாமி அளிப்பார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய நீதித்துறையை எரிச்சலூட்டிய ஏன் கோபமூட்டிய ஒரு வழக்கு ஜெயலலிதாவுக்கு எதிரான வருமானத்துக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கு. 18 ஆண்டுகாலம் இழுத்தடிக்கப்பட்ட இந்த வழக்கில் முதல் கிளைமாக்ஸ் எழுதியவர் பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹா. ‘A judge must consider evidence objectively’ கடந்த ஆண்டு செப்டம்பர் 27-ந் தேதி தீர்ப்பளித்த நீதிபதி குன்ஹா ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தார்.

 

மேலும் ஜெயலலிதாவுக்கு ரூ100 கோடி அபராதம் விதித்தார். இதன் பின்னர் ஜெயலலிதா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு பல முக்கிய திருப்பங்களை ஏற்படுத்தியது. இம்மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் அரசு வழக்கறிஞராக பவானிசிங் ஆஜராவார் என தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. இதனைத் தொடர்ந்து பவானிசிங் ஆஜராகி தமது தரப்பு வாதத்தை முன்வைத்து விசாரணையும் முடிவடைந்தது. ஆனால் பவானிசிங் நியமனமே செல்லாது என்று உச்சநீதிமன்றத்தில் தி.மு.க. பொதுச்செயலர் அன்பழகன் மனுத்தாக்கல் செய்தார். இம்மனு மீது இறுதி தீர்ப்பளித்த நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான பெஞ்ச் இவ்வழக்கின் தீர்ப்பு எப்படியானதாக இருக்கவேண்டும் என்பதை கோடிட்டுக் காட்டி அறிவுறுத்தியுள்ளனர்.

 

 

குறிப்பாக நீதிபதி தீபக் மிஸ்ரா தீர்ப்பளிக்கையில், சாட்சியங்களை பரிசீலித்து உணர்ச்சிவசப்படாமல் தீர்ப்பளிக்க வேண்டியதும் ஒரு நீதிபதியின் கடமை... ஊழல் என்பது நாட்டின் எதிரி. ஊழல் செய்யும் அரசு ஊழியர்களை கண்டுபிடித்து தண்டிப்பது என்பது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கடமை. அரசு வழக்கறிஞர் பவானிசிங்கின் வாதங்களை நிராகரித்து கர்நாடகா அரசு மற்றும் தி.மு.க. பொதுச்செயலர் அன்பழகன் தரப்பு வாதங்களைக் கருத்தில் கொண்டு தீர்ப்பளிக்க வேண்டும் என்று கடந்த மாதம் 27-ந் தேதியளித்த அறிவுறுத்தியிருந்தார். இன்னும் சிறிது நேரத்தில் தீர்ப்பளிக்க இருக்கிற நீதிபதி குமாரசாமி, தம் முன் உள்ள சாட்சியங்களின் அடிப்படையில் உணர்ச்சிவசப்படாமல் உச்சநீதிமன்றத்தில் அறிவுறுத்தலைக் கருத்தில் கொண்டு ஊழல்வாதிகளுக்கு சாட்டையடி கொடுக்கும் வகையில் தீர்ப்பளிப்பாரா? என்ற எதிர்பார்ப்பு எகிறுகிறது..

 

 

Read more at: http://tamil.oneindia.com/news/india/a-judge-must-consider-evidence-objectively-226462.html


aniworks11.gifvuurwerk3.gif rotje2.gifvuurwerk106.gif

 

அம்மா விடுதலையானால், கொழுத்த வைத்திருக்கும்..... "ரெஸ்ரிங் வெடி" :D  

 

இது இறுதி தீர்ப்பு அல்ல.. இந்த வழக்கு நிச்சயம் உச்ச நீதிமன்றத்திற்கு செல்லும்- ஆச்சார்யா

 

 


:D :D

  • தொடங்கியவர்

கோர்ட் ஹாலுக்குள் பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்பட்டனர்

 

சுமார் 500 பத்திரிகையாளர்கள் கோர்ட் ஹாலுக்குள் நெருக்கியடித்தபடி நிற்கின்றனர்

 

அப்பீல் வழக்கில் வென்றால் ஜெயலலிதா உடனடியாக முதல்வராக பொறுப்பேற்க முடியும்- சட்ட நிபுணர்கள்

 

குற்றவாளிகள் தரப்பு வக்கீல்கள் மட்டுமின்றி, திமுக வக்கீல்களுக்கும் கோர்ட் ஹாலுக்குள் அனுமதி

 

 


நீதிபதி குமாரசாமியின் கோர்ட் ஹால் நிரம்பி வழிகிறது

 


நிற்கக் கூட இடம் இல்லாத அளவுக்கு அறை ஹவுஸ் புல் ஆனது

 

  • தொடங்கியவர்

தண்டனையில் இருந்து தப்பினார் ஜெ.,
ஜெ.,தண்டனை ரத்து


நாளையே மீண்டும் முதல்வராக பொறுப்பேற்க வாய்ப்பு

 


சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெ. விடுதலை: நீதிபதி குமாரசாமி அதிரடி தீர்ப்பு

Read more at: http://tamil.oneindia.com/


ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் விடுதலை என நீதிபதி குமாரசாமி அறிவிப்பு

 


இதுவரை அவர் விசாரித்த அனைத்து அப்பீல்களிலும் கீழ் நீதிமன்ற தீர்ப்புகளை தள்ளுபடி செய்ததில்லை

 


குன்ஹா தீர்ப்பு செல்லாது என்று நீதிபதி குமாரசாமி தீர்ப்பு

 


3 நிமிடத்தில் தீர்ப்பை வாசித்து முடித்தார் நீதிபதி குமாரசாமி

 


நீதிபதி குமாரசாமியின் அப்பீல் விசாரணை வரலாற்றில் முதல் முறையாக மாறுபட்ட தீர்ப்பு என தகவல்

 


ஜெ. விடுதலைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் சு.சாமி, க.அன்பழகன் அப்பீல் செய்ய முடிவு

 

  • தொடங்கியவர்

கர்நாடக அரசு அப்பீல் செய்யும் - ஆச்சார்யா தகவல்

Read more at: http://tamil.oneindia.com/

  • கருத்துக்கள உறவுகள்

11.22 am: An appeal will be filed in the Supreme Court by Subramanian Swamy, Karnataka Government and DMK leader Anbazhagan against the acquittal of Jayalalithaa and others

Read more at: http://www.oneindia.com/india/updates-jayalalithaa-disproportionate-assets-karnataka-high-court-verdict-may-11-1742979.html

  • தொடங்கியவர்

மே 17ம் தேதி முதல்வராக ஜெ., பதவியேற்பு

 

 


ஜெ. விடுதலையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடக அரசு மேல்முறையீடு: ஆச்சாரியா தகவல்

 

பெங்களூரு: தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை கர்நாடக அரசு நாடும் என்று அரசு வழக்கறிஞர் பி.வி.ஆச்சாரியா தெரிவித்தார்.

 

 ஜெயலலிதா அப்பீல் வழக்கில் இன்று, தீர்ப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், தீர்ப்பு வழங்கும் முன்பாக ஒன்இந்தியாவிடம் பேசிய அரசு சிறப்பு வழக்கறிஞர் பி.வி.ஆச்சாரியா "மேல்முறையீட்டு வழக்கில், ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டால், சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடகா, மேல்முறையீடு செய்யும். பாதகமாக தீர்ப்பு வந்தால், ஜெயலலிதா சார்பில் மேல்முறையீடு செய்யலாம்" என்றார். எனவே, கர்நாடக தரப்பு மேல்முறையீடு செய்ய திட்டமிட்டுள்ளது உறுதியாகிறது. ஆனால், எப்போது அது நடக்கும் என்பது இன்னும் முடிவாகவில்லை.

 

Read more at: http://tamil.oneindia.com/news/india/state-will-prefer-appeal-if-acquitted-tells-b-v-acharya-226471.html


விடுதலைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் அப்பீல் மனு தாக்கல் ஆகும் முன் முதல்வராக திட்டம்

Read more at: http://tamil.oneindia.com/

  • கருத்துக்கள உறவுகள்

I expect that conviction will be upheld: Subramanian Swamy, BJP #JayaVerdict

6:01 AM - 11 May 2015

  • தொடங்கியவர்

 குன்ஹா தீர்ப்பை ரத்து செய்த நீதிபதி குமாரசாமி....!

 

டெல்லி: உச்சநீதிமன்ற அறிவுறுத்தல்படி ஊழல்வாதிகளுக்கு தக்க தண்டனை கொடுக்கும் வகையிலான தீர்ப்பை ஜெயலலிதாவின் மேல்முறையீட்டு வழக்கில் நீதிபதி குமாரசாமி அளிப்பார் என்று பலத்த எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில் ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு பேரையும் நீதிபதி குமாரசாமி விடுவித்துள்ளார். இந்திய நீதித்துறையை எரிச்சலூட்டிய ஏன் கோபமூட்டிய ஒரு வழக்கு ஜெயலலிதாவுக்கு எதிரான வருமானத்துக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கு.

 

18 ஆண்டுகாலம் இழுத்தடிக்கப்பட்ட இந்த வழக்கில் முதல் கிளைமாக்ஸ் எழுதியவர் பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்ஹாகடந்த ஆண்டு செப்டம்பர் 27-ந் தேதி தீர்ப்பளித்த நீதிபதி குன்ஹா ஜெயலலிதா உள்ளிட்டோருக்கு 4 ஆண்டு சிறைத் தண்டனை விதித்தார். மேலும் ஜெயலலிதாவுக்கு ரூ100 கோடி அபராதம் விதித்தார். இதன் பின்னர் ஜெயலலிதா தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு பல முக்கிய திருப்பங்களை ஏற்படுத்தியது. இம்மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையில் அரசு வழக்கறிஞராக பவானிசிங் ஆஜராவார் என தமிழக அரசு ஆணை பிறப்பித்தது. இதனைத் தொடர்ந்து பவானிசிங் ஆஜராகி தமது தரப்பு வாதத்தை முன்வைத்து விசாரணையும் முடிவடைந்தது. ஆனால் பவானிசிங் நியமனமே செல்லாது என்று உச்சநீதிமன்றத்தில் தி.மு.க. பொதுச்செயலர் அன்பழகன் மனுத்தாக்கல் செய்தார்.

 

இம்மனு மீது இறுதி தீர்ப்பளித்த நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான பெஞ்ச் இவ்வழக்கின் தீர்ப்பு எப்படியானதாக இருக்கவேண்டும் என்பதை கோடிட்டுக் காட்டி அறிவுறுத்தியுள்ளனர். குறிப்பாக நீதிபதி தீபக் மிஸ்ரா தீர்ப்பளிக்கையில், சாட்சியங்களை பரிசீலித்து உணர்ச்சிவசப்படாமல் தீர்ப்பளிக்க வேண்டியதும் ஒரு நீதிபதியின் கடமை... ஊழல் என்பது நாட்டின் எதிரி. ஊழல் செய்யும் அரசு ஊழியர்களை கண்டுபிடித்து தண்டிப்பது என்பது ஊழல் தடுப்புச் சட்டத்தின் கடமை. அரசு வழக்கறிஞர் பவானிசிங்கின் வாதங்களை நிராகரித்து கர்நாடகா அரசு மற்றும் தி.மு.க. பொதுச்செயலர் அன்பழகன் தரப்பு வாதங்களைக் கருத்தில் கொண்டு தீர்ப்பளிக்க வேண்டும் என்று கடந்த மாதம் 27-ந் தேதியளித்த அறிவுறுத்தியிருந்தார். இந்த நிலையில் இன்று தீர்ப்பு ஜெயலலிதா தரப்புக்குச் சாதகமாக வந்து சேர்ந்துள்ளது

 

 

Read more at: http://tamil.oneindia.com/news/india/a-judge-must-consider-evidence-objectively-226462.html


எதிர்தரப்புக்கு நேரில் வாதிட வாய்ப்பே கொடுக்காமல் தீர்ப்பு வழங்கப்பட்டுவிட்டது- ஆச்சாரியா

 

எழுத்துப்பூர்வ வாதத்தைவிட நேரில் வாதிடுவதே சிறப்பான வாதமாக அமையும்- ஆச்சாரியா

 

இருப்பினும் ஜெயலலிதாவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தை அணுக மாட்டேன் - சாமி

 

கர்நாடக அரசு வழக்கறிஞர் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தால் அவருக்கு உதவியாக இருப்பேன் - சாமி தகவல்

 

 

  • தொடங்கியவர்

ஜெ. விடுதலை: இரண்டே நிமிடத்தில் தீர்ப்பை வாசித்த நீதிபதி
 

 

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரையும் விடுவித்து கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி சி.ஆர்.குமாரசாமி தீர்ப்பு வழங்கினார்.

 

மேலும், பெங்களூரு சிறப்பு நீதிமன்ற தீர்ப்பை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார். அதேபோல், ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடி அபராதம் விதித்து பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவையும் நீதிபதி சி.ஆர்.குமாரசாமி ரத்து செய்து உத்தரவிட்டார்.

 

சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் நீதிபதி சி.ஆர்.குமாரசாமி வெறும் 2 நிமிடங்களில் தீர்ப்பை வழங்கினார்.

 

சரியாக காலை 11 மணிக்கு நீதிமன்றத்தின் அறை எண் 14-க்குள் நுழைந்த நீதிபதி குமாரசாமி எடுத்துவுடன், "சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் விடுவிக்கப்படுகின்றனர்" என்றார்.

 

தொடர்ந்து தீர்ப்பை வாசித்த அவர், "சொத்துக் குவிப்பு வழக்கில், ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்ட 4 பேரும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததற்கான குற்றச்சாட்டை அரசு தரப்பு வழக்கறிஞர் நிரூபிக்கவில்லை.

 

குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் வழங்கப்பட்ட சாட்சியங்கள் ஏற்புடையதாக உள்ளது. எனவே, ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேரும் விடுவிக்கப்படுகின்றனர்" என்றார்.

11.02 மணிக்கு தீர்ப்பை வழங்கி முடித்தார். 11.03 மணிக்கு நீதிமன்ற அறையில் இருந்து வெளியேறினார்.

 

தீர்ப்பு வழங்கப்பட்டவுடன் நீதிமன்ற வளாகத்துக்குள்ளேயே அதிமுகவினர் "புரட்சித்தலைவி வாழ்க" என கோஷமிட்டனர். இதற்கு கர்நாடக போலீஸார் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
 

http://tamil.thehindu.com/india/%E0%AE%9C%E0%AF%86-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88-%E0%AE%87%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%87-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF/article7193097.ece

  • தொடங்கியவர்

எதிர்தரப்புக்கு நேரில் வாதாட அனுமதி கொடுக்காததே ஜெ. விடுதலைக்கு காரணம்: ஆச்சாரியா தடாலடி

 

பெங்களூரு: எதிர்தரப்புக்கு வாதிட அனுமதி தராமலே வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டுவிட்டது. இதுதான், ஜெயலலிதாவுக்கு ஆதரவாக முடிந்துவிட்டது என்று அரசு வழக்கறிஞர் பி.வி.ஆச்சாரியா தெரிவித்தார். ஜெ. வழக்கில் தீர்ப்பு வெளியான பிறகு நிருபர்களிடம் பேசினார் அரசு வழக்கறிஞர் பி.வி.ஆச்சாரியா. அவர் கூறுகையில், "நான் தீர்ப்பை முழுமையாக படித்து முடித்த பிறகு அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து கருத்து கூறுகிறேன்.

 

ஆனால், இந்த வழக்கில், ஜெயலலிதா தரப்பு முழுக்க வாதம் செய்ய ஹைகோர்ட்டில் அனுமதிக்கப்பட்டது. ஆனால், கர்நாடக தரப்புக்கோ, ஒரு நாள் அவகாசம் மட்டுமே கிடைத்தது. அதுவும், நேரில் வாதிட அனுமதிக்கப்படவில்லை. எழுத்துப்பூர்வ வாதத்துக்கு மட்டுமே அனுமதி கிடைத்தது. எப்போதுமே, நேரில் ஆஜராகி வாதிடுவதுதான் சிறப்பான வாதமாக இருக்க முடியும். ஏனெனில், நீதிபதி தனது சந்தேங்களை கேட்பார், அதற்கு, எதிர்தரப்பு வக்கீல் விளக்கம் சொல்ல முடியும்.

 

இந்த விஷயத்தில், எதிர்தரப்புக்கு நேரில் வாதாட அனுமதி கிடைக்கவில்லை. ஒருநாள் அவகாசத்தை, எழுத்துப்பூர்வ வாதத்துக்கு அளித்ததற்கு பதிலாக, நேரடி வாதத்திற்கு அளித்திருந்தாலும், அது வழக்கில் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கும். பவானிசிங் வாதாடியது செல்லாது என்று சுப்ரீம்கோர்ட்டில் தீர்ப்பு வழங்கப்பட்ட பிறகும், அவருக்கு மாற்றாக யாரும் நேரில் வாதாட முடியவில்லை. இதுதான் ஜெயலலிதா வழக்கில் அவருக்கு சாதகமாக தீர்ப்பு வெளியாக காரணமாகும் என்று கருதுகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

Read more at: http://tamil.oneindia.com/news/india/prosecution-was-not-given-chance-226475.html

  • தொடங்கியவர்

ஜெ. விடுதலை அதிர்ச்சி தருகிறது... ஆனால் தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட் போக மாட்டேன்: சு.சாமி 

 

டெல்லி: ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு பேரையும் விடுதலை செய்து கர்நாடக உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ள தீர்ப்பு எனக்கு அதிர்ச்சி தருகிறது. இருப்பினும் இதை எதிர்த்து நானாக உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர மாட்டேன் என்று சுப்பிரமணியம் சாமி கூறியுள்ளார். அதேசமயம், கர்நாடக அரசுத் தரப்பில் அப்பீல் செய்தால் அவர்களுக்கு தான் உதவி செய்வேன் என்று சாமி தெரிவித்துள்ளார்.

 

 கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்பு குறித்து சாமி கருத்து தெரிவிக்கையில், இந்த தீர்ப்பு அதிர்ச்சி தருகிறது. இருப்பினும் ஜெயலலிதாவை எதிர்த்து நான் உச்சநீதிமன்றம் போகப் போவதில்லை. அதேசமயம், கர்நாடக அரசுத் தரப்பில் அப்பீல் செய்தால் அவர்களுக்கு முழு உதவியாக இருப்பேன் என்று கூறினார் சாமி. ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பை முதலில் வெளிக் கொணர்ந்தவர் சாமிதான். பின்னர் இந்த வழக்கில் ஆரம்பம் முதலே அவர் அரசுத் தரப்பு உதவி செய்தும் வந்தார். இந்த சொத்துக்குவிப்பு வழக்கின் முதல் மனுதாரரே சாமிதான் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Read more at: http://tamil.oneindia.com/news/india/swamy-shocked-but-not-go-against-jaya-226476.html

  • தொடங்கியவர்

ஜெ. அப்பீல் வழக்கை புரட்டி போட்ட 'சொதப்பல்' பவானி சிங்கின் வாதம்!

 

பெங்களூரு: ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக்குவிப்பு வழக்கில், சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு செல்லாது என்று ஹைகோர்ட் அறிவிக்க முக்கிய காரணம், அரசு வக்கீலாக பணியாற்றிய பவானிசிங்கின் சொதப்பல்கள்தான் என்கின்றனர் சட்ட வல்லுநர்கள். பெங்களூரு சிறப்பு நீதிமன்றம், ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடி அபராதமும், 4 ஆண்டு சிறை தண்டனையையும் விதித்து தீர்ப்பளித்தது.

 

பவானிசிங் நியமனம் இந்நிலையில், ஹைகோர்ட்டிலும், பவானிசிங்கே, தானே முன்வந்து ஆஜரானார். அவருக்கு தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை அனுமதி வழங்கியது. தமிழக அரசின்கீழ் செயல்படும் லஞ்ச ஒழிப்புத்துறை, ஆளும் கட்சியின் பொதுச்செயலாளருக்கு எதிரான வழக்கில் வக்கீலை நியமித்த விந்தை இந்த வழக்கில் நடந்தது.

 

சொதப்பல் வாதம் பிறரின் சந்தேகத்துக்கு ஏற்பவே, பவானிசிங்கும், ஹைகோர்ட்டில் வாதாடிவந்தார். அவர் ஷார்ப்பாக, எந்த வாதத்தையும் எடுத்து வைக்காமல், ஆவணங்களை வாசிப்பதை மட்டுமே பணியாக வைத்திருந்தார். நீதிபதி கேட்கும் கேள்விகளுக்கு பல நேரங்களில் மவுனத்தையே பரிசாக கொடுத்தார்.

 

உச்சநீதிமன்றம் தீர்ப்பு இதனால், ஜெயலலிதா தரப்பு பக்கம் பலம் பெருகிக் கொண்டிருந்தது. இந்நிலையில்தான் பவானிசிங் நியமனம் தவறானது, என்று உச்சநீதிமன்ற 3 நபர் பெஞ்ச் தீர்ப்பளித்தது. பவானிசிங் வாதத்தை கருத்திலேயே கொள்ள வேண்டியதில்லை என்றும் உச்சநீதிமன்றம் கூறியது.

 

ஒரே நாள்தான் ஆனால், 3 மாதங்களாக நடந்த வழக்கில், அரசு தரப்பு தனது வாதத்தை சமர்ப்பிக்க கிடைத்ததோ ஒரே நாள். அதுவும் நேரில் வாதாடாமல், எழுத்துப்பூர்வமாக மட்டுமே வாதத்தை சமர்ப்பிக்க வாய்ப்பு கிடைத்தது. இதைத்தான் அரசு வக்கீல் ஆச்சாரியாவும் சுட்டிக் காட்டுகிறார். "ஒரே நாளில், வைக்கப்பட்ட எழுத்துப்பூர்வ வாதத்தை வைத்து, எப்படி எதிர்தரப்பை குற்றவாளியாக நிரூபிக்க முடியும்" என்பது ஆச்சாரியா கேள்வி.

 

உச்சநீதிமன்றம் அவசரம் பவானிசிங் வாதம் தவறு என்று உச்சநீதிமன்றமே கூறிவிட்ட நிலையில், சரியாக வாதம் செய்வோருக்கு அவகாசம் தந்திருக்க வேண்டும். ஆனால், வழக்கை உடனே முடிக்க உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஹெச்.எல்.தத்து காட்டிய அவசரம், வழக்கை மறுவிசாரணை செய்ய தேவையில்லாமல் செய்துவிட்டது. எனவே, எதிர்தரப்புக்கு அவகாசம் இல்லை. ஆகமொத்தத்தில், அரசு தரப்பு வீக் ஆகமாற அல்லது பலவீனப்படுத்தப்பட பவானிசிங் வாதம் நன்கு பயன்பட்டுவிட்டது.

 

Read more at: http://tamil.oneindia.com/news/india/bhavani-singh-appearence-the-case-made-huge-difference-the-jayalalitha-appeal-case-226481.html

  • தொடங்கியவர்

ஆச்சாா்யா VS ஜெ. தரப்பு.... இறுதியில் வென்றது ஜெ. தரப்பு ... இருதரப்பு வாதங்கள் ஒரு கண்ணோட்டம்

 

கா்நாடகா: அரசு வழக்கறிஞராக மீண்டும் பி.வி.ஆச்சாா்யா நியமிக்கப்பட்டதையடுத்து ஜெயலலிதா மேல் முறையீட்டு வழக்கில் மேலும் பரபரப்பு தொற்றிக்கொண்டிருந்தது. அவரது வாதங்கள் வலுவானதாக இருக்கும் என்று எதிா்பாா்க்கப்பட்டது தான் இந்த பரபரப்புக்கு காரணம். அவரது வாதங்களை தற்போது பாா்க்கலாம்

 

கர்நாடக அரசு தான் முக்கிய பிரதிவாதி கர்நாடக மாநிலத்திற்கு வழக்கு மாற்றப்பட்ட பின் கர்நாடக அரசு தான் இதில் முக்கிய பிரதிவாதி.இந்த மேல்முறையீட்டு வழக்கில் கர்நாடக அரசு தரப்பை இணைக்காததே தவறு.

 

13 கோடி ரூபாயும் ஊழல் நமது எம்ஜிஆர் நிறுவன வைப்பு திட்டம் என்பது போலியானது.இதை கீழமை நீதிமன்றம் போலி என்று உறுதி செய்துள்ளது.இதில் கணக்கில் வராத 13 கோடி ரூபாயும் ஊழல் செய்ததே என்று கீழமை நீதிமன்றம் உறுதிபடுத்தியுள்ளது.

 

கூட்டுச்சதி இந்த வழக்கில் ஜெயலலிதாவை தவிர்த்து வேறு யாருக்கும் வருமானம் என்பது துளி அளவு கூட இல்லை.ஆனால் சசிகலா,சுதாகரன்,இளவரசி ஆகியோர் அவர்களுக்கு பல்வேறு தொழில்களும், வருமானமும் உள்ளதாக தெரிவிக்கின்றனர். இது அப்பட்டமான பொய். இவர்கள் நால்வரும் ஒரே வீட்டில் தங்கியுள்ளனர். இதுவே கூட்டுச்சதிக்கு ஆதாரம்.

 

ஊழலை மறைக்க முயற்சி மேலும் 50க்கும் மேலான வங்கி கணக்குகளை வைத்து தங்களுக்குள் பலமுறை பணபரிமாற்றம் செய்து ஊழலை மறைக்க முயற்சித்துள்ளனர் என்பது கீழமை நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

 

தீர்ப்பை உறுதிப்படுத்த வேண்டும் குற்றம் சந்தேகத்திற்கிடமில்லாமல் கீழமை நீதி மன்றத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளது. உயர் நீதிமன்றம், கீழமை நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பினையே உறுதிப்படுத்த வேண்டும்.

 

இனி ஜெயலலிதா தரப்பு வாதங்களை பாா்க்கலாம் சொத்து குவிப்பு வழக்கில் வழங்கப்பட்ட தண்டனையை ரத்து செய்ய வேண்டியதற்கான காரணங்கள் என்று கூறி ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞர் ஆறு முக்கிய அம்சங்களை, வாதமாக கர்நாடக உயநீதிமன்றத்தில் முன்வைத்திருந்தார்.

 

முறையான மதிப்பீடு இல்லை ஜெயலலிதா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நாகேஷ்வரராவ், சுதாகரனின் திருமண செலவுகளை முறையாக விசாரணை அதிகாரிகள் மதிப்பிடவில்லை.

 

கட்டட மதிப்பு அதிகாிப்பு வழக்கில் தொடர்புடைய கட்டடங்களின் மதிப்புகள் அதிகரித்து காட்டப்பட்டுள்ளது.

 

தொடர்பே இல்லாத நிறுவனங்கள் தொடர்பே இல்லாத நிறுவனங்கள் பலவற்றை ஜெயலலிதாவிற்கு சொந்தமானைவ என்று கணக்கு காட்டப்பட்டுள்ளதாக நாகேஷ்வரராவ் தெரிவித்துள்ளார்.

 

சந்தாதாரர்களால் வழங்கப்பட்டவை நமது எம்.ஜி.ஆர் நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ள நிதி அனைத்துமே சந்தாதாரர்களால் வழங்கப்பட்டவை என்று அவர் கூறியுள்ளார்.

 

வருமான வரி செலுத்தியுள்ளாா் சொத்துகளுக்காக ஜெயலலிதா செலுத்தியுள்ள வருமான வரியை வருமான வரித்துறை ஏற்றுக் கொண்டிருப்பதாக நாகேஷ்வரராவ் தெரிவித்துள்ளார். நால்வரும் ஒரே வீட்டில் இருந்தாா்கள் என்ற ஒரே காரணத்திற்காக அவா்கள் கூட்டுச் சதி செய்திருப்பதாக கூறப்படுவது முற்றிலும் தவறானது இவ்வாறு ஜெயலலிதா தரப்பு வழக்கறிஞாின் வாதம் முன் வைக்கப்பட்டது. இறுதியில் ஜெயலலிதா தரப்பு வாதத்தை ஏற்று நால்வரையும் விடுதலை செய்து நீதிபதி குமாரசாமி உத்தரவிட்டுள்ளாா்.

 

Read more at: http://tamil.oneindia.com/news/india/karnataka-high-court-accepts-jaya-s-argument-226484.html

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயா தன் வீட்டில் ஆளுயர பவானிசிங் படத்தை மாட்டப்போறார்.. :D

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களுக்கு கெட்டசெய்தி.....

 

அதிமுக வலிமை பெறக்கூடாது.....

  • தொடங்கியவர்

18 வருடமாக இழுக்கப்பட்ட வழக்கில், மூன்றே நிமிடங்களில் தீர்ப்பு!

 

பெங்களூரு: சொத்துக்குவிப்பு அப்பீல் வழக்கில், கர்நாடக ஹைகோர்ட் நீதிபதி குமாரசாமி வெறும் 3 நிமிடங்களில் தீர்ப்பை வாசித்தார். சொத்துக்குவிப்பு வழக்கில், பெங்களூரு சிறப்பு கோர்ட் ஜெயலலிதா உள்ளிட்ட நால்வருக்கும் சிறை தண்டனை, அபராதம் விதித்து தீர்ப்பளித்தது.

 

ஜெயலலிதா தரப்பு செய்த மேல்முறையீட்டில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்போது ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரும் விடுதலை செய்யப்படுவதாக நீதிபதி குமாராசாமி அறிவித்தார். காலை 11 மணிக்கு சரியாக கோர்ட் ஹாலுக்குள் வந்த குமாரசாமி, 918 பக்கங்கள் கொண்ட தீர்ப்பின், முக்கிய அம்சங்களை, 3 நிமிடங்களில் தீர்ப்பை வாசித்து முடித்து கிளம்பினார்.

 

தமிழகம் மற்றும் கர்நாடகாவின் பல்வேறு கோர்ட்டுகளில் 18 ஆண்டுகள் நடந்து வந்த இந்த வழக்கின் தீர்ப்பை 3 நிமிடங்களில் வாசித்து முடித்துவிட்டார் குமாரசாமி. சீனியரை தூக்கி வைத்துக் கொண்டாடிய அதிமுக வக்கீல்கள் நீதிபதி குமாரசாமி தனது தீர்ப்பை வாசித்து முடித்து விட்டுக் கிளம்பியதும், நீதிபதி குமாரசாமிக்கு அதிமுக வக்கீல்கள் பெரிய கும்பிடு போட்டு வணக்கம் செலுத்தினர். பின்னர் தங்களது சீனியர் வக்கீலை தூக்கி தோளில் வைத்துக் கொண்டு ஜெயலலிதாவை வாழ்த்திக் கோஷமிட்டனர்.

 

கண்டித்த மற்ற சீனியர்கள் - போலீஸார் இதைப் பார்த்து அங்கு கூடியிருந்த மற்ற வக்கீல்கள், குறிப்பாக பிற சீனியர் வக்கீல்கள் இதுபோல கோர்ட்டை அவமதிக்கும் வகையில் நடந்து கொள்ளக் கூடாது என்று அதிமுக வக்கீல்களைக் கண்டித்தனர். அங்கிருந்த போலீஸாரும் கண்டித்தனர். இதையடுத்து அதிமுக வக்கீல்கள் அமைதியாக வெளியேறினர்.

 

 

Read more at: http://tamil.oneindia.com/news/india/jaya-case-judgement-with-3-minutes-226500.html

  • தொடங்கியவர்

ஜெ. வழக்கில் சுப்ரீம் கோர்ட் செல்ல கர்நாடகாவுக்குதான் உரிமை: அட்வகேட் ஜெனரல்

 

பெங்களூரு: ஜெயலலிதா வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில், அப்பீல் செய்யும் உரிமை கர்நாடக அரசுக்கு மட்டுமே உள்ளதாக அம்மாநில அட்வகேட் ஜெனரல் ரவிவர்ம குமார் கூறினார். இதுகுறித்து 'ஒன்இந்தியாவுக்கு' ரவி வர்மகுமார் அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியதாவது: ஜெயலலிதா அப்பீல் வழக்கில், கர்நாடகாவை வாதியாக சேர்க்காததை கடுமையாக எதிர்த்துதான், எழுத்துப்பூர்வ வாதத்தை தாக்கல் செய்திருந்தோம்.

 

 

 வழக்கு கர்நாடகாவில் நடைபெற்றுள்ளதால், கர்நாடகா மட்டும்தான், உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்ய முடியும். இருப்பினும், அப்பீல் செய்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்துதான் தற்போது ஆய்வு நடந்து வருகிறது. எப்போது அப்பீல் செய்யப்படும் என்பது குறித்து எந்த காலவரையறையும் வைத்துக்கொள்ளவில்லை. தீ்ர்ப்பின் சாதக, பாதக அம்சங்களை ஆய்வு செய்து வருகிறோம். அதன் முடிவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு ரவிவர்ம குமார் கூறினார்.

 

Read more at: http://tamil.oneindia.com/news/india/jaya-verdict-only-karnataka-can-file-appeal-says-advocategeneral-226503.html


ஜெ. வழக்கில் அப்பீலுக்கு போகுமா கர்நாடக அரசு? சட்ட அமைச்சர் செல்போன் சுவிட்ச் ஆப்!

 

பெங்களூரு: ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யுமா என்பதில் மர்மம் நீடிக்கிறது. கர்நாடக அரசு மற்றும் அன்பழகன் தரப்பு, இந்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம்கோர்ட் செல்ல முடியும். ஆனால் இருதரப்பும் இன்று மதியம் வரை அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிடவில்லை.

 

 

 அரசு தரப்பு வக்கீல் ஆச்சாரியா அளித்த பேட்டியில், தீர்ப்பின் முழு விவரத்தையும் படித்து பார்த்துவிட்டு அரசுக்கு அறிக்கை தர உள்ளேன் என்று கூறினார். ஆச்சாரியா அளிக்கும் அறிக்கையை வைத்துதான், மேல்முறையீடு செய்வதா வேண்டாமா என்ற முடிவுக்கு கர்நாடக அரசு வரும் என்று தெரிகிறது. 918 பக்கங்கள் கொண்ட தீர்ப்பை ஆச்சாரியா தலைமையிலான சட்ட வல்லுநர் குழு ஆய்வு செய்ய உள்ளது. ஆதாரங்களை திரட்ட முடியாது என்று தெரிந்தால், பேசாமல் ஜகா வாங்கவே கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

 

இதனிடையே, மேல்முறையீடு குறித்த விவரம் கேட்க தமிழ் பத்திரிகையாளர்கள், கர்நாடக சட்ட அமைச்சர் ஜெயச்சந்திராவை தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது, அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. தலைமைச் செயலகமான விதானசவுதாவிலுள்ள அமைச்சருக்கான அறையிலும் ஜெயச்சந்திரா இல்லை.

 

 

Read more at: http://tamil.oneindia.com/news/india/will-the-karnataka-government-go-appel-the-jayalalitha-case-226498.html

  • தொடங்கியவர்

கணக்கு காட்டாத சொத்து மதிப்பு 8.12% மட்டுமே என்பதால் ஜெ. விடுதலை: நீதிபதி சொன்ன முக்கிய பாயிண்ட்

 

பெங்களூரு: ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரையும் சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஹைகோர்ட் நீதிபதி குமாரசாமி விடுதலை செய்துள்ளார். அவரது தீர்ப்பில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சம் வருமாறு: பெங்களூரு: ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரையும் சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து ஹைகோர்ட் நீதிபதி குமாரசாமி விடுதலை செய்துள்ளார். அவரது தீர்ப்பில் ஒரு முக்கியமான அம்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அம்சத்தை கொண்டுதான், ஜெயலலிதா தரப்பை விடுதலை செய்துள்ளார் நீதிபதி குமாரசாமி.

 

66 கோடி சொத்து சொத்துக்குவிப்பு வழக்கில், விசாரணை அதிகாரிகள் ஜெயலலிதாவுக்கு ரூ.66,44,73,573 கோடி மதிப்பில் சொத்துக்கள் உள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். ஆனால், கட்டுமான வேலைகளுக்கான செலவு, ரூ.27,79,88,945 என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

 

ரூ.5 கோடி கணக்கில் இடிக்கிறது அதற்கான ஆவணங்களை தாக்கல் செய்யவில்லை. அரசு தரப்பு தாக்கல் செய்த ஆவணங்களில் ரூ.5 கோடியே 10 லட்சத்து 54 ஆயிரத்து 60 ரூபாய் குறைகிறது. இதை கழித்து பார்த்தால் உண்மையிலேயே கட்டுமானத்திற்கு, ரூ.22,69,34,855தான் ஆகியுள்ளது.

 

கல்யாண செலவு திருமணத்திற்கான செலவு ரூ.6 கோடியே 45 லட்சத்து 4222 என்று அரசு தரப்பு கூறியிருந்தது. ஆனால், ரூ.28 லட்சத்து 68 ஆயிரத்துக்கு சான்று காண்பிக்க முடியவில்லை. எனவே இதை கழித்து பார்த்தால், திருமணத்திற்கான செலவு, ரூ.6,16,36,222 கோடியாகியுள்ளது.

 

கணக்கில் வராதது ரூ.2.82 கோடி இவ்விரண்டு மாற்றப்பட்ட மதிப்பையும் சேர்த்து கூட்டினால், ரூ.28 கோடியே 85 லட்சத்து 71 ஆயிரத்து 107 வருகிறது. மொத்த சொத்த மதிப்பில் இருந்து இதை கழித்தால், எஞ்சுவது ரூ.37,59,02,466 ஆகும். குற்றம்சாட்டப்பட்டவர் தரப்பில் ரூ.34 கோடியே 76 லட்சத்து 65,654 பணத்துக்கு, கணக்கு காண்பிக்கப்பட்டுள்ளது. கணக்கு காட்டாத தொகை ரூ.2,82,36,812 கோடியாகும்.

 

8.12 சதவீதம் மொத்த வருவாயில், அவர் கணக்கு காட்டாத சொத்துக்களின் மதிப்பு 8.12 சதவீதம் மட்டுமே ஆகும். ஆனால், கிருஷ்ணானந்த் அக்னிஹோரி மற்றும் மத்திய பிரதேச மாநில அரசுகளுக்கு இடையேயான வழக்கில், ஒருவருக்கு, 10 சதவீதம் வரை வருமானத்துக்கு மேல் சொத்து இருந்தால் அவரை வழக்கில் இருந்து விடுவிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. ஆந்திர அரசு வெளியிட்டிருந்த சுற்றரிக்கையில் கூட 20 சதவீதம் கூடுதல் சொத்துக்கள் இருப்பதில் தவறில்லை என்று உள்ளது.

 

ஜெ. விடுதலை எனவே, ஏ 1 (ஜெயலலிதா) விடுதலை செய்யப்படுகிறார். அவர் விடுதலை செய்யப்படுவதால், ஏ 4 வரையிலான குற்றம்சாட்டப்பட்டவர்களும் விடுதலை செய்யப்படுகின்றனர். இவ்வாறு குமாசாமி தெரிவித்துள்ளார்.

 

Read more at: http://tamil.oneindia.com/news/india/the-disproportionate-asset-is-less-than-10-it-is-permissible-limit-226509.html

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர்களுக்கு கெட்டசெய்தி.....

 

அதிமுக வலிமை பெறக்கூடாது.....

 

கருணாநிதியை விட.... ஜெயலலிதா மேல். :D

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.