Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஜெயலலிதா சொத்து குவிப்பு அப்பீல் மனு மீதான விசாரணை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 

3478s2h.jpg

 

 

குமாரசாமி அண்ணை.... மப்பிலை,
கணக்கை கூட்டிப் பார்த்து, தீர்ப்பை... சொல்லியிருக்கிறார் போலுள்ளது.
இந்த வழக்கு முடியுமட்டும்..... குமாரசாமி அண்ணையை,

"கள்ளுக் கொட்டில்" பக்கம் போக விடப் படாது. :D  :wub: 

 

  • Replies 311
  • Views 29.2k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

ஜெ. வழக்கில் தீர்ப்பை மாற்ற உச்ச நீதிமன்றத்துக்கு மட்டுமே அதிகாரம் உண்டு: அன்பழகன் வக்கீல்

 

பெங்களூரு: ஜெயலலிதா அப்பீல் வழக்கில் கர்நாடக ஹைகோர்ட் வழங்கிய தீர்ப்பிலுள்ள கணித பிழைகளை திருத்தி மீண்டும் வெளியிட முடியுமே தவிர, தீர்ப்பை மாற்ற முடியாது என்று அன்பழகன் தரப்பில் வழக்கில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சி.வி.நாகேஷ் தெரிவித்தார். இதுகுறித்து அவர் 'ஒன்இந்தியாவிடம்' கூறுகையில், குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 362ன்கீழ், ஹைகோர்ட் தனது தீர்ப்பிலுள்ள கணக்கியல் தவறுகளை திருத்திக் கொள்ள முடியும். அப்படி, கணக்கீட்டு தவறு திருத்தப்பட்டாலும், தீர்ப்பு அப்படியேத்தான் தொடரும். குற்றம்சாட்டப்பட்டவர் விடுதலை செய்யப்பட்டாலும், அல்லது தண்டனைக்கு உட்பட்டாலும், அந்த தீர்ப்பை வழங்கிய பிறகு, அதை மாற்ற நீதிபதிக்கு அதிகாரம் இல்லை.

 

சுப்ரீம் கோர்ட் இனிமேல், தீர்ப்பை மாற்ற உச்ச நீதிமன்றத்துக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. கர்நாடகாவும், குற்றம்சாட்டப்பட்ட தரப்பும், இனிமேல், சுப்ரீம் கோர்ட்டில்தான் மோதிக்கொள்ள முடியும். அதேநேரம், வழக்கில் சம்மந்தப்பட்ட சுப்பிரமணியன் சுவாமி, மற்றும் அன்பழகனும் உச்சநீதிமன்றம் செல்ல முடியும்.

 

மேல்முறையீடு முன்பெல்லாம், சம்மந்தப்பட்ட மாநில அரசுதான், மேல்முறையீடு செய்ய முடியும் என்ற கட்டாயம் இருந்தது. ஆனால், 2009ம் ஆண்டு, குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 372ல் திருத்தம் செய்யப்பட்டு, வழக்கில் தொடர்புள்ள யார் வேண்டுமானாலும் அப்பீல் செய்யலாம் என்ற உரிமை தரப்பட்டது.

 

சு.சுவாமி, அன்பழகன் தாக்கல் செய்யலாம் ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கை பொறுத்தளவில், சுப்பிரமணியன் சுவாமி, முதன்முதலில் வழக்கை தொடுத்தவர் என்ற முறையிலும், அன்பழகன், இந்த வழக்கில் ஏற்கனவே சம்மந்தப்பட்டவர் என்ற முறையிலும், மேல்முறையீடு செய்ய சட்டத்தில் இடமுள்ளது. ஏற்கனவே ஹைகோர்ட்டில், சுப்பிரமணியன் சுவாமி மற்றும், அன்பழகன் ஆகிய இரு தரப்புக்குமே, எழுத்துப்பூர்வ வாதம் செய்ய அனுமதி கிடைத்தது. எனவே, உச்சநீதிமன்றத்திலும், இவ்விரு தரப்புமே அப்பீல் செய்யலாம்.

 

குறுகிய அவகாசம் பவானிசிங் நியமனம் செல்லாது என்று தீர்ப்பு வெளியான பிறகு, எதிர்தரப்பு வாதம் செய்ய ஒருநாள் மட்டுமே அவகாசம் கிடைத்தது. அதுவும் எழுத்துப்பூர்வ வாதத்துக்கு மட்டுமே அனுமதி கிடைத்தது. 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆவணங்கள், 236 சாட்சிகள் தொடர்புள்ள வழக்கில், வாதம் சமர்ப்பிக்க கிடைத்தது எங்களுக்கு ஒரு நாள்தான்.

 

முடிவெடுக்கவில்லை நான், அன்பழகன் தரப்புக்காக வாதம் செய்தபோதிலும், மேல்முறையீடு பற்றி இன்னும் நாங்கள் முடிவெடுக்கவில்லை. தீர்ப்பை முழுமையாக ஆய்வு செய்த பிறகுதான், அதுகுறித்து கருத்து கூற முடியும். இவ்வாறு நாகேஷ் தெரிவித்தார்.

 

Read more at: http://tamil.oneindia.com/news/india/jaya-case-court-can-correct-but-not-change-verdict-says-senior-counsel-cv-nagesh-226692.html

  • கருத்துக்கள உறவுகள்

"பனங் கள்ளு" சீசன் நேரம்... குமாரசாமி அண்ணர்.
கள்ளுக் குடிக்காமல், இருப்பதே.... அவருக்கு கிடைக்கும் உச்ச தண்டனை. :D  :lol:  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

 

 

குமாரசாமி அண்ணை.... மப்பிலை,

கணக்கை கூட்டிப் பார்த்து, தீர்ப்பை... சொல்லியிருக்கிறார் போலுள்ளது.

இந்த வழக்கு முடியுமட்டும்..... குமாரசாமி அண்ணையை,

"கள்ளுக் கொட்டில்" பக்கம் போக விடப் படாது. :D  :wub: 

 

 

குமாரசாமியர் மட்டுமில்ல, குன்ஹா வும் கணக்கில குளறுபடி செய்து போட்டாராம்.

 

தனி கோர்ட் விசாரணையின் போது குன்ஹாவும் கணக்குப்போடுவதில் தவறு செய்து விட்டார் என புதிதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
 
குன்ஹா வெளியிட்ட தீர்ப்பு 1136 பக்கங்கள் கொண்டது. இதில் 665வது பக்கத்தில் தங்கம் மற்றும் வைரங்கள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட 20 ஆயிரத்து 548 கிராம் தங்கத்தின் மதிப்பு ஒரு கிராமுக்கு 433 ரூபாய் என கணக்கிடப்பட்டது. இதன் மொத்த தொகை ரூ.8,90,55,032 எனவும் கூறப்பட்டது. ஆனால் ரூ.20,548 *ரூ.433 = ரூ.88,97,284 தான் வரும். எனவே இதிலும் தவறு உள்ளது.
 
இப்படி ஆளாளுக்கு தவறுகளை செய்ததாக வெளியாகும் தகவல்களால், பொதுமக்கள் தலை "கிறுகிறுத்து'ப் போய் உள்ளனர்.  :lol:  :o  :D
  • தொடங்கியவர்

ஜெயலலிதா வழக்கு மட்டும் விரைவாக விசாரிக்கப்பட்டது எப்படி?- உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் லில்லி தாமஸ் கேள்வி
 

 

ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட லாலு பிரசாத் யாதவ் உட்பட பலரது மேல்முறையீட்டு வழக்கு கள் இன்னும் நிலுவையில் உள்ள நிலையில், ஜெயலலிதா மீதான வழக்கில் விரைந்து தீர்ப்பு வெளியா னது எப்படி என உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் லில்லி தாமஸ் (82) கேள்வி எழுப்பியுள்ளார்.

ஊழல் வழக்கில் தண்டனை அடைந்த அரசியல்வாதிகள் தங்கள் பதவியை இழக்கும் வகை யில் தேர்தல் ஆணைய சட்டத்தில் திருத்தம் கொண்டுவரக் காரண மான வழக்கை உச்ச நீதிமன்றத்தில் தொடுத்தவர் இவர் ஆவார்.

 

 

இதுகுறித்து ‘தி இந்து’விடம் லில்லி தாமஸ் கூறியதாவது: ஊழல் வழக்கில் தண்டிக்கப்படும் அரசியல்வாதிகள் மேல்முறையீடு செய்துவிட்டு காலம் கடத்தும் போது, கீழமை நீதிமன்றங்கள் அளித்த தீர்ப்புக்கு மதிப்பில்லாத சூழல் இருந்தது. இதை தடுக்கும் பொருட்டுதான், ஊழல் வழக்கில் கீழமை நீதிமன்றத்தில் தண்டிக்கப் பட்டாலும் அரசியல்வாதிகள் தங்கள் பதவிகளை இழக்கும் வகை யில் நான் பொதுநல வழக்கு தொடுத்தேன். இந்த வழக்கில் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தேர்தல் ஆணைய சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. இந்த நல்ல மாற்றம் மேலும் ஒரு சிக்கலுக்கு உள்ளானது போல் தோன்றுகிறது.

 

 

இந்த சட்டம் கொண்டு வரப் பட்ட பின் தண்டிக்கப்பட்ட லாலு உட்பட பலரது மேல் முறையீட்டு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், ஜெயலலிதாவுக்கு மட்டும் விரைந்து தீர்ப்பு வெளி யாகக் காரணம் என்ன? இது எதன் அடிப்படையில் அளிக்கப் பட்டது என்பது தனி விஷயமாக இருப்பினும், அதனால் ஏற்பட் டுள்ள சூழல் கவலைக்குரியதாக உள்ளது. இந்த விஷயத்தில் நீதி அனைவருக்கும் சமமாக இருக்கும் வகையில் ஒரு பொதுநல வழக்கு போடலாமா என யோசித்து வரு கிறேன். ஜெயலலிதா மீதான இரு நீதிமன்றங்களின் தீர்ப்புகளையும் விரிவாகப் படித்த பின் அது குறித்து முடிவு செய்வேன்.

இவ்வாறு அவர் கூறினார்.
 

 

http://tamil.thehindu.com/india/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF/article7200468.ece

  • கருத்துக்கள உறவுகள்

 

குமாரசாமியர் மட்டுமில்ல, குன்ஹா வும் கணக்கில குளறுபடி செய்து போட்டாராம்.

 

தனி கோர்ட் விசாரணையின் போது குன்ஹாவும் கணக்குப்போடுவதில் தவறு செய்து விட்டார் என புதிதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது.
 
குன்ஹா வெளியிட்ட தீர்ப்பு 1136 பக்கங்கள் கொண்டது. இதில் 665வது பக்கத்தில் தங்கம் மற்றும் வைரங்கள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட 20 ஆயிரத்து 548 கிராம் தங்கத்தின் மதிப்பு ஒரு கிராமுக்கு 433 ரூபாய் என கணக்கிடப்பட்டது. இதன் மொத்த தொகை ரூ.8,90,55,032 எனவும் கூறப்பட்டது. ஆனால் ரூ.20,548 *ரூ.433 = ரூ.88,97,284 தான் வரும். எனவே இதிலும் தவறு உள்ளது.
 
இப்படி ஆளாளுக்கு தவறுகளை செய்ததாக வெளியாகும் தகவல்களால், பொதுமக்கள் தலை "கிறுகிறுத்து'ப் போய் உள்ளனர்.  :lol:  :o  :D

 

 

உலகத்திலேயே.... மக்களை முட்டாளாக வைத்திருக்க விரும்பும் நாடு என்றால்... இந்தியா தான்.

ஆனால்... நிஜத்தில், இந்தியா... முட்டாள்கள் நிறைந்திருக்கும் நாடு.

அதற்கிடையில்... இந்தியர்கள், அவிட்டு விடும் பொய்களையும், புரட்டுக்களையும் நம்ப வைக்க ஆடும் நாடகங்கள் பல....

 

1) உலகத்திற்கு... அகிம்சையால்,  மகாத்மா காந்தி மூலம்... விடுதலை பெற்ற நாடு.

2) உலகத்திற்கு.... நான்கு, மதங்களை அறிமுகப் படுத்திய நாடு.

3) பெண்களை... தெய்வமாக மதிக்கும் நாடு.

என்று... காது புளிக்க, கப்ஸா... விட்டுக் கொண்டெ இருப்பார்கள்.

 

 

உண்மையில்.... நய வஞ்சகம் நிறைந்த நாடு என்றால்,  இந்தியா தான்.

அதற்குப் பிறகு தான்.... ருமேனியனும், மெக்சிக்கனும், பாகிஸ்தானியனும்.

வெட்கம்... மானம்... ரோசம்... கெட்டவன் இந்தியன்.

 

தமிழக நண்பர்கள் மன்னிக்கவும்.

  • தொடங்கியவர்

ஜெ. தீர்ப்பை எதிர்ப்பு அப்பீல் செய்ய கர்நாடகம் முடிவு: ஆச்சார்யாவிற்கு சட்டத்துறை செயலாளர் கடிதம்

 

 

சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவை விடுதலை செய்த கர்நாடக உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வது குறித்து ஆலோசனை வழங்குமாறு அரசு வழக்கறிஞர் ஆச்சார்யாவுக்கு, கர்நாடக சட்டத்துறை செயலர் சங்கப்பா கடிதம் எழுதியுள்ளார். வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா மற்றும் இளவரசி, சுதாகரன் ஆகியோரை விடுதலை செய்து கர்நாடக உயர் நீதிமன்ற சிறப்பு நீதிபதி குமாரசாமி கடந்த 11ஆம் தேதி தீர்ப்பளித்தார்.

 

 

இந்த தீர்ப்பில் பிழை இருப்பதாகவும், தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்றும் தமிழகத்தில் உள்ள எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய கர்நாடக மாநில முதல்வர் சித்தராமைய்யா, 'ஜெயலலிதா வழக்கில் மேல்முறையீடு விவகாரத்தில், சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்வது தொடர்பாக, நாங்களே சரியான சட்ட முடிவு எடுப்போம்.

 

அதில், தி.மு.க., அல்லது அ.தி.மு.க.,வின் கருத்துகளுக்கு மதிப்பளிக்கப் போவதில்லை,'' என கூறியிருந்தார். உயர் நீதிமன்றம் தீர்ப்பு குறித்து, அரசு வழக்கறிஞர் ஆச்சார்யா, சட்ட அமைச்சகத்துடன் ஆலோசனை நடத்தி, தீர்ப்பை படித்து பார்த்த பிறகு, உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வதா, வேண்டாமா என்பது குறித்து முடிவெடுப்போம் என்றும் சித்தராமைய்யா தெரிவித்திருந்தார். இந்நிலையில், கர்நாடக உயர்நீதின்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யும் விவகாரம் தொடர்பாக தகுந்த ஆலோசனை வழங்குமாறு ஆச்சார்யாவுக்கு சட்டத்துறை செயலர் சங்கப்பா கடிதம் எழுதியுள்ளார். இந்த ஆலோசனைக்கு பின்னர் உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு மேல்முறையீடு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

Read more at: http://tamil.oneindia.com/news/tamilnadu/karnataka-law-department-asks-acharya-advice-on-jaya-verdict-226757.html

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல முடிவு. :D

  • தொடங்கியவர்

ஜெ. வழக்கில் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்யலாம்.. கர்நாடக அரசுக்கு ஆச்சாரியா சிபாரிசு!

 

 பெங்களூரு: ஜெயலலிதா வழக்கில் உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்யலாம் என்று கர்நாடக அரசுக்கு அரசு சிறப்பு வக்கீல் ஆச்சாரியா பச்சைக்கொடி காட்டியுள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவை கர்நாடக ஹைகோர்ட் விடுதலை செய்த நிலையில், தீர்ப்பில் கணித பிழை உள்ளதாக அரசு சிறப்பு வக்கீல் ஆச்சாரியா கூறியிருந்தார்.

 

 இந்த பிழை உட்பட மேலும் சில சாதகமான அம்சங்கள் அரசு தரப்புக்கு கிடைத்துள்ளது. அரசு சிறப்பு வக்கீல் ஆச்சாரியா மற்றும் கர்நாடக சட்ட வல்லுநர்கள் குழு நடத்திய ஆலோசனையில் தங்களுக்கு சாதகமான பல அம்சங்களை தீர்ப்பில் இருந்து எடுத்துள்ளனர்.

 

இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில், மேல்முறையீடு செய்ய தக்க வழக்குதான் இது என்று, கர்நாடக அரசு தலைமை வழக்கறிஞர் ரவிவர்மகுமாரிடம், ஆச்சாரியா சிபாரிசு செய்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இன்னும் ஒரு சில நாட்களில், மேல்முறையீடு பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை கர்நாடக அரசு தெரிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

Read more at: http://tamil.oneindia.com/news/india/spp-acharya-recommended-appeal-226800.html

  • கருத்துக்கள உறவுகள்
நீதி வேண்டும் என்றால் 
சுப்ரீம் கோர்டுக்கு போகலாம் என்றால் ...........??
 
கீழே இருக்கும் கோர்டில் எல்லாம் நீதி இல்லை என்றுதானே அர்த்தம்.
ஏன் இவற்றை நீதுமன்று என்று அழைக்கிறார்கள் ?? 
  • கருத்துக்கள உறவுகள்

உலகத்திலேயே.... மக்களை முட்டாளாக வைத்திருக்க விரும்பும் நாடு என்றால்... இந்தியா தான்.

ஆனால்... நிஜத்தில், இந்தியா... முட்டாள்கள் நிறைந்திருக்கும் நாடு.

அதற்கிடையில்... இந்தியர்கள், அவிட்டு விடும் பொய்களையும், புரட்டுக்களையும் நம்ப வைக்க ஆடும் நாடகங்கள் பல....

 

1) உலகத்திற்கு... அகிம்சையால்,  மகாத்மா காந்தி மூலம்... விடுதலை பெற்ற நாடு.

2) உலகத்திற்கு.... நான்கு, மதங்களை அறிமுகப் படுத்திய நாடு.

3) பெண்களை... தெய்வமாக மதிக்கும் நாடு.

என்று... காது புளிக்க, கப்ஸா... விட்டுக் கொண்டெ இருப்பார்கள்.

 

 

உண்மையில்.... நய வஞ்சகம் நிறைந்த நாடு என்றால்,  இந்தியா தான்.

அதற்குப் பிறகு தான்.... ருமேனியனும், மெக்சிக்கனும், பாகிஸ்தானியனும்.

வெட்கம்... மானம்... ரோசம்... கெட்டவன் இந்தியன்.

 

தமிழக நண்பர்கள் மன்னிக்கவும்.

அம்மா வழக்கு திரை மறைவு அரசியல் நாடகமோ என்று தோன்றுகின்றது.
 
குன்காவின் தீர்ப்பினால் பதவி இழந்த அம்மாவுக்கு, கணக்கு தவறானாலும், அளிக்கப் பட்ட தீர்ப்பு பதவியினை மீண்டும் பெறும் வாய்ப்பினை அளித்து உள்ளது. குமாரசாமியார் தீர்ப்பினை திருத்த முடியாது. திருத்தக் கூடிய அதிகாரம் உச்ச நீதிமன்றுக்கு.
 
அதேவேளை உச்ச நீதிமன்றில் மேல்முறையீடு செய்தாலும் இப்போதைக்கு விசாரணை நடை பெறப் போவதில்லை.
 
உதாரணம்: கொலை வழக்கில் ஆயுள் தண்டனை வழங்கப் பட்ட, சரவணபவன் ஓட்டல் அதிபர் ராசகோபால், உச்ச நீதிமன்றில் மேன்முறை ஈடு செய்து விட்டு, பல ஆண்டுகளாக பெயிலில் இருக்கிறார் வெளியே. காரணம் பணம்.
 
அவரால் அப்படி முடியுமாயின், அரசியல், பண பலம் கொண்ட அம்மாவின் அசுர பலம் முன் இது சாதாரனமானது. 
 
ஆக அம்மா எப்ப உள்ள போவா, முதல்வர் கதிரை எப்ப காலியாகும் என்று கருணாநிதி, விஜயகாந்த், ஸ்டாலின், ராமதாசு எல்லோரும் கொட்டாவி விட்டுக் கொண்டிருக்க வேண்டியது தான்.  :D
  • தொடங்கியவர்

ஜெ. வழக்கில் அப்பீல் செய்ய மூன்று தரப்பும் தயக்கம்.. ஒவ்வொருவருக்கும் ஒரு காரணம்!

 

பெங்களூரு: ஜெயலலிதாவை ஹைகோர்ட் விடுவித்து வழங்கிய தீர்ப்பை எதிர்த்து, கர்நாடக அரசு சுப்ரீம்கோர்ட்டில் மேல்முறையீடு செய்யுமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது. சொத்துக் குவிப்பு வழக்கில் கர்நாடக ஹைகோர்ட் ஜெயலலிதாவை விடுதலை செய்துள்ளது. இந்த தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம், அதற்கான ஓட்டைகள் தீர்ப்பில் போதிய அளவுக்கு உள்ளன என்று அரசு சிறப்பு வழக்கறிஞர் ஆச்சாரியா, கர்நாடக அரசுக்கு சிபாரிசு செய்தார். ஹைகோர்ட் வழங்கிய தீர்ப்பில் கூட்டல் கணித தவறு இருப்பதாகவும் ஆச்சாரியா பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார்.

 

மூன்று தரப்புக்கு வாய்ப்பு இந்த வழக்கில், மூன்று தரப்பால், சுப்ரீம்கோர்ட்டுக்கு போக முடியும். அதில் முதன்மையானது கர்நாடக அரசு தரப்பு. இரண்டாவது, வழக்கில் சம்மந்தப்பட்ட அன்பழகன் தரப்பு. மூன்றாவது, முதலில் வழக்கை தொடுத்த சுப்பிரமணியன் சுவாமி தரப்பு.

 

கர்நாடகம் கேள்விக்குறி இந்த மூன்று தரப்பிலும், அதிக உரிமையுள்ள தரப்பு, கர்நாடக அரசு தரப்புதான். எனவேதான், கர்நாடக அரசு அப்பீல் செய்ய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு பிற இரு தரப்புகளிலும் நிலவுகிறது. கர்நாடக அரசு அப்பீல் செய்யுமா, செய்யாதா என்பதுதான் தற்போது தொக்கி நிற்கும் கேள்வி.

 

ஆய்வு செய்யுதாம்.. கர்நாடக முதல்வர் சித்தராமையாவிடம் இதுபற்றி கேட்டால், அப்பீல் செய்ய வேண்டுமா, வேண்டாமா என்பது பற்றி சட்ட வல்லுநர்கள் குழு ஆய்வு செய்து முடிவை எடுக்கும் என்று தெரிவித்தார். இந்த வழக்கில் 90 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்ய கெடு உள்ளபோதும், ஆச்சாரியா சிபாரிசு செய்த பிறகும் கர்நாடக அரசு அப்பீலுக்கு கால தாமதம் செய்வது வியப்பை ஏற்படுத்துகிறது.

 

ஏன் தாமதம் அப்பீல் செய்ய கர்நாடக அரசு காலம் தாழ்த்துவதன் பின்னணியில் சட்ட காரணங்களைவிட, அரசியல் காரணங்களே அதிகம் உள்ளதாம். காங்கிரஸ் மேலிடம் பச்சைக் கொடி காட்டாமல் கர்நாடக அரசு, சுப்ரீம்கோர்ட் படி ஏறப்போவதில்லை என்கின்றனர் கர்நாடக காங்கிரஸ் வட்டாரத்தில்.

 

என்ன லாபம்? "ஜெயலலிதா வழக்கில் அப்பீல் செய்வதால் கர்நாடக அரசுக்கு எந்த லாபமும் கிடையாது. ஆனால், அப்பீலுக்கு போகாமல் இருந்தால் நிறைய லாபம் உள்ளது" என்கிறார் கன்னட மூத்த பத்திரிகையாளர் நஞ்சுண்டப்பா. இரு மாநில உறவு கெடக்கூடாது என்பது வெளியே காண்பிக்கப்படும் காரணம் என்றாலும், மேகதாது விவகாரம் இதில் முக்கியமான கருப்பொருள் என்கிறார் அவர்.

 

மேகதாது காவிரியின் குறுக்கே, மேகதாது என்ற பகுதியில் கர்நாடகா அணை கட்ட உள்ளது. இதன்மூலம் மைசூர், மண்டியா, ராம்நகர், பெங்களூரு ஊரகம், தும்கூர் உட்பட தென் கர்நாடக மாவட்டங்கள் பலவும் பயன்பெறும். இந்த மாவட்டங்களில் சுமார் 100 சட்டசபை தொகுதிகள் உள்ளன. கர்நாடக முதல்வர் சித்தராமையாவும், மைசூர் மண்ணின் மகன். எனவே, மொத்தமாக வாக்குகளை அள்ளவும், கர்நாடக வரலாற்றில் நீங்கா புகழ் பெறவும் மேகதாது, சித்தராமையாவுக்கு உதவும் என்கிறார்கள் கன்னட மூத்த பத்திரிகையாளர்கள்.

 

சித்தராமையாவுக்கு நெருக்கடி இந்நிலையில்தான், சித்தராமையாவுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில், வழக்கறிஞர் ஆச்சாரியா வெளிப்படையாக பேட்டிகள் கொடுப்பதாகவும் கூறப்படுகிறது. பாமகவும் இதை உணர்ந்துதான் நேரில் மனு கொடுத்துள்ளது.

 

என்ன செய்யும் கர்நாடகா? இப்படி அரசியல்ரீதியாக நெருக்கடிகள் அதிகரித்தாலும், தீர்ப்பில் கூட்டல் தவறு இருப்பது மக்கள் மத்தியில் பரவலாக விவாதிக்கப்பட்டாலும், வேண்டுமானால், வேண்டா வெறுப்பாக கர்நாடகம் அப்பீலுக்கு போகுமே தவிர, ஆச்சாரியாவை, அரசு வக்கீலாக தொடரச் செய்யுமா என்பது சந்தேகம்தான் என்கின்றனர் சித்தராமையா நடவடிக்கையை உன்னிப்பாக கவனிக்கும் பத்திரிகையாளர்கள்.

 

எஸ்கேப் கர்நாடகா ஜெயலலிதா வழக்கில் இருந்து கர்நாடகம் விலகி இருக்கவே விரும்புவது தொடக்கம் முதலே உள்ளங்கை நெல்லிக்கனி போல தெரிகிறது. ஏனெனில், சிறப்பு நீதிமன்றம் ஜெயலலிதாவை குற்றவாளி என்று அறிவித்த நிலையில், ஹைகோர்ட்டில் மேல்முறையீடு விசாரிக்கப்படும்போது, கர்நாடக அரசு எதுவுமே நடக்காதது போல இருந்து கொண்டது.

 

குளறுபடி கர்நாடகா கர்நாடகம்தான் வழக்கை நடத்துவது தெரிந்திருந்தும், சித்தராமையா அரசு, தங்கள் சார்பில் அரசு வக்கீலை நியமிக்கவில்லை. அன்பழகன் மனு போட்டு, சுப்ரீம்கோர்ட் உத்தரவிட்ட பிறகுதான், 1 நாள் மட்டுமே எஞ்சியிருந்ததால் ஆச்சாரியாவை அரசு வக்கீலாக நியமித்தது கர்நாடக அரசு. இந்த அப்பீல் வழக்கு குளறுபடிக்கு, கர்நாடகாதான் அடித்தளம் போட்டது என்றாலும் மிகையில்லை.

 

திமுக நிலை கர்நாடக அரசு அப்பீல் செய்யட்டும் என்றுதான் திமுக விரும்புகிறதே, தவிர, திமுகவும் இந்த வழக்கில் முன்னால் சென்று நிற்க விரும்பவில்லை என்றே கூறப்படுகிறது. திமுக தலைமை மவுனம்காப்பதன் பின்னணியும் இதுவே என கூறப்படுகிறது. அவ்வாறு திமுக முன்னால் சென்று நின்றாலும், ஜெயலலிதாவை ஒழித்துக்கட்ட திமுக முயலுவதாக செய்திகள் பரப்பப்பட்டு மக்கள் மனதில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்திவிடும் என்று திமுக மேலிடம் கருதுவதாக தகவல்கள் வெளியாகின்றன. ஆக, இதிலும் அரசியல் முக்கிய பங்கு வகிக்கிறது.

 

பாமகவுக்கும் அரசியல் பாமக இந்த விஷயத்தில் முனைப்பு காட்டுவதற்கும், அரசியல்தான் காரணம் என்று கூறப்படுகிறது. ஜெயலலிதாவை நெருக்கடியில் வைத்திருப்பதன் மூலம் அடுத்த பொதுத்தேர்தலில் கணிசமான சீட்டுகளை பெற முடியும் என்று பாமகவும் அரசியல் கணக்கு போடுகிறது. அதற்கேற்ப அவர்களுக்கு எதிர்வினைகளும் வரத்தொடங்கியுள்ளன. பாமக தலைவர் சித்தராமையாவுக்கு கடிதம் எழுதியதை வரவேற்பவர்களைவிட, விமர்சிப்பவர்களே அதிகம் உள்ளனர்.

 

இது பாஜக அரசியல் சுப்பிரமணியன்சுவாமி வழக்கு தொடரலாம் என்று விரும்பினாலும், பாஜக தனது அரசியல் காரணங்களுக்காக அவரை பிடித்து கட்டிப்போட முயலுகிறது. பாஜகவுக்கும், 2016 கூட்டணி கண் முன்பு வந்து போகிறது. தமிழகத்தில் பாஜக கால்பதிக்க ஜெயலலிதாவுடன் சேருவதை தவிர வேறு வழியில்லை என்ற முடிவுக்கு அக்கட்சி வந்துள்ளதாக தெரிகிறது.

 

அனைத்தும் அரசியல்மயம் ஆகமொத்தத்தில், கர்நாடகம், திமுக, பாஜக என அனைத்து தரப்புமே, தற்போது இதை அரசியலாகவே பார்க்கின்றன. சட்ட பிரச்சினை இரண்டாம்பட்சமாக போய்விட்டது. மக்களின் மனநிலையும் அப்படியே இருப்பதால் அரசியல் கட்சிகளும் அதே பாதையில் பயணிக்கின்றன. பொறுத்திருந்து பார்ப்போம், கர்நாடகா என்ன முடிவெடுக்கிறது என்பதை.

 

Read more at: http://tamil.oneindia.com/news/india/will-karnataka-files-an-appeal-jayalalitha-asset-case-226890.html

  • தொடங்கியவர்

ஜெ. வழக்கில் கர்நாடக அரசை பிரதிவாதியாக சேர்க்காதது யார் தவறு? ஆச்சாரியா விளக்கம்

 

பெங்களூரு: ஜெயலலிதா வழக்கில் அரசை பிரதிவாதியாக சேர்த்திருக்க வேண்டும் என்று அரசு சிறப்பு வழக்கறிஞர் பி.வி.ஆச்சாரியா தெரிவித்தார். சொத்துக்குவிப்பு வழக்கு அப்பீல் விசாரணை கர்நாடக ஹைகோர்ட்டில் நடைபெற்றபோது, அரசு வக்கீலாக பவானிசிங் ஆஜரானார். இவரை வழக்கை நடத்தும் மாநிலமான கர்நாடகா நியமிக்கவில்லை. அன்பழகன் இதை சுட்டிக் காட்டி தொடர்ந்த வழக்கில், 3 நீதிபதிகள் அடங்கிய பெஞ்ச், பவானிசிங் நியமனத்தை ரத்து செய்தது. இதையடுத்து உயர்நீதிமன்றத்தில், அரசு வக்கீலை நியமிக்க வேண்டிய கட்டாயம் கர்நாடக அரசுக்கு ஏற்பட்டது. அரசு ஆச்சாரியாவை வழக்கறிஞராக நியமித்தது. அவர் தனது வாதத்தில், அரசு வழக்கறிஞரை நியமிக்காமல் வழக்கை நடத்தியதே தவறு என்று குறிப்பிட்டார்.

 

குமாரசாமி கண்டிப்பு ஆனால், நீதிபதி குமாரசாமி, கடந்த 11ம் தேதி வழங்கிய தீர்ப்பில், ஜெயலலிதாவை விடுதலை செய்தார். மேலும், மூன்று மாதங்களாக ஹைகோர்ட்டில் வழக்கு நடப்பது தெரிந்திருந்தும், கர்நாடக அரசு வழக்கறிஞரை நியமனம் செய்யவில்லை. கடைசி நேரத்தில் வந்து விசாரணை நடத்தியதே சரியில்லை என்று சொன்னதை ஏற்க முடியாது என்று கூறியிருந்தார்.

 

மனு செய்யப்பட்டது இதுகுறித்து அரசு சிறப்பு வழக்கறிஞர் ஆச்சாரியா தனது கருத்தை தற்போது தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது: மேல்முறையீடு நடந்த நேரத்தில், அரசு வக்கீலாக இருந்த பவானிசிங்கின் நியமனம் சட்டப்படி செல்லாது, அவரை வாதம் செய்ய அனுமதிக்க கூடாது என்று திமுக பொதுச்செயலாளர் க.அன்பழகன் மனு தாக்கல் செய்தார்.

 

பவானிசிங்கே ஒப்புக்கொண்டார் அப்போது பவானிசிங்கிடம் இதுகுறித்து கேட்டபோது, தமிழக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸ் தான் என்னை அரசு வக்கீலாக நியமனம் செய்து கடிதம் கொடுத்துள்ளது. கர்நாடக அரசு நியமனம் செய்யவில்லை என்று நீதிமனஅறத்தில் நீதிபதியிடம் பவானிசிங் கூறியுள்ளார்.

 

ஹைகோர்ட்டும் சொல்லியது அன்பழகன் தாக்கல் செய்த மனுவை சிறப்பு நீதிமன்றம் ஏற்காத நிலையில், கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அதை விசாரணைக்கேற்ற நீதிபதி பி.குமார் தலைமையிலான அமர்வு, கடந்த பிப்ரவரி 11ம் தேதி வழங்கிய தீர்ப்பில் மேல்முறையீட்டு மனுவில் கர்நாடக அரசை பிரதிவாதியாக சேர்க்கவில்லை என்று தெளிவுபடுத்தியுள்ளார்.

 

கோர்ட்டே செய்திருக்கலாம் பொதுவாக கீழ்நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பு குற்றவாளிகளுக்கு பாதகமாக வரும் பட்சத்தில், அதை எதிர்த்து மேல்முறையீடு செய்யும்போது, அரசாங்கத்தை பிரதிவாதியாக சேர்க்க வேண்டும். ஒருவேளை மனுதாரர்கள் அதை செய்யாமல் தவிர்த்தால், மனுவை விசாரணை நடத்தும் நீதிமன்றம் அரசாங்கத்தை பிரதிவாதியாக சேர்க்க வேண்டும். அதற்கான வாய்ப்பு நீதிபதிக்கு சட்டத்தில் தரப்பட்டுள்ளது.

 

தட்டி கழித்தது ஏனோ? ஆனால் மேல்முறையீட்டு மனுவை விசாரணை நடத்திய நீதிபதி, கர்நாடக அரசு பிரதிவாதியாக சேர்க்கப்படவில்லை என்பது தெரிந்தும். அரசாங்கத்தை சேர்க்கும் முடிவு எடுக்காமல் தட்டி கழித்துள்ளார். இவ்வாறு ஆச்சாரியா தெரிவித்தார்.

 

Read more at: http://tamil.oneindia.com/news/india/jaya-case-high-court-itself-can-give-chance-government-226883.html

  • தொடங்கியவர்

ஜெ. விடுதலைக்கு எதிர்ப்பு- மேல் முறையீடு செய்ய கர்நாடக அரசுக்கு ஹைகோர்ட் தலைமை நீதிபதி பரிந்துரை!

 

பெங்களூரு: வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் இருந்து அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழக முன்னாள் முதல்வருமான ஜெயலலிதாவை விடுதலை செய்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யலாம் என கர்நாடகா அரசுக்கு அம்மாநில உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பரிந்துரை கடிதம் அனுப்பியுள்ளார். சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவை விடுதலை செய்து கர்நாடக உயர்நீதிமன்ற தனி பெஞ்ச் நீதிபதி குமாரசாமி தீர்ப்பு கூறினார்.

 

இந்த வழக்கில் அவரது தோழி சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கும் விடுதலையாகினர். 

 

இந்த சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உள்பட 4 பேருக்கும் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் விதித்த அபராதமும் ரத்து செய்யப்பட்டு உள்ளது. இதை எதிர்த்து கர்நாடக அரசு மேல் முறையீடு செய்வது குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. இது மிகவும் முக்கியமான ஒரு வழக்கு என்பதால் அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்கமாட்டோம்.என கர்நாடக முதல்வர் சித்தராமைய்யா கூறி இருந்தார்.

 

அதே நேரத்தில் தி.மு.க. தரப்பில் சோனியா காந்தி மூலமாக கர்நாடகா அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் நடவடிக்கைகளும் நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில் சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா உள்ளிட்டோர் விடுதலையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யலாம் என கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ரவீந்தராவ் வர்மா கர்நாடக சட்டத்துறை அமைச்சர் ஜெயசந்திராவுக்கு பரிந்துரை கடிதம் அனுப்பி உள்ளார்

 

இந்த பரிந்துரை கடிதத்தின் மீது வரும் 21 ந்தேதி நடைபெறும் கர்நாடகா சட்டசபை கூட்டத்தில் விவாதித்து முடிவு எடுக்கப்படும் என தெரிகிறது. அனேகமாக ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து ஜூன் முதல் வாரத்தில் மேல் முறையீடு செய்யப்படும் என கர்நாடகா நீதித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 

 

Read more at: http://tamil.oneindia.com/news/india/karnataka-hc-cj-recommends-appeal-against-acquittal-jaya-227005.html

  • தொடங்கியவர்

நீதித்துறையையே குற்றவாளியாக்கி தப்பிக்கும் ஜெ... சாடுவது அன்று ஜாமீன் வாங்கி தந்த ராஜீவ் தவான்!!

 

 

டெல்லி: நீதித்துறையையே குற்றவாளியாக்கிவிட்டு ஜெயலலிதா குற்றங்களில் இருந்து தப்பித்துக் கொண்டிருப்பதாக அவருக்கு 1997ஆம் ஆண்டு ஜாமீன் பெற்றுக் கொடுத்த மூத்த உச்சநீதிமன்ற வழக்கறிஞர் ராஜீவ் தவான் சாடியுள்ளார். ஜெயலலிதா மீது 1996-97 காலக்கட்டத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. அந்த வழக்குகளில் அவர் கைதாகி சிறையில் இருந்தபோது அவருக்கு ஜாமீன் பெற்று தந்தவர் உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் ராஜீவ் தவான். சொத்துக் குவிப்பு வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு குறித்து தற்போது டெய்லி மெயில் பத்திரிகையில் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார்.

 

 அதில் ராஜீவ் தவான் கூறியுள்ளதன் சாரம்சம்: நீதித்துறையையே குற்றவாளியாக்கிவிட்டு குற்றங்களில் இருந்து ஜெயலலிதா தப்பித்து இருக்கிறார். டான்சி வழக்கு, லண்டன் ஹோட்டல் வழக்கு, பிறந்த நாள் பரிசு வழக்கு, பிளசன்ட் ஸ்டே ஹோட்டல் வழக்கு, வருமான வரி வழக்கு என அத்தனை வழக்குகளிலும் குறுக்கு வழிகளில் ஜெயலலிதா விடுதலை பெற்றிருக்கிறார். அதேபோல் தற்போது சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து தப்பித்து இருக்கிறார். அவர் நீதியை வளைத்த முயற்சிகள் கொஞ்ச நஞ்சமல்ல. 2003ல் ஓய்வுப் பெறவிருந்த நீதிபதி பாலகிருஷ்ணனை நீதிபதியாக தொடர வைக்க முயற்சித்தார்.

 

2015ல் அரசு வழக்கறிஞராக பவானி சிங்கை நியமிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். கடந்த ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட பின்னர் உச்சநீதிமன்றத்தில் அவர் ஜாமீன் பெற்று வெளியே வந்த விதம் வியப்புக்குரியது. கர்நாடக உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் கணக்கியல் தவறுகள் உள்ளன. இந்த தவறுகள் திருத்தப்படுமாயின் தீர்ப்பே மாறுபடும். 10% வரை வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்கள் வைத்துக்கொள்ளலாம் என கிருஷ்ணானந்து வழக்கை காட்டி ஜெயலலிதாவை விடுவித்திருப்பது சரியல்ல. கிருஷ்ணானந்த் கூடுதலாக வைத்திருந்த பணம் ரூபாய் 11,349 மட்டுமே. தவறுகள் நிறைந்த தீர்ப்பின் அடிப்படையில் பார்த்தாலே ஜெயலலிதாவின் கூடுதல் வருமானம் ரூபாய் 2,82,36,812. அதன் தற்போதைய மதிப்பு பணவீக்கம் காரணமாக இன்னும் பன்மடங்கு உயர்ந்திருக்கிறது.

 

கிருஷ்ணானந்த் வழக்கில் கூடுதல் வருமானம் மிக மிக குறைவு என்பதால் விடுவிக்கப்படுவதாக நீதிமன்றம் அறிவித்தது. அந்த வழக்கின் சாராம்சங்கள் கோடிக்கணக்கான ரூபாய் சொத்துக்கள் குவித்த ஜெயலலிதாவுக்கு கொஞ்சமும் பொருந்தாது. எந்த வகையில் பார்த்தாலும ஜெயலலிதா வழக்கில் இருந்து விடுவிக்கப்படக் கூடியவர் அல்ல. இவ்வாறு ராஜீவ் தவான் கூறியுள்ளார்.

 

 

Read more at: http://tamil.oneindia.com/news/india/senior-sc-lawyer-rajeev-dhavan-slams-jaya-227092.html

  • தொடங்கியவர்

ஜெ. வழக்கில் அப்பீல் செய்யாவிட்டால் ஊழலை ஊக்குவிப்பதுபோல ஆகிவிடும்: ஆச்சாரியா

 

 பெங்களூர்: ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கில், கர்நாடக அரசு அப்பீலுக்கு செல்லாவிட்டால், அது ஊழலுக்கு வக்காலத்து வாங்குவது போன்ற எண்ணத்தை மக்களிடம் ஏற்படுத்திவிடும் என்று சிறப்பு அரசு வழக்கறிஞர் பி.வி.ஆச்சாரியா, கர்நாடக அரசுக்கு கொடுத்த சிபாரிசில் கூறியுள்ளாராம். சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவை கர்நாடக ஹைகோர்ட் விடுதலை செய்து உத்தரவிட்டது. இதையடுத்து தீர்ப்பை ஆய்வு செய்த சிறப்பு வக்கீல் ஆச்சாரியா, இந்த வழக்கு, மேல்முறையீடுக்கு ஏற்றது என்று கூறி, கர்நாடக அரசுக்கு சிபாரிசு அளித்தார்.

 

சிபாரிசு விவரம் கசிவு அந்த சிபாரிசு விவரங்களை முழுமையாக வெளியே சொல்ல முடியாது என்று ஆச்சாரியா மறுத்துவிட்டார். ஆனால், அரசுக்கு அவர் அளித்த சிபாரிசின் சில முக்கிய விவகாரங்கள் வெளியே கசித்துள்ளன. அதுகுறித்து கூறப்படுவதாவது: இந்த வழக்கில், கர்நாடகம் உடனடியாக மேல்முறையீடு செய்ய வேண்டும்.

 

மேல்மட்ட ஊழல் மேல்முறையீடு செய்தால்தான், கர்நாடக அரசு, ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் அரசு என்று மக்களுக்கு தெரியும். அப்படி, மேல்முறையீடு செய்வதை தவிர்த்தால், மேல்மட்டத்தில் உள்ளவர்கள் ஊழல் செய்ய இது தூண்டுகோலாக அமைந்துவிடும்.

 

ஹைகோர்ட் கருத்தில் எடுக்கவில்லை கணிதத்தில் ஏற்பட்ட தவறால், ஜெயலலிதா விடுவிக்கப்பட்டுள்ளார். இதனால், சொத்துக்குவிப்பால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை. கீழ்நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட தீர்ப்பு விவாதத்துக்கு அப்பாற்பட்டது. ஆனால், ஹைகோர்ட்டோ, ஜெயலலிதாவின் பல்வேறு சொத்துக்களை, கருத்தில் எடுக்கவேயில்லை. கட்டுமானம், திருமணச் செலவு மற்றும் ஒரு சில வருவாய் போன்ற அம்சங்களை மட்டுமே கருத்தில் எடுத்து, மேலோட்டமாக தீர்ப்பை கூறிவிட்டது.

 

ஹைகோர்ட் கண்டுகொள்ளவில்லை மேலும், கர்நாடக அரசின் எழுத்துப்பூர்வ வாதத்தை முழுமையாக படித்து பார்த்து தீர்ப்பளிக்குமாறு, உச்சநீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை, உயர்நீதிமன்றம் கருத்தில் கொள்ளவில்லை. இவ்வாறு ஆச்சாரியா தனது சிபாரிசில் கூறியுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

Read more at: http://tamil.oneindia.com/news/india/not-appealing-will-encourage-corruption-at-high-places-acharya-227126.html

  • கருத்துக்கள உறவுகள்
எல்லாம் நல்லாத்தானே போயிட்டுறிந்திச்சு.
 
அப்புறம் என்னாச்சு?
 
அட, 1000 க்கு மேல முஸ்லிம்களைக் கொலைகளுக்கு தார்மீக பொறுப்பு என்று 'பெரிய' குத்தம் சுமத்தப் பட்டு, அமெரிக்க, பிரிட்டிஷ் விசா மறுக்கப் பட்ட நரேந்திர மோடி இன்று பிரதமர். 
 
விசா மறுத்த நாடுகள் வெத்திலை குடுத்து வர வேற்கின்றன. 
 
அவருடன் ஒப்பிடும் போது, அம்மா விஷயம் ஜுஜுபி.
 
கருணாநிதி குடும்ப வழக்கு, அம்மா வழக்கு எல்லாத்துக்கும் ஒரு நாமம் போட்டு, டீலைப் போட்டு, அரசியல் டீலிங் முடிந்து விட்டது. சகலரும் திருப்தி.
 
ஆச்சா, போச்சா என்று நடிப்பவர்கள், கொஞ்ச நாளைக்கு, மக்கள் மறக்கும் வரை நடிக்கலாம்.
 
வாக்களிக்கும் இந்திய மக்களுக்கு திருப்பதி மொட்டை.
 
நாமளும் இந்த திரியை மூடிப் போட்டு நடையை கட்டுவம்.
 
என்ன,  நவீனன் நான் சொல்லுறது?  :D

Edited by Nathamuni

  • தொடங்கியவர்

ஜெ. வழக்கில் மேல்முறையீடு செய்ய 10 பாயிண்டுகள்.. கர்நாடகா பக்கா ரெடி!

 

பெங்களூர்: சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு எதிராக சுப்ரீம்கோர்ட்டில் கர்நாடக அரசு மேல்முறையீடு செய்ய 10 அம்சங்களை இம்மாநில அட்வகேட் ஜெனரல் ரவிவர்ம குமார் பரிந்துரை செய்துள்ளார். சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக ஹைகோர்ட் ஜெயலலிதாவை விடுதலை செய்துள்ளது. இந்த விடுதலைக்கு எதிராக சுப்ரீம்கோர்ட்டில், அப்பீலுக்கு செல்லுமாறு கர்நாடக அட்வகேட் ஜெனரல் ரவிவர்ம குமார், மாநில அரசுக்கு 10 அம்ச சிபாரிசு செய்துள்ளார்.

 

ஆச்சாரியா பச்சைக்கொடி முன்னதாக அரசு சிறப்பு வழக்கறிஞர் ஆச்சாரியாவும், கர்நாடக அரசு மேல்முறையீடு செய்வது அவசியம் என்று கூறியிருந்தார். தீர்ப்பில் கூறப்பட்டுள்ள கணித தவற்றை வைத்தே, தீர்ப்புக்கு இடைக்கால தடை பெற்றுவிடலாம் என்று ஆச்சாரியா கருத்து.

 

விரைந்து அப்பீல் இந்நிலையில், அட்வகேட் ஜெனரல் அளித்த சிபாரிசின் சில அம்சங்கள் மீடியாக்களுக்கு தெரியவந்துள்ளது. அந்த சிபாரிசில், கூடிய விரைவில், சுப்ரீம்கோர்ட்டில் கர்நாடகம் அப்பீல் செய்ய வேண்டும் என்றும், தற்போது கோடைவிடுமுறை பெஞ்ச் செயல்படுவதால் அதன்முன்னிலையில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

 

10 பாயிண்டுகள் ஹைகோர்ட் வழங்கிய தீர்ப்பில் உள்ள கணித தவறை சுட்டிக் காட்டி, அந்த தவறால்தான் ஜெயலலிதா விடுதலை செய்யப்பட்டுள்ளார் என்பதையும் குறிப்பிட்டுள்ள அட்வகேட் ஜெனரல், கணித தவறு உட்பட மொத்தம் 10 அம்சங்களை முன்னிறுத்தி, இந்த வழக்கு மேல்முறையீட்டுக்கு உகந்தது என்று அட்வகேட் ஜெனரல் ரெகமண்ட் செய்துள்ளாராம். மேலும், அப்பீல் செய்தால்தான், கர்நாடக அரசு, ஊழலுக்கு எதிராக வலிமையான நடவடிக்கை எடுத்தது என்ற தோற்றம் மக்களிடம் ஏற்படும் என்றும் அட்வகேட் ஜெனரல் தனது கருத்தை அதில் பதிவு செய்துள்ளாராம்.

 

தடை கேட்க வாய்ப்பில்லை இந்த சிபாரிசுகளை இறுதி செய்து, மேல்முறையீடு தயாரிக்கும் பணியில் கர்நாடக சட்டத்துறை அதிகாரிகள் இறங்கியுள்ளதாக தெரிகிறது. அதேநேரம், அப்பீல் செய்தாலும், கர்நாடக தரப்பில் இருந்து, ஹைகோர்ட் தீர்ப்புக்கு இடைக்கால தடை கேட்கப்படாது என்று தெரிகிறது.

 

Read more at: http://tamil.oneindia.com/news/india/jayalalithaa-appeal-karnataka-ready-with-appeal-227341.html

கர்நாடகாகாரனுக்கு தமிழ்நாட்டு பிரச்சினையிலை என்ன அலுவல்?. தமிழ்நாட்டு மக்களின் காசை அம்மா அடிப்பா விடுவா அதை கேட்க கர்நாடகாகாரன் யார்? மோடி காக்காமாருக்கு நொங்கு எடுத்தது மாதிரி அம்மாவும் தன்ரை தொண்டர் படையை அனுப்பி தமிழ்நாட்டிலை இருக்கிற கர்நாடகாகாரனுக்கு நொங்கு எடுத்தால் அப்பீல் கேசை மூடிட்டு வழிக்கு வருவாங்கள். கர்நாடகாகாரனுக்கு ரொம்பதான் குளிர் விட்டு போச்சு.  :D  :D  :lol:

  • தொடங்கியவர்

ஜெ. அப்பீல்: கர்நாடக அரசுக்கு இருக்கும் கடைசி இரு சந்தேகங்கள்! தயாராகிறது விளக்கம்!!

 

பெங்களூர்: ஜெயலலிதா அப்பீல் வழக்கில் கர்நாடக அமைச்சரவை முடிவெடுக்காமல் இழுத்தடிக்க சட்டத்திலுள்ள இரு சந்தேகங்கள் காரணமாக கூறப்படுகின்றது. அந்த சந்தேகங்களை நிவர்த்தி செய்ய, சட்டத்துறையை அரசு கேட்டுக்கொண்டுள்ளது. இந்த சந்தேகங்களை நிவர்த்தி செய்த பிறகு அடுத்த அமைச்சரவை கூட்டம் நடைபெறும் ஜூன் 1ம் தேதி, ஜெயலலிதா அப்பீல் வழக்கில் ஒரு இறுதிமுடிவு எட்டப்படும் என்று கூறப்படுகிறது. சொத்துக்குவிப்பு வழக்கில் கர்நாடக உயர்நீதிமன்றம் ஜெயலலிதாவை விடுதலை செய்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய அரசு சிறப்பு வழக்கறிஞர் ஆச்சாரியா பரிந்துரை செய்துள்ளார். ஆனால், மேல்முறையீடு செய்ய வேண்டாம் என்று காங்கிரஸ் கட்சியின் கர்நாடக மாநில சட்டப்பிரிவு முதல்வருக்கு கடிதம் எழுதியுள்ளது.

 

முடிவில்லை இதுகுறித்து அமைச்சரவையில் விவாதித்து முடிவெடுக்கப்படும் என்று முதல்வர் சித்தராமையா கூறியிருந்தார். இதையடுத்து நேற்றுமுன்தினம், திங்கள்கிழமை மாலை நடைபெற்ற கர்நாடக அமைச்சரவை கூட்டத்தில், விவாதப் பொருளாக ஜெயலலிதா அப்பீல் பிரச்சினையும் எடுக்கப்பட்டிருந்தது. ஆனால், அதில் எந்த முடிவும் அறிவிக்கப்படவில்லை.

 

சந்தேகம் உள்ளது இதுகுறித்து சட்டத்துறை அமைச்சர் ஜெயச்சந்திராவிடம் கேட்டபோது, "மாநில அட்வகேட் ஜெனரல் ஊரில் இல்லாததால் அமைச்சரவையில் முடிவெடுக்க முடியவில்லை. அவர் வந்த பிறகு சந்தேகங்கள் சிலவற்றை நிவர்த்தி செய்துவிட்டு முடிவெடுக்கப்படும்" என்று கூறினார்.

 

விளக்கம் கேட்ட அரசு இந்த சந்தேகங்கள் என்னவென்பது தற்போது தெரிய ஆரம்பித்துள்ளது. மாநில அரசு, தனது சட்டத்துறை அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டு இரு சந்தேகங்களை அனுப்பி வைத்துள்ளதாம். அந்த இரு சந்தேகங்களையும் நிவர்த்தி செய்தால் வரும் ஜூன் 1ம் தேதி கர்நாடக அமைச்சரவை மீண்டும் கூடுகிறது. அப்போது, ஜெயலலிதா விவகாரம் குறித்து மீண்டும் விவாதிக்கப்படும், இறுதி முடிவும் எடுக்கப்படலாம் என்று தெரிகிறது.

 

முதல் சந்தேகம் சந்தேகம் நம்பர் 1, என்னவென்றால், ஜெயலலிதா தற்போது முதல்வராக பதவியிலுள்ளார். அவருக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் (அல்லது எந்த ஒரு கோர்ட்டிலும்) வழக்கு தொடர முடியுமா என்பது கர்நாடக அரசின் முதல் சந்தேகம். ஏனெனில், முதல்வர் பதவி என்பது அரசியல் சாசனத்தால் வரையறுக்கப்பட்ட பதவி. அந்த பதவியிலுள்ளோருக்கு எதிராக வழக்கு தொடர ஆளுநர் அல்லது உச்சநீதிமன்ற அனுமதி தேவைப்படுமா என்பது கர்நாடக அரசுக்கு உள்ள சந்தேகமாகும்.

 

விளக்கம் ரெடி இதுகுறித்து சட்டத்துறை அதிகாரிகள் கூறுகையில், "முதன்முதலாக முதல்வருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்படும்போதுதான், ஆளுநரின் அனுமதி அவசியமாகும். ஏற்கனவே பதிவான ஒரு வழக்கில் மேல்முறையீடு செய்ய அனுமதி தேவையில்லை" என்று தெரிவித்தனர். இதையே அரசுக்கு சிபாரிசாகவும் அனுப்பி வைக்க உள்ளனர் என்று தெரிகிறது.

 

அரசு வக்கீல் யார்? கர்நாடக அரசின் 2வது சந்தேகம், அரசு சிறப்பு வழக்கறிஞர் பற்றியது. கர்நாடகாவுக்கு வழக்கு மாற்றப்பட்டபோது, சுப்ரீம்கோர்ட் வழிகாட்டுதல்படிதான், இவ்வழக்கின் அரசு சிறப்பு வக்கீலாக பி.வி.ஆச்சாரியா நியமிக்கப்பட்டார். எனவே, சுப்ரீம்கோர்ட் தலைமை நீதிபதி அறிவுரைப்படிதான், உச்சநீதிமன்றத்தில் கர்நாடகா, மனு தாக்கல் செய்யும்போது அரசு வக்கீலை நியமிக்க வேண்டுமா, அல்லது ஆச்சாரியாவே தொடரலாமா என்பது அந்த சந்தேகம்.

 

கர்நாடகாவுக்கு அதிகாரம் இதுகுறித்து சட்டத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, "வழக்கை நடத்தும் உரிமையுள்ள கர்நாடகாவுக்கு, அரசு வக்கீலை நியமிக்கும் உரிமை உள்ளது. பவானிசிங்கிற்கு பதிலாக, ஹைகோர்ட்டில் ஆச்சாரியாவை மீண்டும் அரசு வக்கீலாக நியமிக்கும்போது, கர்நாடக அரசே தன்னிச்சையாகத்தான் முடிவெடுத்தது. எனவே அதிகாரம் கர்நாடகாவிடம் உள்ளது" என்று தெரிவித்தனர். இதையே அரசுக்கு சிபாரிசாகவும் அனுப்ப உள்ளதாக தெரிகிறது.

 

மேல்முறையீடு நிச்சயம் இந்த வழக்கில் மேல்முறையீடு செய்யாமலே இருந்துவிடுவது ஒரு திட்டமாக அரசிடம் இல்லை என்று சட்டத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஹைகோர்ட் தீர்ப்பில் பல்வேறு குறைபாடுகள் சுட்டிக் காட்டப்பட்டுள்ள நிலையில், அதை நிவர்த்தி செய்ய மேல்முறையீடு செய்வதை தவிர கர்நாடகாவுக்கு வேறு வழியில்லை என்று அவர்கள் கூறுகின்றனர்.

 

Read more at: http://tamil.oneindia.com/news/india/jayalalithaa-verdict-appeal-karnataka-seeks-fresh-clarifications-227543.html

  • தொடங்கியவர்

ஜெ. வழக்கில் மேல்முறையீடு செய்ய கர்நாடக அரசிடம் ஆச்சாரியா அடுக்கிய காரணங்கள்!

 

பெங்களூர்: சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா விடுதலையாகி, முதல்வராக பதவியேற்றுள்ள நிலையில், அந்த வழக்கில் மேல்முறையீடு நடக்குமா, நடக்காதா என்பதில் இன்னும் இழுபறி நீடித்து வருகிறது. இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும், அரசு சிறப்பு வழக்கறிஞர் ஆச்சாரியாவோ, ஆணித்தரமாகவே தந்து கருத்தை கர்நாடக அரசுக்கு அளித்த சிபாரிசில் கூறியுள்ளார். இந்த வழக்கு மேல்முறையீட்டுக்கு முற்றிலும் உரியது என்று ஆச்சாரியா கூறியுள்ளார்.

 

அவகாசம் இல்லை ஆச்சாரியாவின் கடிதத்தில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்: மேல்முறையீட்டு விசாரணையில் கர்நாடக அரசு நியமித்த அரசு வழக்கறிஞரான எனக்கு இந்த வழக்கில் என்னுடைய வாதத்தை எடுத்துவைக்க போதிய அவகாசம் வழங்கப்படவில்லை. பல ஆண்டுகளாக இழுத்தடிக்கப்பட்ட வழக்கில் என்னுடைய வாதத்தை வெறும் 18 பக்கங்களில் தெரிவிப்பது என்பது சாத்தியமில்லாதது. ஆனால், எனக்கு அப்படிப்பட்ட சாத்தியமில்லாத வாய்ப்பு ஒன்றே வழங்கப்பட்டது.

 

ஹைகோர்ட் பரிசீலிக்கவில்லை ஆனால், அந்த உத்தரவை வழங்கிய உச்ச நீதிமன்றம் கர்நாடக மாநில உயர் நீதிமன்ற நீதிபதிக்கு, நான் தரும் வாதங்களை மிகக் கவனமாக பரிசீலிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி இருந்தது. ஆனால், உயர் நீதிமன்ற நீதிபதி அப்படி பரிசீலிக்கவில்லை என்பது அவர் வழங்கிய தீர்ப்பில் இருந்து தெரிகிறது.

 

வரலாறு நீதிபதி வழங்கிய தீர்ப்பில், 737 பக்கங்களுக்கு மேல் வெறும் சாட்சிகளின் வாக்குமூலங்கள் மற்றும் வழக்கின் பழைய வரலாறுகள்தான் இடம் பெற்றுள்ளன. அதில், 738ம் பக்கத்துக்கு மேல், மேல்முறையீடு செய்தவர்களுக்குச் சாதகமான பல வழக்குகள் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன. மற்றபடி அந்தத் தீர்ப்பில், எந்தவிதமான ஆய்வும் இல்லை. ஆனால், மாறாக குற்றவாளிகளுக்குச் சாதகமாகக் கணக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன.

 

கணக்கு காட்டப்பட்டுள்ளது 10 சதவிகிதம் வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்க்கலாம் என்று வெளியான தீர்ப்பையும், ஆந்திர அரசாங்கம் 20 சதவிகிதம் வரை வருமானத்துக்கு அதிகமான சொத்து ஒரு அரசாங்க ஊழியரிடம் இருக்கலாம் என்று சொல்லியிருப்பதையும் மட்டும் எடுத்துக்கொண்டு அதற்கேற்றவாறு குற்றவாளிகளின் சொத்துகளை கணக்கு காட்டும் வகையில் கணக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன. அதனால்தான் அந்தத் தீர்ப்பில் மிகப் பெரிய கணக்குப் பிழை நேர்ந்தது.

 

உருவாக்கப்பட்ட கணக்கு சிறப்பு நீதிமன்றம் இந்தக் கணக்கீட்டை செய்தபோது, நியாயமான காரணங்கள், போதிய ஆதாரங்கள் என்று அனைத்தையும் கணக்கில் கொண்டது. ஆனால், உயர் நீதிமன்றம் அப்படிச் செய்யாமல், தன்னுடைய முடிவுக்கு ஏற்ப கணக்கீட்டை உருவாக்கி உள்ளது. உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு முக்கிய அடிப்படையான விஷயங்களாகக் கட்டிட மதிப்பீட்டையும், திருமணச் செலவுகளையும் அதிகம் ஆராய்ந்துள்ளது. மற்றபடி தங்க வைர நகைகள், திராட்சைத் தோட்டம் போன்றவை பற்றி பெரிதாக கவனம் எடுத்துக் கொள்ளவில்லை.

 

கட்டிட மதிப்பு குறைந்தது கட்டிட மதிப்பில் அரசுத் தரப்பு சொன்னது ரூ.28 கோடி. ஆனால், பொறியாளர்களின் மதிப்பீட்டை ஒட்டு மொத்தமாகப் புறக்கணித்துவிட்டு வெறும் 5 கோடி ரூபாய் என்று எடுத்துக் கொண்டுள்ளார். எந்த அடிப்படையில் இவர் 5 கோடி ரூபாய் என்று எடுத்துக் கொண்டார் என்பதற்கு தீர்ப்பில் உரிய விளக்கம் இல்லை.

 

திருமண செலவுக்கு ஆதாரம்.. திருமணத்துக்கு ஆன செலவு என்று அரசுத் தரப்பு குற்றம்சாட்டியது ரூ.6 கோடி. ஆனால், அரசுத் தரப்பிடம் இருந்த ஆவணங்களின் அடிப்படையில் அந்த திருமணத்துக்கு ஆன செலவு என்று சிறப்பு நீதிமன்றம் மூன்று கோடி ரூபாயைக் கணக்கிட்டது. அந்த மூன்று கோடி ரூபாய் சாட்சிகள் மற்றும் ஆவணங்களின் அடிப்படையில் செய்யப்பட்ட கணக்கீடு. ஆனால், உயர் நீதிமன்ற நீதிபதி அதற்கு ஜெயலலிதா செய்த செலவு என்று வெறும் 28 லட்ச ரூபாயைக் கணக்கிட்டுள்ளார். இதை எந்த ஆவணங்களின் அடிப்படையில் அவர் ஏற்றுக்கொண்டார்? அதில் செய்யப்பட்ட மற்ற செலவுகளுக்கு யார் பொறுப்பு? அதை மற்றவர்கள் செய்தார்கள் என்பதற்கு என்ன ஆதாரங்களை அவர் பார்வையிட்டார் என்பதை தீர்ப்பில் கூறவில்லை.

 

கணக்கிலேயே தவறு தேசிய வங்கிகளில் வாங்கப்பட்ட கடன் தொகையை வருமானமாகக் கணக்கில் எடுத்துக்கொண்டு அதைக் கணக்கிடும்போது மிகப் பெரிய தவறு நிகழ்ந்துள்ளது. அந்தத் தொகையை கணக்கிட்டு உயர் நீதிமன்ற நீதிபதி, ரூ.24,17,31,274 என்று காட்டி உள்ளார். இதில் பெரிய தவறு நடந்துள்ளது. உயர் நீதிமன்ற நீதிபதி குறிப்பிட்டுள்ள தொகைகளை கூட்டினால் வெறும் 10,67,31,274 ரூபாய்தான் வருகிறது. இந்தச் சரியான தொகையை கணக்கில் எடுத்துக் கொண்டு ஜெயலலிதாவின் வருமானத்துக்கு அதிகமான சொத்து மதிப்பைக் கணக்கிட்டால் 76 சதவிகிதம் அதிகமாக வருகிறது. உயர் நீதிமன்ற நீதிபதி சொல்லும் 8 சதவிகிதம் என்பது வலுவிழந்து விடுகிறது.

 

ஊழலை ஊக்குவிக்கும் எனவே அந்த கணக்கு அடிப்படையில் நான்கு பேரையும் விடுதலை செய்ததும் நடைமுறை சாத்தியமில்லாததாகிவிடுகிறது. எனவே, இந்த வழக்கில் உறுதியாக மேல்முறையீடு செய்ய வேண்டும். அப்படிச் செய்யவில்லை என்றால், உயர்ந்த இடத்தில் நடைபெறும் ஊழலை அரசாங்கம் ஊக்குவிப்பதுபோல் அர்த்தமாகும்.

 

சொத்துக்களையும் பாதிக்கிறது மேலும், ஊழலுக்கு எதிராக மாநில அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் யாருக்கும் ஒருதுளிகூட நம்பிக்கை ஏற்படாது. ஏனென்றால், இதில் மேல்முறையீடு செய்யவில்லை என்றால், நாம் ஊழலைச் சகித்துக்கொள்கிறோம் என்று அர்த்தமாகிவிடும். இந்த வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றம் வழங்கி உள்ள தீர்ப்பு, ஊழல் செய்த குற்றவாளிகளை மட்டும் காப்பாற்றவில்லை. மாறாக அவர்கள் ஊழல் செய்து சம்பாதித்த சொத்துகளையும் சேர்த்துக் காப்பாற்றுவதுபோல் இருக்கிறது. எனவே, இதில் கண்டிப்பாக மேல்முறையீடு செய்ய வேண்டும். இவ்வாறு ஆச்சாரியா தனது சிபாரிசில் கூறியுள்ளார்.

 

 

Read more at: http://tamil.oneindia.com/news/india/jaya-case-b-v-acharya-recommends-filing-appeal-letter-details-reavels-227636.html

  • தொடங்கியவர்

ஜெயலலிதா வழக்கில் கர்நாடகா உடனடியாக மேல்முறையீடு செய்ய வேண்டும்: அட்வகேட் ஜெனரல் அறிவுரை
 

 

சொத்துக் குவிப்பு வழக்கில் கர்நாடக அரசு, உச்ச நீதிமன்றத்தில் உடனடியாக மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று அம்மாநில அட்வகேட் ஜெனரல் (அரசு தலைமை வழக்கறிஞர்) ரவிவர்ம குமார் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

 

மேலும், அவ்வாறு உடனடியாக மேல்முறையீடு செய்யாமல் இழுத்தடித்தால் அது நீதியை கேலிக்கூத்தாக்கும் செயலாகிவிடும் என அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

மேல்முறையீடு தொடர்பாக அட்வகேட் ஜெனரல் ரவிவர்ம குமாரிடம் கர்நாடக சட்டத்துறை இரண்டு விளக்கங்கள் கோரியிருந்தது.

 

அதாவது, ஜெயலலிதா தற்போது தமிழக முதல்வராக இருப்பதால், வழக்கில் மேல்முறையீடு செய்வதற்கு ஆளுநரிடம் முன் அனுமதி பெறுவது அவசியமா?, மேல்முறையீட்டு வழக்கில் அரசு வழக்கறிஞரை நியமிக்க கர்நாடக உயர் நீதிமன்றத்தின் ஒப்புதல் தேவையா? ஆகிய இரு விஷயங்கள் குறித்து விளக்கம் தருமாறு கோரியிருந்தது.

இதற்கு விளக்கம் அளித்துள்ள ரவிவர்ம குமார், "ஜெயலலிதா வழக்கில் மேல்முறையீடு செய்ய அரசியல் சாசனத்தின்படி கர்நாடக அரசு உரிமை கொண்டிருக்கிறது. எனவே, முன் அனுமதி ஏதும் தேவையில்லை.

 

ஜெ. வழக்கில் கர்நாடக அரசு மேல்முறையீடு செய்யாவிட்டால் நீதி கேலிக் கூத்தாக்கப்பட்டு விடும் என்று தெரிவித்துள்ளார்.

 

மேலும், இந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் வாதாட சிறப்பு வழக்கறிஞரை நியமிக்கவும் கர்நாடக அரசுக்கு முழு அதிகாரம் இருக்கிறது. அந்த வகையில், பி.வி.ஆச்சார்யாவை சிறப்பு வழக்கறிஞராக நியமிக்க நான் பரிந்துரைக்கிறேன்.

 

ஜெயலலிதா வழக்கில் மேல்முறையீடு செய்ய முழு தகுதி கொண்டிருந்தும் மேல்முறையீடு செய்யாமல் இருப்பது கர்நாடக உயர் நீதிமன்றத்தின் மீது உச்ச நீதிமன்றம் கொண்டுள்ள நம்பிக்கைக்கு எதிரானதாகும்" எனக் கூறியுள்ளார்.

 

சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய 4 பேரும் கடந்த 11-ம் தேதியன்று (மே-11) விடுவிக்கப்பட்டனர். இந்த வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்ற சிறப்பு அமர்வு நீதிபதி சி.ஆர்.குமாரசாமி வழங்கிய தீர்ப்பில் வெளிப்படையான கணிதப் பிழைகள் இருப்பதாக பல்வேறு தரப்பிலும் சுட்டிக்காட்டப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கில் கர்நாடக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என அரசு சிறப்பு வழக்கறிஞர் பி.வி.ஆச்சார்யா, அட்வகேட் ஜெனரல் ரவிவர்ம குமார் ஆகியோர் பரிந்துரைத்தனர்.

 

அதேவேளையில், ஜெ. வழக்கில் மேல்முறையீடு செய்வதில் அரசு அவசரம் காட்டக்கூடாது என கர்நாடக காங்கிரஸ் கமிட்டியின் சட்டப்பிரிவு வலியுறுத்திவந்தது.

 

http://tamil.thehindu.com/india/%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%89%E0%AE%9F%E0%AE%A9%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%A9%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88/article7264098.ece

 

  • தொடங்கியவர்

சொத்துக் குவிப்பு வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய கர்நாடக அமைச்சரவை முடிவு
 

 

ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றம் சிறப்பு அமர்வு வழங்கிய தீர்ப்புக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வது என கர்நாடக அரசு முடிவு செய்துள்ளது.

 

அமைச்சரவைக் கூட்டம்:

இன்று காலை 11 மணியளவில் முதல்வர் சித்தராமையா தலைமையில் கர்நாடக அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக விவாதிக்கப்பட்டது. இதில், 7-வது விவகாரமாக ஜெயலலிதா வழக்கில் மேல்முறையீடு செய்வது தொடர்பாக விவாதிக்கப்பட்டது.

அரசு தலைமை வழக்கறிஞர் ரவிவர்மா குமார், சட்டத் துறை செயலர் தங்கப்பா ஆகியோர் அளித்த அறிக்கை மீது விவாதம் நடத்தப்பட்டது.

அப்போது ஒரு சில அமைச்சர்கள் மேல்முறையீடு தேவையில்லை என்றனர். ஆனால், பெரும்பான்மையான அமைச்சர்கள் ஜெயலலிதா வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வேண்டும் என்றனர். இதனையடுத்து மேல்முறையீடு செய்வதென முடிவு எட்டப்பட்டது.

இந்த முடிவை கர்நாடக சட்ட அமைச்சர் டி.பி.ஜெயச்சந்திரா செய்தியாளர்களிடம் உறுதி செய்தார்.

 

சிறப்பு வழக்கறிஞராக ஆச்சார்யா நியமனம்:

மேல்முறையீட்டு வழக்கில் கர்நாடக அரசின் சிறப்பு வழக்கறிஞராக பி.வி.ஆச்சார்யாவை நியமித்து கர்நாடக அமைச்சரவை முடிவு எடுத்துள்ளது. அவருக்கு உதவியாளராக சந்தேஷ் சவுட்டா நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அதிகாரபூர்வ அரசாணை இன்று மாலை வெளியாகும் என  எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

சர்ச்சைக்குள்ளான தீர்ப்பு:

சொத்துக் குவிப்பு வழக்கில் கடந்த 11-ம் தேதி கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. 19 ஆண்டுகளாக நடைபெற்ற சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்ட 4 பேரையும் விடுவித்து நீதிபதி குமாரசாமி உத்தரவிட்டார்.

இந்நிலையில், கர்நாடக உயர் நீதிமன்ற தீர்ப்பில் அடிப்படையான கணிதப் பிழைகள் இருப்பதாக பல்வேறு தரப்பில் இருந்தும் புகார் எழுந்தது. மேலும், தீர்ப்பில் பிழை இருப்பதால் கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் உடனே மேல்முறையீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

கர்நாடக அரசு தலைமை வழக்கறிஞர் ரவிவர்ம குமார், சொத்துக் குவிப்பு வழக்கின் அரசு சிறப்பு வழக்கறிஞர் பி.வி. ஆச்சார்யா ஆகியோர் இந்த வழக்கு மேல்முறையீட்டுக்கு முழு தகுதி படைத்தது என அரசுக்கு பரிந்துரைத்தனர்.

 

இந்நிலையில், தற்போது ஜெயலலிதா தமிழக முதல்வராக இருப்பதால் வழக்கில் மேல்முறையீடு செய்வதற்கு ஆளுநரிடம் அனுமதி பெற வேண்டுமா? மேல்முறையீட்டு வழக்கில் அரசு வழக்கறிஞரை நியமிக்க கர்நாடக உயர் நீதிமன்றத்தின் ஒப்புதல் தேவையா ஆகியவை குறித்து விளக்கம் அளிக்குமாறு தலைமை வழக்கறிஞர் ரவிவர்ம குமாரிடம் கர்நாடக அரசு கோரியது.

 

இதுகுறித்து அவர் அரசிடம் அளித்த பதிலில், "சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் கர்நாடக உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பு இறுதியானது அல்ல. இந்த தீர்ப்பில் பல அடிப்படை கூட்டுத்தொகை பிழைகளும் சட்டரீதியான தவறுகளும் உள்ளன. குற்றவியல் வழக்குகளில் சட்ட ரீதியான முடிவை எட்டும்வரை மேல்முறையீடு செய்யலாம்.

நீதி நிலைநாட்ட வேண்டும் என்பதற்காகவே கடந்த 2003-ம் ஆண்டு சொத்துக்குவிப்பு வழக்கு சென்னையில் இருந்து பெங்களூருவுக்கு மாற்றப்பட்டது. கர்நாடக நீதித்துறை, அரசு மற்றும் அரசு வழக்கறிஞர் மீதுள்ள நம்பிக்கையின் அடிப்படையிலே உச்ச‌ நீதிமன்றம் இந்த முடிவை எடுத்தது. எனவே நீதியை நிலைநாட்டும் விதமாக ஜெயலலிதா விடுதலையை எதிர்த்து மேல்முறையீடு செய்வது கர்நாடக அரசின் கடமையாகிறது" எனத் தெரிவித்தார்.

மேலும், இவ்வழக்கில் உச்ச நீதிமன்றத்திற்கு நம்பிக்கை துரோகம் செய்யாமல் உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு காலதாமதம் செய்யாமல் மேல்முறையீடு செய்ய வேண்டும் என வலியுறுத்தியிருந்தார்.

 

http://tamil.thehindu.com/india/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%89%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AF%E0%AF%80%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%95-%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81/article7270819.ece?homepage=true

 

  • கருத்துக்கள உறவுகள்
இது அராபிய, 1001 இரவுகள் கதை போலத்தான் போகின்றது.
 
கர்நாடகாவுக்கும், தமிழ் நாடுக்கும் இடையே இருக்கும் தண்ணீர் பிரச்சனை போதாது எண்டு, ஜெயலலிதாவினை உள்ள போட்டு, மேலும் பிரச்சனை வளர்க்காமல், அம்மாவை விடுதலை செய்து, பின்னர் அப்பீல் செய்து, உச்ச நீதிமன்றின் தலையில் பிரச்சனையை கட்டி விடும் வகையான அரசியல் தீர்ப்பே குமாரசமியார் வழங்கினார். :icon_idea:
 
எனினும் உச்ச நீதிமன்றின் அப்பீல் விசாரணை வருடக் கணக்கில் போகலாம். அதற்குள் அம்மா இன்னுமோர் தேர்தல் வென்று ஆட்சி செய்து முடித்திருப்பார்.  :rolleyes:
 
அரசியலில இது எல்லாம் சகயமப்பா !!!  :D
 
வழக்கு இழுக்கலாம்
 
சுப்ரீம்கோர்ட்டில் மேல்முறையீடு செய்த பிறகு, அந்த வழக்கு விசாரணை எப்போது முடியும் என்பதை கணிக்க முடியாது. ஹைகோர்ட் இவ்வழக்கை 3 மாதங்களில் நடத்தி முடிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தத்து முன்பு உத்தரவிட்டதை போல இம்முறை உத்தரவிடுவாரா என்பது கேள்விக்குறி. மேல்முறையீடு வழக்குகள் பல, நீண்ட பல ஆண்டுகளாக நிலுவையிலுள்ள வரலாறு உச்சநீதிமன்றத்துக்கு உள்ளது. இதனால், ஜெயலலிதா தரப்புக்கு உடனடியாக எந்த பாதிப்பையும், அல்லது தாக்கத்தையும் இந்த மேல்முறையீடு செய்யாது.

tamil.oneindia.com

Edited by Nathamuni

  • தொடங்கியவர்

பெங்களூரிலிருந்து டெல்லிக்கு ஷிப்ட்.. ஜெ. சொத்துக்குவிப்பு வழக்கு கடந்து வந்த பாதை!

 

பெங்களூர்: சொத்துக்குவிப்பு வழக்கில் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை விடுவித்து கர்நாடக ஹைகோர்ட் தீர்ப்பளித்த நிலையில், அதை எதிர்த்து, கர்நாடகா சுப்ரீம்கோர்ட்டில் அப்பீலுக்கு செல்கிறது. இதற்கு நடுவே எத்தனையோ அதிரடி திருப்பங்கள், மாற்றங்கள் இந்த வழக்கில் நடந்து முடிந்துவிட்டன.

 

அதுகுறித்த ஒரு மீள் பார்வை: 

1991 முதல் 1996வரை தமிழக முதல்வராக பதவி வகித்த ஜெயலலிதா வருவாய்க்கு அதிகமாக ரூ.66.65 கோடி மதிப்புக்கு சொத்து சேர்த்ததாக அப்போதைய ஜனதா கட்சியின் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வழக்கு தொடர்ந்தார். 1996ம் ஆண்டு டிசம்பர் 7ம்தேதி, இவ்வழக்கு தொடர்பாக ஜெயலலிதா கைது செய்யப்பட்டார். 1997ம் ஆண்டு ஜூன் 4ம்தேதி, ஜெயலலிதாவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 1997ம் ஆண்டு அக்டோபர் 1ம்தேதி, தன்மீது வழக்கு தொடர அனுமதி கொடுத்த அப்போதைய ஆளுநர் பாத்திமா பீவியின் நடவடிக்கையை ரத்து செய்ய கோரி ஜெயலலிதா தாக்கல் செய்த மனு உட்பட மொத்தம், 3 மனுக்களை மெட்ராஸ் ஹைகோர்ட் தள்ளுபடி செய்தது. 2000-மாவது ஆண்டு, ஆகஸ்ட்டில், சொத்துக்குவிப்பு வழக்கில், விசாரணை ஆரம்பிக்கப்பட்டது. இந்நிலையில் 2001 பொதுத் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றது. அதில் ஜெயலலிதா முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

 

அன்பழகன் தலையீடு இதையடுத்து, திமுக பொருளாளர் க.அன்பழகன் உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்து, தமிழகத்தில் வழக்கு நடந்தால் நியாயம் கிடைக்காது என்பதால் வேறு மாநிலத்துக்கு வழக்கை மாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

 

கர்நாடக மாற்றம் இதைத் தொடர்ந்து 2003 நவம்பர் 18ம்தேதி, பெங்களூருவுக்கு வழக்கை மாற்றி உத்தரவிட்டது உச்சநீதிமன்றம். அங்கு சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து வந்தது. கர்நாடக அரசு வழக்கை நடத்தியது.

 

ஆச்சாரியா 2005ம் ஆண்டு பிப்ரவரி 19ம்தேதி, கர்நாடக தரப்பு அரசு வக்கீலாக பி.வி.ஆச்சாரியா நியமிக்கப்பட்டார். அவர் தொடர்ந்து வாதங்களை முன்னெடுத்து வைத்து, ஜெயலலிதா தரப்புக்கு மிகவும் நெருக்கடி கொடுத்தார்.

 

ராஜினாமா இந்நிலையில், 2012 ஆகஸ்ட் 12ம்தேதி, ஆச்சாரியா, அரசு வழக்கறிஞர் பதவியில் இருந்து ராஜினாமா செய்தார். 2013 ஜனவரி மாதத்தில், இந்த ராஜினாமாவை அப்போதைய கர்நாடக பாஜக அரசு ஏற்றுக்கொண்டது.

 

பவானிசிங் இதையடுத்து 2013 பிப்ரவரி 2ம்தேதி, கர்நாடக அரசு வக்கீலாக பவானிசிங் நியமிக்கப்பட்டார். ஆனால் அவர் தொடர்ந்து, குற்றவாளிகள் தரப்புக்கு ஆதரவாக செயல்பட்டதாக குற்றச்சாட்டுக்கு உள்ளானார். நீதிமன்றமும் அவரை கண்டித்தது.

 

ரத்து செய்த காங்கிரஸ் அரசு இதையடுத்து 2013 ஆகஸ்ட் 26ல், கர்நாடக காங்கிரஸ் அரசு ஒரு அறிவிக்கை மூலம், பவானிசிங் நியமனத்தை ரத்து செய்தது. ஆனால், அதே ஆண்டு செப்டம்பர் 30ம்தேதி, பவானிசிங் நியமனத்தை ரத்து செய்த கர்நாடக அரசு ஆணையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.

 

நீதிமன்றத்தில் குட்டு இதன்பிறகும், பவானிசிங் மற்றும் சிறப்பு நீதிமன்ற மோதல்கள் நின்றபாடில்லை. ஜெயலலிதா உள்ளிட்டோரிடம் பறிமுதல் செய்யப்பட்ட வெள்ளி பொருட்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க அனுமதி கேட்டார் பவானிசிங். இதை கண்டித்த சிறப்பு நீதிமன்றம். 2014 பிப்ரவரி 28ம்தேதி, கூறுகையில், பவானிசிங் வேண்டுமென்றே வழக்கை தாமதிக்க முயலுவதாக குற்றம்சாட்டியது.

 

சம்பளம் பிடித்தம் இதைவிட ஒருபடி மேலேபோய், எனக்கு உடல் நலம் சரியில்லை என்று காணம் கூறிவிட்டு கோர்ட்டுக்கு வராமல் இருந்தார் பவானிசிங். இதற்காக, பவானிசிங்கின் ஒரு நாள் சம்பளத்தையும் பிடித்தம் செய்ய சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.

 

ஜெயலலிதா குற்றவாளி இதைத்தொடர்ந்து மார்ச் 18ம் தேதி பவானிசிங் ஹைகோர்ட்டில் மனு தாக்கல் செய்து, தன்னிடம் சம்பளம் பிடித்தம் செய்தது தவறு என்று கூறினார். ஆனால், இதை நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது. ஒருவழியாக வாதம் முடிந்து செப்டம்பர் 27ம்தேதி, ஜெயலலிதா உள்ளிட்ட நால்வரும் குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டது.

 

மீண்டும் குட்டு இந்நிலையில், உச்சநீதிமன்றம் வெளியிட்ட உத்தரவில், பவானிசிங் உயர்நீதிமன்ற அப்பீல் வழக்கிலும் ஆஜரானது தவறு என்று கூறியது. இத்தனை குட்டுகளை வாங்கிய பவானிசிங்கிற்கு மாற்றாகத்தான், வழக்கை ஆரம்பத்தில் இருந்து கவனித்த ஆச்சாரியா மீண்டும் களமிறங்கியுள்ளார். ஏப்ரல் 28ல் ஆச்சாரியாவை அரசு வக்கீலாக மீண்டும் நியமித்தது கர்நாடக அரசு.

 

தீர்ப்பு ஜெயலலிதா தனது தண்டனையை எதிர்த்து தாக்கல் செய்த அப்பீல் மனு மீது மே 11ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்று, மே 8ம் தேதி, கர்நாடக ஹைகோர்ட் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இதையடுத்து 11ம் தேதி தீர்ப்பை நீதிபதி குமாரசாமி வழங்கினார். அப்போது வருவாய்க்கு அதிகமாக ஜெயலலிதா சேர்த்த சொத்து மதிப்பு 10 சதவீதத்துக்குள் இருப்பதாகவும், எனவே, அவர் விடுதலை செய்யப்படலாம் என்று தீர்ப்பளித்து விடுதலை செய்தார்.

 

அப்பீல் ஹைகோர்ட் தீர்ப்பை தொடர்ந்து ஜெயலலிதா மே 23ம் தேதி மீண்டும் முதல்வராக பதவிக்கு வந்தார். இது தமிழக முதல்வராக அவரின் 5வது பதவியேற்பாகும். 28 அமைச்சர்களும் அன்று பதவியேற்றனர். இந்நிலையில், ஜூன் 1ம் தேதி, திங்கள்கிழமையான இன்று கர்நாடக அமைச்சரவையில், ஜெயலலிதா வழக்கில் சுப்ரீம்கோர்ட்டில் அப்பீல் செய்யலாம் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.வெளியாகிறது.

 

Read more at: http://tamil.oneindia.com/news/india/karnataka-move-sc-against-jayalalithas-acquittal-227873.html

Edited by நவீனன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.