Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழாராய்ச்சி மாநாட்டின் 41ஆவது நினைவு தினம் அனுஷ்டிப்பு

Featured Replies

taa.jpg

 

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற நான்காவது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் படுகொலைசெய்யப்பட்டவர்களின் 41ஆவது ஆண்டு நினைவுதினம், சனிக்கிழமை அனுஷ்டிக்கப்பட்டது. யாழ். வீரசிங்கம் மண்டபத்தின் முன்னுள்ள முற்றவெளியில் அமைந்துள்ள நினைவுத் தூபிக்கு மலர்மாலை அணிவித்து, மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.  இந்த நிகழ்வில் தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா, நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன், வடமாகாண சபை அவைத்தலைவர் சி.வி.கேசிவஞானம்,  மற்றும் வடமாகாண சபையின் உறுப்பினர்கள், கட்சி உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.

 

 http://www.tamilmirror.lk/137420#sthash.OotoVFxG.dpuf

  • கருத்துக்கள உறவுகள்
இவர்களுக்கு யாழ்தேவி காங்கேசன்துறைக்கு கோண்டாவில் ஊடாக வந்த விடயம் தெரியாதா?
 
யாழ்தேவியே வந்திட்டுது ......
  • கருத்துக்கள உறவுகள்

தமிழாராய்ச்சி மாநாடு கட்சிகளின் மாநாடா...?  பொதுமக்களைக் காணவில்லையே...??  மைத்திரிக்கு வாக்களிக்கும்படி மக்களை வேண்டி அவரை சனாதிபதியாகவும் கொண்டுவந்துவிட்ட கட்சிகளின் பிரமுகர்கள்,.... தமிழர்கள் பிரச்சனையைத் தீர்த்து வைப்போம், 42வது மகாநாட்டை இங்கு நடத்துவோம். என்று நினைவுத் தூபிக்கு முன்பாக உறுதிகள் எதனையாவது எடுத்தனரா....????  

  • கருத்துக்கள உறவுகள்

உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் உயிர் நீத்தவர்களின் 41வது சிரார்த்த தினம்-

 
 

 

 

1974ம் ஆண்டு தைமாதம் 10ம் திகதி யாழ்.முற்றவெளி பகுதியில் அமைந்துள்ள வீரசிங்கம் மண்டபத்திற்கு முன்பாக நடைபெற்றுக் கொண்டிருந்த 04வது உலக தமிழாராய்ச்சி மாநாட்டின் இறுதி நாளன்று ஒன்பது தமிழ்மக்கள் படுகொலை செய்யப்பட்ட 41வது சிரார்த்ததினம் இன்றாகும்.

41வது சிரார்த்த தினமான இன்றும் இத்துயர சம்பவம் நினைவு கூரப்பட்டுள்ளது. யாழ் முற்றவெளியில் அமைந்துள்ள நினைவுத்தூபியில் இன்றுகாலை மலராஞ்சலி செலுத்தப்பட்டு மௌனஅஞ்சலியும் இடம்பெற்றது.

அஞ்சலி நிகழ்வில் எழுத்தாளரும், பதிப்பாளரும், கல்விமானுமாகிய மறவன்புலவு க.சச்சிதானந்தம் ஐயா அவர்களும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாவை சேனாதிராசா, சுரேஸ் பிரேமச்சந்திரன், வடமாகாண சபை உறுப்பினர்கள் தர்மலிங்கம் சித்தார்த்தன், கனகலிங்கம் சிவாஜிலிங்கம், அனந்தி சசிதரன், பா.கஜதீபன், கனகரட்ணம் விந்தன், பரஞ்சோதி மற்றும் வலி வடக்கு பிரதேசசபைத் தலைவர் சுகிர்தன், வலிவடக்கு உப தவிசாளர் சஜீவன், நல்லூர் பிரதேசசபைத் தலைவர் வசந்தகுமார், உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டிருந்தார்கள்.

இதனைத் தொடர்ந்து நினைவுக்கூட்டம் இடம்பெற்றது. இதில் மறவன்புலவு க.சச்சிதானந்தம் ஐயா, மாவை சேனாதிராஜா, தர்மலிங்கம் சித்தார்த்தன், சுரேஸ் பிரேமச்சந்திரன், எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோர் உரையாற்றினார்கள்.

இங்கு உரையாற்றிய மறவன்புலவு சச்சிதானந்தம் ஐயா அவர்கள், தமிழராய்ச்சி மாநாட்டின்போது நடைபெற்ற சம்பவங்களை மிகத் தெளிவாகவும், ஆதாரங்களுடனும் அங்கு திரண்டிருந்த மக்களுக்கு விளக்கிக் கூறினார். மேலும் இந்த நினைவுத் தூபியினை அமைப்பதற்கு எடுத்த பல்வேறு முயற்சிகள் பற்றியும், அது பல தடவைகள் அரச படைகளினால் உடைக்கப்பட்டது தொடர்பாகவும் அவர் தெளிவுபடுத்தினார். 1974ஆம் ஆண்டு இடம்பெற்ற மேற்படி படுகொலைச் சம்பவத்தின்போது வேலுப்பிள்ளை கேசவராஜன் (வயது 15), பரஞ்சோதி சரவணபவன் (வயது 26), வைத்தியநாதன் யோகநாதன் (வயது 32), யோன்பிடலிஸ் சிக்மறிங்கம் (வயது 52), குலேந்திரன் அருளப்பு (வயது 53), இராசதுரை சிவாநந்தம் (வயது 21), இராஜன் தேவரட்ணம் (வயது 26), சின்னத்துரை பொன்னுத்துரை (வயது 56), சின்னத்தம்பி நந்தகுமார் (வயது 14) ஆகியோர் உயிர் நீத்தவர்களாவர்.

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/115403/language/ta-IN/---41--.aspx

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.