Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

அக்கராயன் ஆற்றில் மண் கொள்ளை

Featured Replies

IMG_0091(4).JPG

 

கிளிநொச்சி மாவட்டத்தின் அக்கராயன் ஆற்றுப்பகுதியில் மேற்கொள்ளப்படும் சட்டவிரோதமான மண் அகழ்வால் பாரிய சூழலியல் பாதிப்புக்கள் ஏற்பட்டு வருவதாக பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். அக்கராயன் ஆறு 7 கிலோமீற்றர் தூரத்தைக் கடந்து குடமுருட்டி ஆற்றுடன் இணைகின்றது.

 

இந்த ஆற்றுப்பகுதியில் நாள்தோறும் நடைபெறும் மண் அகழ்வால் ஆற்றுப் பகுதியிலுள்ள அக்கராயன் மத்தியப்பகுதி, அக்கராயன் கிழக்குப்பகுதி, ஸ்கந்தபுரம், கண்ணகைபுரம் ஆகிய கிராமங்களின் நிலத்தடிநீர் பெரும் ஆபத்;தை எதிர்நோக்கியுள்ளது. அக்கராயன்மத்தி என்பது கடல் மட்டத்திலிருந்து 115 அடிக்கு மேலான உயர்வான பகுதியாகும்.

 

மேற்படி பகுதிகளில் நிலத்தடி நீரை தக்கவைப்பதில் அக்கராயன் ஆறு முக்கிய பங்கு வகிக்கும் நிலையில், தற்போது அக்கராயன் ஆற்றுப்பகுதியில் களவாக நடைபெறும் மண் அகழ்வு காரணமாக எதிர்காலத்தில் அக்கராயனில் பல பகுதிகள் அழிவடையும் அபாயம் காணப்படுகின்றது. அக்கராயன் குளத்தின் கீழான வயல்நிலங்கள் நெற்செய்கையை மேற்கொள்ளமுடியாத உவர்நிலங்களாக மாறும் அபாயம் காணப்படுகின்றது.  

 

இதுதொடர்பாக கிளிநொச்சி பொலிஸாரிடம் தொடர்புகொண்டு கேட்டபொழுது, அக்கராயன் ஆற்றுப்பகுதியில் மணல் அகழ்வதற்கு அனுமதி கொடுக்கப்படவில்லை. அதனை மீறி ஆற்றுப்பகுதியில் மணல் அகழ்வில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுத்து வருகின்றோம். மண் கொள்ளையில் ஈடுபடுபவர்கள் காட்டுப்பக்கமாக வருகை தந்து மணல் அள்ளிச் செல்கின்றனர் எனத்தெரிவித்தனர்

 

IMG_0007(2).JPG

 

http://www.tamilmirror.lk/137719#sthash.LWdhD77C.dpuf

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
எல்லாவற்றையும் கருத்தில் கொண்டுதானே தமிழர்கள் போராட்டம் நடாத்தினார்கள்.
இன்று நாகர்கோவில் தொடக்கம் அக்கராயன் ஆற்றுப்படைவரைக்கும் மனித அழிப்புகளுடன்  இயற்கை அழிப்புகளும் தொடர்கின்றன. 
 
தமிழ் சிறிலங்கர்கள் சிந்திப்பார்களாக!
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு, துவக்குடன் தமிழீழ மண்ணை காப்பாற்ற வந்தவர் தேசியத் தலைவர் பிரபாகரன்,
அதை... காட்டிக் கொடுத்தவர்களும், எம் இனத்தின் இடையே..... வாழும், அறிவற்ற மக்கள் தான்....
இனி.... புலியின் மேல், பழியை... போட்டு, ஒரு பாட்டி வைக்க வேணும்.

  • கருத்துக்கள உறவுகள்

தனது... மண்ணை, நேசிக்காதவன்...... மனிதன் அல்ல.
பிறந்த,... மண்ணையே.... விற்றுப் பிழைப்பவனுக்கு, என்ன பெயர் சூட்டலாம்?  
 

தலைவர் பெர்மிட் போட்டு அள்ள விட்டிருப்பார்....இது எல்லாம் அப்பாவி தமிழரின் வீடு கட்ட தான் போகுது...தலைவர் சந்திர மண்டலத்திலிருந்து மண் கொண்டு வரவில்லை.....வெளிநாட்டிலிருந்து முதலை கண்ணீர் விடும் தேசிய தமிழ் நாட்டாமைகள் அப்படியே வெளிநாட்டில் செட்டில் ஆகவேண்டியது தான்....மிஞ்சின ஈழத்தை அங்குள்ளவர்கள் பார்ப்பார்கள்.......

 

ஸ்ரீ லங்கா தாயே – நம் ஸ்ரீ லங்கா நமோ நமோ நமோ நமோ தாயே

Edited by naanthaan

தலைவர் பெர்மிட் போட்டு அள்ள விட்டிருப்பார்....இது எல்லாம் அப்பாவி தமிழரின் வீடு கட்ட தான் போகுது...தலைவர் சந்திர மண்டலத்திலிருந்து மண் கொண்டு வரவில்லை.....வெளிநாட்டிலிருந்து முதலை கண்ணீர் விடும் தேசிய தமிழ் நாட்டாமைகள் அப்படியே வெளிநாட்டில் செட்டில் ஆகவேண்டியது தான்....மிஞ்சின ஈழத்தை அங்குள்ளவர்கள் பார்ப்பார்கள்.......

 

ஸ்ரீ லங்கா தாயே – நம் ஸ்ரீ லங்கா நமோ நமோ நமோ நமோ தாயே

 

தமிழில் தேசிய கீதத்தை பாடி அதனை  நிந்தனை செய்த குற்றத்திற்கு ஆளாகிவிட்டீர்கள்.  இனிமேலாவது திருந்துங்கள். சிங்களத்தில் மட்டுமே தேசியகீதம் ஒலிக்கவேண்டும். சிங்கள தேசிய நாட்டாண்மைகளின் கோபத்திற்கு ஆளாகிவிடாதீர்கள்

 

Apa Sri Lanka Namo Namo Namo Namo Matha

Sundara siri barini surandi athi soba mana Lanka

Dhanya dhanaya neka mal palathuru piri jaya bhoomiya

Ramya

Apa hata sapa siri setha sadhana jeevanaye matha

Piliganu mena apa bhakthi pooja Namo Namo Matha

Apa Sri Lanka Namo Namo Namo Namo Matha

Obave apa vidya

Obamaya apa sathya

Obave apa shakthi

Apa hada thula bhakthi

Oba apa aloke

Apage anu prane

Oba apa jeevanave

Apa mukthiya obave

Nava jeevana demine nithina apa pubudu karan matha

Gnana veerya vadawamina ragana yanu mana jaya bhoomi

kara

Eka mawakage daru kala bawina

Yamu yamu wee nopama

Prema wada sama bheda dhurarada

Namo Namo Matha

Apa Sri Lanka Namo Namo Namo Namo Matha

Sent by Carlos Andr Pereira da Silva Branco

 

  • தொடங்கியவர்

அக்கராயனில் கிராமிய நீர்வழங்கல் திட்டம்

 

SAM0981.JPG

 

கிளிநொச்சி, அக்கராயன் பகுதியில் கிராமிய நீர்வழங்கல் மற்றும் சுகாதாரத்திட்டம் நடைமுறைப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக நீர்வழங்கல் வடிகாலமைப்புச்சபை தகவல்கள் தெரிவிக்கின்றன. கிளிநொச்சி மாவட்டத்தில் குடிநீர் நெருக்கடி நிலவும் பகுதிகளில் ஒன்றாக காணப்படும் அக்கராயன் பிரதேசத்தின் குடிநீர் தேவையை நிவர்த்தி செய்யும் பொருட்டு இந்தத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. இந்ததிட்டத்தில், கிணறு ஒன்று அமைக்கப்பட்டு, 30 மீற்றர் கனஅடி நீர் கொள்ளவு கொண்ட நீர்த்தாங்கி ஒன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

 

குடிநீர் விநியோகம் செய்வதற்கான விநியோகக் குழாய்களும் பொருத்தப்பட்டுள்ளன. இந்தத்திட்டம் அடுத்த மாதமளவில் நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்தத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் 300 குடும்பங்களுக்கான குடிநீர் தேவையை நிறைவு செய்ய முடியும். இந்தத்திட்டத்துடன் இணைத்து 90 பயனாளிகளுக்கான மலசலகூடங்கள் அமைக்கும் பணிகளும் முன்னெடுக்கப்படுகின்றன. கட்டம் கட்டமாக ஒவ்வொரு பணியும் பல்வேறு நிதி மூலங்கள் மூலம் மேற்கொள்ளப்பட்டதாக அந்த தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.

 

 http://www.tamilmirror.lk/137679#sthash.i2ZMoiXS.dpuf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.