Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கு.வீராவின் கவிதை நூல் வெளியீடு.

Featured Replies

உயர்பாதுகாப்பு வலயம் என்ற போர்வையில் தமிழ்மக்கள் தொலைத்த இடங்கள் ஏராளம். சொந்த இடங்களை விட்டு ஏங்கிய நிலையில் வாழ்கின்றோம் என யாழ். பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் என்.சண்முகலிங்கன் தெரிவித்தார்.

கவிஞர் கு.வீராவின் ‘கண்ணடிக்கும்காலம்’, ‘இரண்டாவது உயிர்’ எனும் கவிதை நூல்களின் வெளியீட்டுவிழா யாழ். பல்கலைக்கழக ஓய்வுநிலை தமிழ்த்துறை பேராசிரியர் எஸ்.சிவலிங்கராஜா தலைமையில் இணுவில் சிவகாமியம்மன் மண்டபத்தில் நேற்றுமுன்தினம் இடம்பெற்றது.

veera_kavithai_veliyedu_01.png

இந்நூல் வெளியீட்டு விழாவில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே சண்முகலிங்கன் இதனைக் கூறினார்.

அகதி முகாம்களில் வாழ்கின்ற மக்களுக்கு வீடு என்பதே இல்லை. துன்ப, துயரங்களை சந்திப்பவர்களுக்கு நம்பிக்கையூட்ட வேண்டும். கு.வீராவினுடைய கவிதைகள் நம்பிக்கை தருவனவாக காணப்படுகின்றது என அவர் தெரிவித்தார்.

veera_kavithai_veliyedu_03.png

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக அரசறிவியற்றுறை தலைவர் கே.ரீ.கணேசலிங்கன், வணிக, முகாமைத்தவ பீடாதிபதி ரி.வேல்நம்பி ஆகியோரும் இதில் கலந்துகொண்டனர்.

veera_kavithai_veliyedu_02.png

கவிஞர் பாடலாசிரியர், நடிகர் என பல திறமைகளை கொண்ட கு.வீரா தமிழீழ தேசிய தொலைக்காட்சியின் நிலவரம் என்ற அரசியல் கலந்துரையாடல் நிகழ்ச்சியின் மூலமும் பிரபல்யம் பெற்றிருந்தார். யுத்தத்தின் பின்னர் தடுப்பு முகாம் புனர்வாழ்வு என பல தடைகளையும் துன்பங்களையும் கடந்து வந்த கவிஞர் வீரா தற்போது தனது இரு கவிதை தொகுதி நூல்களை வெளியிட்டுள்ளார்.

veera_kavithai_veliyedu_04.png

veera_kavithai_randam_uyri_01.png

 

  • கருத்துக்கள உறவுகள்

10376099_10155171395670637_1135697618080

 

10922522_10155171395130637_6437608117264

 

10393658_10155171390325637_7791704384338

 

10917304_10155171390710637_1496733849822

 

10924796_10155171392175637_3977583942040

 

540431_10155171394280637_627779700670914

 

10923586_10155171394865637_1177226691212

 

நன்றி முகநூல்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இணைப்புக்கு நன்றி,

 

நமது ஊடகங்கள் பல வீரா அண்ணாவை மறந்திருக்கலாம்....! 


 

  • கருத்துக்கள உறவுகள்

ஆம். முகநூலில்   இவரைக் கண்டதே பெரு மகிழ்ச்சியாக  இருந்தது. இவர் தானா அந்த வீராண்ணா என்று ஒரு கணம்  தேட வேண்டியதாகிவிட்டது.

 

சிறந்த ஒரு குரல் வல்லமை உள்ள   அண்ணா.. வீராண்ணா.  அவர் கவிஞராகவும் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. சொந்த வாழ்க்கையிலும் எல்லா வசந்தங்களை பெறவும் வாழ்த்துக்கள். :icon_idea:

 

ஏன் யாழ் கிட்டு   மாமாவையே இம்முறை மறந்துவிட்டது. அவரின் நினைவு நாள் 16ம் திகதி வந்து போனபோது.. மைத்திரி அரசியலில் மூழ்க்கிப் போய் கிடந்தார்கள். :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

வீரா அவர்கட்கு வண்க்கம், மீளெலன் என்பதில் எவ்வளவு துன்பங்கள் நிறைந்திருக்கும் என்பதை முள்ளிவாய்க்காலுக்குப் பின்னதான உங்களது வாழ்கை அனைவருக்கும் உணர்த்தும் என நம்புகிறேன். அப்துல் கலாமிடம் கேள்விகேட்ட கவிதைக்குச் சொந்தக்காரன் நீங்கள். அடிக்கடி நினைப்பதுண்டு உங்களுக்கு என்ன நடந்ததோ எங்குள்ளீர்கள் என. உங்களைப்பற்ரிய நற்செய்தி, சிலவேளை புதுவையரையும் எம்முடன் மீளவும் சேர்க்கும் எனும் நம்பிக்கையைத் தருகின்றது. உங்கள் இருபுத்தகங்களையும் நான் வாங்கிக் கொள்வதனால், விரைவில் உங்களின் கைப்பற்றி நிற்பேன்.

  • கருத்துக்கள உறவுகள்

உங்களைக் கண்டது மிக்க மகிழ்ச்சி வீரா அவர்களே! தொலைந்துபோனவை அல்லது இழந்துபோனவை பல. என்றாலும் அனைத்தையும் கடந்து மீளுவோம் என்ற நம்பிக்கை இன்னும் இருக்கிறது. நலமோடு வாழ வேண்டுகிறேன். எங்கே இருக்கிறீர்களோ என்று எண்ணுவதுண்டு. உங்கள் கவிதைகள் கிடைக்குமாயின் மகிழ்ச்சி. 

 

இணைப்புக்கு நன்றி!

  • 4 years later...

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.