Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆபத்தான நிலையில் மகசீன் சிறைச்சாலையில் தமிழ்க் கைதிகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஆபத்தான நிலையில் மகசீன் சிறைச்சாலையில் தமிழ்க் கைதிகள்

தமிழீழ விடுதலைப் புலிகள் என சந்தேகிக்கப்படும் 56 தமிழ் இளைஞர்கள், களுத்துறை சிறைச்சாலையிலிருந்து மகசீன் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

இவர்கள் மாற்றப்பட்டதையடுத்து, மகசீன் சிறைச்சாலையில் உள்ள சிங்கள கைதிகளும் காடையர்களும், புலிகளை அங்கு அழைத்து வந்துள்ளதாகத் தெரிவித்து, கடும் எதிர்ப்புக் காட்டி வருகின்றனர்.

நேற்றுக்காலை மகசீன் சிறைச்சாலை சுவர்களில் விடுதலைப் புலிகளையும் தமிழ் மக்களையும் மிகவும் கொச்சைப்படுத்தும் மிரட்டல் சுவரொட்டிகளும் ஒட்டப்பட்டன. இந்த கைதிகள் மற்றும் காடையர்களால், தமிழ் இளைஞர்கள் கொலை செய்யப்படலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.

விடுதலைப் புலிகள் என்ற சந்தேகம் மட்டுமே உள்ள இந்த அப்பாவி தமிழ் இளைஞர்கள், விசாரணையின்றி சித்திரவதைகளை அனுபவித்து வரும் நிலையில், தற்போது மகசீன் சிறைச்சாலையில் காடையர்களால் அடித்து அல்லது வெட்டி கொல்லப்படலாம் என்ற கடும் அச்சத்தில் உள்ளனர்.

அங்குள்ள சிங்களக் காடையர்கள், பலமாகச் சத்தம் எழுப்பி, கேவலமான வார்த்தைகளால் குரல் எழுப்பி வருவதால், மகசீன் சிறைச்சாலையில் பதட்ட நிலை தோன்றியுள்ளது.

பதட்டத்தைத் தணிக்க, தற்போது சிறிலங்கா இராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது. எனினும், இராணுவத்தினரும் காவல்துறையினரும் சேர்ந்து, சிங்களக் காடையர்களுக்கு மறைமுகமாக உதவலாம் என்பதால், தமிழ் இளைஞர்கள் உயிராபத்தை எதிர்பார்த்து அச்சத்துடன் உள்ளனர்.

களுத்துறையிலிருக்கும் கைதிகளை விசாரணைக்காக கொழும்புக்கு அழைத்துச் செல்வதற்கு நடைமுறை பிரயாணச் சிக்கல்கள் இருப்பதால், அதை நிவர்த்தி செய்வதற்காகவே இந்த மாற்றம் கொண்டுவரப்பட்டதாகத் தெரிவித்த சிறைச்சாலை ஆணையாளர் மேஜர் ஜெனரல் வஜிர விஜேகுணவர்த்தன, இந்த மாற்றத்திற்கு உரிய உத்தரவு பெறப்பட்ட பின்னரே மாற்றம் நடைபெற்றது என்றும் தெரிவித்தார்.

இந்த மாற்றத்தை, மகசீன் சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் சிலரும் விரும்பவில்லை என்பது தனக்கும் தெரியும் என்றும் கூறிய அவர், அவர்களது உதவியுடன் தான் இத்தகைய எதிர்ப்பிரச்சாரம் முன்னெடுக்கப்படுகின்றது என தான் நம்புவதாகவும் குறிப்பிட்டார்.

- புதினம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.