Jump to content

சிக்கன் கருவேப்பிலை ப்ரை


Recommended Posts

சிக்கன் கருவேப்பிலை ப்ரை
20qn86g.png

சிக்கன்- அரை கிலோ

 

 

கருவேப்பிலை -2 கொத்து

 

 

வர மிளகாய் – 5.

 

 

மிளகு -1 ஸ்பூன்

 

 

கடலை பருப்பு -1 ஸ்பூன்

 

 

இஞ்சி -சிறிது அளவு.

 

 

பூண்டு – சிறிது அளவு.

 

 

உப்பு -தேவையான அளவு.

 

 

எண்ணெய் -தேவையான அளவு.

 

 

கொத்தமல்லி தூள் -1 ஸ்பூன்.

 

 

முதலில் ஒரு பாத்திரத்தில் இரண்டு சொட்டு எண்ணெய்  விட்டு வரமிளகாய்,மிளகு,கடலை பருப்பு,கருவேப்பிலை,இஞ்சி மற்றும் பூண்டு வறுத்துக் கொள்ளவும்.

வருத்த பின்பு அதை சிறிது அளவு அரைத்து வைத்துக் கொள்ளவும்.

 

 

அரைத்து வைத்த கலவையில் கொத்தமல்லி தூள்,சிக்கன் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து 10 நிமிடம் ஊற வைக்கவும்.பின்பு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் ஊற வைத்த சிக்கன் மசாலைவை அதில் போட்டு பொரித்து எடுக்கவும்.(விரும்பினால் பொரிக்கும் போது சிறிது அளவு கருவேப்பிலை போட்டு பொரித்து எடுத்தால் சுவையாக இருக்கும்

 

http://tamilcookery.com/?p=1589

Link to comment
Share on other sites

 

 

 

முதலில் ஒரு பாத்திரத்தில் இரண்டு சொட்டு விட்டு

 

 

 

எதை இரண்டு சொட்டு விடுவது?

 

வரமிளகாய்,மிளகு,கடலை பருப்பு,கருவேப்பிலை,இஞ்சி மற்றும் பூண்டு வறுத்துக் கொள்ளவும்.

வருத்த பின்பு அதை சிறிது அளவு அரைத்து வைத்துக் கொள்ளவும்.

 

 

 

சரத்குமாரின் மகள் வரலெட்சுமி பற்றிக் கேள்விப்பட்டிருக்கின்றன், ஆனால் வரமிளகாய் பற்றிக் கேள்விப்படவில்லை. வரமிளகாய் என்றால் எது?

Link to comment
Share on other sites

எதை இரண்டு சொட்டு விடுவது?

எண்ணெய் :)  இப்போது திருத்தி உள்ளேன்.

 

 

 

 

சரத்குமாரின் மகள் வரலெட்சுமி பற்றிக் கேள்விப்பட்டிருக்கின்றன், ஆனால் வரமிளகாய் பற்றிக் கேள்விப்படவில்லை. வரமிளகாய் என்றால் எது?

நீங்கள் அதை ஆவது கேள்வி பட்டு இருக்கிறீர்கள் :lol:

 

நாங்கள் செத்தல் மிளகாய் என்பதைதான் இந்தியர்கள் வர மிளகாய் என்று சொல்கிறார்கள் என நினைக்கிறேன்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.