Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சுய நிர்ணயம் பற்றிய அரட்டை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சுய நிர்ணயம் பற்றிய அரட்டை

-புவனேசுவரி

LondonMarch.jpg

நாட்டில பல வருசமா இனப்பிரச்சனை எரிஞ்சு கொண்டிருக்கு அதில எண்ணெய் ஊத்தி இந்தியாவும் குளிர்காயுது எண்டா அது மிகையில்லை! ஈழத்தமிழ் பெடியளின்ட போராட்டத்துக்கு உதவிறம் எண்ட பேரில ஆயுதங்களும் பயிற்சிகளும் குடுத்து பிறகு அவங்களுக்குள்ளயே அடிபடவிட்டு புலிகளை மட்டும் வைச்சிருந்து கொண்டு இந்தியா தங்கட அரசியல நடத்தினது எண்டு நான் சொல்லி நீங்கள் தெரிஞ்சு கொள்ளுற அளவில இருந்தா நீங்கள் இவ்வளவு காலுமும் கோமால இருந்திருக்கிறியள் எண்டு அர்த்தம். (கோமா எண்டா கிரேக்கத்தில ஆ​​ழ்ந்த உறக்கம் எண்டு அர்த்தமாம்)

இதில புலிகளோட மேற்கில இருக்கிற அமெரிக்கா பிரித்தானியா நோர்வே எண்டு இன்னும் சில நாடுகளும் நல்ல உறவில இருந்தவை. இருந்து கொண்டு 2009ல எல்லாத்தையும் முடிச்சு வைக்கப்போறம் ஆனாபடியால் வழிக்கு வாங்கோ எண்டும் முதலே புலிகளுக்குச் சொல்லியிருந்தவை. இதுவும் பலருக்கு தெரியும். இதுக்கிடையில சீனா, புலிகள் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களை தாங்கள் அபிவிருத்தி செய்யிறம் எண்டு வந்தவை! அதை அறிஞ்ச அமெரிக்கா நோர்வேயை வைச்சு புலிகளோட குறுக்கால டீல் ஒண்டைப் போட்டு அதை நிப்பாட்டினதா ஒரு உள் வீட்டுக் கதையுமிருக்கு. ஆக மொத்தத்தில புலிகள் சீனாக்கு ஓம் எண்டிருந்தாலும் எங்கட பகுதிகளில சீனாதான் றோட்டுப்போட்டிருப்பாங்கள். இப்பயும் அவங்கள்தானே போட்டிருக்கிறாங்கள். ம்…! இதுதான் விதி எண்றது!

தமிழீழ விடுதலைப்புலிகளை வெறும் புலியெண்டு இவள் விளிக்கிறாளே! அப்ப இவள் புலி எதிர்ப்புவாதி எண்ட முடிவுக்கு நீங்கள் வந்திருப்பியள். உண்மையச் சொன்னா நான் எப்பிடி விளிக்கிறன் எண்டது முக்கியமில்லை நீங்கள் எப்ப விழிக்கப்போறியள் எண்டதுதான் முக்கியம்!

துவக்கு தூக்கின எவனும் தெய்வம் ஆகேலாது. கொல்லுறதுக்குத்தானே துவக்கு, கொஞ்சுறதுக்கு இல்லைத்தானே! மற்றப்பக்கத்தில செத்து விழுறவனுக்கும் குடும்பம் இருக்கு ஒரு உலகம் இருக்கு. ஆனாபடியால் இவயளைத் தூக்கித் தலையில வைச்சு புனிதர் எண்டோ தெய்வங்கள் எண்டோ என்னால சொல்ல முடியாது. அதுக்காக அவங்களைப் பாசிச வாதிகள் எண்ட பெட்டிக்குள்ளயும் போடுறது பிழையா இருக்கு. சூழ்நிலையள் எண்ட ஒண்டுதான் கன விசயத்தை தீர்மானிக்குது. அழிக்க வாறவனத் திருப்பி அடிக்காட்டி அவன் எங்கட கதையை முடிச்சிட்டுப்போடுவான். அப்ப அடிக்கத்தான் வேணும். அதைவிட புலி அவனை கொண்டுது இவனக்கொண்டுது எண்டு சொல்லுற ஆக்களும் இருக்கினம். அவை குறைஞ்ச பட்சம் ஒரு 15 வருசமாவது பின்னுக்குப் போய்த்தான் புலிகளைக் குற்றம் சொல்லவேண்டி இருக்கு.

புலிகளின் ஆரம்பகாலத்துக்கும் பிற்காலத்துக்கும் நிறைய மாற்றங்கள் இருக்கு. முஸ்லிம்களை துரத்திவிட்டது பிழை எண்டு புலி மன்னிப்பு கேட்டது அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினது. ஆனபடியால் அவங்கள் தெய்வங்களும் இல்லை அதே நேரத்தில பாசிசக்காரரும் இல்லை. மற்றும்படி ஈழத்தின்ர விடுதலைப்போராட்டத்தில புலிகளுக்கு முக்கிய பங்கிருக்கு எண்டதை யாரும் மறுக்கேலாது.

I-Movie.jpg

இவளென்ன சங்கரிண்ட “ஐ” படம் மாதிரி தேவை இல்லாமல் இழுத்துக்கொண்டு போறாள் எண்டு நினைப்பியள். அரட்டை எண்றது அதுதானே! நேற்று புலிகளைத் குல தெய்வங்களாக எண்ணுகிற ஒரு நண்பி என்னட்டை பேஸ்புக் சட்டில(Chat) ஒரு கேள்வி கேட்டாள்.

நண்பி: இப்ப கடவுள் வந்து உன்னடட்ட தலைவர் வேணுமா இல்ல தமிழீழம் வேணுமா எண்டு கேட்டால் நீ என்ன சொல்லுவாய் எண்டு.

நான்: ம்! நான் நிம்மதி வேணுமெண்டு கேப்பன்!

நண்பி: பகிடி விடாத. இரண்டில ஒண்டுச் சொல்லு!

நான்: ரெண்டும் வேண்டாம்!

நண்பி: ஏன்

நான்: உன்ர தலைவர் இனி வந்தும் ஒண்டும் செய்யப்போறேல… மற்றது சர்வதேசம் இதைச் சாட்டி இன்னொரு முள்ளிவாய்க்காலுக்கு றெடியாகும்.

நண்பி: தமிழீழம்​​

நான்: ஓ… இப்ப பாக்கேலயே இவங்களை? கொடிக்கும் கோவணத்துக்கும் அடிபட்டுக்கொண்டிருக்கிறாங்கள்.​

நண்பி: ​கொடி ​ஏத்தக்கூடாதோ?

நான்: ஏத்தக்கூடாது எண்டு நான் சொல்லேல! ​இப்ப கொடி ஏத்திறதுதான் மக்களுக்கு முக்கியமோ எண்டு கேக்கிறன்?​ ​அதை வைச்சு இவங்கள் நடத்திற சில்லறை அரசியல்கள்​ ​பொறுக்க முடியவில்லை.​​

​நண்பி: Ok

நண்பி: அப்ப…..

kittu_mama.jpg

நான்: இப்ப கதைக்காத நான் கதைச்சு முடிச்ச பிறகு கதை!​​

இவங்கள் இங்க என்ன செய்யுறாங்கள். சனத்தை உணர்வோட வைச்சிருக்கோணுமாம். யார் இவங்கள்? அன்னை பூபதி எண்டும் கேணல் கிட்டு எண்டு மாவீரர் தினம் எண்டும் விளையாட்டுப்போட்டி எண்டும் உழைச்சுக்கொண்டிருக்கிறாங்கள்! தெற்கு லண்டனில பொறுப்பில இருக்கிறவரிட வீடு புலியிண்ட சொத்து! பினாமிட பேரில இருக்கு அடுத்த வருசத்தோட அதுக்குக் காசு கட்டி முடியுதாம் இனி யாருக்கு அந்த வீடு? இப்பிடி எத்தனை வீடு கடையள் இருக்கு. அதுக்கெல்லாம் யார் பொறுப்பு? மக்களுக்கு இது பற்றித் தெரியுமா? இப்ப உழைக்கிற காசு யாருக்குப்போகுது? ஊரில சண்டைபிடிச்சிட்டு இண்டைக்கு கஷ்டப்படுற யாருக்கும் போகுதா? அல்லது தங்கட குடும்பத்துக்கா? கேட்டுப்பார் தங்களை கொச்சப்படுத்திறம் எண்றாங்கள். இங்க பொறுப்பில இருக்கிற கனபேருக்கு துவக்கு எவ்வளவு பாரமெண்டே தெரியாது ஆனால் ஆயுதப்போராட்ப் பொறுப்பில இருக்கிறம் சொல்லுறதக் கேள் எண்றாங்கள். நாட்டில புலி இல்லை இவயள் யாரிண்ட வழி நடத்தலில இருக்கினம் எண்டு கேட்டனியா? அப்படிக் கேக்கோணும் எண்டாவது யோசிச்சனியா?

நண்பி: அப்ப தமிழீழம் கேக்கலாம்தானே? அதில என்ன பிரச்சனை?

நான்: ஐயோ கடவுளே உன்ர தலைவர் வந்தால் வெளிநாட்டுக்காரன்தான் அடிப்பான். ஆனால் தமிழீழம் வந்தா இங்க இருக்கிறதுகளை யார் சமாளிக்கிறது? ஒழுங்கான ஒரு நிர்வாகம் நடக்குமே? யோசிச்சுப்பார்! இங்கயிருக்கிறதுகள் எல்லாம் பொறுப்புக்களை உத்தியோகபூர்வமா எடுக்குங்கள். பிரித்தானிய அம்பாசிடர் எண்டு ஒருத்தர் வருவார்! இவங்களுக்கெல்லாம் ஒரு சமூகம் எண்டா என்னண்டு தெரியுமா? இவ்வளவு காலமும் கொத்துரொட்டியும் பூவும் வித்தவங்களிட்ட சமூகத்தை குடுக்கேலுமே? குரங்கின்ட​கையில ​பூமாலை​ கதை தொியும்தானே? ​​அது இன்னும் அழிவுதான்! உனக்கு ஒண்டு சொல்லுறன் உன்ர தலைவர் பிரபாகரனில எனக்கு விமர்சனங்கள் இருந்தாலும் மரியாதை இருக்கு! கடைசி காலங்களில அந்தாள் இங்க இருக்கிற ஆக்களப் பொறுப்பில இருந்து தூக்கத்தான் இருந்ததாம், ஆனால் ஈழத்தமிழனுக்கு பெரிய அழிவா இருந்த முள்ளிவாய்க்கால் இவங்களுக்கு பெரிய அதிஸ்டமா போட்டுது! அதால தொடந்து அடிக்கிறாங்கள்! சுனாமி காலத்தில நடந்தது! முள்ளிவாய்க்கால் நேரத்தில நடந்தது! இப்பவும் நடக்குது! இனித் தமிழீழத்தை இவங்களிட்டக் குடுத்தா?

நண்பி: எப்பிடியோ உன்ர விருப்பப்படி அமைப்பை குற்றஞ்சாட்டி முடிச்சாச்சு? இப்ப நீ என்ன சொல்ல வாறாய்?

நான்: சுயநிர்ணய உரிமை வேணும்! அது கிடைச்சா ஒரு ஜனநாயக்போக்கு வரும். தமிழீழம் எண்டா இப்ப புலியெண்டு சொல்லி உழைக்கிற வியாபாரிகள் உள்ளுக்க வந்து இன்னும் நல்லாக் கொள்ளையடிப்பாங்கள் அதைவிட ஒருத்தனையும் நாட்டைக் கொண்டு நடத்த விடாம தாங்களே தங்களுக்கு லாபம் கிடைக்கிறமாதிரி நிர்வாகம் செய்வாங்கள். ஆனால் அரசியல் சுயநிர்ணய உரிமை எண்டு வந்தால் இவயள் உள்ள இல்லை! மக்கள் சக்திதான் உள்ள! அதுக்குப்பிறகு மக்கள் தீர்மானிக்கட்டும் என்ன, எப்படி வேணும் எண்டு.​

நண்பி: Ok​…

பேசிக்கொண்டிருந்தவள் (Chat)​​ Offline​க்குப் போய்விட்டாள்!​ ​

facebook-friends-in-offline-chat-.jpg

நீங்கள் Offline போகேல எண்டு நினைச்சு தொடர்றன். ஆக்கிரமிப்பாளர்கள், ஒடுக்குமுறையாளர்கள், இனவாதிகள் எண்டு 60 வருசமா நடந்து வந்த சண்டை 2010ல இருந்து மாறி உள்ளுக்குள்ளயே நடக்குது. இருக்கிற முளைக்கிற அமைப்புக்கள் எல்லாருக்கும் தனிப்பட்ட அரசியல். மாறி மாறி ஒருத்தருக்கு ஒருத்தர் மொக்குத்தனமா மொட்டைக்கடிதம் எழுதித் தள்ளினாங்கள் இப்ப மேடையிலயே தாக்கத் தொடங்கிட்டாங்கள். ஒவ்வொரு அமைப்புக்குப் பின்னாலும் உணர்ச்சித்தமிழர்கள் கொஞ்சப் பேர் இருக்கினம். அவைதான் அந்தந்த அமைப்புகளிண்ட கோவணம் அவுண்டு விழாதபடி அடுத்தாக்களை தாக்கி கருத்து உதிர்க்கிற ஆக்கள்! அவைக்கு ஏதாவது பொறுப்புக் குடுத்திருப்பாங்கள். அதை வைச்சு அவையள் அடிக்கடி மேடைகள் எண்டும் மீடியா எண்டும் வலம் வந்து வாழ்ந்து கொண்டிருக்கினம். இதுதான் இன்றைய 5ம் கட்ட ஈழப்போர் அதாவது அமைப்புக்கள் தங்கட இருப்பை தொடர்ந்து காப்பாத்தி வைச்சிருக்கிறது. இதைவிட இதுக்கு வெளியில இருக்கிற அனைத்து புலி எதிர்ப்புவாதிகளும் போற வாற கூட்டங்களில தங்கட பங்குக்கு புத்தகங்களையும் கருத்துக்களையும் மேற்கோள் காட்டி கருத்துச் சொல்லி தங்கட இருப்புக்களையும் தொடர்ந்து பேணி வருகினம்.

ஆக மக்கள்தான் பாவம்!!! தலைவர் திரும்ப வருவார் எண்டு மொக்குத்தனமா நினைச்சுக்கொண்டிருக்குதுகள். அதுக்கு புலி ஏஜெண்டுகளும் பெற்றோல் ஊத்தி அதை நல்லாப் பத்த வைச்சு அதில குளிர்காயுறாங்கள். உடன “இவள் இயக்கத்தைக் கொச்சப்படுத்துறாள்” எண்றாங்கள். தயவுசெய்து சொல்லுங்கப்பா புலிகள் உங்களை ஏஜெண்டாத்தானே வைச்சிருந்தாங்கள். பிறகு என்ன துணிவில உங்கள நீங்களே இயக்கம் எண்டு துணிஞ்சு சொல்லி ​திரியிறியள்???

​இங்கே சுயநிர்ணய உரிமைக்கான போராட்டம் ஒன்றை அல்லது குறைந்த பட்சம் அதற்கான சூழலையாவது யாராவது உருவாக்க நினைக்கிறார்களா என்றால்… ஒருத்தனும் இல்லை! உண்மையைச் சொன்னா யார் மக்களைக் தங்கட கட்டுப்பாட்டுக்க கொண்டுவாறது எண்ட போட்டி தான் இப்ப நடந்து கொண்டிருக்குது. இன்னும் சில நாட்களில் அமைப்புக்கள் எல்லாம் தங்கட கோவணம் அவிழாமல் இருக்க வானொலி தொலைக்காட்சி எண்டு தொட​ங்​கி மக்களத் தொடந்து எமாத்தினால் கூட ஆச்சரியப்படத்தேவையில்லை!

“சுய நிர்ணய உரிமைக்கான போராட்டம் ஒன்று ஆரம்பிக்கப்படாமல் ஈழத்தமிழர்களுக்கான போராட்டம் இனி சற்றும் முன்னே நகராது”

http://inioru.com/?p=43864

  • கருத்துக்கள உறவுகள்

அரட்டை என்றே தலைப்பில் இருப்பதால் நாங்கள் பெரிதாக அலட்டிக்கொள்ளத் தேவையில்லை.
விரைவில் மைத்திரி தமிழர்களுக்குச் சுய நிர்ணயம் கொடுப்பார்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழீழத்தை கைவிட்டாச்சு சுயநிர்ணய உரிமையை அரட்டையில் சேர்த்தாச்சு. மாவீரர்களை மறந்தாச்சு.. தேசியக் கொடியை பதுக்கியாச்சு. எனி என்ன..?!  ஆனால் அகதிக் கோரிக்கை... வெளிநாட்டு அகதி விசா.. பிரஜா உரிமை இவற்றை ஒருத்தரும் கைவிடுற மாதிரி தெரியல்ல. வெள்ளைக்காரனா பார்த்து பிடிச்சு துரத்தினால் தவிர. :lol::icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளைக்காரனா பார்த்து பிடிச்சு துரத்தினால் தவிர. :lol::icon_idea:

 

வெள்ளைக்காரன் தேடிப்பிடித்து அனுப்ப வெளிக்கிடும் போது

நாங்கள் பிளேட்டை மாத்திவிடுவோம் :D

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழீழத்தை கைவிட்டாச்சு சுயநிர்ணய உரிமையை அரட்டையில் சேர்த்தாச்சு. மாவீரர்களை மறந்தாச்சு.. தேசியக் கொடியை பதுக்கியாச்சு. எனி என்ன..?!  ஆனால் அகதிக் கோரிக்கை... வெளிநாட்டு அகதி விசா.. பிரஜா உரிமை இவற்றை ஒருத்தரும் கைவிடுற மாதிரி தெரியல்ல. வெள்ளைக்காரனா பார்த்து பிடிச்சு துரத்தினால் தவிர. :lol::icon_idea:

 

எல்லோரையும் கழுத்தை பிடித்து வெளியே அனுப்பினால் ஐந்தாம் கட்ட ஈழப்போரை நடத்துவது யாராம் ? எப்படியாம்? தலைவரே புலம்பெயர் மக்களிடம் 2008ம் ஆண்டு போராட்டத்தை பாரம் கொடுத்துவிட்டார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.