Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

370 பயணிகளுடன் மாயமான மலேசிய விமானத்தின், அதிகார பூர்வ அறிவிப்பு….

Featured Replies

மாயமான மலேசிய விமானம் எம்.ஹெச்.370 விபத்தில் சிக்கியது என்று மலேசியா அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

மலேசியாவின் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனாவின் பீஜிங் நகருக்கு புறப்பட்டு சென்ற மலேசியன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தை சேர்ந்த எம்.எச்.370 விமானம் கடந்த மார்ச் 8-ந்தேதி மாயமானது. கோலாலம்பூரில் இருந்து 239 பேருடன் பெய்ஜிங் சென்றபோது மாயமான மலேசியா விமானம் எங்கே தான் போனது, என்னதான் ஆனது என்பது தெரியவில்லை. விமானம் இந்திய பெருங்கடலில் விழுந்தது விபத்துக்குள்ளானது என்று தெரிவிக்கப்பட்டது. விமானத்தில் இருந்தவர்கள் அனைவரும் உயிரிழந்துவிட்டனர் என்றும் கூறப்பட்டது.

இந்நிலையில், விமானத்தை தேடும் பணியில், ஆஸ்திரேலியா, சீனா மற்றும் மலேசியா நாட்டை சேர்ந்த மீட்பு குழு ஈடுபட்டது. அதிலும் எந்த பலனும் கிடைக்கவில்லை. இந்திய பெருங்கடலின் ஆழத்தில் விமானத்தின் சிதைவு பாகங்கள் எதுவும் கிடைக்காத நிலையில் தேடுதல் வேட்டையும் தோல்வியிலே முடிந்தது. மாயமான விமானம் தொடர்பான மர்மம் இன்றுவரையில் வெளியாகவில்லை. இருப்பினும் விமான விபத்து தொடர்பான பல்வேறு தகவல்கள் யூகங்களின் அடிப்படையில் வெளியாகியது.

இந்நிலையில் மாயமான மலேசிய விமானம் எம்.ஹெச்.370 விபத்தில் சிக்கியது என்று அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. மேலும், இந்த விபத்தில் உயிர்பிழைத்தவர்கள் யாருமில்லை என்றும் தெரிவித்துள்ளது. 239 பேரும் உயிரிழந்துவிட்டனர் என்று தெரிவித்துள்ள அதிகாரிகள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளார் என்று பி.பி.சி. செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. தெற்கு இந்திய பெருங்கடல் பகுதியில் விமானத்தை தேடும் பணியில் சர்வதேச நாடுகள் ஈடுபட்ட போதிலும் விமானம் எங்கே விபத்தில் சிக்கியது என்பது தெரியாததாகவே நீடித்து வருகிறது.

விமானம் விபத்துக்குள் சிக்கியது என்று மலேசியா அரசு அறிவித்துள்ளது, உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு நிவாரணத் தொகையை வழங்க வழிவகை செய்துள்ளது. மாயமான விமானத்தை மீட்பது என்பதற்கு எங்களுடைய முன்னுரிமை எப்போதும் உள்ளது என்று மலேசியா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விமானம் இறுதியாக விழுந்ததாக கருதப்படும் பகுதியில் 4 கப்பல்கள், சோனார் டெக்னாலேஜ் உதவியுடன் தேடுதல் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. சேட்டிலைட் டேட்டாக்கள் மற்றும் விமானத்தின் செயல்பாடு டேட்டாக்கள் அடிப்படையிலும் ஆஸ்திரேலியாவின் பெர்த் சிட்டிக்கு மேற்காக கடலில் விமானம் இறுதியாக காணப்பட்டது என்று கூறப்படுகிறது.

இதற்கிடையே மாயமான மலேசிய எம்.எச் 370 விமானத்தை தேடும் பணி அதிகாரப்பூர்வமாக நிறுத்தப்பட்டது என்றும் விமானத்தில் இருந்த 239 பேரும் உயிரிழந்தனர் என்றும்அறிவிக்கப்பட்டது மற்றொரு தகவல் வெளியாகியுள்ளது.Mre1.jpg

- See more at: http://www.canadamirror.com/canada/37327.html#sthash.7IlydE1G.dpuf

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உலகத்திலை எந்த மூலையிலையெண்டாலும் குண்டூசி விழுந்தாலே இடி விழுந்தமாதிரி சத்தம் கேக்கிற நாடுகளுகள் எல்லாம் ஒண்டும் தெரியாதமாதிரி இருக்கினமாம்....... :lol:

 

இதுக்கை சம்பந்தா சம்பந்தமில்லாத ஒருத்தர் மூக்கை நுளைச்சு விமானம் விழுந்த இடத்தை தானும் தேடுறாரம்... :D  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

விமானம் எங்கே என்று தெரிய வேண்டியவர்களுக்குத் தெரியும். விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது என்பது விஷயம் ஆறி பலவருடங்களுக்குப் பிறகுதான் வெளிய வரும். இதில் அவுஸ் JORN காரணமாக மூக்கை  நுழைத்து அநியாயமாக காசைக் கடலிலே கொட்டிவிட்டது.

  • தொடங்கியவர்

விமானம் எங்கே என்று தெரிய வேண்டியவர்களுக்குத் தெரியும். விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது என்பது விஷயம் ஆறி பலவருடங்களுக்குப் பிறகுதான் வெளிய வரும். இதில் அவுஸ் JORN காரணமாக மூக்கை  நுழைத்து அநியாயமாக காசைக் கடலிலே கொட்டிவிட்டது.

உங்களின் வரிப்பணம் கவலையாகத்தான் உள்ளது

  • 1 month later...
  • தொடங்கியவர்

“239” பயணிகளுடன் மாயமான மலேசிய விமானம் தொடர்பில் புதிய தகவல். - See more at: http://www.canadamirror.com/canada/38985.html#sthash.kDmzalLj.dpuf

 

இந்திய பெருங்கடலில் மாயமான மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் கண்டுபிடிக்கப்படும் என முழுநம்பிக்கை எனக்கு உள்ளது என்று மலேசியா போக்குவரத்து துறை மந்திரி தெரிவித்து உள்ளார். மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனத் தலைநகர் பீஜிங்கிற்கு 239 பயணிகளுடன் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 8–ந்தேதி மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான எம்.எச்.370 போயிங் ரக விமானம் புறப்பட்டுச் சென்றது. அதில் 5 இந்திய பயணிகளும் இருந்தனர்.

அந்த விமானம் புறப்பட்டுச் சென்ற சிறிது நேரத்தில் தரைக்கட்டுப்பாட்டு நிலையத்துடன் கொண்டிருந்த தொடர்பை இழந்தது. பின்னர் அந்த விமானம் என்னவானது, அதில் இருந்த பயணிகள் என்ன ஆனார்கள்? என்பது கிட்டத்தட்ட ஓராண்டாகி விட்ட நிலையிலும் உறுதியாக தெரியவரவில்லை.

மாயமான விமானம் விபத்துக்கு உள்ளாகி விட்டதாகவும், அதில் பயணம் செய்த அனைவரும் பலியாகிவிட்டதாகவும் மலேசிய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. எனினும் மாயமான விமானத்தை தேடும் பணி இன்னொரு பக்கம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

இதனால் அந்த விமானம் பற்றிய சர்ச்சை இன்னமும் ஓய்ந்தபாடில்லை. அனேகமாக மாயமான விமானத்தை 11 மாதங்களுக்கும் மேலாக தேடுவது வரலாற்றில் இதுதான் முதல் முறையாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. வருகிற 8-ம் தேதியுடன் விமானம் மாயமாகி ஒருவருடம் ஆக உள்ளது.

இந்நிலையில் மாயமான மலேசிய விமானம் MH370 கண்டுபிடிக்கப்படும் என்று ஆஸ்திரேலியா பிரதமர் டோனி அபோட்டும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மலேசியா போக்குவரத்து துறை மந்திரி லியோ தியாங் லாயும், இந்திய பெருங்கடலில் மாயமான மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் கண்டுபிடிக்கப்படும் என முழுநம்பிக்கை உள்ளது என்று தெரிவித்து உள்ளார்.

மலேசிய அதிகாரிகள் விமானம் தொடர்பாக எந்தஒரு தகவலையும் அழிக்கவில்லை, மாயமான மலேசிய விமானத்தை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்று தெரிவித்துள்ளார்.

மலேசிய விமானம் மாயமாகி ஒருவருடம் ஆகும் நிலையில் வருகிற ஞாயிறு அன்று மலேசிய விமான போக்குவரத்து துறை இடைக்கால அறிக்கையை வெளியிடுகிறது. ஆஸ்திரேலியா தலைமையில் தொடர்ந்து இந்திய பெருங்கடலில் மாயமான விமானத்தை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

Malaseja-600x395.jpg

- See more at: http://www.canadamirror.com/canada/38985.html#sthash.kDmzalLj.dpuf

  • தொடங்கியவர்

“M – H 370″ பயணிகளுடன் மாயமான மலேசிய விமானத்தின் அதிர்ச்சித் தகவல்… -

 

 

உலகை உலுக்கிய மலேசிய விமானம் எம்.எச்.370 மாயமான விவகாரம் தொடர்பான இடைக்கால அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.

இந்த அறிக்கையில், விமானம் மாயமாகும் அந்தப் பயங்கரத் தருணங்களின் போது வான்வழிப் போக்குவரத்து கட்டுப்பாட்டு கண்காணிப்பாளர் பணியின் போது உறங்கியதாக அதிர்ச்சித் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோலாலம்பூர் வான்வழிப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அறைக்கும், மலேசிய ஏர்லைன்ஸ் அதிகாரி ஒருவருக்கும் இடையே நடந்த உரையாடல் வெளியாகியுள்ளது. இதில், விமானத்தின் தொடர்பு அறுந்த நேரமான அதிகாலை 1.20 மணியிலிருந்து காலை 5.20 மணிவரையிலான காலக்கட்டத்தில் வான்வழிக் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு கண்காணிப்பாளர் உறங்கிக் கொண்டிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

கட்டுப்பாட்டாளர் காலை 5.20 மணிக்கு மலேசிய ஏர்லைன்ஸ் அதிகாரியுடன் 4 நிமிட நேர உரையாடல் செய்துள்ளார். அப்போது மலேசிய ஏர்லைன்ஸ் நிறுவன அதிகாரி திரும்பத் திரும்ப விவரங்களைக் கேட்டிருக்கிறார். ஆனால், அந்த கட்டுப்பாட்டாளரோ, இருங்கள் நான் எங்கள் கண்காணிப்பு அதிகாரிய்யை எழுப்புகிறேன் என்று கூறியிருக்கிறார்.

அதாவது தான் அதிகாலை 3 மணியளவில்தான் தகவல்தொடர்பு கோபுரத்தின் கட்டுப்பாட்டைக் கையாண்டதாகவும் அதனால் விவரங்கள் பற்றி உறுதியாகத் தெரியவில்லை என்று கூறியுள்ளார்: “நான் சூப்பர்வைசரை எழுப்பி மீண்டும் சரிபார்க்கக் கோருகிறேன், கடைசி தொடர்பு பற்றிய விவரம் என்னவென்று நான் அவரிடம் கேட்கிறேன்…” என்று அவர் கூறியதாக ஸ்டார் ஆன்லைன் செய்தி வெளியிட்டுள்ளது.

வியட்நாமின் ஹோ சி மின் நகர வான்வழிப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அறை, ஏன் தங்கள் பகுதிக்குள் இன்னமும் விமானம் வரவில்லை என்ற கேள்வியைக் கேட்க 20 நிமிடங்கள் எடுத்துக் கொண்டது, ஆனால் சர்வதேச உடன்படிக்கைகளின் படி 2 நிமிடங்களில் இந்த கேள்வி எழுந்திருக்க வேண்டும். என்று இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், நீருக்கடியில் விமானம் சென்றால் அதனை கண்டுபிடிக்க உதவும் லோகேட்டரின் பேட்டரி 2012-ஆம் ஆண்டே காலாவதியாகிவிட்டது என்றும் இந்த இடைக்கால அறிக்கை தெரிவித்துள்ளது.

இந்த இடைக்கால அறிக்கை 600 பக்கங்கள் கொண்டது. எங்கே சென்றது இந்த விமானம்? தொடர்கிறது புதிர்…Mis-Malaseja.jpg

- See more at: http://www.canadamirror.com/canada/39099.html#sthash.xib1E0PM.dpuf

  • 1 month later...
  • தொடங்கியவர்

எதுவும் கிடைக்கவிட்டால் மாயமான மலேசிய விமான தேடல் பகுதி அதிகரிக்கப்படும்: ஆஸி. Posted by: Siva Published: Thursday, April 16, 2015, 15:30 [iST]

 

கோலாலம்பூர்: மாயமான மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்.ஹெச். 370-இன் பாகங்கள் தற்போது தேடப்படும் இடத்தில் கிடைக்காவிட்டால் தேடல் பகுதியை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் 8ம் தேதி மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து 239 பேருடன் சீன தலைநகர் பெய்ஜிங்கிற்கு கிளம்பிய மலேசியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்.ஹெச். 370 மாயமானது. விமானம் தெற்கு இந்திய பெருங்கடலில் விழுந்து மூழ்கிவிட்டதாகவும், அதில் இருந்த 239 பேரும் பலியாகிவிட்டதாகவும் மலேசிய அரசு அறிவித்தது. விமானம் விழுந்ததாக கூறப்படும் இடத்தில் ஆஸ்திரேலியா தலைமையில் பலநாடுகள் தேடி வருகின்றன.

பாகம் விமானம் விழுந்ததாக கூறப்படும் இடத்தில் நீர்மூழ்கி கப்பல்கள், அதிநவீன கருவிகள் மூலம் தேடல் நடந்து வருகிறது. ஓராண்டுக்கு மேலாக தேடியும் இதுவரை விமானத்தின் ஒரு பாகம் கூட கிடைக்கவில்லை. இதனால் விமானம் அங்கு தான் விழுந்ததா என்ற சந்தேகம் பலருக்கு ஏற்பட்டுள்ளது.

Read more at: http://tamil.oneindia.com/news/international/mh370-search-area-could-be-extended-224858.html

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

இந்தியா-மலேசியா இடையே வங்காள விரிகுடாவில் மாயமான மலேசிய விமானம் MH370-ன் உதிரிபாகங்கள் கிடக்கிறது என்று விமான போக்குவரத்து துறைநிபுணர் ஆண்ட்ரே மில்னே தெரிவித்து உள்ளார்.

மாயமான விமானம்

மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனத் தலைநகர் பீஜிங்கிற்கு 239 பயணிகளுடன் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 8–ந்தேதி மலேசியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான எம்.எச்.370 போயிங் ரக விமானம் புறப்பட்டுச் சென்றது. அதில் 5 இந்திய பயணிகளும் இருந்தனர்.

அந்த விமானம் புறப்பட்டுச் சென்ற சிறிது நேரத்தில் தரைக்கட்டுப்பாட்டு நிலையத்துடன் கொண்டிருந்த தொடர்பை இழந்தது. பின்னர் அந்த விமானம் என்னவானது, அதில் இருந்த பயணிகள் என்ன ஆனார்கள்? என்பது ஓராண்டாகி விட்ட நிலையிலும் உறுதியாக தெரியவரவில்லை.

மாயமான விமானம் விபத்துக்கு உள்ளாகி விட்டதாகவும், அதில் பயணம் செய்த அனைவரும் பலியாகிவிட்டதாகவும் மலேசிய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. எனினும் மாயமான விமானத்தை தேடும் பணி இன்னொரு பக்கம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

ஓயாத சர்ச்சை

இதனால் அந்த விமானம் பற்றிய சர்ச்சை இன்னமும் ஓய்ந்தபாடில்லை. அனேகமாக மாயமான விமானத்தை ஒரு வருடங்களுக்கும் மேலாக தேடுவது வரலாற்றில் இதுதான் முதல் முறையாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதற்கிடையே மாயமான மலேசிய விமானம், வேண்டுமென்றே அண்டார்டிகா பனிப்பிரதேசத்தை நோக்கி கொண்டு செல்லப்பட்டதாக விமான போக்குவரத்து நிபுணர்கள் தெரிவித்து இருக்கிறார்கள். இதுபற்றி இங்கிலாந்தைச் சேர்ந்த ‘தி மிரர்’ நாளிதழ் ஆவணப்படம் ஒன்றையும் வெளியிட்டது.

அமெரிக்க–தாய்லாந்து ராணுவத்தினர் இணைந்து நடத்திய கூட்டு போர் பயிற்சியின்போது மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாக இன்னொரு தகவல் கூறியது. மேலும், ஹிட்ச் என்ற தீவிரவாதிதான் இந்த விமானத்தை ஆப்கானிஸ்தானுக்கு கடத்திச்சென்றவர். விமானம் பாகிஸ்தான் எல்லையில் காந்தகார் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது என்று ரஷியாவில் இருந்து வெளிவரும் மோஸ்கோவ்கி கொம்சோலெட்ஸ் என்ற பத்திரிக்கை செய்தி வெளியிட்டது.

எனினும் விமானம் என்னவானது, அதில் இருந்த பயணிகள் என்ன ஆனார்கள்? என்பது கிட்டத்தட்ட ஓராண்டிற்கு மேல் ஆகிவிட்ட நிலையிலும் உறுதியாக தெரியவரவில்லை.

வங்காள விரிகுடாவில் கிடக்கிறது

இந்நிலையில் இந்தியா-மலேசியா இடையே வங்காள விரிகுடாவில் மாயமான மலேசிய விமானம் MH370-ன் உதிரிபாகங்கள் கிடக்கிறது என்று விமான போக்குவரத்து துறைநிபுணர் ஆண்ட்ரே மில்னே தெரிவித்து உள்ளார்.

விமானம் மாயமானதில் இருந்து நிபுணர் ஆண்ட்ரே மில்னே இதுதொடர்பாக விசாரித்து வந்துஉள்ளார். அவர் விமானத்தின் உதிரிபாகத்தை இந்தியா-மலேசியா இடையே வங்காள விரிகுடாவில் கண்டுபிடித்து இருக்கலாம். ஆனால் விமானத்தை கண்டுபிடிக்க 1.3 மில்லியன் பவுண்ட் பணம் வேண்டும் என்று தெரிவித்து உள்ளார்.

வங்காள வரிகுடாவில் மீதம் உள்ள பகுதிகளும் ஆய்வு செய்யப்படவேண்டும் என்று அவர் வலியுறுத்தி உள்ளார். ராணுவ விமான தொழில்நுட்ப துறையில் பணியாற்றும் ஆண்ட்ரே இதற்கு ஆதரவாளர்கள் பணம் வழங்குவார்கள் என்றும் நம்பிக்கை தெரிவித்து உள்ளார்.

அவர் பேசுகையில், இந்த பகுதிகளில் தேடப்படவில்லை. விமானத்திற்கு என்னநடந்தது என்பதில் உண்மையை கண்டுபிடிக்க, வழியினை ஆய்வு செய்ய எனக்கு உங்களுடைய உதவி தேவைப்படுகிறது. மாயமான மலேசிய விமானம் குறித்து கேள்விபட்டவர்கள், ஒவ்வொரு நபரது நெஞ்சையும் தொட்டிருக்கும். விமானம் மாயமான விவகாரம் உலகத்தில் உள்ள அனைத்து விமானபோக்குவரத்து துறை நிபுணர்களையும் பேசவைத்து உள்ளது.

விமானத்தில் பயணம் செய்தவர்களை மாயமாக செய்வதன் மூலம் இதுவும் மனிததன்மைக்கு எதிரான கிரிமினல் குற்றம் என்றமுறையில் இது என்னுடைய நெஞ்சை தொட்டு உள்ளது. விமானத்திற்கு என்ன நடந்தது என்பதை தெரிந்துக் கொள்ள வேண்டும் என்றால், இந்த துணிகர முயற்சியில் அனைவரும் ஈடுபட வேண்டும், என்று தெரிவித்து உள்ளார்.

Malaysia-airlines-600x450.jpg

Missing-MH370.jpg

- See more at: http://www.canadamirror.com/canada/41612.html#sthash.3V64UpEN.dpuf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.