Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உங்கள் வயிற்றிலும் அடித்து உங்கள் உறவினர் வயிற்றிலும் அடிப்ப

Featured Replies

எனக்குக் கிடைத்த உள் வீட்டுத் தகவல்களின் படி கடந்த ஆறு மாதங்களில் சிறிலங்கன் எயார்லைன்ஸ் நட்டத்திற்கு உட்பட்டுள்ளது.

இந்த வருட நிதி நிலை அறிக்கை நட்டமாகவே இருக்கும்.சிறிலங்கன் ஏயார்லைன்ஸை புறக்கணிப்பதால் அதன நட்டமடயச் செய்யலாம்.எமரேட்ஸ் நிறுவனத்துடன் ஏற்படுத்தப்பட்ட முகாமைத்துவ ஒப்பந்தம் நீடிக்க படமட்டாது.அரசாங்கம் மிகின் என்னும் புதிய விமானசேவை நிறுவனத்தைத் துவக்க இருப்பதாகத் தெரிகிறது.இது விமானக் கொள்வனவுகளில் இருந்து லஞ்சம் பெறும் நடவடிக்கையாக இருக்கலாம்.எது எப்படியாயினும் உல்லாசப்பயணிகளின் வருகை வீழ்ச்சியால் சுற்றுலாத் துறை பாதிப்படைந்துள்ளது.

மேலும் நாம் பிரச்சாரம் ,புறக்கணிப்பு செய்வோமாயின் சிறிலங்காவிற்கு அடுத்த ஆண்டில் ஏற்பட இருக்கும் நிதி நெருக்கடியை மேலும் கடுமையானது ஆக்கலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்னமும் எழுதி முடிக்கவில்லையா சும்மா??

ஏன் நான் கண்ட கண்டவர்களிடம் எல்லாம் தர்ம அடி வாங்குவதை பார்த்து கை கொட்டி சிரிக்கவா தூயா... சீறும் பாம்பை நம்பினாலும்.. சிரிக்கும் பெண்ணை சும்மா கூட நம்ப மாட்டேன்...

நாரதர்,

சிறீலங்கன் தற்பொழுது இந்தியாவின் பல நகரங்களிற்கு இணைப்பு வழங்கும் விமானசேவையாக வெளிநாடுகளில் தம்மை விளம்பரப்படுத்துகிறார்கள். சிறீலங்காவிற்கு ஏற்பட்டுள்ள கெட்டபெயரின் தாக்கத்தில் இருந்து தப்பிக்கவும் இந்தியாவில் பொருளாதார வழர்ச்சிகாரணமாக உலகளாவியரீதியில் அது பெற்றுள்ள கவனத்தை பயன்படுத்தியும் (trying to ride the "Indian wave") இந்தியா நோக்கி அதிகரித்துள்ள பயணிகளை இலக்கு வைத்தும் தம்மை காப்பாற்ற முயல்கிறார்கள்.

மிகின் உருவாக்குவது budget airlines பாணியிலான சேவைகளிற்காக இருக்கலாம். மிகின் இந்திய சந்தைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் என்று எதிர்பார்க்கலாம். இந்தியாவின் பொருளாதார வழர்ச்சி வந்து அயல் நாடுகளிற்கு பரவுவதை தடுக்க முடியாது. அதன்படி தென் ஆசிய பிராந்திய பயணிகள் தொகை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கலாம். அத்தோடு மத்தியகிழக்கு நாடுகள் தென்னாசியா கிழக்காசிய என்ற 3 பிராந்தியங்களிலும் பாரிய வழர்ச்சி எதிர்பார்க்கப்படுகிறது. மிகின் என்ற புது நிறுவனத்தின் மூலம் சிறீலங்கன் அசையாச் சொத்துகளை வேண்டினால் கடன் வழங்குபவர்களிடம் இருந்து ஆரம்ப காலத்திற்கு மீளஅளிப்பு பிரச்சனைகள் இருக்காது. அவற்றை பாங்கிரப்சி அடித்து தான் செய்ய வேண்டும் என்று இல்லை.

சும்மா,

அறிவுபூர்வமாக உமது விளக்கங்களையும் திட்டங்களையும் வைத்தால் வாசித்து அறிந்து கொள்வார்கள் பலர். விளக்கமில்லாமல் விளங்காபயல் எழுதிப்போட்டர் என்றும் GDP ஆல் மடக்கலாம் என்றும் சட்டச் சிக்கல் பற்றி எழுதினதும் ஏதோ விளக்கத்தோடை தானே?

நான் அறிந்த தகவலின் படி மிகினுக்கு ஆரம்பிக்க இரண்டு A320 விமானங்கள் இந்தியாவில் இருந்து லீசில எடுக்கப் போகிறர்கள்.இலங்கையின் சுற்றுலா வருவாயில் இப்போது இந்தியாவில் இருந்து வருபவர்கள் தொகை தான் அதிகம்.தமிழ் நாட்டிலும் அண்மையில் திருமாவளவன் சிறிலங்கன் சேவயை இந்தியா நிறுத்த வேண்டுமென்று கோரி இருப்பது கவனிக்கத் தக்கது.மத்திய கிழக்கின் விமானச்சேவை நிறுவனக்களால் சிறிலங்கனுக்கு பலத்த போட்டி இருகிறது கட்டார்,எமெரேட்ஸ், மற்றும் எதிகாட் ஆல்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முதற்கட்டமாக ஒரு கேள்வி கேட்கின்றேன். புறக்கணிப்பு சிறிலங்கா என்று சொல்கின்றீர்கள். நாம், அதாவது, புலத்தமிழர்கள், இலங்கையில் தயாரிக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்பட்ட பொருட்களை பாவிப்பதையோ இலங்கையில் இருந்து தருவிப்பதையோ நிறுத்துவது சம்பத்தமாக பேச்சுக்கள். அது நிற்க, யாராவது சொல்ல முடியுமா, இலங்கையின் ஏற்றுமதி பொருட்களின் எத்தனை சத விகிதம் புலத்தமிழர்கலால் புலத்திற்கு இறக்குமதி செய்யப்படுகின்றன என்பதை? இலங்கை தயாரிப்பு/ஏற்றுமதி பொருட்கள் என்ன? நாம் அன்றாடம் பாவிக்கும் பொருட்கள் மட்டுமா? இலங்கையின் பிரதான ஏற்று மதிப்பொருட்களாக கறுவா, தேயிலை, இறப்பர் போன்றவை. இவற்றை நாம் புறக்கணிக்கின்றோம் என்று பேச்சளவில் தான் செயற்படுத்த முடியும். காரணம் அந்த சந்தை புலத்தமிழர்களை நம்பி இல்லை. இன்னுமொரு உதாரணமாக, ஒரு புடவையை எடுத்துக் கொள்ளுங்கள். பிரித்தானியா ஆகட்டும், வேறு புல நாடகட்டும், எந்த ஒரு டிசைனர் காட்சி அறைகளிளும் இலங்கையில் தயாரித்த உடைகள் விற்கப்படுகின்றன. புறக்கணிக்க முடியுமா? புறக்கணித்தால் போல அதில் ஒரு 5% பாதிப்பையாவது உருவாக்க முடியுமா? புறக்கணிப்பதற்கு அது இலங்கையில் தயாரித்தது என்பதை எப்படி கண்டு பிடிப்பது? நாம் பாவிகும் கார் ஆசனம் அல்லது வீட்டில் இருக்கும் நாற்காலிகளில், இலங்கை இறப்பர் பாவிக்கப்பட்டு இருக்கலாம்,

அந்த நிறுவனங்களை வேற்று நாட்டு இறப்பரை பாவியுங்கள் என கேட்க முடியுமா? நமக்காக அவர்களது பொருள் தரத்தையும் இலாபத்தையும் இழக்க அவர்கள் தயாரா?

புலத்தமிழர்கள் எதை அதிகமாக இறக்குமதி செய்கின்றார்கள் அல்லது விற்பனை செய்கின்றார்கள் அல்லது பாவிக்கின்றார்கள். உணவுப்பொருட்கள். இலங்கையில் இருந்து உணவுபொருட்களை தனியார், முக்கியமாக தமிழர்கள் புலத்தமிழர்களுக்கு ஏற்றுமதி செய்கின்றார்கள், இவர்களில் அனைவரும் இலங்கை அரசாங்கத்துகு சரியாக வரிகளை செலுத்துகின்றார்களா? உணவுப்பொருட்களை புறக்கணிப்பதால் அரசாங்கத்துக்கு எவ்வளவு நட்டம் வந்து விடப்போகின்றது?

இறுதியாக, இலங்கையின் இரத்தின கற்களுக்கு உலக மக்களிடம் சிறந்த மதிப்பு இருக்கின்றது. புலத்தமிழர்கள் எத்தனை பேர், இலங்கை இரத்தின கற்கலை வேற்று நாடுகளில் அதாவது புலத்தில் வாங்கி இருப்பார்கள்? விலையைப்பார்த்தாலே அவசர சேவைக்கு தொடர்பு கொள்ள வேண்டி வரும். ஆக புறக்கணிப்பு சிறிலங்கா என்பது பாரிய தாக்கம் எதையும் ஏற்படுத்தாது என்பதும் அது ஒரு கடினமான முயற்சி என்பதும் எனது கருத்து.

குறுக்ஸ், தூயா, கட்டுரை எழுத ஆரம்பித்து விட்டேன்...முடிந்தது பிரசுரமாகும்.

இலங்கை விமான சேவையை பயன்படுத்தாமல் இருப்பவர்கள் பலரை நான் அவுஸ்திரேல்யா & நியூசிலாந்தில் கண்டதுண்டு.

மேலே குறிப்பிட்டது போல, அனைத்தையும் புறக்கணிப்பது என்பது கடினமே! காரணம் சில நேரங்களில் எமக்கே தெரிவதில்லை!

ஆயினும் சில தமிழ் கடைகளில் விற்கும் பொருட்கள் போன்றவற்றால் அவர்களுக்கு தாக்த்தை ஏற்படுத்தலாமா என பெரியவங்க யாரவது சொல்ல வேண்டும்!

(சும்மா, உங்களுக்கு தர்ம அடி வாங்கி குடுப்பதற்கு தானே நான் இங்கிருக்கின்றே)

கட்டுரையை எதிர்பார்த்து காத்திருக்கின்றோம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எனக்கு தர்ம அடியா? ஆயாவிடம் கதை சொல்ல சொல்லிவிட்டு தூயா தூங்குங்கள். (கனவு வரும்)... சென்ற ஆண்டு தமிழ் கடையில் பார்த்த ஞாபகம்.. "யாழ்ப்பாண முறைப்படி தயாரிக்கப்பட்டது" என்ற வாசகமும் தயாரித்த இடம் கேரளா என்றும் இருந்தது.....

கிழவியள் எல்லாம் பபா என்றா.. சின்ன பொடியன் என்னை எப்படி சொல்லுறது? குட்டி பபா என்றா? :lol::lol:

சென்ற ஆண்டு தமிழ் கடையில் பார்த்த ஞாபகம்.. "யாழ்ப்பாண முறைப்படி தயாரிக்கப்பட்டது" என்ற வாசகமும் தயாரித்த இடம் கேரளா என்றும் இருந்தது.....

விளக்கமாக சொல்லுங்கள் சும்மா :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விளக்கமாக சொல்லுங்கள் சும்மா :lol:

ஒரு தமிழருடைய ஆசிய உணவுப் பொருட்கள் விற்கும் கடையில் ஒரு மிளகாய் தூள் அழகாக தமிழில் விளம்பரப்படுத்தப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. அதில் "யாழ்ப்பாண முறைப்படி தயாரிக்கப்பட்டது" "Made in Kerala, India" போன்ற வாசகங்கள் இருந்தன.

  • 4 weeks later...

Mihin விமான சேவை lower cost budget விமான சேவை என்று அறிய முடிகிறது.

மேலும் Sri Lankan இன் தற்போதை கழிவு விலை புறக்கணிப்பை மக்கள் பொறுப்பாக ?#8220;ரளவு நடைமுறைப்படுத்துகிறார்கள் என்றதை காட்டுகிறது என கொள்ளலாமா?

Why "I will never travel to Sri Lanka".

http://www.eelamist.com/forum/viewtopic.php?t=299

Edited by kurukaalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இலங்கை விமான சேவையை பயன்படுத்தாமல் இருப்பவர்கள் பலரை நான் அவுஸ்திரேல்யா & நியூசிலாந்தில் கண்டதுண்டு.

அவுசிற்கு நேரடி சிறிலங்கன் எயர் லைன்ஸ் சேவை இல்லை. முன்பிருந்ததாம். 2001 தாக்குதலுக்கு முன்னர். கட்டுநாயக்கா

அப்ப சீப்பா வேறை இருந்ததாம் என்று பலர் ஆதங்கப்பட்டு கேட்டிருக்கிறேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.