Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இலங்கைத் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் நரேந்திர மோடி தீவிர அக்கறை – முரளிதர் ராவ்

Featured Replies

இலங்கைத் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் நரேந்திர மோடி தீவிர அக்கறை – முரளிதர் ராவ் FEB 01, 2015 | 11:57by அ.எழிலரசன்in செய்திகள்

Muralidhar-rao-300x200.jpgஇலங்கைத் தமிழர்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தீவிர அக்கறை கொண்டுள்ளதாக, பாஜகவின் தேசிய செயலர் முரளிதர் ராவ் தெரிவித்துள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

“இலங்கைத் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தீவிர அக்கறை காண்பித்து வருகிறார்.

இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு, 13வது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தும் படி அவர், முன்னைய மகிந்த ராஜபக்ச அரசாங்கத்திடம் அவர் வலியுறுத்தி வந்தார்.

அதுபோலவே, தற்போதைய மைத்திரிபால சிறிசேன தலைமையிலான சிறிலங்கா அரசாங்கத்திடமும், 13வது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்தி வருகிறார்.

மீனவர்களின் பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வு காணும் முயற்சிகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

http://www.puthinappalakai.net/2015/02/01/news/3312

 

பிரதமராவதற்கு கட்சியிலும் செல்வாக்கு வேண்டும் ஆனால் மக்களின் செல்வாக்குடன் மட்டும் பிரதமரான மோடி அவர்கள் தனது பதவியை நிலை நிறுத்த எனவெல்லாம் செய்வாரோ?ஆனால் ஈழத்தமிழர் விடயத்தில் நியாயமாக நடந்து கொண்டால் சரி

  • கருத்துக்கள உறவுகள்

பூனைகள் உள்ள வீட்டில் கிளிகளைப் பாதுகாப்பதற்கு அவற்றைக் கூண்டில் அடைக்கவேண்டும்.  :o

 

பூனைகளுக்குத் தப்பி இந்தியாவில் அடைக்கலம் தேடியிருக்கும் கிளிகளையும் கூண்டைத் திறந்து வெளியேவிட நரேந்திர மோடி அரசு தீவிர அக்கறை கொண்டுள்ளதாகச் செய்திகள் வந்தனவே....  :( 

என்ன நடக்குதோ ஒன்னும் புரியவில்லை

  • கருத்துக்கள உறவுகள்

மைத்ரேயரே!

 

இனிவரும் அரசர்களைச் சொல்கிறேன் கேளும். இப்போது அரசனாக இருக்கும் பரிக்ஷித்து மன்னனுக்கு ஜனமேஜயன் சுருதசேனன் உக்ரசேனன் பீமசேனன் என்ற நான்கு பிள்ளைகள் பிறப்பார்கள். ஜனமேஜயனுக்கு சதானீகன் என்பவன் பிறப்பான். அவன் யாக்ஞவல்க்கியரிடம் வேதத்தையும், கிருபாசாரியரிடத்தில் வில் வித்தையும் கற்று கொடியவைகளான விஷயங்களில் வெறுப்புற்றுச் சவுகை முனிவரின் உபதேசத்தால் ஆன்மஞானத்தில் தேர்ந்து உத்தமமான மோட்சத்தை அடைவான். சதானீகனின் குமாரன் அசுவமேத தத்தன், அவன் மகன் அதிசீமகிருஷ்ணன், அவன் மகன் நிசக்குனு, அவன் காலத்தில் ஹஸ்தினாபுரம் கங்கையால் அழிக்கப்படும். பிறகு அவன் கவுசாம்பி என்ற நகரத்தில் வாசஞ்செய்வான். அவஷக்கு உஷ்ணன் என்ற ஒரு மகன் பிறப்பான். அவன் மகன் விசித்திரரதனன். அவன் மகன் விருஷ்ணிமான். அவன் மகன் சுஷேணன், அவன் மகன் சுனீதன், அவன் பிள்ளை நிருபசசக்ஷú, ஞூவன் மகன் சுகிபலன், அவன் மகன் பாரிபிலவன், அவன் மகன் சுநயநன். அவன் மகன் மேதாவி. அவன் பிள்ளை ரிபஞ்சயன். அவன் மகன் அருவன், அவன் குமாரன் திக்குமன், அவன் மகன் பிருகத்திரதன், அவன் மகன் வகதாசன், அவனுக்கு சதானீகன் என்றொரு மகனும் உண்டு. அவனுக்கு உதயன் என்பவன் பிறப்பான். அவனுக்கு விஹீநரன் பிறப்பான். அவனுக்கு தண்டபாணி என்ற புதல்வன் ஒருவன் உண்டாவான்.

 

http://18purana-asoca.blogspot.in/2013/04/iv.html

 

கலிகாலத்தில் என்ன என்ன நிகழ்வுகள் ஏற்படும் ... வரும் அரசாள்பவர்கள் யார் யார்..? லிஸ்டு இருக்கு.. நானும் தேடி தேடி பார்க்கிறென்.. தமிழர் பிரச்சனைய பற்றி ஒரு வரி கூட இல்லை..

 

இலங்கைத் தமிழர்களின் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதற்கு, 13வது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தும் படி அவர், முன்னைய மகிந்த ராஜபக்ச அரசாங்கத்திடம் அவர் வலியுறுத்தி வந்தார். ----- 1

 

அதுபோலவே, தற்போதைய மைத்திரிபால சிறிசேன தலைமையிலான சிறிலங்கா அரசாங்கத்திடமும், 13வது திருத்தச்சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு வலியுறுத்தி வருகிறார்.----2

 

 

கலியுகத்தின் முடிவு.... அதாங்க உலகம் அழியும் போது கடைசியாக இருக்கும்.... இலங்கை அதிபர்கிட்டயும் ஒருக்கா வலி உறுத்தி விடுங்கோ..
 

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.