Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எண்ணை கலந்த யாழ்ப்பாணம் நீர் தொடர்பாக அடுத்து என்ன செய்யலாம்..? ஒரு பகிர்வு

Featured Replies

  • தொடங்கியவர்

தமிழறிவு,

எண்ணை அற்ற 27 கிணறுகளின் மாதிரி தொடர்பான அறிக்கை மாத்திரமே வெளியிடப்பட்டதாகவும் ஏனையவை அரசியல் அழுத்தம் காரணமாக வெளியிடப்படுவது தாமதிக்கப் படுவதாகவும் கூறப்படுவதில் உண்மை ஏதும் உள்ளதா..?

 

வணக்கம்!
 
இந்த இணையத்தைப் பற்றி எனது UKஇல் உள்ள எனது அண்ணா மூலம் அறிந்தேன். நான் யாழ்ப்பாணத்தில் வசிப்பதால் இவ்விடயம் சம்மந்தமாக எனக்குத் தெரிந்த சில விடய..............................

 

பகிர்வுக்கு மிக்க நன்றி தமிழறிவு 

  • தொடங்கியவர்

http://jaffnawater.proboards.com/

This forum is created for discussing opinions and collecting expert views about the Jaffna groundwater contamination crisis. Your comments and contributions become very important when making significant decisions that could affect the entire society and homeland.

யாழ் நிலத்தடி நீர் விவகாரம் பற்றிய உங்கள் கருத்துக்களையம், துறைசார் அறிவையும் பகிரும் கருத்துக்களமாக இத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது. உங்களது பதிவுகளை இத்தளம் ஆவணப்படுத்துவதுடன் இது தொடர்பான சமயோசிதமான முடிவுகளையும் எடுக்க உதவுகின்றது.

என் இனிய உறவுகள் அனைவர்க்கும் வணக்கம், எனை உங்கள் குழுமத்தில் ஒருவனாக ஏற்றுக் கொண்டமைக்கு மிகவும் நன்றி.
நான் நேற்று எனது தலைமையகத்தில் உள்ள ஆய்வு கூடத்துடன் தொடர்பினை ஏற்படுத்தி இது பற்றி வினவிய போது, நம்மால் பரிசோதனைக்கு உட்படுத்திய பிரதேசங்களான, தெள்ளிப்பளை, மல்லாகம், அளவெட்டி, இளவாலை, மாதகல், வசாவிளான், பன்னாலை, சுன்னாகம், உடுவில், மானிப்பாய் போன்ற இடங்களில் உள்ள கிராமசேவகர் பிரிவுகளில் சேகரிக்கப் பட்ட நீர் மாதிரிகளின் முடிவுகள் சற்றே ஆச்சரியம் அளிக்கக் கூடியதாக உள்ளது. ஒவ்வொரு கிராம அலுவலர் பிரிவிலும் குறைந்தது மூன்று கிணறுகள் வீதம் தெரிவுசெய்யப்பட்டன. இவற்றில், ஒன்று அல்லது இரண்டு கிணறுகள் பதிக்கப் பட்டும், மற்றைய கிணறில் ஏற்புடைய விகிதாசாரத்திலும்  நீர் மாசடைந்து காணப்படுகிறது. இந்த விகிதாசாரமானது, நான் அறிந்த வகையில், ஒரு லீட்டர் நீரில், 0.2 மில்லி கிராம் அளவு மாசு படிந்திருத்தல் ஏற்புடையது ஆகும் என எமது ஆய்வுகூட தொழில்நுட்பவியலாளர் ஒருவர் தெரிவித்தார்.
கொக்குவில் பிரதேசத்தில் உள்ள சம்பியன் ஒழுங்கையில் வசிக்கும், ஒரு வைத்தியரின் வீட்டில், இந்த மாசுப் படிவமானது, 32 mg ஆக இருப்பதாக, எம்முடன் வந்த PHI அதிகாரிகள் தெரிவித்தார்கள்.
நமது ஆய்விற்குட்பட்ட பிரதேசத்தில், சுதுமலைப் பகுதியில், மதவடி ஒழுங்கையில், ஒரு வீட்டில், நீர் 12 mg காணப்படுவதாக உள்ளது.
 
திரு. உதயம் அவர்களின் கருத்து பற்றி, என்னால் முழுமையாக ஊர்ஜிதம் செய்யமுடியாதுள்ளது. நான் அறிந்த வரையில், எம் நிறுவனம், இதுவரை காலமும், எந்த அரசியல் தலையீடும் இன்றி செயற்பட்டுவருகிறது. எம் தலைமையகம், சுவிட்சர்லாந்தில் உள்ளது. நாம் அவர்களால் வகுக்கப்பட்ட சட்ட திட்டங்களுக்கு அமையவே இதுவரை காலமும் செயற்பட்டு வருகிறோம். ஆனால், நமது முடிவுகளை கையளிக்க இருப்பது, அந்ததந்த பகுதி MOH  உத்தியோகத்தர்களிடமாகும். ஆகவே, அதனை நீதிமன்றில் சமர்பிப்பது, அவர்களின் கரங்களிலேயே உள்ளது.
நீங்கள் கூறிய மாதிரி, அரசியல் தலையீடும் இல்லாமல் இல்லை. அழுத்தங்கள் வருவது, சகயம். அதை எதிர்த்து வெல்வதே, தமிழரின் தொன்று தொட்டு தொடர்ந்து வரும் வீரம். ஆனால், ஒருசில தமிழ் அரசியல்வாதிகளே இதற்கு சோரம் போயுள்ளது வேதனை அளிக்கிறது.
மனித உயிரின் மதிப்புத் தெரியாமல்  அதனுடன் விளையாட நினைத்தவர் இப்போது நாடாளும் தகுதி இழந்து, வீட்டிலும் மனைவி, மக்களிடத்தில், மரியாதை இழந்து, மூலையில் கூனிக் குறுகி இருப்பதை, யாவரும் அறிவர்.
உண்மை என்றும் தோற்பதில்லை. ஆனால், அது காலநேரத்தில் வெல்ல வேண்டும் என்பதே, எல்லோருடைய வேண்டுதலாகும்.
நிலத்தடி நீரில் கழிவுஎண்ணெய் தொடர்பாக ஆராய நோர்வே நிபுணர்கள் இலங்கை பயணம்
 
  • 1 month later...
  • கருத்துக்கள உறவுகள்

விவசாயத்திற்கு பயன்படும் இரசாயனபொருட்களினால் நீர் மாசுபடுத்தப்படுத்தப்பட்டிருக்குமானால் நாட்டின் எனைய பகுதிகளிலும் இந்த நிலை வந்திருக்க வேண்டும்.ஆனால் குறிப்பிட்ட பகுதிகளில் மட்டும் இந்த நிலை ஏற்பட்டிருப்பதால் அந்தக் காரணத்தை விட வேறு காரணங்களே இருக்க முடியும்.இது எமது எதிர்கால சந்ததிய் வாழ்க்கையுடன் சம்பந்தப்பட்ட விடயம் என்பதால் சம்பந்தப்பட்டவர்கள் பொறுப்புடன் செயல் பட வேண்டும். குறுகிய நோக்கங்களுக்காக சோரம் போய் எமது நிலத்தையும் சந்ததியையம் அழித்து விட முடியாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.