Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

சதாமுக்குத் தூக்குத் தண்டனை.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

_42278428_get203bodylook.jpg

சியா முஸ்லீம்களை அதிகமாகக் கொண்டிருந்த ஈராக்கிய நகரான Dujail இல் 1982 இலி 148 பொதுமக்களைக் கொன்ற நிகழ்வில் மறைமுகமாக தொடர்பு கொண்டிருந்ததற்காக ஈராக்கிய முன்னாள் அதிபர் சதாம் குசைனுக்கு இன்று தூக்குத்தண்டனைத் தீர்வு அளிக்கப்பட்டது.

இவர் ஈராக் மீதான 2003 அமெரிக்க பிரித்தானிய கூட்டுப்படையெடுப்பின் பின் சிறைபிடிக்கப்பட்டு நீதி விசாரணைக்குட்படுத்தப்பட்டி

அமெரிக்க ஏகாதிபத்தியம் ஒழிக !!!

ஈராக் மக்களின் அமெரிக்க எதிர்ப்புக்கு துணை நிற்போம் !!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

150 பேரின் சாவுக்கு மறைமுகமாக தொடர்புகொண்ட சதாமுக்கு தண்டனை சரியென்று ஒப்புக்கொண்டால்

உலகில் பல இலட்சக்கணக்காக மக்களின் சாவுக்கு காரணமான புஷ்க்கு என்ன தண்டனை? :oops: :oops: :oops:

சதாம் உசேனுக்கு மரண தண்டனை- தீர்ப்பை கேட்டு சதாம் உசேன் ஆவேசம்

[sunday November 05 2006 06:32:08 AM GMT] [maalaimalar.com]

saddam.jpg

பேரழிவு ஆயுதங்களை தயாரித்ததாக கூறி ஈராக் மீது அமெரிக்கா கடந்த சில ஆண்டுகளுக்கு முன் போர் தொடுத்தது. கடும் தாக்குதலுக்குப் பிறகு சதாம் உசேன் ஆட்சியை அமெரிக்க கூட்டணி படை அகற்றியது. ஆனால் சதாம் உசேன் அமெரிக்க படையிடம் சிக்காமல் பதுங்கி இருந்தார்.

பல மாதங்களாக நடந்த தேடுதல் வேட்டைக்கு பிறகு பாதாள அறையில் பதுங்கி இருந்த சதாம் உசேனை அமெரிக்க படை 3 ஆண்டுகளுக்கு முன் கைது செய்தது.சதாம் ஆட்சி அகற்றப்பட்டதை தொடர்ந்து அங்கு அமீது கர்சாய் தலைமையில் புதிய ஆட்சி ஏற்பட்டது.

சிறையில் அடைக்கப்பட்ட சதாம் உசேன் மீது பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

தனது ஆட்சி காலத்தில் சதாம் உசேன் தனது அரசியல் எதிரிகளை கொன்றதாகவும், 1980-ம் ஆண்டு துஜைல் நகரில் 148 ஷியா முஸ்லிம் மக்களை கொன்று குவித்ததாகவும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பாக்தாத்தில் இந்த வழக்கை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்கப்பட்டது. நீதிபதி ரவூப் அப்துல் ரகுமான் தலைமையில் 5 நீதிபதிகள் இந்த வழக்கை விசாரித்தனர்.

இந்த வழக்கு விசாரணையின்போது சதாம் உசேனின் வக்கீல்கள் பலர் கடத்தப்பட்டனர். விசாரணை கூண்டில் உட்கார்ந்தபடியே சதாம் உசேன் நீதிபதியுடன் காரசார விவாதத்தில் ஈடுபட்டார். பல தடவை விசாரணைக்கு ஒத்துழைக்காமல் வெளிநடப்பு செய்தார். வழக்கு விசாரணையில் அமெரிக்கா தலையீடு இருப்பதாகவும், நீதிபதி அமெரிக்காவின் கைப்பாவை என்றும் சதாம் உசேன் ஆவேசமாக குற்றம் சாட்டினார்.

உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் கடந்த அக்டோபர் மாதம் 16-ந்தேதி தீர்ப்பு வழங்கப்படுவதாக இருந்தது. ஆனால் தீர்ப்பு 2 வாரத்துக்கு மேல் தாமதம் ஆனது. இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த வழக்கில் சதாம் உசேனுடன் அவரது சகோதரர், உதவியாளர் உள்பட மேலும் 7 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் சதாம் உசேனால் கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள் கண்ணீர் மல்க அவருக்கு எதிராக சாட்சியம் அளித்தனர்.

அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டு உள்ளதால் அவருக்கு அந்த நாட்டு சட்டப்படி தூக்கு தண்டனை வழங்கப்படுவது உறுதி என்றே அனைத்து வட்டாரங்களும் தெரிவித்துள்ளன. ஒருவேளை அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படவும் வாய்ப்பு உள்ளது.

சதாம் உசேனுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்படுவதை யொட்டி ஈராக் முழுவதும் பதட்டம் உருவாகி உள்ளது. ஏற்கனவே சதாம் உசேன் ஆதரவு தீவிரவாதிகள், சன்னி பிரிவினர் ஈராக் அரசுக்கு எதிராகவும், அமெரிக்க படைகளுக்கு எதிராகவும் தற்கொலை படை தாக்குதல் நடத்தி வருகிறார்கள்.

சதாம் உசேன் வழக்கில் தீர்ப்பு வருவதால் தீவிரவாதிகள் அதிரடி தாக்குதல் நடத்தக்கூடும் என்பதால் நாடு முழுவதும் ராணுவம் உஷார் படுத்தப்பட்டுள்ளது.

ராணுவத்தினருக்கு விடுமுறை ரத்து செய்யப்பட்டு உடனடியாக வேலையில் சேர உத்தரவிடப்பட்டு உள்ளது. அமெரிக்காவை துணிச்சலுடன் எதிர்த்த சதாம் உசேனை சில அரபு நாடுகளும், இதர முஸ்லிம் நாடுகளும் ஆதரிக்கின்றன. அந்த நாடுகளிலும் பதட்டம் நிலவுகிறது. சதாம் உசேனுக்கு ஆதரவாகவும் அமெரிக்காவை கண்டித்தும் ஜோர்டான் உள்பட பல நாடுகளில் ஆர்ப்பாட்டம், பேரணி நடந்து வருகிறது.

அமெரிக்கா மற்றும் அதன் ஆதரவு நாடுகளிலும் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

ஈராக் தலைநகர் பாக்தாத் மற்றும் அதை ஒட்டிய 2 முக்கிய நகரங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. சதாம் உசேனின் சொந்த ஊரான திக்ரித் நகரம் அமைந்துள்ள சலாகுதீன் மாகாணத்திலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. ஈராக்கில் ரத்த ஆறு ஓடும் அபாயம் அதிகரித்துள்ளது.

வாகன போக்குவரத்தும் சில நகரங்களில் தடை செய்யப்பட்டுள்ளது. பாக்தாத் விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் ஷியா மற்றும் குர்து இன மக்கள் அதிகமாக வசிக்கும் பகுதிகளில் சதாம் உசேன் ஆட்சியில் கொடுமைப்படுத்தப்பட்டவர்கள் இன்று தீர்ப்பு வருவதால் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்தில் திளைக்கிறார்கள்.

சதாம் வழக்கில் தீர்ப்பு கூறும் நீதிபதி அப்துல் ரகுமான் குர்து இனத்தை சேர்ந்தவர். சதாம் உசேனால் இவரது இனத்தவர்கள் பலர் கொல்லப்பட்டனர்.

இன்று அந்த நீதிபதி வாசிக்கும் தீர்ப்பு 100-க்கும் மேற்பட்ட பக்கங்களை கொண்டது. அதை முழுமையாக படித்து முடிக்க பல மணி நேரம் ஆகும். தீர்ப்பு மற்றும் தண்டனையை முழுமையாக ஒரே நாளில் அறிவிக்க முடியாததால் கட்டம் கட்டமாக அறிவிக்கவும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

தூக்குத்தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டால் அதை எதிர்த்து சதாம் உசேன் அப்பீல் செய்ய முடியும். எனவே தண்டனை நிறைவேற்றப்படுவதிலும் தாமதம் ஆகும்.

சதாம் உசேன் வாழ்க்கை குறிப்பு

1937 ஏப்ரல் 28-பாக்தாத் அருகே திக்ரிக் பகுதியில் உள்ள அவுஜா கிராமத்தில் ஏழை விவசாயியின் மகனாக பிறந்தார்.

1956 ஈராக்கின் பாத் சோசலிஸ்ட் கட்சி உறுப்பினராக சேர்ந்தார்.

1958-அப்போதைய ஈராக் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தியதாக 6 மாதம் சிறையில் அடைக்கப்பட்டார்.

1959- பிரதமர் அப்துல் கரீமுக்கு எதிராக நடந்த புரட்சியில் ஈடுபட்டார். அப்போது மந்திரியின் காவலாளி சுட்டதில் காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்தது. அதே ஆண்டில் சிரியா மற்றும் எகிப்துக்கு தப்பி ஓடினார்.

1960 பிப்ரவரி 25-புரட்சி நடத்தியதாக மரண தண்டனை விதிக்கப்பட்டது.

1962- எகிப்தில் மேல்நிலை பள்ளி படிப்பை முடித்தார்.

1963 பிப்.8- ரமகான் புரட்சியை தொடர்ந்து ஈராக் திரும்பினார்.

1966- பாத் கட்சியின் துணை பொதுச்செயலாளர் ஆனார்.

1967- ஜெயிலில் இருந்து தப்பி ஓட்டம்.

1968- உள்நாட்டு பாதுகாப்புத்துறை தலைமை பொறுப்பு ஏற்றார். சட்டத்துறை பட்டம் கிடைத்தது.

1979 ஜுன்- ஈராக் அதிபர் பொறுப்பை ஏற்றார்.

1980 செப்டம்பர் 22- ஈரானுடன் போர் தொடங்கியது.

1988- அமெரிக்க கடற்படையின் உதவியுடன் ஈரான் பிடித்த பகுதிகளை மீட்டார்.

1990 ஆகஸ்டு 2- குவைத்துக்கு எதிராக போர் தொடுத்து குவைத்தை கைப்பற்றினார்.

2003 ஏப்ரல்- அமெரிக்கா தாக்குதல் நடத்தியதில் சதாம் ஆட்சி அகற்றப்பட்டது.

ஜுன் 22- சதாமின் 2 மகன்களும் (உதய்-குவாசாய்) குண்டு வீச்சில் கொல்லப்பட்டனர்.

டிசம்பர்-11 பாதாள சுரங்கத்தில் பதுங்கி இருந்தபோது அமெரிக்க படையினரால் கைது செய்யப்பட்டார்.

2004 ஜுலை 1- அவர் மீதான வழக்கில் முதல் தடவையாக பாக்தாத் கோர்ட்டில் ஆஜரானார்..

சதாம் எழுச்சியும் வீழ்ச்சியும்

நவம்பர் 05, 2006

saddamhussein01vt9.jpgபாக்தாத்: அமெரிக்காவின் கண்களில் விரலை விட்டு ஆட்டியவர் சதாம் உசேன். இப்போதைய அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் தந்தை சீனியர் ஜார்ஜ் புஷ் அமெரிக்க அதிபராக இருந்தபோதுதான் குவைத்தை ஆக்கிரமித்தார் சதாம்.

அப்போது அமெரிக்கா தலைமையிலான படைகள் ஈராக்கை குண்டு மழை பொழிந்து துவம்சம் செய்தபோது, படு வீரமாக பதிலடி கொடுத்து அமெரிக்காவை கலங்கடித்தவர் சதாம்.

அப்படிப்பட்ட சதாம், ஜூனியர் புஷ்ஷின் அமெரிக்க படையினரிடம் சிக்கி தாடியும், பரிதாபமான முகமுமாக பிடிபட்டபோது உலகமே சதாமுக்காக பரிதாபப்பட்டது. சதாமின் வாழ்க்கையே ஒரு போர்க்களம்தான்.

saddamhussein02zo0.jpg1937, ஏப்ரல் 28: ஈராக் தலைநர் பாக்தாத்திலிருந்து 150 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திக்ரித் நகருக்கு அருகே உள்ள அல் ஆவ்ஜா என்ற கிராமத்தில் சதாம் பிறந்தார்.

1959, அக்டோரப்ச பிரதமர் அப்தல் கரிம் கசீமை கொல்ல நடந்த முயற்சியில் சதாம் பங்கேற்றார். தோல்வி அடைந்ததால் வெளிநாட்டுக்குத் தப்பி ஓடினார்.

1963, பிப்ரவரி: பாத் கட்சி ராணுவப் புரட்சியின் மூலம் ஆட்சியைப் பிடித்தது. சதாம் ஈராக் திரும்பினார். ஆனால் 9 மாதங்களிலேயே பாத் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. சதாம் கைது செய்யப்பட்டார். சிறையில் இருந்தபோது கட்சியின் துணைப் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

saddamhussein03mh3.jpg1968, ஜூலை: ராணுவத்தில் புரட்சி செய்து பாத் கட்சி மீண்டும் ஆட்சியைப் பிடித்தது.

1975, மார்ச்: புரட்சிகர கவுன்சிலிந் துணைத் தலைவராக இருந்த சதாம், ஈரான் மன்னர் ஷாவுடன் எல்லை தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

1979, ஜூலை 16: ஈராக் அதிபராக முதல் முறையாக பதவியேற்றார்.

1980, செப்டம்பர் 22: ஈரானுடன் யுத்தத்தைத் தொடங்கினார். எட்டு ஆண்டுகளுக்கு இது நீடித்தது.

saddamhussein04ch1.jpg1990, ஆகஸ்ட். 2: குவைத் மீது ஈராக் படையெடுத்து கைப்பற்றியது. ஐ.நா. பாதுகாப்பு சபை ஈராக் மீது பொருளாதாரத் தடை விதித்தது.

1991, ஜனவரி 17: அமெரிக்கா தலைமையிலான படை, ஈராக் மீது போர் தொடுத்தது.

1995, அக்டோபர் 15: ஈராக்கில் நடந்த கருத்துக் கணிப்பு மூலம் மீண்டும் அதிபர் ஆனார் சதாம்.

2002, அக்டோபர் 15: மீண்டும் அதிபராக சதாம் கருத்துக் கணிப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு ஆதரவாக 100 சதவீதம் பேர் கருத்து தெரிவித்ததாக தகவல்கள் தெரிவித்தன.

saddamhussein05hp4.jpg2003, மார்ச் 17: ஈராக்கை விட்டு 48 மணி நேரத்திற்குள் சதாம் வெளியேற வேண்டும் என அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் கெடு விதித்தார்.

மார்ச் 20: ஈராக் மீது அமெரிக்கா தலைமையிலான படைகள் தாக்குதலைத் தொடங்கின. சதாம் தலைமறைவானார்.

ஏப்ரல் 4: பாக்தாத் நகர வீதிகளில் சதாம் நடமாடுவது போன்ற வீடியோ காட்சி வெளியானது.

ஜூலை 22: சதாமின் இரு மகன்களான குவாசி, உதய் ஆகியோர் மொசூல் நகரில் நடந்த தாக்குதலில் கொல்லப்பட்டனர்.

ஜூலை 31: சதாமின் இரு மகள்கள் ராக்தாத், ரானா, அவர்களின் 9 குழந்தைகளுக்கு ஜோர்டான் மன்னர் அப்துல்லா அடைக்கலம் கொடுத்தார்.

saddamhussein06rb4.jpgடிசம்பர் 13: திக்ரித் நகரிலிருந்து 10 மைல் தொலைவில் உள்ள அட்வார் என்ற இடத்தில் பதுங்கு குழியில் தலைமறைவாக இருந்த சதாம் உசேன் பிடிபட்டார்.

அதன் பின்னர் சதாம் உசேன் மற்றும் அவரது ஆட்சியில் அதிகாரிகளாக இருந்தவர்கள், ராணுவத்திற்குத் தலைமை தாங்கியவர்கள் என அனைவர் மீதும் தனியாக நியமிக்கப்பட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இன்று ஒரு வழக்கில் தீர்ப்பு வெளியாகியுள்ளது.

சாதாரண ஏழைக் குடும்பத்தில் பிறந்தவரான சதாம் உசேன், உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் மட்டும் அல்லாது, அனைவரையும் தனது வீர தீர பேச்சு மற்றும் செயல்களால் கவர்ந்த சதாமின் அத்தியாயம் கடைசி கட்டத்திற்கு வந்துள்ளது.

நன்றி தற்ஸ்தமிழ்

  • கருத்துக்கள உறவுகள்

மறு அப்பிலுக்கு மனு கொடுக்கலாம் இல்லையா?

ஆம் மறுவிசாரணைக்கு மனு கொடுக்கலாம். ஆனால் அங்கும் விசாரித்துத் தீர்ப்புச் சொல்ல வருபவரும் ஒரு அமெரிக்க ஜால்ராவாகத் தானே இருப்பார்.

ஆனால் ஒன்று மட்டும் உறுதி அமெரிக்கா ஒரு சதாமை ஒளித்துக் கட்டலாம். இதனால் அமெரிக்கா எதிர்காலத்தில் பல சதாம்களை எதிர் கொள்ள வேண்டிவரும்.

சதாம் என்ற மனிதன் - தன் பின்புலத்தில் இருந்த பலமே - கடந்தகால -தன் வெற்றிக்கு - ஆதாரமாய் இருந்தது- என்றதை - பகுதறிவு - செய்ய மறந்ததின் - துயர முடிவே - இந்த தீர்ப்பு!

ஈரானுடன் போர் முடிந்தவுடனயே - தான் நேசித்த ஈராக்கை - முன்னேற்ற - யாரையும் எதிர்பார்க்காமலேயே- சர்வ வல்லமை படைத்த -

சர்வதேசத்தில் ஆளுமை செலுத்தும் - உள் நாட்டு வளங்களை கொண்டே- அதியுச்ச பொருளாதார வளர்ச்சியை எட்டி இருக்கலாம்! நடந்ததா?

குவைத்தை ஆக்கிரமிக்கபோனதுக்கு - ஈராக்கின் ஒரு மாகாணம் அது என்றது போல அவர் சொன்ன கருத்து-

வாளெடுத்தவன் - வாளாலயே- சாவான் என்பது போல போயிட்டுது!

கல்வியறிவும் - மிக பெரிய பொருளாதார வலுவும் இருந்தும் - தடுமாறி போனது - ஈராக் என்று நினைக்கிறேன்!

70 பது வயதை நெருங்கும் சதாமுக்கு - இயற்கை மரணமே - வெகு தொலைவில் இல்லை -

தூக்குத்தண்டனை -?

குவைத் பிடிக்க அவர் போய் - முறின்சது போல - அமெரிக்கா - இதை செய்து - தனக்கு எதிரானவர்களை இன்னும் - கூட்டலாம்!

(இலகுவில் - தூக்கமாட்டார்கள் என்பது - பலர் அபிபிராயம்)

மத்தும் படி திரு: வசம்பு அவர்கள் சொன்னது

ஆனால் ஒன்று மட்டும் உறுதி அமெரிக்கா ஒரு சதாமை ஒளித்துக் கட்டலாம். இதனால் அமெரிக்கா எதிர்காலத்தில் பல சதாம்களை எதிர் கொள்ள வேண்டிவரும்

இந்த உணர்வை - சொந்த நாட்டு பிரைச்சினைகளிலும் - வெளிப்படையாய் சொல்லலாமே!

ஈராக் பிரச்சினையில் ஆவேசம் காட்டுறீங்க - நல்லாதான் இருக்கு !

இங்கே ஷியா- சன்னி - இரு இனத்தவர்களோடையும் - எம் உறவுகளில் - பலர் அடிக்கடி சந்திக்கிறோம்!

நாங்க வாழும் - நாடு அப்பிடி...

இரு இனத்தவர்களும் - ஈராக் பத்தி பேசி முடித்ததும் -

அடுததாய் கேட்பது - தமிழர் - சிறிலங்காவில் - முஸ்லிம்களை கொல்லுகிறார்கள் என்று கேள்வி படுகிறோம் - அது உண்மையா - என்பதே!

தவறில்ல அது - தன் இனத்தின் மேல - அவர்கள்- கொண்ட விசுவாசம்!

ஆகவே - நீங்களும் - ஏதும் சூடு சொரணையாய் - சிந்திக்க பழகுங்க!! 8)

ஒரு இனமக்களின்மீது விசவாயு அடித்து கொன்ற சதாமுக்கு ஏற்புடைய தண்டனைதான்.

ஒரு இனமக்களின்மீது விசவாயு அடித்து கொன்ற சதாமுக்கு ஏற்புடைய தண்டனைதான். :idea: :idea: :idea:

சதாம் என்ற மனிதன் - தன் பின்புலத்தில் இருந்த பலமே - கடந்தகால -தன் வெற்றிக்கு - ஆதாரமாய் இருந்தது- என்றதை - பகுதறிவு - செய்ய மறந்ததின் - துயர முடிவே - இந்த தீர்ப்பு!

ஈரானுடன் போர் முடிந்தவுடனயே - தான் நேசித்த ஈராக்கை - முன்னேற்ற - யாரையும் எதிர்பார்க்காமலேயே- சர்வ வல்லமை படைத்த -

சர்வதேசத்தில் ஆளுமை செலுத்தும் - உள் நாட்டு வளங்களை கொண்டே- அதியுச்ச பொருளாதார வளர்ச்சியை எட்டி இருக்கலாம்! நடந்ததா?

குவைத்தை ஆக்கிரமிக்கபோனதுக்கு - ஈராக்கின் ஒரு மாகாணம் அது என்றது போல அவர் சொன்ன கருத்து-

வாளெடுத்தவன் - வாளாலயே- சாவான் என்பது போல போயிட்டுது!

கல்வியறிவும் - மிக பெரிய பொருளாதார வலுவும் இருந்தும் - தடுமாறி போனது - ஈராக் என்று நினைக்கிறேன்!

70 பது வயதை நெருங்கும் சதாமுக்கு - இயற்கை மரணமே - வெகு தொலைவில் இல்லை -

தூக்குத்தண்டனை -?

குவைத் பிடிக்க அவர் போய் - முறின்சது போல - அமெரிக்கா - இதை செய்து - தனக்கு எதிரானவர்களை இன்னும் - கூட்டலாம்!

(இலகுவில் - தூக்கமாட்டார்கள் என்பது - பலர் அபிபிராயம்)

மத்தும் படி திரு: வசம்பு அவர்கள் சொன்னது

ஆனால் ஒன்று மட்டும் உறுதி அமெரிக்கா ஒரு சதாமை ஒளித்துக் கட்டலாம். இதனால் அமெரிக்கா எதிர்காலத்தில் பல சதாம்களை எதிர் கொள்ள வேண்டிவரும்

இந்த உணர்வை - சொந்த நாட்டு பிரைச்சினைகளிலும் - வெளிப்படையாய் சொல்லலாமே!

ஈராக் பிரச்சினையில் ஆவேசம் காட்டுறீங்க - நல்லாதான் இருக்கு !

இங்கே ஷியா- சன்னி - இரு இனத்தவர்களோடையும் - எம் உறவுகளில் - பலர் அடிக்கடி சந்திக்கிறோம்!

நாங்க வாழும் - நாடு அப்பிடி...

இரு இனத்தவர்களும் - ஈராக் பத்தி பேசி முடித்ததும் -

அடுததாய் கேட்பது - தமிழர் - சிறிலங்காவில் - முஸ்லிம்களை கொல்லுகிறார்கள் என்று கேள்வி படுகிறோம் - அது உண்மையா - என்பதே!

தவறில்ல அது - தன் இனத்தின் மேல - அவர்கள்- கொண்ட விசுவாசம்!

ஆகவே - நீங்களும் - ஏதும் சூடு சொரணையாய் - சிந்திக்க பழகுங்க!! 8)

முதலில் ஈராக் பிரைச்சினையையும் எமது பிரைச்சினையையும் ஒன்றாகப் போட்டு குளப்ப வேண்டாம். இங்கே சதாமை உத்தமனாக நான் சொல்லவரவில்லை. சதாமிற்கு தண்டனை வழங்க அமெரிக்காவிற்கு என்ன தகுதியுண்டென்பதே எனது வினா??

அது போல் அங்கு பல அரேபியநாடுகள் தமக்குப் பொது எதிரிகளாக நினைப்பது இஸ்ரேலையும் அமெரிக்காவையும் தான். அந்த விடயத்தில் அவர்கள் ஒற்றுமையாக செயற்படுகின்றார்கள்.

ஆனால் இங்கு எமது இனம் தமக்குள்ளேயே எதிரிகளை உருவாக்குகின்றார்கள். நாம் நண்பர்களைச் சம்பாதித்ததை விட எதிரிகளைச் சம்பாதித்தது தானே அதிகம். இந்த இலட்சணத்தில் நீர் சூடுசொறனை பற்றி எழுதுவது வேடிக்கை தான்.

அது போல் அங்கு பல அரேபியநாடுகள் தமக்குப் பொது எதிரிகளாக நினைப்பது இஸ்ரேலையும் அமெரிக்காவையும் தான். அந்த விடயத்தில் அவர்கள் ஒற்றுமையாக செயற்படுகின்றார்கள்

இஸ்ரேலை நினைப்பது - சரிதான்!

அமெரிக்காவை - பொது எதிரியா -

சிரியா - ஈரான் தவிர்ந்த - எந்த நாடுகள் "பொது" எதிரியாய் - நினைத்து - எதிர் கொள்ளும் -

அரபு நாடுகள் எவை?

கேள்வி அல்ல - இது -

விவாததின் மூலம் - விசயங்களை அறியதான்!

அமெரிக்காவிற்கு - ஈராக்கினுள் நுழைந்ததற்கே - உறுதிப்படுத்தபட்ட காரணங்கள் இருக்கலையே

திரு: வசம்பு ..........

சதாமிற்கு தண்டனை வழங்க அமெரிக்காவிற்கு என்ன தகுதியுண்டென்பதே எனது வினா??

ஈராக் உள்ளே - நுழைவதற்கு 1000ம் பொய் சொன்ன தகுதிகளில் - ஒன்றை தேர்ந்தெடுத்து -.....

இதற்கும் சொல்ல நேரமெடுக்குமா?

- அதாவது தனக்கு சார்பாய்!

நீங்கதான் சொல்லணும்! 8)

முதலில் ஈராக் பிரைச்சினையையும் எமது பிரைச்சினையையும் ஒன்றாகப் போட்டு குளப்ப வேண்டாம்ஒப்பீட்டளவில்........

ஈராக் பிரச்சினையையும் - எமது தேச பிரச்சினையும் -

எந்த விதத்தில் வேறுபட்டு - நிற்கின்றன?

ஆக்கிரமிப்பில் இருந்து விடுபட முனையும் - தேசங்கள் என்ற ரீதியில்?? 8)

  • கருத்துக்கள உறவுகள்

சதாமை தூக்கில் போடாதீர்கள்;

புனித பாப்பரசர் வேண்டுகோள்!

ஈராக் முன்னாள் ஜனாதிபதி சதாம் ஹுசைனுக்கு மரண தண்டனை நிறைவேற்ற வேண்டாம் என்று புனித பாப்பரசர் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்

-உதயன்

சதாம் ஹுசைன் ஒரு நாட்டின் ஜனாதிபதி துணிச்சலாக அமெரிக்காவை எதிர்த்த வீரர் இவரை பப்பாசியில் ஏத்திவிட்டு சுகம் அனுபவிச்ச அரபு நாட்டுதலைவர்கள் இவரை கைதுசெய்ய விமானத்தளம் கொடுத்த கழுதைகள்.என்ன செய்ய காலம்

  • கருத்துக்கள உறவுகள்

pop-L.jpg

சதாமை தூக்கிலிட வேண்டாம் பாப்பரசர் வேண்டுகோள்

[07 - November - 2006] [Font Size - A - A - A]

ஈராக்கின் முன்னாள் ஜனாதிபதி சதாம் ஹுசைனை தூக்கிலிடக்கூடாது என்று பரிசுத்த பாப்பரசர் 16 ஆம் ஆசீர்வாதப்பர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சதாமுக்குத் தூக்குத் தண்டனை விதித்திருப்பதற்கு பாப்பரசர் சார்பில் கத்தோலிக்க திருச்சபை கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வத்திக்கான் சபையின் நீதித்துறைத் தலைவர் கர்தினால் ரினாட்டோ மார்டினோ கூறியதாவது;

"சதாமை தூக்கிலிடுவது பழி வாங்கும் செயல். நியாயமற்ற செயல். ஒரு குற்றத்துக்கு மற்றொரு குற்றம் செய்வது பரிகாரம் ஆகாது. கொலைக்குக் கொலை, இரத்தத்துக்கு இரத்தம் என்ற செயல்களில் ஈடுபடுவது நாகரிகமற்ற செயல். சதாம் மனித குலத்துக்கு எதிராக பல குற்றங்கள் செய்திருக்கலாம். ஆனால், எல்லா உயிர்களுமே புனிதமானதுதான். எனவே, சதாமுக்கு தூக்குத் தண்டனை வேண்டாம்" என்றார்.

www.thinakkural.com

சதாமுக்கு தூக்கு: டோனி பிளேர் எதிர்ப்பு

லண்டன்: இங்கிலாந்து மரண தண்டனையை எதிர்க்கும் நாடு. அத்தண்டனையை தடை செய்துள்ள நாடு. சதாம் உசேன் விவகாரத்திலும் எனது மற்றும் எனது நாட்டின் கருத்து இதுதான் என்று இங்கிலாந்து பிரதமர் டோனி பிளேர் கூறியுள்ளார்.

பேரழிவு ஆயுதங்களை சதாம் உசேன் குவித்து வைத்துள்ளார் என்று கூறி, ஈராக் மீது அமெரிக்கா படையெடுத்தபோது, அந்நாட்டுக்குத் துணையாக இருந்தது இங்கிலாந்து. தனது சார்பில் பெருமளவிலான படைகளையும் ஈராக்குக்கு அனுப்பி வைத்தது.

சதாம் உசேன் பதுங்கு குழியில் இருந்ததை கண்டுபிடித்து அவரை பிடித்ததும் இங்கிலாந்து வீரர்கள்தான். இந்த நிலையில் சதாம் உசேனுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டதற்கு இங்கிலாந்து பிரதமர் பிளேர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், இங்கிலாந்தில் மரண தண்டனை தடை செய்யப்பட்டுள்ளது. நாங்கள் மரண தண்டனைக்கு எதிராக குரல் கொடுத்து வருகிறோம்.

உலக நாடுகளில் மரண தண்டனை ஒழிக்கப்பட வேண்டும் என்று கூறி வருகிறோம். யாரையும் தூக்கிலிட்டுக் கொள்ளக் கூடாது என்பதே எங்களது கருத்து. யாராக இருந்தாலும், சதாம் உசேனாகவே இருந்தாலும் கூட தூக்குத் தண்டனை தரக் கூடாது என்பதுதான் எனது மற்றும் எனது நாட்டின் கருத்து என்று கூறியுள்ளார் பிளேர்.

அதே சமயம், இங்கிலாந்து வெளியுறவு அமைச்சர் மார்க்கரெட் பெக்கட் சதாமுக்கு விதிக்கப்பட்டுள்ள தண்டனையை வரவேற்றுள்ளார். சதாம் செய்த தவறுக்குக் கிடைத்துள்ள சரியான தண்டனை இது என்று அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

http://thatstamil.oneindia.in/news/2006/11...1/07/blair.html

ஆமாம் இங்கிலாந்திற்கு வாலாட்டாததற்கு அவருக்கு கிடைத்த சரியான தண்டனை.

அப்படி அவர் செய்திருந்தால் அவருக்கு நீங்கள் நோபல் பரிசு வழங்கியிருப்பீர்கள்.

பிழைக்கத் தெரியாத மனுசன்!!! முசாரப்பைக் கேட்டால் சொல்லிக் கொடுத்திருப்பார் எப்படி தங்கள் நாட்டு பள்ளிக் குழந்தைகளை கொன்றுவிட்டு விசாரணை எதுவுமின்றி ஜாலியாக இருப்பதென்று.

ம்...ம்....

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.