Jump to content

"பொருத்தம் பார்த்தல்" என்னும் ஆபாச மோசடி!


Recommended Posts

Posted

மேலும் இங்கு குழப்படும் இன்னொரு விடயம் தமிழரின் பண்பாடு கலாச்சாரம் பற்றியது. நான்முன்னர் எழுதியது போல் இது கல்லில் செதுக்கப்பட சிற்பம் அல்ல.தமிழரின் பண்பாடு என்பது எப்போது இருந்த பண்பாடு? ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரா. இல்லை நூறு ஆண்டுகளுக்கு முன்னர் இருந்ததா இல்லை இருபது ஆண்டுகளுக்கு முன்னர் இருந்ததா?

பண்பாடு என்பது மாற்றம் அடைவது என்பதை அடிப்படையில் விளங்கிக் கொள்ள வேண்டும் .அந்த அந்த காலகட்டத்தில் பொதுப்போக்காக எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்படுவதே அந்தக் காலகட்டதிற்கான பண்பாடகச் சொல்லப் படுகிறது.அறிவியல் உகத்தில் தமிழர்கள் தங்கள் பழக்க வழக்கங்களை அறிவியல் ரீதியாக அமைக்க வில்லையாயின் கற்காலத்தில் இருந்து தற்காலத்திற்கு மாறாமல் அவர்களின் அடையாளமும் அரசியலும் இல்லாது போய் விடும்.தமிழர்களைக் கடவுள் தான்காப்பற்ற வேண்டும் என்று செல்வனாயகத்தார் சொன்னதை பிரபாகரன் நம்பி இருந்தால் இன்று நாங்கள் தரையிலும் கடலிலும் வானத்த்லிஉம் சரித்திரம் படைதிருக்க முடியாது.ஜெபம் செய்வதாலும்,விரதம் இருப்பதாலும் கடவுள் கிருபையால் எங்கள் துன்பங்கள் அகலும் என்று நாம் நினைதிருந்தால் இன்று ஆயுதப் போரட்டம் என்பதே தேவயற்ற ஒன்றாக இருக்கும். நாம் ஏன் அயுதங்கள் எடுத்தோம் எம்மை எதிரி ஆயுதங்களினால் அடக்கி யாளப் பட முற்பட்டதாலே தான்.இங்கே நாங்கள் எவ்வளவு தான் கோவிலிலோ சேர்ச்சிலோ மன்றாட்டமாக நின்றாலும் பாய்ந்து வரும் செல்லடியையை குண்டுகளையோ தடுக்க முடியாது நாம் எமது சுய பலத்தில் எமது தொழில் நுட்ப அறிவில் எமது அறிவால் போராடிய படியால் தான் எம்மால் இவ்வளவாவது வெல்ல முடிந்தது.எமது ஆயுதங்கள் மேற்குலகிலிருந் தான் வந்தன. நாம் வேதங்களை ஒப்புவிப்பதால் அல்லது கர்த்தரிடம்மன்றாடுவதால் எம்மால் வெல்ல முடியுமோ?

  • Replies 152
  • Created
  • Last Reply
Posted

தந்தை பெரியாரிடம் பிராமண எதிர்ப்பு இருக்கவில்லை. பார்ப்பனராகிய ராஜாஜியோடு அவர் நல்ல நட்போடு இருந்தார். அவர் கண்மூடித்தனமாக பிராமணர்களை எதிர்க்கவில்லை.

தந்தை பெரியார் பார்ப்பனியத்தையே (பிராமணியம்) எதிர்த்தார். அதை தூக்கிப் பிடித்தவர்களை எதிர்த்தார்.

பிராமணிய எதிர்ப்பு தமிழ்நாட்டில் தேவையோ இல்லையோ, ஈழத் தமிழர்களிடம் நிச்சயம் தேவை.

ஈழத்தில் பெயர்களில் சாதியை யாரும் கொண்டிருப்பதில்லை. அவர்களாக சொன்னால் அன்றி, ஒருவருடைய சாதி எதுவென்று தெரியப் போவதில்லை. எமது இளைய தலைமுறையும் சாதி என்பதில் இறுக்கமாக இல்லை. தாழ்த்தப்பட்ட மக்களும் இன்று பொருளாதாரம், கல்வியில் முன்னேறி வருகிறார்கள்.

இப்படி அனைத்து சாதி மக்களும் கல்வியில், பொருளாதாரத்தில் சமநிலையை அடைகின்ற பொழுது, ஏற்கனவே சாதிக்கான அடையாளங்களும் இல்லாத நிலையில் ஈழத்தில் சாதி என்பது இல்லாத நிலை உருவாகலாம்.

ஆனால் ஒரு பிரச்சனை இருக்கிறது.

ஈழத்திலே சாதியை உடையில், நடையில், பெயரில், பழக்க வழக்கத்தில் என்று எல்லாவிதத்திலும் வெளிப்படுத்துபவர்களாக பிராமணிய சாதி மட்டுமே இருக்கிறது.

பிராமணர்கள் என்கின்ற ஒன்று இருக்கின்ற வரை சாதி என்பது ஒழியப் போவது இல்லை.

ஏற்றத் தாழ்வு மிக்க சாதிகள் உருவாவதற்கு காரணமாக பிராமணியம் இருந்தது என்பதையும் ஒரு முறை கவனத்தில் எடுக்க வேண்டும்.

ஆகவே பிராமணிய எதிர்ப்பு இன்றி சாதியை எப்படி ஒழிக்கப் போகின்றோம்?

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சபேசன்..உங்கள் வாதம் எப்படி இருக்கிறது என்றால் சிங்களவர்கள் தமிழர்களின் அடையாளமாக கருதி பொட்டை அழிக்கச் சொன்னபோது தமிழ் பெண்களின் கலாசார சின்னம் அழிகிறது என்று எதிர்க்குரல் எழுப்பியவர்கள் இன்று சமூக முற்போக்கும் தனம் என்று ஏன் பொட்டிட வேண்டும்? அது பெண்ணை வேறுபடுத்திக் காட்டும் ஆணாதிக்கத்தின் அடிமைச் சின்னம் என்று தாங்களாகவே அழித்துக் கொள்வதற்கு வியாக்கியானம் செய்வது போல் உள்ளது.

பிராமணர்கள் இல்லாமல் பிராமணியம் அல்லது பார்ப்பர்ணியம் வந்ததா? பார்ப்பர்ணியத்தை அழிக்க புறப்பட்டார் பெரியார் என்று சொல்லும் நீங்களே அவர் பிராமணர்களை எதிர்க்கவில்லை எங்கிறீர்கள். காங்கிரஸ் கட்சியில் இருந்த போது வராத பெரியாருக்கான பகுத்தறிவு தமிழ் தேசியக் கருத்தை வழியுறித்தியதும் தமிழ் பேசிய பிராமணர்களை நோக்கி தனது எதிர்ப்பைக் காட்ட முனைந்தது பிராமணர்களை எதிர்த்த அரசியல்வாதிகளை காங்கிரஸுக்கு போட்டியாக்கவே அன்றி சமூக அக்கறையில் என்று கூறிவிட முடியாது.

இப்போ சிங்களவர்கள் எப்படி தமிழர்களின் இன அடையாளங்களைச் சிதைக்கச் சொல்கின்றனரோ அப்படியே நீங்களும் சாதியமற்ற சமூகம் உதித்துவிட்டது எமது இளைய சமூகம் சாதிய அறிவில்லாமல் வளர்ந்து ஒரு வளமான மாற்றத்தைப் பெற்றுள்ளது என்று கூறும் நீங்களே பிராமணர்கள் என்ற உச்சரிப்பின் மூலம் சாதியக் குறியீட்டை நீங்களே மீள அறிமுகம் செய்வதாகத்தான் தென்படுகிறது.

சாதியம் என்பது பொருளாதாரம் கல்வி என்று எத்தனையோ முன்னேற்றங்களால் மறைந்து போய்விட்டதாக நீங்கள் கூறிக் கொள்கிறீர்கள். ஆனால் இன்றும் சாதியக் கொள்கைகளை பிள்ளைகளுக்கு ஊட்டும் பெற்றோரும் இருக்கின்றனர். நீங்கள் கூட பிராமண எதிர்ப்பு என்பதன் மூலம் சாதிய வெறியில் திளைத்திருக்கிறீர்கள் என்றே பிராமணர்களால் நோக்கப்படுவீர்கள்.

பிராமணியம் அல்லது பார்ப்பர்ணியம் சமூகத்துக்கு தந்தது தகாதது என்றால் அவற்றைப் புறக்கணிப்பதற்கு ஏன் பிராமணியர்களை அவர்களின் அடையாளங்களை அழிக்க முனைய வேண்டும். அவர்களின் கொள்கை ஆதிக்கம் என்பதை சமூகத்தில் இருந்து விலக்க வேண்டின் பிராமணியர்களை அழிக்க வேண்டும் என்பது கிட்லரின் நாசியம் போன்றது. நிச்சயம் அது வெற்றி பெறாது. ஒடுக்கப்படும் சமூகமாக பிராமணியர்கள் உங்களை நோக்கி தங்கள் எதிர்ப்பைக் காட்டவே வழி செய்யும். ஆனால் சமூகத்தில் பரவிக்கிடக்கும் பிராமணிய சித்தாந்தங்களைக் களையக் கோர அந்தந்த சமூகத்தில் உள்ளவர்களே சிந்திக்க வேண்டும். அதற்காக பிராமணியர்களை எதிர்க்கவும் அவர்களின் அடையாளங்களை அழிக்கச் சொல்லவும் எவருக்கும் உரிமை கிடையாது. அப்படி என்றால் சிங்களவர்கள் சொல்வது போல தமிழர்களும் தங்களின் பாரம்பரிய அடையாளங்களை அழித்துவிட்டு சிங்கள பெளத்த அடையாளத்தை ஏற்றுக் கொண்டு சிங்கள பெளத்த நாடாக இலங்கையில் ஒற்றுமையாக வாழக் கோரலாம் எங்கிறீர்களா?

இன அடக்குமுறைகளால் அல்லது சமூக அடக்குமுறைகளால் எதையும் சாதிக்க முடியாது என்பதையே பிராமணிய மேலாதிக்க வீழ்ச்சியும் நாசிய வீழ்ச்சியும் சிங்கள பெளத்தத்தை தமிழர்கள் எதிர்த்துப் போராடுவதும் காட்டுகிறது. நீங்கள் பிராமணிய எதிர்ப்பை அவர்களின் அடையாள அழிவில் சாதிப்பாக்க நினைப்பின் அது நடக்காது. ஆனால் அவர்களா அதைக் கைவிடும் வகையில் அவர்கள் சார்ந்துள்ள மொத்த சமூகமும் மாறும் நிலையில் அவர்களும் மாறித்தான் ஆக வேண்டும். இந்த வகையில் நேரடி பிராமணிய எதிர்ப்பை விட இதர சமூக மக்களின் ஒருமைப்பாடும் முன்னேற்றமும் அதன் மூலம் பிராமணியர்கள் தனிமைப்படுத்தப்படுதலுமே அவர்களில் அவர்களா மாற்றங்களைக் கொண்டு வரும்.

அந்த வகையில் நாம் நேரடிப் பிராமணர் எதிர்ப்புப் பிரச்சாரங்களை ஆரோக்கியமானவை என்று கருதவில்லை. அந்தப் போக்கு எம்மை ஒரு சமூக விரோத வெறியர்களாகவே இனங்காட்டுகிறது. பெரியாரும் இதையே ஒரு கட்டத்தில் செய்தார். அவர் அவர்களின் கொள்கைகளை மட்டும் எதிர்க்கவில்லை பிராமணிய அடையாளங்களையே கேலி செய்து தனது பகுத்தறிவின் கீழ் நிலையையும் வெளிக்கொணர்ந்தவர். அதாவது பிராமணியர்களுக்கு ஈடாக தானும் இறங்கி சமூக விரோதக் கொள்கைகளை விதைத்தவர் என்றால் அதுவும் ஒரு வகையில் ஏற்றுக் கொள்ளத் தக்கதே, அந்த நிலைகள் தவிர்ந்து நாம் எம்மை பார்ப்பர்ணிய ஆதிக்க சிந்தனைகளில் இருந்து விடுவிப்பதன் மூலம் நேரடி பிராமண எதிர்ப்பற்ற முறையில் பிராமணர்களை சமூகத் தனிமையாக்கி அவர்களா மாற்றங்களை நோக்கி சிந்திக்கத் தூண்ட முடியும். இதனால் இரண்டு நன்மைகள். ஒன்று இதர சமூகங்களின் சிந்தனைப் போக்கில் புரட்சிகர மாற்றம். அதுவே பிராமணியர்களின் கொள்கை மாற்றத்துக்கான வித்திடல் என்றாகி நேரடிப் பிராமண எதிர்ப்பற்ற முறையில் மாற்றங்களைத் தரிசிக்கக் கூடிய விளைவுகள் தோன்றும். இதனால் மீளவும் சாதியக் குறியீடுகளை உச்சரிக்க வேண்டிய தேவையும் பிராமணிய திணிப்பாக நீங்கள் சொல்லும் சாதியக் குறியீடு ஒட்டுமொத்தமாக அழிக்கப்படவும் வாய்ப்பேற்படும். அதைவிடுத்து பிராமணர்களையும் அவர்களின் பார்ப்பர்ணியத்தையும் எதிரிக்கிறோம் என்று அவர்களின் சாதியக் குறியீட்டை நீங்கள் அவர்களுக்கு எதிராக பாவிப்பதாக எண்ணி உங்களை அவர்களின் நிலையிலேயே இன்னும் நிலைநிறுத்த முற்படுகின்றீர்கள்.

Posted

தமிழ் இனத்தின் அடையாளங்கள் என்று கருதப்படுபவைகளை சிங்களப் பேரினவாதம் அழிக்க முற்பட்டதையும்

சாதிகள் ஒழிய வேண்டும் என்ற நோக்கில் சாதி அடையாளங்களையும் அதன் அடிப்படைகளையும் களைய முற்படுவதையும்

நீங்கள் ஒரே தராசில் வைத்துப் பார்ப்பதை என்னால் சகிக்க முடியவில்லை.

சிறிது என்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு சிறிது நேரம் கழித்து எழுதுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

தமிழ் இனத்தின் அடையாளங்கள் என்று கருதப்படுபவைகளை சிங்களப் பேரினவாதம் அழிக்க முற்பட்டதையும்

சாதிகள் ஒழிய வேண்டும் என்ற நோக்கில் சாதி அடையாளங்களையும் அதன் அடிப்படைகளையும் களைய முற்படுவதையும்.

அடிப்படை ஒன்றுதான். அது கிட்லரின் யூதர்கள் மீதான இனவாதமாக்கட்டும்..தமிழர்களுக

Posted

நெடுக்காலபோவான்!

ஒன்றை நீங்கள் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

சாதியை ஒழிப்பதற்கு சாதிகளையும், அதற்கான காரணங்களையும் அடையாளம் காண வேண்டும்.

சாதிகளைப் பற்றி பேசாது அதற்கு தீர்வு சொல்ல முடியாது.

இன்னும் ஒன்றையும் கவனியுங்கள்.

நான் இங்கு தெளிவாக "பிராமணிய" எதிர்ப்பு என்றே சொல்லி வருகிறேன். எங்கும் பிராமணர் எதிர்ப்பு என்று சொல்லவில்லை.

ஈழத்திலே இருக்கின்ற சாதிகளில் பிராமண சாதியும் ஒன்று. சாதிகள் வேண்டாம் என்கின்ற போது பிராமணர் என்கின்ற சாதியும் எங்களுக்கு தேவை இல்லை.

பிராமணர்கள் இருக்க முடியும் என்றால், மற்றைய சாதியினரும் இருக்க முடியும். பிராமணர்களுக்கு உள்ள உரிமை எல்லோருக்கும் உண்டு. மற்றைய சாதியினர் மட்டும் சாதிய அடையாங்களை விட்டு விட வேண்டும் என்பது நியாயம் இல்லை அல்லவா?

எமக்கு எந்த ஒரு சாதியும் வேண்டாம். அப்படி சாதிகள் இருக்க வேண்டும் என்றால், அனைத்து சாதியனருக்கு சம உரிமை வேண்டும். இதுதான் எம்முடைய கருத்து.

சாதி இருப்பதற்கும், அப்படி இருக்கின்ற சாதி ஏற்றத் தாழ்வுகளோடு இருப்பதற்கும் இன்று ஈழத்தில் உள்ள வெளிப்படையான உடனடி ஆதாரம் இந்த பிராமண சாதியே.

அனைத்து சாதிகளோடு, இந்த பிராமண சாதியும் ஒழிந்து போகட்டும். இங்கே நான் மனிதர்களை சொல்லவில்லை. சாதி இன்னும் மிச்சம் வைத்திருக்கின்ற ஏற்றத் தாழ்வுகள், அடையாளங்கள் இவைகள் எல்லாம் ஒழிந்து போகட்டும்.

சாதியை சுட்டுகி;ன்ற அடையாளங்கள் இல்லாமற் போவது சாதி ஒழிப்பின் ஒரு முக்கிய படி. அவைகள் இருக்கும் வரை சாதி என்பது ஒழியப் போவதும் இல்லை.

இதில் யாரும் "சாதி"உரிமை கொண்டாட முடியாது.

நரபலி கொடுத்து விட்டு அதை மத உரிமை என்று யாரும் சொல்ல முடியாது. மனித குலத்திற்கு விரோதமான சாதியும் அதன் அடையாளங்களும் இல்லாது செய்யப்பட வேண்டும் என்பதையே நான் வலியுறுத்துகிறேன்.

ஆனால் நீங்கள் சாதி"உரிமை பேசுகிறீர்கள். அதை ஒரு இனத்தின் உரிமையோடு ஒப்பிடுகிறீர்கள்.

பார்ப்பனிய மாயைக்குள் எவ்வளவு தூரம் எமது தமிழ் மக்கள் சிக்கி உள்ளார்கள் என்பது இதிலிருந்து புரிகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

நீங்கள் குறிப்பிட்ட பந்தியிலேயே முதலில் பிராமணியம் பற்றிப் பேசுகிறேன் என்றீர்கள் பின்னர் பிராமணர்கள் என்ற சாதி இருப்புப் பற்றியும் பேசுகிறீர்கள்.

இது எப்படி இருக்கிறது என்றால் தமிழர்கள் இல்லாமல் தமிழ் தேசியம் பேசுகிறேன் ஆனால் தமிழர்களுக்காக என்பதாகவே உங்களின் அந்தக் கருத்து இருக்கிறது. இதில் இருந்து உங்களின் கருத்தில் உள்ள தெளிவில்லாத தன்மை புலப்படுகிறது.

நாம் பார்ப்பர்ணிய சமூக ஏற்றத்தாழ்வுக் கொள்கைகளை வலியுறுத்தவில்லை. அவை சமூகப் பிற்போக்குத்தனத்துக்கும் மூட நம்பிக்கைகளுக்கும் வழி வகுத்தன சமூகப் பிரிவினைகளோடு சமூகப் பலவீனத்துக்குக்காரணமாகின என்பதை ஏற்றுக் கொள்கின்ற அதேவேளை எந்த சமூக அடையாளங்களையும் சாதியக் கண்ணோட்டத்தில் காட்டுவதை நீங்கள் தவிர்ப்பதுதான் இப்போ வேண்டப்படுகிறது.

இப்போ முஸ்லீம்கள் தொப்பியும் மொக்காடு இடுகின்றனர். அது அவர்களின் சமூக அடையாளமாகக் காணப்படுகிறதே தவிர சாதிய அடையாளமாக அல்ல. பிராமணர்கள் என்பதுக்கு அப்பால் அவர்கள் தமிழர்கள். அவர்களின் சமூக அடையாளங்களை அவர்கள் தரிக்க அவர்களுக்கு உரிமை உண்டு. அதைப் பறிக்க முடியாது. அவர்களின் கொள்கைகள் ஏனைய மக்களை பாதிக்கும் அல்லது பலவீனப்படுத்தும் என்றால் அந்தக் கொள்கைகளை எதிர்ப்பதும் புறக்கணிப்பதுமே செய்யப்பட வேண்டியது. அதுதான் சாதி அழிப்பு என்ற வகையில் புரிந்துணர்வுக்கு வித்திட்டு களையப்பட்டது.

இன்ன அடையாளம் இடுபவர் பிராமணர் என்று சாதியப்படி ஒரு சமூகத்தை நீங்கள் அடையாளப்படுத்துவதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். அவர்கள் தங்களைப் பிராமணர்கள் என்று அடையாளப்படுத்த அந்த அடையாளங்களைக் காவுகின்றார்கள் என்பதிலும் தமிழர்களின் சமூகக் பண்பாட்டுக் கலாசாரத் தன்மைக்கான பன்முகத்தன்மையின் வெளிப்பாடாக அதைக்காட்டிக் கொள்ளட்டும். அதனால் பலமான சமூகப் பிரிவினைகளோ பலவீனங்களோ ஏற்படப் போவதில்லை.

தமிழ் பேசும் கிறிஸ்தவர்கள் தமக்கென்று சமூக அடையாளங்களை வைத்திருப்பது போல அவர்களும் வைத்திருக்கட்டும். அதுவும் மதத்தோடு நெருங்கியவர்கள் என்ற வகையில். நீங்கள் ஏன் இப்போ அவர்களின் அடையாளங்களை சாதிய அடையாளங்களாக இனங்காட்ட முனைகிறீர்கள் என்பதுதான் உங்களின் மனநிலையில் சாதிய அடிப்படை பொதிந்திருப்பதை இனங்காட்டுகிறது.

எம்மைப் பொறுத்தவரை ஒரு இனத்தில் பல சமூக ஒழுங்குகள் இருக்கும். சாதியம் என்பது ஒரு இனத்தைப் பிளவுகளூடு பலவீனப்படுத்தும் ஒரு கட்டமைப்பு. அந்த வகையில் அது களையப்பட வேண்டியது கட்டாயம். தமிழீழ விடுதலையின் தொனிப்பொருள் இரண்டு. ஒன்று இன விடுதலை. இரண்டு சமூக விடுதலை.

அந்த வகையில் உங்கள் போன்றோரின் இந்த சமூக அடையாளங்களை சாதியக் குறியீடுகளாகக் காட்டும் கருத்துப்பரப்புரைகளே பிராமணர்கள் என்பவர்கள் தனிச் சாதியினர் என்று அடையாளப்படுத்த உதவப் போகிறது. மற்றும் படி அது ஒரு சமய அடையாளமாக மட்டுமே நோக்கப்படும். ஆக உங்களுக்குள் உள்ள இந்து மத எதிர்ப்புணர்வின் அடிப்படையில் பிராமணர்கள் மீது வடமொழி இந்திய பார்ப்பர்ணிய குற்றச்சாட்டுகளையும் ஆரிய வாதத்தையும் சாதியத்தையும் புகுத்தி அவர்கள் மீதான அடக்குமுறைக்கு வித்திடுகிறீர்கள் என்றே கொள்ள வேண்டி உள்ளது.

காரணம்...நாம் முன்னர் குறிப்பிட்டது போல இந்த அடையாளங்கள் எதனையும் களையச் சொல்லியும் அவை சாதிய அடையாளங்கள் என்று இனங்காட்டியும் போராளி அமைப்புக்கள் எவையும் அறிக்கைகளையோ பகிரங்க கொள்கை விளக்கங்களையோ அளிக்கவில்லை.

அதுமட்டுமன்றி சாதியச் சமூகப்பிரிவு என்பது தொழில் சார் அநுட்டானங்களில் இருந்து எழுந்ததே தவிர அடையாளங்களில் இருந்தல்ல. உதாரணத்துக்கு யாழ்ப்பாண சாதி ஒழுங்கில் பல வகை சாதிகள் தொழில் அடிப்படையில் அமைந்திருந்தன என்று நூல்கள் கூறுகின்றன. அவை அநுட்டானங்களின் வகையில் எழுந்தனவே தவிர ஒவ்வொரு சாதிக்கும் ஒவ்வொரு அடையாளம் என்றிருக்கவில்லை என்பதும் குறிப்பிடப்படுகிறது. அதற்கான சான்றுகளும் இல்லை. அந்த வகையில் பிராமணர்களுக்கு நீங்கள் அளிக்கும் சில அடையாளங்கள் சாதிய அடையாளங்களுக்கு அப்பால் மத அடையாளங்களாக மட்டுமே நோக்கப்பட வேண்டியவை.

பார்பர்ணிய எதிர்ப்பு என்பது உங்கள் பகுத்தறிவுக் கண்ணை வெகுவாகவே மறைத்துள்ளது. தயவுசெய்து அதிலிருந்து வெளிவரப் பாருங்கள். சாதிய அடையாளமாக பிராமணர்களின் மத அடையாளங்களை இனங்காட்டுவதைத் தவிர்ப்பதும். பிராமண சமூகம் மீது சாதி வெறியை ஊட்டி அவர்களை தமிழ் மக்களினின்றும் பிரித்துப்பார்ப்பதையும் உடனடியாக நிறுத்துங்கள். இன்றேல் உங்களையே சாதியப் பரப்புரை செய்பவராக இனங்காட்ட வேண்டி எழும்.

Posted

பிராமணர்கள் எனப்படுபவர்கள் யார்?

இது பற்றி நெடுக்காலபோவான் சிறிது விளக்கம் தரவும்

அவர்கள்

ஒரு இனமா?

ஒரு மதமா?

ஒரு சாதியா?

தயவு செய்து விளங்கப்படுத்தவும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

அவர்கள் இனமுமல்ல.

சாதியமல்ல.

மத அடையாளங்களைக் காவும் ஒரு சமூகம்.

ஒரு இனம் பல சமூகங்களால் ஆனது. அந்த சமூகங்களை மொழி மதம் பண்பாடு கலாசாரம் நிலம் என்று பல இனத்துவ அடிப்படைக் காரணிகள் இணைத்து அவர்களைத் தனி இனமாக உலகிற்கு அடையாளப்படுத்தும்.

தமிழ் பேசும் கிறிஸ்தவ மக்கள் இருக்கிறார்கள். இந்துக்கள் இருக்கிறார்கள். அவரவர்களுக்கு என்று சில சமூக அமைப்புக்கள் ஒழுங்குகள் அடையாளங்கள் உண்டு. ஆனால் அடிப்படையில் அவர்கள் தமிழ் இனத்தைப் பிரதிபலிப்பவர்கள்.

பிராமண சமூகமும் அப்படியானதே. அது இந்து மத அடிப்படைகளைத் தழுவும் மதம் சார் சமூகம். அது சாதிய அடையாளத்தைக் காவும் சமூகப்பிரிவல்ல. அதற்குள் மற்றைய சமூகங்களைச் சார்ந்திருந்ததால் சாதிய தாக்கம் இருந்திருக்கலாம். ஆனால் அதுவே அவர்களின் அடையாளங்களுக்கு சாதிய சாயம் பூசப்படுதலை நியாயமாக்கும் என்றில்லை. அவர்களின் அடையாளம் சாதியத்துக்கு அப்பால் பட்டது. காரணம் யாழ்ப்பான சாதிய சமூக ஒழுங்கு அடையாளம் கொண்டு எழுந்த ஒன்றல்ல என்பது வரலாறு. அது தொழில் பிரிவினை கருதி எழுந்தது. அதனாலேதான் பிராமண தமிழ் சமூகத்தின் மத அடையாளங்களுக்கு சாதியப் பூச்சுப் பூசப்படுகிறது. ஆனால் அது மிகவும் தவறான ஒரு பார்வை.

அந்த வகையில் உங்களின் கருத்து தவறான தகவல்களை ஈழத்து பிராமண சமூகம் சார்ந்து சாதிய அடிப்படையில் திணிக்க முயல்கிறது என்றே கொள்ள வேண்டியுள்ளது. இது பகுத்தறிவின் பாலானதாக தென்படவில்லை. சரியான சமூக வரலாற்று ஒழுங்குகளை அறிந்து கொண்டு சாதிய சாயத்தைப் பூச முயல்வது நல்லம். வெறுமனவே மத எதிர்ப்பு உணர்வை சமூக சாதி வெறி உணர்வாக்கி பெரியார் பாணியில் சுயநலம் தேடமுனைவது சமூக நலனாக எம்மால் பார்க்கப்பட முடியவில்லை. காரணம் சாதிய நடைமுறைக்கு முற்றுப் புள்ளி வைத்த போராளிகளே இந்த அடையாளங்களை சாதிய அடையாளங்களாக இனங்காட்டி ஒதுக்கச் சொல்லவில்லை. ஆனால் நீங்கள்...??????!

Posted

சாதியப் பிரிவுகள் தொழில்களை அடிப்படையாகக் கொண்டு எழுந்தது என்கிறீர்கள். அப்படி உருவான சாதி தொடர்ந்தும் தொழில் அடிப்படையில் இயங்குகிறதா என்ற கேள்வியை கெட்டிக்காரத்தனமாக மறைக்கிறீர்கள்.

சாதி என்பது பிறப்பின் அடிப்படையில் வருகின்றது என்பது நடைமுறையில் இருக்கின்ற உண்மை. ஒரு சாதியை சேர்ந்தவர் வேறு தொழில்களை செய்தாலும், "சாதி" மாற முடிவதில்லை.

இந்த அடிப்படையில்தான் சாதி இயங்குகிறது.

நெடுக்காலபோவான்!

பிராமணர்களுக்கு நீங்கள் கொடுக்கின்ற விளக்கத்தைத்தான் சில "உயர் குல" வேளாளர்களும் முன்பு சொன்னார்கள்.

சிலர் வேளாள"சமூகம்" என்று சொல்வார்கள். சாதியை நாகரீகமான முறையில் வெளிப்படுத்துவது இப்படித்தான்.

ஒன்று நீங்கள் உண்மையிலேயே சாதியின் அடிப்படை விளங்காத அப்பாவியாக இருக்க வேண்டும்.

அல்லது சாதிய அமைப்பை காப்பாற்ற விரும்புகிறவராக இருக்கி வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
Posted

சாதி என்பது பிறப்பின் அடிப்படையில் வருகின்றது என்பது நடைமுறையில் இருக்கின்ற உண்மை. ஒரு சாதியை சேர்ந்தவர் வேறு தொழில்களை செய்தாலும், "சாதி" மாற முடிவதில்லை.

இது மிகவும் பிற்போக்குத்தனமான சிந்தனை. எந்த மனிதனின் பிறப்பிலும் சாதி பரம்பரை அலகுகள் மூலம் தாய் தந்தையரிடம் இருந்து காவப்படுவதாக எந்த அறிவியலும் விஞ்ஞானமும் குறிப்பிடவில்லை. ஆனால் நீங்கள் குறிப்பிடுகிறீர்கள் பிறப்பில் உதிப்பதென்று.

அதுபோக இங்கு எழுந்த கருத்துப் பகிர்வு சாதிய உருவாக்கம் பற்றிய ஆழ்ந்த நோக்குதல் செய்வதற்காக அல்ல. சாதி என்பது தொழிலடிப்படையில் அமைந்தது யாழ்ப்பாண சமூக ஒழுங்கில். அதற்கு பல நூல்கள் சான்றுகளாக உள்ளன.

ஆனால் நீங்கள் இந்து மத அடையாளங்களை ஒரு சமூகத்தின் சாதிய அடையளாமாக்கியதை யாரும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. ஈழத்துப் போராளி அமைப்புக்கள் கூட அப்படிக் கூறவில்லை என்பதை மீண்டும் வலியுறுத்திக் கூறிக் கொள்கின்றோம்.

அடிப்படையில் உங்களிடமுள்ள சாதிய கருத்தைப் பிறப்புரிமையாக்கி சாதியத்தை வலுவான ஒன்றாகக் காட்டி அதை அழிக்க வரும் ரட்சகராக உங்களைச் சித்தரிப்பதை விடுத்து மத எதிர்ப்புப் பிரச்சாரத்துக்குள் சாதி வெறியை நீங்கள் நுழைத்தது உங்களின் சாதிக் கருத்துப்பகிர்வுகள் மூலம் அநாவசிய சந்தேகங்களை விதைத்து ஒரு சமூகத்தை சமூகக் குற்றவாளிகளாக்கி அவர்களின் அடிப்படை உரிமைகளை சாதிய சாயத்தால் மறுக்கத் தூண்டுதல் மிகவும் கண்டிக்கத்தக்கது.

Posted

சாதி என்ற சமூகப்பிற்போக்குத்தனம் ஈழத்தில் களையப்பட்டது பிறப்பிக்கப்பட்ட மனிதப் புரிந்துணர்வின் பிரகாரமே அன்றி யாரையும் தாக்கி அழித்து முறியடித்தல்ல என்ற அடிப்படையையும் புரிந்து கொள்ளுங்கள். பிராமண சமூகத்தின் தனி அடையாளங்களை சாதியத்தின் பெயரால் அழிக்கச் சொல்ல எவருக்கும் உரிமையில்லை. அது தமிழினத்தின் கலாசார பண்பாட்டுத் தன்மைக்கான பன்முகத்தன்மையாகவே அடையாளமிடப்படுகிறது.

முதலில் ஈழத்தில் சாதிக்கு எதிராக கோவில் உட்புகுதல் போன்ற பல வன்முறையினாலான போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.பின்னர் தமிழர் என்ற ரீதியில் எல்லாச் சாதியினரும் சிங்களவரால் ஒடுக்கப்பட்டத்தை எதிர்த்து ஆயுதப் போராட்டம் தொடங்கப் பட்டதாலும் எல்லோருமே ஒரு வகையில் பாதிக்கப் பட்டதாலும் தான் இந்தச் சாதியச்சண்டைகள் முடிவுக்கு வந்தன.அத்தோடு இன்றும் சாதியம் ஈழத்தவரிடமிருகிறது.பேசிச் செய்யும் கலியாணங்களில் இது முக்கியமான ஒரு விடயம். நிலமைகள் இவ்வாறு இருக்கும் போது நெடுக்காலபோவான் எழுதியது முற்றிலும் பிழையான வரலற்றுத் திரிப்பு.இது சம்பந்தமாக பல கட்டுரைகள் ஆதாரங்காள் என்னால் இங்கே களத்தில் முன்னர் இடப்பட்டுள்ளன.

சாதியம் என்பதும் ,பிராமணர் என்பவரும் பாதுகாகப்பட வேண்டும் என்று கோருவது பன்முகத் தன்மை என்பது மிகவும் வெட்கக் கேடான ஒரு கருத்தாடல்.சாதியம் என்பது மனிதர்கள் பிறப்பால் உயர்ந்தவர் தாழ்ந்தவர் என்கின்ற அடிப்படையில் இருக்கும் ஒரு முறமை.இதனையும் சிங்களவர் தமிழர் என்கின்ற இனப் பாகுபாட்டையும் ஒன்றாக்கி இரண்டையும் ஒன்று என்று வாதிடுவது மோசடியான கருத்தாடல்.சிங்களவர் இது எங்கள் நாடு தமிழர்கள் இங்கிருக்க முடியாது என்று தமிழர்கள் மேல் போர் தொடுத்துள்ளார்கள்.தமிழர்கள் இது எமது தேசமும் தான் எமக்கும் அரசியல் உரிமைகள் இருகின்றன என்று அதன் அடிப்படையில் தான் போராடுகிரார்கள்.இங்கே ஒடுக்கப்பட்டது தமிழர் என்கின்ற இனம்.ஒடுக்கியது சிங்கள மேலாண்மை.சாதியத்தில் தாம் பிறப்பால் உயர்ந்தவர்கள் என்று மற்றைய சாதிகளை ஒடுக்குவது பிராமணியம்.இதில் சாதியம் என்பதை ஒரு ஜன நாயக உரிமையாகக் கூறுவதை இன்று தான் பார்க்கிறேன்.ஒருவனை அடக்க இன்னொருவனுக்கு இருப்பது ஜனனாயக் உரிமை இல்லை.ஒருவரிலும் மேலானது எமது சாதி என்று கூறு போடுவது தான் பிராமணியம் வர்னாச்சிரமத்தினை ஒரு ஜன நாயகமான பனும்கத் தன்மை என்று கூறுவது, நிற ரீதியான இன மேலாண்மையையும் கிட்லரின் ஆரியரே உயர்ந்தவர் என்று கூறுவதும் ஒன்றான இன வெறி.சிங்களவரின் வெறியுமிது தான்.இது தமது நாடு அதனைத் தமிழர்களிடமிருந்து பாதுகாக்கத் தான் நாம் போராடுகிறோம் என்பது தான் அவ்ர்களின் இன வெறி.அதே போல் பிராமணியம் பாதுகாக்கப்பட வேண்டும் என்று கோருவது சாதிய வெறி.இங்கே சிங்கள இன வெறியால் பாதிக்கப் பட்டவர்கள் தமிழ் மக்கள்.சாதிய வெறியால் பாதிக்கப்பட்டவர்கள் பிராமணர்கள் அல்ல. சாதிகள் வேண்டாம் இன ரீதியிலான பாகுபாடுகள் வேண்டாமென்று கோருவது வெறி அல்ல.அது இந்த வெறிகளுக்கு எதிரான நியாயத்திற்கான போராட்டம்.

Posted

சாதி தொழிலின் அடிப்படையில் உருவானது என்பதை நான் மறுக்கவில்லை.

ஆனால் சாதியக் கட்டமைப்பு அதன் "தொழில்" அடிப்படையிலா இயங்குகிறது?

ஒரு குறிப்பிட்ட சாதியாக வகைப்படுத்தப்பட்ட ஒருவர் வேறு தொழிலை செய்கின்ற பொழுது, அவருடைய சாதி மாறி விடுமா?

அப்படியா யாழ்ப்பாணத்து சாதிய கட்டமைப்பு இருக்கிறது?

தொழிலின் அடிப்படையில் உருவான சாதி தொடர்ந்து பிறப்பின் அடிப்படையில் இயங்குகிறது என்பது உங்களுக்கு தெரியாதா?

தொழிலின் அடிப்படையிலேயே சாதி இயங்குகிறது என்றால், வெளிநாட்டிலும் அந்த சாதி எப்படி தொடரும்?

இவைகளை நீங்கள் ஏன் புரிந்து கொள்ள மறுக்கிறீர்கள்?

பிராமணர்கள் வெளநாடுகளில் தோட்ட வேலை செய்தால், அவர்கள் பிராமணர்கள் இல்லை என்று நீங்கள் சொல்லி விடுவீர்களா?

நீங்கள் என்ன செய்வீர்கள்? பாவம்

பிராமணர்கள் எமது வீட்டில் சாப்பிட மறுப்பதன் காரணம், நாங்கள் சுத்தம் இல்லாதவர்கள் என்பதே என்று நம்புகின்ற அப்பாவி அல்லவா நீங்கள்.

Posted

இது மிகவும் பிற்போக்குத்தனமான சிந்தனை. எந்த மனிதனின் பிறப்பிலும் சாதி பரம்பரை அலகுகள் மூலம் தாய் தந்தையரிடம் இருந்து காவப்படுவதாக எந்த அறிவியலும் விஞ்ஞானமும் குறிப்பிடவில்லை. ஆனால் நீங்கள் குறிப்பிடுகிறீர்கள் பிறப்பில் உதிப்பதென்று.

பின்ன எவ்வாறு சாதிகள் பேணப்படுகின்றன?பிராமணருக்குப் பிறந்தால் தானே பிராமணராக இருக்க முடியும்? இங்கே சாதியம் என்பது பிறப்பால் தானே நிர்ணயிக்கப் படுகிறது.சாதிகள் அவ்வாறுதானே பேணப் படுகின்றன.இதில் சபேசன் கூறியதில் என்ன பிழை இருக்க மூடியும்? சாதிக்கும் பரம்பரை அலகிற்கும் என்ன சம்பந்தம்?சபேசன் பரம்பரை அலகை பற்றி எதுவுமே குறிப்பிடவில்லையே? குழப்பலான உமது கருதுக்களை எழுதி விவாதத்தை நகைப்பிக்கிடமானதாக்க வேண்டாம்.ஆர அமரச் சிந்தித்து விட்டு எழுதவும்.

அதுபோக இங்கு எழுந்த கருத்துப் பகிர்வு சாதிய உருவாக்கம் பற்றிய ஆழ்ந்த நோக்குதல் செய்வதற்காக அல்ல. சாதி என்பது தொழிலடிப்படையில் அமைந்தது யாழ்ப்பாண சமூக ஒழுங்கில். அதற்கு பல நூல்கள் சான்றுகளாக உள்ளன.

நகைப்புக் கிடமான கருத்தாடல்.ஒருவன் என்தச் சாதியில் பிறக்கிறானோ அன்தச் சாதிக்கான தொழிலைச் செய்ய வேண்டும் என்பது தான் சாதியத்தின் அடிப்படை.தாழ்ந்த சாதியில் பிறந்த ஒருவர் அர்ச்சனை செய்வதால் பிராமணராக என்றுமே யாழ்ப்பாணச் சமூகத்தில் ஏற்றுக் கொள்ளப் பட்டதில்லை.

ஆனால் நீங்கள் இந்து மத அடையாளங்களை ஒரு சமூகத்தின் சாதிய அடையளாமாக்கியதை யாரும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. ஈழத்துப் போராளி அமைப்புக்கள் கூட அப்படிக் கூறவில்லை என்பதை மீண்டும் வலியுறுத்திக் கூறிக் கொள்கின்றோம்.

யாரு எங்கே என்ன அடயாளத்தை எந்த சமூகத்தின் அடயாளம் ஆக்கியது? போராளி அமைப்புக்கள் என்ன கூறவில்லை? தெளிவற்ற கருத்தாடல்.

அடிப்படையில் உங்களிடமுள்ள சாதிய கருத்தைப் பிறப்புரிமையாக்கி சாதியத்தை வலுவான ஒன்றாகக் காட்டி அதை அழிக்க வரும் ரட்சகராக உங்களைச் சித்தரிப்பதை விடுத்து மத எதிர்ப்புப் பிரச்சாரத்துக்குள் சாதி வெறியை நீங்கள் நுழைத்தது உங்களின் சாதிக் கருத்துப்பகிர்வுகள் மூலம் அநாவசிய சந்தேகங்களை விதைத்து ஒரு சமூகத்தை சமூகக் குற்றவாளிகளாக்கி அவர்களின் அடிப்படை உரிமைகளை சாதிய சாயத்தால் மறுக்கத் தூண்டுதல் மிகவும் கண்டிக்கத்தக்கது.

மனிதர்களை சிறுமைப்பட வைக்கும் சாதியத்தை அழிக்க வேண்டும் என்று கோருவதும், அந்தச் சாதிய அடயாளங்கள் இல்லாது போய் தமிழர் எல்லோரும் ஓரினமே என்று கூறுவது எவ்வாறு கண்டிக்கப்பட வேண்டும்?இந்து மதத்தின் வேதங்களில் இருந்து வர்ணாச்சிரமத்தில் இருந்து வந்தது தான் சாதிய முறமை.அதனை தமக்குச் சாதமாக உருவாக்கியவர்கள் அந்த வேதங்களை உருவாக்கிய ஆரியர்.ஆரியரின் வழி வந்தவர்கள் தான் இன்றைய பிராமணர்.ஆரியத்தின் எச்ச சொச்சங்கள் இல்லாது போக வேண்டும் என்பதுவும் குறைந்த பட்சம் தமிழர்களின் சமயமான சைவத்தையாவது சாதிகள் அற்று பின் பற்றுங்கள் என்று கோருவதும் தமிழர்களிடையே உள்ள சாதியப் பிரிவினைகளை அகற்றி அவர்களை ஒரு அணியில் ஒருங்கு படுத்துவதும் இன்று நடந்து வரும் ஒரு விடயம்.இங்கே நீர் கண்டிப்பதாலிது நின்று விடப்போவதில்லை.தமிழர்களை பிரிவு படுத்தும் சாதியத்தைப் பாதுகாக்க விரும்பும் நீர் தான் கண்டிக்க பட வேண்டியவர்.சாதியம் பற்றிய ஈழப்போராட்ட அரசியல் பற்றி உமக்கு எதுவுமே தெரியாது என்பதுவே இங்கு தெரியும் உண்மை.

Posted

1. வேதத்தில் வருணாசிரமத்தை ஆதரிக்கும் கருத்து இருக்கிறதா? வேதத்தை மூலப்புத்தகமாகக் கொண்ட பல சாஸ்திரங்களும், சமயப்புத்தகங்களும் வருணாசிரமத்தை, சாதி அடிமைமுறையை, பலவேறு சாதிகளின் கடமைகளை பிராமணர்களின் மேலாதிக்கத்தைச் சொல்லுவன. இதில் குறிப்பாக மனுஸ்மிருதியைக் குறிப்பிடலாம். அது சூத்திரர்களின் வாழ்விடங்கள் மண்ணால் கட்டப்பட்ட்டிருக்கவேண்டும், உலோகங்களை பாத்திரங்களாக பயன் படுத்தக்கூடாது, மண்ணிற்கு அடியில் உள்ள கிழங்குகள் , வேர்களையே சாப்பிட வேண்டும், சூத்திரர்கள், பஞ்சமர்கள் இடுப்புக்கு மேல் உடையணியத் தடை, அத்தியாவசியத்தின் காரணமாக ஊருக்குள் நடக்கும் போது கைக்கொள்ளவெண்டியமுறைகள், பொது நீர்நிலைகளை பயன்படுத்த, கல்வி கற்க, இடம்பெயர செய்யப்படவேண்டிய தடைகள், அவை மீறப்பட்டால் கொடுக்கப்படவேண்டிய தண்டனைகள் போன்ற பலவற்றை விரிவாகப் பேசுகிறது. அது தவிர பெண்ணடிமைத்தனம், பால்யவிவாகம், பால்யவிவாகம் செய்யாவிட்டால் ஏற்படக்கூடிய பாதகங்கள், சதி (உடன் கட்டை ஏறல்) போன்ற கருத்துக்களையும் சொல்கிறது. இது தவிர பிராமணர்களுக்கான சலுகைகள், சிறப்புகள் போன்றவையும் குறிப்பிடப்படுகின்றன.

மனுவின் இந்த சட்டப்புத்தகம் மிக முக்கியமான ஸ்மிருதிகளில் ஒன்றாக கருதப்படுகிறது. ஸ்மிருதிகள் என்பவை நினைவில் வைக்கப்பட்டது என்று பொருள் படுபவை. இவை யுகங்கள் தோறும் மாறக்கூடியவை என்றாலும் யுகங்கள் பல நூற்றாண்டுகளைக் கொண்டதால் நடைமுறையில் அவை மாறாத தன்மைகொண்டவையாகவே இருக்கின்றன. மனு ஸ்மிருதி பல நூற்றாண்டுகளாக செல்வாக்கு செலுத்தி வருவது அப்படியே. மேலும் ஸ்ருதி (ஸ்ருதி என்றால் கேட்கப்பட்டவை என்று பொருள் கொள்ளலாம்; ஸ்ருதிகள் என்றும் மாறத்தன்மை கொண்டவை) என்றழைக்கப்படும் வேதங்களையும் இந்த ஸ்மிருதிகளையும் எந்தக்காரணம் கொண்டும் கேள்விக்குட்படுத்தக்கூடாது என்பது மனுவின் சட்டம் (மனு ஸ்மிருதி (பாகம் 2 சூத்திரம் 10).

இந்நிலையில் மனு உலகத் தொடக்கம் பற்றிய பகுதியிலேயே மனிதனின் உருவாக்கத்தைப்பற்றி பேசும் போது“But for the sake of the prosperity of the worlds he caused the Brahmana, the Kshatriya, the Vaisya, and the Sudra to proceed from his mouth, his arms, his thighs, and his feet.” (மனு ஸ்மிருதி பாகம் 2 சூத்திரம் 31) இப்படியாகக் குறிப்பிடுகிறார். இதில் நான் குறிப்பிடவிரும்புவது மனிதனைப் படைக்கும் போதே அவனை நால் வருணங்களாய் படைக்கிறார் என்பதைத்தான். செய்யும் தொழிலைக்கொண்டே வருணங்கள் பிரிக்கப்பட்டன என்று விளக்கமளிக்கும் ‘சமத்துவபுர ஜெண்டில்மேன்கள்‘, நவீன பெளராணிகர்கள் இதை சாமர்த்தியமாக மறைக்கப் பார்க்கலாம். இதை வருணாஸ்ரமத்துக்கான துவக்கப்புள்ளி என்பதால் (இந்தப்புத்தகத்தில்) குறிப்பிடுகிறேன். மற்ற சாதியக் கடமைகள், கட்டுப்பாடுகள், தண்டனைகள், பெண்களுக்கு எதிரான சதித்திட்டங்களை வாசகர்கள் படித்தறிய வேண்டுகிறேன். ஆங்கில மனுஸ்மிருதிக்கான சுட்டி கீழே உள்ளது; தமிழில் திரிலோக சீத்தாரம் மொழிபெயர்த்த (தமிழினி வெளியீடு என்று நினைக்கிறேன்) மனுஸ்மிருதியும் கிடைக்கிறது. இதைத்தவிர வேறு சில பதிப்புகளும் கிடைக்கின்றன. சரி மனுஸ்மிருதி மாறக்கூடியது. இடைக்காலத்தில் தோன்றியிருக்கலாம், மூலப்புத்தகமான வேதத்தில் இதற்கு ஆதாரம் உள்ளதா என்று நண்பர்கள் வினாவலாம். வேதங்களில் பழமையானதும், முதன்மையானதுமாகக் கருதப்படுவது ரிக். அதன்கண் உள்ள புருச சூக்தத்தில் (PURUSHA SUKTA, Verse 13) காணப்படுவதே மனுவினால் எடுத்தாளப்பட்டுள்ளது. 13 வது சம்ஹிதை இது.

http://www.yarl.com/forum3/index.php?showt...mp;#entry236880

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பின்ன எவ்வாறு சாதிகள் பேணப்படுகின்றன?பிராமணருக்குப் பிறந்தால் தானே பிராமணராக இருக்க முடியும்? இங்கே சாதியம் என்பது பிறப்பால் தானே நிர்ணயிக்கப் படுகிறது.சாதிகள் அவ்வாறுதானே பேணப் படுகின்றன.இதில் சபேசன் கூறியதில் என்ன பிழை இருக்க மூடியும்? சாதிக்கும் பரம்பரை அலகிற்கும் என்ன சம்பந்தம்?சபேசன் பரம்பரை அலகை பற்றி எதுவுமே குறிப்பிடவில்லையே? குழப்பலான உமது கருதுக்களை எழுதி விவாதத்தை நகைப்பிக்கிடமானதாக்க வேண்டாம்.ஆர அமரச் சிந்தித்து விட்டு எழுதவும்.

பிறப்பால் சாதி வருகிறது எங்கிறீர்கள். மனிதன் பிறப்பால் சாதியைப் பெறுவதில்லை. அதாவது மனிதப் பிறப்புக்கும் சாதிக்கும் தொடர்பில்லை. நீங்களா அதாவது சில சமூகம் தான் அப்படி பிறந்த மனிதர்களுக்கு அடையாளமிட்டுக் கொள்கிறதே தவிர பிறப்பால் சாதி உருவாகிறது என்பது மிகவும் தவறான அர்த்தப்படுத்தல். அந்தப் பதப்பிரயோகம் அவசியமற்றது. பிறப்பால் மனிதனாகப் பிறப்பினும் சாதியப் பாகுபாடுள்ள இடங்களில் மட்டுமே அது குறியிடப்படுகிறது. அந்தக் குறியிடலின் ஆரம்பம் தொழில்சார்ந்து எழுந்து பரம்பரைக்கும் வாய் மொழி மூலம் காவப்பட்டதே அன்றி மனிதப் பிறப்புக்கும் சாதிய உச்சரிப்புக்கும் தொடர்பில்லை.

கிறிஸ்தவ மத குருமார்களும் மத வேதங்களை கையில் வைத்திருக்கிறார்கள். பெளத்த குருமார்களும் புத்தரின் வேதங்களை வைத்திருக்கிறார்கள். இஸ்லாமிய மத குருமார்களும் வைத்திருக்கிறார்கள். இந்துக்களும் வைத்திருக்கிறார்கள். வேதங்கள் என்பவை அனுட்டானத்தைப் போதிப்பவை. அவை மனித வாழ்வியலில் காலத்துக்கு ஒவ்வாதவற்றைக் கொண்டிருந்தால் அதைத் தவிர்த்துக் கொள்வது அவரவர் உரிமை. வேதங்கள் எழுந்து நின்று மனிதர்களே என்னைக் கடைப்பிடியுங்கள் இல்லை உங்களை சாதியத்தால் அடக்குமுறை செய்திடுவேன் என்று கூறவில்லை. வேதங்கள் மனித ஆக்கங்கள். திருத்தங்கள் தவிர்ப்புக்கள் அங்கு சாத்தியம். காலத்துக்கு ஏற்ப திருத்தங்கள் கோரப்படலாம் அல்லது புறக்கணிக்கப்படுதலே சரி. அதற்காக வேதங்களின் கர்த்தாக்கள் என்று பிராமண சாதியத்தை வளர்த்து பிராமண சமூகத்தின் மீதான வெறுப்பை எதிர்ப்பை சாதிய எதிர்ப்பாக்கி சுயலாபம் தேடும் சில தீய சக்திகள் அதற்கு தமிழ் தேசிய தளத்தாலும் பலம் சேர்த்திட முனைவது சுத்த குள்ள நரித்தனம். தமிழ் மக்களை முட்டாளாக்க நினைக்கும் செயற்பாடு. தமிழ் தேசியத்தை சுயநலத்துக்கு கையாள முனையும் தமிழ் தேசிய விரோதம்.

நீங்களா( தமிழர் சமூகத்தில் ஒருவருக்கு ஒருவர் தமக்கிடையே) உருவாக்கிக் கொண்ட உச்சரிப்புக்களைக் காலம் காலமாக ஒரு சமூகத்துக்கு தொழில் அடிப்படையில் வழங்கி வந்து விட்டு அந்தத் தொழில் செய்யும் குடும்பத்தில் பிறப்பவர்களுக்கும் அப்படியே குறியிட்டு விட்டு பிறப்பால் வந்தது என்பது மிகவும் காத்திரமான பல கோணங்களை தனதாக்கக் கூடிய கருத்தால் சோடிப்பது என்பது பிற்போக்குத்தனமாக உள்ளது. அதை இன்னும் காவித் திரியும் சபேசன் போன்றவர்களின் அறியாமையைக் காட்டவுமே பரம்பரை அலகு கடத்தல் இங்கு தரப்பட்டது. சபேசன் மட்டுமல்ல சிலர் அது சாதி பரம்பரையில வாறது என்று சொல்லிக் கொள்வதைக் கூட மல்லிகை ஆசிரியரின் ஒரு கட்டுரையில் வாசித்த போது அறியக் கிடைத்தது. அது மீண்டும் இங்கு முற்போக்கு வாதம் என்ற தோறணையில் வலியுறுத்தப்படுவது அவசியமற்றது என்பதே எங்கள் திடமான கருத்து. இந்தப் பரம்பரைக் கதைகளை அளந்து திரிந்து பிராமண எதிர்ப்பை சாதியத்துக்குள்ளால் கொண்டு வந்து மீண்டும் சாதியச் சிந்தனைகளுக்கு புத்துயிர்ப்பு அளிப்பதை எவரும் எனியும் ஏற்றுக் கொள்ளத் தயாரில்லை.

நகைப்புக் கிடமான கருத்தாடல்.ஒருவன் என்தச் சாதியில் பிறக்கிறானோ அன்தச் சாதிக்கான தொழிலைச் செய்ய வேண்டும் என்பது தான் சாதியத்தின் அடிப்படை.தாழ்ந்த சாதியில் பிறந்த ஒருவர் அர்ச்சனை செய்வதால் பிராமணராக என்றுமே யாழ்ப்பாணச் சமூகத்தில் ஏற்றுக் கொள்ளப் பட்டதில்லை.

இதுதான் நகைப்புக்கிடமாக இருக்கிறது. பிராமணர்களை மணந்த வேற்று ஆண்கள் பூசகர்களாக இருக்கவில்லையா. நாங்கள் அறியவே பிறப்பால் பிராமணரல்லாத ஒருவர் பூசகராகி மதக் குருவுக்குரிய மரியாதைக்காக ஐயா என்று அழைக்கப்பட்டார். யாழ்ப்பாணத்தில் எந்தக் கோடிக்குள் இருந்து இந்த சாதிய வெறியை இன்னும் தக்க வைத்துக் கொண்டிருக்கிறீர்களோ தெரியவில்லை. அதுதான் நகைப்புக்கிடமாகவும் கவலைக்கிடமாகவும் இருக்கிறது. சாதிய அடிப்படையிலான அனைத்து சமூக அடக்குமுறைகளும் யாழில் போராளிகளால் தகர்த்தெறியப்பட்டிருந்தன. இன்று பிராமணர்கள் தங்கள் மத சேவையை மட்டுமே அதற்குரிய அடையாளங்களுடன் அவ்விடங்களில் செய்து வருகின்றனர். அவர்கள் கோயில்கள் மற்றும் கிரிகை நேரங்கள் தவிர்த்த போதில் ஏனைய தமிழ் மக்களைப் போலவே தமிழ் மக்களாக வாழ்கின்றனர். தயவு செய்து ஆரிய பார்ப்பர்ணிய இந்து மத எதிர்ப்புணர்வை எமது சமூகத்துக்குள் சாதிய வடிவில் அதுவும் பிராமண எதிர்ப்பு வடிவில் புதிப்பிக்க நினைப்பதை தவிருங்கள். அந்த நிலை தாண்டத் தொடங்கி சில தசாப்தங்கள் கடந்தாயிற்று. ஆனால் உங்களில் சிலர் தான் இன்னும் பழைய தாத்தாக்கள் காலத்தோடு ஒட்டியபடி..??!

யாரு எங்கே என்ன அடயாளத்தை எந்த சமூகத்தின் அடயாளம் ஆக்கியது? போராளி அமைப்புக்கள் என்ன கூறவில்லை? தெளிவற்ற கருத்தாடல்.

முழுமையாக கருத்துக்களை நீங்கள் வாசிக்கவில்லை என்பது தெளிவாகிறது. சபேசனின் சாதிய ஒழிப்பில் பிராமணர்களின அடையாளங்கள் அழிக்கப்பட வேண்டும். அது சாதியத்தைக் காவித் திரிகிறது என்று குறிப்பிட்டிருந்தார். நாம் கேட்டோம் சாதியத்துக்கு என்று தனித்தனி அடையாளம் என்று யாழ்ப்பாண சமூகத்தில் இருந்ததற்கு சான்றுகள் இல்லை. அவரவர் செய்த தொழில் சார்ந்து குறியிடப்பட்ட நாமமே இருந்து வந்தது. அதுவும் வாய் மொழி மூலம். இந்தியா போன்று சான்றிதழ்களில் அல்ல. அப்படி இருக்க இந்து மத அடையாளங்களை பிராமண சாதிய அடையாளங்களாக்கி சபேசன் முன் வைத்த கருத்தே மறுதலிக்கப்பட்டது. எந்தப் போராளிகள் அமைப்பும் பூநூல் போடாதே வேட்டி கட்டாதே கோயிலில் பூசை செய்யாதே கோயில் சாதிய அலகு என்று பூட்டி இடித்துத் தள்ள உத்தரவிடவில்லை. சாதியம் சார்ந்த சமூகத்துள் பிராமண சமூகமும் வாழ நேரிட்டதால் அவர்களும் சில அநுட்டானங்களைப் புகுத்தினர். அது சமூகப் பிரிவினைகளை உண்டு பண்ணும் என்பதால் அவை போராளிகளால் அகற்றப்பட்டு சாதியக் களையெடுப்புக்கு உரமூட்டம் செய்யப்பட்டன. அவர்கள் மதம் சார் சமூக அடையாளங்களை சாதிய அடையாளங்களான இனங்காட்டவும் இல்லை அவற்றை மறுதலிக்கவும் இல்லை. அது அவரவர் உரிமை என்பதுவும் நிலைநாட்டப்பட்டுள்ளது.

வேளாளர் என்போருக்கெல்லாம் மத அடையாளம் கிடையாது. அவர்கள் வாயால் தான் சொல்லிக் கொள்ள வேண்டும். அவர்களின் சாதி இருப்புக்கு எந்த சாதிய ஆதாரமும் கிடையாது. காலம் காலமாக உச்சரிக்கப்பட்டு வந்த வார்த்தைகள் மட்டுமே உள்ளன. வெறும் வார்த்தைகள் ஆதாரமாகிச் சொல்ல வேண்டும் இது தான் இன்ன சாதி என்று. அதை தமிழ் மக்கள் நிராகரிக்கத் தொடங்கி பல காலம் போயாயிற்று.

அந்த வகையில் சாதியம் என்பதில் வேளார்கள் என்று சொல்லிக் கொள்வோரில் தனி அடையாளங்களுக்கோ அன்றி சபேசன் குறிப்பிட்டது போல தனி சமூகம் என்ற நிலைக்கோ ஆதாரங்கள் கிடையாது என்பதை சபேசன் போன்றோர் உணர்ந்து கொள்ள வேண்டும்.. சபேசன் அந்த வகையில், வேளார்கள் என்போர் தம்மை தனிச் சமூகம் என்பதாகக் குறிப்பிட்டது அதுவும் பிரத்தியேக அடையாளங்களோடு கருத்தும் பகருமிடத்தில் குறிப்பிட வந்ததென்பது தவறானது.

மனிதர்களை சிறுமைப்பட வைக்கும் சாதியத்தை அழிக்க வேண்டும் என்று கோருவதும், அந்தச் சாதிய அடயாளங்கள் இல்லாது போய் தமிழர் எல்லோரும் ஓரினமே என்று கூறுவது எவ்வாறு கண்டிக்கப்பட வேண்டும்?இந்து மதத்தின் வேதங்களில் இருந்து வர்ணாச்சிரமத்தில் இருந்து வந்தது தான் சாதிய முறமை.அதனை தமக்குச் சாதமாக உருவாக்கியவர்கள் அந்த வேதங்களை உருவாக்கிய ஆரியர்.ஆரியரின் வழி வந்தவர்கள் தான் இன்றைய பிராமணர்.ஆரியத்தின் எச்ச சொச்சங்கள் இல்லாது போக வேண்டும் என்பதுவும் குறைந்த பட்சம் தமிழர்களின் சமயமான சைவத்தையாவது சாதிகள் அற்று பின் பற்றுங்கள் என்று கோருவதும் தமிழர்களிடையே உள்ள சாதியப் பிரிவினைகளை அகற்றி அவர்களை ஒரு அணியில் ஒருங்கு படுத்துவதும் இன்று நடந்து வரும் ஒரு விடயம்.இங்கே நீர் கண்டிப்பதாலிது நின்று விடப்போவதில்லை.தமிழர்களை பிரிவு படுத்தும் சாதியத்தைப் பாதுகாக்க விரும்பும் நீர் தான் கண்டிக்க பட வேண்டியவர்.சாதியம் பற்றிய ஈழப்போராட்ட அரசியல் பற்றி உமக்கு எதுவுமே தெரியாது என்பதுவே இங்கு தெரியும் உண்மை.

மனிதர்களைச் சிறுமைப்படுத்துவது சாதியம் என்ற கற்பனை வாதமே அன்றி சாதியத்தை நீங்களோ சபேசனோ உருவில் காட்ட முடியுமா? ஏதாவது உருவவியல் சான்றுகள்..சாதிக்கு உண்டா? அல்லது அவற்றிற்கான தொல்பொருள் சான்றுகள் ஏதாவது இருக்கிறதா? வெறும் கற்பனை வடிவிலமைந்த வாய் மொழி மூல உச்சரிப்புக்கள் அவை. அவை சமூகத்தில் எந்த வகையான பிரிவினைக்கும் வலுவான காரணங்களாக அமைய முடியாதவை. எனவேதான் அவை களையப்பட்டன. அப்படி இருக்க சபேசன் மீண்டும் பிராமணிய சாதிய வாதத்தை முன்னிறுத்தி பிராமணர்களை அழிக்கக் கோரும் அதேவேளை..அவர்கள் ஆரிய வேதாந்த எச்சங்கள் புதைகுழியில் அவர்களை இட வேண்டும் என்று கொடூர கிட்லர் நாசியம் பேசும் உங்களின் கருத்தை எம்மால் ஒரு வாதத்துக்குக் கூட ஏற்றுக் கொள்ள முடியாது.

உலகமே சிந்துவெளி நாகரிகத்துக்கும் ஆரியருக்கும் தொடர்பில்லை. அது ஆரியர் படையெடுப்புகளுக்கு முன்னரே ஆரம்பிக்கப்பட்ட ஒன்று என்று சான்றுகளோடு நிறுவி வரும் வேளையில் பழைய பெரியார் காலத்து ஆரிய வேதாந்த சித்தாந்ததில் எழுந்த பார்ப்பர்ணிய பிராமண எதிர்ப்பை இன்றும் உயிர்ப்பித்து செத்துப்போன சாதியத்துக்கு பிராமண எதிர்ப்பு மூலம் உயிர்ப்பூட்டிக் கொண்டிருக்கும் சபேசன் போன்றவர்களின் மத எதிர்ப்பு வாத விளம்பரம் எமக்கு அவசியமில்லை,

இந்து சமயக் கோட்பாடுகளில் சைவம் வைஷ்ணவம் என்று பிரிவினைகளை ஈழத்தில் பல தசாப்தங்களாகவே இல்லை. சைவ சமயமும் இந்துசமயமும் கோட்டியல் ரீதியில் பல ஒத்த தன்மைகளைக் கொண்டிருந்தன. அதனாலேயே சைவம் வளர்ந்த யாழ்ப்பாண சைவர்கள் பிள்ளையாருக்கும் கோயில் கட்டினர். துர்க்கைக்கும் கட்டினர். முருகனுக்கும் கட்டினர். விஷ்ணுவுக்கும் கட்டினர். வழிபடும் தெய்வங்களை வைத்துத் தோன்றிய இந்து மதப் பிரிவுகளுக்குள் வேறுபாடில்லை. சிந்துவெளியில் கண்டெடுக்கப்பட்ட சிவ சின்னங்கள் சிந்துவெளி சைவம் தோன்றியதன் மூலம் என்று கொள்ளப்பட்டுக் கொண்டிருக்க..நீங்களோ அது ஆரியப் பிரதேசம் ஆரிய வேதம் எங்கிறீர்கள். சிந்துவெளி நாகரிகம் என்பது ஆரியர் படையெடுப்புக்கு முன்னரான நாகரிகம் என்பதைக் கவனிக்கத் தவறாதீர்கள்.

பிராமண எதிர்ப்பு இந்து சமய எதிர்ப்பு ஆரிய எதிர்ப்பு சைவ எதிர்ப்பு என்று எதிர்ப்புக்களை வளர்ப்பது அல்ல தமிழ் தேசியத்தின் இருப்புக்கு வழி தேடல். பிராமணர்கள் ஒழிக்கப்பட வேண்டியவர்கள் என்றோ பிராமணியம் தமிழ் தேசிய விரோதம் அல்லது துரோகம் என்றோ எந்தப் போராளி அமைப்பும் கூறியதில்லை. இந்து அல்ல சைவமே தமிழ் தேசிய மதம் என்ற பிரகடனம் எங்கும் இல்லை. ஆக மொத்ததில் சபேசனும் நீங்களும் இணைந்து வெளியிட்டு வரும் பிரகடணங்களே கொடிய நாசியக் கொள்கையோடு தமிழ் தேசியம் உருவாகிறது என்ற தோற்றப்பாட்டை அதுவும் தவறான தோற்றப்பாட்டை தமிழ் தேசியச் சார்ப்பு என்ற வகையில் தமிழ் தேசியத்துக்கு எதிரான பிரச்சாரமாக முன்னெடுக்கிறீர்கள் என்ற வலுவான எதிர்பார்ப்பு எழுகிறது.

போராளிகளோ மக்களோ பிராமண மதம் சார் தமிழ் சமூகத்தை சாதிய அடிப்படையில் அந்நியப்படுத்த முனையாத போது சபேசனுக்கும் உங்களுக்கும் அவர்களுக்குள் சாதியத்தைப் புகுத்தி ஆரிய பார்ப்பர்ணிய வேதக்கட்டுக்கதைகளைத் திணித்து தமிழர்களை மீண்டும் சாதிய அடிப்படையில் ஏன் கூறுபோட முனைய வேண்டும். இந்து மதம் தமிழர்களின் மதமல்ல என்ற எந்தப் பிரகடனமும் கிடையாது. சைவம் மட்டுமே தமிழர்களின் தனி ஒரு மதம் என்பதற்கு எந்த ஆதாரமும் கிடையாது. இப்படி ஒரு நிலையில்...??உங்கள் இருவரினதும் பிராமணிய சாதிய உச்சரிப்பும் நாசியக் கருத்துக்களும் தமிழ் தேசியச் சாயத்தோடு விதைக்கப்படுவது ஏன். அதுவும் யாழ்ப்பாணத்தில் சாதியம் என்ற கற்பனை நடைமுறை புரிந்துணர்வால் சாகடிக்கப்படு தசாப்தங்கள் கடந்த நிலையிலும் ஏன் இன்று பிராமணிய எதிர்ப்பு ஈழத்தை நோக்கி நகர்கிறது அதுவும் சாதிய தமிழ் தேசிய கோசத்தோடு?

இது தமிழ் தேசியத்துக்கு எதிராக பிராமணர்களை திசை திருப்பும் நோக்கோடா அல்லது இந்திய இந்து மத ஆதரவை தமிழ் தேசியம் பெற்றுவிடக் கூடாது என்ற அதீத அக்கறையிலா? ஏன் என்றால் யாழ்ப்பாணக் கோவில்கள் மீது குண்டு போட்ட போது இந்தியா நோக்கி மகஜர்கள் பறந்தன. இந்துதுவக் கட்சிகள் சில சீறி எழ மத்திய அரசும் கண்டனம் சொன்னது. அதை அடுத்தே இலங்கையில் இந்துக்கலாசார அமைச்சு உருவானது. இதைப் போராளிகள் தடுக்கவே முனையவில்லை. மாறாக இந்திய இந்துக்களின் ஆதரவை அவர்கள் நாடி நின்றனர் இன்றும் நிற்கின்றனர். இந்த வேளையில் ஈழத்தில் வலுவில்லாத ஒரு மதச் சமூகத்தின் மீது சாதியச் சாயத்தோடு நாசியம் பேச வேண்டியது ஏன்? அதுவும் வடக்குக் கிழக்கில் சாதியம் என்பது சாகடிக்கப்பட்ட பின் அது தளிர்விடக்கூடிய நிலை உருவாகச் சந்தர்ப்பம் அளிக்கப்பட முடியாத சூழல்கள் உள்ள நிலையிலும் போராளி அமைப்புக்களின் அக்கறைக்கும் மேலாக ஏன் இந்தச் சாதிய வெறி ஈழத்துப் பிராமண சமூகம் நோக்கி விரிகிறது என்பதும் அதற்கு ஆரிய இந்து மத எதிர்ப்புச் சாயம் பூசப்படுவதும் பார்ப்பர்ணிய கோசம் போடப்படுவதும் பெரியாரையும் அவரின் சந்தர்ப்பவாத தமிழ் தேசிய வாத உச்சரிப்பை அதற்கு சாதமாக்கி அதற்குள் பதுங்கி இருந்து கொண்டு ஈழத்தில் சாதியத்தை தூண்டி விடுவதன் மர்மம் என்ன????!

இது வெறும் யாழ் களத்தில் பிரச்சாரத்துக்காக என்றால் நன்றே, மற்றும் படி பிராமண சமூகம் யாழ்ப்பாணத்து இதர சமூகங்களோடு இரண்டறக் கலந்த ஒன்று. அதாவது அனைவரும் ஈழத்தமிழர்கள். அதற்குள் பிரிவினைகளை உண்டு பண்ண எவர் எந்த வடிவில் முனையினும் அதற்கு தமிழ் தேசிய சாயம் பூசினும் அது வெளிக்கொணரப்பட வேண்டியதும். நாசியக் கருத்துக்கள் மூலம் தமிழ் தேசியத்தை கிட்லரின் நாசியத்துக்கு ஈடாக்க முனைவதும் சுட்டிக்காட்டப்பட வேண்டியதோடு அவை முற்றிலும் தமிழ் தேசிய விரோதக் கருத்துக்கள் என்பது அறிவுறுத்தப்பட வேண்டியது அவசியமாகிறது.

தமிழீழம் மதச்சார்பற்ற தமிழினத்துக்கான ஒரு நாடு. தமிழ் தேசியம் மதம் சார் தளத்தில் சாதிய சார் தளத்தில் எழுப்பப்படவில்லை. தமிழ் தேசத்தின் பலம் சமூகவிடுதலையுடன் கூடிய தேச விடுதலை. அதற்கான தெளிவான விளக்கங்கள் ஈழத்தில் அளிக்கப்பட்டுள்ளன. பட்டும் வருகின்றன. அந்த வகையில் சிங்களவர்கள் போல தமிழீழம் தன்னை தமிழ் சைவ நாடு என்று பிரகடனம் செய்யப் போவதில்லை. தமிழ் தேசியம் நாசியக் கொள்கை ஆரிய வேதாந்த சாதிய சாயங்களைப் பூசி பிராமணர்களை தமிழர்கள் அல்லாது பார்த்து பூண்டோடு அழிக்க முனையும் என்று சிலர் செய்யும் கற்பனையே இந்த பிராமண சாதிப் பிரகடனமும் எதிர்ப்பும். இது பெரியார் காலமற்ற தமிழ் தேசிய அரசியல் நடத்த. தமிழ் தேசியம் பேசி அரைகுறையில் விட்டு தமிழ்நாட்டோடு அடங்கிவிட்ட சிங்கங்கள் அல்ல ஈழத்தமிழ் மக்கள். குருதியில் தோய்ந்தும் பட்டினியில் கிடந்தும் தமிழீழத்துக்காக உயிர் கொடுப்பவர்கள். அதில் பிராமணன் என்றோ கிறிஸ்தவன் என்றோ அவர்கள் பிரிந்து நின்றதில்லை. மதம் என்பது தமிழ் தேசியத்தின் பிரகடனமாக அமையவில்லை. வலுவான பிளவுகற்ற சமூக ஒழுங்கும் மக்கள் ஒற்றுமையுமே தமிழீழத்தின் பலம். அதைச் சிதைக்க பிராமண எதிர்ப்பு சாதிய எதிர்ப்பாக சித்தரிக்கப்படுவதும் அதற்கு நாசியப் பரப்புரைகள் செய்வதும் சுத்த தமிழ் தேசிய விரோத செயற்பாடுகள். இது தமிழ் தேசிய துரோகிகளின் நுணுக்கமாக திட்டமிட்ட ஒரு நடவடிக்கை என்றே கொள்ள வேண்டும். தமிழீழம் இன்று இந்து இஸ்லாம் கிறிஸ்தவம் பெளத்தம் என்றோ எல்லோரிடமும் தனக்கான ஆதரவுத் தளத்தைக் கோரி நிற்கும் வேளையில் இந்து மத எதிர்ப்பும் பிராமண அழிப்புக் கோசமும் தமிழீழ விரோத செயற்பாடுகள். தமிழீழப் போராளி அமைப்புக்களின் செயற்பாடுகளுக்கு முற்றிலும் மாறான செயற்பாடுகள். இதை அனைவரும் தெரிந்து தெளிந்து கொள்ளுங்கள்.

Posted

பல பிழையான கருதுக்களை தகவல்களை நெடுக்காலபோவான் எழுதி உள்ளார்.குறிப்பாக புலிகளின் சாதியம் பற்றிய பார்வை சம்பந்தமாக.இது பற்றி நானோ , நெடுக்காலபோவானோ கூற முடியாது என்பதால், விடுதலைப்புலிகளின் அதிகாரபூர்வ ஏடான 'விடுதலைப் புலிகள்' இதழ் 20 இல் வெளிவந்த சாதியமும் புலிகளும் என்னும் கட்டுரையை இங்கே முடிந்தவரை பதிவு செய்கிறேன்.மூல கட்டுரையை வாசிக்க இந்த இணைப்பைப் பயன் படுத்துங்கள்.

http://www.viduthalaipulikal.com/file/docs/2005/08/20-09.pdf

காலங்காலமாக தமிழீழ சமூகத்தின் உணவுடன் கலந்திருந்த வெறுக்கத்தக்க ஒடுக்குமுறையாகிய சாதியப் பேய் இன்று தனது பிடியய் இழந்து வருகின்றது.எமது 18 வருடகால ஆயுதப் போராட்டம் இதைச் சாதித்துள்ளது.

தமிழீழ விடுதலைப் போராட்டம் முனைபடந்து வர வர சாதியத்தின் முனையும் மழுங்கி வருகின்றது.

அப்படியிருந்த பொழுதிலும் சாதிய ஒடுக்குMஔறையின் வெளிப்பாடுகளை சிற் சில இடங்களில் இன்றும்காணக் கூடியதாகவே உள்ளது.அவ்விதம் நாம் சந்தித ஒரு முக்கிய சம்பவந்துடன் கட்டுரை ஆரம்பமாகின்றது.

சாதியம்தொடர்பான புலிகளின் கருத்தைஇக் கட்டுரை தொட்டுச் செல்கின்றது.

யாழ்ப்பாண நருக்குச் சமீபமாக ஒரு கிராமம்.அந்தக் கிராமத்தில் ஒரு நல்ல தணிக் கிணறு இருகிறது.அந்தக்கிணறு அமைந்திருக்கும் காணி ஒரு தனி மனிதருக்குச் சொந்தமானது.அந்தத் தனி மனிதர் தன்னை ஒரு உயர் சாதிக்காரர் என எண்ணிக் கொள்பவர்.அந்தக்கிராமத்தில் தாழ்த்தப்படோர் எனப்படும் ஒரு மக்களும் பிரிவும் இருகிறது.இந்த மக்களுக்கு குடி தண்ணீர் வசதி இல்லை.அவர்களிந்த நல்ல தண்ணீர்க் கிணற்றிற்கு வருகிறார்கள்.தண்ணீர் அள்ளுவதற்கு முயற்ச்சிக்கிறார்கள்.இதைக் கண்டதும் கிணற்றுக் காணியின் சொந்தக்காரர் ஓடி வருகிறார்.தண்ணீர் எடுப்பதற்கு தடை விதிகிறார்.தாழ்த்தப்பட்டோர் தனது கிணற்றை தீண்ட்டக் கூடாது என்கிறார்.

இதே போன்று வடமாரட்ச்சியில் ஒரு சம்பவமும்,காரை நகரில் ஒரு சம்பவமும் நடக்கின்றது.

பாதிக்கப்பட்ட அந்த ஏழி மக்கள் விடுதலைப்புலிகள் இயக்கத்திடம் வந்து முறையிடுகின்றனர்.விடுதலைப்ப

Posted

உமது உளறல்லுக்கு எல்லையே இல்லையா?சிந்து வெளி நாகரிகத்துக்கும் ஆரியருக்கும் என்ன தொடர்பு? சிந்து வெளி நாகரீகத்தில் எங்கே சாதி இருந்தது?எங்கே வேதங்கள் இருந்தன?

ஆரியர் படையெடுப்பு நடை பெறவில்லை, ஆனால் ஆரியர் குழுக்களாக வடக்கில் இருந்து தெற்கு நோக்கி நகர்ந்தார்கள் என்பது தான் இப்போது ஆராட்ச்சிகள் சொல்லும் விடயம்.இதனை வைத்துக்கொண்டு ஆரியர் என்போரே இல்லை எங்கிறீரா இல்லை ஆரியர் வடக்கில் இருந்து புலம் பெயர்ந்து வந்தவர்கள் இல்லை எங்கிறீரா? ஆரியர் திராவிட என்பது பெரியார் காலத்து பிராமண எதிர்ப்புச் சித்தாந்தம் இல்லை, அது அறிவியல் ரீதியாக பல ஆய்வுகளால் நிறுப்பட்ட ஒரு வரலாற்று உண்மை.மேலும் உமக்கு இது அவசியம் இல்லாமல் போகலாம் அது உமக்கான தனிப்பட காரணமாகவும் இருக்கலாமது எமக்கு அவசியம் இல்லை,ஆனால் எமக்கு இந்தக்கருத்தாடல் அவசியம் ஆகப்படுகிறது.ஏனெனில் எமது சமூகத்தில் இருந்து இந்த சாதிப் பேயய் ஒழிப்பதாயின் அதன் மூலத்தை அதன் அடிப்படையை அது எங்கிருந்து வந்தது என்பதைச் சொல்ல வேண்டி இருகிறது.சாதியம் இன்னும் செத்துவிடவில்லை என்பதற்கு பல வாழ்வியல் ஆதார்ங்கள் இன்றும் எமது சமூகத்தில் இருகின்றன.

மேலே எழுதியவை எல்லாம் உமது உளறல்கள் ,விடுதைல்ப்புலிகளின் அதிகாரபூர்வ ஏட்டில் புலிகள் சாதியம் பற்றி என்ன சொல்கிறார்கள் என்பது தெளிவாகக்கூறப்படுள்ளது.மேலு

Posted

(தொடர்ச்சி).........................................

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தோற்றமும் வளர்ச்சியும், அவர்கள் முன்னெடுத்த தேசியப் போராட்டமும்,தமிழீழ சமுதாயத்தில் ஒரு யுகப் புரட்ச்சியை உண்டு பண்ணியது எனலாம்.அரச பயங்கரவாத அட்டூழியங்களும் அதனை எதிர்த்து நின்ற ஆயுதம் தரித விடுதலைப் போராட்டமும் எமது சமூக அமைப்பில் என்றுமில்லாத தாக்கங்களை விழுத்தின.பழமையில் தூங்கிக் கொண்டிருந்த எமது சமுதாயம் விடுதலை வேண்டி விழித்தெழுந்தது.வர்க்க சாதியக் காழ்ப்புணர்வுகளுக்கு அப்பால் தேசாபிமானப்பற்றுணர்வு தோன்றியது.தமிழ் மக்கள் ஒரே இன மக்கள் என்ற இன உணர்வும் பிறந்தது.சாதிய வேர்களை அறுத்து எறிந்து எல்லா சமூகப் பிரிவுகளில் இருந்தும் சகோதரத்துவத்தின் அடிப்படையில் ஒரே தேசிய விடுதலை இரணுவத்தை புலிகள் இயக்கம் கட்டி எழுப்பியது.ஒரே தேசிய விடுதலை இயக்கமாக புலிகள் கண்ட வளர்ச்சியும் அவர்களது புரட்ச்சிகர அரசியல் இலட்ச்சியங்களும் சாதியத்திற்கு ஒரு சவாலாக அமைந்தது.தேசிய சுதந்திரத்தை மட்டுமன்றி சாதியம் ஒழிக்கப்பட ஒரு சமதர்ம சமுதாயத்தைக் கட்டி எழுப்பும் உறுதியான கொள்கையில் எமது இயக்கம் செயற்பட்டு வருகிறது.

புலிகள் இயக்கத்தின் தோற்றமும் வளர்ச்சியும் அவர்களது இலச்சியப் போராட்டமும் சாதி வேறு பட்டிற்கு அப்பாற்பட்ட புலிகளின் செயற்பாடுகளும் சாதிய அமைப்பின் அடித் தளத்தில் ஒரு பெரிய உடைவை ஏற்படுத்திருகின்றது.இது சமூகத்தின் உணர்வுகளிலும் பாரிய மார்றங்க்களை ஏற்படுத்தி உள்ளது.

இன்று சாதி குறித்துப் பேசுவதோ செயற்படுவதோ குற்றமானது என்பதை விட அது வெட்க்கக் கேடானது.அனாகரிகமானது என்று கருதும் ஒரு மனப்பாங்கு எமது சமூகத்தில் உள்ளது.

இது சாதியம் தொடர்பாக காலம் காலமாக இருந்து வந்த சமூக உணர்வில் ஏற்பட்ட பிரமண்டமான மாற்றமாகும்.

இருந்தாலும் சாதியப் பேயை எமது சமூகத்திலிருந்து முற்றிலுமாக ஓட்டி விட முடியவில்லை சாதிய வழக்குகள் இருக்கத் தான் செய்கின்றன.சாதிய வெறியர்களும் இருக்கத் தான் செய்கிறார்கள்.சாதியப் பிரச்சினைகளையும் நாம் சந்திக்கத்தான் செய்கிறோம்.

காலம் காலமாக எமது சமூகத்தில் வேரூன்றி வளர்ந்து மக்களின் ஆழ் மனதில் புரையோடி விட்ட ஒரு சமூக நோயை எடுத்த எடுப்பில் குணமாக்கி விடுவதென்பது இலகுவான காரியம் இல்லை.அப்படி நாம் அவசரப்பட்டு சட்டங்கள் மூலமாகவோ, நிர்ப்பந்தங்கள் வாயிலாகவோ சதியப்பேயய் விரட்ட முனைவதும் புத்திசாலித் தனமானது அல்ல.

இன்றைய நிலையில் இந்த்தப்பிரச்சினைகளை நாம் இவ்விதமாகப் பார்க்கலாம்.

உயிர் வாழ்வுக்குத் தேவையான அதியாவசியப் பொருட்களில் சாதி வெறி காட்டி அடக்கப்பட்ட மக்களைச் சாதி வெறி காட்டி அடக்கப்பட்ட மக்களைச் சாவின் விளிம்புக்கு இட்டுச் செல்ல வைத்தல்,இதுகொடூரமானது, அனுமதிக்க முடியாதது.

மற்றயது, சாதியரீதியான ஏனைய முரண்பாடுகள்,இவற்றை அதனதன் தன்மை களுக்கு ஏற்ற விததிதில் பல்வேறு அணுகுமுறைகள் மூலம் கால ஓட்டத்தில் செயலுழக்கச் செய்யலாம்.

புலிகளின் விடுதைப் போராட்டமும்.அதனால் எழுந்த புரட்ச்சிகர புற நிலைகளும் சாதிய அமைப்பைத்தகர்க்கத் தொடங்கியிருக்கிறது.எனினும் பொருளாதார உறவுகளிலும்,சமூகச் சிந்தனைகளிலும் அடிப்படையான மாற்றங்கள் நிகழாமல் சாதியம் முற்றாக ஒழிந்து விடப் போவதில்லை.எனவே சாதிய ஒழிப்புக்கு சமுதாயப் புரட்ச்சியுடன் மனப் புரட்ச்சியும் அவசியமாகிறது.

பொருளாதார சமதுவத்தை நோக்கமாகக் கொண்ட சமுதாயப் புரட்சியை முன் நெடுப்பது விடுதலைப் விடுதலைப்புலிகளின் அடிப்படையான கொள்கைத் திட்டமாகும்.தேசிய விடுதலை பெற்று,ஆட்ச்சியதிகாத்தைக் கைப்பற்றிய பின்னரே இந்தக் கொள்கைத் திட்டத்தைச் செம்மையாக செயற்படுத்த முடியும்.ஆயினும் விடுதலைக்கு முந்திய காலத்தில் இருந்தே கட்டுப் பாட்டுப் பிரதேச்னக்களில் புரட்ச்சிகரமான பொருளாதாரத்திட்டங்களிச் செயற்படுத்தை கூட்டுத் தொழில் முயர்ச்சிகளை அமுல்படுத்தி சாதிய உறவுகளை படிப்படியாக உடைத் தெறிவது சாத்தியமனதொன்று.

சமூகச் சிந்த்னையில் அடிப்படையான மாற்றத்தைக் கொண்டு வருவது சாதிய ஒழிப்புக்கு அத்தியாவசியமானது.ஏனெனில் சாதிய வழக்குகளும்,சம்பிரதயங்களும் மூட நம்பிக்கைகளில் தோற்றம் கொண்டிருக்கிறது, இந்த அறியாமையைப்போக்க மனப்புரட்சி அவசியம்.மன அரங்கில் புரட்ச்சிகரமான விழிப்புணர்வு ஏற்படுவது அவசியம்.இங்கு தான் புரட்ச்சிகரக் கல்வி முக்கிய இடத்தைப் பெறுகிறது.

எமது இளம் பரம்பரையினருக்கு புரட்ச்சிகரக் கல்வி போதிக்கப்பட வேண்டும்.பழமையான பிற்போக்கான கருதுக்கள் கோட்பாடுகள் மூட நம்பிக்கைகளிலிருந்து விடுபட்டு, புதிய முற்போக்கான உலகப் பார்வையை புதிய இளம் பரம்பரையினர் பெற்றுக்கொள்ள வேண்டும்.அறியாமை இருள் நீங்கி, புதிய விழிப்புணர்வும் புரட்ச்சிகர சிந்தனைகலும் இளம் மனங்களைப்பற்றிக் கொண்டால் சாதியம் என்ற மன நோய் புதிதாகத் தோன்றப்போகும் புரட்சிகர சமுதாயத்திலிரிந்து நீங்கி விடும்.

-விடுதலைப்புலிகள், இதழ் 20.

Posted

பிராமணர்கள் ஒரு சமூகம் என்று நெடுக்காலபோவான் சொல்கிறார். ஆனால் அவர்கள் எவ்வகையான சமூகம் என்றும் அவர் சொல்ல வேண்டும்.

சமூகம் என்ற சொல் தெளிவானது அல்ல. அது ஒரு குறிப்பிட்ட அடையாளத்தை கொண்ட மக்கள் கூட்டத்தை குறிக்கின்ற பொதுவான சொல்.

உதாரணம்: தமிழ் சமூகம், வேளாள சமூகம், இஸ்லாமிய சமூகம், பௌத்த சமூகம், இந்திய சமூகம், ஐரோப்பிய சமூகம்......

சமூகம் என்ற சொல்லை வைத்து குறிப்பிடப்படுபவர்கள் ஒரு இனத்தை சேர்ந்தவர்களா, மதத்தை சேர்ந்தவர்களா, சாதியை சேர்ந்தவர்களா, நாட்டை சேர்ந்தவர்களா என்று சொல்ல முடியாது.

ஆகவே தெளிவாக சொல்லுங்கள்

பிராமண சமூகம்

ஒரு இனமா, மதமா, சாதியா?

சாதி பிறப்பால் வருகிறது என்று சொல்வது உங்களுடைய பிராமணர்கள்தான். அதுதான் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

நீங்கள் கெட்டிக்காரர். பிராமணர் அல்லாதவர்கள் பூசாரியாக இருக்கிறார்கள் என்று சொல்கிறீர்கள். அவர்களை ஐயா என்று அழைக்கிறார்கள் என்றும் சொல்கிறீர்கள். ஆனால் மிகுதியை சொல்லாது விட்டு விட்டீர்களே!

"இந்த ஐயா பிராமணர் இல்லை" என்றும் சொல்லப்படுவது உங்கள் காதில் விழுவதில்லையா?

அவர்களை பூசாரி (பூசை செய்பவர்) என்றும் ஐயா (பூசை செய்பவரை பொதுவாக அழைக்கும் வழக்கம்) அழைப்பார்களே தவிர, அவர்களை பிராமணர்கள் என்று சொல்வது இல்லை.

இதை எல்லாம் நெடுக்காலபோவானிற்கு தெரியாதா?

Posted

மேலும் இங்கு எழுதப்படும் கருத்துக்கள் எனதும் சபேசனினதும் சொந்தக் கருத்துக்கள் தான்.புலிகளின் கருதுக்கள் மேலே தெளிவாக்ச் சொல்லப்படுள்ளன.புலிகளின் கருதுக்கள் அவர்களை மேற் கோள் காட்டியே இங்கு எழுதப்படுகின்றன.புலிகளுக்கு

Posted

நாரதர்! எமது தமிழ் மக்கள் பார்ப்பன மாயைக்குள் எவ்வளவு தூரம் சிக்குப்பட்டுப் போய் இருக்கிறார்கள் என்பதற்கு எங்களின் நெடுக்காலபோவான் ஒரு உதாரணம்.

பிராமணியம் பற்றிய விமர்சனத்திற்கு பதிலை சூத்திரர்களையே சொல்ல வைத்திருக்கும் பிராமணியத்தின் திறமையைப் பாருங்கள்.

இந்த மாயைக்குள் சிக்கி இருப்பவர்களை இலகுவில் வெளியில் கொண்டு வர முடியாது.

தாங்கள் சொல்வது தவறு என்று தெரிந்தும், அவர்களுடைய மனம் அதை ஏற்றுக் கொள்ளாது.

பிராமணர்கள் என்ற சாதி இல்லை என்றால் கடவுளிடம் எப்படி தொடர்பு கொள்வது என்ற அச்சத்தில் அவர்கள் அதை ஏற்றுக் கொள்ள தயங்குவார்கள்.

இதுதான் இங்கு நடக்கிறது.

Posted

ஆரியன்

செய்தான்

இந்த திணிப்பு...

அதை

அறியாத

மக்கள்

பலர்

முழிப்பு....

செய்யவில்லை

இன்னும்

ஏன்

தட்டி கழிப்பு...???

செய்கிறார்கள்

இவர்கள்

இங்கு விழிப்பு....

அதில்

போடாதீர்

வீணாக

நீர் பழிப்பு...

எத்தனை பெண்

வாழ்விதால்

அழிப்பு....???

இதை

ஒழித்தாலே

எமக்கு வரும்

செழிப்பு....

அதற்காய்

மக்களிடை

வேனும்

இன்று வழிப்பு...

வன்னி மைந்தன் -

  • கருத்துக்கள உறவுகள்
Posted

பிராமணர்கள் ஒரு சமூகம் என்று நெடுக்காலபோவான் சொல்கிறார். ஆனால் அவர்கள் எவ்வகையான சமூகம் என்றும் அவர் சொல்ல வேண்டும்.

ஒரு இனம் பல சமூகங்களால் ஆனது. தமிழ் இனம் என்பதே சரியான பதப்பிரயோகம். தமிழ் சமூகம் என்பது தமிழினத்தை விளிக்கப்பயன்படும் ஆகுபெயர் என்று கொள்ளலாம்.

சமூகம் என்ற சொல் தெளிவானது அல்ல. அது ஒரு குறிப்பிட்ட அடையாளத்தை கொண்ட மக்கள் கூட்டத்தை குறிக்கின்ற பொதுவான சொல்.

உதாரணம்: தமிழ் சமூகம், வேளாள சமூகம், இஸ்லாமிய சமூகம், பௌத்த சமூகம், இந்திய சமூகம், ஐரோப்பிய சமூகம்......

வேளாள சமூகம் என்பது சாதியத்துக்காக நீங்கள் உருவாக்கிய ஒன்று. இஸ்லாமியர்கள் சமூகமாகவே கருதப்பட வேண்டியவர்கள் அவர்கள் அனுஸ்டிக்கும் மத அடிப்படையில். அவர்களைத் தனி இனமாகக் கருத முடியாது. பெளத்த சமூகம் என்பது பெளத்த மதத்தைப் பின்பற்றும் சமூகம் என்பதால். இந்திய சமூகம் என்பது இந்திய நாட்டில் வாழ்வதால். ஐரோப்பிய சமூகம் என்பது ஐரோப்பாவில் வாழ்வதால். இங்கு சமூகம் என்ற பதம் பரந்த அளவில் பாவிக்கப்படுகிறது. ஆனால் இனத்துவப் பாகுபாட்டின் கீழ் சமூகம் என்பது இனத்துக்குள் இருக்கும் உப மக்கள் குழுமங்கள் என்றாகிறது. ஒரு இன மக்களுக்குள்ளேயே இருக்கும் பன்முகத்தன்மைகளின் அடிப்படையில் சமூகங்கள் அடையாளமிடப்படுகின்றன. சமூகம் ஒரு இனமாக அது இனத்துக்குரிய அடிப்படைகளைக் கொண்டிருக்க வேண்டும்.

பிராமண சமூகம் என்பது அதன் மதம் சார் பணி தொடர்பில் அது கொண்டுள்ள சிறப்பு அடையாளங்கள் சேவைகள் தொடர்பில் பிறக்கிறது. அதில் சாதியத் தன்மைகள் என்பது இல்லை. நீங்கள் அதை சாதியமாக்கி பிராமண சமூகத்தை வேளாள சமூகம் என்ற சாதிய அடிப்படை சமூகத்துக்கு உதாரணமாக்கி பிராமண சமூக எதிர்ப்பை பிராமணர்கள் தமிழர்கள் அல்ல என்ற தொனியில் முன்னெடுப்பதும் தமிழ் தேசிய சாயம் அதற்குப் பூசுவதும் தமிழினத்தைக் கூறூபோட நினைக்கும் செயலாகவே நோக்க வேண்டும்.

விடுதலைப்புலிகள் ஏட்டின் தரவுகளை நாரதர் தந்து எங்களின் கருத்துக்கு மீள வளம் சேர்த்திருக்கிறார். விடுதலைப்புலிகள் சாதியக் கட்டமைப்புக்களையும் அவற்றினால் பிறந்த சமூக மூடத்தனங்களையும் அடக்குமுறைகளையுமே எதிர்த்து மக்களை அதிலிருந்து வெளிவர அழைத்துள்ளனர். விடுதலைப்புலிகள் மட்டுமல்ல ஏனைய தமிழீழ விடுதலைக்காக புறப்பட்ட போராளி அமைப்புக்களும் ஆரம்பத்தில் இதே குறிக்கோளோடுதான் புறப்பட்டன. சாதிய எதிர்ப்பு என்பதை தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் - புளொட் தான் முதலில் தீவிரமாக முன்னெடுத்தது என்பதற்கு பல ஈழத்து நாளேடுகள் நூல்கள் சான்றாக உள்ளன. தமிழீழ விடுதலையில் நாம் முன்னர் குறிப்பிட்டது போல தேச விடுதலையும் சமூக விடுதலையும் சமாந்தரமாக்கப்பட்டிருந்தன.

ஆனால் எந்த ஒரு அமைப்பும் பிராமண சமூக மத அடையாளங்களை சாதியக் கண்ணோட்டத்தில் பார்க்கவில்லை. அவர்கள் பூநூலை அணிவதை தடுக்கவில்லை. ஆரம்பத்தில் ஒரு சிலர் பூநூல் சாதியக் குறியீடு என்று காட்ட முனைந்ததும் பின்னர் அது மத அடையாளம் என்று விளக்கப்பட்டதும் அது அவர்களின் மத உரிமை என்று ஏற்றுக் கொள்ளப்பட்டதும் இங்கு குறிப்பிடத்தக்க அம்சங்கள். அப்படியே உணவுப்பழக்க வழக்கமும். பிராமண சமூகம் என்பது தமிழினத்தின் ஒரு சமூகமே அன்றி அவர்கள் நீங்களும் நாரதரும் போதிக்கும் நாசிய கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட வேண்டிய ஒரு தனிச் சமூகம் அல்ல. அவர்களின் தமிழீழ விடுதலைக்கான பங்களிப்பு என்பது கிறிஸ்தவ சமூக மக்களின் பங்களிப்பு போல வலுவானதாக இருந்து வந்துள்ளது வருகிறது.

சமூகம் என்ற சொல்லை வைத்து குறிப்பிடப்படுபவர்கள் ஒரு இனத்தை சேர்ந்தவர்களா, மதத்தை சேர்ந்தவர்களா, சாதியை சேர்ந்தவர்களா, நாட்டை சேர்ந்தவர்களா என்று சொல்ல முடியாது.

ஆகவே தெளிவாக சொல்லுங்கள்

பிராமண சமூகம்

ஒரு இனமா, மதமா, சாதியா?

சாதி பிறப்பால் வருகிறது என்று சொல்வது உங்களுடைய பிராமணர்கள்தான். அதுதான் நடைமுறைப்படுத்தப்படுகிறது.

நீங்கள் கெட்டிக்காரர். பிராமணர் அல்லாதவர்கள் பூசாரியாக இருக்கிறார்கள் என்று சொல்கிறீர்கள். அவர்களை ஐயா என்று அழைக்கிறார்கள் என்றும் சொல்கிறீர்கள். ஆனால் மிகுதியை சொல்லாது விட்டு விட்டீர்களே!

"இந்த ஐயா பிராமணர் இல்லை" என்றும் சொல்லப்படுவது உங்கள் காதில் விழுவதில்லையா?

அவர்களை பூசாரி (பூசை செய்பவர்) என்றும் ஐயா (பூசை செய்பவரை பொதுவாக அழைக்கும் வழக்கம்) அழைப்பார்களே தவிர, அவர்களை பிராமணர்கள் என்று சொல்வது இல்லை.

பூசகர் என்பது ஆலயத்தில் பூசை செய்பவர்கள். பிராமண சமூகத்தினரின் பணியே இந்து அல்லது சைவக் கோயில்களில் இறைவழிபாட்டுக்குரிய அனுஷ்டானங்களைச் செய்வதுதான். அந்த வகையில் பிராமணர்களும் கோயிலில் பூசகர்கள். அதேபோல கோயிலில் பிராமணர் அல்லாதவரும் அனுஷ்டானங்களைச் செய்யும் போது பூசகர் அல்லது மதத்துக்குரிய மரியாதைக் குறியீடாக ஐயா என்று அழைக்கப்படுகின்றனர். பெரியவர்களையும் ஐயா என்பார்கள். அது பாவிக்கப்படும் இடத்துக்கு ஏற்ப அதன் பெறுமதி அமையும். சில சந்தர்ப்பங்களில் ஆகுபெயராகப் பாவிக்கப்படும்.

ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள் பிராமண சமூகத்தை சாதிய அடிப்படையில் அழிக்க நீங்கள் கோருவதை எவரும் ஏற்றுக் கொள்ளவில்லை. தமிழீழத்தில் இன்றும் பிராமண சமூகம் அதன் மத அடையாளங்களோடுதான் கோயில் அனுஷ்டானங்களைச் செய்கின்றது. எனவே அவை மத அடையாளங்களே தவிர சாதிய அடையாளங்களாக இனங்காட்டப்பட்டு மீள சாதி வெறியை புகுத்தி சாதி அழிப்பு என்று ஒரு சமூகத்தின் மீதுள்ள தனிப்பட்ட பாதிப்புக்களை அல்லது வெறுப்பை அவர்களின் இருப்புக்கான அழிவுக்காக கோருவது போன்ற நாசியத் தன்மை சாதி ஒழிப்பில் விடுதலைப்புலிகள் தொடங்கி எவரும் கோரவில்லை. நாம் முன்னர் குறிப்பிட்டது போலவே விடுதலைப் புலிகள் ஏடும் சொல்கிறது. சாதியம் என்பது புரிந்துணர்வினூடு களையப்பட வேண்டிய ஒன்றே தவிர நீங்களும் நாரதரும் உச்சரிக்கும் ஆரிய வேதாந்த எச்சங்களைக் காவும் பிராமண சமூக அழிப்பு என்பது கொடும் நாசியக் கருத்து என்பதோடு அதற்கு தமிழ் தேசிய சாயம் பூசி இந்துக்களையும் பிராமணர்களையும் தமிழ் தேசியத்தின் பெயரால் அச்சுறுத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது. அது சமூவிரோத தமிழ் தேசிய விரோத செயற்பாடுகளே அன்றி வேறல்ல. விடுதலைப்புலிகள் சாதியத்துள் மத வாததைப் புகுத்தவில்லை. அவர்கள் இந்து மதம் சைவம் என்று தமிழ் தேசியத்துக்கு மத அடையாளமிட முனையவில்லை. தமிழ் தேசியம் இந்து சைவ கிறிஸ்தவ இஸ்லாமிய மதங்கள் அனைத்தையும் ஒருங்கிணைத்தே செல்கிறது என்பதை பூச்சாண்டிக் கருத்துக்களால் சமூகங்கள் மீது அபாண்டமான பழி சுமத்தி அவற்றை நாசிகள் போல அழிக்கக் கூக்குரல் இடுவதை நிறுத்துங்கள்.

(நாரதரின் கேள்விகளுக்கும் இதில் பதில் உள்ளடக்கப்பட்டுள்ளது)

இதை எல்லாம் நெடுக்காலபோவானிற்கு தெரியாதா?

Posted

வேளாள சமூகம் என்ற சொல்லை இதுவரை நீங்கள் கேள்விப்படவில்லை என்பது என்னுடைய குற்றம் இல்லை.

மனித சமூகம் என்ற சொல் கூட பல இடங்களில் பயன்படுத்தப்படுகிறது.

பிராமணர் என்பது ஒரு சாதி இல்லை என்று நீங்கள் சாதிப்பதில் எவ்வித அர்த்தமும் இல்லை.

பிராமணர்கள்தான் சாதிகள் குறித்து எழுதி உள்ளார்கள். அதில் அவர்கள் பிராமணர்களைத்தான் உயர்ந்த சாதி என்றும் குறிப்பிட்டுள்ளார்கள்.

நெடுக்காலபோவான்! நீங்கள் பிராமணர் ஒருவரிடம் சென்று "நீங்கள் என்ன சாதி" என்று கேளுங்கள். அவர்களே உங்களுக்கு நல்ல விளக்கம் தருவார்கள்.

அதன் பிறகு நீங்கள் எங்களோடு சேர்ந்து எழுதினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

http://ta.wikipedia.org/wiki/%E0%AE%AF%E0%...%AE%AA%E0%AF%81

நெடுக்காலபோவான்! தயவு செய்து இந்த இணைப்பை பார்த்து சில விடயங்களை புரிந்து கொள்ளுங்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.