Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிறிலங்காவுக்கு எதிராகக் கண்டனத்தீர்மானம் - பின்லாந்து அரசு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் மனித உரிமை மீறல்கள்

ஐரோப்பிய ஒன்றியம் ஆழ்ந்த கவலை

ஐ.நா.வில் கண்டனத் தீர்மானம்

கொண்டுவர பின்லாந்து முஸ்தீபு இலங்கையில் அதிகரித்துவரும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக, ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் நாடுகள் தமது ஆழ்ந்த கவலையை வெளியிட்டிருக்கின்றன.

நாட்டின் வடக்கு கிழக்கு உட்பட சகல பகுதிகளிலும் இடம்பெறும் வன்முறைகள் மற்றும் மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பான விடயத்தில் இலங்கை அரசுக்கு எதிராக ஐ.நா. சபையின் மனித உரிமைகள் குழுக் கூட்டத்தில் கண்டனத் தீர்மானம் ஒன்றைக் கொண்டு வருவதற்கு ஐரோப் பிய ஒன்றியத்தின் தலைமை நாடான பின்லாந்து திட்டமிடுகிறது என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

இலங்கையின் பல பகுதிகளிலும் சமீப நாள்களாக கொலைகள், கொள்ளைகள், ஆட்கடத்தல்கள், காணாமற் போதல்கள் என்பன கட்டுமீறி இடம்பெற்றுக் கொண் டிருக்கின்றன. குறிப்பாக வடக்கு கிழக்கில் பொதுமக்கள் மீதான விமானத் தாக்குதல் கள் தொடர்ச்சியாக இடம்பெற்றுவருகின் றன.

வடக்கே யாழ். குடாநாட்டு மக்களுக்கு அத்தியாவசியப் பொருள்களை எடுத்துச் செல்லும் ஒரேயொரு தரைப் பாதையான "ஏ9' வீதியை அரசு மூடி வைத்திருக்கிறது. இதனால் அங்கு மக்கள் பெரும் மனிதப்பேரவலத்தை எதிர்நோக்கியிருக்கிறார்கள்.

தமிழர் தாயகப் பகுதிகளிலும், தலைநகர் கொழும்பிலும் ஆட்களைக் கடத்து தல், கப்பம் பெறுதல், கொலை செய்தல் போன்ற சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகமாக இடம்பெற்று வருகின்றன.

நாட்டின் பாதுகாப்பு உச்சக் கட்டத் தில் இருப்பதாக அரசு கூறுகிறது. ஆனால், நாட்டின் தலைநகர் மற்றும் சுற்றுப்புறங் களிலிருந்து பட்டப்பகலிலேயே ஆயுத முனையில் வர்த்தகர்கள், பிரமுகர்கள் கடத்தப்படுகிறார்கள். நகர வீதிகள் எங் கும் இராணுவ, பொலிஸ் சோதனைச் சாவ டிகள் ஸ்தாபிக்கப்பட்டு 24 மணிநேரமும் சோதனைகள் நடத்தப்படுகின்றன.

ஆனால், இதுவரை கடத்தல்களின் பின்னணியில் இருந்து செயற்படுவோர் பற்றி எதுவும் அம்பலத்துக்கு கொண்டு வரப்படவில்லை.

இந்தக் கடத்தல்களின் பின்னணியில் அரச பாதுகாப்பு இயந்திரங்களின் கை வரிசை இருக்கலாம் என்றே சர்வதேச மும் நம்புகிறது.

இத்தகைய சம்பவங்கள் பெரும் மனித உரிமை மீறல்கள் என்று சர்வ தேச நாடுகள் பலவும் கண்டித்து வருகின்றன.

மனித உரிமை மீறல்கள் குறித்து இலங்கைக்கு உதவி வழங்கும் இணைத் தலைமை நாடுகளும் தமது கவலைகளை அவ்வப்போது தெரிவித்து வந்திருக்கின் றன.

இந்த நிலையில், ஐக்கிய நாடுகள் சபை யின் மனித உரிமைகள் ஆணையத்தின் கூட்டம் எதிர்வரும் 27ஆம் திகதி நடை பெறவிருக்கிறது. அந்தக் கூட்டத்தில் இலங்கையில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக இலங்கை அரசைக் கண்டித்துத் தீர்மானம் ஒன்றை முன்மொழிவதற்கு பின்லாந்து அரசு முடிவு செய்திருப்பதாகத் தெரிய வருகிறது.

-உதயன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஏற்கனவே இலங்கை அரசுக்கு எதிராக பின்லாந்து கொண்டு வந்த தீர்மானத்தினை இந்தியா, பாகிஸ்தான் நாடுகளின் உதவியுடன் இலங்கை அரசாங்கம் முறிவடைத்தது தெரிந்ததே. தகவலுக்கு

http://www.yarl.com/forum3/viewtopic.php?t...t=14637&start=0

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மனித உரிமை மீறல்கள் விவகாரம்: குற்றவாளிக் கூண்டில் இலங்கை!

இலங்கையில் அதிகரித்து வரும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிக்கும் நாடுகள் தமது ஆழ்ந்த கவலையை வெளியிட்டிருக்கின்றன என்றும், வடக்கு - கிழக்கு உட்பட நாட்டின் சகல பகுதிகளிலும் இடம்பெறும் வன்முறைகள் மற்றும் மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்பாக இலங்கை அரசுக்கு எதிராக ஐ.நா. சபையின் மனித உரிமைகள் குழுக் கூட்டத்தில் கண்டனப் பிரேரணை ஒன்றைக் கொண்டுவர ஐரோப்பிய ஒன்றியத்தின் தற்போதைய தலைமை நாடான பின்லாந்து மீண்டும் முன் னேற்பாடு செய்து வருகின்றது என்றும் செய்திகள் வெளியாகி யிருக்கின்றன.

இலங்கையில் கட்டுமட்டின்றி இடம்பெறும் ஆட்கடத்தல்கள், படுகொலைகள், கொள்ளைகள், ஆயுதக் குழுக்களின் அட்டகாசங்கள் போன்றவை குறித்து விசாரிப்பதற்கும், குற்றவாளிகளைக் கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்து வதற்கும், இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்து இடம்பெறாமல் தடுப்பதற்கும் இலங்கை அரசு தவறிவிட்டது எனத் தெரி வித்து, இதே போன்ற பிரேரணை ஒன்றைக் கடந்த ஒக்டோபரில் ஜெனிவாவில் நடைபெற்று முடிந்த ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக் குழுக் கூட்டத் தொடரிலும் பின்லாந்து சமர்ப்பித்தி ருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக் குழுவின் கூட்டத்துக்கு வெளியே - முன்னேற்பாடாக - இந்தப் பிரேரணைக்கு ஆதரவு திரட்டும் (Lobbying)ஆயத்தத்தில் ஈடுபடாத நிலையில், திடுதிப்பென பிரேரணையை பின்லாந்து கடந்த கூட்டத் தொட ரில் சமர்ப்பித்த பின்னணியில் அது அப்போது நிறைவேற்றப் படாமல் போனது.

இலங்கையில் இடம்பெறும் மனித உரிமை மீறல்கள் தொடர் பாக முழுஅளவில் விசாரணை நடத்துவதற்கு இலங்கை இணங்கியிருப்பதாகச் சுட்டிக்காட்டி, அதன் காரணமாக அந்தப் பிரேரணையை இந்தியாவும் ஏனைய சில நாடுகளும் அப்போது கடுமையாக எதிர்த்தன. அதனால் அந்தப் பிரேரணை அக்கூட்டத் தொடரில் அப்போது தோற்கடிக்கப்பட்டது.

இப்போது நிலைமை சற்று மாறுதல். இலங்கையில் வன்முறை கள் ஒக்டோபருக்கு முந்திய நிலையை விட இப்போது மோசமடைந்து விட்டன. அவற்றைத் தடுப்பதற்கும், உரிய விசார ணைகளை நடத்துவதற்கும், குற்றவாளிகளைச் சட்டத்தின் முன் நிறுத்துவதற்கும் இலங்கை அரசுத் தரப்பு தொடர்ந்தும் போதிய கவனம் செலுத்தத் தவறி வருகின்றது என்ற கருத்து சர்வதேச மட்டத்தில் மேலோங்கி உள்ளது.

மனித உரிமைகள் விடயத்தில் இலங்கை அரசின் அண்மைக் காலப் போக்குகள் இந்தியத் தரப்புக்கும் கூட விசனத்தைத் தந்திருக் கின்றன என்பதே உண்மை.

வடக்கே யாழ். குடாநாட்டு மக்களுக்கு அத்தியாவசியப் பொருள்களை எடுத்துச் செல்லும் ஒரே வழித் தடமான "ஏ-9' பாதையைத் தனது இராணுவத் தந்திரோபாயத் திட்டம் கருதி ஒரு தலைப்பட்சமாக அரசு மூடிவைத்திருக்கின்றது. இதனால், அங்கு பெரும் மனிதப் பேரவல நிலைமை உருவாகி அது மிக மோசமான கட்டத்தை அடைந்திருக்கின்றது. தமிழர் தாயகப் பகுதிகளிலும், தலைநகர் கொழும்பிலும் ஆட்கடத்தல்கள், கப்பம் பெறுதல், படுகொலைகள் என்பன நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.

நாட்டின் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டிருக்கி

அதுக்குத் தானாக்கும் அவசர அவசரமா அண்ணாச்சி இந்தியா நோக்கி ஓடுகிறாரோ? எல்லாம் கண் கெட்ட பின் தான்.....!

ஈழத்திலிருந்து

ஜானா

இந்தியா உதவி செய்யாவிடினும் உபத்திரம் செய்யாம இருக்கலாம்தானே ஒரு இனத்தை அழிக்க நினைக்கும் இலங்கை அரசுடன் கைகோர்த்து இன அழிப்புக்கு வழிசமைகிறதே நாம் தந்தை நாடு எனக்கூறும் இந்தியா???

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியா எப்படியும் முதுகில் குத்திவிடும் :twisted:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.