Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இணைத் தலைமைகளின் கூட்டமும் பிரபாவின் மாவீரர் தின அறிவிப்பும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இணைத் தலைமைகளின் கூட்டமும்

பிரபாவின் மாவீரர் தின அறிவிப்பும்

இலங்கைக்கு உதவி வழங்கும் டோக்கியோ மாநாட்டின் இணைத் தலைமைகள் எதிர்வரும் 20 ஆம் திகதி அமெரிக்காவின் வாஷிங் டன் நகரில் கூடி இலங்கை நிலைவரம் குறித்து ஆராயவிருக்கின்றன என்று அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

உதவி வழங்கும் நாடுகளின் இணைத் தலைமைகளான அமெரிக்கா, ஜப்பான், நோர்வே மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியன கடைசியாக செப்ரெம்பர் 12, 13 ஆம் திகதிகளில் முறை யாகக் கூடி இலங்கை நிலைவரம் குறித்து ஆராய்ந்திருந்தன.

இலங்கையில் அமைதிப் பேச்சுக்களை உடனடியாக - அடுத்த மாதமான ஒக்ரோபர் முற்பகுதியில் - நடத்தும்படி இலங்கை இனப்பிரச்சினையில் சம்பந்தப்பட்ட தரப்புகளான இலங்கை அரசையும், விடுதலைப் புலிகளையும் அப்போது வற்புறுத்திக் கேட்டுக் கொண்டன இணைத் தலைமை நாடுகள்.

அத்தோடு, ஒக்ரோபர் முற்பகுதியில் நடக்கக்கூடிய அந்த அமைதிப் பேச்சுக்களின் பெறுபேறுகளை ஒக்ரோபர் இறுதியில் தாங்கள் கூடிப் பரிசீலனை செய்யப் போகின்றன என்றும் அப்போது அவை அறிவித்திருந்தன.

இணைத் தலைமைகளின் கோரிக்கைக்கு சற்று மாறாக ஒக்ரோபர் இறுதியில்தான் அரசு - புலிகள் பேச்சு நடைபெற்று முடிந்த தால் இணைத் தலைமைகளின் உத்தேச சந்திப்பும் சற்றுத் தள்ளி வைக்கப்பட்டு நவம்பர் மூன்றாவது வாரத்தில் நடைபெறுகின்றது.

முன்னைய தனது செப்ரெம்பர் கூட்டத்துக்கும், இனி நடக்கப் போகின்ற நவம்பர் கூட்டத்துக்கும் இடையில், இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை இரு தடவைகள் இணைத் தலைமைகளின் தூதுவர்கள் சந்தித்துப் பேசியுள்ளார்கள். ஜெனிவாப் பேச்சை முடித்துக்கொண்டு நாடு திரும்பிய புலிகளின் பேச்சுக் குழு உறுப்பினர்களைக் கொழும்பில் விமான நிலையத்திலும் அதன் பின்னர் அரச பேச்சுக் குழுவின் பிரதிநிதிகளைத் தனியாகவும் அவர்கள் சந்தித்துள்ளனர்.

அதேசமயம், ஜெனிவாவில் கடந்த 28, 29 ஆம் திகதிகளில் இலங்கை அரசு - புலிகள் இடையே இடம்பெற்ற பேச்சுக்களின் விவரங்கள், போக்குகள் என்பவற்றை அந்தப் பேச்சுகளுக்கான அனுசரணையாளர்களும் இணைத் தலைமைகளுள் ஒரு தரப்புமான நோர்வே, ஏனைய இணைத் தலைமைகளுக்கு விளக்கியிருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்தப் பின்னணியில் "ஜெனிவா 2' பேச்சு முன்நகர்வின்றி, பயனின்றி முடிவுற்ற சூழ்நிலையில்

அமைதி முயற்சிகள் தொடர்பாக இணைத் தலைமைகள் தமது நவம்பர் கூட்டத்தின்போது என்ன நிலைப்பாட்டைப் பிரதிபலிக்கப் போகின்றன என்பதை அறிய இலங்கை மக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றார்கள்.

அதுவும்

"ஏ-9' பாதையைத் திறந்து விட மறுத்து அது மூடப்பட்ட தால் ஆறு லட்சம் தமிழ் மக்களுக்கு ஏற்பட்டுள்ள பெரும் மனிதப் பேரவலத்தைக் களைய மறுத்து - இலங்கை அரசு விடாப்பிடி யான கெடிபிடிப் போக்கைக் கைக்கொண்டதால்தான் ஜெனிவா - 2 பேச்சுகள் முழுத் தோல்வியில் முடிவடைந்துள்ளன என்று கருதும் ஈழத் தமிழர்கள், இலங்கை அரசின் மனிதப் பேரவலத்தை ஏற்படுத்தும் இந்த இராணுவத் தந்திரோபாய நோக்க எத்தனம் குறித்து சர்வதேசம் ஏதும் செய்யாமல் பார்த்திருப்பது பற்றிக் கடும் விசனமும், ஆத்திரமும், எரிச்சலும் கொண்டுள்ள சூழலில் இணைத் தலைமைகளின் கூட்டம் அடுத்த இரு வாரங்களில் அமெரிக்கா வில் நடைபெறவிருக்கின்றது.

அமைதி முயற்சி விடயத்தில் இலங்கை அரசுத் தரப்பு தொடர்ந்து தனது திமிர் பிடித்த மேலாண்மைப் போக்கையும், அதிகார அழுத்தத்தையும், இராணுவ ஆதிக்கத்தையும் தமிழர் தரப்பு மீது முறையற்ற விதத்தில் பிரயோகிப்பதற்கு இடமளித்து, அதற்கு விட்டுக் கொடுத்து, வழிசெய்து வரும் இணைத் தலைமைகள் உள்ளிட்ட சர்வதேச சமூகம், தமிழர்கள் தரப்பு மீது மட்டும் முறையற்ற அழுத்தத்தையும், நீதியற்ற நெருக்குவாரத்தையும் பிரயோகித்து வரு கின்றது என்ற அளவுக்கு அதிகமான ஆதங்கம் தமிழர்களுக்கு உண்டு.

இந்த நிலைமையை நீடிக்க விடக்கூடாது, இது விடயத்தில் தமிழர் தரப்பின் ஏக - அதிகாரபூர்வ - பிரதிநிதிகளான விடுதலைப் புலிகள் ஏதேனும் திட்டவட்டமான முடிவை எடுத்து அறிவிக்க வேண்டும் என்ற நியாயமான எதிர்பார்ப்பும், கருத்தும் தாயகத் தமிழர்கள் மத்தியில் மாத்திரமல்லாமல் புலம்பெயர் நாடுகளில் வதியும் தமிழர்கள் மத்தியிலும் கூட ஆழமாக உள்ளது.

இந்த அறிவிப்பை - இவ்விடயம் தொடர்பான தமது விடுதலை அமைப்பின் நிலைப்பாட்டை - அடுத்த மூன்று வார காலத்தில் வரவிருக்கும் முக்கியத்துவம் வாய்ந்த தமது வருடாந்த மாவீரர் தின உரையில் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் வெளிப்படுத்துவார் என்ற எதிர்வு கூறலும் தமிழர்கள் மத்தியில் காணப்படுகின் றது.

இந்த நிலையில்தான் - தலைவர் பிரபாகரனின் மாவீரர் தின உரைக்கு சரியாக ஒரு வாரத்துக்கு முன்னர் இணைத் தலைமை நாடுகளின் கூட்டத்துக்கு ஒழுங்கு செய்யப்பட்டிருக்கின்றது.

வழமைபோல, இம்முறையும் இணைத் தலைமை நாடுகளின் கூட்டத்துக்குப் பின்னர் கூட்டறிக்கை ஒன்று வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

அமைதி முயற்சிகளில் இலங்கை அரசின் அதிகாரத் திமிர்ப் போக்குக் குறித்தும், அதைப் பார்த்து வாளாவிருக்கும் சர்வதேச சமூகத்தின் மெத்தனம் குறித்தும் தமது மாவீரர் தின உரையில் காரசாரமாக தலைவர் பிரபாகரன் விமர்சிக்கக் கூடும், அந்நிலையை ஒட்டிக் கடும்போக்கு நிலைப்பாட்டை அவர் வெளிப்படுத்தக் கூடும், அமைதி முயற்சிகளுக்கான கதவை இதுவரை அகலத் திறந்து வைத்திருந்த புலிகளின் தலைவர் சர்வதேச சமூகத்தின் பாராமுகப் பண்பு காரணமாக சகிப்புத் தன்மையின் எல்லை கடந்து மோசமான முடிவுகளை எடுத்து வெளியிடக்கூடும் என்றெல்லாம் பார்வையாளர்கள் - நோக்கர்கள் - எதிர்வு கூறுகின்றனர்.

அப்படியான முடிவைப் புலிகள் தரப்பு எடுக்காமல் தவிர்க்கச் செய்வதற்கான தந்திரோபாய அழுத்தத்தைப் புலிகள் தரப்பு மீது ஏற்படுத்தவும்

அமைதி முயற்சிகளின்பால் தொடர்ந்து ஈடுபாடு வைத்திருக்கும் படியான நம்பிக்கையைப் புலிகளுக்கு ஏற்படுத்தும் நோக்கிலும்-

சில அறிவிப்புகளை நவம்பர் 20 கூட்டத்தை ஒட்டி இணைத் தலைமைகள் விடுக்க முயலலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மொத்தத்தில்

அமைதி முயற்சிகளின் போக்குக் குறித்துக் கடும் எரிச்சலும், விசனமும், ஆதங்கமும் கொண்டுள்ள புலிகள், எதிர்கால அமைதி நடவடிக்கைகள் குறித்துத் திட்டவட்டமான - தீர்க்கமான - மோசமான நிலைப்பாட்டை எடுத்து அதை மாவீரர் தினப் பிரகடனமாக வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படும் சூழ்நிலையில், அதைத் தவிர்க்கச் செய்யும் கடைசி எத்தனமாகவே மாவீரர் தினத்துக்கு முந்திய இணைத் தலைமைகளின் கூட்டத்துக்கான திட்டமிடல் அமைந்திருக்கிறது என்பது இலகுவாக ஊகிக்கக்கூடிய விடயமே.

நவம்பர் 20 இல் நடக்கும் தமது கூட்டத்தில் இணைத் தலைமைகள், தமிழர் தரப்பின் நியாயமான ஆதங்கத்தை உள்வாங்கி, நிலைமையைச் சீர்செய்யும் நிலைப்பாட்டை எடுக்கவேண்டும். அது தவறுமானால் அதற்கு அடுத்த வாரத்தில் வெளியாகும் தலைவர் பிரபாகரனின் மாவீரர் தின அறிவிப்பும் அதற்கேற்ப படு சூடாகவே இருக்கும் என்பது நிச்சயம்.

-உதயன்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.