Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிழக்கின் முதல்வர் தேசத்தின் குரல் பாலசிங்கத்தை விமர்சித்து தமிழ் இனத்தையே அவமானப்படுத்தி விட்டார்!

Featured Replies

kalai876545678.jpg

 

தமிழ் பேசும் சமூகம் என்றே மறைந்த எம் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் உச்சரித்தாரே தவிர தமிழ் - முஸ்லிம் என்று பிரித்து எந்த பேச்சு மேசையிலும் உச்சரிக்கவில்லை இதனை அறியாமல் கிழக்கு முதல்வர் விமர்சித்தமை தமிழர் மனதை புண்படுத்தும் செயல் என்று கிழக்கு மாகண சபை உறுப்பினர் த.கலையரசன் விசனம் தெரிவித்துள்ளார்.

 

ஊடகவியலாளர் சந்திப்பில் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் தொடர்பில் எழுப்பப்பட்ட கேள்விக்கு கிழக்கு மாகாண சபையின் புதிய முதலமைச்சர் நஸீர் அஹமட் கூறிய பதில் ஒட்டுமொத்த தமிழ் இனத்தையும் அவமதிப்பதுடன் இன்றைய சூழலில் பொருத்தமற்ற செயல். இப்படிப்பட்ட கூற்றுக்களை பதவி ஏற்றவுடன் கிழக்கு முதல்வர் கூறுவது சாலச் சிறந்ததல்ல என்றும் கலையரசன் விடுத்த அறிக்கையில் சுட்டிக் காட்டியுள்ளார்

 

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-

 

"முஸ்லிம் மக்கள் விடுதலைப் புலிகளின் பெறுமதியை பற்றி தர்ஹா நகர் தாக்கப்பட்டபோது உலகத்திற்கே எடுத்துக் கூறியிருந்தார்கள் விடுதலைப் புலிகள் இருந்திருந்தால் இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது என்று கிழக்கின் புதிய முதல்வருக்கு ஞாபகத்தில் இல்லையா? அல்லது ஞாபகம் இருந்தும் இல்லாதவர் போன்று செயற்பட நினைக்கின்றாரா? முஸ்லிம் மக்கள் மீது பேரவலம் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கின்றது என்றால் அது 2009 இற்குப் பிற்பட்ட காலப்பகுதியில்தான். விடுதலைப் புலிகளின் கட்டமைப்பு இருந்த காலத்தில் முஸ்லிம் மக்களுக்கு தர்ஹா நகர் போன்ற அழிவுகளை மேற்கொள்ளப்படவில்லை என்பதை கிழக்கு முதலமைச்சர் முதலில் புரிந்து செயற்படவேண்டும்.

 

கிழக்கு முதல்வர் பதவியேற்று ஒரு சில நாட்களுக்குள் தமிழ் மக்களையும் உலகத் தமிழர் மனங்களையும் புண்படுத்தும் வார்த்தைகளை பிரயோகிப்பது தமிழ் - முஸ்லிம் உறவில் விரிசலை ஏற்படுத்தம் உள்நோக்கமா என்ற கேள்வியையும் கேட்கவேண்டி இருக்கின்றது. அன்று தமிழீழ விடுதலைப்புலிகளிடம் சென்று தங்களது நிலைமைகளை சொல்லி சமாதான செயற்பாடுகளில் தங்களை ஈடுபடுத்தியது மாத்திரமல்ல அன்று இலங்கை அரசின் குண்டு வீச்சு விமானம் மூலம் குண்டு வீசி கொல்லப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறை பொறுப்பாளர் சு.ப. தமிழ்ச்செல்வனின் மறைவிற்கு நாடாளுமன்றத்தில் இரங்கல் உரையை ரவூப் ஹக்கீம் ஆற்றியதை இன்றைய கிழக்கு மாகாண முதலமைச்சர் மறந்து விட்டாரா?

 

அன்று போற்றிப் பேசிய கட்சியினர் இன்று அவர்களைப் பற்றி கீழ்த்தரமான வார்த்தைப் பிரயோகங்களை பயன்படுத்துவது தமிழ் மக்களை அவமதிக்கும் செயல் என்பதை ஒரு கணம் சிந்திக்கவேண்டும். இப்படியான நடவடிக்கை தொடருமாக இருந்தால் நாமும் எமது அடுத்தகட்ட நிலைமைகள் தொடர்பில் சிந்திக்க வேண்டியிருக்கும். தமிழீழ விடுதலைப் புலிகளின் மதியுரைஞர் அன்ரன் பாலசிங்கத்தை அவமதித்த செயலானது ஒட்டுமொத்த தமிழ் மக்களையும் அவமதித்த செயலாகும்" - என்றுள்ளது. -

 

http://www.malarum.com/article/tam/2015/02/15/8629/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AF%E0%AF%87-%E0%AE%85%E0%AE%B5%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-.html#sthash.7LYNQWRV.dpuf

 

  • கருத்துக்கள உறவுகள்

கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை?

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப சம்பந்தர் விமர்சிக்கலாமோ

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
யாராக இருந்தாலும் அண்ணன் பாலசிங்கத்தை விமர்சிக்கவோ பெயரை சொல்லவோ அருகதை அற்றவர்கள்.
 
எனது கேள்வி என்னவென்றால் அந்த அரைகுறையிடம் (நஸீர் அஹமட்) எதற்க்காக அண்ணரைப்பற்றி கேள்வி எழுப்பினர்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.