Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இணைப்பின் கதியை சர்வஜன வாக்கெடுப்பே தீர்மானிக்கும்

Featured Replies

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வடக்கு, கிழக்கு மாகாணங்களின் இணைப்பு விவகாரத்தை சர்வஜன வாக்கெடுப்பே தீர்மானிக்கும் என்று பிரதமர் இரட்ணசிறி விக்கிரமநாயக்கா நேற்று செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

வட, கிழக்கு மாகாண இணைப்பு செல்லுபடியற்றதென அக்டோபர் 16 இல் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.

இத்தீர்ப்பையடுத்து இந்த இரண்டு மாகாணங்களையும் மீண்டும் இணைப்பதற்கான சட்டரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென வட, கிழக்கிலிருந்து அரசாங்கத்திற்கு பரவலாக கோரிக்கைகள் விடுக்கப்பட்டதுடன் அப்பிராந்திய மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எம்.பி.க்கள் சபை அமர்வை பகிஷ்கரித்து எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.

அதேசமயம், நீதிமன்ற தீர்ப்பின் பிரகாரம் அரசாங்கம் இதுவரை செயற்படவில்லையென தெரிவித்த ஜே.வி.பி. நீதிமன்ற உத்தரவை அவமதிப்பதாக மனுத்தாக்கல் செய்யப்போவதாக அச்சுறுத்தியிருந்தது.

இந்நிலையிலேயே பிரதமர் இரட்ணசிறி விக்கிரமநாயக்கா, வடக்கு, கிழக்கு மாகாணங்களின் எதிர்காலத்தை சர்வஜன வாக்கெடுப்பே அதாவது அந்தப் பிராந்திய மக்களே தீர்மானிப்பார்கள் என்று நேற்று சபையில் அறிவித்தார்.

ஆனால், கிழக்கில் எவ்வாறு சர்வஜன வாக்கெடுப்பை அரசாங்கம் நடத்துமென்பது குறித்து உடனடியாக தெளிவாக தெரியவில்லை.

பாராளுமன்றத்தில் பிரதமர் இது தொடர்பாக மேலும் தெரிவித்ததாவது;

வடக்கு, கிழக்கு ஒரே மாகாணமாக இருக்க வேண்டுமென்பது இல்லை. தனித்தனியாக இருக்க வேண்டுமா என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் அரசாங்கத்துக்கு இல்லை. இவ்விவகாரம் தொடர்பான உயர்நீதிமன்ற தீர்ப்பிற்கு அமைய அரசாங்கம் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது. நீதிமன்ற தீர்ப்பில் அரசாங்கம் ஒருபோதும் தலையிடாது.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தனியொரு இராச்சியத்தை ஸ்தாபிக்கவென கொண்டு செல்லப்படும் பிரிவினைவாத பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டு வந்து நிரந்தரமான சமாதானத்தை நிலைநாட்டவே 1987 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 29 ஆம் திகதி இலங்கை அரசும், இந்திய அரசும் இந்திய - இலங்கை ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டன.

உறுதியளிக்கப்பட்டதற்கு ஏற்ப அவசரகாலச் சட்டத்தை நீக்கல், ஆயுத தாக்குதல்களை நிறுத்தல் போன்ற அனைத்தையும் இலங்கை அரசாங்கம் நிறைவேற்றினாலும் ஆயுதக் குழுக்களால் ஆயுதங்களை ஒப்படைக்கவோ, எதிர்ப்புகளை கைவிடவோ முன்வராமல் வன்முறைகளை நிறுத்தாமல் செயற்பட்டு வந்தன. இதனால் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள சில விடயங்களை நிறைவேற்றுவது நடைமுறைச் சாத்தியமற்றுப் போனது.

இந்திய - இலங்கை ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டவாறும் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தில் தெரிவிக்கப்பட்டிருப்பதற்கு

  • கருத்துக்கள உறவுகள்

விளக்கமா குழப்பமா?

இலங்கை - இந்திய சமாதான உடன்படிக்கையின் ஏற்பாடுகளின் பிரகாரம், வடமாகாணத்தையும் கிழக்கு மாகாணத்தையும் தற்காலிகமாக இணைப்பதற்கு 18 வருடங்களுக்கு முன்னர் ஜே.ஆர். ஜெயவர்தன அரசாங்கம் அவசரகால ஒழுங்கு விதிகளின் கீழ் மேற்கொண்ட நடவடிக்கை சட்டவிரோதமானது என்று கடந்த மாதம் 16 ஆம் திகதி உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்துமாறு அரசாங்கத்திடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கேட்டிருந்தது. அதற்கு இணங்க பிரதமர் இரத்னசிறி விக்கிரமநாயக்க நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை விடுத்து உரையாற்றினார். பிரதமரின் உரை அரசாங்கத்தின் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்துவதற்குப் பதிலாக, இணைப்பு விவகாரத்தில் எத்தகைய அணுகுமுறையைக் கடைப்பிடிப்பது என்பது தொடர்பில் அரசாங்கத்துக்கு இருக்கின்ற குழப்பநிலையையே தெளிவுபடுத்தியிருக்கிறது.

வட மாகாணமும் கிழக்கு மாகாணமும் இணைந்திருக்க வேண்டுமா அல்லது பிரிந்திருக்க வேண்டுமா என்பதைத் தீர்மானிக்கும் பொறுப்பு அங்கு வாழுகின்ற மக்களின் கைகளிலேயே இருக்கின்றதே தவிர, அரசாங்கத்திடமோ அல்லது எந்தவொரு ஆயுதக் குழுவிடமோ அல்ல என்று கூறியிருக்கும் பிரதமர் விக்கிரமநாயக்க, இணைப்பு விவகாரம் சர்வஜன வாக்கெடுப்பு மூலமே தீர்மானிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்திருக்கிறார். நீதித்துறையின் சுதந்திரத்தை அரசாங்கம் மதித்துப் போற்றுகிறது. தீர்மானங்களை மேற்கொள்ளும் நீதித்துறையின் செயன்முறைகளில் அரசாங்கம் ஒருபோதுமே தலையீடு செய்யாது என்று குறிப்பிட்ட அவர், அருகருகாக அமைந்திருக்கின்ற இரு மாகாணங்களை அல்லது மூன்று மாகாணங்களை ஒரு நிருவாக அலகாக இணைப்பதற்கான ஏற்பாடு எதுவும் தற்போதைய அரசியலமைப்பில் கிடையாது. அரசியலமைப்பின் 154 ஏ(3) பிரிவின் கீழ் வட மாகாணத்தையும் கிழக்கு மாகாணத்தையும் தற்காலிகமாக இணைப்பதற்கான சட்டமூலமொன்றை நிறைவேற்றுவதற்கு பாராளுமன்றத்துக்கு அதிகாரம் இருக்கின்ற போதிலும், அத்தகையதொரு சட்டமூலம் இன்னமும் சபையில் நிறைவேற்றப்படவில்லை என்று தெரிவித்திருக்கிறார்.

வடமாகாணமும் கிழக்கு மாகாணமும் தொடர்ந்தும் இணைந்திருக்க வேண்டுமென்று கோருவதற்கு விடுதலைப் புலிகளுக்கு எந்தவிதமான தார்மீக உரிமையும் இல்லை. இலங்கை - இந்திய சமாதான உடன்படிக்கையின் பிரகாரம், விடுதலைப்புலிகள் வன்முறைகளைக் கைவிட்டு ஆயுதங்களைக் கீழே வைக்க வேண்டியது வடக்கு - கிழக்கு இணைப்புக்கு ஒரு முன் நிபந்தனையாகும். தங்களது எதிர்காலத்தைத் தீர்மானிப்பதில் வடக்கு - கிழக்கு மக்களுக்கு இருக்கின்ற ஜனநாயக உரிமைகளைப் பேணிப் பாதுகாப்பதற்கு ஒன்றிணைந்த முயற்சிகளை மேற்கொள்ளுமாறு சகல அரசியல் கட்சிகளிடமும் அரசாங்கம் வேண்டுகோள் விடுக்கிறது. வடக்கு - கிழக்கில் ஜனநாயக உரிமைகள் நடைமுறைப்படுத்தப்படுவதற்கு உகந்த சூழ்நிலையை தோற்றுவிக்க அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது என்றும் பிரதமர் பாராளுமன்றத்தில் தனது உரையில் தெரிவித்தார்.

உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பின் பிரகாரம் நோக்குகையில், வட மாகாணத்துக்கும் கிழக்கு மாகாணத்துக்கும் தனியான மாகாண சபைகள் அமைக்கப்பட வேண்டும். தனியான ஆளுநர்கள் நியமிக்கப்பட வேண்டும். நீதித்துறையின் சுதந்திரத்தை அரசாங்கம் மதிப்பதாகவும் அதன் செயன்முறைகளில் தலையீடு செய்யப்போவதில்லை என்றும் பிரதமர் விக்கிரமநாயக்க தெரிவித்திருப்பதன் அடிப்படையில் நோக்கினால், உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கு மதிப்பளித்து இரு மாகாணங்களையும் பிரிக்க வேண்டும். அதை அரசாங்கம் செய்யப்போகிறதா? வட மாகாணமும் கிழக்கு மாகாணமும் இணைந்திருக்க வேண்டுமா இல்லையா என்பதை அங்கு வாழும் மக்களே தீர்மானிக்க வேண்டும் என்ற பிரதமரின் கூற்றை நோக்கும் போது, இலங்கை - இந்திய சமாதான உடன்படிக்கையின் ஏற்பாட்டின் பிரகாரம், இணைப்பின் எதிர்காலத்தை தீர்மானிப்பதற்கு கிழக்கில் சர்வஜன வாக்கெடுப்பொன்று நடத்தப்பட வேண்டும். அத்தகையதொரு சர்வஜன வாக்கெடுப்பை அரசாங்கம் நடத்துவதற்குத் தயாராகிறதா?

அவசரகால ஒழுங்கு விதிகளின் கீழ் இரு மாகாணங்களையும் இணைப்பதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு இல்லையென்றும் அத்தகைய அதிகாரம் பாராளுமன்றத்துக்கே இருக்கிறது என்றும் உயர் நீதிமன்றத் தீர்ப்பில் கூறப்பட்டிருக்கிறது. ஏற்கனவே, வர்த்தமானிப் பிரகடனம் மூலமாக செய்யப்பட்ட இரு மாகாணங்களினதும் தற்காலிக இணைப்பு செல்லுபடியற்றது என்று உயர் நீதிமன்றம் கூறிவிட்ட நிலையில், முன்னைய ஏற்பாட்டின் பிரகாரமான கிழக்கு சர்வஜன வாக்கெடுப்பு சாத்தியமானதா? அது சாத்தியமற்றது என்றால், மீண்டும் வட மாகாணத்தையும் கிழக்கு மாகாணத்தையும் மீண்டும் இணைத்தே கிழக்கில் சர்வஜன வாக்கெடுப்பொன்றுக்கு உத்தரவிட வேண்டும். இணைப்பைச் செய்வதற்கான அதிகாரம் பாராளுமன்றத்துக்கு இருக்கிறது என்று உயர் நீதிமன்றமே தீர்ப்பில் கூறியிருக்கும் நிலையில், (அதே தீர்ப்பினால் பிரிக்கப்பட்ட) இரு மாகாணங்களையும் மீண்டும் இணைப்பதற்கான சட்டமூலமொன்றை அரசாங்கம் பாராளுமன்றத்தில் கொண்டுவருமா?

உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு மறுநாளே வடமாகாணத்தையும் கிழக்கு மாகாணத்தையும் மீண்டும் இணைப்பதற்கான சட்டமூலமொன்றை அரசாங்கம் பாராளுமன்றத்தில் கொண்டு வந்தால் அதை ஆதரிக்கத் தயாராயிருப்பதாக பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்திருந்தது. ஐ.தே.க.வுடன் ஆளும் ஷ்ரீலங்கா சுதந்திரக் கட்சி புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திட்டு சகவாழ்வு அரசியலை முன்னெடுத்திருக்கும் இன்றைய சூழ்நிலையில் இணைப்பை மீண்டும் செய்வதற்கான சட்டமூலமொன்று பாராளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டால் அது நிறைவேற்றப்படக்கூடிய வாய்ப்பு தாராளமாகவே இருக்கிறது. அத்தகையதொரு, வாய்ப்பைப் பயன்படுத்தி சட்டமூலத்தை கொண்டுவரக்கூடிய அரசியல் துணிச்சல் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்துக்கு இருக்கிறதா?

ஒட்டுமொத்தத்தில், பிரதமர் பாராளுமன்றத்தில் விடுத்த அறிக்கை இணைப்பு தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாட்டை தெளிவாக விளக்குவதற்குப் பதிலாக, குழப்பத்தை ஏற்படுத்தக் கூடிய பல கேள்விகளையே கிளப்பிக்கொண்டு செல்கிறது. அரசாங்கத்தின் நிலைப்பாட்டு விளக்கத்தை அல்ல, நிலைப்பாட்டுக் குழப்பத்தையே அதில் பிரகாசமாகக் காணமுடிகிறது.

-தினக்குரல்

தங்களுடைய எதிர்காலத்தை அந்தப்பிரதேச மக்கள் தான் சர்வசன வாக்குரிமை மூலம் தீர்மானிக்கவேண்டும் என்பதை ஜனநாயக உணர்வுள்ள அத்தனை பேரும் அங்கீகரிக்க வேண்டும். இந்தக் கருத்தைச் சொன்ன ரத்தினசிரியைப் பாராட்ட வேண்டும்.

அப்படியென்றால் சிங்கள் தேசத்துடன் சேர்ந்திருக்க வேண்டுமா அல்லது பிரிந்து தனித்து வாழ வேண்டுமா என்பதைத் தீர்மானிக்கும் உரிமையையும் தமிழீழ மக்களுக்கு வழங்க வேண்டும். செய்வாரா இந்த 'ஜொலி சீயா'

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.