Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கவிதை அந்தாதி

Featured Replies

ஊசலாடும் வாழ்வினில் ஏன்

இத்தனை மனக் கவலை?

நாளை நீர் போய் விடுவீர்

வெண் சாம்பலே மிதமாகும்!

பசி தாகம் அறிவிக்க உம்

உடம்பில் உணர் விருக்காது!

பைங் கிளியைப் பார்ப்பதற்கு

பார்வையும் உமக் கிருக்காது!

ஏனப்பா மானிடரே உண்மை

தெரிந்தும் நீர் அலைகின்றீர்?

உமக்குள் ஒரு பெருவிருட்சம்

ஊமையாய் உறங்கு கின்றது!

நீரோ சிறு விதை தேடி

தெருத்தெருவாய் அலை கின்றீர்!

உமக்குள் ஒரு பெருஞ்சோதி

தனிமையிலே தகிக் கின்றது!

நீரோ சிறு கொள்ளி தேடி

குசினிக்குள் சுற்று கின்றீர்!

ஏனப்பா மானிடரே உம்மை

அறியாது நீர் வாழ்கின்றீர்?

குழந்தைப் பருவ மென்றீர்!

குதூகலிக்க வேண்டுமென்றீர்!

உமக்கொரு தொட்டில் தந்தோம்!

அரவணைக்க அன்னை தந்தோம்!

இளமைப் பருவம் என்றீர்!

இன்புற வேண்டும் என்றீர்!

ஆற்றல் மிக்க உடலைத் தந்தோம்!

அழகிய காதல் தந்தோம்!

அட முதுமைப் பருவமும் ஓடி முடியுந்தறுவாயில்

என்னிடம் வந்து இப்போது என்னதான் கேட்கின்றீர்?

அன்புடன்,

கடவுள்

  • Replies 1.9k
  • Views 182k
  • Created
  • Last Reply

கடவுள்...

நான் கடவுள்..

நாற்றமிடும் சேற்றினிலே..

நாற்றிட்டு சோறு தரும்

விவசாயி நான் கடவுள்..

மானம் காத்திடவே..

ஊனம் உடுக்கதந்த

நெசவாளி நான் கடவுள்..

முதலை தொழிலாக்கி

உன்னை உழைக்க வைத்த

முதலாளி நான் கடவுள்..

அன்னை நான் கடவுள்..

ஆசான் நான் கடவுள்..

மண்ணில் உயிர்க்கெல்லாம்

இரங்குவோன் நான் கடவுள்

தண்ணீர் தந்தததால் கடவுள்..

செந்நீர் தந்ததால் கடவுள்..

எந்நாளும் எளியோரில்

இன்பம் அழைத்ததால் நான் கடவுள்..

பொய் மறந்ததால் கடவுள்..

புகழ் வெறுத்ததால் கடவுள்..

கை செய்யும் தானம் பிற

மெய் மறந்ததால் நானே கடவுள்.

(நான் நாத்திகம் பேசவில்லை..தெரியாத கடவுள் ஒருவன் கண்ணுக்கு தெரிந்த கடவுள் பலஆயிரம்..தொழுக..தொண்டு செய்க.)

கடவுள் எனக்கே கல்

எறியத் துணிந்து விட்டாய்!

உன் கண்களை நீயே

குத்தி குருடன் ஆனதற்கு

என்னுடன் ஏனய்யா வீண்

சண்டை புரிகின்றாய்?

படிப்பு வரம் கேட்டாய்!

பட்டங்கள் பல தந்தேன்!

காதல் வரம் கேட்டாய்!

காதலியை சேர்த்து வைத்தேன்!

வாழ்க்கை வரம் கேட்டாய்!

வாழ்வதற்கு உனை விட்டேன்!

இன்னும் இன்னும் வரங்கள் பல

இஸ்டப்படி நீ கேட்டாய்!

நானும் மனங் கோணாது

வகைவகையாய் அள்ளித் தந்தேன்!

இப்போது ஏனைய்யா

என்மேல் இந்தக் கோபம்?

நன்றி மறப்பது நன்றல்ல என்றவுன்

ஆன்றோர் கூற்றை அப்பனே நீ அறியாயோ?

முப்பொழுதும் உனக்கு அமுது ஊட்டும்

உன் ஆண்டவன் கேட்கின்றேன்!

ஏனய்யா என் அன்பை

இன்னும் நீ புரியவில்லை?

ஊழ்வினைப் பாவங்கள் உனை

பம்பரமாய்ச் சுற்றியதோ?

தீயினுள் கையை வைத்தால்

சுடுமென நீ அறியாயோ?

தீயவருடன் கூட்டு வைத்து

வாழ்வை வளமாக்க நினைத்தாயோ?

உதவிகள் செய்வதற்கு

உனக்குள் நான் காத்திருக்க

ஊரூராய் எனைத்தேடி நீ

காவடி எடுத்திருந்தாய்!

உனைச் சொல்லி குற்றமில்லை

உன் மடமையைத்தான் பழிக்கின்றேன்!

இப்படிக்கு அன்புடன்

உன் கடவுள் மீண்டும்!

மீண்டும் அழைத்தாலும் -நீர்

மீண்டு வந்து அழைத்தாலும்

கலைக்க மாட்டேன் -மெய்

சளைக்கமாட்டேன்..ஒருபொழுதும்

தமிழை இகழமாட்டேன்

தேற்றிட அளில்லாமல்-வந்து

தோற்றிட்ட பேர்வழியாய்

ஆகமாட்டேன்-அகம்பாவி

ஆகமாட்டேன்..பொழுதும்

புறம் பேசமாட்டேன்

இன்னா செய்திடிலும்-எனை

கொன்றே தின்றிடினும் தமிழ்த்

துரோகி ஆகமாட்டேன்..-மண்

மறந்து வாழமாட்டேன்..என்

உறவுகளை உதறமாட்டேன்

தத்துவச்சேறுலக்கி - இந்த

அற்புத வாழ்வுதன்னை வெறுமையில்க்

காணமாட்டேன்-பிணமென

வெறுமனே நாறமாட்டேன்..

அன்பினைப் பேசிக்கொண்டு

அயோக்கியம் செய்யமாட்டேன்

செய்ய மாட்டேன் என்றாய்!

உனக்கே நீ வாழ்வில்

மூடனாக கொள்ளி வைக்க

மாட்டாய் தான்! ஆனால்

அங்கு பார் அன்பனே!

ஆளுக்கொரு பொல்லுடன்

ஆயுததாரிகள் ஏனுந்தன் வீடு

தேடி வருகிறார்கள்?

வைய மாட்டேன் என்றாய்!

வையகத்தில் பிள்ளைகளை

வருத்துவது பாவமே! ஆனால்

சின்னஞ் சிறுசுககளை மெல்ல

விட்டுப் பிடித்த தந்தை நீ

இக்கணத்தில் உன்னை விட்டு

ஓடத் துணிந்த குழந்தையை

எப்படிக் காப்பற்ற போகிறாய்?

கொய்ய மாட்டேன் என்றாய்!

அடுத்த வீட்டு மாமரத்தை நீ

மறந்ததுன் நன்மைக்கே! ஆனால்

மெதுவாய் எட்டிப் பார் இங்கு!

உனக்குத் தெரியாமல் உன்வீட்டு

வயர்லெஸ் இன்டர்னெட்டில்

எத்தனை கள்ளர் உல்லாசமாய்

உலகைச் சுற்றிவாரார் என்று!

மெய்யை விட வேறொன்றும்

சொல்ல மாட்டேன் என்றாய்!

செயலிலும் காட்டினாய்! ஆனால்

அப்பனே அப்படியே

அதற்குள் மணந்துபார்!

விலை ஏழுபது வீதம் நீ

தள்ளுபடியில் வாங்கிய

தொலைக்காட்சி பெட்டியில்

படத்தோடு நாற்றமல்லோ வருகிறது!

பெய்யும் மழைக்குள் நான்

செல்ல மாட்டேன் என்றாய்!

தடிமன் வராதுதான் உனக்கு! ஆனால்

அப்பொயின்ற்மன் வைத்து நீ

வைத்தியசாலை போனால்

குருதிச் சோதனையின் பின்னுன்

வைத்தியன் என்ன சொல்வான்?

உனக்கும் அதே புற்றுநோய்தான்!

புரிகின்றதா நண்பனே நீ

பட்ட படுகின்ற படப்போகும் வேதனைகள்?

நேற்று வாவென்றேன்! நீயோ

நேரமில்லை வேலை என்றாய்!

இன்றுந்தான் உன்னை மீண்டும்

அன்புடன் அழைக்கின்றேன்!

என்னிடம் வந்துவிடு! உனக்கு

உலகின் உண்மையினை உணர்த்துகின்றேன்!

இப்படிக்கு அன்புடன்,

தெரியுந்தானே உனக்கு?

அருமை மாப்பிள்ளை

தொடருங்கள்

உனக்கும் தெரியாமல்..

ஊருலகுக்கும் தெரியாமல்..

உண்மையை உள்வாங்கி..

உள்ளத்துள் மூடி வைத்தேன்..

நாழிகைகள் எண்ணிக்கழிக்கும்

நாயகன் நிலையறியாதே..

நங்கை நீ நாலும் நாடுகிறாய்..

உன்னை வருத்தாலும்..

ஊனை உறுத்தாமல்..

ஜீவராகமாய்..மௌனகீதமாய்

என் மரணதாகமாய்..

ஒன்றே ஒன்று உன்னிடம்

கேட்கவேண்டும்..உயிரே

உன்னோடு வாழும் கணங்கள்

மீண்டும் மீண்டும் வேண்டும்

மீண்டும் பிறப்பெனில் இணை

பிரியாமல் என்றும் நீ

வேண்டுமடி அன்பே.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அன்பே என்றே அணைக்கத் துடிக்கின்ற உதடுகள்

ஆடை கட்டி வந்த நிலவொன்று கரைகின்ற தேய்மதி

இதழ் விரித்து மடல் திறக்கும் மடைதிறந்த வெள்ளம்

ஈடு இணை இல்லா இன்பத்தின் சொர்க்கம்

சொர்க்கத்தை அழைத்தாயோ?

வாடியென் வண்ணக்கிளி!

சிங்காரச் ஸ்சுவிஸ் நாட்டில்

சிறீ லங்கா கொலை நாட்டில்

பந்தாடும் பிரான்ஸ் நாட்டில்

பாழ்பட்ட ஈராக் நாட்டில்

பார்க்காத தமிழருக்கோ நீ

எனைப் படங்காட்ட இங்கழைத்தாய்?

படுத்திருந்தாய் காலையில்! நீ

பகைத்திருந்த வேளையில் நான்

அடுக்களையில் உன்வாழ்வின்

உண்மைககளைப் போதிக்க

எடுத்தெறிந்தாய் கறிச்சட்டி!

பின்னுன் தலையிற் குட்டி

உனைப் படைத்த கடவுளுக்கு

வெரி சொறி சொன்னாய்!

பரவாயில்லை அம்மணி!

உன்கையால் நான் வாங்கித்

தின்ற மோதகம் கொழுக்கட்டை

என்னுருவுற் கலந்தமையால்

அமைதியுடன் கேட்கின்றேன்!

ஏனம்மா உனக்கிந்தக் கோபம்?

அனல்கக்கும் பார்வையிலா நீ

மோர்மிளகாய் பொரிக்கின்றாய்?

நிசப்தத்தில் நிம்மதியாயிருக்க

உனக்கும் விருப்பந்தான்!

ஆனால் போதாதே உனக்கு

சத்தமாக அறையிற் சினிமா

பாட்டுக்கள் கேட்பதற்கும் பலே

ஆட்டங்கள் போடுவதற்கும்

சில நூறு வருடங்கள்! அடவுன்

வாழ்வும் வெறுஞ் சக்கைதானா?

சீதனம் பெரிதாய் உனக்கு

சேர்த்திட தொழிலுக்கு என்னை

குளிருக்குள் துரத்தி அனுப்பினாய்!

கவனமாய் விளையாடி கசீனோவில்

நான்வென்ற பணத்தை இப்போது

ஏனம்மா திரும்பவும் கோயில்

உண்டியலில் போடுகின்றாய்?

நாளைக்கு எனக்கு மீண்டும் வேலையா?

பரவாயில்லையே! வெட்கப்படுகின்றாய்!

சீவன் சிவத்திற் கலப்பதற்கு

நன்றாகநீ நாணிக்கோண வேணுந்தான்!

கவனமாய்க்கேள்! திரும்பவும் நான்

சொல்கின்றேன் வாழ்வின் சூக்குமத்தை!

உன்னைப் புரிந்துகொள்! உனக்குள்

உள்ள என்னை அறிந்துகொள்! இல்லை

ஏமாற்றமே உன் வாழ்வின் தரிசனம்!

தரிசனம் தந்தென்ன..

தானாக வந்தென்ன

முன்சொன்ன சொல்

பின் மாறுமா மறக்குமா..

நடந்தது நடந்துதான்..

கடந்தவை கடந்தவைதான்..

உன் ஆணைக்குள் ஆட்பட

நான் உன் சேனையெல்ல

அம்பு எய்தும் விழி வெறுப்பேன்..

ஆசை தரும் மொழி வெறுப்பேன்..

விழுப்புண் ஏற்றபின்..உன்னிடம்

ஒருமுறை தோற்றபின்..நான்

மாறமாட்டேன் அழகில்

ஏமாற மாட்டேன்.-உன்னால்

பாதி தொலைந்த இளமையின்

மீதியையேனும் எனை

சுயமாய் வாழவிடு

சுகமாய் வாழவிடு

போய்விடு..என்

பார்வைக்குள் வராமல்-என்

பக்கத்தில் இல்லாமல்..

போய்விடு.

போய்விடு! அடேய் கருணா துரோகியே!

தமிழீழத்தை விட்டு விரைவில் ஓடிவிடு!

கருணையின் பொருள் தெரியாத உனக்கு யாரடா

கருணா என்று பெயர் வைத்தது?

சொறி நாயயென நானுனை நாமமிடுவேன்!

மனிதனுக்கே மனிதாபிமானம்! மனுதர்மம்!

உனைப் போன்ற மிருகங்களிற்கு

சட்டத்தில் கிடைப்பது சாட்டையடிகளே!

பாரினில் நீயொரு படு பாதகனென்று

ஹியூமன்ரைட்ஸ் வோட்சும் சொல்லுது!

இனியும் உனக்கேனிந்த கேணல்பட்டம்?

"கோணல் சொறிநாய்" நீயென்றறிந்திடு!

நேற்றுவரை வாய்மூடிப்பால் குடித்தநீயுன்

அன்னைக்கே எதிராகவா மார்தட்டுகிறாய்?

இரத்தவாந்தி நீ எடுக்குமுன்னர்

இலங்கையைவிட்டு வேறிடம் ஓடிடு!

பற்றைக்குள் கக்கூசு இருந்த உன்னை

பிளேனில் ஏற்றி பேச்சுக்கு அனுப்பிட

ஒற்றர் கூட்டத்து பிசாசுகள் பிடியில்

மூளைகழன்று தமிழன்னையைக் கொன்றாய்!

அடேய் எச்சிற்சோறு தின்பவனே!

சிங்களவன்மடியில் அம்மணமாய் வாழும்நீ

உனதூராரை வெருட்டினியாமே? உனை

அம்மான் எனக் கூப்பிடச்சொல்லி?

2007லுனக்கு நோபல் பரிசு தருவதற்கு

ஸ்சுவிசில் விஞ்ஞானிகள் கூடி

விவாதித்துக் கொண்டிருக்கின்றார்கள்!

அட கோணல்நாயே! உனக்கே தெரியாதா?

உலகில் சமாதானத்தை நிலைநாட்ட

புதுச் சமன்பாடு கண்டுபிடித்துள்ளாயாமே?

சமாதானம் = சரணாகதி(கையைதூக்குதல் + காலைபிடித்தல்) + துரோகம்

இது நீபோட்ட போர்மியூலாவாமே?

பெண்களில் தான்நீபடு கிள்ளாடி என்றால்

இப்போது பள்ளிப் பிள்ளைகளையுமா

உன்படையிற் சேர்க்க அள்ளுகிறாய்?

வெட்கம் கெட்டவனே! வியர்வை சிந்தி

பெற்றோர் பிஞ்சுகளை உன்னிடம்

வீணாகிப் போகவா பெற்று வளர்த்தார்கள்?

நம்பிக்கைத் துரோகங்கள் செய்கின்ற நீயெங்கே

அன்பினைப்பற்றி அறிந்திடப் போகிறாய்!

தினமும் எத்தனை தமிழ் உறவுகளை

அடேய் எட்டப்பா நீ கொல்கிறாய்?

கொழும்பிற் சொல்லித் தருகின்றாரோ

ஒட்டுப்படையின் ஒழுக்கநெறிகளை?

சும்மா சுட்டுப்போட்டு தூக்கி எறிய

தமிழர் காட்டு விலங்கினம் அல்ல!

எட்டித் தட்டுவார்பார் உன்னையும் ஒருநாள்!

அதுவரை நீயும் வடிவாய் ஒளிந்திரு!

ஒளிந்திருந்தென்ன

ஓலமிட்டென்ன-வெறி பிடித்த

ஓநாயே..

ஓநாயும்..

ஒருநாளும்

ஓநாயை அடித்து தின்றதாய்

ஒருபோதுமில்லையே..

அன்னை முன்..

அக்காள் முன்

அண்ணன் முன்..

அன்புத்தம்பியை

அவன் வீட்டு முன்னே

அநியாயமாகச் சுடுவதும்..

உன் சொந்தத்தில் ஒருத்தி

உன்னினத்தில் ஒருத்தி

உன் பாதுகாப்பில் கற்புகாக்க வேண்டிய ஒருத்தி

உன்னாலும்

உன்னால் வெறியூட்டப்பட்ட ஈனப்பிறவிகளாலும்

உடல்கிழித்து வேட்டையாடப்படுவதும்..

நாளும் வேர்வை சிந்தி

நல்ல வெயிலிலும் மழையிலும்

நல்லவன் சேர்த்த செல்வங்களை

நாளை இரவுக்குள் இவ்வளவு தா

நாளை வருவோம் இல்லை

நல்லாய் ஓட ஓட சுடுவோம் என்பதுவும்

எல்லாம் மனிதம் மரத்துப்போன

எண்ணம் கனத்துப்போன

எம்மினத்தை மறந்துபோன..

எட்டப்பன் உனக்கு புரியாது..

எல்லாம் புரியும்போது..

எதுவும் உன்னிடத்தில் தரியாது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தரியாது விட்ட திருநீறு

பாராயணம் செய்யாது விட்ட பாமாலைகள்

தரிக்கும் நவநாகரீக உடைகளில்

மயங்கிடும் மோகங்கள்

தளர்ந்து விடுமா தமிழர் தம் பாரம்பரியங்கள்

மனதின்கண் எழுந்திடும் கேள்விகள்

கள் ஊறும் இதழ்களிலே

கவி எழுத விழைந்ததனால்

'பொல்" எடுத்தாள் - என்

இல் கிழத்தி.

மல் யுத்தம் தெரியா

மந்தி நான் என் செய்ய?

அந்திக் கருக்கலிலே - நான்

ஆசையோடு பருகத்துடித்த

பவள இதழ்கள்

பக்கத்து வீட்டு பாட்டியுடையதாமே!!!!!!!

பாட்டியுடையதாமே? உன் ஆட்கள்

கடைசியாகக் களவெடுத்த பொருட்கள்?

உழைத்துச் சாப்பிடாமல்

உன்னைப் போல் எல்லாரும்

ஆளுக்கொரு இயக்கம் தொடங்கி

உடம்பு வளர்ப்பதற்கு

தமிழீழமென்ன தெருவோரத்து

சாப்பாட்டுக் கடையா?

வீணாய்ப்போனவனே! வீடுவீடாய்ப்போய்

பிள்ளை பிடிப்பவனே! நாளுங்

கடத்திடும் குழந்தைகளை தமிழ்நாட்டு

வியாபாரிகளிற்கு அனுப்பி மனிதரின்

சிறுநீரகம் அறுக்கும் தொழிலையுமா

இன்று நீ ஈழத்தில் செய்கிறாய்?

அண்மையில் கொழும்பில் கடத்தினாயே

துணைவேந்தர்? அவர் என்னவானார்?

புனர்வாழ்வுக் கழகத்தில்

புனிதத்தொண்டு ஆற்றியவரை

சிறைப்பிடித்துச் சென்றாயே?

அவரையெங்கே ஒளித்து வைத்துள்ளாய்?

அல்லது ஒழித்தே விட்டாயா?

அப்பாவிகளை வதைப்பதையா

வீரமென்று எண்ணுகிறாய்?

கொன்றொழித்தாயே மாமனிதர்கள்!

ஐயா விக்கினேசுவரன், ரவிராஜ்

மற்றும் பரராஜசிங்கத்தை!

குடுவடித்துக் கொண்டு குண்டர்களுடன்

தேனிலவு கழிப்பவனே! தேசத்துரோகியே!

இனி நீ யாரை அடுத்துக்

கொல்லத்திட்ட மிட்டுள்ளாய்?

நாசமாய்ப்போவாயடா விரைவில் நாறி!

புனித மாவீரர் தினத்தன்று நீயும்

உரையெல்லாம் விடுகிறியாமே?

சிங்களவர் புளகாங்கிதம் அடைகிறார்!

பிறந்தநாளை உனக்கன்று

கொண்டாட வேண்டுமென்று

துடியாய்த் துடிக்கின்றார்!

படைத்தவனுக்குத் தெரியாதாவென்ன தமிழ்த்

தலைவனுக்கும் துரோகிக்குமான வித்தியாசம்!

அரசியற்கட்சி தொடங்கியுள்ளாயாமே?

பாழாய்ப்போன உன்மனதில் புலிச்

சின்னமோ கட்சிக் கொடியாய்க் கேட்கிது?

சொறிநாயின் படத்தையுன் கட்சி

முத்திரையில் பொறித்துவிடு!

தேர்தல் முடிந்தபின் நீ குடிப்பதற்கு

நாய் மூத்திரமாவது மிஞ்சும்!

கேவலம் கெட்டவனே!

மீசையை காணவில்லை உன்

லேட்டஸ்ட் கெட்டப்பில்?

அப்படியானால் நீயுமொரு

பிக்குவாகிப் போவதற்கு

முடியிறக்கம் ஒன்றுதானா பாக்கி?

விரைவில் உனக்கு அதுவும் நடக்கும்!

மகிந்தவுடன் மந்திராலோசனை நடத்திநீவசிப்பதற்கு

விரும்பிய விகாரையை இப்பொழுதே தேர்ந்தெடு!

தேர்ந்தெடுக்கத் தெரியாத மாந்தர்போல்.

பூத்தொடுக்கத்தெரியாத மாதர் போல்

பா வடிக்கத்தெரியாமல் பழகுகிறேன்..

ஏழு வயதில்..

நிலா என்றேன்

வெள்ளி என்றேன்..

தலையில்க் குட்டு வைத்து

தேவாரம் படி என்றார்..

பதினாறில்..

தென்றல் என்றேன்..

தொடுவானமென்றேம்..

ஆங்கில இலக்கியம் படியென்றார்

இருபதுகளில்

தேவி என்றேன்..

தேவைதை என்றேன்..

பாவி..படியடா படி என்றார்..

மனைவியிடம்..

அன்பே என்றேன்

ஆருயிரே என்றேன்

சலித்துக்கொண்டே

வேலை கெட்ட மனிதன் என்றாள்..

காலவதியான என்

கவிதைக் கனவுகளை

யாழ் மீட்டியது..

சிவனே என்று..

என் யாழ்கள

உறவுகள்..

படிக்கவும்..சகிக்கவும்..

என் வரிpகள

செந்தாமரையில்

தெறித்த சேறாய்

ஆங்காங்கே தேங்கிக்

கிடப்பதற்காய்.

என் ஆத்மார்த்த நன்றிகள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகள் சொல்லிடுவர் நல்மனம் படைத்தோர்

நன்றிதனை சொல்லாமலே அகன்றிடுவார் சிலர்

நல்லது சொல்லி நன்றி தனை நயமாய் கேட்டுடினும்

நன்றி சொல்லாமலே மறைந்திடுவார் நம்மவர்

நம்மவர்கள் காட்டிலே! நரிக்கூட்டம் நாட்டிலே!

கள்ளருடன் சண்டைபோட ஆட்களில்லை வீட்டிலே!

அள்ளிக்கொண்டு ஓடுகிறார் நம்வீட்டு நகைகளை!

சொல்லிப்போட்டு போகிறார்தாம் ஒட்டுப்படை கூட்டமாம்!

கிட்டவந்தால் சுடுவமாம்! இயலுமென்றால் ஓடட்டாம்!

எட்டியொரு உதைகொடுக்க எங்களிடம் பலமில்லை!

பிள்ளைகுட்டி அழுகிது! எந்தன்மனுசி பதறுது!

ஊரடங்குச் சட்டத்தில் ஊரெல்லாம் உறங்குது!

தொலைதொடர்பும் செத்துப்போச்சொரு கோலைபோட வழியில்லை!

உயிரைக்கையிற் பிடித்தபடி ஊமைகளாய் வாழ்கிறோம்!

ரோந்துவந்த ஆமிக்காரன் வேலியோரம் நிற்கிறான்!

எந்தன் வீட்டுனாயும்பீதியில் கட்டிலின்கீழ் பதுங்குது!

வீடுநாறிக் கிடக்கிதுமல சலங்கழிக்க முடியவில்லை!

மூச்சுத்திணறி பாட்டியும் மரணவோலம் போடுறாள்!

"எப்பவிந்த இரவுவிடியும் அப்பா?" குட்டியன் கேட்கிறான்!

"சத்தம் போடாதை அப்பனாமியுள்ள வரப்போகிறான்!"

சொன்னமனுசி மெல்லகந்த சட்டிகவசம் படிக்கிறாள்!

"டுமீல்! டுமீல்!" வேட்டுச்சத்தம் காதைவந்து கிழிக்கிது!

எல்லாம்முடிந்து விடிந்து காலை படலை திறக்கப்போகிறேன்!

திகைத்துநின்றேன்! கோயிலையர் பிணத்தைநான் பார்க்கிறேன்!

யாழ்-மக்கள் சோகக்கதையைநான் சொல்லநீ கேட்டாய்!

உன்மனதைத் திறந்துகேள் இவர்க்கென்ன உதவிசெய்துள்ளாய்?

தாயகத்து உறவுகள் ஊரில் செத்துமடிகின்றார்! ஆனால்

பன்சிகாரில் பன்பலுக்குநீ விழாக்களிற்கு செல்கிறாய்!

அரை மில்லியன்யூரோகாசில் வீடுவாங்கித் தள்ளுறாய்!

ஒருகவளம் சோறுஇன்றி ஊரார் அல்லலுறும் நேரம்

இனியுஞ் சுயநலவாதியாக வாழ்வது தகுமாநீகூறு!

பணமிங்கு வரும்போகும்! பதவியிங்கு வரும்போகும்! ஆனால்

தாயகத்துவுறவுகளின் உயிர்போனால் மீளவருமா? பதில்சொல்!

ஈழத்தமிழருக்கு புனர்வாழ்வு அளிக்க நீ உறுதிகொள்!

உறுதிகொள்ளென உள் சொன்னபின்னே

இறுதிவரை போராடும் எம் தலைவா..

அறுதியிட்டு ஆணை கொள்வோம்..

சிறுதளவு நிலமும் சிங்களன் பறிக்கவிடோம்..

என்றெடுத்த உறுதியை

வென்றெடுக்கத் தம்

இன்னுயிர் ஈந்த

மாவீரர் புகழ் பாடுவோம்..

deepam.gifmaaveerar_tv_271102_2.jpgdeepam.gif

மாவீரர் புகழ் பாடுவோம்! மண்ணோடு மண்ணாக

மாதங்கள் பல வருடங்கள் புழு பூச்சிகளுடன்

புனிதர்கள் எமக்காய் தவம் செய்தார்களே

பதுங்குகுழிகளினுள்! படுத்திருந்தோம்நாம் மாளிகைகளில்!

மறப்போமா? வீடுகளில் வயிறுமுட்ட விழுங்கிவிட்டு நாங்கள்

கிரிக்கெட் ஆட்டத்தில் லயித்திருந்த நேரம்

நேராகக் கொடியவன் குகைநோக்கிச் சென்று

ஈழவேள்வியில் ஆகுதியானாரே! அவரை மறப்போமா?

ரியூசனுக்கு போகவேணும்! 4ஏ எடுத்துப்பின்

அவுஸ்திரேலியாவில் படிப்பதற்கு ஸ்கொலர்சிப் கிடைக்கவேணும்!

நாங்கள் கண்டவண்ணக் கனவுகள்தான் எத்தனை!

ஆனால் இவர்கள்? இயக்கத்தில் சேரவேண்டும்!

பெரியாலாய் வந்தங்கு ஆமிக்காம்பொன்றை

தான்நடத்திப் பிடிக்கவேண்டும்! அதில்வீர மரணமும் அடையவேண்டும்!

எங்களில் எத்தனைபேரால் இவர்போல் வாழ்ந்திட முடியும்?

தெரிகிறதா வேற்றுமை எமக்கு இப்போது

இறந்த மனிதருக்கும் மாவீர தெய்வங்களிற்கும்?

கத்திபட்டுக் கையில் சிறுகீறு வந்தால்நாம்

கத்துகின்ற பேரொலியில் காக்காயும் கலங்கிவிடும்!

ஆனால் இவர்கள்? குண்டடிபட்ட கையை முழுதாக

காலை முழுதாக அகற்றும் வேளையிலும் சமர்க்

களத்தின் நிலையையல்லோ எண்ணிக் கவலைப் பட்டார்கள்!

முடியுமா எங்களால்? பிறகேன் முணுமுணுத்துக் கொண்டிருக்கின்றோம்

தேவையா எமக்கிந்த மாவீரர் தினமென்று தெருவெல்லாம்?

சனத்ஜெயசூரிய சங்கக்கைகடை காரனென்று கண்டவன்

படங்களெல்லாம் வீட்டிலொட்டி வைத்துள்ளோம்! ஆனால்

எமக்காக வாழ்ந்து உயிர்தந்து மாண்டாரே அந்த

மாவீரர் தெய்வங்களை வீட்டில்வைத்து பூசிப்பதெப்போது?

நாற்பது சிங்களவாமிசெத்துப் போனானாம்! கேட்க

நல்லாய்த்தான் இருக்கிறது! எனினுமெங்களில்

எத்தனைபேர் இந்தவீரமிகு தாக்குதலில் மாண்டுபோன

நம்வீரர்களை நன்றியுடன் நினைக்கின்றோம்?

பகவத்கீதையில் கிருஷ்ணன் சொல்லிகின்றான் பாருங்கள்

"நாட்டிற்காய் மடிகின்ற ஒவ்வொருமாவீரனும் தவஞ்செய்யும்

ஞானிகள் அடைகின்ற முக்தியைத்தான் பெறுகின்றான்!"

இனியுமேன் நாங்கள் கண்மூடிக்கொண்டு கடவுளை

கும்பிடுறோமென்று பாசாங்கு செய்வான்? தமிழீழம்

பெற்றிட தலைநிமிர்ந்து நாங்கள் செய்கின்ற சேவைதான்

தமிழ்மாவீரருக்கு நாம்காட்டும் நன்றிக்கடனாகும்! தலைவனின்

வழிசென்று தமிழீழம்காண நீ எழுகவேதமிழா எழுகவே!

deepam.gifdeepam.gifdeepam.gif

எழுகவே உலகே என்று

வைக்கோல் கும்பியில் ஏறி நின்று

கொண்டைக்கூர் சேவலே நீ

உரக்க கூவு உரக்க கூவு

பிறந்த மண் அகன்று

தன் மொழி தான் மறந்து

வாட் இஸ் சேவல் என்று

கன்டன் மகன் கிரகாம் கேட்க..

தட் இஸ் டாட் ஒப் சிக்கன் சன் என்றே

கன்டன் (கந்தன்) சொல்ல

(எல்லாம் கிரக பலனோ )

அங்கிருந்து அறிந்ததாலோ..

சேவலோ என் கூவல்

எனக்கும் கேட்கிறதே..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கேட்கிறதே உந்தன் குரல் என் செவிக்கு தேவகானமாய்

நாட்டம் இருக்கின்றது நின் முகத்தினை ஒருதரம் பார்த்திட

வாட்டம் கண்டு என் மனமும் வாடிடத் துடித்து

ஆட்டம் காண்கிறது என் ஆயுளும் உன் நிழல் தேடி

கேட்கிறதே உந்தன் குரல் என் செவிக்கு தேவகானமாய்

நாட்டம் இருக்கின்றது நின் முகத்தினை ஒருதரம் பார்த்திட

வாட்டம் கண்டு என் மனமும் வாடிடத் துடித்து

ஆட்டம் காண்கிறது என் ஆயுளும் உன் நிழல் தேடி

உன் நிழல் தேடி

ஓடிவந்தேன்..

கொடும் வெப்பம்

தாங்கவில்லை!

அவள் வழிதேடிப்

போகின்றேன்

எத்திசையும்-அவள்

சுவடில்லை...!

அலைந் தலைந்து-இன்று

வழிப்போக்கன்

ஆகிவிட்டேன்...

கொடும் வெயிலை

தாங்கவில்லை

இளைப்பாற

இடமில்லை - உன்

நிழல் தேடிஓடிவந்தேன்...!

ஓடிவந்தேன்! தேடிவந்தேன்!

ஆடிவந்தேன்! பாடிவந்தேன்!

மணமுடிக்க நாயகியுனை

நான் நாடிவந்தேன்!

போடி நீ கள்ளி!

மாடியிலிருந்து குதித்து

எனது காசைச் சுருட்டிக்கொண்டு

தாடிவளர்த்த இன்னொரு தடியனுடன்

நீ நாட்டைவிட்டே ஓடிவிட்டாய்!

ஓடிவிட்டாய் தோழி

ஊரறிய உனக்கென்ன..

ஊராரின் குறை உனக்கா

எனக்கெல்லவா..

ஆள் நடத்தை சரியில்லையாம்

ஒரு சாறார்..

ஆண்பிள்ளையே நானில்லையாம்

மறுசாறார்..

மனைவியே நீ ஆனாலும்

மரியாதை செய்தமை தவறானதா...

ஆளுமையைக் காட்டாமல்..

அடுக்களையில் வாட்டாமல்..

போகம் தந்த புருசத்தனம்

அலுத்துவிட்டதா..

தொழில்பக்தி மீறியதால்..

சுயபுத்தி மாறியதாய்

உன் மனம் சொன்னதா..

ஏனோ போன நீ

போனவளாய்..போயே போ..

என் கவுரத்தை திருப்பி

யார் தருவார்

என் இளமைக்குத்

துணை யார் வருவார்

என் வாழ்க்கைத்துணி

அழுக்கானதே உன்னால்

யார் வந்து சலவை செய்வார்..

முட்டாள் பெண்ணே..

சோம்பேறி ஒருவனின்

சொல்பேச்சுக்கு

சோரம் போனவளே..

சுகப்படுமா உன் வாழ்க்கை இனி..

திரும்பமாட்டேன்..

உன் நிழலும் தீண்டமாட்டேன்..

உனக்காக இரக்கப்படமாட்டேன்..

அல்லலுறு..

அழுதுவடி..

முடியாவிட்டால் செத்துப்போ..

ஓடுகின்ற..பெண்களுக்கு

உன் வாழ்க்கை

புத்தி சொல்லும்...

கேப்பார்களா... :rolleyes:

Edited by vikadakavi

ani-pix_people_smiling_animation.gif

கேட்பார்களா ஒட்டுக்குழுக்கள்?

தமிழனின் உள்ளக் குமுறல்களை!

நேற்றுவரை நண்பர்களாக இருந்தவர்கள்

இன்று எப்படி எமது எதிரிகளுடன்

கைகோர்த்துச் செல்கின்றார்கள்? சொந்த

உறவுகளிற்கே சாவுமணி அடிக்கின்றார்கள்?

மண்டையில்போடும் குழுக்களாக

மண்ணில் இவர்கள் அலைவதற்கு

முற்றுப்புள்ளி வைக்கப் படுவது எப்போது?

ஆடுபிடித்தடித்து இறைச்சியுண்பது போல்

தமிழரின் மாமிசச்சதைகளை

ருசிபார்க்குமிந்த அரக்கர் பட்டாளம்

தமிழீழத்தில் அடக்கப் படுவது எப்போது?

தமிழ் மக்களே விழித்தெழுவீர்!

வீட்டிற்குவீடு பண்பாக வுங்கள்பிள்ளை களிற்கு

தேசத்துரோகியாய் வாழ்வதன் கீழ்த்தணத்தை

உணர்த்தி புதிய துரோகிகள் எதிர்காலத்தில்

உருவாகுவதைத் தாயக உறவுகளே தடைசெய்க!

Edited by மாப்பிளை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.