Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கவிதை அந்தாதி

Featured Replies

இவை எனக்கு புரியவில்லை

இவ்வுலகில் நடப்பவை

எதுவும் விளங்கவில்லை

துயரத்தில் நாட்கள் கழிகின்றன

அழுதழுது கண்கள் வலிக்கின்றன

வாழ்வதற்கு வழிகள் தெரியவில்லை

உறவுகளோ என் உணர்வுகளை அழிக்கின்றன

காதலிக்க எனக்கு

வயது போதாதேன

நான் நினைக்க

ஏழை என்பதனால்

வாழ்க்கை என்னவென்று

புரிவதற்குள்

திருமணமே நடந்தேறியது

நான் ஏழைப்பெண் என்பதாலா...............................

  • Replies 1.9k
  • Views 182.1k
  • Created
  • Last Reply

எனக்கு இவை....

அசைந்துவரும் மேகம்...

ஆடுகின்ற மரங்கள்...

வருடுகின்ற தென்றல்...

வடிகின்ற பனித்துளி...

விடிகின்ற காலை...

விளைகின்ற வயல்நிலம்....

முளைவிடும் நாற்று...

கிளையில் உள்ள குருவிக்கூட்டம்...

இலையில் இருக்கும் பச்சைநிறம்...

மிச்சம் சொச்சம் இருக்கும்

இனிமைகளும் எனக்குரியவை...

உனக்குரியவை எவை?

உனக்குரியவை எவை........?

நிச்சயமில்லா வாழ்க்கையில்

உனக்குரியவை எவை........?

கொஞ்சம் சிந்தித்துப்

பார் நண்பனே

உன் வாழ்க்கை புரியும்

அதன் பின்னர் உனக்கே

புரியும் நீ கூச்சலிடுவதில்

அர்த்தமில்லை என்று

நீ போக முன்னர்

உன்னிடல் உள்ளவற்றை

ஏழைகளுக்கு கொடுத்து

புண்ணியத்தையவது

எடுத்துக்கொள்

நண்பா........

நான் சொல்வது புரிகிறதா.......?

நான் சொல்வது புரிகிறதா.......?

நீ சொல்வது உனக்கே புரியவில்லை...

நான் சொல்வது உனக்கெங்கே புரியப்போகிது?

நான் சொல்வது புரிகிறதா.......?

நீ சொல்வது உனக்கே புரியவில்லை...

நான் சொல்வது உனக்கெங்கே புரியப்போகிது?

உனக்கெங்கே புரியப்போகிது?

மக்களின் அவலம் புரிவதில்லை

உன்கூட இருப்பவரின் மன

நிலை புரிவதில்லை

அதன் பின்னரும் உனக்கு

எங்கள் நிலை புரியப் போகிறதா

மரக்கொப்பிலிடுக்கும்

மந்தி மகிந்தவே.....................?

மந்தி மகிந்தாவே

மரமெல்லாம் தாவதே

கிளையிலெல்லாம் உனக்கு

கிளைமோர் இருக்கு...

கட்டிய வேட்டியும்

களண்டிடும் காலம்

பத்திள் வியாழன்- உன்

பதியது கிளப்பும்...

அலரி மாளிகை

அவலத்தில் அலறும்

எழரை உனக்கு- இனி

நீ எழவா முடியும்...???

உள்ளாசம் இன்று

உறக்கத்தில் நன்று

அன்னிய முதலீடு- இன்று

ஜயோ அரகோரா....

சுடு காடாய் ஆகும்

வான் படை தளங்கள்

கடுகதி எரியும்

கப்பற் தளங்கள்...

முப்படை கூடியே- உன்

முதுகெலும் புடைக்கும்

காத்திரு நைனா- புலி

காலையில் வரும்.....

உலக நாடதை

புறம் தள்ளி எறிகிறாய்

உதவிக்கு அவையே

அழைத்திட போகிறாய்...

அவலம் அவலம்

ஜயனே உனக்கு

ஜயோ பாவம்

மகிந்தர் நிலை பாவம்....

:huh::huh: :P

Edited by vanni mainthan

பாவபட்ட

ஜென்மங்கள்

இவர்களுக்கு இருட்டு

வெளிச்சம் இரண்டும்

ஒன்றுதான்

இவர்கள்

தீண்ட படாத

உறவுகள் ஆனால்

தீண்டிப் பார்பவர்கள்

ஆயிரம்

இந்த பாவப்பட்ட

ஜென்மங்கள்

தன் உணர்ச்சி

விற்று யாருக்காய்

வாழ்கின்றது

தோல்வியடையா

வியாபாரம் அழகு

இருக்கும் மட்டும்

இருக்கு மட்டும்

இருந்து விட்டோம்

இன்று பொறுமை

இழந்துவிட்டோம்.....

வானமதில் ஏறிவந்து

வஞ்சகங்கள் ஆடிவந்த

போர் பறவை தாக்கிவிட்டு

போர் களமே திருமபி ;விட்டோம்...

படுக்கையிலே புலிகளேன்று

பறை கொட்டி முழங்கியவர்

கிடக்க முடியாமல்

கிளர்தெழுந் தோடுகிறார்...

வான் புலியின் வானமதை

வானமதில் தேடுகிறார்

ஆயினும் என்ன பயன்

ஆட்டமது ஓயவில்லை....

ஓட்டமது தொடர்கிறது

ஓலமதில் அலைகின்றார்

பாவமதை செய்தவர்கள்

பழியதனை தேடிவிட்டார்...

அரியனையில் ஏறிநின்று

ஆட்டமது போட்டவரே

நாடதனை காத்திடவே

நடுக்கத்திலே உறைகின்றார்....

நடுக்கத்திலே உரைக்கின்றார்

நடப்பு அறியாதவர் போல்..

நாட்டாமை செய்ய வந்த நரியார்

வெள்ளை வேட்டி சட்டை..

பொருந்தாத துவேசமுகத்தோடு

இனவெறியூட்டி எரிக்கின்றார்

தமிழ்த் தளிரை..

முளையோடு கிள்ளி

அழிக்கலாம் தமிழனை என்றே..

பகல்கனவு கண்டு மனித

நேயம் இழந்து

மதயானையாய் ஓடுகிறார்

நிற்குமிவர் ஆட்டம்

ஓடுமிவர் கூட்டம்

நிலைக்கும் தமிழ் தேசம்

கமழும் தமிழ் வாசம்..

தமிழ் வாசம்

தனையறியார்

தம்பட்டம் அடிக்கிறார்...

இவரெல்லாம்

தமிழென்று

இங்கென்ன உரைக்கிறார்...???

இலக்கண தமிழதுவை

இகழ்ந்தே உரைக்கிறார்

சிற்ரறிவு உனக்கென்றால்

சீண்டாமலிரு...

வெட்டி பேச்சதனை

வெட்டி எறி..

வேண்டா செயலதை

விட்டோடு....

முத்து குளிக்கின்ற

மூத்த தமிழை

வெட்டி எறிகின்றாய்- நீயா

வெண்மை தமிழ்....???

தமிழே என்னை

நீ

பேசு

ஏன்..

என்கிறாயே

நான்

நாளும் பொழுதும்

உன்னையே

பேசிக்கொண்டிக்கிறேனே...

பேசிக்கொண்டிக்கிறேனே

பேய்களுடன் இந்நாளில்...

பூசீ மெழுகி..

பூவென நீ கூறிவிட்டு..

பார்த்திருந்து நேரம்வர..

பகைவனாய்ப் பார்க்கின்ற

பாவி மனிதருக்கு

மரியாதை இனி எதற்கு?

பேசிக்கொண்டிக்கிறேனே

பேய்களுடன் இந்நாளில்...

பூசீ மெழுகி..

பூவென நீ கூறிவிட்டு..

பார்த்திருந்து நேரம்வர..

பகைவனாய்ப் பார்க்கின்ற

பாவி மனிதருக்கு

மரியாதை இனி எதற்கு?

இனி எதற்கு

நீ எனக்கு...??

கத்தியெடுத்தென்

கருத்தை யறுக்கிறாய்...

பல்லிழித்து நான் நிற்க

எனக்கென்ன

பைத்தியமா...???

எத்தனை நாள்

நீ அறைந்தாய்

இருந்து மதை

பொறுத்திருந்தேன்...

நட்ப்பென்ற ஊடலிலே

நானுமதை விட்டிருந்தேன்

விட்டில் புச்சியென

வீணாய் எனை எண்ணையிலே...

கத்தியெடுத் துந்தன்

களுத்தறுக்கா விடுவேனோ...??- உன்

கொட்டமதடக்கி - உனை

கொளுத்தியெறியா விடுவேனோ...??

என் னென்று

நினைத்தாய் என்னை...??

வா...துணிவிருந்தால்

போரிடு.....

:rolleyes:<_< :P

Edited by vanni mainthan

போரிடு மகளே..

ஆண்டாண்டு காலமாய்

அடுக்களை வீழ்ந்து

அடங்கியே வாழ்ந்த

பெண்களின் உரிமை

வாங்கிடவென்றே வாளெடு..

கள்ளிப்பாலேற்று..

கண்திறக்காமல் போன..

பெண் சிசுக்களுக்காய் போரிடு..

சீதனக்கொடுமையால்..

சமையலறைச் சுவருக்குள்..

சாம்பல்ச் சமாதியாய்போன

பெண் பூக்களுக்காய் போரிடு

இலட்சியக்கனவோடு..

கல்வியை முடிக்காமல்..

திருமணமென்று

சாக்கடைக்குள் தள்ளப்பட்ட

இளம் பெண்ணகளுக்காய்

போராடு

பெண்ணே உன் உரிமைக்காக

நீயே போராடு

போராடு நீயென

எனக்கு நீ

அறிவுரை

சொல்லிவிட்டு..

நீ மட்டும்..

ஒதுக்குப் புறமாக...

தனியாக..

ஒளிந்து நின்று...

சுருட்டுக் குடிக்கின்றாயே?

இது

நியாயமாகப்

படுகின்றதா

உனக்கு?

உனக்கு பக்கத்தில்

உறக்கத்தில் நானிருக்க

என்னை அணைக்காமல்

ஏனடி நீ இருந்தாய்...??

அந்தி வரவிற்காய்

அது வரை காத்திருந்தேன்

பின்னிரவு கழிந்த பின்னும்- எனை

பின்னி எடுக்கலயே..

மானத்தை விட்டெறிந்து

மடியதில் கைவைக்க

தேளாய் எழந்தேண்டி

தேகத்தில் குத்தினாய்...

அந்த ரணமதிலே

அழுது நானிருக்க

வாந்தி யெடுத்தன்னை

வளை காப்பு வைத்தயே...

என்னை அறியாமல்

எவனோ ஒருவன்

உன்னை தொட்டானோ

தாசி எனக்கு நீ

தாரமாய் ஆனயோ...???

தலையது சுத்ததய்யா

தண்ணி கொஞ்சம் தாருமய்யா

வாழ்க்கை பட்டு வந்தவளே-நீ

எனக்கு வாழ்க்கை பட வேனாமடி....

எனக்கு வாழ்க்கை பட வேனாமடி....

இன்னொருவனை நீ மனதில் வைத்திருந்தால்....

என்னை நீ உனது வேலைக்காரனாக நினைத்தால்....

எனது திறமையில் உனக்கு நம்பிக்கை இல்லையென்றால்...

உனது திறமையில் உனக்கு நம்பிக்கை இல்லையென்றால்...

உனது ஆன்மாவை நீ அறிந்து கொண்டிருக்காவிட்டால்..

எனது ஆன்மாவை நீ அறிந்து கொள்ளவிரும்பாவிட்டால்...

உனக்கு நீ மரியாதை கொடுக்காவிட்டால்...

எனக்கு நீ மரியாதை கொடுக்காவிட்டால்...

உனக்கு சந்தோசமாக இருக்கத்தெரியாவிட்டால்...

எனக்கு நீ வாழ்க்கை பட வேனாமடி....

எனக்கு வாழ்க்கை பட வேனாமடி....

இன்னொருவனை நீ மனதில் வைத்திருந்தால்....

என்னை நீ உனது வேலைக்காரனாக நினைத்தால்....

எனது திறமையில் உனக்கு நம்பிக்கை இல்லையென்றால்...

உனது திறமையில் உனக்கு நம்பிக்கை இல்லையென்றால்...

உனது ஆன்மாவை நீ அறிந்து கொண்டிருக்காவிட்டால்..

எனது ஆன்மாவை நீ அறிந்து கொள்ளவிரும்பாவிட்டால்...

உனக்கு நீ மரியாதை கொடுக்காவிட்டால்...

எனக்கு நீ மரியாதை கொடுக்காவிட்டால்...

உனக்கு சந்தோசமாக இருக்கத்தெரியாவிட்டால்...

எனக்கு நீ வாழ்க்கை பட வேனாமடி....

வேனாமடி என்றென்னை

விட்டெறிந்து போனவரே

பாவை எந்தன் சாபமது

பழிவாங்க விட்டிடுமோ...??

ஒட்டு மொத்த ஆணினமும்

ஓல வாழ்வை தந்து விட்டால்

இத்தரையின் பாவையெல்லாம்

இன்று என்ன செய்திடுவார்...??

கண்ணீரோடு கன்னியிவள்

காலமெல்லாம்

வாழ்வாரென்றால்

பாழ்பட்ட இவ்வாழ்வு

பாவையெனக்கு தேவையன்றோ....???

  • கருத்துக்கள உறவுகள்

மின் மினி போல் சில கணங்கள்

நின்றெரியும் தீபம்

கண்மூடித் திறப்பதற்குள்

கடந்துவிடும் மேகம்

இன்றிருந்து மணம் கொடுத்து

நாளை விழும் மலர்கள்

இத்தனையும் மானிடனே

உன் வாழ்வின் மறுரூபம்.

காதலுடன் காமம் மட்டும்

வாழ்வின் எல்லையில்லை

ஒவ்வோர்க்கும் ஓர் கடமை

அவன் எழுதி வைத்தான்

அது தேடி நடப்பது தான்

வாழ்வென்னும் பயணம்

யாரோ உன் தயவைப்

பார்த்திருப்பர் வழியில்

அவர் தேடி நடப்பது தான்

அடுத்திருக்கும் வேலை!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

justin உங்களை இனிதே வரவேற்கிறோம் கவிதை அந்தாதியில் கவி படைத்திட

வாழ்த்துக்களோடு.............

மேலும் தொடருங்கள்

ஒருவர் கவிதை வடிக்க அதன் முடிவு சொல்லை வைத்து மற்றவர் கவிதை வடிக்க வேண்டும். கவிதை எதைப்பற்றியதாகவும் எத்தனை வரியாகவும் இருக்கலாம்.

குறிப்பாக புதிதாக கவிதை எழுத இருப்போரும் மற்றும் கவிகள் படைக்கும் பலரும் தங்கள் கவித்திறமையை வளர்க்க ஒர் அடித்தளமாகவும் அமையும் என்பதே எண்ணம்.

மின் மினி போல் சில கணங்கள்

நின்றெரியும் தீபம்

கண்மூடித் திறப்பதற்குள்

கடந்துவிடும் மேகம்

இன்றிருந்து மணம் கொடுத்து

நாளை விழும் மலர்கள்

இத்தனையும் மானிடனே

உன் வாழ்வின் மறுரூபம்.

காதலுடன் காமம் மட்டும்

வாழ்வின் எல்லையில்லை

ஒவ்வோர்க்கும் ஓர் கடமை

அவன் எழுதி வைத்தான்

அது தேடி நடப்பது தான்

வாழ்வென்னும் பயணம்

யாரோ உன் தயவைப்

பார்த்திருப்பர் வழியில்

அவர் தேடி நடப்பது தான்

அடுத்திருக்கும் வேலை!

அடுத்திருக்கும் வேலை அல்லது வேலை எண்டு தொடருங்கள்.

வேலைகள்

இருந்த போதும்

உன்னேடு உறவாடிய

நிமிடங்களை நான்

ரசிந்துக்கொண்டேன்

என் இனிய

கவிதை அந்தாதியே

என் கிறுக்கள்களை

கவிதையாய் ஏற்றுக்

கொண்ட உன்னிடம்

இருந்து தற்காலிகமாய்

நான் விடை பெறுகின்றேன்

என் எல்லா குற்றங்களையும்

தாங்கிக்கொண்ட

உனக்கு ஒரு நன்றி

உனன்னேடு வாழ்ந்த

காலங்கள் பிடித்த

போதும் தற்காலிகமாய்

நான் பிரிகின்றேன்

பிரிகின்றேன் என்ற

மட்டும்

சொல்லிவிட்டுப்பொகாதே..

மரணத்தைவிட வலி

காதலி பிரிவுக்கு

மட்டும் ஆண் கண்

நீர் வடிக்கும் என்பதனை

அறியாமல்

பிரிகின்றேன் என்று

மட்டும்

சொல்லிவிட்டுப்போகாதே..

கோடிப்பெண்கள்

இருக்கலாம்..

நீதானே என் மூச்சு

நீதானே என் உயிர்

உன் பிரிவை மட்டும்

தாங்க மாட்டேன்

என்னை பெருந்துயரில்

தள்ளும் பிடிவாதம் எதற்கு

பிரிகின்றேன் என்ற

மட்டும்

சொல்லிவிட்டுப்பொகாதே..

  • கருத்துக்கள உறவுகள்

ஓ.. மன்னிக்கவும் கறுப்பி. முடிவுச் சொல் விதியை மீறி குறுக்கால போயிட்டன் போல..பதில் கவிதை மட்டும் தான் எழுதினேன். இனி விதியைக் கடைப்பிடிக்கிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

போகாதே...

இனிய விபத்தாக

இறங்கி விட்டாய் என்னுள்..

என் பாழ் வீட்டின் சாளரங்கள்

திறந்து ஒளி கசிய

கொல்லைப் புதர்களில்

முள் மறைந்து மலர்கள்

பாலைவனப் பயணிக்குத்

தென்பட்ட நீர்மூலம்

இல்லாமை ஒரிரவில்

செந்தழிப்பாய் ஆனது போல்

என்னுள் இறங்கி விட்டாய்

போவதற்கா குடிவந்தாய்?

குடிவந்தாய் கடவுளாக

உள்ளத்தில் சிலகாலம்...

பின் என்ன உனக்கு நடந்தது?

வந்த வேகத்திலேயே...

சொல்லாமல் கொள்ளாமல்

எனது கோயிலைவிட்டு

ஓடிவிட்டாய்!

இனி,

பூசை செய்வதற்கு

இன்னொரு

கடவுளை

நான் எங்குபோய் தேடுவேன்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.