Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கவிதை அந்தாதி

Featured Replies

சொல்லுங்கள் என யாரிடம் கேட்பது

ஏன் கொன்றாய் என்று சிங்களதிடமா

ஏன் மவுனமென சர்வதேசதிடமா

ஏன் கொலைகளை அசீர்வதிகிறாய் என

இந்தியாவிடமா?????

  • Replies 1.9k
  • Views 181.9k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இனிக்குமா??

நிச்சயமாக இனிக்கும்

இன்னொரு சிங்கபூராக

பொருளாதாரத்தில்

இன்னொரு இஸ்ரேலாக

பாதுகாப்பில்

இந்துசமுத்திரத்தின்

நித்திலத்தில்

தமிழ்ழீழ தேசம்

இனித்திடும்

கடல் சூழ் வளமும்

அயராத உழைப்பாளிகளும்

வளமான மண்ணும்

அருமையான கலாச்சாரமும்

எழில் கொஞ்சும் கடற்கறையும்

புதிதான எண்ணைவயலும்

என்ன வேறு வேண்டும் எமக்கு

இலக்கியா நிச்சயம் இனிக்கும்

இனித்திடும் பழவகைகள் நிறைந்திட்ட தேசமது

நெடுக்கே வளந்திட்ட கற்பகதருவுண்டு

களைப்பை போக்கி இளநீர் தரும் தெங்கு

வாழை மா பலாவென முக்கனியும் நிறைந்திருக்கும்

முத்தான தமிழீழம் உருவாகும் காலமிது

தமிழீழ முத்ததனை மூழ்கி எடுத்திடவே

நெருப்புக் குளித்தபடி தவமிருக்கும் தவத்தலைவன் - அவன்

வழிக்குத் துணையாக படையணிகள் பலவுண்டு

கரத்தை பலமாக்கி உயிரீந்த மாவீரர்

நினைவுகள் பலவந்து மனதை அழுத்தி நிற்கும் - அம்

மனத்தை அறிந்ததுபோல் வானமும் இருளாகும்

கார்த்திகை மாதமதில் மாவீரர் நினைவுநாள்...

* இப்பதில் வருவதற்குத் தாமதித்ததால் இதனைக் கருத்திலெடுக்கவேண்டாம்

நினைவுநாள்..

தேசத்தால் மறக்கடிக்கப்பட்ட

ஆன்மாக்களை

நினைத்துப்பார்க்க மட்டும்..

வருடத்தில்

கஞ்சத்தனமாய்

ஒருநாள்..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒருநாள் ஒருபொழுதேனும் நின்மடி தேடி

வருவேன் என்று நான் நித்தம் இங்கிருக்க

நீயோ நிதம் ஒரு பெண்ணுடன் சல்லாபித்துக்

கொண்டதை அறிந்து கொண்டபோதே

வேண்டாம் உனது சகவாசம் என்றே

உதறித் தள்ளிவிட்டேன் உன்னை

உன்னைப் பாசம்

சந்தேகப்படுத்துகிறதா...

சரி பாசத்துக்கு

சோதனை

பணத்தை வைத்து

பந்தயம்

ஆடிப்பார்..

பாசம்..

படுதோல்வி

காணும்..இதுதான்

பெண்ணே..

யதார்த்தம்..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யதார்த்தம் இதுவென்றால்

யதார்த்தமாய் வாழ்ந்திட இந்த

பிரபஞ்சத்தில் பணம் ஒன்றே போதும்

என்றே வாழ்ந்திடத்தான் முடியுமா

வாழ்ந்திட வேண்டும் என்றும் அன்பு

பாசம் என்ற மழையில் நனைந்து

ஆயுள் முழுவதும்

ஆயுள் முழுவதும்..

அன்புக்கு உழைத்து..

நேசமும்..பாசமும்..

நிஜமென..நெஞ்சில்..

கோயில் கட்டி பூஜித்து..

மனைவியென்றும் மக்களென்றும்..

உற்றாரென்றும் உறவு என்றும்..

கூடி வாழ்ந்த கோமான் நான்..

தெருவுக்கு வந்த தொன்றும்

புதிரல்லப் பெண்ணே..

அப்பாவியாய.. வாழ்ந்தால்

அவமானம் நேரும்..

ஏமாளியாயிருந்தால்..பரம

ஏழையாக்கும்..

இளகிய இதயமென்று

கடைப்பாறை ஏற்றுவார்..

நீ கதறி அழுதால்..

கை உதறிப்போவார்..

பட்டவர் உரைக்கும்போது..

தட்டாமல் கேள் மனமே..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மனமே கேள் மனமே

மனதுக்குள் என்ன இருக்கு என்று

மனமே கேள் மனமே

மனதை மலர விட்டாள் நினைவுகள்

மலர்த்தோட்டமாய் மணம் பரப்புகின்றதே

மனதுக்குள் மத்தாப்பாய் மலர்ந்து

மந்திரங்களாய் உன் நாமம் என்

மனதில் சங்கமம்

சங்கம சுகங்களில்..

மெல்லிய சங்கீதம்...

மெழுகு வெளிச்சங்களில்

ஆனந்த ஆராதனை..

வெண்பஞ்சு மேகம்

தலையணையாகுமோ..

மல்லிகைமொட்டுகள்..

நார்விட்டு நீங்குமோ..

இன்றுமட்டும் சூரியன்..

துயிலுக்குப்போகுமோ..

கட்டில்மேல் கூரை

ஆகாயமாகுமோ..

மின்மினிகள்..நமைக்கண்டு..

வெட்கியே..நாணுமோ..

வெண்ணிலா..விடியும்வரை

வேவுபார்த்துப் போகுமோ..

காலையில் முதுகில்

நகக்காயங்கள் தேடியே..

நாணிடும் நாயகி..

யாரது..யாரது..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

யாரது கைகளில் எழுத்தாணி

கொண்டே கவி வடிப்பது

பார் மீதினிலே பார்த்திடுவீர்;

பல அநியாயங்கள் தலையெடுப்பதை

பேனா முனை கொண்டே

படைத்திடுவீர் பக்கம் பக்கமாய்

பக்கம் பக்கமாய்

ஆயிரம் படித்தபின்னும்..

நினைவில்

நிற்பது...நிஜத்தில்..

நீ மட்டும்தான்..

நீ மட்டும்தான்

இன்னும்

என்

இதயத்தில்....

உன்னையன்றி

வேறு யார்

வருவார்

என்னன்பே...???

எத்தனை

காலம்

உன்னை

சுமந்தேன்....

உனக்காக

நான்

வாழ்ந்தேன்....

இன்று

வந்து

என்னவளே

எந்தனுக்கு

என்ன

சொன்னாய்....???

கொடும்

வார்த்தைகளை

கொண்டு வந்து

என்னில்

ஏன்

வாரி

எறிந்தாய்....???

சுடுதணல்

கொண்டு

வந்து

என்

இதயத்தை

ஏன்

சுட்டெரித்தாய்....???

உந்தனக்கு

என்ன

இழைத்தேன்...???

என்னவளே

என்னை

ஏன்

நீ வெறுத்தாய்....????

நீ வெறுத்தாய்

என நான் வேறெங்கு

செல்வேன்..

நிஜத்தை நிழல்

நீங்கின்

போக்கிடமுண்டோ..

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

போக்கிடமுண்டோ என்று ஐரோப்பாவில்

கால் கடுக்க நின்று கூறிவிடின்

இக்கரையில் இருக்கவே இருக்கின்றது

அகதி முகாம்கள் பல

வக்கணையாய் வயிறாற உண்டு

களிக்க அகதிப் பணம் கிடைக்கும்

போக்கிடமுண்டோ....???

அன்பே

உன்னை

விட்டு

போவதற்கு

என்னால்

இன்று

முடியவில்லை....

தனிமையிலே

உன்னை விட்டு

நான்

மட்டும்

எப்படியோ.....???

என்னால்

இன்று

முடியாதடி

உன்னை

விட்டு

போகேனடி....

உன்னை

விட்டு

போவதற்கு

எனக்கு வேறு

போக்கிடமுண்டோ....???

போக்கிடமுண்டோ..

என்று யாரும்

கேட்டிடத்தேவையில்லை

பாவை இதயத்தில

புகழிடம்

நான் கொண்டபின்னே..

போக்கிடமுண்டோ..

என்று யாரும்

கேட்டிடத்தேவையில்லை

கிடைக்கும்

எனக்கென்று

கிடைக்கையில்

போட்டிருந்தேன்...

ஊரெல்லாம்

ஓடிப் பணம்

வட்டிக்கு

வேண்டி நின்றேன்...

முதலதாய்

நான் போட்டு

முதலாளியாய்

நானிருந்தேன்...

காலம்

ஓடையிலே

காலடி

சறுக்கிற்று....

வதிவடவும்

கிடைக்கவில்லை

வாழ்வதுவும்

கிடைக்கவில்லை...

போட்ட

முதலதுவை

போய்

வேண்ட

முடியவில்லை...

இதயம்

உடைந்திங்கு

விழுந்து

புரண்டு

அழுகிறேன்...

இலங்கையிலே

நிக்கிறேனே

என்ன செய்வேன்

நானிப்போ....???

கேட்டிட

தேவையில்லை

நீர்

கேளாமால்

விட்டுவிடும்....

வேண்டிய

பணத்தை

நான்

வேளைக்கு

தந்திடுவேன்...

இதயம்

இருந்தால்

கொஞ்சம்

இரக்கமதை

காட்டிவிடும்...

இன்றில்லை

என்

செய்வேன்...??

ஏழையாகி

போனதாலே

ஏறியென்னை

ஏன்

மிதிக்கிறாய்...???

வருந்தி

அழும்படி

ஏன்

வஞ்சகங்கள்

வீசுகிறாய்....???

முள்ளான்

வார்த்தையாலே

என்

நெஞ்சமதை

ஏன்

குத்துகிறாய்....???

இன்னுமொரு

தவணையதை

எந்தனுக்கு

தந்துவிடு...

வேண்டிய

பணத்தை

உனக்கு

வேலைக்கு

தந்திடுவேன்....!!!

நானிப்போ..காணப்பெண்...

நாணிப் போவதென்ன..

கூனிக்குறுகிக்கொள்ள..தோழி

மேனிக்குத் தேவையென்ன

வானில் நிலா முகிலைக்

களைவதில்லையா.. தோழி

முழுதும் அறிவதில்லையா

தந்துடுவேன் உயிரையென்று

நெஞ்சில் குண்டோடு செல்வார்..

இவர் தமிழுக்கும்..மண்ணுக்கும்..

உரமாகிக்கொள்வார்..

தான்மறையும் நொடிதன்னை..

யாரறியக்கூடும்..கரும்புலியாக

அறிவதில்லையா

உலகே

அறிவதில்லையா....???

எம் தமிழர்

அவல நிலை

நீ

அறிவதில்லையா....???

உடைந்து

ஓடும் அவர்

கண்ணீரதை

நீ காணவில்லையா....???

அந்த

கோரப் பகை

செய்யும்

கோரம்

காணவில்லையா....???

நித்தம் ஒரு

கொலை நடக்கு

நீ

அறியவில்லையா....???

நடு நடுங்கி போகும்

பகையை

இன்று காணடா...

தமிழர் வீரமதின்

உச்சமதை

இன்று கேளடா....

அலை அடிக்கும்

ஓசையதை

அங்கே பாரடா...

அது கண்டு

ஓடும் பகையை

இன்று பாரடா...

எமை

ஆழ வந்த

படையதுவின்

அவலம் காணடா...

அப்புகாமி

பிள்ளை படும்

பாட்டை

பாரடா....

சலம் விட்டு

சரணடையும்

நிலயை

காணடா....

முறிந்து விழுந்த

படை

உடலை

இன்று பாரடா...

எங்கள்

முல்லை அடியின்

அதிர்வொலியை

இன்னும்

கேளடா....

கார்த்திகையின்

முடிவிற்குள்ளே

கனியும் பாரடா....

எங்கள்

தமிழீழம்

விடியும்

என்று

நீயும் பாடடா....!!!

அறியவில்லையா தமிழா

அறியவில்லையா

ஒற்றுமையென்றால்

யாதெனவென்று..

அறியவில்லையா

சேரனும் சோழனும்

சண்டை போட்டார்

நடுவே பாண்டியனும்

வந்தே..பங்கு கேட்டான்..

அன்று தொட்டு இன்றுவரை..

அறியவில்லை ஒற்றுமையை

வேலிக்கு சண்டை..பேசுற

கூலிக்கும் சண்டை..

சொத்துக்கு சண்டை..தமிழா

சோத்துக்கும் சண்டை..

பொன்னுக்கும் சண்டை-அடுத்தவன்

பெண்ணுக்கும் சண்டை

ஆட்சிக்கு சண்டைஅந்நாடங்

காய்ச்சிக்கும் சண்டை

பணத்துக்கு சண்டை..செத்த

பொணத்திற்கும் சண்டை..

சண்டை சண்டை சண்டை

பொழுது போக்குக்கு சண்டை

பொழுது போகாம சண்டை..

சண்டை

களத்தில

வந்து நின்று

நீங்க

சண்டை செய்ய

வாங்க....

அங்கு

சண்டைகள்

மூண்டதும்

ஓடி ஒளிவது

தான் ஏங்க....???

பொய்களை

சொல்லியே

பொய்களை

சொல்லியே

வாழ்வது நீங்க...

மெய்களை

சொல்லியே

மெய்களை

சொல்லியே

வாழ்வது

நாங்க....

எத்தனை

ஆயிரம்

படைகளை

கொண்டு வந்து

நீங்க

இழந்தீங்க....

எங்கள்

பாயும்

புலிப்படை

அடியில்

ஏன் கண்டு

ஓட்டம்

எடுத்தீங்க....???

உலகெல்லாம்

ஏறி ஓடி

பயிற்சி

எடுத்தீங்க....

இப்போ

புறமுதுகிட்டு

ஏனோ

நீங்க

ஓடி ஒளிந்தீங்க.....???

எத்தனை காலம்

உலகமதில்

பிச்சை

எடுப்பீங்க.....???

தனிமையில

வந்து

என்று நீங்க

புலிப்படையை

வெல்லுவீங்க.....???

வெல்லுவீங்க..அண்ணா..

தமிழீழப்போரிலே..

எதிரி கோடிப்பேரைக்

கூட்டி வந்து...

கொட்டம்போடினும்..

வெறியாட்டம்போடினும்..

வெறியாட்டம் எவரும் போடலாம்-ஆனால்

வெற்றியாட்டம் தமிழர் சேனைக்கே

வெற்றியின் ஆசானாக கரிகாலன் ஈழத்தில்

வெற்றி கருவியாக முப்படையணிகள்

கடலில் கடற்புலியாக

வானில் வான்புலியாக

தரையில் தரைப்புலியாக

வெற்றியின் கருவிகள் ஈழத்தில்

ஈழத்தில் நான்

இருந்த

காலத்தை

எண்ணி எண்ணி

வாழ்வைக் கழிக்கிறேன்..

என் மண்ணைக்

கையிலள்ளி..

என்னுடல் பூசி

புரண்டிட ஏங்கிறேன்..

விதி என்னைத் தள்ளி

வந்து..

அநாதை செய்தது..

மதியின்றிக் காலம்

என்னை..

கேலி செய்கிறது..

வதிவிடவுரிமை பெற்றும்

அந்நியம் உணர்ந்து..

அல்லலுறும் நெஞ்சை..

எவ்வகையில்

தேற்றுவேன்..இதயவலி

எவ்வகையில்

ஆற்றுவேன்..

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.