Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஒட்டுமொத்தமாய் தரமாட்டார்கள். சி்ல்லறையாகத்தான் சேகரிக்க வேண்டும்.

Featured Replies

மதிப்புக்குரிய திருவாளர்கள் சம்பந்தன் அவர்களுக்கு,

நான் ஒரு நாவல்-சிறுகதை-நாடக எழுத்தாளன், அமிர்தலிங்கம் அவர்கள் பற்றியR.jpg’அமிர்தலிங்கம் சகாப்தம்”, ”சத்தியங்களின் சாட்சியம்” மற்றும் தமிழ் அரசுக் கட்சியை வளர்த்தெடுத்த கோப்பாய்க் கோமான் வன்னியசிங்கம் அவர்கள் பற்றிய ”சாணக்கியன்” நூல்களின் ஆசிரியர். தமிழ் அரசுக்கட்சி யாழ்ப்பாணத்தில் கைலாய பிள்ளையார் கோவில் வீதியில் 1949இல் முதலாவது கூட்டத்தை வைக்க முடியாமல், தமிழ்க் காங்கிரஸ் குண்டர்கள் அடக்குமுறை கையாண்ட வேளை, மேடையில் நின்றவன். இன்னும் ஏராளம் சொல்லாம். அன்று அக் கூட்டத்தில் பங்குகொண்ட தமிழரசுக் கட்சியினரில் என்னைவிட எஞ்சியிருப்பவர் சிலர்தான்.

தமிழ் அரசுக் கட்சியில் இன்றுள்ள தலைமைகளில் தங்கள் சாதுரிய மிக்க பங்களிப்பைப் பெரிதும் மதிப்பவன். கடவுள் கிருபையால் தமிழ் அரசுக்கட்சிக்கு தங்கள் சேவை கிட்டியுள்ளது என்று நம்புகிறேன். தங்கள் சேவை கிட்டாதிருந்தால் கூட்டமைப்புக் கட்சியை, ஈழத் தமிழர்களை உலகம் திரும்பிப் பார்த்திராது. உங்களோடு விவேகமாய்ச் செயற்படும் சுமந்திரன், விக்கினேஸ்வரன் அவர்களையும் சேர்த்துக்கொள்ளலாம். எனினும் நீங்கள் கூட்டமைப்பின் சில்லறைகளின் கூச்சலுக்கு அடிபணிகிறீர்களோ என்ற அச்சம் எனக்குண்டு.

தமிழ் அரசுக் கட்சி எதிர்ப்பு அரசியலைக் கடைப்பிடித்து வந்த வரலாறு சரியோ என்ற கேள்வி அண்மைக் காலத்தில் என்னுள் எழுகின்றது. சௌமியமூர்த்தி தொண்டமான் சார்பு அரசியலை மேற்கொண்ட பொழுதும் அவரால் மலைநாட்டுத் தமிழ் மக்களின் லைன் வாழ்க்கையை மாற்ற முடியவில்லை என்ற எண்ணம் என்னுள் நீண்ட காலம் இருப்பாகக் குடிகொண்டிருந்தது. இன்று முதுமையில் அமைதியாகத் திரும்பிப் பார்க்கின்ற பொழுதில் சிங்கள உளவியலுக்கு ஏற்ற கொள்கையை கடைப்பிடித்து அவர் வெற்றி பெற்றுள்ளார் என்று கூறவேண்டும் போல் தோன்றுகின்றது. வாக்குரிமை முழுவதுமாகப் பறிக்கப்பட்ட ஒரு சமூகம் இன்று வடமாகாண வாக்காளர் உயர்வை-சிறப்பை, எண்ணிக்கையை எட்டிக்கொண்டிருக்கிறது. சுருக்கமாகச் சொல்வதானால் மாதச் சம்பள அரச-தனியார் உத்தியோக ரீதியில் அவர்கள் படுவேகமாக முன்னேறுகிறார்கள். எட்டடி அகலநீள லைன்களில் வாழ்பவர்களே பல்கலைக்கழக கலைப் பீடங்களில் குவிகிறார்கள். விஞ்ஞான உயர் கல்வி கற்க அவர்கள் பாடசாலைகளில் வாய்ப்பில்லாத குறை இருந்தது. புதிய அமைச்சர் சபையில் ராதாகிருஸ்ணன் கல்வி அமைச்சர். விஞ்ஞானக் கல்விக் குறையும் ஓடிமறையப்போவதும், டாக்டர், என்ஜினியர்களாக அவர்கள் அலையாக எழுவதும் தூரத்தில் இல்லை. முன்னர் தேயிலை, றப்பர் பெருந்தோட்டப் பாடசாலை ஆசிரியர்களாக பயிற்சி பெறாத யாழ்ப்பாணத்தவர்களே கடமை புரிந்தனர். அந்த நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. ஸ்ரீபாத தேசிய கல்வியியற் கல்வி நிறுவனத்தில் மலைநாட்டு இளைஞர்களே ஏகபோகமாய்ப் பயிற்சி பெறுகின்றனர். புதிய அரசு அவர்களுக்கு 7 பேர்ச் நிலம் கொடுத்து தனிவீடுகள் கட்ட தேர்தல் விஞ்ஞாபனத்தில் வாக்களித்தது. அதற்குரிய அமைச்சை திகம்பரம் பெற்றுள்ளார். சௌமியமூர்த்தி தொண்டமானால் பெற முடியாது போன தனிவீடுகூடச் சாத்தியமாகப்போகின்றது.

சிங்கள உளவியலைப் பொறுத்தவரை அவர்கள்  1956இல் மூர்க்கமாக எதிர்த்த தமிழ் உரிமையை படிமுறையில் பணிவோடு படிப்படியாக வழங்கியுள்ளார்கள். இன்று வடகிழக்கில் மட்டுமல்ல எனைய பகுதிகளிலும் தமிழ் ஆழ வேரூன்றிக் கொண்டிருக்கிறது. இதுவொன்றே நாம் சிங்களவர்களுடன் எப்படியான அணுகுமுறையை கடைப்பிடிக்க வேண்டும் என்பதை எமக்கு அறிவுறுத்துகின்றது. இதுவரை தோற்றுப் போன பாதையில் ஓடித் தோற்றுப் போவதைவிட, புதிய பாதையில் முயற்சிப்பதே விவேகமான செயல். அந்த இராசதந்திரத்தைப் புரிந்துகொள்ள  முடியாதவர்களைப் பற்றி அலட்டிக்கொள்ளத் தேவையில்லை. தமிழ் மக்கள் விவேகிகள்.  அவர்கள் புரிந்து கொள்வர். 

ஏனையவர்களை விடுவோம் --- ஓய்வுநிலை இந்திய வரலாற்றுப் பேராசிரியர், தமிழ் அரசுக் கட்சி உபதலைவர் சிற்றம்பலம்  அவர்கள் 67வது சுதந்திரதின விழாவில் சம்பந்தன், சுமந்திரன் அவர்கள் கலந்து கொண்டதை, தமிழ் அரசுக் கட்சி வரலாற்றில் இல்லாத பொல்லாத சரித்திரமாகச் சித்தரிக்கிறார். வாகன இலக்கத் தகடுகளின் சிங்களச் சிறீ எழுத்தை ஆவேசமாக எதிர்த்தெழுந்த, எதிர்ப்பு அரசியலை உயிர்நாடியாகக்கொண்டு அரசியல்பணி மேற்கொண்ட அமிர்தலிங்கம் அவர்களே பிற்காலத்தில் சிங்கள உளவியலை உணர்ந்து படிமுறையில் முன்னேற, சார்பு அரசியலை அரவணைத்து மாவட்ட சபையை வரவேற்றார். சிங்களவர்களிடம் ஒரே தடவையில் ஒட்டு மொத்தமாய்ப் பெறமுடியாது. சில்லறையாகத்தான் சேகரிக்க வேண்டும். அந்த அடிப்படையிலேயே தந்தை செல்வாகூட பண்டாரநாயக்கவோடு ஒப்பந்தம் செய்தார். டட்லி அரசில், கட்சிக்கு அமைச்சர் பதவி ஏற்றார். முருகேசு திருச்செல்வம் உள்ளுராட்சி அமைச்சரானார். யாழ்ப்பாணத்தில் வாதரவத்தை உட்பட சில கிராமங்களுக்கு நன்னீர் வசதி ஏற்படுத்தினார். தமிழ் அரசுக் கட்சி வரலாற்றில் இன்னும் பல ஆதாரங்கள் உண்டு. அதனைப் புரிதுகொள்ள முடியாதவர்கள் கூச்சலை உதவாக் குப்பையாக ஒதுக்கிவிடுங்கள்.

இன்றைய அரசியல் சூழ்நிலையில் ஜனாதிபதி சிரிசேன-பிரதமர் விக்கிரமசிங்கா வழங்கும் அரிய வாய்ப்பை வீணடிக்காமல், நீங்கள் அரசோடு சார்புநிலைப் போக்கைக் கடைப்பிடிப்பதையும், சுதந்திரதின விழாவில் கலந்து கொண்டதையும் சாணக்கியமிக்க இராசதந்திரம் என்று ஏற்றுக்கொள்வதோடு அதற்காக உங்களை  மெச்சி வரவேற்று வாழ்த்துகிறேன்.

கதிர் பாலசுந்தரம்

 

எனது ஈ மெயிலில் கிடைக்கப்பெற்றது .

சம்பந்தரிட்ட கையில ஒரு திருவோட்டையும் கொடுத்துவிட்டா நல்லாயிருக்கும். மறக்காம இந்தியா போகேக்கையும் கொடுத்து விடவும்.

  • கருத்துக்கள உறவுகள்

கற்பனையின் உட்சம் மலைநாட்டுத் தமிழ் மக்களின் லைன் வாழ்க்கையில் மாற்றம் ஏட்பட்டதென எழுதுவது.

  • கருத்துக்கள உறவுகள்
அன்று 1949 ல் தமிழ்க் காங்கிரசுக் கட்சி அரசோடு சார்புநிலைப் போக்கைக் கடைப்பிடித்தமை தவறில்லை என்று அறிய எழுத்தாளர் கதிர் பாலசுந்தரம் அவர்களுக்கு 66 வருடங்களது அனுபவங்களைப் பெறவேண்டி இருந்துள்ளது. 
 
தலைவர் பிரபாகரனின் செயற்பாடுகளை முடக்குவதற்குத் துணைபுரிந்த தமிழர்கள், அவரது பாதை சரியானதே என்று உணர, இன்னமும் எத்தனை வருடங்களது அனுபவங்களைப் பெறவேண்டி இருக்குமோ? 
 
  • கருத்துக்கள உறுப்பினர்கள்
தலைவர் பிரபாகரனின் செயற்பாடுகளை முடக்குவதற்குத் துணைபுரிந்த தமிழர்கள், அவரது பாதை சரியானதே என்று உணர, இன்னமும் எத்தனை வருடங்களது அனுபவங்களைப் பெறவேண்டி இருக்குமோ?

சூப்பர்.
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.