Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்.நீராவியடியில் ரயில் மோதி மாணவன் ஆபத்தான நிலையில்! மக்கள் ஆர்ப்பாட்டம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
யாழ்ப்பாணம் -நீராவியடி பகுதியில் புகையிரதம் மோதியதில் பாடசாலை மாணவன் ஒருவன் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கோப்பாய் பகுதியைச் சேர்ந்த வ.குகப்பிரியன் (வயது18) என்ற மாணவன் யாழ். இந்துக்கல்லூரியில் கல்வி கற்றுவரும் நிலையில், பாடசாலையின் இல்ல மெய்வல்லுனர் போட்டிக்காக தனது இல்லத்தின் சோடனைகளை முடித்துக் கொண்டு, தனது வீட்டிற்குச் சென்று கொண்டிருந்த சமயமே இவ்விபத்து இடம்பெற்றிருக்கின்றது.

குறித்த பகுதியில் உள்ள புகையிரத பாதைக்கு பாதுகாப்புக் கடவை அமைக்கப்படாத நிலையில் புகையிரதம் வருவதை அவதானிக்காத மாணவன், பாதையை கடக்க முயன்றுள்ளார்.

இதன்போது குறித்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றிருக்கின்றது. இதில் தலைப் பகுதியில் அடிபட்ட நிலையில் மாணவன் தற்போது யாழ்.போதனா வைத்தியசாலையின் அவசர சிகிக்சைப் பிரிவில்  அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை குறித்த விபத்துச் சம்பவத்தையடுத்து அப்பகுதி மக்கள் திரண்டு புகையிரத கடவை அமைக்கப்படும் வரையில் புகையிரதம் வருவதற்கு அனுமதிக்கப் போவதில்லை எனக்கூறி, புகையிரதப் பாதையின் குறுக்காக மின் கம்பங்களை வைத்ததுடன் கடவைக்கு குறுக்காக, சீலைகளை கட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனையடுத்த சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் பொதுமக்களுடன் பேசி சமரசத்திற்கு முயற்சித்தனர்.

கடவை அமைக்கப்படும் வரையில் தொடர்ந்தும் புகையிரதம் வருவதற்கு எதிர்ப்போம் என மக்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில் நாளைய தினம் முதல் இரு பணியாளர்களை நியமித்து புகையிரத கடவையினை மனிதர்களால் இயக்கும்படி செய்வதாகவும் அதற்குப் பின்னர் ஒரு வாரகாலத்திற்குள் தன்னியக்க புகையிரத கடவையை அமைத்துக் கொடுப்பதாகவும் வழங்கிய உறுதிமொழியையடுத்து, மக்கள் அங்கிருந்து விலகிச் சென்றனர்.

jaffna_train_acci_001.JPG

jaffna_train_acci_002.JPG

jaffna_train_acci_003.JPG

jaffna_train_acci_004.JPG

jaffna_train_acci_005.JPG

jaffna_train_acci_006.JPG

jaffna_train_acci_008.JPG

tamilwin

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வல்லரசு நினைப்பிலை சுடுது மடியைப்புடி எண்டு............அவசரம் அவசரமாய் தண்டவாளம் போட்ட பக்கத்துவீட்டு அண்ணைக்கு உயிரின்ரை மதிப்பு பெரிசாய் தெரியாது.

  • கருத்துக்கள உறவுகள்

வல்லரசு நினைப்பிலை சுடுது மடியைப்புடி எண்டு............அவசரம் அவசரமாய் தண்டவாளம் போட்ட பக்கத்துவீட்டு அண்ணைக்கு உயிரின்ரை மதிப்பு பெரிசாய் தெரியாது.

 

வல்லரசு அடுத்து, பலாலியில் விமானம் இறக்கப்போயினம்......நாங்கள் கோலிடே போகலாம்...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.