Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்.மாவட்டத்தில் வறுமை குறைந்தது, வருமானம் உயர்ந்தது! - கனேடிய தூதுவரிடம் அரச அதிபர் தகவல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
canada-amb-jaffna-200-news.jpg

யாழ். மாவட்டத்தில் வறுமைச் சுட்டி 8 வீதமாக குறைந்துள்ளதாக யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார். யாழ்ப்பாணம் வந்திருந்த,இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகர் ஷெல்லி வைட்டிங், யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகத்தினை சந்தித்து கலந்துரையாடினார்.

   

யாழ். மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது, யாழ்.மாவட்டத்தின் தற்போதைய நிலமைகள் குறித்து அறிந்து கொள்வதற்காக வருகை தந்துள்ளதாகவும், கனடா அரசாங்கத்திடமிருந்து எவ்வாறான உதவிகளை எதிர்பார்க்கின்றீர்கள், தாம் எவ்வாறான உதவிகள் செய்ய வேண்டியுள்ளதென்றும் இலங்கைக்கான கனடா உயர்ஸ்தானிகர் அரசாங்க அதிபரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

அதன்போது, அரசாங்க அதிபர் யாழ். மாவட்டத்தினை கடந்த காலத்துடன் ஒப்பிடும் போது, தற்போது ஏற்பட்ட முன்னேற்றங்கள் தொடர்பில் விரிவாக எடுத்துரைத்துள்ளார். இது தொடர்பில் அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

கடந்த 2010 ஆண்டு 18 ஆயிரத்து 314 ரூபாவாக இருந்த சராசரி வருமானம் தற்போது 34 ஆயிரத்து 780 ரூபாவாக மாற்றமடைந்துள்ளது. அதேவேளை, வறுமை சுட்டி எவ்வாறு மாற்றமடைந்துள்ளது. 2010 ஆம் ஆண்டு, 16 வீதமாக இருந்த வறுமைச் சுட்டி தற்போது, 8.2 வீதமாக குறைவடைந்துள்ளது. எமது மாவட்டத்தினைப் பொறுத்தவரையில், இந்த சுட்டிகளின் அடிப்படையில் எவ்வாறு அபிவிருத்தி ஏற்பட்டுள்ளது, ஒவ்வொருவரின் தனி வருமானம் எவ்வாறு அதிகரித்துள்ளது என்பதனை வறுமைச் சுட்டி மற்றும் பொருளாதார சுட்டியின் ஊடாக எடுத்து காட்டப்பட்டுள்ளது.

அத்துடன், எமது தேவைகள் குறித்து எடுத்துக் கூறியுள்ளேன். இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பினை பெற்றுக் கொள்வதற்கான தொழிற்பயிற்சிகளை வழங்குவதற்கான நடவடிக்கையினை எடுக்கவுள்ளதாகவும் கனடா உயர்ஸ்தானிகர் கூறியுள்ளார். எமது மாவட்டத்தினைப் பொருத்தவரையில், முதன்மையான தேவையாக இருப்பது, வீட்டுத் தேவை, பல முறை வீட்டுத் தேவைகளை கூறியிருந்தும், இதுவரையில் வீட்டுத் தேவைகள் நிறைவேற்றப்படவில்லை. எனவே, வீட்டுத் தேவைக்கு உதவி செய்யுமாறு கோரியிருக்கின்றேன்.

மேலும், கைத்தொழிற் பேட்டைகளுக்கான நிலங்கள் ஒதுக்கப்பட்டிருந்தும் இது சரியான முறையில் ஆரம்பிக்கப்படவில்லை. எனவே, கைத்தொழிற்பேட்டைக்கான நிலங்கள் அனைத்தும் பயன்படுத்தப்பட வேண்டிய தேவை இருக்கின்றது. கனடா நாட்டின் உதவியுடன், விஸ்தரிக்கப்பட வேண்டும், அவ்வாறு விஸ்திரிக்கப்படுவதன் மூலம், அந்த வளங்களை பயன்படுத்தி இங்குள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை பெற்றுக் கொடுக்க முடியும் என்றும் எடுத்துக் கூறியுள்ளேன்.

இந்த நிலையில் அனைத்து விடயங்களையும் ஆராய்ந்த கனடா உயர்ஸ்தானிகர் கனடா அரசாங்கத்துடன், கலந்துரையாடி இதற்கான பதிலினை வழங்கவுள்ளதாக தெரிவித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். எனவும் தெரிவித்தார்.

 

canada-amb-jaffna-230215-seithy.jpg

 

http://seithy.com/breifNews.php?newsID=127118&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுட்டியும் சுத்தியலும்........ :D

 

அங்கை சம்பளம் கூடினதே தவிர வேறையொண்டுமில்லையாம்....ஆமியள்தான் இப்பவும் முன்னுக்கு நிக்கிறாங்களாம். :(

  • கருத்துக்கள உறவுகள்

அரச அதிபர், சும்மா... வாயை வைத்துக் கொண்டு இருந்திருக்கலாம்.
வெளிநாட்டு உதவியளை... நிறுத்தப் போறாங்கள். :D

  • கருத்துக்கள உறவுகள்

சுந்தரம் அருமைநாயகத்தால் இப்படித்தான் கூறமுடியும். வறுமைச்சுட்டி எட்டுவீதமாகக் குறைந்தது எனக்கூறும் சுந்தரம் உள்நாட்டு வருமானத்தில் எத்தனைவீத உயர்வை யாழ் மாவட்டம் எட்டியுள்ளது அது உள்ளூர் மக்களிடையே எவ்வாறு பகிர்ந்தளிக்கப்பட்டது? வளங்களது பற்றாக்குறை எவ்வாறு சரிக்கட்டப்படுகின்றது மத்திய அரச நிதிமூலத்திலிருந்து பிராந்தியங்களுக்கான நிதிப்பங்கீட்டுத் தொகுதியில் எவ்வளவு பணம் யாழ் மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்டது அதன்மூலம் நிறைவேற்றப்பட்ட வேலைத்திட்டங்கள், பணத்தைப் பாவிக்காது மீண்டும் திறைசேரிக்கு திருப்பி அனுப்பபட்ட பண எவ்வளவு? இவைபோன்ற ரெக்னிகலான விடையங்களையும் கொஞ்சம் விளக்கலாமே.

 

அட போங்கைய்யா இந்தச் செய்தியைப் படிக்கிற யாழ்ப்பாணத்தனில அரைவாசிப்பேர் வெங்காயம் தெரியாத சிங்களவனாக, முதுகைச் சொறிஞ்சுகொண்டு ஒருவர் முகத்தை இன்னொருவன் பாக்கப்போறான்.

 

எட புண்ணாக்கு சுந்தரம் அருமைநாயகம், யாழ்குடாநாட்டுக்கு இப்போது அவசரமாகத் தேவைப்படுவது குடாநாட்டின் நிலத்தடியில் கலந்துவிட்ட கழிஎண்ணைப்பிரச்சனையிலிருந்து எப்படி வெளிவருவது என்பதே.

 

நல்ல சந்தர்ப்பம் அமைஞ்சும் இந்த விடையத்தைபற்றிக்கூறி அதற்கான தொழில்நுட்ப உதவிகளை பெற்றுக்கொள்ளவும் அதற்க்கு ஏற்படும் செலவினைச் சரிக்கட்ட நிதிமூலங்கள் கிடைக்கவழிசெய்யும்படி கேட்டுக்கொள்ளவும் கிடைத்த சந்தர்ப்பத்தை,

 

பட்டினிச்சுட்டி குறைஞ்சுபோச்சு கோயில்களில நல்லா அன்னதானம் போடுறாங்கள் இப்ப என்பாடும் நல்ல கொண்டாட்டம் வீட்டிலையும் சமைக்கிறதில்லை வண்டியைப் பார்க்கத் தெரியேல்லையா? இண்டைக்கு உங்களைச் சந்தித்ததால ஒரு அன்னதானத்தை மிஸ் பண்ணிட்டன் ஆனால் ஒரு விடையம் அந்த இடத்துக்கு மனிசிக்காரியைப் போகச்சென்னனான் அறுதலி போனாலோ தெரியாது எனப் பினாத்துறார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.