Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இணைத்தலமை நாடுகளிடம் புளுகிய சரத் பொன்(ஸ்)சேகா

Featured Replies

வாகரை பாடசாலையிலிருந்து புலிகள் தாக்குதல் நடத்தியிருக்கலாம்: இணைத் தலைமை நாடுகளிடம் சரத் பொன்சேகா

வாகரை பாடசாலையிலிருந்து இராணுவத்தினர் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தியிருக்கலாம் என்று இணைத் தலைமை நாடுகள் நடத்திய விசாரணையின் போது சிறிலங்கா இராணுவ தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

வாகரையில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருந்த பாடசாலைகள் மீதான தாக்குதல் தொடர்பாக சிறிலங்கா இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிடம் இணைத் தலைமை நாடுகள் நேரடியாக விசாரணை செய்தன.

இணைத் தலைமை நாடுகளுடனான ஆலோசனை கூட்டம் கடந்த வியாழக்கிழமை சிறிலங்கா வெளிவிவகார அமைச்சில் நடைபெற்றது. இதில் அமைச்சர் மங்கள சமரவீர பங்கேற்கவில்லை. மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க தலைமையில் இக்கூட்டம் நடைபெற்றது.

சிறிலங்காவுக்கான அமெரிக்கத் தூதுவர் ரொபெர்ட் ப்ளேக், ஜப்பானிய தூதுவர் கியோசி ஆரெக்கி, நோர்வே தூதுவர் ஹன்ஸ் பிறட்ஸ்கர், ஐரோப்பிய ஒன்றியத்தின் சார்பில் யேர்மன் தூதுவர் ஜர்கென் வீர்த், ஐரோப்பிய ஒன்றிய தூதுவரக பிரதித் தலைவர் பீற்றர் மகெர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

சிறிலங்கா அரசாங்கத் தரப்பில் அமைச்சர்கள் மகிந்த சமரசிங்க, கேகலிய ரம்புக்வெல, அனுரா பிரியதர்சன யாப்பா, சமாதான செயலகப் பணிப்பாளர்ப பாலித கோகென்ன, முப்படைத் தளபதி டொனால்ட் பெரேரா, இராணுவ தளபதி சரத் பொன்சேகா, வெளிவிவகார அமைச்சு பதில் செயலாளர் கீதா டி சில்வா ஆகியோர் பங்கேற்றனர்.

வாகரை தாக்குதல் குறித்து இணைத் தலைமை நாடுகளின் தூதுவர்களுக்கு சரத் பொன்சேகா அளித்த விளக்கம்:

விடுதலைப் புலிகள் தரப்பிலிருந்து 122 மி.மீ.எறிகணைத் தாக்குதல் இராணுவத்தினர் மீது நடத்தப்பட்டது. அதற்குப் பதில் நடவடிக்கையாக வடக்கு வாகரை கதிரவெளியில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் நிலைகளை நோக்கி பதில் தாக்குதல் நடத்தினோம். புலிகளின் தாக்குதலில் இரு இராணுவத்தினர் கொல்லப்பட்ட நிலையில் எமக்கு தாக்குதல் நடத்துவதைத் தவிர வேறு வழியில்லை என்றார்.

பாடசாலைகள் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதே என்று இணைத் தலைமை நாடுகள் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது.

"அப்பகுதியில் பாடசாலைகள் இருப்பது குறித்து எனக்குத் தெரியாது. ஆனால் தாக்குதல் நடத்தப்பட்ட பகுதியைத்தான் நாங்கள் இலக்கு வைத்தோம். மக்களை விடுதலைப் புலிகள் வெளிப்படையாக மனித கேடயங்களாக பயன்படுத்துகிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. பாடசாலையிலிருந்து புலிகள் தாக்குதல் நடத்தியிருக்கலாம். ஆகையால் எமது பதில் நடவடிக்கையை பரப்புரைக்காக அவர்கள் பயன்படுத்துகிறார்கள். அப்பகுதியில் விடுதலைப் புலிகளின் பல முகாம்கள் இருப்பது தொடர்பாக போதுமான தகவல் எமக்கு உள்ளது. ஆனால் அப்பகுதியில் மக்களின் நடமாட்டம் இருப்பது தெரியாது" என்று சரத் பொன்சேகா விளக்கம் அளித்தார்.

ராடாரை இராணுவத்தினர் இயக்கியபோது இரு துப்பாக்கி நிலைகள் இருந்தன. அதனை நோக்கி நாம் தக்குதல் நடத்தினோம் என்றும் சரத் பொன்சேகா கூறினார்.

பாடசாலைகள் தொடர்பில் இணைத் தலைமை நாடுகள் மீண்டும் கேள்வி எழுப்பியபோது, மக்களை விடுதலைப் புலிகள் மனித கேடயங்களாகப் பயன்படுத்துகின்றனர் என்றார்.

அமைச்சர் மகிந்த சமரசிங்க கூறுகையில், பொதுமக்கள் கொல்லப்பட்டது தொடர்பில் அரசாங்கம் ஆழ்ந்த வருத்தம் கொள்கிறது. ஆனால் பொதுமக்களை விடுதலைப் புலிகள் பயன்படுத்தாது இருந்தால் இதனை தவிர்த்திருக்கலாம் என்றார்.

இந்தக் கூட்டத்தைத் தொடர்ந்து இணைத் தலைமை நாடுகளின் தூதுவர்கள் தமது அறிக்கையை எதிர்வரும் 17 ஆம் நாள் வாசிங்ரனில் நடைபெற உள்ள இணைத் தலைமை நாடுகள் கூட்டத்திற்காக அனுப்பி வைக்க உள்ளனர்.

http://www.eelampage.com/?cn=29725

இதைப் படிக்கின்ற பொழுது ஒன்று விளங்குகிறது.

வன்னிக்குச் சென்று விடுதலைப்புலிகளை இணைத் தலைமை நாடுகள் சந்திக்கின்ற பொழுது, சில விடயங்களை கேட்டு அறிகிற பொழுது "விடுதலைப்புலிகளிடம் இணைத் தலைமை நாடுகள் விசாரணை" என்றுதான் சிங்கள ஊடகங்கள் தலையங்கள் போடுகின்றன என்பது விளங்குகிறது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.