Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

படுகொலைக்குப் பின்னர் அரங்கேறிய அவலங்கள்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

படுகொலைக்குப் பின்னர் அரங்கேறிய அவலங்கள்!

ரவிராஜ் எம்.பியின் படுகொலைக்குப் பின்னர் தென்னி லங்கையில் இடம்பெற்ற சில சம்பவங்கள் குறித்து கொழும் பின் முக்கிய பிரமுகர் ஒருவர் சில தகவல்களை வெளியிட் டார். அந்த உள்வீட்டுத் தகவல்கள் தென்னிலங்கையின் மனப்பாங்கை அம்பலப்படுத்துகின்றன என்றார் அவர். அவர் சொன்ன தகவல்கள் இவைதான்:

* ரவிராஜ் படுகொலைக்கு எதிராக இன்று கொழும்பில் நடத்த ஏற்பாடாகியிருக்கும் கண்டனக் கூட்டத்துக்கு கொழும்பு மாநகரசபை மைதானம் வழங்கப்படுவதைத் தடுப்பதற்கு அரச உயர்மட்டத்திலிருந்து பெரிய அளவில் அழுத்தம், மாநகர நிர்வாகத்துக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ரவிராஜ் கொல்லப்பட்டமை குறித்து நீலிக் கண்ணீர் வடிக்கின்றார் ஜனாதிபதி மஹிந்த. ஆனால், ரவிராஜ் படுகொலையைக் கண்டித்து கூட்டம் போடுவதற்கு இடைஞ்சல் பண்ணுகிறது அவரது அரசுத் தலைமை.

கூட்டத்தை அங்கு நடத்துவதற்கு பெரிய பெரிய கைகளை யெல்லாம் பிடித்து ஒருவாறு அனுமதி பெறுவதற்கான முயற்சி நேற்று கடைசிநேரம்வரை நீடித்தது.

* இந்தக் கண்டனப் பேரணிக்கும், கூட்டத்துக்கும் உரிய பாதுகாப்பு ஒழுங்குகளை ஏற்படுத்திக் கொடுக்கும்படி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத்தலைவரான இரா.சம்பந்தன், அரசின் பாதுகாப்புத் துறையுடன் சம்பந் தப்பட்ட அரசியல்வாதி ஒருவரைத் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கேட்டாராம். ""அப்படிக் கூட்டம், பேரணி நடப்பதை யாராவது கல் எறிந்து குழப்பினால் அது ரவி ராஜுக்கே அவமானமாகி விடும். அதைத் தவிர்த்துக் கொள் ளுங்களேன்.'' என்ற சாரப்பட அந்த அரசியல்வாதிகளிடமிருந்து பதில் வந்ததாம். கொதித்துப் போனார் சம்பந்தர்.

""ரவிராஜைத்தான் கொன்று விட்டீர்கள். இதற்கு மேல் அவரை அவமானப்படுத்த உங்களுக்கு என்ன இருக்கிறது. ஆகவே, அந்தக் கவலையை விட்டு விட்டு பாதுகாப்பு, ஒழுங்குகளைப் பாருங்கள்.'' என்றாராம் சம்பந்தர்.

* சுட்டுக் கொல்லப்பட்ட ரவிராஜ் எம்.பி. ஒரு சட்டத் தரணி. மனித உரிமைகள் சட்டங்களுக்காக வாதிட்டவர். முன்னாள் அரச சட்டத் தரணியும் கூட. வழக்கு ஒன்றில் வாதாடுவதற்காக நீதிமன்றத்துக்குச் சென்று கொண்டிருக் கையிலேயே அவர் சுட்டுப் படுகொலை செய்யப் பட்டார்.

ஆனால், அவரது படுகொலையைக் கண்டித்து அறிக்கை விடுவதற்கு சட்டத்தரணிகளின் அமைப்பு ஒன்று மறுத்து விட்டதாம்.

வீட்டில் வைத்து சிங்கள நீதிபதி சுட்டுக் கொல்லப்பட்ட போது பெரிய ஆரவாரம் பண்ணி, கண்டன அறிக்கை விட்டு கவலைப்பட்ட இச்சங்கம், தமிழ்ச் சட்டத்தரணி ஒருவர் நீதி மன்றுக்கு வருகையில் சுடப்பட்டதைக் கண்டிக்கப் பின்னடிக்கிறது. இதுதான் சட்டத்தரணிகள் அமைப்பின் நீதி போலும் என்று மனம் வெதும்புகிறார் ஒரு மூத்த சட்டத் தரணி.

-உதயன்

image014ac0.jpg

image015xv3.jpg

image016wp7.jpg

image017ft3.jpg

image018kv3.jpg

image020wj7.jpg

image019vj2.jpg

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Thousands protest killing of Sri Lanka pro-rebel MP

COLOMBO (Reuters) - Thousands of protesters joined a march in Colombo on Monday commemorating a slain rebel-backed MP and demanded the Sri Lankan government and Tamil Tigers halt renewed violence.

Shouting "Don't kill Tamils" and waving banners that read "Stop Crimes against humanity" and "Shame", some 3,500 supporters of the non-partisan National Anti-War Front accompanied the coffin of Tamil MP Nadarajah Raviraj, who was killed on Friday.

He was the second high profile member of the Tamil National Alliance, seen as the Tigers' political proxies in parliament, murdered since December. His colleagues blamed government forces or their supporters.

"This is to show our sympathy. We should eliminate this kind of killing from society," said human rights activist Nimalka Fernando, dressed in traditional white of mourning, as the procession wound through central Colombo.

Raviraj's killing comes after a series of deadly attacks that have killed more than an estimated 3,000 civilians, military personnel and Tiger fighters so far this year amid the worst violence since a now tattered 2002 truce.

His funeral will be held on Wednesday in his hometown of Chavakachcheri in the northern, army-held Jaffna peninsula.

President Mahinda Rajapakse, under increasing international pressure to solve a rash of extrajudicial killings, massacres and abductions blamed on both sides, has requested British assistance in the investigation into Raviraj's murder.

He rejects outright the Tigers' demand for a separate homeland for minority Tamils in the island's north and east, where they already run a de facto state.

Foreign nations from the United States to India to peace mediator Norway have called on both sides to halt violence threatening to plunge the island into a full-blown return to a conflict that has killed more than 65,000 people since 1983.

-Reuters

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ரவிராஜின் இறுதி அஞ்சலிக் கூட்டத்துக்கு மாநகர சபையில் மறுக்கப்பட்ட அனுமதி -(அஜாதசத்ரு)

தலைநகர் கொழும்பிலுள்ள அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் குறிப்பாக இராணுவ பொலிஸ் தலைமையகத்துக்கு அருகாமையில் வைத்து படுகொலை செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் பேசும் மக்களின் விடிவுக்காக துணிச்சலுடன் குரல் கொடுத்த இளம் அரசியல் தலைவருமான நடராஜா ரவிராஜின் இறுதி அஞ்சலி நிகழ்வுகளில் போருக்கு எதிரான சக்திகளும் அரசியல் கட்சிகளின் பிரமுகர்களும் பல்லாயிரக்கணக்கில் ஒன்றுதிரண்டு அஞ்சலி தெரிவித்துள்ளமையானது ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் கடும்போக்கு அரசியல் நிகழ்ச்சி நிரல்களுக்கு கிடைத்துள்ள பெரும் சவாலாகவே அமைந்துள்ளது.

தலைநகர் கொழும்பிலுள்ள பொரளை ஏ.எவ். ரேமன்ஸ் மலர்ச்சாலையில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த மாமனிதர் நடராஜா ரவிராஜின் பூதவுடலுக்கு, மூன்று தினங்கள் பல்லாயிரக்கணக்கான மக்களும் அரசியல் பிரமுகர்களும் பொதுநல அமைப்புகளின் பிரமுகர்களும் அஞ்சலி செலுத்தினார்கள்.

அதுமட்டுமன்றி, கொழும்பு மாநகர சபைக் கட்டிடத்துக்கு முன்பாகவுள்ள விஹாரமாதேவிப் பூங்காவில் இடம்பெற்ற அஞ்சலிக் கூட்டத்திலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்தினார்கள். இதில் பெருமளவிலானோர் பெரும்பான்மை இன மக்கள் என்பது குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய விடயமாகும்.

ஆனால், அதேநேரம் கொழும்பு மாநகர சபைக் கட்டிடத்திலேயே மாமனிதர் நடராஜா ரவிராஜின் பூதவுடலை வைத்து இறுதி அஞ்சலி செலுத்துவதற்கு ஏற்பாட்டாளர்களால் அனுமதி கோரப்பட்ட நிலையில் அந்த விடயம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்ட நிலையில் அதற்கான அனுமதி மறுக்கப்பட்ட நிலையிலேயே விஹாரமாதேவிப் பூங்காவில் இறுதி அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.

கொழும்பு மாநகர சபைக் கட்டிடத்தில் இறுதி அஞ்சலிக் கூட்டம் நடத்துவதற்கு அனுமதி கோரப்பட்ட நிலையில் அது தொடர்பாக கொழும்பு மாநகர சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் தலைவர்கள் தலைமையிலான கூட்டம் மாநகர முதல்வர் தலைமையில் அவசரமாக கூட்டப்பட்டது.

இக்கூட்டத்தில் ஜனதா விமுத்தி பெரமுன (ஜே.வி.பி.) தவிர்ந்த அனைத்துக் கட்சிகளினதும் பிரதிநிதிகள் கலந்து கொண்ட நிலையில் பொதுஜன ஐக்கிய முன்னணியின் பிரதிநியான மாநகர சபை உறுப்பினர் ஆரியரத்ன வெதகே மற்றும் மாநகர சபை உறுப்பினர் ரோய் போகாவத்த ஆகியோர் மிகக் கடுமையான தமது ஆட்சேபத்தைத் தெரிவித்துள்ளனர்.

யாழ். மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு கொழும்பு மாநகர சபை மண்டபத்தில் இறுதி அஞ்சலி நிகழ்வு நடத்த ஒருபோதும் அனுமதியளிக்கக் கூடாதென்றும் தெரிவித்துள்ளனர்.

அதுமட்டுமன்றி, பொதுஜன ஐக்கிய முன்னணியின் பிரதிநிதியான மாநகர சபை உறுப்பினர் ஆரியத்ன வெதகே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு இது தொடர்பாக பேசியதையடுத்து, இறுதியில் கொழும்பு மாநகர முதல்வரால் அனுமதி வழங்க முடியாதென்று ஏற்பாட்டுக் குழுவினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை ஏற்றுக் கொள்ள முடியாதென்றும் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு இறுதி அஞ்சலி நடத்துவதற்கு கொழும்பு மாநகர சபைக் கட்டிடத்தில் இடம்தர முடியாதெனின், கொழும்பு மாநகர சபைக்கு முன்பாக உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொள்ளப்போவதாக ஏற்பாட்டுக் குழுவைச் சேர்ந்த போருக்கு எதிரான தேசிய முன்னணியின் தலைவர் குமார் ரூபசிங்கவும் ஐக்கிய தேசியக் கட்சியின் களுத்துறை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்னவும் அறிவித்த நிலையிலேயே இழுபறி நிலைக்கு மத்தியில் இறுதியாக விஹாரமாதேவிப் பூங்காவில் அஞ்சலிக் கூட்டம் நடத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

படுகொலை செய்யப்பட்ட தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு அஞ்சலி நிகழ்த்துவதற்கு கொழும்பு மாநகர சபைக் கட்டிடத்தை வழங்க வேண்டுமென்ற விடயம் தொடர்பில் அரசுடன் இணைந்து செயற்படும் பிரதி முதல்வர் எஸ். ராஜேந்திரனோ அல்லது ஏனைய தமிழ் பேசும் மாநகர சபை உறுப்பினர்களும் பேரினவாதத்திற்கு துணை போயிருப்பது தான் வெட்கப்பட வேண்டியதொரு விடயமாகும்.

அதேநேரம், மேல் மாகாண ஆளுநர் அலவி மௌலானா மாமனிதர் நடராஜா ரவிராஜின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்துவிட்டு, இந்த விடயம் தொடர்பாக பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெறப்பட வேண்டுமென்று நழுவிவிட்டதாகவும் ஏற்பாட்டாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

கொழும்பு மாநகர சபையில் அங்கம் வகிக்கும் மேலக மக்கள் முன்னணி, மலைய மக்கள் முன்னணி என்பவற்றின் பிரதிநிதிகள் மாத்திரமே இந்த விடயத்தில் ஏற்பாட்டாளர்களுடன் இணைந்து உறுதியாகச் செயற்பட்டுள்ளார்கள் என்பதும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதொரு விடயமாகும்.

அதுமட்டுமன்றி, நடராஜா ரவிராஜின் இறுதி ஊர்வல நிகழ்வுகளைக் குழப்புவதற்கு ஆளும் கட்சியின் பிரதியமைச்சர் ஒருவரின் ஏற்பாட்டில் திட்டமிடப்பட்டிருந்த விஷமத்தனமான நடவடிக்கையானது ஏற்பாட்டாளர்களால் பாதுகாப்புத் தரப்பினரின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டு இறுதிநேரத்தில் அம்முயற்சி தடுக்கப்பட்டது.

இதெல்லாவற்றுக்குமப்பால் போருக்கு எதிரான தேசிய முன்னணியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மாமனிதர் நடராஜா ரவிராஜின் இறுதி ஊர்வலத்தில் ஐக்கிய தேசியக் கட்சி, மேலக மக்கள் முன்னணி, புதிய இடதுசாரி முன்னணி, மலையக மக்கள் முன்னணி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், இலங்கை கம்னியூஸ்ட் கட்சி, லங்கா சமசமாஜக் கட்சி, புதிய ஜனநாயகக் கட்சி, சோசலிச சமத்துவக் கட்சி என்பவற்றின் சிரேஷ்ட தலைவர்கள் மட்டுமன்றி, ஆளும் கட்சியின் பிரதியமைச்சரான டிலான் பெரேராவும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இதெல்லாவற்றுக்குமப்பால் மாமனிதர் நடராஜா ரவிராஜின் இறுதி ஊர்வலத்தில் நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வந்து கலந்து கொண்ட பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அரசின் யுத்த நிகழ்ச்சி நிரல்களையும் இனவாத சக்திகளான ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.), ஜாதிக ஹெல உறுமய என்பவற்றுக்கு எதிரான கோஷங்களை எழுப்பியதுடன் யுத்த வெறிக்கு எதிரான நிலைப்பாட்டையும் சர்வதேச சமூகத்திற்கு தெளிவாக எடுத்துக் கூறியுள்ளார்கள்.

தலைநகர் கொழும்பில் பெரும்பாலான பகுதிகளில் இன, மொழி பேதங்களுக்கு அப்பால் பெரும்பாலான வர்த்தகர்கள் தமது வர்த்தக நிலையங்களை மூடி நடராஜா ரவிராஜுக்கு தமது இறுதி அஞ்சலியை செலுத்தியதுடன் அரசின் செயற்பாடுகளுக்கு எதிரான தமது நிலைப்பாட்டையும் வெளிப்படுத்தியுள்ளனர்.

மலையகத்தின் பெரும்பாலான பகுதிகளிலும் தோட்டத் தொழிலாளர்கள் பணிப் புறக்கணிப்பில் ஈடுபட்டதுடன் வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டு அஞ்சலி தெரிவிக்கப்பட்டது.

அவ்வாறே வடக்கு, கிழக்கு தமிழர் தாயகப் பிரதேசத்தில் தமிழ், முஸ்லிம் மக்கள் வர்த்தக நிலையங்களை மூடி, துக்கதினம் அனுஷ்டித்து, அரசுக்கு எதிரான தமது தெளிவான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளனர்.

தலைநகர் கொழும்பு, மலையகம் மற்றும் வடக்கு, கிழக்கு தமிழர் தாயகப் பிரதேசங்களில் மாமனிதர் நடராஜா ரவிராஜின் படுகொலைக்கு எதிராக எழுப்பப்பட்டுள்ள எதிர்ப்பலைகள் இனிமேலும் அரச பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு சர்வதேச சமூகம் துணைபோகக் கூடாது என்ற மிகப்பெரும் செய்தியையே எடுத்துக் கூறியுள்ளது.

மாமனிதர் நடராஜா ரவிராஜின் இறுதிக் கிரியைகள் அவரது சொந்த இடமான சாவகச்சேரியில் நடைபெற்ற மறுதினமான வியாழக்கிழமை காலை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுக்களின் தலைவர் இரா. சம்பந்தன் மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி., எஸ். ஜெயானந்தமூர்த்தி எம்.பி. ஆகியோரை அழைத்து நேரில் கலந்துரையாடிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, நடராஜா ரவிராஜின் படுகொலை தொடர்பாக துரித விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் விரைவில் கொலையாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

ஆனால், கடந்த வருடம் டிசம்பர் 25 ஆம் திகதி மட்டக்களப்பு நகரில் அதி உயர் பாதுகாப்புப் பிரதேசத்தில் வைத்து, நத்தார் தினமன்று படுகொலை செய்யப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிரேஷ்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம், மட்டக்களப்பு- பொலநறுவை வீதியில் வெலிக்கந்தை படைமுகாமுக்கு அருகில் வைத்து, படுகொலை செய்யப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அரியநாயகம் சந்திரநேரு ஆகியோரின் படுகொலைகள் தொடர்பான விசாரணைகளுக்கு என்ன நடந்ததென்று அரசு பதிலளிக்குமா?

-தினக்குரல்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.