Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இராணுவத்தில் சிறுவர் சிறிலங்கா மீது ஐ.நா. குற்றச்சாட்டு

Featured Replies

இங்கு இந்த செய்திக்கு முக்கியத்துவம் கொடுத்து இருக்கிறார்கள்

தொலைக்காட்சிகளிலும்

UN: army Sri Lanka ronselt children

The governments army of Sri Lanka ronselt child soldiers. That says the UN that proofs found has for this. A co-worker of the UN is been ten days in the territory and has spoken he that with children and eyewitnesses.

The child soldiers become uses through a paramilitaire group for the fight against the Tamil Tigers. Since Mays last year according to the UN all certain 135 children geronseld, vague boys are of 13 and 14 year. Most have been kidnapped.

The army contradicts the accusations, neat as the paramilitairen. The Sri Lankaanse president puts an investigation in to the ronselen of child soldiers.

http://www.freetranslation.com/மூலம் மொழி பெயர்க்கப்பட்டடது :P

நன்றி ஆளவந்தான் மொழிபெயர்த்ததுக்கு

இங்கு இந்த செய்திக்கு முக்கியத்துவம் கொடுத்து இருக்கிறார்கள்

தொலைக்காட்சிகளிலும்

þÐ ¦¿தர்லாந்த் மொழியில் வந்த செய்தி, முக்கியத்துவம் கொடுத்து போட்டு இருந்தார்கள்.

எதிர் வரும் 21ம் திகதி நடக்க இருக்கும் தேர்தலில் கடும்போக்குள்ள கட்சிகள் தோல்வியினை சந்திப்பார்கள் போல் இருகிறது குறிப்பாக விடுதலைபுலிகளை தடைசெய்வதுக்கு பெரும் ஆதரவு வழங்கிய கட்சியின் நீதிதுறை அமைச்சர் பதவி விலகிவிட்டார்(இவர் தான் தடைசெய்வதுக்கு பெரு முயற்சி எடுத்தாவர்).

நன்றி ஆளவந்தான் மொழிபெயர்த்ததுக்கு

நீங்கள் கேட்ட கேள்விக்கு தான் மேற்கோள் காட்டினேன் ஆனா அது இலக்கியனினி கருத்தை மேற்கோள் காட்டிவிட்டது :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

ஐ.நா.படையை இலங்கைக்கு கொண்டு வருவதன் சூழ்ச்சியே ஐ.நா.பிரதிநிதி ரொக்கின் கருத்து* ஜே.வி.பி.கடும் குற்றச்சாட்டு

இலங்கையை இரண்டாகப் பிரித்து ஈழத்தை உருவாக்கி ஐக்கிய நாடுகள் படையை கொண்டு வருவதற்கான சர்வதேச சூழ்ச்சித் திட்டத்தின் ஓர் வடிவமே எமது படையினருக்கு எதிராக ஐ.நா. பிரதிநிதி அலன் ரொக் வெளியிட்டுள்ள கருத்துகளின் பின்னணியில் அமைந்துள்ளதென குற்றம்சாட்டும் ஜே.வி.பி. ஆனால், இதன் பாரதூரத்தை புரிந்து கொள்ளாத அரசாங்கம் வெள்ளைத்தோல் வெளிநாட்டவர்களுக்கு எக்கருத்தையும் தெரிவிக்க இடமளித்து விட்டு மௌனமாக இருக்கிறதென்றும் தெரிவித்தார்.

இது தொடர்பாக ஜே.வி.பி.யின் அரசியல் சபை விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

இலங்கையின் சட்ட ரீதியான ஆயுதப்படையினர் சிறுவர்களை கடத்திச் சென்று கருணா அணியினருக்கு வழங்குவதாக ஐ.நா.வின் விசேட ஆலோசகரும் சிறுவர்கள் மற்றும் யுத்த மோதல்கள் தொடர்பான விசேட பிரதிநிதியுமான ரொக் தெரிவித்துள்ளார். இக்கருத்து சர்வதேச ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ளது. எனவே எமது படையினர் தொடர்பான பிழையான கருத்து ஐ.நா.முத்திரையுடன் பிரசாரப் படுத்தப்பட்டுள்ளமை பாரதூரமான விடயமாகும்.

கருணா அணியினர் சிறுவர்களை படையில் சேர்ப்பதென்றால் அந்த அணியினர் மீதே குற்றம் சாட்ட வேண்டும். அதைவிடுத்து எமது படையினர் மீது பழியைப் போடுவது பிரிவினைவாத புலிகளுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் உதவி செய்யும் நடவடிக்கையாகும்.

இலங்கைப் படையினரை பயங்கரவாத ஆயுதக் குழுவுடன் சமப்படுத்தி பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது. ஆனால் அரசாங்கம் இவையொன்றையும் கண்டு கொள்ளாது வெள்ளைக்காரனுக்கு இலங்கைக்கு எதிரான எந்தக் கருத்தையும் வெளியிட சுதந்திரத்தை வழங்கியுள்ளது.

அத்தோடு இலங்கைக்கு துரோகத்தனத்தை தொடர்ந்து செய்து கொண்டிருக்கும் நோர்வேயை இன்னமும் சமாதான அனுசரணையாளராக அரசாங்கம் இணைத்துக் கொண்டுள்ளதோடு பிரித்தானியாவிடமும் உதவி கோரியுள்ளதோடு ஐ.நா.கொடியின் கீழ் வடக்கிற்கு உணவும் அனுப்பிவைக்கப்படுகிறது. சர்வதேச சூழ்ச்சித் திட்டத்தை புரிந்து கொள்ளாது அரசாங்கம் மௌனம் சாதிக்கிறது.

அரசாங்கத்தின் இந்த மெத்தனப் போக்கினால் எதிர்காலத்தில் மக்களே அதற்கான விலை கொடுக்க வேண்டிய நிலை உருவாகும்.

எனவே சர்வதேசத்தின் சூழ்ச்சித் திட்டத்திற்கும், ஐ.நா.வின் படைகளை இங்கு கொண்டு வருவதற்கான திட்டத்தையும் எதிர்த்து அனைவரும் ஓரணியில் திரள வேண்டும்.

-தினக்குரல்

þÐ ¦¿தர்லாந்த் மொழியில் வந்த செய்தி, முக்கியத்துவம் கொடுத்து போட்டு இருந்தார்கள்.

எதிர் வரும் 21ம் திகதி நடக்க இருக்கும் தேர்தலில் கடும்போக்குள்ள கட்சிகள் தோல்வியினை சந்திப்பார்கள் போல் இருகிறது குறிப்பாக விடுதலைபுலிகளை தடைசெய்வதுக்கு பெரும் ஆதரவு வழங்கிய கட்சியின் நீதிதுறை அமைச்சர் பதவி விலகிவிட்டார்(இவர் தான் தடைசெய்வதுக்கு பெரு முயற்சி எடுத்தாவர்).

நீங்கள் கேட்ட கேள்விக்கு தான் மேற்கோள் காட்டினேன் ஆனா அது இலக்கியனினி கருத்தை மேற்கோள் காட்டிவிட்டது :lol:

நன்றி வினித் நல்லகாலம் பிறக்கப்போகுது போல நெதர்லாந்தில்

நன்றி வினித் நல்லகாலம் பிறக்கப்போகுது போல நெதர்லாந்தில்

இந்த மற்றத்தால் நமக்கு(ஈழம்) என்ன லாபம் இருக்கு என்று சொல்ல தெரியாவில்லை

ஆனா இவர்கள் கடும் போக்கர்கள் இல்லை இராக் யுத்தத்தை எதிர்த்வர்கள் அதில் நெதர்லாந்த் படையினர் பங்கு கொள்ளுவதை எதிர்த்தார்கள்.

அதோடு groen links என்ற கட்சி விடுதலைபுலிகளை தடை செய்த்து தவறு என்றும் வாதிட்டது.

அப்ப groen links கட்சிகாரர்களை கண்டு கதைத்து பிரசாரத்தை நெதர்லாந்தில் இருபவர்கள் ஈடுபடலாமே

  • கருத்துக்கள உறவுகள்

சர்வதேச சமூகத்தின் முன்னால் குற்றவாளிக் கூண்டில் இலங்கை

இலங்கை அரசின் ஒட்டுப்படையான கருணா குழு, சிறுவர்களைப் பலவந்தமாகச் சுற்றிவளைத்து மடக்கிப் பிடித்து, ஆயுதப் பயிற்சி கொடுத்து கட்டாயப்படுத்தித் தனது குழுவில் இணைத்துக் கொள்கின்றது என்றும்

இந்த அராஜகத்துக்கு இலங்கை இராணுவத்தின் ஒரு பகுதி துணை போகின்றது என்றும்

இவற்றை நிரூபிப்பதற்கான கண்கண்ட மற்றும் நம்ப கரமான சாட்சியங்கள், ஆதாரங்கள் என்பன உள்ளன என்றும்

ஐ.நாவின் உயர் பிரதிநிதி ஒருவர் கொழும்பில் உறுதி யாகத் தகவல் வெளியிட்டிருக்கின்றார்.

இலங்கை அரசின் சிறுவர்களுக்கு எதிரான இந்தக் குற்றச் செயல் விவகாரம் ஐ.நா. பாதுகாப்புச் சபை வரை செல்லவிருக்கிறது. பெரும்பாலும் ஜனவரியில் ஐ.நா. பாதுகாப்புச் சபைக் கூட்டத்துக்கு இவ்விவகாரம் வரும் எனத் தெரிகின்றது.

யுத்தத்தில் சிறுவர் பாதுகாப்புத் தொடர்பான ஐ.நாவின் விசேட பிரதிநிதியாக இப்போது பணியாற்றுபவர் இலங் கைப் பெண்மணி ராதிகா குமாரசாமி. அவரின் விசேட ஆலோசகர் என்ற முறையில் அலன் றொக், இலங்கைக்கு வந்து வடக்கு கிழக்கு உட்பட இலங் கையின் யுத்த பூமியில் சுமார் பத்து நாட்கள் நேரடியாகத் தங்கியிருந்து யுத்தத்தினால் ஏற்பட்டுள்ள சிறுவர் பாதிப்புகளைத் தன் கண்ணால் பார்த்து, பாதிக்கப்பட்டவர்களுடன் உரையாடி, தகவல்களைத் திரட்டிய பின்னரே கொழும்பில் செய்தியா ளர் மாநாட்டில் மேற்படி உண்மைகளை அம்பலப்படுத்தி யிருக்கின்றார்.

அலன் றொக் வெளியிட்ட தகவல்கள் மூலம் இரண்டு முக்கிய விடயங்கள் உலகுக்கு வெளியிடப்பட்டிருக்கின் றமை கவனிக்கத்தக்கது.

* கருணா குழு, தமிழ்ச் சிறுவர்களைப் பலவந்தமாகத் திரட்டு வதற்கு இலங்கை அரச படைகளின் ஒரு பகுதி துணை போகின்றது.

* இலங்கை அரச படையினரின் பாதுகாப்புக்கும், உதவிகளுக்கும் மத்தியில்தான் கருணா குழு சீவிக்கின்றது.

இவையே அந்த இரண்டு விடயங்களும்.

அரச இராணுவத்தின் ஒட்டுக்குழுவாக துணைப் படை போல கருணா குழு இயங்குகின்றது என்பது நிதர்சனமான உண்மையானாலும் அரச தரப்பு அதை மறுத்தே வந்துள் ளது. இலங்கை அரசின் அந்த மறுப்பு முழுப் பொய் என் பதை அம்பலப்படுத்தியிருக் கின்றார் ஐ.நா. பிரதிநிதி.

வடக்கு கிழக்கில் (தமிழர் தாயகத்தில்) ஒட்டுப்படை கள், துணைப் படைகள் மற்றும் இயக்கங்களின் ஆயுதங் களைக் களைந்து நிலைமையைச் சீர்செய்வோம் எனக் கடந்த பெப்ரவரியில் ஜெனிவா நகரில் இடம்பெற்ற முதல் சுற்றுப் பேச்சில் ஜனாதிபதி மஹிந்தரின் அரசு உறு தியளித்தது. ஆனால், அதைச் செயற்படுத்தவே இல்லை.

இதற்கு முன்னர் 2002 2003 ஆம் ஆண்டுக் காலப் பகுதி யில் ரணிலின் அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுகளில் எப்படிப்பட்ட முடிவு களின் அடிப்படையில் அமைதிப் பேச்சுகள் தொடர வேண் டும் என்று இணைத் தலைமைகள் உட்பட சர்வதேச சமூகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது.

ஆனால், ரணிலின் அரசு நடத்திய பேச்சுகளின் பெறு பேறுகளை மட்டுமல்ல, தனது அரசு புலிகளுடன் பேச்சு நடத்தி எட்டப் பட்ட "ஜெனிவா ஐ' தீர்மானத்தின் பிரதான அம்சத்தையே நடைமுறைப்படுத்த இலங்கையின் தற் போதைய அரச நிர்வாகம் தயார் இல்லை என்பதை அலன் றொக்கின் நேரடி அனுபவம் நிரூபித்தி ருக்கின்றது.

அலன் றொக், இலங்கை அரசின் பேச்சுக் குறித்து வெளி யிட்ட தகவல்கள் முற்றிலும் உண்மையானவை என்று இலங்கை போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு உறுதி செய் திருக்கின்றது.

""சிறுவர்களைப் படைக்குச் சேர்ப்பதில் அரச படை களுக்குத் தொடர்பிருப்பதை நிரூபிக்கும் கணிசமான ஆதாரங்கள் எங்களிடமும் உள்ளன என்பதைக் கடந்த ஓகஸ்டில் நாம் வெளியிட்ட எமது இரண்டாவது ஜெனிவா அறிக்கையில் தெளிவுபடுத்தியிருந்தோம். அது மட்டுமல்ல, கருணா குழுவின் முக்கியஸ்தர்கள் கிழக்கில் முக்கிய அரச இராணுவ மையங்கள், முகாம்களுக்கு அடிக் கடி வந்து செல் கின்றார்கள். அவர்கள் விடயத்தில் பாதுகாப்புப் படை களும், பொலிஸும் பாராமுகமாக இருக்கின்றன.'' என்று கூறியிருக்கின்றார் யுத்த நிறுத்தக் கண்காணிப்புக் குழு வின் பேச்சாளர் ஹெலன் ஒலவ்ஸ்டொட்டிர் அம்மையார்.

ஆனால், அலன் றொக்கினதும், கண்காணிப்புக் குழு வினதும் இக்குற்றச்சாட்டுகளை ஆதாரமற்றவை, முற்றி லும் தவறானவை என்றெல்லாம் இலங்கை இராணுவப் பேச் சாளரும் மற்றும் பாதுகாப்புத்துறைப் பேச்சாளரும் அடி யோடு மறுத்திருக்கின்றார்கள்.

மனித உரிமை மீறல்கள் தொடர்பாக மூன்றாம் மண் டல நாடுகளின் ஆட்சியாளர்கள் தெரிவிக்கும் வழமை யான மறுப்புக்கு ஐ.நாவும், சர்வதேச சமூகமும் எத்தகைய மதிப்பும், பெறுமதியும் வழங்கும் என்பது தெரிந்ததுதான்.

தெரிவு செய்யப்பட்ட, சட்டரீதியான, இறைமையுள்ள, ஜன நாயக அரசு என்று தன்னைக் கற்பிதம் பண்ணிக் கொள் ளும் ஓர் அரச நிர்வாகம், மனித உரிமைகள் விடயத்தில் வெளிப்படையான மாசுமறுவற்ற மேம்பாடான செயற் பாட்டை வெளிப்படுத்தி நிலைநாட்டுவது கட்டாயமானது என உலக நாடுகள் எதிர் பார்க்கின்றன.

இந்த எதிர்பார்ப்பை முற்றிலும் சிதறடித்து, இலங்கை அரசு மோசமாக நடந்து கொள்கிறது என்பதை சர்வதேச உயர் அமைப்பான ஐ.நாவின் உரிய பிரிவு அம்பலப்படுத் தியிருக்கிறது.

சர்வதேச சமூகத்தின் முன்னால் குற்றவாளிக் கூண் டில் இப்போது இலங்கை அரசு.

இன்று வாஷிங்டனில் நடைபெறவிருக்கும் இலங் கைக்கு உதவும் நாடுகளின் இணைத் தலைமைகளின் கூட்டத்தின் முடிவில் வெளியாகும் கூட்டறிக்கையில் இலங்கை அரசுக்கு எதிரான சர்வதேச சமூகத்தின் விசனம் எரிச்சல் அதிருப்தி ஓரளவு பிரதி பலிக்கும் என எதிர்பார்க்கலாம்.

-உதயன்

  • கருத்துக்கள உறவுகள்

Children pawns in war, envoy says

Allan Rock tours strife-torn country

Hears `chilling' tales of abduction

Parents watch as masked gunmen break into their homes and carry away their screaming children.

Government security forces round up young boys so guerrillas can take their pick of the youngsters for child soldiers.

Children are photographed by troops, then kidnapped and enlisted by a government-linked paramilitary.

These are some of the accounts United Nations envoy Allan Rock heard during 10 days of travel through Sri Lanka, where, he says, an atmosphere of fear and impunity reigns, and the country is sliding back into civil war between the government and Tamil Tiger rebels in the north and east of the country.

"I heard chilling stories of children carried away to be used as child soldiers," said Rock, who is a special adviser on Sri Lanka for the UN's representative for children and armed conflict, and Canada's former UN ambassador. He interviewed 24 families who said their children had been abducted by a group linked with the government.

Some parents said they had been able to visit their children in government-controlled territory after the youngsters were taken away in trucks that soldiers had allowed to pass undisturbed.

"The point I heard repeatedly was that there was government complicity, and that it is deepening the sense of despair and breakdown of the rule of law. Civilians feel they have no one to turn to for help," Rock said.

The reports of government links to abductions by a paramilitary known as the Karuna faction raise the stakes in an already escalating conflict, he added.

Human rights groups, as well as local people, have complained for years of child recruitment by the Liberation Tigers of Tamil Eelam, known as the Tamil Tigers. According to UNICEF, the group recruited 500 child soldiers last year, and the practice continues in spite of an agreement to stop it.

"They said they would have a law (on child soldiers) fully operative by Jan. 1 (2007), but they continue to abduct children, and refuse to release those who have been abducted," Rock, a former federal Liberal cabinet minister, said in an interview from New York.

Rock's mission to Sri Lanka has made waves in the country, where the military has "vehemently rejected" charges that it is linked with abductions by the Tamil Karuna faction, which reportedly switched sides from the Tigers to the government. Meanwhile, the political party linked with Karuna said it would release any children now in its ranks and help to trace the whereabouts of children whose parents have reported their kidnapping to UNICEF.

The Sri Lankan government has said it would investigate the allegations, and Rock called it "open and helpful" in giving him access to all areas he requested.

"We were on the road sometimes 16 hours a day, and we saw ordinary people, police, NGOs, the military and government officials. I was able to develop a feeling for the place, and what was happening there," he said.

Rock said his conclusions were alarming. "My strong impression is one of impunity. There is no sense of protection for ordinary people, and no one to turn to. ... The country is an armed camp, with bunkers and machineguns every few blocks, even in the capital."

Sri Lanka has spiralled closer to war since a 2001 ceasefire between the government and Tamil Tigers broke down a year ago.

Rock said the situation in some parts of Tamil-populated territory is desperate, especially in the eastern Vaharai peninsula, a Tamil Tiger-controlled area that hosts more than 30,000 people who fled their homes in fighting last summer. The Sri Lankan army has shelled the area this month, killing at least 23 people and wounding 135. Civilians are also at risk as the Tamil Tigers return fire.

"I saw blood on the floor where the shelling took place," Rock said. "People mobbed me when I arrived and told their stories, including children. They said when the shells landed they were in a panic and tried running south. But the (Tigers) pushed them back. They feel frightened, and they say they have had no aid since October."

During Rock's visit he met with the Tamil Tigers political leadership, as well as with Sri Lankan President Mahinda Rajapaksa. But he said, after a recent failed peace conference in Geneva, "there is a feeling that the country is sliding into war ... there's a foreboding sense that the parties are gearing up."

Rock is meeting with UN officials and ambassadors in New York, before returning to Windsor, Ont., where he practises law. His report is to be submitted to the Security Council in January.

http://www.thestar.com/NASApp/cs/ContentSe...id=968332188854

  • கருத்துக்கள உறவுகள்

ஐ.நா.பிரதிநிதி அலன் ரொக் விடுதலைப் புலிகளினதும் நேரடிப் பிரதிநிதி - ஹெகலிய ரம்புக்வெல.

ஐக்கிய நாடுகளின் பிரதிநிதியாக சிறி லங்காவுக்கு விஜயம் செய்த அலன் ரொக், உண்மையிலேயே தமிழீழ விடுதலைப்புலிகளின் பிரதிநிதியைப் போலத்தான் பேசுகின்றார். அவர் சொன்னதுபோல் எந்த சிறுவர்களையும் சிறி லங்கா அரசாங்கம் தமது படைகளில் சேர்க்கவில்லை அத்தோடு எம்முடன் எந்தவொரு ஒட்டுக்குழுக்களும் இயங்கவில்லை என்பதை நாம் திரும்பத் திரும்பச் சொல்லி வருகின்றபோதிலும், அலன் ரொக் எப்படி அரச படைகளை கருணா குழுவினருடன் சம்பந்தப்படுத்திப்பேசி ஒரு இறமையுள்ள அரசாங்கத்தை கண்டனமும் தெரிவிக்கமுடியும் எனவும் அமைச்சரும், சிறி லங்கா பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையத்தின் திறமையான பேச்சாளருமான ஹெகலிய ரம்புக்வெல கேள்வி எழுப்பியுள்ளார்.

நேற்று வெள்ளிக்கிழமை ஊடக மத்திய நிலையத்தின் செய்தியாளர் மாநாட்டில் பேசிய ஹெகலிய ரம்புக்வெல அங்கு மேலும் தெரிவிக்கையில்,

தற்போது அரசின் மீது சர்வதேச அவநம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் என்ற நிலையில் விடுதலைப்புலிகள் பாரிய இராஜதந்திர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அதற்காக அவர்கள் எதுவும் செய்வார்கள். இந்த நிலையில் அரசாங்கத்தை சம்பந்தப்படுத்தி ஐ.நா. பிரதிநிதி அலன் ரொக்கின் இப்படியான ஒரு அறிவித்தல் வந்துள்ளமையானது பலத்த சந்தேகங்களை ஏற்படுத்துகின்றது.

சில வேளைகளில் அலன் ரொக் ஐ.நா. பிரதிநிதியாக முன்னர் தமிழீழ விடுதலைப்புலிகளுடன் நெருங்கிய தொடர்புகளைக்கொண்டிருக்கலாம

  • கருத்துக்கள உறவுகள்

சிறிலங்கா இராணுவத்தில் சிறார் சேர்ப்புக்கு ஆதாரங்கள் உள்ளன: ஐ.நா.

சிறிலங்கா இராணுவத்தில் சிறார் சேர்ப்புக்கு ஆதாரங்கள் உள்ளன என்று கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அண்மையில் இலங்கைக்கு வருகை தந்திருந்த ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு பிரதிநிதி அலென் றொக், துணை இராணுவக் குழுவினர் மூலமாக சிறிலங்கா இராணுவத்தில் சிறார்கள் சேர்க்கப்படுகின்றனர் என்று குற்றம்சாட்டியிருந்தார்.

இந்தக் குற்றச்சாட்டுக்கு ஆதாரங்களைக் கேட்க உள்ளதாக சிறிலங்கா அரசாங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் ஆதாரங்களைக் கோரி எதுவித கடிதமும் தங்களுக்குக் கிடைக்கவில்லை என்று கொழும்பில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் எதிர்வரும் 28 ஆம் நாள் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபை கூட உள்ளது. இருப்பினும் இக்கூட்டத்தில் அலன் றொக்கின் அறிக்கை விவாதிக்கப்படக் கூடுமா? அல்லது ஜனவரியில் விவாதிக்கப்படக் கூடுமா? என்பது உறுதிப்படுத்தப்படவில்லை.

சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவினர் செப்ரெம்பர் மாதத்தில் மட்டும் 128 சிறார்களை பலவந்தமாக சேர்த்துள்ளதாக ஐ.நா. அறிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-புதினம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.