Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Torotnto மாநகரசபை தேர்தல் முடிவுகள்

Featured Replies

முதல் முறையாக தமிழர்கள் வெற்றி.

WARD 7 Town Wide Summary

Subdivision reporting: 110 of 110

PERCENT

Councillor - Ward 7 Subdivision reporting

11 of 11

Benn-Ireland, Tessa 1569

17.04

Jeyaveeran, William 775

8.42

Kanapathi, Logan 3088

33.54

Minhas, Manpreet 343

3.73

Qureshi, Yahya 1224

13.30

Rahman, Mohammed 1272

13.82

Ruo, Jeffry 595

6.46

Zaidi, Syed (Sydney) 340

3.69

York Region District School Board - Ward 7 & 8 Subdivision reporting

22 of 22

Gotha, Susie 2442

31.61

Shan, Neethan 5283

68.39

  • கருத்துக்கள உறவுகள்

விபரமாகச்சொல்லுங்கோ, கேட்க சந்தோசமாக இருக்குது

கனடிய அரசியலில் ஈழத்தமிழர்கள் நுழைவு

[செவ்வாய்க்கிழமை, 14 நவம்பர் 2006, 22:29 ஈழம்] [காவலூர் கவிதன்]

நொவம்பர் 13ம் திகதி இடம்பெற்ற மாநகரசபைத் தேர்தலில், ஈழத் தமிழர்கள் இருவர் வெற்றி பெற்றுள்ளனர்.

ரொறன்ரோ மாநகர சபை உறுப்பினர் மற்றும் கல்விச்சபை உறுப்பினர் பதவிகளுக்கு ஈழத் தமிழர்கள் போட்டியிட்டனர். இவை தவிர, பிரதேச சபை உறுப்பினர் பதவிக்காக, யோர்க் பிரதேசத்தில் தமிழர் ஒருவர் போட்டியிட்டிருந்தார்.

மார்க்கம் நகரசபையில் போட்டியிட்ட தமிழர்கள் விபரம் வருமாறு:

மார்க்கம் நகரசபை உறுப்பினராக, 7ம் வட்டாரத்தில் போட்டியிட்ட லோகன் கணபதி அவர்கள், 33.54 வீத வாக்குகளைப் பெற்று, கவுன்சிலர் பதவிக்குத் தெரிவாகியுள்ளார்.

அதே நகரசபையில், 7ம் 8ம் வட்டாரங்களில், கல்விச்சபை ஆலோசகராகப் போட்டியிட்ட நீதன் சண்முகராஜா, 68.39 வாக்குகளைப் பெற்று, அமோக வெற்றியுடன் தெரிவாகியிருக்கிறார்.

மார்க்கம் நகரசபையின் 5ம் வட்டாரத்தில் கல்விச்சபை உறுப்பினராகப் போட்டியிட்ட பாலா பாலசுப்ரமணியம் வெற்றிபெறவில்லை.

மார்க்கம் பிரதேசத்தை உள்ளடக்கியதான யோர்க் பிரதேச சபையில், பிரதேசசபை உறுப்பினர் பதவிக்குப் போட்டியிட்ட கலாநிதி.இலகு இலகுப்பிள்ளை அவர்கள், 16,246 வாக்குகளைப் பெற்றுள்ளார். ஜிம் ஜோன்ஸ் என்ற வேட்பாளர், 29,514 வாக்குகளைப் பெற்று, அங்கு முதலிடத்தில் உள்ளார்.

ரொறன்ரோ நகரசபையில் போட்டியிட்ட தமிழர்கள் விபரம் வருமாறு:

26ம் வட்டாரத்தில் நகரசபை உறுப்பினராகப் போட்டியிட்ட டேவிட் தோமஸ், 6.53 வீத வாக்குகளைப் பெற்றுள்ளார்.

41ம் வட்டாரத்தில் கல்விச்சபை உறுப்பினராகப் போட்டியிட்ட தட்சா நவரத்தினம் சுமார் 12 சதவீத வாக்குகளைப் பெற்று மூன்றாவது இடத்திலுள்ளார்.

42 ஆவது வட்டாரத்தில் நகரசபை உறுப்பினராகப் போட்டியிட்ட குமார் நடராஜா சுமார் 26 சதவீத வாக்குகளைப் பெற்று இரண்டாவது இடத்திலுள்ளார்.

17ம் வட்டாரத்தில் கல்விச்சபை உறுப்பினர்களாக இரு தமிழர்கள் போட்டியிட்டனர். சூரியகுமாரன் நவரட்ணம், கேதீஸ் வரன் ஆகிய இருவரும் வெற்றிபெறவில்லை.

20ம் வட்டாரத்தில் கல்விச்சபை உறுப்பினராகப் போட்டியிட்ட வரன் கனகரட்ணம் வெற்றிபெறவில்லை.

21ம் வட்டாரத்தில் கல்விச்சபை உறுப்பினர்களாக இரு தமிழர்கள் போட்டியிட்டனர். ஆறாயிரத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று இரண்டாம் இடத்திலுள்ள ஷண் தயாபரன், வெற்றிபெறும் வாய்ப்பை சிறிய வாக்கு வித்தியாசத்தில் தவற விட்டுள்ளார். இதே வட்டாரத்தில் கணேஸ் குலசேகரம்பிள்ளை என்பவரும் போட்டியிட்டிருந்தார்.

மிசிசாகா நகரசபைத் தேர்தலில் போட்டியிட்ட தமிழர்கள் விபரம் வருமாறு:

4ம் வட்டாரத்தில் நகரசபை உறுப்பினராக சதீஸ் பாலசுந்தரம் போட்டியிட்டார்.

9ம் 10ம் வட்டாரங்களில் கல்விச்சபை உறுப்பினராக ராம் செல்வராஜா போட்டியிட்டார். இருவரும் வெற்றிபெறவில்லை.

மார்க்கம் தொகுதியில், கவுன்சிலராகப் போட்டியிட்ட லோகன் கணபதியும் கல்விச்சபை வேட்பாளராகப் போட்டியிட்ட நீதன் ஷண்ணும், கனடிய அரசியலில் உத்தியோகபூர்வமாக நுழைகின்ற முதல் ஈழத் தமிழர்கள் என்ற பெருமையைப் பெறுகின்றனர்.

புதினம் செய்தித்தளம், இவர்கள் இருவருக்கும், ஏனைய வேட்பாளர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மகிழ்வடைகிறது.

Puthinam

உள்ளாட்சித் தேர்தலில் கணக்கைத் திறந்துள்ள இரண்டு தமிழர்கள

ஒன்ரேறியோ மாகாண உள்ளாட்சித் தேர்தல் கடந்த நவம்பர் 13 ஆம் நாள் நடந்து முடிந்துள்ளது.

கனடிய அரசியல் அமைப்பு இணைப்பாட்சி முறைமையைக் கொண்டது. இதன் அடிப்படையில் 3 மட்டத்தில் அரசுகள் இயங்குகின்றன. மத்திய, மாகாண, நகராட்சி ஆகியனவே அந்த அரசுகளாகும்.

மக்களாட்சி முறைமையை உலகுக்கு அறிமுகப்படுத்திய பெருமை கிரேக்கர்களையே சாரும். கிமு 5 ஆம் நூற்றாண்டளவில் ஏதன்ஸ் நகர மக்கள் அனைவரும் ஓரிடத்தில் ஒன்று கூடி நாட்டு நடப்புக்களை விவாதித்தார்கள். அப்போது ஏதன்ஸ் நகரத்தின் மக்கள் தொகை 50,000 மட்டுமே. மக்கள் தொகை அதிகரித்த போது நேரடி மக்களாட்சிக்குப் பதில் பிரதிநித்துவ மக்களாட்சி முறைமை நடைமுறைக்கு வந்தது.

மக்களாட்சி முறைமை பரவிய போது மன்னராட்சி மறையத் தொடங்கியது. இப்போது ஒரு சில நாடுகளிலேயே முடியாட்சி தொடருகிறது. அப்போதும் முழு அதிகாரம் படைத்த மன்னர்கள் இப்போது இல்லை. கடைசியாக மன்னர் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்த நாடு நேப்பாளம் ஆகும்.

தமிழர்கள் மக்களாட்சி முறைமை பற்றிச் சிந்திக்கவே இல்லை. அவர்கள் மன்னனை உயிராகவும் மக்களை உடலாகவும் உவமித்தார்கள். 'மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்" என்பது தமிழர்களது அரசியல் கோட்பாடாக இருந்தது. தமிழ் மன்னர்கள் செங்கோல் வளையாது அறம் பிறழாது ஆட்சி நடத்தியது அதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.

மக்களாட்சி முறைமையிலும் ஓட்டைகள் காணப்படுகின்றன. ஆனால் அதற்கு ஈடாக அல்லது அதற்கு மிஞ்சிய ஒரு அரசியல் முறைமையை யாரும் இதுவரை கண்டு பிடிக்கவில்லை.

இம்முறை நடந்த உள்ளாட்சித் தேர்தலில் கனடிய தமிழர்கள் கணக்கைத் திறந்து வரலாறு படைத்துள்ளார்கள். மார்க்கத்தில் நகரசபை உறுப்பினராக லோகன் கணபதியும் கல்விச்சபை உறுப்பினராக சாண் நீதனும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்.

லோகன் கணபதியின் வெற்றிக்கு பல காரணங்களைச் சொல்லலாம். ஒன்று அவர் வாக்காளரைச் நேரில் சந்தித்து வாக்குகளைத் திரட்டியது. வெற்றிக்கு உழைத்த தொண்டர்கள். நேர்த்தியான பரப்புரை. தமிழ் மக்களது ஆதரவு. எதிர் முஸ்லிம் வேட்பாளர்கள் வாக்குகளை பிரித்தது.

சென்றமுறை இதே வட்டாரத்தில் போட்டியிட்ட மோகன் நடராசா சொற்ப வாக்குகளினால்தான் வெற்றி வாய்ப்பை இழந்தார்.

மார்க்கம் 7,8 ஆம் யோர்க் பிரதேச கல்விச்சபைக்கான தேர்தலில் நீதன் சண்முகநாதன் நேரடிப் போட்டியில் அபார வெற்றி ஈட்டினார். இந்த வெற்றியில் எந்த வியப்பும் இல்லை. அவர் சென்ற முறை வெற்றி வாய்ப்பை 439 வாக்குகளால் மட்டுமே தவறவிட்டவர். அதுமட்டுமல்ல அவரோடு போட்டியிட்ட இன்னொரு தமிழர் 1,880 வாக்குகளைப் பெற்றிருந்தார். தமிழர் வாக்குகள் பிரியாது இருந்திருந்தால் நீதன் சென்றமுறையே கல்விச்சபை உறுப்பினராகத் தெரிவு செய்யப்பட்டிருப்பார்.

நீதனுக்கு இம்முறை மற்றைய இனத்தவர்களது வாக்குகளும் பெருமளவு விழுந்திருப்பது தெரிகிறது.

யோர்க் பிரதேச உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்ட இலகு இலகுபிள்ளை இம்முறையும் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளார். சென்ற தேர்தலில் 10,858 வாக்குகள் (8.44) பெற்று ஆறாவது இடத்தைப் பிடித்த அவர் இம்முறை 16,246 (9.30 விழுக்காடு) வாக்குகளைப் பெற்று 7 ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். நான்காவது இடத்தைப் பிடித்த கோர்டன் இலண்டன் 23,996 வாக்குகளைப் பெற்றுள்ளார்.

மொத்தம் 44 வட்டாரங்களைக் கொண்ட ரொறன்ரோ மாநகரசபைக்கு நடந்த தேர்தலில் தமிழர்கள் ஒருவரும் வெற்றிபெறவில்லை. 41-42 ஆம் வட்டாரங்களில் கல்விச்சபைக்குப் போட்டியிட்ட சாண் தயாபரன் 948 வாக்குகளால் வெற்றி வாய்ப்பை இழந்துள்ளார். இதே வட்டாரங்களில் போட்டியிட்ட இன்னொரு தமிழர் 983 வாக்குகளைப் பெற்றிருந்தார். ஒருவரே தேர்தலில் நின்றிருந்தால் ஒருவேளை தயாபரன் வென்றிருக்கலாம்.

இந்த வட்டாரங்களில் நகராட்சி உறுப்பினர் பதவிகளுக்குப் போட்டியிட்ட தமிழர்கள் வெற்றிபெறவில்லை. ஆனால் முறையே மூன்றாவது இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார்கள்.

42 ஆவது வட்டாரத்தில் போட்டியிட்ட கீதவாணி நடராசா இராஜ்குமார் வெல்வார் என பலரும் எதிர்பார்;த்தார்கள். அவரும் மிக நம்பிக்கையோடு இருந்தார். ஆனால் வட்டாரத்திலும் தமிழர்கள் மத்தியிலும் நன்கு அறிமுகமான றேமன்ட் சோ மீண்டும் வெற்றி பெற்றுள்ளார்.

தேர்தலில் எப்போதும் ஏற்கனவே உறுப்பினராக இருப்பவருக்கு வெற்றி வாய்ப்பு கூடுதலாக இருக்கும். விதி விலக்குண்டு.

இந்தத் தேர்தலில் மிசிசாக்கா மாநகரசபை மேயராக 84 அகவை நிரம்பிய மக்கலியோன் 11 ஆவது தடவையாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இது ஒரு அசுர சாதனை. அதே நேரம் கிலறிங்ரன் மேயர் யோன் மட்டன், வோகன் மேயர் மைக்கல் டி பயஸ் மற்றும் ஓக்வில் மேயர் ஆன் முல்வலே தோற்கடிக்கப்பட்டுள்ளார்கள்.

இந்தத் தேர்தல் ஒரு உண்மையை உணர்த்துகிறது. தேர்தலில் வெல்ல தமிழர்களது வாக்குகள் மட்டும் போதாது. அது அடித்தளத்துக்கே உதவும். மிகுதி வாக்குகளை ஏனைய இனத்தவரோடு உடன்பாடு கண்டு பெற்றுக் கொள்ள வேண்டும்.

இப்போதுள்ள ரொறன்ரோ மாநகரம் 1998 சனவரி 01 இல் இயங்கத் தொடங்கியது. அப்போது ஆட்சியில் இருந்த பழமைவாதக் கட்சி அரசின் அளவைக் சுருக்க எண்ணி முன்னர் இருந்த மெற்றோ ரொறன்ரோவை ஏனைய 5 மாநகர சபைகளோடு (எத்தோபிக்கோ, வட யோர்க், யோர்க், ஸ்காபரNih, ரொறன்ரோ, கிழக்கு யோர்க்) இணைத்து ரொறன்ரோ நகரத்தை உருவாக்கியது. பழமைவாதக் கட்சி செய்த சில நன்மைகளில் இதுவும் ஒன்று. இல்லா விட்டால் 6 மேயர்களுக்கும் 56 உறுப்பினர்களுக்கும் 1,100 ஊழியர்களுக்கும் சம்பளம் கொடுக்க வேண்டியிருந்திருக்கும்.

கனடாவின் உள்ளாட்சித் தேர்தலில் கட்சி அடிப்படையில் யாரும் போட்டியிடுவதில்லை. ஆனால் மறைமுக அரசியல் கட்சி ஆதிக்கம் காணப்படுகிறது. ரொறன்ரோ மாநகரசபையில் என்டிபி கட்சி ஆதரவாளர்கள் பெரும்பான்மையாக இருக்கிறார்கள்.

ரொறன்ரோ மாநகரம் சிஎன் கோபுரத்துக்குப் (553..33 மீட்டர்) பெயர் போனது. அதே போல் நீண்ட சாலைக்கும் (1,896 கிமீ) பெயர் போனது. யங் தெரு லேக்ஷோரில் தொடங்கி பிரஞ்சு றிவேறா (குசநnஉh சுiஎநைசய) வரை நீண்டிருக்கிறது.

கனடாவில் மக்கள் தொகை அடிப்படையில் ரொறன்ரோ நகரசபை 5 ஆவது பெரிய அரசாகும். அதாவது கனடா, ஒன்ரேறியோ, கியூபெக், அல்பேட்டா ஆகிய அரசுகளுக்கு அடுத்ததாக ரொறன்ரோ வருகிறது. 22 நாடாளுமன்ற உறுப்பினர்களும் 22 மாகாண நாடாளுமன்ற உறுப்பினர்களும் ரொறன்ரோவைப் பிரதிநித்துவப் படுத்துகிறார்கள். பொதுமேனி 55,000 குடிமக்களுக்கு ஒரு பிரதிநிதி என்ற அடிப்படையில் 44 உறுப்பினர்களும் 22 கல்வி அவை உறுப்பினர்களும் தெரிவு செய்யப்படுகிறார்கள். அவர்களது பதவிக்காலம் மத்திய மாகாண அரச உறுப்பினர்கள் போல 3 இல் இருந்து 4 ஆண்டுகளாக நீடிக்கப்பட்டுள்ளது.

ரொறன்ரோ உலகத்திலேயே பெரிய பல்பாண்பாட்டு நகரம் ஆகும். நூறுக்கும் அதிகமான மொழிகள் பேசுவோர் இந்த நகரத்தில் வாழ்கிறார்கள். கனடாவின் பண்பாட்டு நகரமும் இதுவே. ஆண்டுதோறும் கனடாவுக்கு புலம்பெயர்பவர்களில் பாதிப்போ (125,000) ஒன்ரேறியோவில் குடியேறுகிறார்கள். இந்தத் தொகை பிறின்ஸ் எட்வேட் தீவின் மக்கள் தொகைக்கு சமமானது. மக்கள் தொகை அடிப்படையில் (2001) காணும் சிறுபான்மையரது விபரம் பின்வருமாறு.

ரொறன்ரோ மாநகரசபை மக்கள் தொகை 2.48 மில்லியன். ரொறன்ரோ பெருநகரப் பகுதி (புவுயு) 5 மில்லியன். (2001 கணக்கெடுப்பு)

ரொறன்ரோ பெருநகரப் பகுதி 7,000 சதுர கிமீ (4,350 சதுர கற்கள்) பரப்பளவு கொண்டது. லேக் ஒன்ராறியோவின் வடகரை ஓரமாக உள்ளது. மொத்தம் 25 மாநகரசபைகளைக் கொண்டது. வட அமெரிக்காவில் 4 ஆவது பெரிய மக்கள் தொகையைக் கொண்டது.

ரொறன்ரோ மாநகர சபையின் வரவு செலவுத் திட்டம் - 6.4 பிலியன் (டொலர்)

ரொறன்ரோ மாநகர சபையின் முதலீட்டு வரவு செலவுத் திட்டம் - 965 மில்லியன்

ஊழியர் தொகை - 33,411 (அண்ணளவு)

2001-2005 இரண்டுக்கும் இடையில் ரொறன்ரோ பெருநகரப் பகுதிக்கு குடிவந்த 107,000 குடிவரவாளர்களில் ரொறன்ரோ நகரம் 69,000 பேரை வரவேற்றது. மொத்த மக்கள் தொகையில் 43 விழுக்காட்டினர் (1,051,125) தங்களைக் காணும் சிறுபான்மையினர் என அடையாளம் காட்டினர். 1996 ஆம் ஆண்டை விட (882,330) இது 37 விழுக்காடு அதிகமாகும். முதல் நான்கு இடத்தில் இருக்கும் காணும் சிறுபான்மையினர் பின்வருமாறு.

சீனர் - 259,710 10.6 விழுக்காடு

தெற்காசியா 253,710 10.3 விழுக்காடு

கருப்பர் 204,076 8.3 விழுக்காடு

பிலிப்பினோ 86,460 3.5 விழுக்காடு

கனடாவில் தமிழர்களது தொகை 350,000 என்று சொல்லிக் கொள்கிறோம். தெற்காசியா மக்களது மொத்த எண்ணிக்கையே 253,710 ஆக இருக்கும் போது எஞ்சிய தமிழர்கள் எங்கே இருக்கிறார்கள். ஒன்ரோறியோவுக்கு வெளியில் இருக்கிறார்களா? அப்படிச் சொல்ல முடியாது.

இன்னொன்று. கடந்த தேர்தல் போல் அல்லாது இம்முறை குழப்பம் எதுவுமில்லை என்று வானொலியில் ஓயாது ஒழியாது சொல்லிக் கொண்டிருந்தார்கள். ஆனால் கல்விச்சபை வட்டாரம் 41-42 இருண்டு தமிழர்கள் போட்டியிட்டார்கள். மார்க்கம் வட்டாரம் 7 இல் இரண்டு தமிழ் வேட்பாளர்கள் நின்றிருக்கிறார்கள்.

மக்களாட்சியின் கீழ் மக்களே மன்னர்கள். மன்னர்கள் தெரிவு செய்யும் பிரதிநிதிகள் கையிலேயே ஆட்சி அதிகாரம் இருக்கிறது. எனவே வாய்ப்பைப் பயன்படுத்தி ஆளுமை, திறமை, தொண்டுள்ளம், இனவுணர்வு, மொழியுணர்வு நிறைந்த சாதனையாளர்கள் தேர்தல்களில் பங்கு கொள்ள முன் வரவேண்டும். அது எமது எதிர்கால அரசியல், சமூக, பொருளாதார முன்னேற்றத்துக்கு வழிகோலும்.

நடந்து முடிந்த தேர்தலை ஒரு நீண்டகால அரசியல் முதலீடாக எண்ண வேண்டும். கனடா வந்தோருக்கு வஞ்சகமில்லாமல் இன, மத, நிற, மொழி, பண்பாட்டு, கலை வேறுபாடுகளைக் கடந்து சகல மக்களுக்கும் சமத்துவமான வாய்ப்புக்களை வழங்கும் நாடு. இந்த வாய்ப்புக்களை புதிய குடிவரவாளர்களான தமிழர்கள் சரிவரப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

http://www.tamilnaatham.com/articles/2006/...akheeran/22.htm

வாழ்த்துக்கள்.....

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் தமிழர்களது தொகை 350,000 என்று சொல்லிக் கொள்கிறோம். தெற்காசியா மக்களது மொத்த எண்ணிக்கையே 253,710 ஆக இருக்கும் போது எஞ்சிய தமிழர்கள் எங்கே இருக்கிறார்கள். ஒன்ரோறியோவுக்கு வெளியில் இருக்கிறார்களா? அப்படிச் சொல்ல முடியாது.

http://www.tamilnaatham.com/articles/2006/...akheeran/22.htm

கனடாவில் வாசிக்காதவர் எழுதியது கட்டுரை போலுள்ளது...

ரொறான்ரோ மானகரத்தில் தான் 253,810 ஆசியர்கள் வசிக்கிறார்கள். 350,000 தமிழர்கள் கனடாவில் தான், ரொறான்ரோ மானகரத்தில் இல்லை. தமிழர்கள் பலர் ரொறான்ரோ மானகரத்தை விட அதன் புறநகரங்களான மார்க்கம், விற்பி, மிஸ்ஸிசாகா, பிறம்ரன் இல் தான் வசிக்கிறார்கள். அதைவிட, ஒரு கணிசமானவர்கள், மொன்றிஆல், வன்கூவர், கோர்ன்வால், ஓற்ரோவா போன்ற இடங்களிலும் வசிக்கிறார்கள்.

.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.